23.9.2006
சாவகச்சேரி அபிவிருத்திக்குமஹிந்த சிந்தனையில் நிதி வசதி
சாவகச்சேரி நகரசபைக்கு பெட்டியுடன் கூடிய உழவு இயந்திரம் கிடைக்கவுள்ளது. இதற்கான நிதி இவ்வருடத்திற்கான மஹிந்த சிந்தனைத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.2000 ஆம் ஆண்டு யுத்த அனர்த்தங்களின் போது முற்றாகச் சேதமடைந்த சாவச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளின் அபிவிருத்தி வேலைகள், சுத்திகரிப்பு பணிகள் மற்றும் குடிநீர் விநியோகம் ஆகிய தேவைகளுக்குப் பயன்படுத்த உழவு இயந்திரம் வழங்குமாறு தென்மராட்சிப் பிரதேச செயலர் ஊடாக நகரசபை செயலாளர் திருமதி குணமணிதேவி ஆறுமுகம் விடுத்த வேண்டுகோளையடுத்து உழவு இயந்திரம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தென்மராட்சி பிரதேசத்தில் மஹிந்த சிந்தனைத் திட்டத்தில் மேலும் ஆறு அபிவிருத்திப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மட்டுவில் மோகனதாஸ் சனசமூக நிலையம், முன்பள்ளி ஆகியவற்றுக்கு தளபாடக் கொள்வனவு, கைதடி மத்தி வளர்மதி சனசமூக நிலையம், சாவகச்சேரி உதயசூரியன் சனசமூக நிலையம் ஆகியவை புனரமைப்பு, மட்டுவில் நெசவுநிலைய வீதி, கைதடி மத்திய வீதி ஆகியவற்றின் திருத்தவேலைகள், சாவகச்சேரி நுணாவில் காந்தாளம்பிட்டி வீதியில் மதகு அமைப்பு ஆகிய வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிவாரணம் பெறமுடியாமல்அலைகிறார்கள் இம்மக்கள்
தென்மராட்சி கிழக்கு, எழுதுமட்டுவாழ் தெற்கு, கலம்பகம் ஆகிய பிரிவுகளிலிருந்து இடம்பெயர்ந்து வலிகாமம் பகுதியில் தங்கியுள்ள மக்கள் நிவாரணப் பொருள்கள் பெறமுடியாமல் அலைகின்றனர்.அதி உயர் பாதுகாப்பு வலயம் காரணமாகத் தமது சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்ப முடியாத நிலையில் வலிகõமம், வடமராட்சி ஆகிய இடங்களில் இவர்கள் தங்கியுள்ளனர்.இதுவரை காலமும் இந்தக் குடும்பங்கள் தென்மராட்சி கிழக்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கிளையில் நிவாரணம் பெற்று வந்தனர்.தென்மராட்சி பிரதேச செயலர் கடந்த ஏப்ரல் மாதம் விடுத்த அறிவிப்பின் பிரகாரம் இப்பிரிவுகளின் குடும்பங்கள் தற்போது தங்கியுள்ள வலிகாமம், வடமராட்சி ஆகிய பிரதேசங்களில் பதிவுகளை மேற்கொண்டு நிவாரணப் பொருள்களை அந்தந்தப் பகுதிகளில் பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்திருந்தார்.ஆனால், வலிகாமம் பகுதிகளில் தங்கியுள்ள சில குடும்பங்களின் பதிவை மேற்கொள்ள சில கிராம அலுவலர்கள் மறுத்துள்ளதாகவும், சில கிராம அலுவலர்கள் பதிவுகள் மேற்கொண்ட போதிலும் நிவாரணம் வழங்க மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தென்மராட்சி கிழக்கு பலநோக்குக் கூட்டுறவுச்சங்கத்தில் நிவாரணப் பொருள்கள் வழங்குவதாக அறிந்து கொடிகாமம் சென்ற போது நிவாரணப் பொருள்கள் வழங்குவது நேற்று முன்தினத்துடன் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.இதனால் இப்பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் கடந்த 20ஆம் திகதி பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து தமக்கு நிவாரணம் வழங் குமாறு பிரதேச செயலரைக் கேட்டுள்ளனர்
17.9.2006
மணல் அகழ்வு அதிகரிப்பு;
தடுப்பவர்களுக்கு அச்சுறுத்தல்
மட்டுவில் சந்திரபுரம், சப்பட்டையன் கடல் பகுதியில் மணல் அகழ்வு அதிகரித்துள்ளது.கட்டடப் பாவனைக்கு உதவாத மணல் வாகனங்களில் ஏற்றப்பட்டு வலி காமம் பகுதிகளுக்கு எடுத்துச்செல்லப் பட்டுவருகிறது.இப்பகுதியில் கடல்நீர் உட்புகாவண் ணம் இவ் வருடம் தடுப்பு அணை அமைப்பதற்கு திட்டமிடப்பட்ட போதி லும் பெருமளவு மணல் அகழ்ந்தெடுக் கப்படுவதால் கடல்நீர் உட்புகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித் தார்கள்.மணல் ஏற்றுவதைத் தடுக்கச் செல் வோர் அச்சுறுத்தப்படுவதாகவும் தெரி வித்தனர்

15.9.2006
சாவகச்சேரி தர்சிக்காவின் இரத்தமாதிரி கொழும்புக்கு
அச்செழு முகாமுக்கு அருகில் கடந்த திங் கட்கிழமை படையினரால் கைது செய்யப்பட்ட பின் மரணமான இளம் பெண் சயனைட் அருந்தினாரா எனக் கண்டறிய அவரது இரத்த மாதிரி இன்று கொழும்புக்கு அனுப்பப்படவிருக்கின்றது.சாவகச்சேரியைச் சேர்ந்த பத்மநாதன் தர்சிக்கா (வயது 24) என்பவரின் மரணம் தொடர்பாக விசாரணைகளை மல்லாகம் நீதிவான் நடத்தினார்.இவரைப் படையினர் கைது செய்தபின் அவர் "சயனைட்' அருந்தி இருந்தார் என ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இவரது மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக பிரேத பரிசோதனை நடத்தும்படி சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதிவான் உத்தரவிட்டிருந்தார். சட்டவைத்திய அதிகாரி இன்று பிரேத பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிப்பார் என்று நீதிவான் தெரிவித்தார்.பிரஸ்தாப பெண்ணின் இரத்த மாதிரியை கொழும்புக்கு அனுப்பி, அவர் சயனைட் அருந்தினாரா எனக் கண்டறியுமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.இச் சம்பவத்தின் போது கைதான தாவளை, இயற்றாளையைச் சேர்ந்த கந்தையா பவளமதி (வயது 26)என்பவர் யாழ்.ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.காக்கைவலி நோயால் பீடிக்கப்பட்டிருந்த இவர் கைது செய்யப்படும் போது அந்த நோயால் பீடிக்கப்பட்டார் என்றும் அதன் காரணமாக மரணமான யுவதி தொடர்பான விவரங்கள் தமக்குத் தெரிய வில்லை என்று அவர் விசாரணையில் தெரிவித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
8.9.2006அச்செழு முகாமுக்கு அருகில் கடந்த திங் கட்கிழமை படையினரால் கைது செய்யப்பட்ட பின் மரணமான இளம் பெண் சயனைட் அருந்தினாரா எனக் கண்டறிய அவரது இரத்த மாதிரி இன்று கொழும்புக்கு அனுப்பப்படவிருக்கின்றது.சாவகச்சேரியைச் சேர்ந்த பத்மநாதன் தர்சிக்கா (வயது 24) என்பவரின் மரணம் தொடர்பாக விசாரணைகளை மல்லாகம் நீதிவான் நடத்தினார்.இவரைப் படையினர் கைது செய்தபின் அவர் "சயனைட்' அருந்தி இருந்தார் என ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இவரது மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக பிரேத பரிசோதனை நடத்தும்படி சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதிவான் உத்தரவிட்டிருந்தார். சட்டவைத்திய அதிகாரி இன்று பிரேத பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிப்பார் என்று நீதிவான் தெரிவித்தார்.பிரஸ்தாப பெண்ணின் இரத்த மாதிரியை கொழும்புக்கு அனுப்பி, அவர் சயனைட் அருந்தினாரா எனக் கண்டறியுமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.இச் சம்பவத்தின் போது கைதான தாவளை, இயற்றாளையைச் சேர்ந்த கந்தையா பவளமதி (வயது 26)என்பவர் யாழ்.ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.காக்கைவலி நோயால் பீடிக்கப்பட்டிருந்த இவர் கைது செய்யப்படும் போது அந்த நோயால் பீடிக்கப்பட்டார் என்றும் அதன் காரணமாக மரணமான யுவதி தொடர்பான விவரங்கள் தமக்குத் தெரிய வில்லை என்று அவர் விசாரணையில் தெரிவித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
30 வருடங்களாக திருத்தப்படாத வீதி
மட்டுவில் வடக்கு, மெய்கண்டான் வீதி கடந்த 30 வருடங்களாக திருத்தப்படாமல் உள்ளதால் இவ்வீதியைப் பயன்படுத்தும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கு வதாகத் தெரிவிக்கப்பட்டது.2000ஆம் ஆண்டு இடப்பெயர்வின் பின் னர் கனகன்புளியடி சரசாலை வீதி போக்கு வரத்திற்கு தடைசெய்யப்பட்டதால் கனரக வாகனங்கள் மட்டுவில் மெய்கண்டான் வீதி யைப் பயன்படுத்தி வந்தன. இதனால் இவ் வீதி மோசமாக சேதமடைந்து மழை காலங் களில் மக்கள் பெரிதும் சிரமங்களை எதிர் கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு பொருள்கள் வழங்கினர்
தென்மராட்சிப் பிரதேச நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதுவராலயம், சேவாலங்கா, அலைன்ஸ் அபிவிருத்தி நிறுவனம் போன்ற நிறுவனங்கள் பொருள்களை வழங்கியுள்ளன.அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதுவராலயத்தினர் உணவுப்பண்டம் அல்லாத பொருள்களும், சேவாலங்கா அலைன்ஸ் அபிவிருத்தி நிறுவனத்தினர் உலர் உணவுப் பொருள்களும் வழங்கியதாகப் பிரதேச செய லக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏழு நலன்புரி நிலையங்கள் தென்மராட்சியில் மூடப்பட்டன
தென்மராட்சி பிரதேசத்தில் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த பெருமளவு மக்கள் தமது இருப்பிடங்களுக்குச் சென்றதால் பிரதேசத்தில் இயங்கிய 7 நலன்புரி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.பிரதேசத்தில் தற்போது 9 நலன்புரி நிலையங்களே இயங்குவதாகவும் இந்த நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதுவராலயத்தினர் உலர் உணவுப் பொருள்களையும் ஏனைய அத்தியாவசியப் பண்டங்களையும் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
4.9.2006
நேற்று மாலை உக்கிர மோதல்
தென்மராட்சி போர் முன்னரங்கப் பகுதி களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையே ஒரு மணி நேரத்திற்கு மேலாக மோதல்கள் நேற்று மாலை இடம்பெற்றன என இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.மோதல்களைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகள் அமைந் துள்ள பகுதிகளை நோக்கி வரணியில் அமைந் துள்ள படைத்தளத்தில் இருந்து ஷெல் தாக்கு தல் நடத்தப்பட்டு வருவதாகவும் ஸ்ரீலங்கா வான்படைக்குச் சொந்தமான விமானங்களும் அப்பகுதியில் தாக்குதல்களை நடத்தி வருவ தாகவும் அந்த இணையத்தளம் மேலும் தெரி வித்தது.
30.08.2006
நேற்று ஏழுமணிநேரம்ஊரடங்கு தளர்வு
நேற்று ஏழுமணிநேரம்ஊரடங்கு தளர்வு
தென்மராட்சி தவிர்ந்த குடாநாட்டின் ஏனைய பகுதிகளில் ஊரடங்கு நேற்று ஏழுமணி நேரம் தளர்த்தப்பட்டிருந்தது.இதனால், மக்கள் தமது அன்றாட கருமங்களைச் செய்வதற்கு ஓரளவு அவகாசம் கிடைத்தது.யாழ்ப்பாணம், தீவகம் ஆகிய பகுதிகளில் நேற்று காலை 8 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரையும் வடமராட்சியில் முற்பகல் 11 மணிமுதல் 6 மணிவரையும் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது.தென்மராட்சியில் நேற்றையதினம் ஊரடங்கு தளர்த்தப்படவில்லை. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.இதேவேளை, நேற்று தீவுப்பகுதிக்குள் நுழைவதற்கு பொதுமக்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.போக்குவரத்துச் சபை பஸ்களும் மினிபஸ்களும் தீவுப்பகுதிக்கானதுப்போக்குவரத்தில் ஈடுபட்டன.தீவுப்பகுதிக்குள் நுழைவதற்கு நேற்று முன்தினம் எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது தெரிந்ததே.
தென்மராட்சி தவிர்ந்த ஏனைய வலயபாடசாலைகள் இன்று முதல் இயங்கும்
யாழ். குடாநட்டில் தென்மராட்சி தவிர்ந்த ஏனைய கல்வி வலயப் பாடசாலைகளை இன்று முதல் இயக்குவது என்று தீர்மானிக் கப்பட்டுள்ளது.அதன் பிரகாரம், யாழ்ப்பாணம், வலிகா மம், தீவகம், வடமராட்சி ஆகிய நான்கு கல்வி வலயங்களுக்கும் உட்பட்ட பாடசாலைகளை இன்றையதினம், ஊரடங்கு நீக்கப்பட்டு அரை மணித்தியாலத்திற்கும் ஒரு மணித்தியாலத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் ஆரம் பிப்பது என்றும் அது தொடர்பாக சம்பந்தப்பட்ட வலயக்கல்விப் பணிப்பாளர்கள் முடிவுகளை மேற்கொள்வர் என்றும் யாழ். அரச அதிபர் கே.கணேஷ் நேற்றிரவு உதயனுக்குத் தெரிவித்தார்.பாடசாலைகளை இயக்குவதற்கு வசதியாக ஊரடங்கு நேரம் தளர்த்தப்படும் என்று படைத்தரப்பு உறுதியளித்துள்ளது என்றும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் படை அதிகாரிகள் ஆகியோருக்கு இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து தீர்மானிக் கப்பட்டுள்ளது.யாழ். அரச அதிபர் க. கணேஷ், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி செ.மகாலிங்கம், யாழ். வலயக் கல்விப் பணிப் பாளர் வே.தி.செல்வரத்தினம், வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளர் ப. விக்னேஸ் வரன் ஆகியோருடன் படைஅதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
2.8.2006
கைதடிப் பிரதேசத்தில் மீண்டும்சட்டவிரோதமாக மணல் அகழ்வு
கைதடிப் பிரதேசத்தில் மீண்டும் சட்ட விரோதமாக மணல் அகழும் நடவடிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கைதடி ,வேலம்பிராய், தச்சன்தோப்பு, கோயிலாக்கண்டி போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடை பெற்று வந்தது. இப்பகுதி மக்களின் எதிர்ப் பாலும் நாட்டுநலன் பேணுவோரின் எச் சரிக்கையாலும் கட்டுப்படுத்தப்பட்டி ருந்தது. ஆனால், தற்போது மீண்டும் மணல் அகழ்வு தீவிரமாக இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது.பகல் மற்றும் இரவு வேளைகளில் உழவு இயந்திரங்களுடன் இப் பகுதிக்கு வருவோர் தடுக்க முயற்சிப் போரை அச்சுறுத்தி, கொலைப் பயமுறுத்தல்கள் விடுத்து மணலை அகழ்ந்து உழவு இயந் திரங்களில் எடுத்துச் செல்கின்றனர் என்று கூறப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை இவ்வாறு மணல் ஏற்றிவந்த உழவு இயந்திரம் ஒன்று இலங்கை நீதித்துறையில் உயர் பதவி வகிக்கும் ஒருவரால் கைதடிப் பாலத்துக்கு அண்மையில் பிடிக்கப்பட்டு சட்ட நட வடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்ப டைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மணல் கொள்ளையைத் தடுக்க உரிய அதிகாரிகள் கவனமெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறவன்புலோவில் கால்நடைகளுக்கு மருத்துவ சேவை
சாவகச்சேரி கால்நடை வைத்தியர் அலுவலக ஏற்பாட்டில் தென்மராட்சி தெற்கு மறவன்புலோப் பகுதியில் நடமாடும் மருத்துவ சேவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடத்தப்படவுள்ளது.தென்மராட்சி தெற்குப் பிரதே மக்கள் இந்த நடமாடும் மருத்துவ சேவையில் கால்நடைகள் தொடர்பான பிரச்சினை களை முன்வைத்து தீர்வு காணலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, வரணிப் பகுதியில் மாடுகளுக்கு தொண்டை அடைப்பான் நோய் எதிர்ப்புத் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருவதாகவும் மாடுகள் வளர்ப்போர் கால்நடை மருத்துவர் அலுவலகத்தில் பதிவு செய்து மாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றிக்கொள்ளலாமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
28.07.2006
தென்மராட்சியில் பால் உற்பத்தியைஊக்குவிப்பதற்கு நடவடிக்கை
தென்மராட்சிப் பிரதேசத்தில் பால் உற்பத்தியை ஊக்குவிக்கவும் அதற்கு சந்தை வாய்ப்பை பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந. ரவிராஜ் தெரிவித்தார்.தென்மராட்சியில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் இப்படிக் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:இந்தப் பிரதேசத்தில் கால்நடை வளர்ப்போர் பாலைச் சந்தைப்படுத்த பெரும் சிரமம் அடைகின்றனர் என முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதனால் பால் உற்பத்தியில் ஆர்வம் காட்டாது விடுகின்றனர். பாலில் இருந்து பல சுவையான பொருள்களை உற்பத்தி செய்ய முடி யும். கால்நடை வளர்ப்போர் சங்கம் மற்றும் பொது அமைப்புகள் பால் உற்பத்திப் பொருள் தயாரித்து சந்தைப் படுத்தும் திட்டங்களை சமர்ப்பித்தால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
23.07.2006
தென்மராட்சியில் விரைவில்பால் பதனிடல் நிலையம்
தென்மராட்சிப் பிரதேசத்தில் விரை வில் பால் பதனிடும் நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.பிரதேச கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் விடுத்த வேண்டுகோளை யடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ந. இரவிராஜ் இந்த நிலையத்தினை அமைப் பதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்.பால் பதனிடுவதற்கான உபகரணங் களை கால்நடை அபிவிருத்தி அமைச் சரிடமிருந்து பெற்றுக் கொடுக்கவுள்ள தாகத் தெரிவிக்கப்பட்டது.இதேவேளை தற்போது பிரதேசத்தில் பால் உற் பத்தி அதிகரித்துள்ளதையடுத்து சாவகச் சேரி சந்தைப்பகுதியில் பால் விற்பனை நிலையம் ஒன்றை நிறுவ பிரதேச கால் நடை வளர்ப்போர் சங்கத்தினர் நடவ டிக்கை எடுத்துள்ளனர்.
17.07.2006
சிறுவர் பாதுகாப்பு அலுவலகம்சந்திரபுரத்தில் புதன் திறப்பு
மட்டுவில் சந்திரபுரத்தில் கிராமமட்ட சிறுவர் பாதுகாப்புக்குழு அலுவலகம் நாளைமறுதினம் புதன்கிழமை காலை 10 மணிக்கு திறந்துவைக்கப்படவுள் ளது.சந்திரபுரம் கிராம அலுவலர் கு.பரமானந்தம் தலைமையில் நடைபெறும்இந்நிகழ்வுக்கு தென்மராட்சி பிரதேச செயலர் செ.ஸ்ரீநிவாசன் முதன்மைவிருந்தினராகக் கலந்துகொண்டு அலுவலகத்தினைத் திறந்துவைக்கவுள்ளார்.அறவழிப் போராட்டக் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள, பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான செயற்றிட்டத்தின் கீழ் இந்த அலுவலகம் திறக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
15.07.2006
யாழ்.வீரருக்கு தென்னாசிய விளையாட்டில் பங்குபற்றும் வாய்ப்பு கிட்டியது
யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் "சாவ்' தென்னாசிய விளையாட்டுகளில் பங்கு பற்றும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.எம்.பிரதீப்குமார் என்பவரே இந்த வாய்ப்பினைப் பெற்றுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.சிரேஷ்ட தடகளப் போட்டிகள் நேற்றையதினம் கொழும்பில் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் குண்டெறிதலில் பங்குகொண்ட எம்.பிரதீப்குமார்(மட்டுவில் வடக்கு) 13.14 மீற்றர் தூரம் எறிந்து 3ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.இதன் மூலம் அண்மையில் நடைபெறவுள்ள "சாவ்' தென்னாசிய விளையாட்டுக்களில் பங்குபற்றும் வாய்ப்பினை அவர் பெற்றுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.நீண்டகாலத்துக்குப் பின்னர் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் இந்த வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.
சிறுவனைக் காணவில்லையாம்
சிறுவன் ஒருவனைக் காணவில்லையென மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மருதடி வீதி, சாவகச்சேரியைச் சேர்ந்த சுப்பிரமணியம் பிரான்ஸிஸ் தீபன்(வயது 16) என்ற சிறுவனே காணாமற்போனார் என அவரது பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.கடந்த 12ஆம் திகதி வீட்டில் இருந்து தனியார் கல்வி நிலையம் ஒன்றுக்குச் சென்ற இவர் இதுவரை வீடு திரும்பவில்லையென முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12.07.2006
நள்ளிரவு வேளை வீதியில் நடமாடிய சிறுமிபடையினரால் பெற்றோரிடம் ஒப்படைப்பு
நள்ளிரவு வேளை தனியாக வீதி யில் நடமாடிய 12 வயதுச் சிறுமியை இராணுவத்தினர் தடுத்து வைத்திருந்து மறுநாள் காலை அப்பகுதி கிராம சேவை யாளர் முன்னிலையில் விடுவித்தனர். இச்சம்பவம் கடந்த மூன்றாம் திகதி நள் ளிரவு கைதடிப் பகுதியில் இடம்பெற் றது.அன்றைய தினம் இரவு தனது பேர்த்தி யாரின் வீட்டில் நின்ற சிறுமியை மறு நாள் நயினாதீவு அம்மன் கோயிலுக்கு அழைத்துச் செல்கின்றோம் என்று பெற்றோர் கூறிவிட்டு தமது வீட் டிற்கு சென்று விட்டனர். நயினாதீவுக்கு மறு நாள் செல்வது என்ற சிந்தனையோடு பேர்தியார் வீட்டில் அன்றைய இரவு இச்சிறுமி உறங்கினார்.நள்ளிரவு ஒரு மணியளவில் விழித்த சிறுமி ஒருவருக்கும் சொல்லாமல் இரண்டு பைகளில் வீட்டில் இருந்த உடைகளைத் திணித்தவாறு தனியாக வீட்டில் இருந்து வெளியேறினார். கைதடி மானிப்பாய் வீதி வழியாக கைதடிச் சந்தியை நோக்கி அச்சிறுமி சென்று கொண்டிருந்தார். கைதடி தபாலகத் திற்கு அண்மையாக தனியாக வந்த இச்சிறுமியை அங்கு வீதிக்காவற் கட மையில் நின்ற இராணுவத்தினர் கண் டனர். இவர்கள் சிறுமியை சந்தேகத் தின் பேரில் தடுத்து நிறுத்தினர். படை யினரிடம் சிறுமி "நயினாதீவுக்கு போகி றேன்' என பதிலளித்தார். இராணுவத்தி னர் சிறுமியை கைதடிச்சந்திக்கு கூட்டி வந்து முகாமின் முன் பக்கத்தில் இருக்கு மாறு பணித்துவிட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சிலரை எழுப்பி சிறுமி யைத் தெரியுமா எனக் கேட்டனர். சிலர் தெரியும் எனக் கூறியதால் காலை விடிந் தவுடன் சிறுமியின் பெற்றோரை முகா மிற்கு வருமாறு அறிவித்தனர். பெற் றோர் வந்த பின்னர் விசாரணைகளை மேற்கொண்டுவிட்டு பெற்றோரின் கவன மின்மை பற்றியும் அறிவுரை களை கூறிய படையினர் அப்பகுதி கிராம சேவகர் முன்னிலையில் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
06.07.2006
சாவகச்சேரி நகரசபை விஸ்தரிப்புக் கட்டடம்நாளை திறப்பு
சாவகச்சேரி நகரசபை அலுவலக விஸ்தரிப்புக் கட்டடம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.வடக்கு கிழக்கு மாகாண உள்ளூ ராட்சி திணைக்களத்தின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டில் இக்கட்டடம் புனரமைக் கப்பட்டதாக நகரசபை செயலாளர் திருமதி குணமணிதேவி ஆறுமுகம் தெரிவித்தார்.2000ஆம் ஆண்டு யுத்த அனர்த்த வேளை நகரசபை அலுவலகம், பொது நூலகம் ஆகியவை அமைந்திருந்த கட்டடங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகின. ஏற்கனவே அலுவலகக் கட்டடம் சுமார் ஐம்பது லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு இயங்கி வருவதாகவும்அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடியை கருத்திற்கொண்டு மாடிக் கட்டடத்தின் தளப்பகுதி புனரமைக்கப் பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

1.7.2006
வீட்டின் மீது "ஷெல்' வீழ்ந்து வெடித்தது;
தெய்வாதீனமாக வீட்டார் உயிர் தப்பினர்!
வரணி, மாசேரியில் கடந்த வியாழக்கிழமை 5 மணியளவில் சிறிய ரக "ஷெல்' ஒன்று வீடொன்றின் மீது வீழ்ந்து வெடித்தது. வீட்டின் சிமெந்துத் தகட்டுக் கூரையைப் பிளந்து அறைச் சுவரில் மோதி பாரிய சத்தத்துடன் "ஷெல்' வெடித்தது. தெய்வாதீனமாக அச்சமயம் வீட்டில் ஆள்கள் எவரும் இருக்கவில்லை. பின்பு வீட்டிற்கு வந்த குடியிருப்பாளர் அருகில் உள்ள படைமுகாம் பொறுப்பதிகாரியிடம் இது குறித்து முறையிட்டார். இதனையடுத்து பொறுப்பதிகாரி சம்பவ இடத்தைப் பரிசோதித்து உடைந்து சிதறிய "ஷெல்' பாகங்களை எடுத்துச் சென்றார். இது பற்றி விசாரித்து தகவல் தருவதாகவும் கூறியுள்ளார்.
வரணி, கொடிகாமம் பிரதான வீதியில் பாதுகாப்பு கடமையில் இருந்த படைவீரரிடம் இருந்த ஆயுதத்தில் இருந்து தவறுதலாக வெடித்த குண்டே இவ்வாறு வீட்டுக்குள் வீழ்ந்து வெடித்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.