7.1.15

செய்திகளில் ஊரும் அயலும் Jan/March 20 15

சாவகச்சேரி நகர சந்தையில் கள்ள நோட்டு….

சாவகச்சேரி நகர சந்தையில் கள்ள நோட்டுக்களை மாற்றிக் கொண்டிருந்த ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். மன்னார் பகுதியைச் சேர்ந்த நபர் சாவகச்சேரி சந்தையில் பொருட்களை வாங்கி 5000 ரூபா தாள்களை மாற்றியுள்ளார். அத்துடன் இவர் முன்னரும் சிலரிடம்
கள்ள நோட்டுக்களை நல்ல நோட்டுகளாக மாற்றியிருந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை சாவகச்சேரி சந்தையில் போலி நாணயத்தாளை மாற்றியபோது இவரை கொழும்பில் இருந்து பின்தொடர்ந்து வந்த போலி நாணய குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
அத்துடன் அவரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபா தாள்கள் இரண்டும், 2 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாவும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டார். சந்தேக நபரை வரும் 17 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்

உடல்­களில் சன்­னங்­களை தாங்­கி­ய­வாறு வடக்கு பாட­சா­லை­களில் மாண­வர்கள்

உடல்­களில் சன்­னங்­களை தாங்­கி­ய­வாறு வட­மா­கா­ணத்­தி­லுள்ள பாட­சா­லை­களில் கல்வி கற்கும் மாண­வர்­க­ளுக்கு வைத்­திய வச­தி­களை ஏற்­ப­டுத்த வட­மா­கா­ணத்தில் அதற்­கான வைத்­தி­ய­சா­லையை அமைப்­ப­தற்கு மத்­திய கல்வி அமைச்சு நட­வ­டிக்கை எடுக்க முன்­வ­ர­வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் கோரிக்கை விடுத்தார்.
சாவ­கச்­சேரி இந்துக் கல்­லூ­ரியில் அமைக்­கப்­பட்ட தொழில்­நுட்ப ஆய்­வு­கூடத் திறப்பு விழா நடை­பெற்ற போது அந்­நி­கழ்வில் கலந்­து­கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரி­வித்தார்.அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்,
யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட பல மாண­வர்­களின் உடலில் சன்­னங்கள் உள்­ளன. அவற்றை எடுக்க வசதி வாய்ப்­புக்கள் எதுவும் இங்கு இல்லை.மாண­வர்­களின் உடலில் உள்ள சன்­னங்­களை வெளியேற்றும் வைத்­திய வச­தி­களை அர­சாங்கம் செய்­ய­வேண்டும். முன்­னைய அர­சாங்­கத்­திடம் இதனை கேட்க முடி­யாமல் இருந்தோம். கல்வி இராஜாங்க அமைச்சர் மத்­திய மலை­நாட்­டி­லி­ருந்து வந்­தவர் என்­பதால் எங்கள் துன்­பங்கள் அவருக்குத் தெரியும். ஆகையால் இந்த சன்­னங்­களை உடலில் தாங்­கிய மாண­வர்­க­ளுக்­கான வைத்­தி­ய­சா­லையை வட­மா­கா­ணத்தில் அமைக்­க­வேண்டும்.
தொழில்­நுட்ப ஆய்­வு­கூ­டங்கள் முன்னர் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் இருந்­தன. தற்­போது பாட­சா­லை­க­ளிலும் காணப்­ப­டு­கின்­றன. சர்­வ­தேச மொழியில் கற்­றுக்­கொள்ள வேண்டும். நீண்­ட­கா­ல­மாக யுத்­த­கா­லத்­துக்குள் இருந்­த­வர்கள். இழப்­புக்­களைச் சந்­தித்­த­வர்கள். கண­வர்­களை பிள்­ளை­களை தேடி­ய­லையும் நிலையில் இருக்­கின்றோம்.
யாழ். வன்­னியில் அமைந்­துள்ள பாட­சா­லை­க­ளுக்கு கட்­டட ஆய்வுகூட வசதிகள் தேவையாகவுள்ளது. குடிநீர், மலசலகூடம் இல்லாத பாடசாலைகள் இங்கு இருக்­கின்றன. மாகாண கல்வி அமைச்சால் இதனை செய்ய முடியாது. மத்திய அரசு இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.28.2.15

சாவகச்சேரியில் குண்டு வெடிப்பு! பாதிப்பு எதுவுமில்லை!
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015 ]
சாவகச்சேரி, சங்கத்தானை ரயில் நிலையத்தின் முன்பாக குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று புதன்கிழமை இரவு 9.20 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சங்கத்தானை ரயில் நிலையம் முன்பாக உள்ள காணியிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது.
குறித்த காணியை அதன் உரிமையாளர்கள் நேற்று துப்பரவு செய்து, குப்பைகளுக்கு நெருப்பு வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதன்போதே குண்டு வெடித்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
எனினும் எவ்வகையான குண்டு வெடித்தது என உறுதியாகவில்லை எனத் தெரிவித்த சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். மீசாலையில் குரங்குகளுக்கு வந்த சோதன

February 22, 2015 jvpnews.com







யாழ்ப்பாணம் தென்மராட்சி – மீசாலையில் குரங்குகளைப் பிடித்து பெருங்காடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கை வெற்றி கண்டுள்ளது.
மீசாலையில் விவசாயியான வேலுப்பிள்ளை இராசரத்தினம் (குட்டிவிதானை) என்பவரின் முயற்சியின் பலனாக இரும்புக் கம்பியினால் ஆக்கப்பட்ட பொறிக் கூண்டினுள் கடந்த 19.02.2015 வியாழக்கிழமை காலை 9 மணிதொடக்கம் 12 மணிவரையில் 11 குரங்குகளை பிடித்துள்ளார்.
குறித்த விவசாயி கருத்துத் தெரிவிக்கையில்,
தென்மராட்சி பிரதேசத்திலே கடந்த நான்கு ஆண்டுகளாக குரங்கின் தொல்லைகள் கூடியதால் எம்மால் விவசாயத்தை செய்து ஆதாயம் பெற முடியவில்லை.
நான் எனது சொந்த முயற்சியில் கூடொன்றை செய்து முதலில் 3 குரங்குகளை பிடித்தேன். எனக்கு கடந்த வருடத்தில் மட்டும் என் தோட்டத்தில் இரண்டு இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டது.
இதனால் காட்டு விலங்கு அதிகாரிகளிடம் தொடர்ந்து கொடுத்த அழுத்தங்கள் காரணமாக குரங்கு பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவினரால் பெரிய கூடொன்று தந்துள்ளார்கள்.
இதே போன்று எமது பிரதேசத்தில் பல கூடுகளை தந்துதவினால் எதிர்காலத்தில் குரங்கினை இல்லாதொழித்து விவசாயிகள் நன்மை பெற முடியும் என்று கூறினார்.
இதன்காரணமாக, அப்பகுதி விவசாயிகள் சற்று ஆறுதலடைந்துள்ளனர்.
குரங்குகளைக் கொலைசெய்யாது அவற்றை கூடுகள் வைத்துப் பிடித்து பெருங்காடுகளில் விடுவது என்ற திட்டத்தை விவசாயதிணைக்களம், வனவிலங்குகள் திணைக்களம் ஆகியன இணைந்து முன்னெடுத்திருப்பதாக விவசாயத்திணைக்களம் தெரிவித்திருந்தது. ஆனால், குரங்குகளைப் பிடிப்பதற்கான எந்தவொரு முன் நடவடிக்கைகள் எதனையும் திணைக்களமோ அல்லது அது சார்ந்த நிறுவனங்களோ மேற்கொள்ளவில்லை.
குரங்குகளால் மரவள்ளி, சோளம் போன்ற வீட்டுத் தோட்டப் பயிர்களுக்கும் பப்பாளி, மா போன்ற பயன்தரு பழ மரங்கள் போன்றனவும் கடுமையாக பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சாவகச்சேரி மற்றும் கைதடி விவசாயப் போதனாசிரியர்கள் தமது அறிக்கைகளில் இப்பிரதேசத்தில் விவசாயத்திற்கு குரங்கு சவாலாகக் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
முக்கியமாக பழ மரங்களுக்கும் மரக்கறி பயிர்களுக்கும் சேதம் விளைவிக்கின்றன. கூட்டமாக வந்து பூக்களையும் முற்றிய காய்களையும் தின்று சேதப்படுத்தி விளைச்சலைக் குறைக்கின்றது.
மேலும் மக்களின் அசையும் அசையா சொத்துக்களுக்கும் சேதத்தினை விளைவிக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் தமது உடைமைகளைப் பாதுகாப்பதற்காக பயன்தரு மரங்களை வெட்டுவதுடன், வீட்டுத் தோட்டங்களையும் கைவிடுகின்றனர். இதனால் தென்மராட்சி பிரதேசத்தின் உயிர்பல்வகைமை பாதிப்படையும் அபாயம் காணப்படுகின்றது.

மட்டுவில் வடக்கு அ.த.க .பாடசாலை விளையாட்டுப்போட்டிகள் 






மட்டுவில் வடக்கில் அமைந்துள்ள  அ.த.க .பாடசாலையில் 20.02.2015
அன்று விளையாட்டுப்போட்டிகள் . மிக சிறப்பானமுறையில் நடைபெற்றுள்ளது 

மேலதிக விபரங்களை
www.mohanadhas.com இணையத்தளத்தில் பார்வையிடலாம்


சாவகச்சேரி நகரசபை சுகாதாரத் தொழிலாளிகளுக்கு விடுதி 
news
சாவகச்சேரி நகரசபையில் சுகாதாரத் தொழிலாளர்களாக பணி புரிபவர்களுக்கு விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

சாவகச்சேரி உதயசூரியன் குடியிருப்புப் பகுதியில் நகரசபை தலைவர் இ.தேவசகாயம்பிள்ளை தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியின் அதிபர் து. அருந்தவபாலன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி ஆரம்பித்து வைத்தார்.

முதல் கட்டமாக 47.05 லட்சம் ரூபா நகராட்சி மன்ற நிதியில் இருந்து 5 விடுதிகள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.20.2.15




தென்னவள் சஞ்சிகை வெளியீடு 
news

தென்மராட்சி கல்வி வலயத்தினரால் தென்னவள் என்ற சஞ்சிகை நேற்று 25.1.2015 சாவகச்சேரி இந்துக்கல்லுரியில் வலயக் 
கல்விப்பணிப்பாளா் சு.கிருஸ்ணகுமார் தலைமையில் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது.



ஆசிரியா் மாணவா் நலநோம்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதிஅமைச்சர் 
news
யாழ். சாவகச்சோரி இந்துக்கல்லூரியில் "ஆசிரியா் மாணவா் நலநோம்பு நிலையம்" அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது .
சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் கனடாவில் உள்ள பழையமாணவா் ஒன்றியத்தினால் 7மில்லியன் ரூபா நிதியுதவியில் இக் கட்டடம்
அமைக்கப்படவுள்ளது.    அதற்கமைய இன்று கலை 8மணிக்கு கட்டடத்திற்கான அடிக்கல்லை யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்
மகளிர் விவகார அமைச்சின் பிரதியமைச்சருமான  திருமதி விஜயகலா மகேஸ்வரன் பிரதமவிருந்தினராக கலந்துகொண்டு நாட்டிவைத்தார்.





இணைய வசதியுடன் சாவகச்சேரி பொது நூலகம் 
20.1.15
புலம்பெயா் உறவுகளது நிதியுதவியில் சாவகச்சேரி நகரசபையின் பொதுநுாலகத்திற்கு மக்கள் பாவனைக்கென இணையவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சாவகச்சேரி கல்வயல் பண்டிதா் வேலுப்பிள்ளை நினைவாக அவரது மகன் வைத்தியக்கலாநிதி வே. சிவகடாசத்தால் 2லட்சம் ரூபா பெறுமதியான 2 கணணிகளும் மற்றும் இணையவசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது. நகரசபைத்தலைவர் இ.தேவசகாயம்பிள்ளை தலைமையில் நுாலகமண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்தியா் அருளானந்தம் பிரதம விருந்தினராகக்கலந்து கொண்டு இணையவசதியை ஆரம்பித்து வைத்தார். இதன் போது கருத்து தெரிவித்த நகரசபைத்தலைவர், மாணவா்கள் இணையத்தில் தமது கற்றலுக்கான தேடல்களை இலவசமாக மேற்கொள்ளலாம் என்று, இதனை மேலும் விரிவுபடுத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.என்.நவரட்ணம் குடும்பத்தினரால் இணைய வசதிகள் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.
news
தென்மராட்சி பிரதேச விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து வரும் குரங்குகளை கட்டுப்படுத்துமாறு விவசாயிகள் விவசாயதிணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் குரங்குகளைக் கொலைசெய்யாது  அவற்றை கூடுகள் வைத்துப் பிடித்து பெருங்காடுகளில் விடுவது என்ற திட்டத்தை விவசாயதிணைக்களம், வனவிலங்குகள் திணைக்களம் ஆகியன இணைந்து முன்னெடுத்திருப்பதாக விவசாயத்திணைக்களம் தெரிவித்திருந்தது.

ஆனால், குரங்குகளைப் பிடிப்பதற்கான எந்தவொரு முன் நடவடிக்கைகள் எதனையும் திணைக்களமோ அல்லது அது சார்ந்த நிறுவனங்களோ மேற்கொள்ளவில்லை.

இந்த நிலையில், கண்டிவீதி ஜயாகடையடி மீசாலையைச் சேர்ந்த விவசாயியான பி.வி. இராசரத்தினம் என்பவர் தனது சொந்தப் பணத்தில் இருப்பிலாலான கூடு ஒன்றைத் தயாரித்து குரங்கு ஒன்றை பிடித்துள்ளார்.

இதன் மூலம் கூடுகள் வைத்து குரங்குகளைப் பிடிக்க முடியும் என்பதை  விவசாயதிணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்டவா்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.