4.1.07

செய்திகளில் ஊரும் அயலும் ஜனவரி/மார்ச் 2007


மந்துவிலில் கைதான இளைஞர் ஏழு மாதங்களின் பின் விடுதலைஉயர் நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பு
யாழ்ப்பாணம், மார்ச்31
மந்துவில் பகுதியில் ஏழு மாதங்களுக்கு முன்னர் கைது செய் யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத் தின் கீழ் காவலில் வைக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை அடுத்து நேற்று விடு விக்கப்பட் டார். மந்துவில், தாவளையியற்றாலை பகுதி யைச் சேர்ந்த இராஜதுரை சிறிகாந்தன் என்பவரே விடுவிக்கப்பட்டவராவார். வரணியில் சுற்றிவளைப்புச் சோதனையின் போது காற்சட்டைப் பொக்கற்றுக்குள் இவர் குண்டு வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டதாகத் தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையிலேயே இவரது கைதை யும் தடுப்புக்காவலலையும் ஆட்சேபித்து அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தலைமையிலான ஆயத்தின் முன்னால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சிறிகாந்தனை சாவகச்சேரி நீதிவான் முன் ஆஜர் செய்யுமாறும் அவரைப் பிணையில் விடுவிக்குமாறும் அரச சட்டத்தரணிக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், மனுவை மார்ச் 12ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. அந்தத் தினத்தில் வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர் தரப்பில் அரச சட்டத்தரணி செல்வி பிரியதர்ஷினி டி சில்வா ஆஜரானார். சந்தேகநபர் மீது வழக்குத் தாக்கல் செய்வதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என சட்டமா அதிபர் கருதுவதால் அவரை விடுதலை செய்ய அவர் சிபார்சு செய்கிறார் என தெரிவித்தார். இதனையடுத்து சட்டமா அதிபரின் சிபார்சில் சிறிகாந்தனை கொழும்பு பிரதம நீதிவான் மன்று நேற்று விடுதலை செய்தது. மனுதாரரான சிறிகாந்தன் சார்பில் சட்டத்தரணிகள் காலாநிதி திருநாவுக்கரசு, வேலுப்பிள்ளை பொன்னம்பலம், புருஷோத்தமன் ஆகியோர் ஆஜராகினர்.

கைதடிப்பகுதியில் ஒரே இரவில் ஆறு கோவில்களில் கொள்ளை
வீரகேசரி நாளேடு

யாழ்ப்பாணம், கைதடிப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆறு கோவில்களில் தங்க நகைகள், விக்கிரகங்கள் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. கைதடி வடக்கு கைத்துசிட்டி கந்தசாமி கோவில், கைதடி மேற்கு இணுங்கி தோட்டம் முருகன் கோவில், கைதடி மத்தி வலாம்பிகா அம்மன் கோவில், கைதடி கிழக்கு வைரவர் கோவில், கைதடி மத்தி மடத்து கந்தசாமி கோவில், கைதடி மத்தி ஆச்சிரமம் ஆகிய ஆறு கோவில்களிலேயே கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பெருந்தொகையாக தங்க ஆபரணங்கள், விக்கிரகங்களுடன் மூலஸ்தானத்திலிருக்கும் விக்கிரத்தை அகற்றி நிலத்திலுள்ள தங்க தகடுகளையும் கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர்.கோவில்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களை உடைத்து பெருந்தொகை பணத்தையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். கொள்ளையர்கள் கத்தி, பொல்லு, வாள் மற்றும் இரும்பிலான ஆயுதங்களுடன் கோஷ்டியாக வந்து தமது கைவரிசையை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொள்ளைச் சம்பவங்கள் குறித்து ஆலய தர்மகர்த்தாக்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள போதும் எவரும் இது தொடர்பாக கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கைதடியில் ஒரே இரவில் ஆறு ஆலயங்களில் திருட்டு
மார்ச் 29, 2007
ஒரே இரவில் ஆறு இந்து ஆலயங்களில் திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டி உள்ளனர். கைதடிப் பகுதியில் உள்ள ஆலயங்களிலேயே நேற்று முன்தினம் இரவு திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளன. சம்பந்தப்பட்ட ஆலயங்களில் விக்கிரகங்கள் அகற்றப்பட்டு அங்கிருந்த தங்கத் தகடுகள் திருடப்பட்டுள்ளன. மற்றும் உண்டியல்கள் உட் பட ஆலயங்களிலிருந்த பெறுமதி மிக்க பொருள்கள் யாவும் திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இத்திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஷெல் தாக்குதல்களால் வடமராட்சி, தென்மராட்சிபகுதிகள் அதிர்ந்தன
உடுப்பிட்டி,மார்ச் 28
நேற்று முற்பகல் தொடக்கம் மாலை வரை தொடர்ந்து இடம்பெற்ற ஷெல் தாக் குதல்களால் வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகள் அதிர்ந்த வண்ணம் இருந்தன.முள்ளி, வரணி, நாகர்கோயில், முகமாலை ஆகிய முகாம்களில் இருந்து நேற்றுக் காலை 10 மணிமுதல் ஷெல் தாக்குதல்கள் மேற் கொள்ளப்பட்டன. இயக்கச்சி, மருதங்கேணி, வெற்றிலைக் கேணி ஆகிய பகுதிகளை நோக்கியே இந் தத் தாக்குதல்கள் இடம்பெற்றதாக அங்கி ருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.ஷெல் தாக்குதல்களால் வடமராட்சி, தென்மராட்சிப் பிரதேசங்கள் அதிர்ந்து கொண்டிருப்பதாக பிரதேச செய்தியாளர் கள் ஊர்ஜிதம் செய்தனர். ஷெல் தாக்குதல்களின் அதிர்வை குடா நாட்டின் ஏனைய பகுதிகளிலும் உணரக் கூடியதாக இருந்தது. பல்குழல் எறிகணை களின் பயங்கரச் சத்தத்தால் மக்கள் மத்தி யில் பயப் பிராந்தி நிலவியது.

மிருசுவிலில் சுடப்பட்டுசிகிச்சை பெற்றவர் மரணம்
யாழ்ப்பாணம், மார்ச் 24
கடந்த 17ஆம் திகதி மிருசுவில் வடக்கில் இனந்தெரியாதோரால் சுடப்பட்டு படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர் வியாழக்கிழமை இரவு மரணமானார்.மிருசுவில் வடக்கைச் சேர்ந்த சி.மெய்கண்டதேவர் (வயது 48) என்பவரே சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமடைந்தவராவார்.

நகரப் பகுதியில் நேற்றுஇளம் பெண் சுட்டுக்கொலை
யாழ்ப்பாணம்,மார்ச் 23
யாழ்.நகரப் பகுதியில் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றில் வைத்து நேற்றுக்காலை யுவதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.கைதடி தெற்கைச் சேர்ந்த கதிரன் உதயயொகிகா (வயது 27) என்ற பெண்ணே சுட்டுக்கொல்லப்பட்டவராவார். நேற்றுக் காலை 9.45 மணியளவில் நகரப் பகுதியில் சன நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்ட வேளையில் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது.பிரஸ்தாப யுவதி மருந்தகத்தினுள் கடமையில் இருந்தவேளை உள்ளே நுழைந்த இனந்தெரியாத ஒருவர், கைத்துப்பாக்கியால் யுவதியை சரமாரியாகச் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.சுடப்பட்ட இடத்திலேயே யுவதி மரணமானார்கொலையாளிகள் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.சம்பவ இடத்துக்குச் சென்ற யாழ்.நீதிவான் ஆர்.ரி.விக்னராஜா விசாரணைகளை மேற்கொண்டார்.விசாரணைகளின் பின்னர் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
யாழில் எரிந்த நிலையில் இரு சடலங்கள் மீட்பு
[செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2007, 03:45 ஈழம்]
யாழ். மாவட்டம் தென்மராட்சி, வரணிப்பகுதியில் உள்ள முள்ளியில் அரைகுறையாக எரிந்த நிலையில் 2 சடலங்களை அப்பகுதி மக்கள் கண்டெடுத்துள்ளனர்.
தென்மராட்சிக்கும் வடமராட்சிக்கும் இடையில் உள்ள கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் உள்ள புதர் நிலப்பகுதியில் இந்த சடலங்கள் நேற்று திங்கட்கிழமை காணப்பட்டதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் பிறிதொரு இடத்தில் கொல்லப்பட்டு பின்னர் வரணிக்கு கொண்டு வரப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அப்பகுதிகளில் மேலும் சடலங்கள் இருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் தமது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். முள்ளியானது வடமராட்சிப் பகுதி இராணு வலயத்தின் நுழைவாயில் என்பதுடன், முன்னர் 8 இளைஞர்கள் காணாமல் போன மந்துவில் பகுதிக்கு அருகில் உள்ள பகுதியாகும் மந்துவிலில் காணாமல் போன இளைஞர்களின் சடலங்கள் இதுவரை மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பருத்தித்துறை, கொடிகாமம் வீதியில்முள்ளிப்பாலத்தடியில் எரிந்த நிலையில்இரு இளைஞர்களின் சடலங்கள்

பருத்தித்துறை கொடிகாமம் வீதியில் முள்ளிப் பாலத் துக்கு சமீபமாக கண்டல்காட்டுப் பகுதியில் எரியுண்ட நிலையில் இரு இளைஞர்களின் சடலங்கள் காணப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அந்தப் பகுதிக்கு விறகு வெட்டுவதற்குச் சென்றவர்கள் இச்சடலங்களைக் கண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.ரயர்போட்டு எரிக்கப்பட்ட நிலையில் இச்சடலங்கள் காணப்பட்டன என்றும் மிகவும் உருக்குலைந்த நிலையில் சடலங்கள் இருந்தன என்றும் அவற்றைக் கண்டவர்கள் தெரிவித்தனர்.இச்சடலங்கள் குறித்து கொடிகாமம் பொலிஸாருக்கோ, சாவகச்சேரி நீதிமன்றத்துக்கோ நேற்றுமாலை வரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.
தென்மராட்சியில் பாரிய சுற்றிவளைப்பு இளைஞர், யுவதிகள் மீது விசாரணை
[19 - March - 2007]
தென்மராட்சிப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சாவகச்சேரி - கச்சாய்வீதி, கொடிகாமம் - கச்சாய் வீதி, ஏ-9 பாதையின் கிழக்குப் பகுதிவரை இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பாரிய தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
இப்பகுதிகளிலுள்ள அனைத்து இடங்களிலும் இராணுவத்தினர் நுழைந்து மிகத் தீவிரமான தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இச் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கும் இராமாவில் முருகன் கோவிலுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தினரால் இளைஞர்களும் யுவதிகளுமே பெருமளவில் அழைத்துச்செல்லப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகவும் எனினும், கைது செய்யப்பட்டோர், விடுவிக்கப்பட்டோர் விபரங்களை உடனடியாக அறிய முடியவில்லையென்றும் தெரியவருகின்றது.


பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தின்பங்குனித் திங்கள் இன்று ஆரம்பம்
யாழ்ப்பாணம்,மார்ச்19

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டு வில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய பங்குனித் திங்கள் உற்சவம் இன்று ஆரம்பமா கின்றது. பங்குனி உற்சவம் தொடர்ந்து நான்கு திங்கட்கிழமைகளில் நடை பெறவுள்ளது. ஆலய உற்சவத்தினை முன் னிட்டு கடந்த வாரம் தென்மராட்சி பிரதேச செயலகத்தில் ஆலயத் தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அதற்கேற்ப உற்சவ காலத்தில் அடியார்களின் நன்மை கருதி குடி தண்ணீர் வசதி, சுகாதார வசதிகள் போக்குவரத்து வசதிகள் நேர்த் திகளை நிறைவுசெய்வதற்கான ஒழுங்கமைப்புப் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சாவகச்சேரி பிரதேச சபை, சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களம், தென்மராட்சி பிரதேச செயலகம், மட்டுவில் இந்து இளைஞர் மன் றம் ஆகியவற்றின் அலுவலகங்கள் ஆலயச் சூழலில் இயங்கவுள் ளன. உற்சவ காலத்தில் அடியார் களின் நன்மை கருதி நண்பகல் திருவிழா காலை 10 மணிக்கும் பிற்பகல் திருவிழா பிற்பகல் 2.30 மணிக்கும் நடைபெறவுள்ள தாகத் தெரிவிக்கப்பட்டது. பிற் பகல் திருவிழா மாலை 4.30 மணிக்கு நிறைவடையும் எனவும் இது பொது மக்களின் நன்மை யைக் கருத்திற்கொண்டு நடை முறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, நேர்த்திக்கடன் களைச் செய்பவர்கள் குறிப்பாக காவடி, தூக்குக்காவடிகள் எடுப் பவர்கள் நண்பகல் ஒரு மணிக்கு முன்னர் ஆலய வாசலை வந்த டைந்து காவடிகளை அங்கு இறக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. போக்குவரத்து ஒழுங்குகள்பக்தர்களின் போக்குவரத்து வசதிகளை தனியார் சிற்×ர்த்திச் சங்கமும் இலங்கை போக்குவரத் துச் சபையின் யாழ்.சாலை, பருத் தித்துறை சாலை ஆகியன நடத்த வுள்ளன. இச்சேவைகள் நுணா வில் கனகன்புளியடிச் சந்தியூடாக நடைபெறுவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. ஆலயச் சூழலில் விற்பனை நிலையங்களை நடத்த அனுமதி பெற்றவர்கள் இரவுவேளைகளில் அங்கு தங்க அனுமதி வழங்கப்படமாட்டாது. விற்பனையாளர்கள் தமது விற்பனைப் பொருள் களுடன் உற்சவநாளன்றே சமுக மளிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தத்துக் கொடுப்பதற்கு நான்கு குழந்தைகள்
யாழ்ப்பாணம்,மார்ச்19
சாவகச்சேரி நீதிமன்றப் பொறுப்பில் உள்ள நான்கு குழந்தைகள் தத்துக்கொடுக்கப்படவுள்ளனர். இரண்டு ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளுமே தத்துக்கொடுக்கப்படவுள்ளனர். குழந்தைகளை தத்து எடுக்க விரும்புவோர் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை நீதிமன்றப் பதிவாளருக்கு அனுப்பி வைக்குமாறு அறி விக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரருடன் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கத்தினை விண்ணப்பத்தில் குறிப்பிடுமாறும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சாவகச்சேரியில்இருவர்மீது சூடு
மார்ச் 13
சாவகச்சேரி,டச்சுவீதியில் நேற்றுமாலை 6.30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிக் காயம்அடைந்தனர்.மட்டுவில் தெற்கைச் சேர்ந்த கே.ஜெயக்குமார் (வயது 32), என்.ஈஸ்வரநாதன் (வயது 42) ஆகியோரே காயமடைந்த நிலையில் யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மோட்டார் சைக்கிளில் வந்த இவர்களை இனந்தெரியாதவர்கள் மறித்து அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர் எனக் கூறப்பட்டது.

இயற்றாலைப் பகுதி மக்கள்ஷெல் வீச்சினால் இடம்பெயர்வு
யாழ்ப்பாணம், மார்ச் 10
வரணி, இயற்றாலைப் பகுதியில் கடந்த வாரம் ஷெல்கள் வீழ்ந்து வெடித்ததை அடுத்து அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.கடந்த ஓகஸ்ட் மாதம் வரணிப் பகுதியில் இடம்பெற்ற எறி கணைத் தாக்குதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த இயற்றாலைப் பகுதி மக்கள் இவ்வருடன் ஜனவரி மாதம் தமது சொந்த இருப்பிடங்களுக்குத் திருப்பியிருந்தனர்.கடந்த வாரம் எறிகணைகள் வீழ்ந்ததையடுத்து மீண்டும் அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்துள் ளதாகத் தெரிவிக்கப்பட்டது.மக்கள் இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து அப்பகுதி பாடசாலை, பிரதேச சபையின் வரணி உப அலு வலகம், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கிளை ஆகியன மூடப்பட் டுள்ளதாகவும் அறியப்படுகிறது.எறிகணைத் தாக்குதலில் தாவளை, இயற்றாலையைச் சேர்ந்த சிற்றம்பலம் புவனேஸ்வரி (வயது 41) என்பவர் காயம டைந்து யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

LTTE shells hit Manthuvil Base
[TamilNet, Wednesday, 07 March 2007, 01:26 GMT]
Artillery shells launched by the Liberation Tigers of Tamileelam (LTTE) hit the 52 Brigade Head Office of the Sri Lanka Army (SLA) situated at Manthuvil in Thenmaradchy region in Jaffna district around 12:00 noon Tuesday. Two shells fell inside the Base and one outside it. Ambulance was seen rushing out of the Base towards Palaly Military Hospital following the attack, civilians of the area said.
Although it is believed that there were casualties among the soldiers, the SLA has not given any details so far.
No civilian casualties reported.
Manthuvil Brigade Head Quarters was transferred to Varani some months ago.
After Varani and other SLA camps in the Kodikamam were threatened by LTTE's artillery attack recently, the Brigade Head Quarters and artillery pads were again shifted to Manthuvil.
Manthuvil Base encompasses an area that includes many civilian houses from which the owners have been evicted, and arable land.


மிருசுவிலில் இராணுவ நிலை மீது புலிகள் தாக்குதல்; 3 சிப்பாய்கள் பலி!
கொழும்பு, மார்ச் 6

யாழ்ப்பாணம் மிருசுவிலில் உள்ள இராணுவச் சோதனைச் சாவடிமீது நேற்று அதிகாலை புலிகள் சிறிய ஆயுதங்களைக்கொண்டு நடத்திய தாக்குதலில் மூன்று இராணுவச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர் என்று தேசிய பாதுகாப்புத் தகவல் நிலையம் தெரிவித்தது.புலிகளின் தாக்குதலையடுத்து படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் புலிகளுக்கு பலத்த சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன என்பது அவர்களின் தொலைத்தொடர்புகளை ஒட்டுக்கேட்டதன் மூலம் அறியமுடிந்ததாகவும் பாதுகாப்புத் தகவல் நிலையம் தெரிவிக்கின்றது.கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த புலிகளைத் தூக்கிக்கொண்டு புலிகள் பின்வாங் கிச் சென்றனர் எனவும் பாதுகாப்புத் தகவல் நிலையம் தெரிவித்திருக்கின்றது.
சாவகச்சேரியில் கட்டடத் தொழிலாளி சுட்டுக்கொலை
[ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2007, 16:29 ஈழம்] [புதினம்]
யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியில் கட்டடத் தொழிலாளி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சாவக்சேரி டச் வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 மணியளவில் இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்.
கட்டடத் தொழிலாளியான இராஜரட்ணம் சேகர் (வயது 28) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவர் ஆவார்.
தனது மனைவி மற்றும் பிள்ளைகள் இருவருடன் உந்துருளியில் சென்று கொண்டிருந்தபோது ஆயுததாரிகள் அவர்களை மறித்து நிறுத்தி விட்டு சேகரை சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

வரணியில் நள்ளிரவில் இளைஞன் சுட்டுக்கொலை
3.3..2007
வரணி இயற்றாலைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் வியாழக்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் நுழைந்த பத்துப்பேர் கொண்ட குழு அங்கு படுத்திருந்த இளைஞனைச் சுட்டுக்கொலை செய்துள்ளது.அதே இடத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சிவகுமார் (வயது 27) என்ற இளைஞனே கொல்லப் பட்டவராவார்.இச்சம்பவம் குறித்து சாவகச்சேரி நீதிவான் சம்பவ இடத்தில் விசாரணைகளை நடத்தினார். பிரஸ்தாப நபர் தமது வீட்டில் நித்திரையில் இருந்த வேளை 10பேர் கொண்ட குழு அவரைப் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் தப்பி ஓடவே அவரைச் சுட்டு விட்டு அக்குழு சென்றது என்று விசா ரணையில் தெரிவிக்கப்பட்டது.இவர் ஏற்கனவே படையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார் என்றும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக மாணவன் சாவகச்சேரியில் சுட்டுக்கொலை
[02 - March - 2007]

* ஒரு வாரத்திற்குள் இடம்பெற்ற இரண்டாவது சம்பவம்
யாழ். பல்கலைக்கழகத்தை சேர்ந்த மேலும் ஒரு மாணவன் நேற்று முன்தினம் புதன்கிழமை நள்ளிரவு சாவகச்சேரியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த வார முற்பகுதியில் யாழ். பல்கலைக்கழக மாணவனொருவர் கொடிகாமம் வரணி பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் புதன்கிழமை நள்ளிரவு மற்றொரு மாணவன் சாவகச்சேரி ஆஸ்பத்திரி வளாகத்தினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவைச் சேர்ந்த இரண்டாம் வருட கலைப்பீட மாணவனான எஸ்.சிவரஞ்சன் (23 வயது) என்ற மாணவனே புதன்கிழமை நள்ளிரவு 11.40 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த மாணவனின் சிறிய தந்தை சாவகச்சேரி வைத்தியசாலை வளாகத்தினுள் அமைக்கப்பட்டுவரும் கட்டிடமொன்றில் காவற் கடமையில் இருந்ததாகவும், அவருடன் இந்த மாணவனும் அங்கு தங்கியிருந்துள்ளார்.
இதன் போதே நள்ளிரவு அங்கு சென்ற ஆயுதபாணிகள் இந்த மாணவன் மீது சரமாரியாக துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
உடனடியாக இவர் சாவகச்சேரி வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக நேற்று அதிகாலை ஒரு மணியளவில் யாழ். போதனா வைத்திய சாலைக்கு கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார்.

யாழ்.பல்கலை வணிகபீட மாணவன்மிருசுவில் வீட்டில் சுட்டுக்கொலை
யாழ். பல்கலைக்கழக வணிக பீட மாணவனான செல்வரட்ணம் சிவரஞ்சன் (வயது 23) நேற்று முன்தினம் நள்ளிரவு இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுடப்பட்டார். யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு மரணமானார்.மிருசுவில் பகுதியில் உள்ள இவரது சிறிய தந்தையாரின் வீட்டில் வைத்து சிவரஞ்சன் சுடப்பட்டார்.முல்லைத்தீவைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் மிருசுவிலில் உள்ள சிறிய தந்தையாரின் வீட்டில் தங்கியிருந்து பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணியளவில் இவரது வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் இவரைப் படுக்கையில் வைத்துச் சுட்டுவிட்டுத் தப்பிச்சென்றதாகவும் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவர் அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சில மணி நேரத்தில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


சாவகச்சேரியில் இளைஞரொருவர் சுட்டுக் கொலை
வீரகேசரி இணையத்தளப்பிரிவு 1.3.2007

சாவகச்சேரி அரச வைத்திய சாலையில் காவலராக பணிபுரிந்த இளைஞரொருவர் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக் காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையிக்கு எடுத்துச் செல்லும் இவர் மரணமாகியுள்ளார். சுட்டுக்கொல்லப்பட்டவர் பருத்தித்துறையை சேர்ந்த ராஜன் (23) என இனங்காணப்பட்டுள்ளார்.


வீட்டில் வைத்துகுடும்பஸ்தர் சுட்டுக்கொலை
மார்ச்.1

குடும்பஸ்தர் ஒருவர் காலை வேளையில் அவரது வீட்டில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார். இயற்கைக் கடனை முடித்து விட்டு மலகூடத்திலிருந்து வெளியேறி வந்தபோது அவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்யப்பட்டதாக அறியவந்தது. இச் சம்பவம் நேற்று காலை 6மணியளவில் சாவகச்சேரி நுணாவில் கிழக்கில் இடம்பெற்றது. இராஜேந்திரன் இளஞ்செல்வன் (வயது 30) என்பவரே பலியானவராவார். இவரது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

முகமாலையில் இருந்துநேற்று ஷெல் வீச்சு
முகமாலை முன்னரங்க நிலைகளிலி ருந்து படையினர் நேற்று அதிகாலை சுமார் 5 மணிமுதல் 7.30 மணிவரை வடமராட்சி கிழக்கை நோக்கி ஷெல் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளி யாகியுள்ளன.கடந்த சில நாள்களாக படையினர் வடமராட்சி கிழக்கு மற்றும் பச்சிலைப்பள்ளி, பளை ஆகிய பகுதிகளை நோக்கி ஷெல் தாக்குதல்களை மேற் கொண்டு வருகின்றனர்.இந்தத் தாக்குதல்கள் காரணமாக குறித்த பிர தேசங்களைச் சேர்ந்தவர்கள் பெரும் பீதியுடன் வாழும் நிலை தோன்றியுள்ளது.



தென்மராட்சியில்1,200 குடும்பங்களுக்குஇன்று நிவாரணம்
யாழ்ப்பாணம், பெப்.27

தென்மராட்சிப் பிரதேச செய லர் பிரிவில் உள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ்பட்ட வருமானமுடைய ஆயிரத்து 200 குடும்பங்களுக்கு இன்று நிவாரணம் வழங்கப்படும்.சேவாலங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் பிரதேச செயலகம் ஊடாக இந்த நிவாரண உதவி வழங்கப்படவுள்ளது.கிளாலி, மிருசுவில், வரணி, கொடிகாமம், கச்சாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சமுர்த்தி பயனாளிகளிடையே இருந்து தெரிவு செய்யப்பட்ட ஆயிரத்து 200 குடும்பங்கள் பயன்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.உப்பாறுத் திட்டத்தைச் செயற்படுத்த"நோராட்' 100 மில்லியன் ரூபா வழங்கும்25.2.2007கைதடி நாவற்குழி உப் பாறுத் திட்டத்தை செயற்படுத் துவதற்குத் தேவைப் பணத்தில் ஒரு பகுதியான நூறு மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு நோர் வேயின் அரசசார்பற்ற நிறுவன மான "நோராட்' இணங்கியுள் ளது. இந்தகவலை யாழ். அரச அதிபர் கே.கணேஷ் தெரிவித் தார்.கொழும்பில் நேற்றுமுன்தினம் தேசநிர்மாண தோட்ட உட் கட்ட மைப்பு அமைச்சு அலுவலகத் தில் கூட்டம் ஒன்று இடம்பெற் றது. இக்கூட்டத்தில் உப்பாறுத் திட்டத்திற்குத் தேவையான நிதி யில் ஒரு பகுதியான 100 மில் லியன் ரூபாவை வழங்குவதற் கு "நோராட்' இணக்கம் தெரிவித் தது. மழைகாலத்தில் கிடைக்கும் நன்னீர் கடல் நீருடன் கலக்காமல் அணை கட்டுவதற்கென உருவாக் கப் பட்ட இத்திட்டம் நிதி உதவி இன்றி நீண்ட காலமாகத் தடைப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக் கது.வரணியில் படைத் தலைமையகம் மீதுபுலிகள் தாக்குத­ல்! அதிகாரிகள் அருந்தப்பு!பாதுகாப்பு வட்டாரங்கள் அதிர்ச்சிகொழும்பு,பெப். 19வடக்கில் தென்மராட்சியில் கொடி காமம் வரணிப்பகுதியில் அமைந்திருக் கும் இலங்கை இராணுவத்தின் 53ஆவது படைப் பிரிவின் தலைமையகம் கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் கடும் ஷெல் வீச்சிக்கு இலக்காகியிருக்கின்றது.பல முனைகளில் இருந்து விடுதலைப் புலிகள் ஏவிய ஷெல்கள் தலைமையகப் பகுதியில் வீழ்ந்து சேதங்களை ஏற்படுத் தின என்றும், 53ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி உட்பட உயர்படை அதிகாரிகள் சிலர் இந்தத் தாக்குதலின் போது மயிரிழை யில் உயிர்பிழைத்தனர் எனவும் தற்போது தகவல் வெளியாகியுள் ளது.குடாநாட்டின் மீது வன்னியில் இருந்து புலிகள் நடத்தியிருக்கும் இத்தாக்குதல் பாதுகாப்புத் தரப்பினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இலங்கை இராணுவத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப காலாட் படைப்பிரிவின் (ட்ஞுஞிடச்ணடிண்ஞுஞீ ஐணஞூச்ணtணூதூ) தலை மையகத்தை திறந்துவைப்பதற்காக கொடி காமத்தில் 53ஆவது படையணித் தலைமை யகத்தில் படை உயர் அதிகாரிகள் குழுமி இருந்த சமயத்தில் இந்தத் தாக்குதலைப் புலிகள் நடத்தி இருப்பதுதான் பாதுகாப்புத் தரப்பினருக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதாக "சண்டே ரைம்ஸ்' ஆங்கில வார ஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் குறிப்பிட்டிருக்கிறார்.கொமாண்டோக்கள், நடமாடும் வான் படையணி என்பவற்றை உள்ளடக்கிய புதிய தொழில்நுட்ப படைப்பிரிவின் தலைமையகத் திறப்பு விழா வைபவத்தை 53ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சிறிநாத் ராஜபக்ஷ மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்த கையோடு வைபவம் நடைபெற்ற அரங்கிலும், படைத் தலைமையகத்தின் உள்ளே பல இடங்களிலும் சுமார் 17 ஷெல்கள் வரை அடுத்தடுத்து வீழ்ந்து வெடித்தன என்று கூறப்படுகிறது.நீண்டதூர வீச்சுக் கொண்ட 130 மி.மீ ஏறிகணை மோட்டார் மூலம் நான்கு வெவ்வேறு முனைகளில் இருந்து மொத்தம் சுமார் 34 சுற்று ஷெல்களை படைத்தலைமையகம் மீது புலிகள் ஏவியுள்ளனர். லான்ட்ஸ் கோப்ரல் தர படைவீரர் ஒருவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். புதிதாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப இலகு காலால்ப் படைப் பிரிவின் தளபதியான லெப்டினன்ட் கேணல் ரஹ்ப் நுகேரா படுகாயமடைந்தார். உடனடியாக அங்கிருந்து அவர் அவசர சிகிச்சைக்காக விமானம் மூலம் கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டார்.மயிலிழையில் தப்பினர்பட்டாலியன் ஒன்றின் தளபதியான லெப்டினன்ட் கேணல் ஸ்மித் அத்தபத்து, அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவரான மேஜர் ஹரீந்திரா பீரிஸ் மற்றும் இரு படை உத்தியோகத்தர்கள் ஆகியோரும் காயமடைந்தனர்.ஷெல் வீச்சின் நடுவே சிக்கிய 53ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சிறிநாத் ராஜபக்ஷ மற்றும் ஓர் அதிகாரி ஆகியோர் மயிரிழையில் உயிர்தப்பினர்.ரஷ்யத் தயாரிப்பான துருப்புக்காவி வாகனம் ஒன்றின் உதவியுடன் இவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.பல்வேறு காரணங்களால் பாதுகாப்புக் கட்டமைப்பினரிடையே இத்தாக்குதல் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.புதிய படைப்பிரிவின் தலைமை அலுவலகத் திறப்பு விழா வைபவம் அங்கு நடைபெறுவது பற்றிய தகவல் எவ்வாறு புலிகளுக்குத் தெரிய வந்தது என்பதே அதிர்ச்சிக்கு காரணமாகியுள்ளது.திட்டமிட்ட நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் தாமதித்தே வைபவம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தகவலும் சரியாகப் புலிகளுக்கு எட்டியிருக்கின்றது.படைத்தலைமையகம் அமைந்திருக்கும் பகுதிக்குள் ஊடுருவிய விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் அங்கிருந்தவாறு பூநகரிப் பகுதியில் அமைந்துள்ள புலிகளின் ஆட்லறித் தளங்களுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டிருக்கவேண்டும். அல்லது பாதுகாப்புக் கட்டமைப்புக்குள் ஏதாவது ஒரு பிரிவிலிருந்து பெருந்தொகைப் பணத்துக்கு புலனாய்வுத் தகவல்கள் புலிகளுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தக் கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.சாவகச்சேரியில்மாதா சிலையிலிருந்துஇரத்தம் கசிவு16.2.2007சாவகச்சேரி, கச்சாய் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வேளாங்கன்னி மாதா சொரூபத்தில் இருந்து இரத்தம் கசிவதைப் பார்ப்பதற்காகப் பெரும் எண்ணிக்கையான மக்கள் கூடினர். குறிப்பிட்ட வீட்டில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த மாதா சிலையின் கண்களில் இருந்து நேற்று நண்பகல் சிவப்பாக கண்ணீர் கசிய ஆரம்பித்ததாக அறியப்படுகிறது. அங்கு சென்று மிகச் சமீபமாகப் பார்த்தபோது கண்ணில் இருந்து சிவப்பு நிறமாக நீர் கசிவதைக் காண முடிந்தது. இந்தச் சொரூபத்தை வீட்டிற்கு அண்மையில் அமைந்துள்ள புனித லிகோரியார் தேவாலயத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகள் நேற்று மாலை யில் மேற்கொள்ளப்பட்டன.

தென்மராட்சியில் குடும்ப அட்டை மீளாய்வு
14.02.2007.
தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த பின்வரும் கிராம அலுவலர் பிரிவுகளுக்கான உண வுப் பங்கீட்டு அட்டைகள் மீளாய்வு நாளை நடைபெறும்.மந்துவில் கிழக்கு (ஜே/345), மந்துவில் மேற்கு (ஜே/346), இடைக் குறிச்சி (ஜே/341), வரணி இயற்றாலை (ஜே/343), மிருசுவில் வடக்கு (ஜே/334), குடமியன் (ஜே/ 337), நாவற்காடு (ஜே/338) ஆகிய பிரிவுகளுக்கான உணவுப் பங்கீட்டு அட்டைகள் மீளாய்வு செய் யப்படுமென பிரதேச செயலர் செ. ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.கொடிகாமத்தில்இளைஞன் சுட்டுக்கொலை
கொடிகாமம் பொலீஸ் நிலையத் திற்குப் பின்புறம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு இளைஞர் ஒருவர் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.கச்சாய் வீதி, கொடிகாமத்தைச் சேர்ந்த காசிப்பிள்ளை வசந்தகுமார் (வயது 18) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவராவார்.சந்தைக்கு சென்றுகொண்டிருந்த இளைஞனை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இனந்தெரியாதோர் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்ற தாக கூறப்படுகின்றது.இளைஞர்கள் இருவர்நேற்றுச் சரண்
கொலை அச்சுறுத்தல் காரணமாக இளைஞர்கள் இருவர் நேற்று யாழ். மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் சரணடைந்துள்ளனர்.கோப்பாய், மட்டுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரே சரணடைந்துள்ளனர்.மேற்படி இளைஞர்கள் இருவரை யும் யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளதாக யாழ். மனித உரிமை ஆணைக்குழு அதிகாரி தெரிவித்தார். சாவகச்சேரிச் சந்தையில் வைத்துஇருவர் நேற்றுச் சுட்டுக்கொலை13.02.2007சாவகச்சேரிச் சந்தையில் இயங் கும் இறைச்சிக் கடையில் வைத்து நேற்று முற்பகல் 10 மணிக்கு இரு வர் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.மட்டுவிலைச் சேர்ந்த இராசேந் திரம் தர்சன் (வயது 21), கச்சாய் வீதி, சாவகச்சேரியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான செல்லத்தம்பி செல்வரூபன் (வயது 27) ஆகியோரே சுட்டுக் கொல்லப் பட்டவர்கள் ஆவர்.படுகாயமடைந்த செல்வரூபன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்படும் வழியில் உயிரி ழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.இச்சம்பவத்தை அடுத்து சந்தைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. எனி னும் சந்தை நடவடிக்கைகள் வழமையாக இடம்பெற்றன.எனினும் இறைச்சிக்கடைக்கு முன்பாக உள்ள மீன் சந்தை நேற்று மூடப்பட்டிருந்தது.
Youth shot dead in Kodikamam
[TamilNet, Tuesday, 13 February 2007, 07:16 GMT]
An 18-year old boy was shot dead near Kodikamam Police station by two unidentified men, believed to be paramilitary operatiives of the Sri Lanka Armed forces, ridding in a motorbike, around 9 a.m., Tuesday.The victim was identified as Kasipillai Vasanthakumar. He was cycling along Kachchai road when he was shot at. He body was handed to to Chavakachcheri hospital.The incident occured about 50 metres from Kodikamam police station.Kodikamam is in the Thenmaradchi sector of the Jaffna peninsula.Two young men were shot dead in Chavakachcheri in the Thenmaradchi sector, yesterday.மட்டுவில் பகுதியில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
[11 - February - 2007]
தென்மராட்சியில் மட்டுவில் வடக்கு முசிறி பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவரை வழிமறித்த ஆயுதபாணிகள் பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.தலையில் ஐந்திற்கும் மேற்பட்ட குண்டுகள் பாய்ந்த நிலையில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.கொலையாளிகள் அவரது மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்ற போதும் சிறிது தூரத்தில் அதனைப் போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.அண்மையில் வெளிநாடொன்றிலிருந்து நாடு திரும்பிய, அந்தப் பகுதியைச் சேர்ந்த இராசரட்ணம் புஷ்பராசா (30 வயது) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார்.மந்துவில் பகுதியில் இளைஞர் சுட்டுக்கொலைவெள்ளி 09-02-2007 22:56 மணி தமிழீழம்தென்மராட்சி மந்துவில் வடக்கு பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தமிழ்இளைஞர் ஒருவர் வேலையில் இருந்து உந்துருளியில் வீடுதிரும்பும் வழியில் துப்பாக்கிதாரியால் வழிமறுத்து அவரை நிறுத்தி கண்மூடித்தனமாக அவர்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கொல்லப்பட்டவர் 30 அகவையுடைய ராஐரட்ணம் புஸ்பராயா என இனம் காணப்பட்டுள்ளார். இவரது உடலமானது சாவகச்சேரியில் பிரேதபரிசோதனைக்காக ஒப்படைக்கப்ட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் இருவர் படுகாயம்[வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2007, 02:44 ஈழம்]தென்மராட்சி, மிருசுவில்லில் புதன்கிழமை மாலை 4 மணியளவில் வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது, உந்துருளியில் வந்த சிறீலங்கா இராணுவத்தினர், திடீரென துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில், அவர் படுகாயமடைந்தார்.வரணி, குடவியனைச் சேர்ந்த கூர்மதி முகுந்தன் (வயது 24) என்ற இந்த இளைஞர், தோட்டத்தொழில் செய்துவரும் ஒரு ஏழை விவசாய மாணவராவர். படுகாயமடைந்த இவரை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று, அங்கிருந்து பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியாசலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.மட்டுவில் வாசியைக்காணவில்லையாம்பெப்.8மட்டுவில் கிழக்கில் உள்ள மோகனதாஸ் வீதியைச் சேர்ந்த செல்லையா சுரேந்திரன் (குட்டி மணி வயது 24) என்பவர் கடந்த 5ஆம் திகதி திங்கட்கிழமையில் இருந்து காணாமற் போய்விட்டதாக அவரது தாயாரால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறை யிடப்பட்டுள்ளது.அன்றையதினம் இரவு எட்டு மணியளவில் சாவகச்சேரி மடத்தடி இராணுவ முகாமிற்கு அண்மையில் அவர் காணாமற் போனதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
3 persons abducted in Jaffna
[TamilNet, Wednesday, 07 February 2007, 22:00 GMT]
Armed person believed to be members of the Sri Lankan armed forces abducted three youths from their homes in Jaffna Peninsula in the last three days, civil society sources from Jaffna said. Relatives of the youths have lodged complaints with the Human Rights Commission (HRC) Jaffna branch.Armed paramilitaries visited the house of Kiddinan Kirushnarasa, 34, a civilian in Paththini Amman Kovilady in Valvettiththurai, in Vadamaradchy, and forcibly took him away Wednesday morning, according to relatives complaint.Meanwhile, armed persons, who identified themselves as Sri Lanka Army (SLA) soldiers, took Sinnaththurai Vijayaruban, 23, of Kadduvan Road, Mallakam in Valikamam region, for questioning in the presence of his parents on Tuesday night. Vijayaruban's whereabouts are not known.On Monday night, men dressed in military fatigues abducted Selliah Siventhiran, 25, from his home in Madduvil East, Chavakachcheri in Thenmarachchi region.Although cases of extra judicial arrests, killings and disappearances are on the increase in Jaffna Peninsula and the Sri Lankan armed forces and their allied paramilitaries are blamed, so far no actions have been taken, civil sources and human rights activists said.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருப்போர்கள்
[07 - February - 2007]
அண்மையில் நாட்டின் பல பகுதிகளிலும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோர் விபரங்களை பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன் வெளியிட்டிருக்கிறார்.அதில் கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் பெண்களாவர். நான்கு பேர் பூஸாவிலும் ஒருவர் மகஸினிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வவுனியாவில் கைது செய்யப்பட்டு பூஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டோர் பெயர், வயது மற்றும் இடங்களின் விபரம் கீழ்வருமாறு;வேலு தமிழ்செல்வி பதுளை, மாயகுமார் (வயது 20) நாவலப்பிட்டி, ராமையா உதயக்குமார் (60) வவுனியா, உதயக்குமார் கேதீஸ்வரன் (24) வவுனியா, எஸ்.சுரேஷ்குமார் (32) கிளிநொச்சி ஆகியோர் மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் பாண்டியன் சிவம் சுந்தர் (25) பலாங்கொடை, ராமலிங்கம் சந்திரமோகன் (21) கண்டி, ஆகியோர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் நாகநாதன் (24) எல்பிட்டி, ரவீந்திரன் (24) எல்பிட்டி, சின்ன ரத்னம் சண்முகசுந்தரம் (30) கொட்டகலை, பிச்சை தியாகசுந்தரம் (30) கொட்டகலை, லோகநாதன் (25) எல்பிட்டி, சின்னத்தம்பி கிருஷ்ணபிள்ளை (55) உரும்பிராய், சின்னராஜா துஷ்யந்தன் (27) உரும்பிராய், ஜெயகாந்தன் (30) யாழ்ப்பாணம், சசிக்குமார் (19) ஹைபொரஸ்ட்-2, பார்த்தீபன் (18) ஹெபொரஸ்ட்-2, தங்கையா கோபிநாத் (21) கண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் பூஸாவில் குமாரவேலு கஜன் (23) யாழ்ப்பாணம், ஈ.ஜெயபிரகாஷ் (23) யாழ்ப்பாணம், தேவசகாயம் பிள்ளை இதயராணி (19) முல்லைத்தீவு, ராமச்சந்திரன் ஷ்ரீ காந்த் (18) நானுஓயா, ஆதிமூலம் தனக்குமார் (19) வாழைச்சேனை,சிவசுப்பிரமணியம் (24) சாவகச்சேரி, சிவராஜா பார்த்தீபன் (26) அச்சுவேலி, தங்கராஜா ஜெயரூபன் (23) சாவகச்சேரி, தங்கவேல் டினேஷ் (20) அச்சுவேலி,தங்கராஜா அரசரட்ணம் (52),நடராஜா தயாபரமூர்த்தி (37), நடராஜா பாலசுப்பிரமணியம் (27), லோகேந்திரன் யசோதரன் (17), கந்தையா ரவிக்குமார் (38), தியாகமூர்த்தி ஜயசீலன் (27), தியாகமூர்த்தி ஜெயந்திரன் (32) ஆகியோர் திருக்கோவிலைச் சேர்ந்தவர்கள்.அத்துடன், அருணாச்சலம் அமிர்தலிங்கம் (27) லுணுகலை, வள்ளிபுரம் விஜயகுமார் (37) கொடிகாமம், சந்தனம் த மிழ்ச்செல்வன் நாவலப்பிட்டி, அந்தோனிசாமி சிவராஜா (21) நாவலப்பிட்டி, சுப்பிரமணியம் சசிப்பிரியா (19) கொழும்பு, சரவணமுத்து யோகராஜா (42) கொழும்பு, சைமன் சிவா (28) லிந்துலை, ஆறுமுகன் கோபிராஜ் (23) பள்ளஞ்சேனை, குமாரசாமி கேசவராஜா (21) ஹொரணை, சுசந்தி தம்பிராஜா (29) தம்பிலுவில்,ராமலிங்கம், சந்திரரூபன் (20), தருமலிங்கம் சம்சுதன் (21), கந்தையா கணேஷ் (35), ஜீவநாதன் ஜீவபிரகாஷ் (20), ஜீவரதன் ஜீவராஜா (28) ஆகியோர் மட்டக்களப்பிலிருந்தும், கோபிநேசன் கைநேசன் (24) பூனாகலை, அன்னம்மா தலவாக்கலை, பொன்னையா சதீஷ்குமார் (31) நாவல, தியாகராஜா பாலேந்திரன் (21) கொட்டகலை, சுப்பையா யதுணன் (23) யாழ்ப்பாணம்.மற்றும் விநாயகமூர்த்தி (18) பலாங்கொடை, ராமகிருஷ்ணன் சுதாகரன் (19) ஹோல்புரூக் பழனியாண்டி யோகராஜா (27) வத்தளை, சிவநேசன் (22) சாவகச்சேரி, செல்வத்துரை ரவீந்திரராஜா (22) நாவவ, முருகன் அருளம்மா (52) சாவகச்சேரி உட்பட வவுனியாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் சதீஷ்குமார் (18), பாலசுந்தரம் சந்திரராஜா (19),பாலசுந்தரம் ரசாஹினி, (45) செல்லத்துரை பாலசுந்தரம் (62), தாம்போதரம்பிள்ளை சண்முகவடிவேல் (33) கனடா, சிவலிங்கம் பிரியதர்ஷினி (19) புசல்லாவை.ஜோர்ஜ் சந்திரசேகரன் (23) கொட்டாஞ்சேனை, சிவநந்தன் (22) கொழும்பு, கந்தசாமி சுதர்ஷன் (23) யாழ்ப்பாணம், தங்கராஜா ஜீவநாதன் (22), யாழ்ப்பாணம், வீரன் கிருஷ்ணகுமார் (25) ஹல்கர்ன் ஓயா, சுந்தரலிங்கம் சுதர்ஷன் (23) கொழும்பு, கோபால் சிவக்குமார் (20) கந்தப்பொல, மூக்கையா தியாகராஜன் (22) பசறை, வேணுகோபால் ஷ்ரீகுமார் (28) டிக்கோயா, ஆறுமுகம் கோவிந்தராஜன் (24) டிக்கோயா,செல்வரட்ணம் தியாஹினி (21) யாழ்ப்பாணம், யுலியஸ் சார்ல்ஸ் (23) குருநகர்.யோகராஜா (24) நீர்வேலி, சிவலிங்கம் கார்த்திகேசன் (18) புசல்லாவை, சண்முகநாதன் ரவிச்சந்திரன் (29) வவுனியா, இராசலிங்கம் ரவீந்திரன் (24) வவுனியா, வடிவேல் சச்சிதானந்தன் (18) மட்டக்களப்பு, குமாரபதி குமாரசாமி (31) மட்டக்களப்பு, இராமலிங்கம் சிவக்குமார் (24) வவுனியா, இராமலிங்கம் மகேந்திரன் (21) மஸ்கெலியா, ராஜு லலித் குமார் (24) லிந்துலை, கப்ரியல் அமோஸ் (20) தியகம, சந்திரபாபு (29) ஹட்டன், கீதன் தியாகராஜா (19) புப்புரஸ்ஸ, முருகேசு யோகேந்திரன் 18 புப்புரஸ்ஸ, மயில்வாகனம் ஜனேந்திரன் (25), பேரதெனிய, சண்முகம் பகீரதன் (24) சங்கானை, சிவக்குமார் யாதவன் (23) கொழும்பு, ஜீவராஜா கஜேந்திரன் (21), கொழும்பு, ராஜேந்திரன் கஜன், ராஜேந்திரன் துஷானந்தன், துரைச்சாமி சுரேஷ் குமார் (21) புஷ்பராஜா முகுந்தன் (22) ஆகியோர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.குடும்ப அட்டைகள்மீளாய்வு இறுதிச்சந்தர்ப்பம்பெப்.7தென்மராட்சி பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் சாவகச்சோரி, கைதடி பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட உணவுப் பங்கீட்டு அட்டை மீளாய்வுகளில் இதுவரை மீளாய்வு செய்யப்படாத பங்கீட்டு அட்டை வைத்திருப்போருக்கு இறுதிச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.மீளாய்வு செய்யப்படாத பங்கீட்டு அட்டைகளை நாளை மறுதினம் பிரதேச செயலகத்தில் மீளாய்வு செய்ய ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.இதுவரை மீளாய்வு செய்யப்படாத பங்கீட்டு அட்டை வைத்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள் தமது தேசிய அடை யாள அட்டை பங்கீட்டு, அட்டை ஆகியவற்றுடன் தத்தமது பிரிவு கிராம அலுவலரால் உறுதிப்படுத் தப்பட்ட கடிதத்தையும் கொண்டு வருமாறு பிர தேச செயலர் செ. ஸ்ரீ நிவாசன் கேட்டுள்ளார்.மருந்து விநியோகம்யாழ். சுகாதார திணைக்களத்தில் பதிவு செய்து பணம் செலுத்தியவர்கள் தங்களுக்குரிய மருந்துகளை நாளை வியாழக்கிழமை தொடக்கம் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை பணிமனையில் பெற் றுக்கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.குடும்பஸ்தருக்கு அச்சுறுத்தல்சாவகச்சேரியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நேற்று யாழ். மனிதஉரிமை ஆணைக்குவில் முறையிட்டுள்ளார்.சம்பந்தப்பட்டவரின் சகோதரரை படையினர் கைதுசெய்து தடுத்து வைத்திருந்தவேளை அவர் தப்பிச் சென்றுவிட்டார். அதனைத் தொடர்ந்து பிரஸ்தாப நபருக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக் கப்பட்டு வருவதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007 ஜனவரி

25

மட்டுவிலில் நேற்றுகிளைமோர்த் தாக்குதல்
மட்டுவில் வடக்கு முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் நேற்று நண்பகல் 12.30 மணியளவில் கிளைமோர் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள் ளது. சேத விவரங்கள் எவையும் தெரியவரவில்லை.

மூவரைக் காணவில்லை
மூன்று பேரைக் காணவில்லை என மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள் ளது.கைதடி மத்தியைச் சேர்ந்த ஏ.ஜெயரூபன் (வயது 23) என்பவரை கடந்த 20ஆம் திகதி தொடக்கம் காணவில்லை என்று அவரது பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடைக் குச் சென்ற இவர் வீடு திரும்பவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.யாழ்ப்பாணம், கில்னர் வீதியைச் சேர்ந்த கொ.நாகராஜ் (வயது 37) என்பவரைக் கடந்த 21ஆம் திகதி முதல் காணவில்லை என அவரது தாயார் முறைப்பாடு செய்துள்ளார். அத் துடன் யாழ்ப்பாணம், பெருமாள் கோயிலடியைச் சேர்ந்த முருகதாசன் பிறேம் சுந்தரை (வயது29) கடந்த 20ஆம் திகதி முதல் காண வில்லை என முறைப்பாடு செய் யப்பட்டுள்ளது. வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டுச் சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சாவகச்சேரியில் 6 இளைஞர்களைக் காணவில்லை
யாழ். தென்மராட்சி சாவகச்சேரி நகரை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முற்றாக சுற்றிவளைத்த இராணுவத்தினர் கடும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அப்பகுதியில் குண்டொன்று வெடித்ததால் இராணுவத்தரப்பைச் சேர்ந்த ஒருவரும் இரு பொதுமக்களும் கொல்லப்பட்டதையடுத்து, அப்பகுதி சுற்றிவளைக்கப்பட்டது. கிட்டத்தட்ட நூற்றுக்கும் அதிகமானவர்களைத் தடுத்து வைத்திருந்த இராணுவத்தினர், பின்னர் அவர்களை தொகுதி தொகுதியாக வெளியேற அனுமதித்தனர்.
இருப்பினும், 6 இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாகவும் சிறிலங்கா இராணுவத்தினரே திட்டமிட்டு இவர்களைக் கடத்தி, துணை இராணுக் குழுவினரிடம் ஒப்படைத்திருக்கலாம் அல்லது தம்முடன் கொண்டு சென்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர்.
இவ்வாறு காணாமல் போன 6 இளைஞர்களின் ஒருவரின் தந்தை, சிறிலங்கா மனித உரிமை காரியாலயத்தில் இது தொடர்பாக முறைப்பாடொன்றைக் கொடுத்தார்.
சாவகச்சேரி பகுதியில், இராணுவத்தினர் தற்போது புதிய சட்டமொன்றையும் கொண்டு வந்துள்ளனர். அப்பகுதிக்கு ஈருளியில் அல்லது உந்துருளியில் வருபவர்கள், சந்தைப் பகுதிக்கு 400 மீற்றர் தொலைவில் அவற்றை நிறுத்திவிட்டு கால்நடையாகவே வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


23
SLA soldier, 2 civilians killed, 20 injured in Jaffna bomb explosions

[TamilNet, Tuesday, 23 January 2007, 04:19 GMT]
Two civilians, including an elderly woman was killed and twenty civilians injured, seven seriously, in two incidents of bomb explosions in Chavakachcheri and Manipay, Tuesday morning, sources in Jaffna said. A Sri Lanka Army soldier succumbed to his wounds and three other troopers were wounded in Chavakachcheri explosion, SLA sources in Jaffna said. Tension prevails in Jaffna after the suspicious bomb attacks inflicting civilian casualties during the rush hours near Chavakachcheri New Market and in Manipay.
Thavarajah Poopathi, 50, from Katkuli Road, Chavakachcheri was killed and sixteen civilians wounded, seven of them seriously, when a bomb hidden in a motorbike exploded inside the Chavakachcheri town area along Thanankilappu, Kerativu road branching towards the east from the town at 8:00 a.m Tuesday morning.
The seriously injured were transferred to the Jaffna Teaching Hospital, while the other seven are receiving treatment at Chavakachcheri Government Hospital, hospital sources said.
Although SLA sources in Jaffna reported six Sri Lanka Army (SLA) troopers were injured in the Chavakachcheri explosion, the Military Command has not confirmed injuries to the troops.
Meanwhile, five civilians walking along Karainagar road in Manipay were injured when a bomb hidden by the road side exploded at 7:30 a.m. Tuesday, sources said. There was no SLA vehicle at the spot when the explosion took place.
The injured were immediately taken to Jaffna Teaching Hospital for treatment. One of the injured died later in hospital.
The explosion took place amidst increasing number of disappearances of youths and school students, many abducted during curfew hours.

சாவகச்சேரியில் குண்டுவெடிப்பு: 2 பொதுமக்கள் பலி- 10 பொதுமக்கள் படுகாயம்
யாழ். தென்மராட்சி சாவகச்சேரியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
சாவகச்சேரி சந்தையில் விற்பனை கொள்வனவுக்காக மக்கள் கூடிநின்ற இடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது.
சம்பவ இடத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தோர் யாழ். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


இளைஞனைக் காணவில்லை
சாவகச்சேரி வடக்கைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை கஜேந்திரன் (வயது21) என்ற இளைஞனைக் காணவில்லை.கடந்த மாதம் 19ஆம் திகதி சம்பவதினம் அவர் நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்றார் என்றும் அதன் பின்னர் அவரைக் காணவில்லை என்றும் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.


20

வரணி மேற்கு பிரதேசங்களில்மண் அகழ்வு மீண்டும் மும்முரம்
வரணி மேற்கு கரம்பான் மற்றும் தில்லையம்பலப் பிள்øளாயர் கோயிலடிப் பகுதிகளில் சட்டவிரோத மண் அகழ்வு மீண்டும் மும்முரமாக இடம்பெறுகிறது.இரவோடு இரவாக அகழப்படும் மண் இப்பகுதியில் உள்ள வீதியின் அருகில் வைத்து காலை வேளைகளில் பார ஊர்திகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றது. இதனால் காலை வேளைகளில் இப்பாதையில் வானகப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.கார்த்திகை, மார்கழி மாதங்களில் மாரி மழை காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மண் அகழ்வு மீண்டும் இப்போது முழுவீச்சில் தொடகப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


9

கச்சாய் வீதியில்ஞாயிறு மாலை மோதல்;ஊரடங்கு அமுல்
கொடிகாமம் கச்சாய் வீதியில் நேற்றுமுன்தினம் மாலை படையினருக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றது.இதனையடுத்து நேற்று அப்பகுதிகளில் சுற்றிவளைப்புத் தேடுதல்கள் நடத்தப்பட்டன. தென்மராட்சி கிழக்கில் புத்தூர் சந்திக்கு அப்பால் நேற்றுக் காலை முதல் ஊரடங்கு அமுல்செய்யப்பட்டது.புத்தூர் சந்திக்கு அப்பால் வாகனங்களின் போக்குவரத்திற்கு அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என்றும் தெரியவந்தது.


8

பாடசாலையை விட்டு விலகியவர்களுக்குஆங்கிலக் கல்வி போதிக்கப்படும்
தென்மராட்சி கல்வி வலய ஆசிரிய மத்திய நிலையத்தினால் பாடசா லையை விட்டு விலகிய மாணவர்களுக்கு ஆங்கிலக் கல்வி போதிக்கப்படவுள்ளது.""யாவர்க்கும் கல்வி'' என்ற திட்டதின் கீழ் பாடசாலையை விட்டு விலகியவர்களுக்கு ஆங்கில அறிவினை வளர்ப்பதற்காக இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஆரம்ப, இடைநிலை, உயர்நிலை ஆகிய தரங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இக் கல்வி புகட்டப்படவுள்ளது. இக் கல்வித்திட்டத்தில் இணையவுள்ள பாடசாலையை விட்டு விலகியவர்கள் தமது சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பப் படிவத்தினை வலயக் கல்வி அலுவலக கல்வி முகாமைத்துவப் பிரிவில் சமர்ப்பிக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் கேட்டுள்ளார்.


5
சாவகச்சேரியில் கைத்தொலைபேசிகள் இன்னமும் இயங்கவில்லை
சாவகச்சேரிப் பகுதியில் கையடக்கத் தொலைபேசிகள் இன்னமும் இயங்க வில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நகர்ப்பகுதியில் உள்ள தொலைபேசிக் கோபுரம் இயங்காததால் இப்பகுதியில் கையடக்கத் தொலைபேசிகள் இயங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதியில் கையடக்கத் தொலைபேசி வைத்திருப்போர் தினமும் சமிக்ஞை கிடைக்குமா என அவற்றினை கையில் வைத்திருந்து அடிக்கடி இயக்கிப் பார்த்த வண்ணமுள்ளதைக் காணமுடிகிறது. இதேவேளைதென்மராட்சி கிழக்கு, மேற்கு பகுதிகளில் கையடக்கத் தொலைபேசிகள் இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.