ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம் சம்பியன்
.jpg)
சாவகச்சேரி, மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழகத்தின் 47ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடமாகாண ரீதியில் நடத்தப்பட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று கிண்ணத்தை சுவிகரித்துள்ளது.
இந்த கரப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழகமும் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டன.
ஐந்த சுற்றுக்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலிரு சுற்றுக்களிலும் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக்கழகம் முன்னிலை வகுத்து வந்தது தொடந்து நடைபெற்ற சுற்றுக்களின்போது ஆவரங்கால் இந்து இளைஞர் அணி தனது ஆதிக்கத்தை செலுத்தத்
தொடங்கியது.
மிகவும விறுவிறுப்பான முறையில் நடைபெற்ற போட்டியின் அடுத்த சுற்றுக்களில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி வெற்றிபெற்று கிண்ணத்தை தனதாக்கியது.
இந்தச் சுற்றுப்போட்டியின் சிறந்த ஆட்டநாயகனாக ஆவரங்கால் இந்து இளைஞர் அணியைச் சேர்ந்த ஜெனகன் தெரிவு செய்யப்பட்டார்.
| மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலைய கரப்பந்தாட்டம் புத்தூர் வளர்மதி, ஆவரங்கால் மத்தி அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தன |
மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தினரால் நடத்தப்படும் கரப்பந்தாட்டச் சுற்றுத்தொடரின் அரையிறுதிக்கு ஆவரங்கால் புத்தூர் வளர்மதி விளையாட்டுக் கழகமும், ஆவரங்கால் மத்தி விளையாட்டுக் கழகமும் தகுதி பெற்றுள்ளன.
மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் 47 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நடத்தப்படும் கரப்பந்தாட்டச் சுற்றுத் தொடரின் காலிறுதிப் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.
இதில் மூன்றா வது காலிறுதிப் போட்டியில் அச்சுவேலி ஸ்ரார் விளையாட்டுக்கழக "பி' அணியும் புத்தூர் வளர்மதி விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன.
இந்தப் போட்டியின் முதல் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய புத்தூர் வளர்மதி விளையாட்டுக் கழகம் 25:19 என்ற புள்ளிகள் வித்தியாலத்தில் முதலாம் சுற்றை தனதாக்கியது.
எனினும் இரண்டாம் சுற்றில் அச்சுவேலி ஸ்ரார் விளையாட்டுக் கழக "பி' அணி எதிரணிக்கு சிறந்த போட்டியைக் கொடுத்தது. இரு அணிகளும் மாறி மாறிப் புள்ளிகளைப் பெற்ற வண்ணம் இருந்தன. எனினும் இறுதி நேரத்தில் அடுத் தடுத்து புள்ளிகளைப் பெற்ற புத்தூர் வளர்மதி விளையாட்டுக் கழகம் 25:22 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இரண்டாம் சுற்றையும் தனதாக்கியது.
இதன் அடிப்படையில் 2:0 சுற்றுக்கள் என்ற புத்தூர் வளர்மதி விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. நான்காவதும் இறுதியுமான அரையிறுதிப்போட்டியில் ஆவரங்கால் மத்தி விளையாட்டுக் கழகமும் அச்சுவேலி ஸ்ரார் விளையாட் டுக்கழக "ஏ' அணியும் விளையாடின.
போட்டியின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆவரங்கால் மத்தி விளையாட்டுக்கழகம் ஆதிக்கம் செலுத்தியிருந்தது. முதலாம் சுற்றினை 25: 16 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக்கழகம் கைப்பற்றிக்கொண்டது.
இரண்டாம் சுற்றில் அச்சுவேலி ஸ்ரார் விளையாட்டுக்கழக "ஏ' அணி சிறிது போராடினாலும் அது சுற்றை வெல்லும் அளவுக்கு திறமையை வெளிப்படுத்தவில்லை. இதனால் இரண்டாம் சுற்றும் 25:19 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் ஆவரங்கால் மத்தி அணியினர் வசமானது.
இவற்றின் அடிப்படை யில் 2:0 சுற்றுக்கள் என்ற ரீதியில் ஆவரங்கால் மத்தி விளையாட் டுக்கழகம் வெற்றி பெற்று அரை யிறுதிக்குத் தகுதி பெற்றது. நடைபெற்று முடிந்த காலிறு திப் போட்டிகளின் அடிப்படையில் முதலாவது அரையிறுதியில் பன்னாலை ஸ்ரீ கணேசா விளையாட்டுக் கழகமும், ஆவரங்கால் மத்தி விளையாட்டுக்கழகமும் மோதுகின்றன.
இரண்டாவது அரையிறுதியில் ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகமும் புத்தூர் வளர்மதி விளையாட்டுக் கழகமும் விளையாடுகின்றன.(Uthayan 21.7.12)
|






.jpg)












