4.3.09

செய்திகளில் ஊரும் அயலும்- மார்ச்-ஏப்ரில்.2009




















மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் இறுதித் திங்கள் உற்சவநாளில் வீதி உலா வருகை.



யாழ் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள வன்னி மக்களை பார்வையிடச் சென்ற உறவினர்களுக்கு அனுமதி மறுப்பு:
யாழ்குடாநாட்டின் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள வன்னி மக்களை ஆவலுடன் பார்வையிடச் சென்ற உறவினர்கள் ஏமாற்றத்துடன் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று குடாநாட்டில் முகாம்களில் தங்கியு;ள மக்களை அவர்களின் உறவினர்கள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை அடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் குடாநாட்டில் உள்ள 7 முகாம்களிலும் நேற்றுக் காலைமுதல் காத்திருந்தனர். தமது உறவுகளுக்கு புதுவருடப் பண்டங்களை வழங்குவதற்கும் வேறு பொருட்களை வழங்குவதற்கும் அவர்கள் காத்திருந்த போதும் மாலைவரை அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அவர்களது முயற்சி தோல்வியுற்ற நிலையில் ஏமாற்றத்துடன் வீடுதிரும்பியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட யாழ் அரச அதிபர் கே. கணேஸ் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று உறவினர்களைப் பார்வையிட மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என மட்டும் தெரிவித்தார். மேலதிக கருத்துக்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை.
இதேவேளை சிறீலங்கா அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 48 மணி நேர யுத்தநிறுத்த அறிவிப்பினை அடுத்து பெருமளவில் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வெளியேறுவார்கள் என எதிர்பார்த்த போதும் 25 முதல் 30 வரையானவர்களே குடாநாட்டிற்குள் சென்ற தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2009-04-15மூலம் - GTN செய்தியாளர்




ஏழாவது தடுப்புமுகாம் யாழ்/கைதடியில் திறந்து வைப்பு

கைதடி தென்மராட்சியில் சிறீலங்கா படையினரரால் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வரும் பொதுமக்களை தடுத்து வைப்பதற்கு மற்றுமொரு முகாம் ஒன்றிணை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

இதுஏழாவது தடுப்பு முகாம் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் மாத்திரம் மேலும் நான்கு முகாம்கள் இருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. சனிக்கிழமை மாத்திரம் 200 குடும்பங்கள் தென்மராட்சிப்பகுதிக்கு வந்துள்ளதாகவும் இவர்களை கைதடி பனை அபிவிருத்தி நிறுவன கட்டிட வளாகப்பகுதியில் தற்காலிகமாக இருத்தியுள்ளதாகவும் தென்மராட்சி பிரதேச அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறீலங்கா படையினரின் தடுப்பு முகாங்கள் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி விடுதி, குருநகர் பழைய நீதி மன்ற வழாகம், கைதடி யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ பாடசாலை விடுதி, கைதடி சைவ சிறுவர் விடுதி, கொடிகாமம் அரசினர் தமிழ் ககலவன் பாடசாலை, மிருசுவில் கத்தோலிக்க சேர்ச் நிலையம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது.

கைதடி பனை அபிவிருத்தி கட்டப்பகுதியில் அமைந்துள்ள தடுப்பு முகாம் அடிப்படைவசதிகள் அற்றது எனவும் ஆகவும் குறைந்த வசதிகளுடன் கூடிய தற்காலிக குடிசைகளே அமைத்துக் கொடுக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.
இதுவரை சுமார் 6000 பொதுமக்கள் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 5000 பேர் தென்மராட்சியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

இவர்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் எதிர்காலம் கேள்விக்குறியாகி இத் தடுப்புமுகாங்களில் ஏங்கித் தவிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.







இன்றும் கொடிகாமத்தில் சேவையிலுள்ள தட்டிவான்










தென்மராட்சியில் கூட்டம் கூட்டமாக நிருடர் கைவரிசை - மக்கள் கவலை
யாழ் தொன்மராட்சியில் திருடர்கள் கைவரிசை அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
தென்மராட்சியில் சிறீலங்கா படையினருடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளவர்கள் தென்மராட்சியின் மீசாலை சாவகச்சேரி கச்சாய் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து திருட்டுக்களின் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை தடுக்க முனையும்போது அவர்கள் சிறீலங்கா படையினருடன் வந்து எச்சரித்து செல்வதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் தென்மராட்சி மீசாலையில் உள்ள வீடு ஒன்றினுள் இரவு ஊரடங்குவேளை பிரவேசித்த திருடர்கள் அங்கிருந்த பொருள்களை திருட முற்பட்டவேளை ஊரவர் திரண்டு தாக்கியதால் திருடர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

பின்னர் மறுநாள் அதே நேரம் 15இற்கும் மேற்பட்டவர்கள் சிறீலங்கா படையினருடன் வந்து குறிப்பிட்ட தென்னந்தோட்டத்து உரிமையாளர் பார்த்திருக்க அனைத்துத் தேங்காய்களையும் எடுத்து சென்றதுடன், இனியும் தங்களை மிரட்ட முற்பட்டால் கொல்லப்படுவீர்கள் என எச்சரித்து சென்றுள்ளதாக, அப்பகுதியில் உள்ள பதிவின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அண்மைய நாட்களில் யாழ் குடாநாட்டில் இவ்வாறான கெடுபிடிகள் அதிகரித்துள்ளது.

யாழ் குடாவில் இருந்த ஏராளனமான படையினர் வன்னிக் களமுனைக்கு நகர்த்தப்பட்டடுள்ளதால், அது சிறீலங்கா படையினருக்கு ஆபத்தான பிரதேசமாகவும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சம் நிலவும் பிரதேசமாகவும் கணிக்கப்படுவதால், சிறீலங்கா படையினர் தமது பாதுகாப்புக்காக இவ்வாறான சமூக விரேதிகளை ஊக்குவித்து வருகின்றனர்.(www.tamilskynews.com 15.3.09)