மோகனதாஸ் சன சமூக நிலையம்
மட்டுவில் உற்றொரு மட்டிட லற்றது மாண்புறு மோகனதாஸ்
எட்டிடல் அற்றது எட்டுறு திசைபுகழ் எட்டிடு மோகனதாஸ்
தொட்டிடல் அற்றுவிண் முட்டிடு மாஅறுடன் தோன்றிடு மோகனதாஸ்
விட்டிடல் அற்றவர் கட்டி இணைந்திட விஞ்சிடு மோகனதாஸ்
பேறு நிறுத்திய ஆறு முகம்பெயர் பெற்றவர் பொன்னரவர்
கூறு படுத்தி அளித்த நிலத்தினில் கட்டிய மோகனதாஸ்
மாறு படுத்தி அடக்கி ஒடுக்குறு மக்கள் எழுச்சியுற
வீறு பெறத்திறல் விஞ்சி விரிந்து விளங்கிடு மோகனதாஸ்
உற்றொரு நூலக முயர்விளை யாடலொ டோங்கு கலைக்கழகம்
பெற்றொரு சனசமூ கத்தரு நிலையமும் பேணுறு பிரிவுகளாய்
மற்றொரு அறிவு மாண்பு திறத்தொடு மன்னு மனப்பாங்கு
பற்றொடு ஒற்றுமை உற்று மிளிர்ந்து பயின்றிடு மோகனதாஸ்
மிச்சம தொற்றுமை மேவும் உழைப்பொடு மிளிர்கலை கல்வியுடன்
அச்சம தற்றுயர் வான விழுப்ப மடைந்திடு மவ்வழியே
எச்சம தானவர் எம்மவர் ஏற்றம தென்றுமே எய்திடவே
உச்சம துற்றிட வோர்வழி காட்டியாய் ஓங்கிடும் மோகனதாஸ்