2.4.07

செய்திகளில் ஊரும் அயலும்/ஏப்ரல்2007


ஊடகவியலாளர்"தராகி' நினைவாக மாணவிக்கு உதவி

29.04.07
வீடு எரிந்ததனால் கற்றல் உபகரணங்கள், சீருடைகள் ஆகியவற்றை இழந்த மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலய மாணவிக்கு வட இலங்கைப் பத்திரிகையாளர் சங்கத்தினர் பத்திரிகையாளர் டி.சிவராமின் (தராகி) 2ஆம் ஆண்டு நினைவுதினத்தை ஒட்டி ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களையும் சீருடை கொள்வனவு செய்வதற்கு நிதி உதவியையும் வழங்கினர்.கொடிகாமம் படை முகாமை அண்டிய பகுதியில் உள்ள வீடு கடந்த வாரம் இரவு தீப்பிடித்து எரிந்ததில் வீட்டு உடைமைகள் அனைத்தும் முற்றாக எரிந்து சாம்பலாகியது. இதனால் பாதிக்கப்பட்ட தம்பிராசா நியுடிகா என்னும் தரம்9 மாணவிக்கே இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

2 students, family man seek protection with Jaffna HRC

[TamilNet, Wednesday, 25 April 2007, 02:32 GMT]

An eighteen year old student from Karaveddy, Vadamaradchy and another 16 year old student from Pokatti, Kodikamam in Thenmaradchy sought protection with Human Rights Commission (HRC) Jaffna office Tuesday along with a young family man from Chavakacheri in Thenmaradchy, all fearing death from Sri Lanka Army (SLA) troopers and SLA-backed paramilitaries, according to sources in Jaffna. With the Jaffna magistrate have taken leave of absence, HRC officials are facing technical problems in arranging protective custody in Jaffna prisons, civil society sources in Jaffna said.
The student from Karaveddy and the family man from Chavakacheri said that armed men in white van came to their houses during nights several times with the intention of abducting them. They had gone underground and urgently need protection with the HRC.
The 16 year old student from Pokkati, Kodikamam said that his father was summoned to the SLA civil administration office at Kodikamam and ordered to handover him to the SLA. The SLA personnel had confiscated the National Identity Card of his father, the student added.
The 16 year old student cannot be placed in Jaffna prison because of his minor status, and the acting Magistrate has limited authority in deciding on the minor's case.

மட்டுவிலில் தேடுதல்
யாழ்ப்பாணம், ஏப்.23
மட்டுவில் வடக்கு, சந்திரபுரம், மட்டுவில் தெற்கு உள்ளிட்ட பகுதிகள் சனிக்கிழமை காலை தொடக்கம் நண்பகல்வரை படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.படையினரால் நண்பகல் பொது மக்களுக்கு தேனீரும் பணிசும் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது

Abducted undergrad released after torture in Chavakachcheri
[TamilNet, Monday, 16 April 2007, 11:22 GMT] A 23-year-old final year arts faculty student of Jaffna University, abducted by alleged Military Intelligence operatives of the Sri Lanka Army, stationed at Post Office Road in Chavakachchaeri was released Monday after severe torture for three days. The tortured victim, Vijayarajah Vijayarooban, was abducted Friday at a private tuition centre located near the A9 road inside the SLA militarized High Security Zone in Chavakacheri town where he was working as a part time teacher.
Mr. Vijayarooban was brought in a white van, in tortured state, and pushed down out of the van Monday around 11:00 a.m. at the place from where he was abducted last Firday, his father said.
On Friday, military men in civil cloths came in a white van and abducted Vijayaroopan, who was standing outside the private education centre.
The director of the education centre had been abducted earlier and Vijayaroopan, was performing the duties of the abducted director, according to the family of the missing director. They have lodged a complaint to the Sri Lanka Human Rights Commission in Jaffna.
Vijayarooban, admitted to Chavakachcheri hospital is a native of Kachchai in Kodikaamam.
A Jaffna University final year student was recently shot and killed in Chavakacheri hospital surroundings.
சாவகச்சேரியில் கடத்தப்பட்ட மாணவர் சித்திரவதைக்குப் பின்னர் விடுதலை
[திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2007, 20:14 ஈழம் /புதினம்]
யாழ். சாவகச்சேர்யில் சிறிலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்ட மாணவர் விஜயரூபன் சித்திரவதைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு கலைத்துறை மாணவரான மாணவரான விஜயரூபன் (வயது 23) கடந்த வெள்ளிக்கிழமை சாவகச்சேரி ஏ-9 வீதியில் தனியார் கல்வி நிலையத்துக்கு வெளியே நின்றிருந்த போது கடத்தப்பட்டார்.
தனியார் கல்வி நிலையத்தில் விஜயரூபன் பகுதிநேர ஆசிரியராகவும் பணியாற்றினார். முன்னர் அந்த நிறுவனத்தின் இயக்குநர் கடத்தப்பட்டபோது விஜயரூபன் பொறுப்பெடுத்து நிறுவனத்தை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளை வானில் வந்த சாவகச்சேரி தபால் அலுவலகலம் வீதியில் முகாமிட்டிருந்த சிறிலங்கா இராணுவ புலனாய்வுக் குழுவினரால் வெள்ளிக்கிழமை விஜயரூபன் கடத்தப்பட்டார். கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் இன்று திங்கட்கிழமை முற்பகல் 11 மணியளவில் விடுவிக்கப்பட்டார். சாவகச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ். பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இறுதியாண்டு மாணவர் அண்மையில் சாவகச்சேரி பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் ஒருநாள் பணிப்புறக்கணிப்புவைத்திய அதிகாரி தாக்கப்பட்டதைக் கண்டித்து
யாழ்ப்பாணம்,ஏப்.11
சாவகச்சேரி மாவட்ட மருத்துவமனை உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.திங்கட்கிழமை காலை 8மணி தொடக்கம் பி.ப. 4 மணிவரை இந்தப் பணிப் புறக்கணிப்பு இடம்பெற்றது.கடந்த சனிக்கிழமை கடமையிலிருந்த வைத்திய அதிகாரி வெளி ஆள்களினால் தாக்கப்பட்டதைக் கண்டித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.வைத்திய அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மீசாலை வடக்கில்
சாவகச்சேரி ஏப்.5
மீசாலை வடக்குப் பகுதியில் நேற்றுமுன்தினம் துப்பாக்கிச் சூட்டுக்குக் காயங்களுடன் 17 வயது மதிக்கத்தக்க இளைஞனின் சடலம் கொடிகாமம் பொலீஸாரால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.இரண்டு கைகளிலும் கௌரிகாப்பு நூல் கட்டியுள்ள இந்த இளைஞரின் சடலத்தை அடையாளம் காட்டி உதவுமாறு சாவகச்சேரி நீதிவான் பொதுமக்களைக் கேட்டுள்ளார்.

கெருடாவிலில் இளைஞன் சடலம் நேற்று மீட்பு
யாழ்ப்பாணம், ஏப்.2

சாவகச்சேரி, கெருடாவில் மண்டுவில் பகுதியில் இளைஞன் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப் பட்டுள்ளது. மீசாலை வடக்கு, கொடிகா மத்தைச் சேர்ந்த மகாலிங்கம் தவ ராசா(வயது 26) என்பவரின் சட லம் என இனங்காணப்பட்டுள் ளது. சில தினங்களுக்கு முன் கடத் திச் செல்லப்பட்ட இவர் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட் டுள்ளார். யாழ். ஆஸ்பத்திரிக்கு சடலம் அனுப்பப்பட்டுள்ளது.

கைதடியில் நேற்று மாலை
ஒருவர் சுட்டுக்கொலை

கைதடி,ஏப்.2
கைதடி ஊரியான் தரவைப் பகுதியில் நேற்று மாலை 5 மணி யளவில் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல் லப்பட்டார். கைதடி கிழக்கைச் சேர்ந்த கணபதி சிவராசா(வயது 34) என்பவரே சுட்டுக்கொல்லப் பட்டவராவார்.


தென்மராட்சியில் சடலம் மீட்பு
[02 - April - 2007]
ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் தென்மராட்ச்சிஉள்ளூர் வாசிகளால் மந்துவில் கெருடாவில் பகுதியில் பற்றைக்காடு ஒன்றினுள் சித்திரவதை செய்த காயங்களுடனும் சூட்டுக் காயங்களுடனும் நிர்வாணமான நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் வாசிகள் கிராமசேவகருக்கு அறிவித்து அவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்த பின் அந்தச் சடலம் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச் சடலம் 26 வயதுடைய வடமராட்சி துன்னாலை வேம்படி பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் தேவராஜாவினுடையது என இனம்காணப்பட்டுள்ளது.
இவ்விடத்துக்கு சாவகச்சேரி நீதிபதி ஏ.பிரேம்சங்கர் விஜயம்செய்து விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.