4.10.06

செய்திகளில் ஊரும் அயலும் அக்டோபர்/டிசம்பர்

அனைவர்க்கும் நத்தார் மற்றும் புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகுக!


29.12.2006

சாவகச்சேரி நீதிமன்றம் அருகில் கிளேமோர் தாக்குதல்; 2 இராணுவத்தினர் பலி; மூவர் காயம்

தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
சாவகச்சேரி `ஏ9' வீதியில் நீதிமன்றத்துக்கு அருகிலேயே நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்தக் கிளேமோர் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
வாகனமொன்றில் சென்றுகொண்டிருந்த படையினர் மீதே வீதியோரத்தில் மரமொன்றில் பொருத்தப்பட்டிருந்த கிளேமோர் வெடிக்க வைக்கப்பட்ட போதே இரு படையினர் அந்தஇடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.
இவர்கள் மூவரும் உடனடியாக ஹெலிகொப்டர் மூலம் பலாலி இராணுவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலையடுத்து அப்பகுதியில் படையினர் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதலையும் மேற்கொண்டனர்.

25.12.2006
தென்மராட்சி கல்வி வலயத்தில்100 மாணவர் புலமைப்பரீட்சையில் சித்தி
தென்மராட்சி கல்வி வலயப் பாடசாலைகளில் 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 100பேர் சித்தியடைந்துள்ளனர்.இவர்களில் கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலய மாணவன் 167 புள்ளிகளைப்பெற்று வலய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த 34 மாணவர்கள் பரீட்சையில் சித்தி பெற்று வலய மட்ட சாதனை படைத்துள்ளனர்.சித்தி பெற்ற ஏனைய பாடசாலை மாணவர்களின் விவரம் வருமாறு:கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலயம், மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம் தலா 9 மாணவர்கள்.கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலயம், கச்சாய் அ.த.க.பாடசாலை தலா 5, சாவகச்சேரி மகளிர் கல்லூரி, நுணாவில் கிழக்கு அமிர்தாம்பிகை வித்தியாலயம் தலா 4, மட்டுவில் சந்திரமௌலீசர் வித்தியாலயம் 1, சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி, மட்டுவில் மகாவித்தியாலயம், நாவற்குழி மகாவித் தியாலயம், உசன் இராமநாதன் ம.வி, மட்டுவில் கமலாசனி வித்தியாலயம், மந்துவில் ஸ்ரீபாரதி வித்தியாலயம், இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தி, மிருசுவில் அ.த.க.பாடசாலை, குடமியன் அ.த.க.பாடசாலை தலா 2, மட்டுவில் சாந்தநாயகி வித்தியாலயம், நாவற்காடு கணபதிப்பிள்ளை வித்தி, சாவகச்சேரி றோ.க.த.க.பாடசாலை, கல்வயல் சண்முகானந்தா வித்தியாலயம், சரசாலை ஸ்ரீகணேசா வித்தி, கொடிகாமம் அ.த.க. பாட சாலை, கைதடி விக்னேஸ்வரா வித்தியால யம், வரணி ம.வி தலா 1, என்ற நிலையில் மாணவர் கள் சித்தி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

10.12.2006.
மட்டுவில் வடக்கில் மாணவன் சுட்டுக்கொலை!
மட்டுவில் வடக்குப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாதோரின் சூட்டுக்கு மாணவன் ஒருவன் உயிரிழந் தார்.அதே இடத்தைச் சேர்ந்த மனோகரன் பரந்தாமன் (வயது 17) என்பவரே உயிரி ழந்தார்.வீட்டில் இருந்தவேளை அவரை இனந் தெரியாதோர் வெளியே அழைத்துச் சுட் டுக்கொன்றனர் எனத் தெரிவிக்கப்பட் டது.பிரஸ்தாப மாணவன் நாளை ஆரம்ப மாகும் ஜி.சீ.ஈ.(சாதாரண) தரப் பரீட்சைக்கு தோற்ற இருந்தவர் எனக் கூறப்பட்டது.7.12.2006
லயன்ஸ் கழகத்தின் சிக்குன்குனியா சிகிச்சை நிலையம்
சாவகச்சேரி லயன்ஸ் கழகத்தினர் சிக்குன்குனியா நோய்த் தடுப்பு சிகிச்சை நிலையத்தினை ஆரம்பித்துள்ளனர்.இந் நோயினால் பீடிக்கப்பட்டு சாவ கச்சேரி மருத்துவமனைக்கு வரும் நோயாளர்களுக்கென விசேட சிகிச்சை நிலையத்தினை ஆரம்பித்து மருந்துகளை லயன்ஸ் கழகத்தினர் வழங்கி வருகின்றனர். இந்நோயினால் பீடிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவென ஒரு தொகுதி மருந்து வகைகளை கொழும்பு லயன்ஸ் கழகங்கள் அனுப்பி வைத்துள்ள தாகத் தெரிவிக்கப்பட்டது

பரீட்சை நிலையங்கள் தென்மராட்சியில் மாற்றம்
ஜி.சீ.ஈ. சாதாரண தரப்பரீட்சைக்கென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பரீட்சை நிலையங்களில் சில மாற் றப்பட்டுள்ளன என யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.செல்வரத்தினம் தெரிவித்தார்.வரணி மகா வித்தியாலயம் மண்டப இல. 1 மந்துவில் ஸ்ரீ பார்வதி வித்தியாலயத்திற்கும்வரணி மகாவித்தியாலயம் மண்டபம் இல. 2 மந்துவில் றோ.க.த.க. பாடசாலைக்கும்உசன் இராமநாதன் மகா வித்தியாலயம் மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்திற்கும்கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலயம் மண்டப இல. 1 மீசாலை விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கும்கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலயம் மண்டப இல. 2 சாவகச்சேரி மகளிர் கல்லூரிக்கும்திருக்குடும்ப கன்னியர் மடம் மண்டப இல. 4 யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்திருக்குடும்ப கன்னியர்மடம் மகாவித்தியாலயம் மண்டப இல. 5யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் மாற்றப்பட்டுள்ளது.தவிர்க்கமுடியாத காரணங்களால் பரீட்சை நிலையங்கள் மாற்றப்பட்டுள் ளது என்றும்சம்பந்தப்பட்ட பரீட்சார்த்திகள் மாற் றம் செய்யப்பட்ட நிலையங்களில் பரீட் சைக்குத் தோற்றுமாறும் வலயக் கல்விப் பணிப்பாளர் மேலும் கேட்டுள்ளார.
சரசாலைவாசி சரண்
மனித உரிமைகள் ஆணைக் குழுவில்சரண் அடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
குடாநாட்டில் அண்மைக்காலமாக இனந்தெரியாத ஆயுததாரிகள் மற்றும் இரவு வேளையில் வெள்ளைவானில் வருவோரின் அச்சுறுத்தல்கள் காரணமாக பலர் யாழ்.மனித உரிமை ஆணைக் குழுவில் தஞ்சமடைந்து வருகின்றனர்.யாழ்.மனித உரிமை ஆணைக்குழு வட்டாரங்கள் இத்தகவலைத் தெரிவித்தன.யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இனந்தெரியாதவர்கள் நடத்தும் கொலை கள் அதிகரித்து வருவதும் இரவுவேளை வீடுபுகுந்து இளைஞர்களை வெள்ளைவானில் வருவோர் கடத்திச்சென்று பின் காணாமற்போவதும் அண்மைக் காலங்களில் அதிகரித்து வருவது தெரிந்ததே.இதன் காரணமாக பல இளைஞர்கள் யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவில் தஞ்சமடைந்து வருகின்றனர்.நேற்றுவரை 32 பேர்வரை இவ்வாறு அச்சுறுத்தல் காரணமாக தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இவர்கள் உடனடியாக நீதிவானின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவரது உத்தரவின் பேரில் யாழ். சிறைச்சாலையில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.நேற்றும் ஆவரங்கால், சரசாலைப் பகுதிகளைச் சேர்ந்த இருவர் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் சரண் அடைந்துள்ளனர்.அவர்கள் யாழ்.நீதிவானின் உத்தரவின் பேரில் யாழ்.சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

24.11.2006
பிற்பகலுடன் வெறிச்சோடும்சாவகச்சேரி நகரப் பகுதி
சாவகச்சேரி நகரப்பகுதி தினமும் பிற்பகல் 2.30 மணியுடன் வெளிசோடிக் காணப்படுகிறது. சாவகச்சேரி பஸ் நிலையத்திலிருந்து 775, 811, 765 ஆகிய இலக்க பஸ் சேவை கள் பி.ப. 2.30 மணிக்கு கடைசி சேவையாக இடம்பெறுவதால் இந்த பஸ்களில் நகரப் பகுதி அரச அலுவலகங்கள், வங்கிகள், வர்த் தக நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரி வோர் பணியை முடித்து சென்றுவிடுகின் றனர்.யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து தென்மராட்சிக்கு செல்வோரும் பிற்பகல் 2.30 மணிக்கு முன்னரே அலுவலகங்களை விட்டுச் செல்கின்றனர். பேருந்து சேவையினை காரணங்காட்டி அரச அலுவலகங்கள், வங்கிகள் பொது மக்களுக்கான சேவைகளை நண்பகல் 12 மணியுடன் நிறுத்துகின்றன. எமது கடமையில் ஆர்வமுள்ளது. இருந்த போதிலும் ஊரடங்குச் சட்டம் மாலை 6 மணிக்கு அமுல்செய்யப்படுகின்றது.இந்நிலையில் பிற்பகல் வேளைகளில் படையிரினரின் வாகன தொடர் அணிகள் வரும்போது வீதியில் செல்லும் வாகனங் கள் மணிக்கணக்கில் தடுத்துவைக்கப்படு கின்றன. இதனால் நேர காலத்லுடன் வீடு செல்ல வேண்டியுள்ளதாக தூர இடங்களிலிருந்து வரும் உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின் றனர். (203)அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் மருத்துவ சேவைஅகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தால் வடமராட்சி மற்றும் தென்மராட்சிப் பிர தேசங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் மருத்துவ வசதிகள் செய்து கொடுக் கப்பட்டு வருகின்றன. வடமராட்சிப் பிரதேசத்தில் விக்னேஸ் வராக் கல்லூரி, மணியகாரன் தோட்டம் சுட ரொளி சனசமூக நிலையம் ஆகிய இடங் களில் தென்மராட்சிப் பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து தங்கியுள்ள மக்களுக்கு வாரத்தில் இரண்டு தடவைகளும் தென்மராட்சிப் பிரதேசத்தில் நிறுவனத் தின் திட்டப் பிரிவிலுள்ள கைதடி நாவற் குழிப் பகுதிகளிலுள்ள பதினைந்து கிராமங் களுக்கும் வாரத்தில் நான்கு தடவைகளும் நடமாடும் மருத்துவ சேவைகள் இடம்பெறு வதாக நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.


23.11.2006
தென்மராட்சி, வடமராட்சிப் பகுதிகளுக்குசர்வதேச பிரதிநிதிகள் நேற்று விஜயம்
நிலைமைகளை நேரில் ஆராய்ந்தனர்
குடாநாட்டு நிலைமை குறித்து ஆராய் வதற்காக வந்த வெளிநாடுகளின் தூது வர்கள் உட்பட சர்வதேசப் பிரதிநிதிகள் நேற்று வடமராட்சி மற்றும் தென்மராட் சிப் பகுதிகளுக்கு விஜயம் செய்தனர். தென்மராட்சியில் இருந்து இடம் பெயர்ந்த மக்களுக்காக விநாயகர் வித்தியாலயம், கட்டைவேலி மெ.மி.த.க பாடசாலை ஆகியவற்றில் இயங்கும் நலன்புரி நிலையங்களுக்கு சர்வதேசப் பிரதிநிதிகள் வருகை தந்தனர். அங்கு தங்கியுள்ளவர்களைச் சந்தித்து அவர் களது வாழ்க்கை நிலைமைகளைக் கேட்டறிந்தனர். அங்கிருந்து உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் சுவிஸ் நிதியுடன் அமைக் கப்பட்டுள்ள புதிய மாடிக் கட்டடத்தை திறந்துவைத்தனர். இதனையடுத்த நண்பகல் 12.15 மணியளவில் மந்திகை ஆதார வைத் திய சாலைக்குச் சென்று அங்குள்ள சிகிச்சைப் பிரிவுகளைப்பார்வையிட்டனர். யாழ்.பிராந்திய சுகாதாரப் பணிப் பாளர் ஆ.கேதீஸ்வரன், மந்திகை மகப் பேற்று வைத்திய நிபுணர் எஸ்.திருக் குமரன், மந்திகை ஆதார வைத்திய சாலைப் பொறுப்பதிகாரி வி.கதிரவேற் பிள்ளை ஆகியோர் வைத்தியசாலை யில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக அவர்களுக்கு விளக்கமளித்தனர். நேற்று பிற்பகல் சர்வதேசப் பிரதி நிதிகள் தென்மராட்சிக்குச் சென்று அங்குள்ள நலன்புரி நிலையங்களை யும் பார்வையிட இருந்ததாகத் தெரிவிக் கப்பட்டது.

வரணி கிளைமோர் தாக்குதலில் படைச்சி்ப்பாய் பலி! மேலும் மூவர் காயம்
நேற்று செவ்வாய் கிழமை தென்மராட்சி வரணி ஞானியர் வளவு பகுதியில் இனம் தெரியாத நபர்களால் 52வது இராணுவ அணிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒரு இராணுவம் கொல்லப்பட்டும் 3 பேர் காயங்களுக்கும் உள்ளானதாகவும் இவர்களை பலாலி இராணுவ மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
22.11.2006
டாக்டர் பே. பிலிப்ஸ் அவர்களது இறுச்சடங்கு (21.11.2006)













(படங்களில் கிளிக்செய்து பெரிய படங்களாகக் காணலாம்)
21.11.2006

டாக்டர் பே. பிலிப்ஸ் காலமானார்


சாவகச்சேரி மட்டுவில் வடக்கில் ஆரோக்கியவாசம் மருத்துவ மனையை அமைத்து நீண்டகாலமாக மருத்துவப்பணியும் சமூக சேவைகளும் ஆற்றிவந்த திரு பே. பிலிப்ஸ் அவர்கள் 20ந்திகதி அதிகாலையில் தற்காலிகமாக வாழ்ந்து வந்த நவாலியில் காலமானார். இன்று செவ்வாய்கிழமையன்று அவரது புகழுடல் மட்டுவிலில் உள்ள அவரது இல்லத்தில் மக்களது அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் பின் மட்டுவில் தேவாலயத்தில் இறுதி ஆராதனைகளும் அஞ்சலிக்கூட்டமும்
இடம்பெற்றது. அதில் ஏராளமான பொதுமக்கள், பல சமூக சேவை தாபனங்கள், அரிமா கழகம், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்று அமரர் பிலிப்ஸ் அவர்களுக்கு தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மட்டுவில் வடக்கு சேமக்காலையில் நல்லடக்க வைபவம் இடம் பெற்றது.
அரிமாகழகம், செஞ்சிலுவைச்சங்கம் உட்பட பல சமூக சேவை நிறுவனங்களில் பலவித பொறுப்புக்களில் தனது சேவையினை கடந்த காலத்தில் வழங்கியிருந்த இவர் ஒரு சமாதான நீதவானாகவும் விளங்கியவர்.


------------------------------------ 0-------------------------------------




16.11.2006.
ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் மல்கரவிராஜின் உடல்தீயுடன் சங்கமம்துயரமும் ஆத்திரமும் மேலிட மக்கள்இறுதி யாத்திரையில் திரண்டு பங்கேற்பு
பல்லாயிரக்கணக்கான மக்கள் கதறி கண்ணீர் மல்க மாமனிதர் நடராஜா ரவிராஜின் உடல் நேற்று நண்பகல் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் அக்கினியுடன் சங்கமித்தது.அரசியல் பிரமுகர்கள், கல்விச் சமூகத்தினர், அரச அதிகாரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதப்பெரியோர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு நிற்க, ரவிராஜின் சிதைக்கு அவரது புதல்வர் உதிஸ்ரன் தீமூட்டினார்.இறுதிச் சடங்கின் போதும், பின்னர் இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்ட வர்கள் துக்கம் தாளாமல் கதறி அழுதனர். ஆத்திரம் மேலிட்டவர்களாகக் காணப்பட் டனர். யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் இருந்து இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வந்தவர்களால் சாவகச்சேரிப் பிரதேசம் நிறைந்து காணப்பட்டது. டச்சு வீதியில் உள்ள மாமனிதர் ரவிராஜின் இல்லத்திலும், அயலிலும் மக்கள் வெள்ளமெனத் திரண் டிருந்தனர். தென்மராட்சி மற்றும் குடாநாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து இறுதி அஞ்சலி செலுத்துவதற்குச் சென்ற மக்கள் தடங்கலின்றிப் பயணம் செய்யக்கூடியதாக இருந்த மையால் அடிக்கடி பெய்த மழையின் மத்தியிலும் மக்கள் கூட்டம் வழிந்தது.அந்தப் பிரதேசமெங்கும் தோரணங்க ளும், கறுப்புக்கொடிகளும் நிறைந்து காணப்பட்டன. ஆழ்ந்த சோகமும், கனத்த மௌனமும் அங்கு உணரப்பட்டது. மாமனிதர் ரவிராஜின் இல்லத்தில் சம யக் கிரியைகள் நேற்றுக் காலையிலேயே ஆரம்பமாகிவிட்டன. கிரியைகள் நடை பெற்ற சமயத் திலும் பெருந்திரளானவர் கள் தங்கள் இறுதி அஞ்சலியைச் செலுத்துவதற்காக வந்து போய்க் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் சனத்திரள் அதிகரித்து மக்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை யும் ஏற்பட்டது. சன நெரிசலைத் தவிர்த்து அஞ்சலி நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர்கள் படாதபாடு படவேண்டியிருந் தது. நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை. சோ. சேனாதிராஜா, எம்.கே. சிவாஜி லிங்கம் ஆகியோர் அலை மோதிய மக்க ளைப் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்தினர். மதச் சடங்குகள் கிரியைகள் முடிவடைந்து இரங்கல் கூட்டம் இடம்பெற்றது. நாடாளு மன்ற உறுப்பினர் கி. சிவநேசன் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். அரச அதிபர், சட்டத்தரணிகள், நீதிவான் கள், மதத் தலைவர்கள், மனித நேய அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கலாகப் பெரும் எண்ணிக்கையான பிரமுகர்கள் இரங்கல் கூட்டத்தில் திரண்டிருந்தனர். யாழ். அரச அதிபர் கே. கணேஷ், இந்து மதகுரு பாலகுமாரக் குருக்கள், தென்னிந் திய திருச்சபையின் சாவகச்சேரி அத்தியட்சாதீன மதகுரு போதகர் வசந்தகுமார், ரவி ராஜ் கல்வி பயின்ற டிறிபேர்க் கல்லூரியின் முன்னாள் அதிபர் மு. நாகேந்திரராஜா, தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் களான துரைரட்ணசிங்கம், பத்மினி சிதம்பரநாதன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதி ராஜா, செ. கஜேந்திரன் மற்றும் சட்டத்தர ணிகள் சார்பில் த.வேலாயுதம் ஆகியோ ரும் இரங்கல் உரை நிகழ்த்தினர். மகஸின் சிறைச் சாலைக் கைதிகள் வரைந்து அனுப்பிய கண்ணீர்க் கவிதையும் அங்கு படிக்கப்பட்டது. அதன் பின்னர் இறுதி யாத்திரை ஆரம்ப மாகியது. மலர்களால் வடிவமைக்கப்பட்ட பூந் தண்டிகையில் பேழை வைக்கப்பட்டது. தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களும், உறவினர்களும் அதனை மயானம் வரை சுமந்து வந்தனர். சுமார் ஒரு மைல் நீளத்துக்கு இறுதி யாத் திரையில் மக்கள் திரண்டு சென்றனர். சரியாக 12.45 மணியளவில் கண்ணாடிப் பிட்டி இந்து மயானத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டது. 1.30 மணிக்கு சிதைக்குத் தீ மூட்டப்பட்டது. உறவினர்களும், நண்பர்களும், ஆதரவாளர்களும், பொது மக்களும் கதறி அழ மாமனிதரின் உடல் தீயுடன் சங்கமித்தது.

15.11.2006
மாமனிதர் ரவிராஜின் புகழுடல் தீயுடன் சங்கமம்
[புதன்கிழமை, 15 நவம்பர் 2006, 18:22 ஈழம்] (புதினம் யாழ். நிருபர்)
மாமனிதர் நடராஜா ரவிராஜின் புகழுடல் அவரது சொந்த மண்ணில் தீயுடன் சங்கமாகியது.

கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் நடராஜா ரவிராஜின் புகழுடல் இன்று புதன்கிழமை அவரது இல்லத்தில் மக்களின் இறுதி வணக்கத்திற்காக வைக்கப்பட்டது.சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் இறுதி வணக்கத்திற்காக புகழுடல் இன்று காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணிவரையில் வைக்கப்பட்டது.ஐயாயிரத்துக்கும் அதிகமான மக்கள் தமது இறுதி வணக்கத்தை மாமனிதர் ரவிராஜூக்கு செலுத்தினர்.வணக்க நிகழ்விற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமை தாங்கினார். வணக்க உரைகளை மதகுரு வசந்தகுமார் அடிகளார், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, துரைரட்ணசிங்கம், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், பத்மினி சிதம்பரநாதன், செ.கஜேந்திரன், யாழ். மாவட்ட அரச அதிபர் கே.கணேஸ் ஆகியோர் நிகழ்த்தினர்.அதனைத் தொடர்ந்து புகழுடல் சாவகச்சேரி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பிற்பகல் ஒரு மணியளவில் தீயுடன் சங்கமமாக்கப்பட்டது.இறுதி வணக்க நிகழ்வில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் பெரும் எண்ணிக்கையிலான சிறிலங்காப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.மாமனிதர் ரவிராஜ் படுகொலை செய்யப்பட்மையைக் கண்டித்து தமிழர் தாயகத்தில் பரவலாக கதவடைப்புப் போராட்டங்கள நடத்தப்பட்டன. சாவகச்சேரி உட்பட யாழ்ப்பாணம் எங்கும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.யாழ்ப்பாணத்தில் துக்கதினமான இன்று அரச திணைக்களப் பணிகள இயங்கவில்லை. மாமனிதர் ரவிராஜ் படுகொலை- வாகரைப் படுகொலை ஆகியவற்றை கண்டித்து வவுனியாவில் 5 ஆம் நாளாக இன்று வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவில்லை. போக்குவரத்துக்களும் நடைபெறவில்லை. பாடசாலைகள்இ வங்கிகள் இயங்கவில்லை.
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் பாடசாலைகள், வங்கிகள், அரச அலுவலகங்கள் இயங்கவில்லை. அங்கும் தமிழ் முஸ்லிம் மக்கள் தமது முழு எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.


இறுதிக்கிரியை நேரம் மாற்றம்
மாமனிதர் நடராஜா ரவிராஜின் இறு திக் கிரியைகள் தொடர்பான ஏற்பாடுகள் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.யாழ்.மாநகர சபையில் நேற்று மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபின் பிற்பகல் இரண்டு மணியளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட பூதவுடல் சாவகச்சேரி நீதிமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் பின்னர் நீதிமன்றத்தில் அமரரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதை அடுத்து டிறிபேர்க் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கல்லூரி அதிபர் எஸ்.அருந்தவபாலன் தலைமையில் அஞ்சலி உரைகள் இடம்பெற்றன. ஆசிரியர்கள், மாணவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அமரரின் பூதவுடல் அவரது வாசஸ்தலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு வைக்கப்பட்டுள்ள பூதவுடலுக்கு பெரும் எண்ணிக்கையான மக்கள் சென்று அஞ்சலி செலுத்தினர்.இன்று காலை அவரது இல்லத்தில் இடம்பெறும் சமயக் கிரியைகளின் பின்னர் நண்பகல் 12 மணிக்கு அவரது பூதவுடல் கண்ணாடிப் பிட்டி மயானத்தில் தகனஞ்செய்யப்படவிருக்கின்றது.

14.11.2006.

ரவிராஜின் பூதவுடல் இன்று யாழ்.மாநகரசபையில் அஞ்சலிக்கு
அதன் பின்னர் சாவகச்சேரிக்கு எடுத்துச்செல்லப்படும்
மாமனிதர் நடராஜா ரவிராஜின் பூதவு டல் விமானம் மூலம் இன்று யாழ்ப் பாணத்துக்கு எடுத்து வரப்படுகின்றது. அவரது பூதவுடல் இன்று முற்பகல் 10 மணிமுதல் ஒரு மணிவரை யாழ்.மாநகரசபையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். மக்கள் அஞ்சலியின் பின்னர் பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் மக்கள் அஞ்சலிக்காக நாளை காலை வரை வைக்கப்படும். நாளை புதன்கிழமை முற்பகல் 11மணி யளவில் அங்கிருந்து பூதவுடல் அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சம யக் கிரியைகளின் பின் பிற்பகல் இரண்டு மணியளவில் பூதவுடல் தகனஞ்செய்யப்படும். ஏ9 பாதையூடாக அவரின் பூதவுடலை எடுத்துவர அவரது குடும்பத்தினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கோரிக்கை விடுத்தபோதும் அரசு அதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. தற்சமயம் எமது செலவில் வாடகைக்கு அமர்த்திய விமானத்தில் பூதவுடலை யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வருகின்றாம் என்று கூட்டமைப்பின் நாடாமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்றிரவு உதயனுக்கு தெரிவித்தார்.


இறுதிக்கிரியைகளில் தெற்குத் தலைவர்களும்
மாமனிதர் நடராஜா ரவிராஜின் இறுதிக் கிரியைகளில் பங்கு கொள்வதற்காக யுத்தத்துக்கு எதிரான முன்னணியின் தலைவர்களும் நாளை யாழ்ப்பாணம் வருகின்றனர். அந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் நாளை யாழ்ப்பாணம் வந்து இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்ளவுள்ளனர். சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் இடம்பெறும் அஞ்சலி நிகழ்வுகளில் அவர்கள் அஞ்சலியுரை நிகழ்த்துவர் என்றும் அறியவந்தது.

கிளாலியில் இருதரப்பும்ஞாயிறு இரவு மோதல்
கொழும்பு,நவ. 14தென்மராட்சி கிளாலி பகுதியில் படை யினரும், புலிகளும் மாறி மாறி ஷெல் மோதலில் ஈடுபட்டனர் என்று பாது காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த மோதலில் படையினர் தரப்பில் நால்வர் காயமடைந்தனர் என்றும் தெரி விக்கப்படுகிறது.முதலில் அங்குள்ள படைநிலைகள் மீது புலிகளே தாக்குதல் தொடுத்தனர் என் றும், பின்னர் படையினர் திருப்பித் தாக்கி னர் எனவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்தது. இதேவேளை, நேற்றிரவும் ஷெல் தாக்குதல்கள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் இருந்தன.

13.11.2006
ரவிராஜுக்கு அஞ்சலி செலுத்தி தென்மராட்சியில் ஹர்த்தால்

கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் கொலையைக் கண்டித்தும் அவருக்கு அஞ்சலி செலுத்தியும் அவரது சொந்த இடமான தென்மராட்சியில் நேற்றுப் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
நாட்டுப்பற்றாளர்கள் என்ற அடிக்குறிப்புடன் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது;
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜுக்கு அஞ்சலி செய்வதற்காக நாளை செவ்வாய்க்கிழமையும் இறுதிக்கிரியை நிகழ்வு நடைபெறும் புதன்கிழமையும் தென்மராட்சிப் பகுதியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
வீடுகள் தோறும் கறுப்புக் கொடிகளை தொங்கவிட்டு அவரின் இறுதிநிகழ்வில் கலந்து மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
.
(தினக்குரல்)

12.11.2006
ரவிராஜ் எம்.பியின் இறுதிக்கிரியைபுதனன்று சாவகச்சேரியில்
கொழும்பில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 15ஆம் திகதி புதன்கிழமை அவரது சொந்த இடமான சாவகச்சேரியில் இடம்பெறவுள்ளன.ரவிராஜ் எம்.பியின் பூதவுடலை ஏ9 வீதியூடாக சாவகச்சேரிக்கு எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளோம். எனினும் இதுவரை சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை. பூதவுடலைத் தரை மூலம் எடுத்துச் செல்வதற்கான அனுமதி கிடைக்கப்பெறாவிட்டால் விமானம் மூலம் எடுத்துச் செல்வதற்கும் சாவகச்சேரியில் இறுதிக்கிரியைகளை நடத்தவும் கூட்டமைப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

த.தே.கூ. நாடளுமன்ற உறுப்பினர்ரவிராஜ் சுட்டுப் படுகொலை







[புதினம்/வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2006, 09:53 ஈழம்]
யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் (வயது 44) நடராஜா ரவிராஜ் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் கொழும்பில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்ரவுனில் உள்ள தனது வீட்டில் இருந்த போது ரவிராஜ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார் என்று மருத்துவமனை அதிகாரி ஹெக்டர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜின் மெய்ப்பாதுகாவலரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட சம்பவ இடத்தில் துப்பாக்கி காணப்பட்டதாக கூறப்படுகின்றது.
யாழ். தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
சட்டத்தரணியாக இருந்து அரசியலில் நுழைந்தார்.
யாழ். பிரதி மேயராக 1997 ஆம் ஆண்டும் மேயராக கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரையும் பொறுப்பு வகித்தார்.
கடந்த 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் இருமுறையும் வெற்றி பெற்றார்.
ஐ.நா. அலுவலகம் முன்பாக நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்தியவர் ரவிராஜ்.
"தமிழ் மக்களின் ஜனநாயகக் குரல் இன்று சிறிலங்கா தலைநகர் கொழும்பில் அடக்கப்பட்டுள்ளது" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.


9.11.2006
மந்துவில் பகுதியில் கட்டாக்காலிகளின் தொல்லை அதிகரிப்பு
மந்துவில், மட்டுவில் மற்றும் சரசாலைப் பிரதேச வயல்களில் கட்டாக்காலி மாடுகளால் நெற்பயிர்கள் நாசமடைவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். தற்போது காலபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கால் நடை வளர்ப்போர் தமது மாடுகளைக் கட்டாக்காலியாக விடுவதால் அவை பயிர்களை நாசம் செய்கின்றன. இதனையடுத்து விவசாயிகள் கட்டாக்காலி மாடுகளைப் பிடிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஆங்கிலஆசிரியருக்குசெயலமர்வு
தென்மராட்சி கல்வி வலயப் பாடசாலைகளில் ஆங்கில பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நிக்கொட் நிறுவன அனுசரணையுடன் நடத்தப்படும் பயிற்சி நெறி தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு நாளை மறுதினம் சனிக்கிழமை சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் ஆரம்பமாகவுள்ளது.இப் பயிற்சி நெறியில் இரண்டாவது பரீட்சை நடத்தப்படவுள்ளதால் இப் பயிற்சி நெறியில் பங்குபற்றும் அனைத்து ஆசிரியர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.அ.வேதநாயகம் கேட்டுள் ளார்.
8.11.2006

ஜி.சீ.ஈ. (சாதாரண) தர மாணவருக்குதென்மராட்சியில் கருத்தரங்குகள்
தென்மராட்சி கல்வி வலயப் பாடசாலைகளில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் கணிதபாடப் பெறுபேறுகளை உயர்வடையச் செய்யும் நோக்குடன் வலயக் கல்வி அலுவலகத்தினர் கருத்தரங்குகளை ஆரம்பித்துள்ளனர்.கணிதபாடம் தொடர்பான கருத்தரங்குகள் நாளை தொடக்கம் பின்வரும் நிலையங்களில் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்குறித்த தினங்களில் அந்தந்த நிலையங்களுக்கு மாணவர்களையும் இவ் வகுப்புளில் கணிதபாடம் கற்பிக்கும் ஆசிரியர்களையும் அனுப்பி வைக்குமாறும் பாடசாலை அதிபர்களை வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அ.வேதநாயகம் கேட்டுள்ளார்.நாளையும் நாளை மறுதினமும் மட்டுவில் கமலாசினி வித்தியாலயம், மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலயம் ஆகியவற்றிலும்நவம்பர் 15,16 ஆம் திகதிகளில் மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம், வரணி மகாவித்தியாலயம், அல்லாரை அ.த.க.பாடசாலை ஆகியவற்றிலும் நவம்பர் 17,18 ஆம் ஆகிய திகதிகளில் சாவகச்சேரி மகளிர் கல்லூரி, கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலயம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆகியவற்றிலும் பாடக் கருத்தரங்குகள் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப்பொருள் போதியளவு கிட்டாததால்மக்களின் போசாக்கு மட்டம் பெரும் வீழ்ச்சி
சித்த மருத்துவத்துறையினரின் ஆய்வில் தெரியவந்தது
தற்போது குடாநாட்டில் நிலவிவரும் அசா தாரண சூழ்நிலையால் அத்தியாவசிய உண வுப் பொருள்களுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் யாழ். மக்களின் போசாக்கு வீதம் பெருமளவில் வீழ்ச்சி யடைந்துள்ளது. சென்.ஜோன் அம்புலன்ஸ் படையணியி னரின் அனுசரணையுடன் யாழ். சித்த மருத் துவத்துறை மருத்துவப் பிரிவின் ஆய்வுக் குழுவினர் நடத்திய மாதிரி ஆய்வின் முடி வில் இந்த விவரம் தெரியவந்திருக்கிறது.கைதடி, ஆனைக்கோட்டை ஆகிய இடங் களில் மாதிரி ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆய்வின்போது உயரம், நிறை, குருதிய முக்கம், சிறுநீர் குளுக்கோஸ் அளவு, ஈமோ குளோபின் அளவு என்பன அளவிடப்பட் டன. இதன்போதே போசாக்கு மட்டம் வீழ்ச் சியடைவது அறியவந்தது. இந்த ஆய்வின் மூலம் மக்களின் உடற் திணிவுக் குறிப்பெண் ஏற்றுக்கொள்ளப் பட்ட உடற்திணிவுக் குறிப்பெண் அளவிலும் குறைவாகவே உள்ளது. இதிலிருந்து மக் களின் போசாக்கு நிலை மிகவும் தாழ்வாக இருப்பதை அறியக்கூடியதாக உள்ளதாக ஆய்வை நடத்திய வைத்தியர்கள் தமது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர். மக்களின் அடிப்படைத் தேவைகளில் உணவு முதன்மைபெறுகிறது. போதிய உணவு கிடைக்காமமையும் போசாக்கின்மைக்கு ஒரு காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப் புறங்களில் அதிகளவு போஷாக்கின்மை நிகழ்வது தெரியவந்துள்ளது. போசாக்கின்மை கண்டறியப்பட்ட குறிப் பிட்ட இரு இடங்களிலும் உள்ள மக்களுக்கு மலேஷியாவில் இருந்து தருவிக்கப்பட்ட போஷாக்கு பற்றாக்குறை நீக்கி மருந்து வகை களும் மூலிகை மருந்துகளும் வழங்கப்பட்டன. இந்த ஆய்வுக்குழுவில், சித்த மருத்துவத் துறை விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற் றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்


தென்மராட்சி முன்பள்ளி ஆசிரியருக்குவள வழிகாட்டல் பயிற்சிகள் ஆரம்பம்
தென்மராட்சி பிரதேச முன்பள்ளி ஆசிரி யருக்கான வள வழிகாட்டல் பயிற்சி நெறி கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி மகளிர் கல்லூரி, கைதடி பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடம் ஆகிய இடங்களில் பயிற்சிநெறிகள் நடைபெற்று வருகின்றன.தலா 20 பேர் கொண்ட 3 தொகுதி ஆசிரி யர்களுக்கு நேற்றுமுன்தினம் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த 3 தொகுதி ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை இதே நிலையங்களில் பயிற்சிகள் நடத்தப் படுமென்றும் வலயக் கல்விப் பணிப்பா ளர் திருமதி அ.வேதநாயகம் தெரிவித்தார். இப்பயிற்சி நெறிகளை நடத்துவதற் கென 12 வளவாளர்களுக்கு ஏற்கனவே பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இப்பயிற்சி நெறிகள் இலங்கை சிறுவர் பாதுகாப்பு நிறுவனத்தினரின் அனுசரணை யுடன் நடத்தப்பட்டுவருகின்றன.


27.10.2006
தென்மராட்சியில் 50 மலசலகூடங்கள்நிறுவுவதற்கு நிதி ஒதுக்கீடு கிடைத்தது
தென்மராட்சி பிரதேசத்தில் 50 மலசல கூடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் கீழ் புனர்வாழ்வு அமைச்சினால் 40 மலகூடங்களும், யுனிசெப் நிறுவனத்தினால் 10 மலகூடங்களும் அமைக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.கோயிலாக்கண்டி பிரிவில் 25 மல கூடங்களைப் புனரமைக்கவும், சரசாலை வடக்குப் பிரிவில் 15 மலகூடங்கள் நிர்மாணிக்கவும் மஹிந்த சிந்தனைத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நுணாவில் மத்தி பிரிவில் 4 மலகூடங்களும், நுணாவில் கிழக்கு, நுணாவில் மேற்கு ஆகிய பிரிவுகளில் தலா மூன்று மலகூடங்கள் வீதமும் நிர்மாணிக்க யுனிசெவ் நிறுவனத்தினர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.


22.10.2006

மதகு சேதம்
பருத்தித்துறை வீதியில் நுணாவில் சந்திக்கு அண்மையில் உள்ள மதகு கடந்த வியாழக்கிழமை உடைந்தது. இதனால் கனரக வாகனங்கள் இவ்வீதியால் செல்வது நிறுத்தப்பட்டுள்ளது. மழைகாலங்களில் நுணாவில் மேற்குப் பகுதி மழை வெள்ளம் இந்த மதகு ஊடாக நுணாவில் குளம் வாய்க்காலுக்குச் செல்லும். தற்போது பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில் இம்மதகு உடைந்துள்ளமையால் வெள்ளநீர் தேங்கும் அபாயம் உள்ளது.

18.10.2006

சாவகச்சேரியிலும் இன்று பால்மா விநியோகம்
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்று தொடக்கம் பால்மா வழங்கப்படவுள்ளது.அங்கர் 1+, நெஸ்பிறே1+ ஆகிய பால்மா பைக்கற்றுக்கள் கட்டுப்பாட்டு விலையில் வழங்கப்படவுள்ளன.அங்கர் 172ரூபாவுக்கும் நெஸ்பிறே 199 ரூபாவுக்கும் விநியோகிக்கப்படவுள்ளன.இன்று சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, கைதடி மத்திய மருந்தகம், வரணி மத்திய மருந்தகமும் மகப்பேற்றுமனையும் ஆகிய இடங்களிலும் நாளை மிருசுவில் மத்திய மருந்தகத்திலும் பால்மா பைக்கற்றுக்கள் விநியோகிக்கப்படவுள்ளன.ஒரு வயதுக்கும் 3 வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி பதிவு அட்டையினை கொண்டு வருமாறு கேட்கப்பட்டுள்ளது.


தென்மராட்சிப் பாடசாலைகளில்இன்றுமுதல் செய்முறைப்பரீட்சை
தென்மராட்சி கல்வி வலயப் பாட சாலைகளில் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் கர்நாடக சங்கீ தம், பரதநாட்டியம் ஆகிய பாடங்கள் கற்கும் மாணவர்களுக் கான கணீப்பீட்டு செய்முறைப்பரீட்சைகள் இன்று புதன் கிழமை தொடக்கம் நடைபெறவுள்ளன.கர்நாடக சங்கீத பாட பரீட்சை சாவகச் சேரி இந்துக் கல்லூரி, கைதடி முத்துகுமார சுவாமி மகாவித்தியாலயம், மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம் ஆகிய வற்றிலும்பரதநாட்டிய பரீட்சை சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் நடைபெற வுள்ளன. இப் பாடங்களை கற்கும் மாணவர்கள் தத்தமது பாடசாலை அதிபரு டன் தொடர்பு கொள்ளுமாறும் இடம்பெயர்ந்து ஏனைய வலயப் பாடசாலைகளில் தற்காலிகமாக இணைந்து கற்கும் மாணவர்கள் தமது முன்னைய பாட சாலை அதிபர்களுடன் தொடர்பு கொண்டு செய்முறைப் பரீட் சைக்குத் தோற்றுமாறும் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அ.வேத நாயகம் கேட்டுள்ளார்.

15.10.2006

தென்மராட்சியில்11 பாடசாலைகளைமீள இயக்க முடியாத நிலை
தென்மராட்சி, ஒக்.15அண்மைய யுத்த அனர்த்தங்களால் தென்மராட்சி கல்வி வலயத்தைச் சேர்ந்த 11 பாடசாலைகள் இயங்க முடியாத நிலையில் உள்ளதாகத் தெரியவருகின்றது.குறிப்பிட்ட பாடசாலைகளை ஏனைய பாடசாலைகளுடன் இணைத்து இயக்க வலயக் கல்வி அலுவலகத்தினரால் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதேவேளை, இடம்பெயர்ந்து தென்மராட்சிப் பிரதேசத்தில் தங்கியுள்ள மாணவர்கள், தாம் தற்போது தங்கியுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் இணைந்து கல்வியினைத் தொடரமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்கீட்டு அட்டைக்கு பொருள்கள்
தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள சாவகச்சேரி, தென்மராட்சி கிழக்கு, தென்மராட்சி மேற்கு ஆகிய பலநோக்குக் கூட்டுறவுச்சங்கக் கிளைக் கடைகளில் இன்று தொடக்கம் அத் தியாவசியப் பொருள்கள் பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்படவுள்ளன. கொத்தமல்லி, பூடு, சின்னச்சீரகம், பயறு, உழுந்து, அவல், கடலை, ரின்மீன், நூடில்ஸ், தீப்பெட்டி, தேங்காய்பால்மா, சர்க்கரை, தேயிலை, தேங்காய் எண்ணெய், சன்லைட், கைலண்ட் பால்மா ஆகிய பொருள்களே வழங்கப்படவுள்ளன. ஒவ்வொரு சங்கங்களுக்கும் குறைந்த அளவு பொருள்களே வழங்கப்பட்டுள்ளதால், கிளைகளில் உள்ள பங்கீட்டு அட் டைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
4.10.2006

சரசாலை வடக்கில் மினி சூறாவளி தாக்கி8 வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன
சரசாலை வடக்கு கோணாவளைப் பகுதி யில் கடந்த வாரம் இரவு மினி சூறாவளி வீசியதில் எட்டு வீடுகளினதும் நான்கு மல கூடங்களினதும் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. இதனால் வீடுகளிலிருந்த உணவுப் பொருள்களும் ஏனைய பொருள்களும் சேத மடைந்தன. அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்தினால் நிர்மாணிக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் 20ஆம் திகதி குடியிருப்பாளர்களுக்கு கைய ளிக்கப்பட்ட 18 வீடுகளில் எட்டு வீடுகளே சூறாவளியினால் பாதிக்கப்பட் டுள்ளன. மழைகாலம் ஆரம்பிக்க முன்னர் இந்த வீடுகள் புனரமைக்கப்படுமா என சேத மடைந்த வீடுகளின் உரிமையாளர்கள் சம் பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரியுள்ள னர்.


குடிதண்ணீரில் நஞ்சு கலந்ததால்நான்கு பேர் வைத்தியசாலையில்

மட்டுவில் தெற்கில் நேற்றுச் சம்பவம்
மட்டுவில் தெற்கு பகுதி பொதுமக்கள் பயன்படுத்தும் குடிதண்ணீர் கிணற்றில் விஷமிகள் நஞ்சுத் திராவகம் ஊற்றியதால் காலையில் குடிதண்ணீரை எடுத்துச் சென்று குடித்த பொதுமக்கள் பலர் பாதிப்புக்கு உள்ளாகினர்.இச்சம்பவம் நேற்று காலை இடம் பெற்றது.காலை 7 மணியளவில் கிணற்றில் தண்ணீர் எடுக்கச்சென்ற ஆசிரியர் தண்ணீர்ரைக் குடித்தபோது நச்சுத் திரவக மணம் வீசியதும் இதனை அடுத்து அவர் ஏனையோரை தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்துள்ளõர். இதனால் குறிப்பிட்ட கிணற்றில் குடிதண்ணீர் எடுக்கும் பலர் பாதிப்புக்கு உள்ளாகமல் தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இருப்பினும், அதிகாலையில் கிணற்றில் தண்ணீர் எடுத்துப் பயன்படுத்தியோர் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இதே இடத்தைச் சேர்ந்த செல்லையா தர்மேஸ்வரன் (வயது52), நிர்மலகுமார் சுகுமார் (வயது 26), இவரது மகளான சுகுமார் விதுஷா (வயது05), ஆசிரியர் ச. கிருஷ்ணன் (வயது45) ஆகியோரே மத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களாவர்.இதனையடுத்து கிணறு இறைத்து துப்புரவு செய்யப்பட்டது.