1.5.07

செய்திகளில் ஊரும் அயலும் / மே2007

மட்டுவில் பகுதியில் படைமுகாம் மீது தாக்குதல்; 2 இராணுவத்தினர் பலி

31 - May - 2007 தினக்குரல்

தென்மராட்சி மட்டுவில் பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற மோதலில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மட்டுவில் மடத்தடிச் சந்தியிலுள்ள இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து இடம்பெற்ற மோதலிலேயே இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் பத்து நிமிட நேர மோதலையடுத்து, தாக்குதலை நடத்தியோர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த மோதலையடுத்து அப்பகுதியில் படையினர் நடத்திய தேடுதலில் 14 வயதுச் சிறுவனொருவர் கைது செய்யப்பட்டுள்ளான்.

சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடைபெற்றபோது பொதுமக்கள், படையினரின் தாக்குதலுக்கிலக்கானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இளைஞர்களைக் கைது செய்வதற்காக இராணுவத்தினரே கண்ணிவெடியைப் பொருத்தினர்

(புதன் 30-05-2007 பதிவு)

யாழ் தென்மராட்சி வரணி, மந்துவில் பகுதிகளை கடந்த திங்கட்கிழமை சுற்றி வளைத்த சிறீலங்காப் படையினர், கிளைமோர் கண்ணிவெடி பொருத்தியதாகக் கூறி இரண்டு இளைஞர்களைக் கைது செய்திருந்தனர்.

சாவகச்சேரி நீதிமன்றத்தில் இந்த இரண்டு இளைஞர்களும் நேற்று முன்னிறுத்தப்பட்டபோது, இளைஞர்களைக் கைது செய்வதற்காக, படையினரே கிளைமோரைப் பொருத்தியதாக நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் கூறப்பட்டுள்ளது.

வறணி இயற்றாளையைச் சேர்ந்த 18 வயதுடைய குமாரு தயாநந்தன், மந்துவிலைச் சேர்ந்த 19 வயதுடைய ஆறுமுகம் கமலதீபன் ஆகியோரே கைது செய்யப்பட்டிருந்தனர்.

2 SLA troopers killed in Thenmaraadchi

[TamilNet, Tuesday, 29 May 2007, 17:11 GMT]
Unidentified armed men opened fire on troopers of the Sri Lanka Army (SLA) camp at Madaththadi junction, Madduvil in Then:maraadchi Tuesday around 9:30 a.m, killing two troopers, Madduvil residents said. An exchange of fire between the armed men and the SLA lasted nearly ten minutes

SLA troopers took away a 14 year old school boy arrested during the cordon off and search launched after the exchange of fire.

SLA troopers beat people during the search operation.

No official information has been disclosed on the casualties by SLA.

தென்மராட்சியில் இராணுவம்மீது தாக்குதல்

(29.5.2007 அ.ஒ.கூ)
நேற்றையதினம் சாவகச்சேரிக்கும் கொடிகாமத்திற்கும் மத்தியில் கண்டிவீதியின் ரோந்து சென்று கொண்டிருந்த இராணுவ தொடரணியின் மீது தாகுதல் நடாத்தப்பட்டது. இதனையடுத்து கண்டிவீதி 4 மணித்தியால நேரத்துக்கு மேலாக மூடப்பட்டு தேடுதல்கள் நடைபெற்றன.

2 SLA soldiers reported killed, major search in Chaavakachcheari

[TamilNet, Saturday, 26 May 2007, 13:50 GMT]

Two Sri Lanka Army (SLA) soldiers were reported killed in Meesalai Thursday reports from Thenmaraadchy said. The killings, not officially confirmed by the SLA, took place a day before an SLA trooper was killed and another injured in attacks by unidentified armed men in Thenmaraadchy.
During Thursday's killing, the SLA solidiers in pursuit of the armed men, also came under attack.
Following these incidents, SLA troopers launched a large cordon and search operation Saturday covering Northern, Western areas of A9 in Chaavakachcheari, Manthuvil, Dutch Road and Meesalai areas, residents in Chaavakachcheari said.
The areas were deserted due the search devoid of pedestrian and vehicular traffic the whole of Saturday, sources said.
The searches will likely complete Sunday and situation is expected become normal then.


தென்மராட்சியில் முழுநாள் ஊரடங்கு படையினர் குவிக்கப்பட்டு பாரிய தேடுதல்
[27 - May - 2007] [தினக்குரல்]
தென்மாராட்சியில் நேற்று சனிக்கிழமை முழுநாள் ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்பட்டு பாரிய தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நேற்றுக்காலை நீக்கப்படவில்லை.
குடாநாட்டின் ஏனைய பகுதிகளில் நேற்றுக்காலை 6 மணியளவில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட போதும் தென்மாராட்சி முழுவதும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவில்லை.
நேற்றுக் காலை தென்மராட்சிக்குச் சென்றவர்கள் நாவற்குழிக்கு அப்பால் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்பட்டு தென்மராட்சியின் பலபகுதிகளிலும் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டு பலத்த தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
கொடிகாமம், உசன், மிருசுவில், மீசாலை, சாவககச்சேரி பகுதியில் இந்தத் தேடுதல்கள் இடம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
மக்கள் எவரும் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. இந்தச் சுற்றி வளைப்பு மற்றும் தேடுதலில் கைது செய்யப்பட்டோர் குறித்து உடனடியாக எதுவும் தெரியவரவில்லை.
தென்மராட்சிப் பகுதியிலிருந்து பாரிய படை நடவடிக்கையொன்றை மேற்கொள்ளப் படையினர் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையிலேயே இங்கு முழு நாள் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
இன்று காலையிலேயே இந்த ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.


தென்மராட்சியில் பகல்நேர ஊரடங்கால் பொதுமக்கள் மத்தியில் பீதி

(26.5.2007 பதிவு)
சிறீலங்கா இராணுவத்தின் பலாலி கட்டளை மையம் வெள்ளிக்கிழமை பலாலியில் இருந்து ஒலிபரப்பாகும் இராணுவ வானொலி ஊடாக வழமையாக இரவு 8 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை அமுலில் இருக்கும் ஊரடங்கு மறுநாள் வரை நீடிக்கும் என அறிவித்துள்ளார்கள்.
இதனையடுத்து தென்மராட்சி பகுதிமக்கள் பெரும்பீதியடைந்துள்ளதாக தெரியவருகிறது. எனினும் பலாலிகட்டளை மையம் எவ்வளவு நேரத்திற்கு ஊரடங்கு அமுலில் இருக்கும் என்பது தொடர்பாக அறிவிக்கவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குடாநாட்டின் ஏனையபகுதிகளில் பகல்நேர ஊரடங்கு தொடர்பாக எதுவித அறிவித்தலும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தென்மராட்சி முன்னரங்க நிலைகளில் ஆட்டிலறி எறிகணைப்பரிமாற்றம்

(20.05.2007 பதிவு)

தென்மராட்சி முன்னரங்க நிலைகளில் வெள்ளி, சனிக்கிழமைகளில் ஆட்டிலெறி, மோட்டார் எறிகணைத்தாக்குதல்களை சிறீலங்கா இராணுவத்தினரும் விடுதலைப்புலிகளும் மேற்கொண்டு வருவதாக குடிசார்தகவல்கள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமை மதியம் 12 மணியளவில் கடுமையான எறிகணை வீச்சுப்பரிமாற்றம் நிகழ்ந்ததாகவும் அறியமுடிகிறது.

தென்மராச்சி தெற்கு, கோவிலாக்கண்டி பகுதியின் மேற்கு பகுதி, மறவன்புலவு மற்றும் தனங்கிளப்பு ஆகிய பகுதிகளில் கடுமையான எறிகணைவீச்சுப்பரிமாற்றம் கடந்த மூன்று நாட்களாக நிகழ்ந்ததாக தெரியவருகிறது.

இதேவேளை சிறீலங்கா இராணுவத்தினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான பூநகரிப்பகுதியை நோக்கி மேற்கொண்டதாக தெரியவருகிறது.

வரணிப் படைமுகாமைச் சேர்ந்த அதிகாரியும் மெய்ப்பாதுகாவலரும் காணாமல் போயுள்ளனர்.

(19.05.2007 பதிவு)

தென்மாராட்சி வரணிப் படைமுகாமைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் அவருக்கான மெய்ப் பாதுகாவலரும் நேற்றுமுதல் காணாமல் போயுள்ளனர். வேம்பிராய்ப் படைமுகாமிற்குச் உந்துறுளியில் சென்ற இவர்கள் இதுவரை படைமுகாமிற்குத் திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இவர்கள் இனம் தெரியாத ஆயுததாரிகள் அல்லது இளைஞர் குழுவால் கடத்தப்பட்டிருக்கலாம் என படைத்தரப்பினர் சந்தேகிக்கின்றனர்.

தென்மராட்சிப் பகுதியில் தொடர்ந்து ஷெல் வீச்சு
[18 - May - 2007 தினக்குரல்]
தென்மராட்சி தெற்கு போர் முனையில் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் கடந்த சில தினங்களாக பரஸ்பரம் கடும் ஷெல் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

முகமாலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது படையினர் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக கடும் ஷெல் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

புலிகளும் பதிலுக்கு தென்மராட்சியின் தெற்கிலுள்ள இராணுவ முகாம்கள்

மற்றும் முன்னரங்க காவல் நிலைகளை நோக்கி கடும் ஷெல் தாக்குதலை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பூநகரி நோக்கியும் படையினர் கடும் ஷெல் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக விடுதலைப் புலிகள் தென்மராட்சியில் படையினரின் முகாம்களை நோக்கியும் படைநிலைகள் மீதும் கடும் ஷெல் மற்றும் மோட்டார் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை முகமாலையில் இராணுவ முன்னரங்க காவல் நிலைகள் மீதும் எழுதுமட்டுவாள், மருதங்குளம், ஒட்டுவெளி படைமுகாம்கள் மீதும் புலிகள் இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

படையினரின் ஆட்லறி நிலைகள், மோட்டார் நிலைகள் மீதும் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் இந்தத் தாக்குதல்களால் முகாம்களுக்கும் படைநிலைகளுக்கும் பலத்த சேதங்களும் படையினருக்கு பலத்த உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக புலிகள் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.

இவ்விரு தரப்புக்குமிடையில் நேற்றும் பரஸ்பரம் கடும் ஷெல் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

கடந்த சில தினங்களாக தென்மராட்சிப் பகுதியில் பெருமளவு போர்த்தளபாடங்களும் படையினரும் குவிக்கப்பட்டு வந்த நிலையிலேயே பரஸ்பரம் கடும் ஷெல் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.


தென்மராட்சிப் பிரதேசத்தில் நடமாடும் மிருக வைத்திய சேவை
யாழ்ப்பாணம், மே 13
சாவகச்சேரி கால்நடை வைத்தியர் பணிமனை அதிகாரிகள் தென்மராட் சிப் பிரதேசத்தில் நடமாடும் மிருக வைத் திய சேவையை நடத்தவுள்ளனர்.
நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை இடைக்குறிச்சி கிராம அலுவலர் பிரி விலும் இம்மாதம் 17ஆம் திகதி வியா ழக்கிழமை கைதடி நாவற்குளி, நாவற் குளி ஆகிய கிராம அலுவலர் பிரிவு களிலும் மிருக வைத்திய சேவைகள் நடைபெறவுள்ளன.
நடமாடும் சேவையில் கால்நடை களுக்கு தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் சிகிச் சைகளும் ஆலோசனைகளும் வழங் கப்படுமென கால்நடை வைத்தியர் டாக் டர் ஜீ. இரகுநாதன் தெரிவித்தார


தேசியக் கல்வியியல் கல்லூரிகளின்
தகவல் தொழில்நுட்பப் பாடநெறிக்கு
நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டோர்

யாழ்ப்பாணம், மே 9
தேசிய கல்வியியற் கல்லூரிகளில் தகவல் தொழில்நுட்பப் பாடநெறிக்கு விண்ணப்பித் தவர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெற வுள்ளது.
நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட வர்கள் அழைப்புக் கடிதங்களையும் ஏனைய விவரங்களையும் தேசிய கல்வியியற் கல் லூரியில் உடன் பெற்றுக் கொள்ளுமாறு பீடா திபதி எஸ்.கே.யோகநாதன் தெரிவித்தார்.
இந்த நேர்முகப் பரீட்சைக்கு 72பேர் அழைக் கப்பட்டுள்ளனர்.
அழைக்கப்பட்டோர் விவரம் வருமாறு:
சுபாசினி. ஐ (வல்வெட்டித்துறை), மேனகா. கே (வல்வெட்டி), அமிர்தவர்ஷினி.ஏ (அரி யாலை), காயத்திரி.எம்(ஏழலை மேற்கு), சிவதர்சினி.கே (தம்பாலை), நிசாந்தினி.ஏ (துன்னாலை மேற்கு), என்.காண்டீபன் (கொக்கு வில்கிழக்கு), துளசி.ரி (மாதகல்), கலை மகள்.கே (நல்லூர்), அமிர்தினி.எஸ் (அரியாலை மேற்கு).
பி.விக்னராஜா (இளவாலை வடக்கு)
, சுமனா. எஸ் (கைதடி தெற்கு), தர்சினி.பி (யாழ்ப் பாணம்), சுபவீனா.கே (இணுவில் கிழக்கு), ஆர்.துஷ்யந்தன் (புலோலி வடக்கு), சயந்தா.ஜி (மட்டுவில் கிழக்கு), அகல்யா.கே (கரண வாய்கிழக்கு), சுதந்திரா.ஈ (பாசையூர்), லோகினி.பி (ஆனைக்கோட்டை), சோபிகா.பி (சுண்டுக் குளி).
சுவர்ணரேகா.பி (றாகம), சுதாதேவி.கே (அல்வாய் கிழக்கு), அபிராமி.பி (பொலி கண்டி), கிர்லியா.வி (குடத்தனை), லோகிதா.பி (குடத் தனை), துளசிகா.வை (யாழ்ப்பாணம்), துளசி காஜினி.எஸ் (இணுவில் மேற்கு),
ஆர்.சசீலன் (சங்கத்தானை), கே.பிரசாந்தன் (நெல்லியடி), டி.தவலிங்கம் (சுன்னாகம்).
எஸ்.தில்லைமகாராஜன் (உடுவில்), எஸ். சதாமா (தாவடி), கணேஸ்வரி.எஸ் (கொக்கு வில்), ரேக்கா.வி (கல்வியங்காடு), பிரவீணா .ஆர் (உடுவில்), சிவானந்தி.ரி (தொண்டைமா னாறு),
ஜெயமாலினி.ரி (மீசாலை தெற்கு), சிவதீபா.எஸ் (விடத்தற்பளை), அனுசியா. பி (சுன்னாகம்), பி.பாலசூரியன் (கந்தர் மடம்).
மேகலா.ரி (மாதகல்),தேவகி.ரி (புலோலி தெற்கு), ஜி.கோகிலரமணன் (வட்டுக் கோட்டை), எஸ்.சிவகுமார் (கொழும்புத்துறை), பி.சுயந் தன் (இளவாலை தெற்கு), நிரஜா.கே (கர வெட்டிமேற்கு), தாரணி.கே (கொக்குவில் கிழக்கு), அனுஷா.ஆர் (சுழிபுரம்)
, வனஜா.பி (மீசாலை தெற்கு), கே.லோகநாதன் (கந்தர்மடம்).
வானதி.எஸ் (ஏழாலை மேற்கு), சுதர்சினி. ஜே ( நவாலி தெற்கு)
, நிரு ஜினி.ரி (நாவற் குழி), தயாநிதி.என் (நீராவியடி), தயாளினி.பி (திரு நெல்வேலி), தாட்சாயினி.பி (கந்தர்மடம்), சருண்யா.ரி (அளவெட்டி), ஜமிலா.ஆர் (ஏழாலை மேற்கு), அனித்தா.ஏ (ஆனைக்கோட்டை), ரோகிணி.பி (புலோலி தெற்கு).
கஜந்தா.கே (யாழ்ப்பாணம்)
, குமுதா.ஏ (சாவகச்சேரி), பேரம்பலம்.கே (அரியாலை), எஸ்.சந்திரகாந் (அரியாலை), சிவப்பிரியா. எஸ் (கரவெட்டி மத்தி), கே.குலராஜ் (கண்டி), எஸ். ஞானக்குமரன் (கொக்குவில் கிழக்கு), என். பிரதீபன் (பொலிகண்டி), சியாமளா.ரி (தம்ப சிட்டி).
சங்கீதா.கே (அல்வாய் வடக்கு), தர் சிகா.வி (யாழ்ப்பாணம்).


தென்மராட்சியில் வீசிய சூறாவளியினால் மொத்தம் 114 வீடுகள் பலத்த சேதம்
யாழ்ப்பாணம், மே 9
தென்மராட்சிப் பிரதேசத்தில் கடந்த வாரத்தில் வீசிய மினி சூறாவளியினால் 114 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. இருபதுக்கும் மேற்பட்ட ஏக்கர் காணி களில் வாழை மரங்கள் அழிந்தன. ஆறு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
பிரதேசத்தில் உள்ள 15 கிராம அலு வலர் பிரிவுகளில் இப்பாதிப்புகள் ஏற் பட்டுள்ளதாக பிரதேச செயலகப் புள்ளி விவரங்கள் தெரிவித்திருக்கின்றன.
கைதடி தெற்கு, கைதடி தென்கிழக்கு, நாவற்குழி மேற்கு, நாவற்குழி கிழக்கு, கோயிலாக்கண்டி, கைதடி நுணாவில், கோயிற்குடியிருப்பு, மட்டுவில் வடக்கு, மீசாலை வடக்கு, மீசாலை மேற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் வீடுகள் சேதமடைந்தன.
கைதடி வடக்கு, கைதடி மத்தி, கைதடி மேற்கு,தென்மட்டுவில், மட்டுவில் நுணா வில், சரசாலை வடக்கு, மீசாலை வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் வாழைத் தோட்டங்கள் அதிக அளவில் அழிந்துள் ளன.
மீசாலை மேற்குப் பிரிவில் நான்கு பேரும் தென் மட்டுவில் பிரிவில் இருவரும் காயமடைந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Youth shot dead in Varani
[TamilNet, Tuesday, 08 May 2007, 15:15 GMT]
Three unidentified men armed with T56 rifles forced their way e into the house of a youth along Kodikaamam-Point Pedro road at Yaththaalai, Varani in Thenma'raadchi, and shot the youth dead at point blank range, Tuesday around

10:00 a.m.

The victim was identified as Thavarasa Sujitharan, 19.

Sujitharan tried to escape running inside a room and locking himself but the killers forced open the door and sprayed him with bullets, sources said.

Kodikaamam police recovered the body and handed it over to Jaffna Teaching hospital for postmortem examinations.

The victim's house is located in the Sri Lanka Army (SLA) High Security Zone (HSZ) where its 52nd Brigade Base is also located.

Gunmen shooting some one in day light inside a house along a busy main road within the HSZ of the SLA reflects the predicament of the local residents, civil society sources in Jaffna said.

Sujitharan is the seventh person to be shot dead in Yaththaalai area in Thenma'raadchchi.

விமலராசாவைக் காணவில்லை
யாழ்ப்பாணம், மே 8 உதயன்

கரவெட்டியிலிருந்து சரசாலைக்கு வந்த நபர் பத்து தினங்களுக்கு மேலாக வீடுதிரும்பவில்லை.
சரசாலை வடக்குக்கு கடந்த 25ஆம் திகதி சைக்கிளில் வந்த கரவெட்டி மத்தியைச் சேர்ந்த செல்வராசா விமல்ராஜ் என்பவரே காணாமற் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நபர் காணாமற் போனமை தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரி விக்கப்பட்டது.

யாழில் வெள்ளை வான் குழுவினரால் இரு பொதுமக்கள் கடத்தல் [7 மே 2007 புதினம்]

யாழ்ப்பாணத்தில் இரு பொதுமக்களை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர்.

யாழ். தென்மராட்சி சரசாலையைச் சேர்ந்த பரமசாமி தயாபரன் (வயது 37) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் இருந்த போது வெள்ளை வானில் வந்த குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர்.

அதற்கு முன்னாள் வியாழக்கிழமை தயாபரனின் தேசிய அடையாள அட்டையை சிறிலங்கா இராணுவத்தினர் பலவந்தமாக பறித்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா மின்சார சபை பணியாளரான பொன்னம்பலம் ஜெயசீலன் (வயது 36) என்பவர் கடந்த சனிக்கிழமை இரவு வெள்ளை வான் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டார். ஐந்து பிள்ளைகளின் தந்தையான ஜெயசீலனின் வீடு அளவெட்டி வடக்கில் கலைநகர் பகுதியில் உள்ளது.

இக்கடத்தல்கள் தொடர்பாக யாழ். மனித உரிமைகள் ஆணையத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


தென்மராட்சியில் வியாழன் இரவும்மினி சூறாவளி; பெரும் சேதங்கள்
5.5.2007உதயன்
தென்மராட்சிப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் வியாழன் இரவும் மினி சூறாவளி வீசி பலத்த சேதங்களை ஏற்படுத்தியது. பனை மரம் ஒன்று வீட்டின் மீது வீழ்ந்ததில் குடும்பப் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். பெரும்மளவு பயன்தரு மரங்கள் முறிந்து நாசமாகின.பிரதேசத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 8.15 மணி தொடக்கம் 9.15 மணி வரை இடைவிடாது தொடர்ச்சியாக இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்த வேளையில் திடீரென மினி சூறாவளி வீசியது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்தன.மட்டுவில் தெற்குப் பகுதியில் பனை மரம் முறிந்து வீட்டின் மீது வீழ்ந்ததில் அதே இடத்தைச் சேர்ந்த பத்மநாதன் கமலேஸ்வரி (வயது 48) என்பவருக்கு விலா எலும்பு முறிந்தது.அப்பகுதியில் பனை மரங்கள் முறிந்து மின்கம்பிகள் அறுந்ததால் காயமடைந்தவர் நேற்றுக் காலையே யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.பிரதேசத்தின் பல பகுதிகளில் தென்னை, பனை மரங்களும் முருங்கை, பப்பாசி, வாழை போன்ற மரங்களும் முறிந்து நாசமாகின. சில இடங்களின் குறுக்கே மரங்கள் வீழ்ந்து போக்குவரத்துகள் தடைப்பட்டன.இரவு இடம்பெற்ற இடி, மின்னல்களின் தாக்கம் பிரதேச மக்களைக் கதிகலங்கச் செய்தது. இடி முழக்கத்தினால் பல இடங்களில் நில அதிர்வு போன்று உணரப்பட்டதாகப் பலரும் தெரிவித்தனர்.தமது வாழ்நாளில் இதுபோன்ற தொடர்ச்சியான இடி மின்னலைக் காணவில்லை என வயோதிபர்கள் பலர் தெரிவித்தனர்.நேற்றுமுன்தினம் பகல் பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளி பலத்த சேதங்களை ஏற்படுத்தியமை தெரிந்ததே.

பஸ்சேவை நிறுத்தப்பட்டதால்பயணிகள் பெரும் பாதிப்பு
கைதடி,மே.4(உதயன்)
இலங்கை போக்குவரத்துச் சபையி னால் யாழ்.நகரில் இருந்து கைதடி வடக் கிற்கென சேவையில் ஈடுபட்டுவந்த பஸ்சேவை கடந்த சிலமாதங்களுக்கு முன் திடீரென முன்னறிவித்தல் இன்றி இடைநிறுத்தப்பட்டதால் மாணவர்களும், பொது மக்களும் பெரும் அவலங் களைச்சந்தித்து வருவதாக பயணி கள்தரப்பில் விசனம் தெரிவிக்கப்படு கிறது.பலவருடங்களாக இடம்பெற்று வந்த இச்சேவை திடீரென நிறுத்தப்பட்டதால் பாடசாலைமாணவர்கள், அரச ஊழியர் கள் உட்பட பலர் நான்கு கிலோ மீற்றர் தூரம் நடந்துசென்று கைதடிச்சந்தியில் இருந்தே யாழ்.நகர் செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.இச்சேவையை தொடர்ந்துநடத்த இலங்கை போக்குவரத்துசபை உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கைதடியில் உள்ளபொதுஅமைப்புகள் பலவும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
கைதடியில் சிதைந்தநிலையில் சடலம்
(உதயன் 03.05.07)
கைதடி, நவபுரம், மட்டுவில் வீதியில் மயானத்திற்கு அண்மையில் அடையாளம் தெரியாத சடலம் நேற்றுக் காணப்பட்டது.சுமார் 40 வயது மதிக்கத்தக்கவர். கறுப்பு நிற ஜீன்சும், பச்சைக் கோடு போட்ட ரீ சேட்டும் அணிந்துள்ளார். தலையில் சூட்டுக் காயமுள்ளதாகக் கூறப்பட்டது. சடலம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற சாவகச்சேரி நீதிவான் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார். சடலத்தை இனங்காண நடவடிக்கை எடுக்குமாறு பொலி ஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.


படையினரின் தென்மராட்சி ஆட்லெறி தளம் புலிகளின் தாக்குதலில் சேதம்.
Sangathi - May 02, 2007
யாழ். தென்மராட்சிக் கிழக்குப் பகுதிகளில் உள்ள சிறிலங்காப் படைகளின் ஆட்லறி எறிகணைத் தளங்கள் பல கடுமையாகச் சேதமுற்று இருப்பதாக இப்பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

படையினரின் முன்னரங்க நிலைகளை பாதுகாக்கவும் பொது மக்கள் பிரதேசங்களை சிதைக்கவும் படையினர் நிலைகளுக்கு அண்மித்த பகுதியில் இருந்த படையினரின் எறிகணைத் தளங்கள் பல விடுதலைப் புலிகளின் துல்லியமான பதில் எறிகணை வீச்சில் சிக்கி சிதைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எழுது மட்டுவாள் சிவன்கோயிலடி பகுதியில் அமைந்திருந்த படையினரின் ஆட்லெறி எறிகணைத் தளம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதில் எறிகணை வீச்சில் சிதைக்கப்பட்டதுடன் படையினர் பலர் படுகாயமடைந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

யாழில் மூவர் சுட்டுக்கொலை
[செவ்வாய்க்கிழமை, 1 மே 2007, 10:06 ஈழம்] [புதினம்]
யாழ்ப்பாணத்தில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
தென்மராட்சி மட்டுவில் பகுதியில் நேற்று திங்கட்கிழமை காலை 6.20 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களால் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டுவிலைச் சேர்ந்த கிரிதரன் (வயது 33) என்றும் அவர் டச்சு வீதியில் உள்ள கடைக்குச் சென்ற போது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
சேந்தான்குளத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை மாதகலைச் சேர்ந்த சின்னத்துரை சுஜிநேந்திரன் (வயது 19) என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இராணுவத்தினரின் சைகையையும் மீறி அதி உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்துக்குள் அமைந்துள்ள சேந்தான்குளத்துக்கு உந்துருளியில் சென்றபோது அவரை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.
கொடிகாமம் மந்துவில் பகுதியில் வர்த்தகரான மந்துவில் கிழக்கைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான நாக லிங்கம் தர்மகுலசிங்கம் (வயது 48) என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.


படுகொலைகள்
மந்துவிலில்...யாழ்ப்பாணம், மே, 01(உதயன்)

தென்மராட்சி மந்துவில் பகுதியில் நேற்றுமுன்தினம் நண்பகல் வர்த்தகர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான நாகலிங்கம் தர்மகுலசிங் கம் (வயது48) என்பவரே உயிரிழந்தவராவார். சம்பவ இடத்திற்கு சென்ற சாவகச்சேரி நீதிவான் பூர்வாங்க மரண விசாரணைகளை மேற்கொண்டார்.
மீசாலையில்...யாழ்ப்பாணம், மே 1
மீசாலை வங்களா வீதியில் நேற்றுக்காலை 6.15 மணியளவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மீசாலை மேற்கைச்சேர்ந்த இராசமுத்து கிரிதரன் (வயது25) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவர் ஆவார்.