1.1.14

செய்திகளில் ஊரும் அயலும் JAN/MAR 2014

வீட்டு உரிமையாளரால் வீதிக்கு விரட்டப்பட்ட வயோதிபத் தாயும் மகளும் கைதடி முதியோர் இல்லத்தில்


ஆதரவின்றித் தனிமையில் வசித்து வந்த வயோதிபத் தாயையும் மகளையும் வீட்டு உரிமையாளர் திடீரென வீட்டை விட்டு வெளியேறுமாறு நிர்ப்பந்தித்துள்ளார். 
அதையடுத்து உதவியின்றித் தவித்த அவர்கள் கைதடி முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார் இல்லத்தின் அத்தியட்சகர் த.கிருபாகரன்.
வடமராட்சி துன்னாலைப் பகுதியில் வெளிநாட்டில் வதியும் தனியார் ஒருவரின் வீட்டில் தங்கி வந்த அதே இடத்தைச் சேர்ந்த வல்லிபுரம் முத்துப்பிள்ளை (வயது 84), அவரது மகளான தர்மலிங்கம் செல்வராணி (வயது 60) ஆகியோருக்கே இந்தத் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
திடீரென வீட்டின் உரிமையாளர் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதை அடுத்து  தாயும் மகளும் உதவியின்றித் தவித்துள்ளனர். தாயும் மகளும் முதுமை அடைந்த நிலையில் உறவினர்களின் உதவிகளும் இவர்களுக்கு கிடைக்கப்பெறவில்லை .
இந்த நிலையில் கரவெட்டி பிரதேச செயலகத்தின் சமூகசேவைகள் திணைக்களதத்தின் உதவியுடன் கைதடி முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். 
- See more at: http://onlin





சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உதய சூரியன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 8.30 மணியில் இருந்து நூற்றுக்கும்மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பிரதேச செயலகத்தினை முற்றுகையிட்ட மக்கள் தமக்கு சொந்த காணி வேண்டும், 50 வருடங்களுக்கு மேலாக நாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம், எமக்கு தீர்வு எப்போது? , அரச அதிகாரிகளே நீங்கள் வந்து எமது குடியிருப்பை பாருங்கள் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு நூற்றுக்கும் அதிகமானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடிய சாவகச்சேரி பிரதேச செயலாளர் திருமதி.அ.சாந்தசீலன், கடற்கரை பாதுகாப்பு சட்டத்தின் படி கடலிலிருந்து 200 மீற்றர் தூரத்திற்குள் மக்கள் குடியிருக்க முடியாது. எனவே அப் பகுதிக்குள் வசிப்பவர்களுக்கு வேறு பிரதேசங்களில் காணிகள் வழங்கப்படும். 200 மீற்றருக்கு அப்பால் வசிப்பவர்களுக்கு மட்டும் அந்த இடங்கள் சொந்தமாக வழங்கப்படும். மேலும் இப் பிரச்சினை தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=810912764321836742#sthash.KzfgSxj9.dpuf
நவீல்டின் பந்துவீச்சில் சிக்கித்தவிக்கும் டிறிபேக் 

 அவுஸ்திரேலிய அங்கிலிக்கன் பேராயர் வருகையை கௌரவப் படுத்தும் முகமாக சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி அணிக்கும் நவீல்ட் பாடசாலை அணிக்கும் இடையில் துடுப்பாட்டப்போட்டி நடைபெற்று வருகின்றது.

 நவீல்ட் பாடசாலை மைதானத்தில் இன்று காலை 9.00 மணிக்கு பேராயர் கலாநிதி பிலிப் பிறைரர் நாணயத்தை சுழற்றி போட்டியை ஆரம்பித்து வைத்தார். நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சாவகச்சேரி டிறிபேக்கல்லூரி அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது, முதலில் துடுப்பெடுத்தாடிய நவீல்ட் பாடசாலை அணி 29.3 ஓவர்களில் 240 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

 பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் டிறிபேக்கல்லூரி அணி 17 ஓவர்கள் நிறைவில் 75ஓட்டங்களுக்கு 7விக்கட்டுகளை இழந்து துடுப்பெடுத்தாடி வருகின்றது.

400 கோடி ரூபாய் வானூர்தி தொழினுட்பத்தைக் கண்டு பிடித்த இலங்கைத் தமிழன்



JaffnaHindu_Sithamparanathan_Sabesan_01
கடந்த ஆண்டு தென்மராட்சியைச் சோந்த சிவநாதனை அதியுயர் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஒன்றிற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா அழைத்துப் பாராட்டினார். இந்த ஆண்டு அதேபோல சபேசனைப் பிரித்தானியா பாராட்டுகிறது.

JaffnaHindu_Sithamparanathan_Sabesan_02

சிறுமி மீது வன்புணர்வு கொள்ள முயன்றவருக்கு சிறையும் அபராதமும்  

பதின்ம வயது சிறுமியை வன்புணர்வு கொள்ள முயற்சித்த குடும்பஸ்தர் ஒருவருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் நேற்று மூன்று மாத சிறைத்தண்டனையும் 2 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. 

கடந்த 2012 மார்ச் 24 ஆம் திகதி மட்டுவில் பகுதி வீடொன்றில் தனித்திருந்த பதின்ம வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றதாக சாவகச்சேரி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குத் தொடர்பான விசாரணைகளின் பின்னர் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

குறித்த குடும்பஸ்தருக்கு மூன்று மாத சிறைத்தண்டனையும் 2 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து, அபராதத் தொகை செலுத்தத் தவறின் மேலும் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமென்றும் நீதிவான் உத்தரவிட்டார்.

See more at: http://onlineuthayan.com/News_More.php?id=213322727812163810#sthash.A9CuqPOm.dpuf


சட்டவிரோத மணல் அகழ்வு : சாவகச்சேரியில் ஒருவர் கைது 


news
சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் மணல் அகழ்வதாக கிடைத்த தகவலையடுத்து நேற்று முன்தினம் தினம் அவ் விடத்திற்கு பொலிசார் வருவதை அவதானித்த சந்தேக நபர் தப்பிச்சென்றார்.


பின்னர் நேற்றைய தினம் வீட்டில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டதுடன், உழவு இயந்திரமொன்றும் கைப்பற்றப்பட்டது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=462942725411407228#sthash.SSbK7sY4.dpuf

தமிழ்மொழிக்கு முதன்மை அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் 
03/08/2014 - 18:28 (ஆதவன்.வீரகேசரி)

 வட-கிழக்கின் உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றாகவும், பிரதேசத்தின் பெரும்பான்மையினரின் மொழியாகவுமுள்ள தமிழ்மொழிக்கு முதன்மை அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என சாவகச்சேரி நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரசபையின் மாதாந்தக்கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை சபையின் தலைவர் இ.தேவசகாயம்பிள்ளை தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானத்தை சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் ஞா.கிஷோர் முன்மொழிந்து உரையாற்றினார். இன்னொரு உறுப்பினரான அ.பாலமயூரன் தீர்மானத்தை வழி மொழிந்தார். 

 கிஷோர் மேலும் உரையாற்றுகையில், எமது தாய் மொழியான தமிழ்மொழியானது பாரம்பரிய சிறப்புக்கள் மிக்கதொரு செழுமையானதொரு மொழியாகும். நாட்டின் வட- கிழக்கு பிரதேசத்தின் ஆட்சி மொழியாகவும் தமிழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எமது சபையும் 100மூ தமிழ்மொழிபேசும் மக்களைக்கொண்டதொரு சபையாகும். 


 இந்நிலையில் சபைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் விளம்பரப்பலகைகள், அறிவித்தல் பலகைகள் என்பவற்றி பிறமொழிகளே முதன்மை பெற்றுள்ளன. நகரின் மத்தியில் சிறப்பாக அமையப்பெற்றுள்ள பேரூந்து நிலையப்பெயரில் கூட தமிழ்மொழி இரண்டாம் நிலையில் அமையப்பெற்றுள்ள அவலநிலை காணப்படுகிறது. வர்த்தக நிலையப்பலகைகளில் கூட தமிழ் சிறு அளவில் இரண்டாம் இடத்திலேயே காணப்படுவதுடன், சில இடங்களில் தமிழே இல்லாத நிலையும் காணப்படுகிறது. 

 இவ்வாறான நிலையை மாற்றி சபை எல்லைக்குட்பட்டபிரதேசங்களில் உள்ள சகல நிலைகளிலும் தமிழை முதன்மை அந்தஸ்துள்ள மொழியாக எழுதுவிக்கவும், புதிதாக சபையால் அங்கீகாரம் வழங்கப்படவுள்ள விடயங்களில் தமிழ்மொழியை முதன்மையானதாக செயற்படுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கவேண்டும். சின்ன சின்ன விடயங்களில் கூட எமது மொழியை அழிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு , கட்டமைக்கப்பட்ட நுண்ணிய அழிப்பை எதிர்நோக்கி வரும் எமது சமுதாயத்தையும், மொழியையும் காப்பாற்றுவதற்காக இத்தீர்மானத்தை சபையினர் நிறைவேற்ற வேண்டும் எனக்கேட்டுக்கொள்வதுடன், எமது சபையின் இத்தீர்மானம் பற்றி எமது மாகாணசபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடி இத்தீர்மானத்தை வடமாகாணசபையில் கொண்டுவரச்செய்து, வடக்கு மாகாணமெங்கும் தமிழ்மொழியின் பயன்பாட்டை முதன்மை நிலைக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளவுள்ளேன் எனவும் தெரிவித்தார். இத்தீர்மானம் சபையினரால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கைதடியில் பஸ் விபத்து நான்கு பேர் படுகாயம்

 ஏ9 வீதி கைதடிப்பிள்ளையார் கோவில் ஆலயத்திற்கு அருகாமையில் விபத்து ஒன்று இடம் பெற்றுள்ளது. இன்று மாலை 05.15 மணியளவில் இடம் பெற்ற இவ் விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தங்காலையில் இருந்து பாடசாலை மணவர்களை கல்விச் சுற்றுலாவிற்காக யாழ்ப்பாணம் ஏற்றிவந்து திரும்பி பயணித்துக் கொண்டிருந்த பேரூந்தும் யாழ் நேக்கி வந்த கொண்டிரந்த கன்ரர் வாகனமும் மோதிக் கொண்டதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=299382714108184204#sthash.JYKwsBnh.dpuf
>



ஜேர்மனிய தூதுக்குழு யாழ் விஜயம் 

ஜேர்மனி தூதுக்குழுவினர் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். 
 வைத்தியகலாநிதி யூர்ஜென் மொகாட் தலைமையிலான இந்த குழுவினர் இன்று காலை கைதடியிலுள்ள பனை ஆராய்ச்சி நிலையம் மற்றும் GIZ நிறுவனத்திற்கும் விஜயம் மேற்கொண்டனர். மேலும் மாலை 3 மணிக்கு GIZ நிறுவனத்தின் நிதியுதவியுடன்அமைக்கப்பட்ட பால் பண்ணையையும் திறந்து வைக்கின்றனர். - 
See more at: http://onlineuthayan.com/News_More.php?id=823662674824267541#sthash.xaLK2mot.dpuf

சிங்களக் குடியேற்றம் குறித்தும் ஜெனிவாவில் அமெ. அறிக்கை; நாவற்குழியில் சிங்களவருடன் சந்திப்பு

நாவற்குழியில் குடியமர்ந்துள்ள சிங்களக் குடும்பங்களிடம் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர். அதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிங்களக் குடியேற்றம் தொடர்பிலான குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் அமெரிக்கா செயற்பட்டு எதிர்வரும் ஜெனிவா அமர்வில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக அரச தரப்பை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

 யாழ்ப்பாணத்துக்குக் கடந்த 19 ஆம் திகதி வருகை தந்த அமெரிக்க தூதரக அதிகாரி மைக்கல் ஏ. ஏர்வின் மற்றும் அவரது மொழிபெயர்ப்பாளர் ஆகியோர் நாவற்குழியிலுள்ள சிங்களக் குடியேற்றத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு தங்கியுள்ள 30 சிங்களக் குடும்பங்களிடம் அவர்கள் கலந்துரையாடல்கள் நடத்தியுள்ளனர். அவர்கள் எந்தச் சூழ்நிலையில் இடம்பெயர்ந்தார்கள், இப்போது யாருடைய உதவியில் இங்கு தங்கியிருக்கின்றார்கள் என்பது தொடர்பான விபரங்களை அமெரிக்க அதிகாரிகள் திரட்டியுள்ளனர்.

 இதன் பின்னர் மறுநாள் முல்லைத்தீவுக்குச் சென்று வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனுடன் குறித்த அதிகாரிகள் சந்திப்பு நடத்தியுள்ளனர். இந்தச் சந்திப்பில் நில அபகரிப்புத் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன் வடக்குகிழக்கு மாகாணங்களில் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நடவடிக்கைள் தொடர்பான விவரங்களையும் அவர் ஆராய்ந்துள்ளார் என்று குறித்த ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

 அமெரிக்கத் தூதரகம் இந்தப் பயணம் தொடர்பில், இது தமது வழமையான நடவடிக்கை என்று தெரிவித்துள்ளது. இதேவேளை அரச தரப்பு தெரிவிக்கையில், பிரிட்டன் தமிழர் பேரவையால் வடக்குகிழக்கின் காணி அபகரிப்பு தொடர்பிலான கலந்துரையாடல் இடம் பெற்றதன் பின்னணியிலேயே இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கா கூட்டு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளமையைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

 எதிர்வரும் ஜெனிவா அமர்வில் தரவுகளைச் சமர்ப்பிப்பதற்காகவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளது. வடக்கின் இனப்பரம்பலை மாற்றியமைத்தது விடுதலைப் புலிகள்தான் என்று குற்றஞ்சாட்டியுள்ள பாதுகாப்பு அமைச்சு, வடக்கிலிருந்த 20 ஆயிரம் சிங்களவர்கள், ஒரு லட்சம் முஸ்லிம்களை புலிகள் ஒரு மணி நேரத்தில் வெளியேற்றினர் என்றும் இதனூடாக இனப்பரம்பல் மாற்றியமைக் கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. - 

See more at: http://onlineuthayan.com/News_More.php?id=702102671523820986#sthash.SA34yGrh.dpuf

யாழ்ப்பாணத்தில் மீண்டும் படைகளுக்கு காணி பறிப்பு; நுணாவிலில் சில காணிகளுக்கு சுவீகரிப்பு அறிவித்தல்கள் 

யாழ்.மாவட்டத்தில் மீண்டும் இராணுவமுகாம்களுக்கான காணி சுவீகரிப்பு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. நுணாவிலில் இவ்வாறு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் 7 பேரும் அவற்றை இராணுவத்தினருக்கு வழங்குவதற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர் எனத் தெரியவருகிறது.

 யாழ்.மாவட்டத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் அலுவலகம் திறக்கப்பட்டு இரண்டு மாத காலத்தினுள், இராணுவம் மற்றும் கடற்படைக்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மும்முரப்படுத்தப்பட்டிருந்தன. தாமதமடைந்த திட்டம் இதன் பின்னர் குறித்த காணி சுவீகரிப்பு அலுவலர்கள் தமது பதவியில் இருந்து விலகி வெளியேறியிருந்தனர். இதனால் குறித்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் தாமதமடைந்திருந்தன. இதன் பின்னர் குறித்த நடவடிக்கைகளை அந்தந்தப் பிரதேச செயலாளர்களே முன்னெடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 இவ்வாறானதொரு நிலையில் கடந்த 9 ஆம் திகதி யாழ்ப் பாணத்துக்கு வருகை தந்திருந்த காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனாக பண்டார தென்னக்கோன், பாதுகாப்புத் தேவைக்காக இனிமேல் தனியார் காணிகள் சுவீகரிக்கப்படமாட்டாது என்று கூறியிருந்தார். அரச அதிபர்,பிரதேச செயலர்கள், படை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார். ஏற்கனவே சுவீகரிப்பு நடவடிக்கைகள் தொடங்கிய காணிகள் தொடர்பில் அமைச்சர் எதுவும் தெரிவித்திருக்கவில்லை. 

 குறித்த கூட்டத்தில் வைத்து, பிரதேச செயலாளர்கள் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கின்றார்கள் இல்லை என்று இராணுவ அதிகாரிகள் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தனர்.அத்துடன் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் சுவீகரிக்கவேண்டிய தனியார் காணிகளின் பட்டியலும் பிரதேச செயலாளர்களுக்கு இந்தக் கூட்டத்தில் வைத்து வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைய பிரதேச செயலாளர்கள், காணி சுவீகரிப்பு அலுவலர்களுக்கான ஒப்பத்தையிட்டுச் சுவீகரிப்பு அறிவித்தல்களை ஒட்டத் தொடங்கியுள்ளனர். இதற்கு உதவியாக ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் பட்டதாரிப் பயிலுநர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். 

 நுணாவில் சந்தியில் 5 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட தனியார் காணிகளைச் சுவீகரிப்பதற்காக அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது. குறித்த காணிகளுக்குரிய உரிமையாளர்கள் 7 பேர் தமது காணி ஆவணங்களுடன் வடக்கு முதலமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இது தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக நம்பகரமாக அறியமுடிகின்றது. - 

See more at: http://onlineuthayan.com/News_More.php?id=402862667221327318#sthash.1A3F8dQl.dpuf


நாவற்குழி ஆமி கொமாண்டர் துமிந்தவை கேளுங்கோ எங்க எங்கட பிள்ளைகள் என்று

ஜனாதிபதி ஆணைக்குழு முன் உறவுகள் சாட்சியம் 

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மறவன்புலவு, கோயிலாக்கண்டி, தனங்கிளப்பு மற்றும் நாவற்குழி உள்ளிட்ட பகுதியில் பெருமளவிலானோர் 1996ஆம் ஆண்டில் காணாமற்போனதற்கு குறித்த காலப்பகுதியில் நாவற்குழி படைமுகாமில் இருந்த இராணுவ அதிகாரி துமிந்தவே காரணம் என இன்றைய தினம் பலர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்துள்ளனர். அதன்படி 1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாவற்குழியில் இராணுவ அதிகாரியாக கடமையாற்றி வந்த துமிந்த தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டு இன்றுவரை எங்குசென்றார்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலையில் இருக்கின்றோம் என சாவகச்சேரியில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சாட்சியப்பதிவின் போது தந்தையார் ஒருவர் சாட்சியமளித்துள்ளார். 

அதன்படி எனது 2 மகன்மார் காணாமல் போனதுக்கு குறித்த துமிந்த என்ற இராணுவ அதிகாரியே காரணம் என தெளிவாக சாட்சியமளித்துள்ளார். அத்துடன் கடந்த 1996 ஆம் ஆண்டு மறவன்புலவு பகுதியில் இடம்பெற்ற பாரிய சுற்றிவளைப்பின் போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு விடுவிப்பதாக கூறி அழைத்துச் சென்று காணாமல் போன தனது கணவனை மீட்டுத்தருமாறு குடும்பப்பெண்னொருவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்துள்ளார். 

அவர் மேலும் சாட்சியம் அளிக்கையில், 1996.7.19ஆம் திகதி மறவன்புலவில் மேற்கொள்ளப்பட்ட பாரிய சுற்றிவளைப்பில் 175ற்கு மேற்பட்டவர்கள் ஆலடி சந்திப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு தலையாட்டி முன் நிறுத்தப்பட்டனர். அவர்களில் 54 பேரை தலையாட்டியும் அடையாளப்படுத்தியது. அதில் எனது கணவரும். பின்னர் விசாரித்துவிட்டு விடுவதாக கூறி அழைத்துச் சென்றனர். எனது கணவருடன் கொண்டு செல்லப்பட்டவர்களில் 25 பேர் இன்றும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. கண்கட்டி கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே எனது கணவரை இராணுவம் கொண்டு செல்லும் போது கண்டது தான் நான் கண்ட கடைசி நாள் என்று கதறினார். 

மேலும் தனது சகோதரன் மறவன்புவவில் வைத்து இராணவ சுற்றிவளைப்பில் துமிந்த தலைமையில் கைது செய்யப்பட்டார். இதுவரை எந்த தகவலும் இல்லை என்றும் சகோதரி ஒருவர் சாட்சியம் அளித்தார். எனினும் இன்றையதினம் 5 மேற்பட்ட சாட்சியங்கள் குறித்த துமிந்த என்ற இராணுவ அதிகாரிக்கு எதிராக இடம்பெற்றுள்ளது. எனினும் அன்றைய காலப்பகுதியில் 30 மேற்பட்டவர்கள் துமிந்த தலைமையில் காணாமல் போயிருந்ததாகவும் சாட்சியங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1996.7.19 அன்றே பெண் ஒருவர் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டு இன்று வரை எதுவித தகவலும் இல்லாத நிலையில் உள்ளனர். எனினும் இன்று கடந்த 1990 ஆம் ஆண்டிருந்து 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பிலேயே சாட்சியங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் அதிலும் 96 மற்றும் 2009 ஆண்டு காலப்பகுதியில் காணாமற் போனவர்கள் தொடர்பிலேயே அதிக சாட்சியப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன. எனினும் இந்த விசாரணைக்கு வருகைதந்தவர்களில் பலர் தமது பிள்ளைகள் , கணவன் , சகோதரன் என இராணுவமே கைது சென்று சென்றது என இராணுவத்தினருக்கு எதிராகவே தமது சாட்சியங்களையளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. -
 See more at: http://onlineuthayan.com/News_More.php?id=367532652516757477#sthash.jkYpCk3s.dpuf


- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=263722643913820990#sthash.4xsBhKEC.dpuf

இளம் பெண் சடலமாக மீட்பு 

கைதடி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. மீசாலை வடக்கு நவபுரம் என்ற இடத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை - அற்புதராணி (24 வயது) என்ற இளம் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சடலம் உடற்கூற்றியல் பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 
இதே வேளை தூக்கில் தொங்கிய நிலையில் உறவினரால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பப்பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். 

வண்ணார் பண்ணையைச் சேர்ந்த சிவகுரு கலைச்செல்வி (வயது 43) குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
12/2/2014
 - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=649622641012676908#sthash.yovy1eIx.dpufdiv dir="ltr" style="text-align: left;" trbidi="on">








மாணவர்களுக்கு 14 துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு

-வி.தபேந்திரன்

யாழ். கைதடியிலுள்ள வறிய மாணவர்களில் 14 பேருக்கு டென்மார்க் நாட்டிலுள்ள கைதடி மக்களின் 2 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் 14 துவிச்சக்கர வண்டிகள் பொங்கல் தினத்தன்று வழங்கப்பட்டன.

யாழ். கைதடி மக்கள் நலன்பேணும் நட்புறவு கழகத்தின் தலைவர் இ.கந்தசாமி தலைமையில் கைதடி தெற்கு சனசமூக நிலைய கலை அரங்கத்தில்நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உலக உணவுத்திட்டத்தின் ஓய்வு நிலை அதிகாரி க.சச்சிதானந்தம் கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக பண்டாரவளை கல்வி வலயத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர் சிவசம்பு மதியழகன், சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்களான ஜெ.சிற்சபாநாதன், திருமதி ஜானகி இராசேந்திரம், யாழ். நகர் துசா மூக்குகண்ணாடி வியாபார நிலைய உரிமையாளர் து.மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உலக உணவுத்திட்டத்தின் ஓய்வு நிலை அதிகாரி க.சச்சிதானந்தன் உரையாற்றுகையில்,

"எமது மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டுமென்று நல்ல நோக்கத்துடன் வழங்கும் இந்த உதவிகளை மாணவர்கள் சரிவரப்பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன், கல்வியில் சிறப்பான பெறுபேறுகளை அடைவது தான் இந்த உதவிகளை வழங்கிய நன்கொடையாளர்களின் நல்ல நோக்கத்திற்கு செய்யும் கைமாறாகும்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் எம்மவர்கள் தரும் ஆதரவு மிகவும் வரவேற்கத்தக்கது. அத்துடன், சமூகத்தில் வளப்பற்றாக்குறையுள்ள பல விடயங்களுக்கு இந்த நிதி பெரும் துணை புரிகின்றது" எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

நுணாவில் படைமுகாமில் இருந்து கடத்திய தண்டவாளங்கள் சிக்கின; லொறி மண்ணுக்குள் புதையுண்டதால் அம்பலமானது குட்டு
news
லொறிச் சில்லு மண்ணுக்குள் புதையுண்டமையால் கடத்தப்பட்ட பல லட்சம் ரூபா பெறுமதியான தண்டவாளம் உட்பட இரும்புப் பொருள்கள் பொலிஸாரிடம் வசமாக மாட்டிக் கொண்டன.
இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை நுணாவில் மத்தி கந்தசாமி கோயிலுக்கு முன்பாக இடம்பெற்றது.
ஆலயத்துக்கு முன்பாக உள்ள பெரிய படை முகாமை விரைவில் அங்கிருந்து அகற்றுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அந்தப் படைமுகாமில் இருந்து ரயில் தண்டவாளங்கள் படையினரின் ய­ல் இரும்புப் பெட்டிகள்  உட்படப் பல பழைய இரும்புப் பொருள்கள் லொறி ஒன்றில் ஏற்றப்பட்டன.
அந்த லொறி நேற்று அதிகாலை புறப்பட்ட போது படைமுகாமுக்கு முன்னால் சில்லு புதையுண்டது. இதனை  மீட்கும் பணியில் லொறிச் சாரதி ஏனைய வாகனங்களின் உதவியுடன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
பொதுமக்கள் கொடுத்த இரகசியத் தகவலையடுத்து அங்கு வந்த சாவகச்சேரி பொலிஸார் லொறியைக் கைப்பற்றியதுடன் லொறியில் ஏற்றுவதற்காக படைமுகாம் வளாகத்தினுள் வைக்கப்பட்டிருந்த தண்டவாளத் துண்டங்களையும் இரும்புத் துண்டங்களையும் கைப்பற்றினர். 
இந்தச் சம்பவம் தொடர்பாக லொறியின் சாரதியையும் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக படைமுகாமுக்கு அயலில் உள்ளவர்கள் தெரிவிக்கையில்;
கடந்த ஒரு வார காலமாக தினமும் மாலை வேளையில் லொறியில் வரும் 20க்கும் மேற்பட்டோர் படைமுகாமுக்குச் செல்வதாகவும், காலையில் லொறியில் இரும்புப் பொருள்கள் ஏற்றிச் செல்லப்படுவதாகவும் கூறினர்.
படைமுகாமின் ஒரு பகுதி மாற்றப்பட்ட போதிலும் ஒரு தொகுதி படையினர் இன்னமும் அங்கு தங்கியுள்ளதாகவும், அவர்களின் சிற்றுண்டி நிலையமும் தொடர்ந்து இயங்குவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

(Uthayan 11.01.2014)


தண்டவாளங்களை லொறியில் கடத்த முயன்றவர் சாவகச்சேரியில் கைது

[ வெள்ளிக்கிழமை, 10 சனவரி 2014, 04:16.59 PM GMT Tamilwin ]
இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான தண்டவாளங்களை லொறியில் ஏற்றி செல்ல முற்பட்ட சாரதியை கைதுசெய்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்று தெரிவித்தார்.
சாவகச்சேரி நுணாவில் கிழக்கு வைரசுவாமி கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக முன்னர் இராணுவ முகாம் இருந்த காணியில் இருந்து பழைய தண்டவாளங்கள் மற்றும் பழைய இரும்பு தகரங்களை இனம் தெரியாத நபர்கள் இன்று அதிகாலை லொறி ஒன்றில் ஏற்றி புறப்படும் வேளையில் பாரமிகுதியால் லொறியின் சில்லு நிலத்திற்குள் புதையுண்டது.
தொடர்ந்து மேற்படி நபர்கள் புதையுண்ட லொறியை வெளியே எடுப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்த வேளை, அப்பகுதியால் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரைக் கண்டவுடன் சாரதி விட்டுவிட்டு ஏனைய நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.
சந்தேகமடைந்த பொலிஸார் சாரதியை கைது செய்ததுடன், குறித்த வாகனத்தையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றுள்ளனர்.
158 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சாவகச்சேரி நீதிமன்ற கட்டடத்தொகுதி

 158 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சாவகச்சேரி நீதிமன்ற கட்டடத்தொகுதியை இன்று காலை 9. 30 மணியளவில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் திறந்து வைத்தார். 32 வருடங்களாக தனியார் கட்டடத்தில் செயற்பட்டு வந்த நீதிமன்றம் இன்று காலை 11. 00 மணி தொடக்கம் புதிய கட்டடத்தில் செயற்பட தொடங்கியுள்ளது. இக் கட்டடத்தில் மாவட்ட நீதிமன்றமும் நீதவான் நீதிமன்றமும் இயங்கவுள்ளன. அத்துடன் சமுதாய சீர்திருத்தப் பிரிவு, இலவச சட்ட உதவி மன்றம் என்பனவும் இயங்கவுள்ளது. மேலும் இக்கட்டிடத்தொகுதியின் பின்பகுதியில் 02 நீதிபதிகளின் வாசஸ்தலங்களும் ஒரு அரச சட்டத்தரணியின் வாசஸ்தலமும் அமைக்கப்பட்டுள்ளன. 

 சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், நீதி அமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா, சிறு கைத்தொழில் அபிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நீதிபதிகள் சட்டத்தரணிகளும் கலந்துகொண்டனர். 

 இந் நிகழ்விற்கு வடக்கு மாகாணசபை முதலமைசரும் முன்னால நீதியரசரும் க.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்படாமை நீதித்துறை சார்ந்தவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இவர் சாவகச்சேரி நீதிமன்றத்தில் 1979 - 1982 வரை நீதிபதியாக கடமையாற்றியிருந்தார். இந் நிலையில் இன்றைய மாகாண சபை கூட்டத்தில் முதலமைச்சர் நேற்று தனக்கு அமைச்சரவை அழைப்பை அனுப்பியிருந்ததாக தெரிவித்தார். எனினும் உத்தியோக பூர்வமாக தன்னை அழைக்காமைக்கு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவியேற்கும்போது அவரது பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஷிராணி பண்டாரநாயக்காவிற்கு ஆதரவு தெரிவித்தமை காரணமாக இருக்கலாம் என தெரிவித்தார்.
(9.1.2014)