யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தென்மராட்சி மந்துவில் வடக்கைச் சேர்ந்த சந்திரராசா கல்யாணி (வயது 30) என்பவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கல்யாணியின் உடலை கொடிகாமம் சிறிலங்கா காவல்துறையினர் கைப்பற்றி யாழ். போதனா மருத்துவமனையிடம் நேற்று இரவு ஒப்படைத்தனர்.
யாழ். கைதடியில் அப்பாவி பொதுமக்கள் இருவர் சுட்டுப் படுகொலை [புதன்கிழமை, 8 ஓகஸ்ட் 2007, 18:36 ஈழம்]
யாழ்ப்பாணம் தென்மராட்சியில் அப்பாவி பொதுமக்கள் இருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி கைதடிப்பகுதியில் உள்ள இருவரினதும் வீட்டுக்குள் இன்று புதன்கிழமை காலை 8 மணியளவில் அத்துமீறி உள்நுழைந்த ஆயுததாரிகள் இருவரையும் சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
கைதடி தெற்கைச் சேர்ந்த முருகேசு ராஜ்கண்ணா (வயது 30),
கைதடி வடக்கைச் சேர்ந்த சண்முகவடிவேல் சித்திரவடிவேல் (வயது 39) ஆகியோரே சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் ஆவர்.
கொல்லப்பட்ட இருவரும் உறவினர்கள் ஆவர்.
யாழ். பொது மருத்துவமனையில் இருவரினது சடலங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வரணியில் கிளேமோர் தாக்குதல் 3 படையினர் பலி; இருவர் படுகாயம்
[01 - August - 2007]
தென்மராட்சி வரணிப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் இரு படையினர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை 4.30 மணியளவில் கொடிகாமம்- வரணி வீதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த படையினர் மீதே இந்தக் கிளேமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளொன்றில் பொருத்தப்பட்டிருந்த கிளேமோர் வெடிக்க வைக்கப்பட்டபோதே இந்த மூன்று படையினரும் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்த படையினர் இருவரும் பின்னர் பலாலி இராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இத்தாக்குதலையடுத்து கொடிகாமம்- வரணிப் பகுதிக்கான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டு அப்பகுதியில் தீவிர தேடுதலும் நடத்தப்பட்டது.
பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தென்மராட்சியில் யுவதி உட்பட இருவர் நேற்று சுட்டுக்கொலை
[15 - July - 2007]
தென்மராட்சியில் நேற்றுச் சனிக்கிழமை இளம் யுவதியொருவர் உட்பட இருவர், இனந்தெரியாத ஆயுதபாணிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
நுணாவில் கிழக்கு, சாவகச்சேரியைச் சேர்ந்த அருணாசலம் லதாஜினி (வயது- 25) மட்டுவில் கிழக்கு சாவகச்சேரியைச் சேர்ந்த வேலாயுதபிள்ளை பிரபாகரன் (வயது - 30) ஆகிய இருவருமே இனந்தெரியாத ஆயுதபாணிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்றுக்காலை 6.30 மணியளவில் மட்டுவில் கிழக்கிலிருந்து, மந்துவிலிலுள்ள ஆலயத்திருவிழா ஒன்றிற்கு பிரபாகரன் சென்றபோதே வழியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்,
இதேநேரம் வர்த்தக நிலையம் ஒன்றில் பணிபுரியும் லதாஜினி நேற்றுமாலை 4.40 மணியளவில் தனது பணியை முடித்துக் கொண்டு நுணாவில் நோக்கிச் செல்லும் வழியில் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட இருவரது சடலங்களும் நேற்று மாலை சாவகச்சேரி பொலிஸாரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நுணாவில் படைமுகாமில் குண்டுவெடிப்பு.
தென்மராட்சி நுணாவில் சிறிலங்காப் படைமுகாமில் நேற்று முன்தினம் இரவு 9.00மணியளவில் குண்டு ஒன்று வெடித்துள்ளது. இக்குண்டுவெடிப்பில் பத்திற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள லேக்கவுஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை இக்குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இராணுவ அம்புலன்ஸ் வண்டிகள் பலதடவை பலாலிப் படைத்தளம் நோக்கி காயமடைந்த படையினரை எடுத்துச்சென்றுள்ளனர். எனினும் இக்குண்டுவெடிப்புத் தொடர்பான தகவல்களை யாழில் உள்ள படைத்தரப்பு முற்றாக மூடிமறைத்துள்ளது.
- சங்கதி 10.07.2007.
மட்டுவிலில் இராணுவத்தால் இளைஞர் படுகொலை
[திங்கட்கிழமை, 9 யூலை 2007, 19:48 ஈழம்] [தாயக செய்தியாளர்]
யாழ். தென்மராட்சி மட்டுவில் பகுதியில் இளைஞர் ஒருவர் இன்று திங்கட்கிழமை காலை சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அவரது சடலத்தை யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இன்று பிற்பகல் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர்.
சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர் மட்டுவில் தெற்கை சேர்ந்த சுரேந்திரன் என்றழைக்கப்படும் குமாரகுலசிங்கம் சிவநேசன் (வயது 22) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடைக்குச் சென்ற சுரேந்திரனை இராணுவத்தினர் சுட்டுப் படுகொலை செய்திருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரியில் இளைஞர் சுட்டுக் கொலை
[சனிக்கிழமை, 7 யூலை 2007, 23:16 ஈழம்] [கொழும்பு நிருபர்]
தென்மராட்சி சாவகச்சேரியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சுட்டுக்கொல்லப்பட்டவர், சங்கத்தானையைச் சேர்ந்த விஜயகுமார் சதீஷ்குமார் (வயது 22) என தெரிய வந்துள்ளது.
கைகள் இரண்டும் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட அவரது சடலத்தை இன்று சனிக்கிழமை காலை அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டினர்.
டச்சுவீதி, புளியடிச் சந்தியிலுள்ள தனது நண்பரது வர்த்தக நிலையத்திற்கு சென்றபோது, அவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Youth shot dead in Perungku'lam
[TamilNet, Saturday, 09 June 2007, 11:30 GMT]
Unknown armed men waiting in ambush in shrub jungles near Perupngku'lam juntion in Thenmaraadchi shot dead a Tamil youth at 6:30 p.m. Friday, sources in Jaffna said. The youth was riding a bicylce towards his house near the Perungku'lam junction close to Sri Lanka Army (SLA) camp when he was shot.
Subramaniam Suthendran, 23, was immediately taken to Chaavakachcheari General Hospital where he was pronounced dead, hospital sources said.
Chaavakachcheari Police transferred his body to Jaffna Teaching Hospital Saturday noon for postmortem examinations.
கல்லுடைக்கும் தொழிலாளர்கள் விரட்டியடிப்பு
திங்கள் 04-06-2007 20:48 மணி தமிழீழம் [பதிவு] யாழ்ப்பாணம் மட்டுவில் சரசாலைப் பகுதிகளில் கல்லுடைக்கும் தொழிலில் ஈடுபட்ட சுமார் இரண்டாயிரம் வரையான தொழிலாளர்கள் இராணுவத்தினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள் கடந்த இரண்டு நாட்களுக்குத் தென்மராட்சிப் பகுதிக்குச் சென்று கல்லுடைக்கும் தொழிலில் ஈடபட்டு வந்த சுன்னாகம், சூராவத்தை, மயிலணி, அராலி மற்றும் சரசாலை மட்டுவில் பகுதித் தொழிலாளர்கள் கல்லுடைக்கும் தொழிலில் ஈடுபட்டு இருந்த வேளையில் இந்த இடத்திற்கு வருகைதந்த நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து அந்தப் பகுதியில் கல்லுடைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது எனக் கூறி விரட்டியடித்துள்ளார்கள் . யாழ் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொழில் முயற்சிகள் இராணுவத்தினரால் தடை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.ஏற்கனவே பல்லாயிரக் கணக்கான கடற் தொழிலாளர்கள் விவசாயிகள, கட்டிடத் தொழிலாளர்கள் தச்சுத் தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் கைத் தொழிலாளர்கள், தும்புத் தொழிலாளர்கள் என்று பலரும் தொழிலை இழந்துள்ள நிலையில் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் தற்போது விரட்டியடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நடுத்தெருவுக்கு இராணுவத்தினரின் இத்தகைய பொறுப்பற்ற செயலினால் வந்தள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சாவகச்சேரியில் தபால் அதிபர் சுட்டுக்கொலை |
[திங்கட்கிழமை, 4 யூன் 2007, 16:28 ஈழம்] [புதினம்] |
யாழ். தென்மராட்சி சாவகச்சேரியில் அடையாளம் தெரியாத நபர்களினால் தபால் அதிபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சாவகச்சேரி வங்களாவடி வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்ட இவர், சுப்பிரமணியம் சாந்தீபன் (வயது 30) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இரு பிள்ளைகளின் தந்தையான இவர், தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் உந்துருளியில் சென்றுகொண்டிருந்த போது, நேற்று மாலை 6.30 மணியளவில் உந்துருளி ஒன்றில் பின்தொடர்ந்து சென்ற அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் சுட்டுக்கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. கொல்லப்பட்டவரின் சடலம் இன்று மதியம் 12.00 மணிவரை சம்பவ இடத்திலேயே காணப்பட்டதாகவும், தபால் அதிபர் மிருசுவிலில் இருந்து இடம்பெயர்ந்து சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியில் வாழ்ந்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. |
சாவகச்சேரி பகுதியை சேர்ந்த சாரதி, நடத்துநர் கைது
1050 கிலோ வெடிமருந்து நிரப்பப்பட்ட லொறி கண்டுபிடிப்பு
03.06.2007
புத்தளம் குருநாகல் வீதி நிக்கவரட்டி கொட்டவெஹர பொலிஸ் வீதிச் சோதனைசாவடியில் வைத்து வெடி மருந்து நிரப்பப்பட்ட லொறியொன்றினை கைப்பற்றிய கொட்ட வெஹர பொலிஸார் இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
வீதிச் சோதனை சாவடியில் வைத்து லொறியினை சோதனையிட முற்பட்ட போது, சாரதியும் நடத்துநரும் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடந்து கொண்டுள்ளனர் இதையடுத்து, லொறியினை கடும் சோதனைக்குட்படுத்திய பொலிஸார் பெருந்தொகையான வெடிபொருட்கள் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர்.
இந்த வெடி பொருட்கள் பாரிய தாக்குதலொன்றுக்காக எடுத்துச் செல்லப்பட்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
25 கிலோ எடை கொண்ட 47 பொதிகளில் சீ -4 ரகத்திலான வெடிமருந்தே இந்த லொறியில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மொத்தமாக 1050 கிலோ எடை கொண்ட இந்த வெடி மருந்து வெடிக்க வைக்கும் வகையில் பொருத்தப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த வெடிமருந்து குருநாகல நிக்கவரட்டி, ஆனமடுவ ஊடாக கொழும்புக்கு எடுத்து வரவே இந்த வழியினை பிரஸ்தாப லொறி சாரதி பயன்படுத்தியுள்ளதாக கொட்டவெஹர லொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சாரதியும், நடத்துநரும் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.