8.1.08

செய்திகளில் ஊரும் அயலும் ஜனவரி -மார்ச் 2008

யாழ்.பட்டதாரி மாணவர்கள் மூன்று பேர் வெள்ளைவானில் அழைத்துச் செல்லப்பட்டனர்
[28 - March - 2008] [Thinakural.com]
* மொறட்டுவையில் வசித்த வீடும் சீல் வைப்பு

மொறட்டுவையில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று பட்டதாரி மாணவர்கள் வெள்ளை வானில் சிவில் உடையில் வந்தவர்களால் அழைத்துச்செல்லப்பட்டதை அடுத்து, அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்று அறியமுடியாதுள்ளதாக உறவினர்களும் நண்பர்களும் பிரதி அமைச்சர் பெ.ராதாகிருஸ்ணனிடம் புகார் செய்துள்ளனர்.

மட்டுவிலைச் சேர்ந்த தம்பாப்பிள்ளை கஜன், அளவெட்டியைச் சேர்ந்த கணேசன் செல்வரஞ்சன், வடமராட்சியைச் சேர்ந்த சிவலிங்கம் ஆரூரன் ஆகிய மூன்று பட்டதாரி மாணவர்களே இவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

மேற்படி மாணவர்கள் மூவரும் பட்டப் படிப்பை முடித்துவிட்டு வெளிநாடு செல்வதற்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தாகவும், கடந்த 24 ஆம் திகதி இரவு ஏழு மணியளவில் வெள்ளை நிற வானில் சிவில் உடையில் வந்தவர்கள் இவர்கள் தங்கியிருந்த தொடர்மாடி வீட்டை பூட்டி சீல் வைத்து விட்டு மூன்று மாணவர்களையும் வானில் ஏற்றிச் சென்றதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

கஜன் பட்டயக்கணக்குப் பயிற்சி செய்பவர் என்றும் இரண்டு வாரங்களில் செல்வரஞ்சன் லண்டன் செல்வதற்கு கல்வி விசா பெற்றுள்ளதாகவும் ஆரூரன் எம்.எஸ்.ஸி பட்டப்படிப்பு மேற்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

Wed Mar 26 9:45:00 2008
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களின் விவரம்; தென்மராட்சிப் பிரதேச செயலகம் சேகரிக்கிறது
அண்மையில் பெய்த கடும் மழையினால் பாதிக்கப்பட்ட விளை பயிர்களின் விவரங் கள் தென்மராட்சிப் பிரதேச செயலகத் தினால் திரட்டப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் வரை 13 கிராம அலுவலர் பிரிவுகளிலிருந்து கிடைத்த அறிக்கையின் பிரகாரம் 25 லட்சம் ரூபா பெறுமதியான விளைபயிர்கள் வெள்ளத் தினால் அழிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படு கின்றது.
மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தத்தமது விவசாய சம்மேள னம் ஊடாகக் கிராம அலுவலருக்கு சேதத்தை அறிவிக்குமாறு பிரதேச செயலர் அறிவித் துள்ளார். இதுவரை அழிவடைந்த நெற் பயிர்கள் உட்பட மரக்கறிப் பயிர்களின் விவ ரங்கள் திரட்டப்படுகின்றன.
இதுவரை கல்வயல், மட்டுவில், நுணா வில்மத்தி, நுணாவில் மேற்கு, மட்டு வில்நுணாவில், மட்டுவில் மத்தி, மட்டுவில் வடக்கு, சந்திரபுரம், கரம்பைக் குறிச்சி, வரணிஇயற்றாலை, கொடிகாமம் தெற்கு, அல்லாரை ஆகிய பிரிவுகளில் இருந்து சேத விவர அறிக்கை கிடைத்துள்ளதாக வும் தெரிவிக்கப்பட்டது. (Uthayan)

Fri Mar 21 .2008
மட்டுவிலில் வீட்டார் நித்திரையில் இருந்த வேளை ஒரு லட்சம் ரூபா பொறுமதியான நகைகள் அபகரிப்பு
வீட்டுக்காரர் ஆழ்ந்த நித்திரையில் இருந்தவேளையில் உள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்து பணம், தங்க நகைகள் மற்றும் பெறுமதிமிக்க பொருள்களை அபகரித்துச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டுவில் சந்திரபுரம் செல்லப் பிள்ளையார் கோவிலடியில் இடம்பெற்றது. திருட்டுப் போன பொருள்களின் பெறுமதி ஒரு லட்சத்து ஆயிரம் ரூபா வென மதிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்õபக வீட்டு உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தென்மராட்சிப் பிரதேசத்தில் இருவேறு சம்பவங்களில் ஆறு பேர் காயம்
தென்மராட்சிப் பிரதேசத்தில் இருவேறு சம்பவங்களில் ஆறுபேர் காயமடைந்தனர்.
மழை பெய்தவேளையில் மோட்டார் சைக்கிள், மிதிவண்டி ஆகியவற்றில் பய ணித்த போது சறுக்கி வீழ்ந்து ஐந்து பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் கடந்த திங் கட்கிழமை தென்மராட்சிப் பிரதேசத்தில் இடம்பெற்றது.
மிதிவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில் சென்றபோது சறுக்கி வீழ்ந் ததில் மீசாலையைச் சேர்ந்த எஸ்.லோக நாதன் (வயது 48), மட்டுவிலைச் சேர்ந்த பொ. கந் தசாமி (வயது 47), நுணாவிலைச் சேர்ந்த கே. இராசரத்தினம் (வயது 43), கைதடி நுணாவிலைச் சேர்ந்த பொ. கோணேஸ்வரன் (வயது 18), கச்சாயைச் சேர்நத கே.குமார் (வயது 22) ஆகியோர் காயமடைந்தனர்.
மரத்திலிருந்து வீழ்ந்த தேங்காய் குடும் பஸ்தர் ஒருவரின் தலையை தாக்கிக் காயப் படுத்தியது.
இச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி கல்வயலில் இடம்பெற்றது.
இதே இடத்தைச் சேர்ந்த எஸ். கணப திப்பிள்ளை (வயது 57) என்பவர் காயம டைந்த நிலையில் சாவகச்சேரி மருத்துவ மனை யில் அனுமதிக்கப்பட்டார்.
(Uthayan)

Mon Mar 17 9:55:00 2008
அரிசியின் விலை குடாநாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது!
நகரத்தின் வர்த்தக நிலையங்களில் நாட்டரிசியின் விலை "நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக' உயர்ந்து வருகின்றது.
நேற்றைய தினம் ஒருகிலோ நாட்டரிசி ரூபா 75 இற்கு விற்பனையானது. நேற்று முன்தினம் சனிக்கிழமை கிலோ 65 ரூபா ஆகவும் கடந்த புதன்கிழமை கிலோ 60 ரூபா ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
மழையினால் அரிசி விலை உயர்வதாக வர்தகர்கள் தெரிவித்தனர்.
இம்முறை குடாநாட்டில் நெல் உற் பத்தி கணிசமான அளவு அதிகரித்திருந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் அரிசியின் விலையை தினமும் அதிகரிப்பது குறித்து பாவனையாளர்கள் அதிருப்தி

13.03.2008
வெவ்வேறு விபத்துச் சம்பவங்களில்
தென்மராட்சியில் ஆறுபேர் காயம்

தென்மராட்சி பிரதேசத்தில் இடம்பெற்ற வெவ்வேறு விபத்துச் சம்பவங்களில் ஆறு பேர் காயமடைந்தனர்.நுணாவில் மேற்கில் இரு சக்கர உழவு இயந்திரத்தை இயக்கிய போது விசிறியைத் தொட்டுப் பார்த்த நா.முகுந்தன் (வயது 7) என்ற பாடசாலை மாணவனும் மட்டுவிலில் மின் இணைப்பு வழங்கப் பட்டிருந்த கிரைண்டரின் விசிறி இயங்கா ததால் அதனை விரலால் இயக்க முற்பட்ட வேளையில் திடீரென விசிறி இயங்கிய தால் யோ.இராகுலன் (வயது 21) என்ப வரும் தமது விரல்களை இழந்தனர்.
தென்மராட்சி பாடசாலை மாணவர்களுக்கு
ஞாயிறன்று இலவச மருத்துவ முகாம்

தென்மராட்சி கல்வி வலயமும் சாவகச்சேரி லயன்ஸ் கழகமும் இணைந்து தென் மராட்சி வலயப் பாடசாலை மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாமினை நடத் தவுள்ளன.
(Uthayan)

12.03.2008
குடாநாட்டில் தொடரும் படுகொலைகள்

நேற்று செவ்வாய்கிழமை காலை யாழ் குடாநாட்டில் ஒருவர் இனம் தெரியா ஆயுத தாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் மீசாலை மேறகு கேணியடி பிரதேசத்தை சேர்ந்த குடும்பஸ்தரா 34 அகவையுடைய இரத்தினம் வினாகயேஸ்வரன் என்பவரே இனம் தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இரண்டு மோட்டர் உந்துருளிகளில் வந்த நான்கு பேரே இவரை சுட்கு: கொன்று விட்டு தப்பிச் சென்றதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர் இதேவேளை பண்டத்தரிப்பு பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு 10.00 மணியளவில் ஒருவர் இனம் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது
puthinam.com
குடும்பஸ்தர்கள் இரண்டு பேர் நேற்றுச் சரண்
உயிர் அச்சுறுத்தல் காரணமாக இரு குடும்பஸ்தர்கள் நேற்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் சரணடைந்தனர்.
சாவகச்சேரியைச் சேர்ந்த 35 வயதான குடும்பஸ்தரும், நவக்கிரியைச் சேர்ந்த 40 வயதான குடும்பஸ்தருமே சரணடைந்தவர்களாவர்.
இருவரையும் விசாரணை செய்த மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் அவர்களை யாழ். பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இருவரும் இன்று யாழ். நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர் என்று பொலிஸ் வட்டாரங்கள் உதயனுக்குத் தெரிவித்தன. (அ1)
Uthayan.com

01.02.2008.
தென்மராட்சியில் படைக் கொலைக் கும்பலால் இரு பொதுமக்கள் சுட்டுக்கொலை
தென்மராட்சியில் இரு பொதுமக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் பருத்தித்துறை - கச்சாய் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் புகுந்த சிறீலங்கா படைகளின் கொலைக் கும்பல் யுவதி ஒருவரைச் சுட்டுக்கொன்றுள்ளனர். கொல்லப்பட்டவர் 24 அகவையுடைய சிவராசா சுகி எனக் கூறப்படுகின்றது.

இதேபோன்று காலை 10 மணியளவில் அல்லாரை - கச்சாய் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் புகுந்த சிறீலங்கா படைகளின் கொலைக் கும்பல் பொதுமகன் ஒருவரைச் சுட்டுக்கொன்றுள்ளனர். கொல்லப்பட்டவர் 26 அகவையுடைய உதயன் எனத் தெரிவிக்கப்படுகின்றது.(pathivu.com)

31.01.2008
சகோதரர்கள் மூவர் வரிசையாக நிற்க வைத்துச் சுட்டுக்கொலை சாவகச்சேரியில் புதன் இரவு கொடூரம்
அண்ணன் சகோதரி தம்பி என இளம் சகோதரங்கள் மூவர் இருட்டு வேளை வரி சையாக நிற்க விடப்பட்டு சுட்டுப் படு கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
சாவக்சேரி, டச்சு வீதியில், மந்துவிலுக்கு அருகே சோலையம்மன் கோவிலடிப் பகுதி யில் புதன் இரவு 8 மணியளவில் இந்தக் கோரம் இடம்பெற்றிருக்கின்றது.
உயிரிழந்த இளம் பெண் இரு குழந்தை களின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்றிரவு மின்சாரம் தடைப்பட்டு இருள் சூழ்ந்திருந்த சமயம் மோட்டார் சைக்கிள்களில் குழுவாக வந்தோர் முதலில் சம்பந் தப்பட்ட வீட்டை முற்றுகையிட்டனர். வீட் டிலிருந்தோரின் அடையாள அட்டை களை வாங்கிய பின்னர் அனைவரையும் வரிசையாக நிற்கும்படி அவர்கள் உத்தரவிட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அந்நிலையில் திடீரென கண்மூடித்தனமாக வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.
இதனால் பாலசுந்தரம் பாஸ்கரன் (வயது 30), அவரது சகோதரியான திருமதி துஷி யந்தன் பாலேஸ்வரி (வயது 21) ஆகி யோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த அவர்களின் சகோதர ரான பாலசுந்தரம் பார்த்தீபன் (வயது 19) என்பவர் இரவு வேளை உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படாத நிலையில் பின் னர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் நடத்த வேளை இக்குடும் பத்தவருடன் இருந்த அவர்களது தாயும் மற்றொரு சகோதரனும் தெய்வாதீனமாகக் காயங்கள் ஏதுமின்றித் தப்பினர். தந்தை யார் அச்சமயம் வீட்டின் பின்புறம் சென்றி ருந்தமையினால் தப்பினார் என்று கூறப் பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக நேற்றுக் காலை அப்பகுதி கிராமசேவையாளர் சாவ கச்சேரிப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத் தார்.
இச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்ததயைடுத்து பதில் நீதிவான் செ.கண பதிப்பிள்ளை சம்பவம் நடைபெற்ற இடத் துக்குச் சென்று பார்வையிட்ட பின்னர் சட லங்களை யாழ். போதனா வைததியசாலை சவச்சாலைக்கு கொண்டுசெல்லுமாறும் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி மூலம் பிரேத பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பிரேத பரி சோதனையின் பின்னர் சடலங்களை உற வினரிடம் ஒப்படைக்குமாறும் பொலிஸா ரைப் பணித்தார்.
நேற்றுமுன்தினம் இரவு 8 மணியள வில் வீட்டுக்குள் புகுந்த ஆயுததாரிகள் அடையாள அட்டைகளை கேட்டதாகவும் அவற்றைச் கோதனை செய்ய சகலரையும் அமருமாறு கேட்டதாகவும் அதன்பின் சரமாரியாக வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதா கவும் விசாரணையில் தெரிவிக்கப்பட் டது.
சம்பவத்தின் போது அவர்களது தாய் மற்றும் ஒரு சகோதரி ஆகியோர் தெய்வா தீனமாக தப்பியுள்ளார் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களும் உயிர் தப்பியவர்களும் நாளாந்த கூலி வேலைகளில் ஈடுபட்டு தமது வாழ்க் கையை நடத்துபவர்கள் என்று மரண விசாரணையின்போது தகவல் வெளியி டப்பட்டது.
(உதயன்)


தென்மராட்சியில் 3 சகோதரர்கள் வரிசையாக நிற்கவிட்டு சுட்டுப் படுகொலை
[வியாழக்கிழமை, 31 சனவரி 2008, 02:45 பி.ப ஈழம்] [புதினம்]
யாழ். தென்மராட்சியில் உள்ள மட்டுவில் சோலையம்மன் கோவிலடிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவால் நேற்று இரவு மூன்று சகோதரர்கள் வரிசையாக நிற்கவிட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று புதன்கிழமை இரவு 8:30 மணியளவில் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த ஆயுததாரிகள், மூன்று சகோதரர்களின் வீட்டுக்குச் சென்று அவர்களை வெளியே வருமாறு அழைத்துள்ளனர். அவர்கள் வீட்டுக்கு வெளியே வந்ததும் வரிசையாக நிற்கவிட்டு துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் 2 பிள்ளைகளின் தாயான திருமதி துஸ்யந்தினி பாலேஸ்வரன் (வயது 21), பாலசுந்தரம் பாஸ்கரன் (வயது 30), பாலசுந்தரம் பார்த்தீபன் (வயது 19) ஆகியோர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

திருமதி துஸ்யந்தினியின் கணவரான பாலேஸ்வரன் சம்பவத்தின் போது காயங்கள் எதுவுமின்றி உயிர்தப்பியிருக்கின்றார். மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அவர் பின்கதவு வழியாக தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. சிறிலங்கா அதிரடிப்படையினர் இன்று காலை முதல் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி மாவட்ட நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் உத்தரவிட்டிருக்கின்றார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இராணுவத்தினரின் ஈருளிப் படைப்பிரிவினர் வந்து சென்றதற்கான தடயங்கள் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


எந்நேரமும் காணாமற்போகக் கூடிய அவலத்தில் குடாநாட்டுப் பொதுமக்கள்
சர்வதேச அமைப்பு விவரிக்கிறது
யாழ். குடாநாட்டு மக்கள் எந்நேரமும் காணாமற் போகக்கூடிய கொல்லப்படக் கூடிய கடத்தப்படக்கூடிய சூழ்நிலை யின் கீழ் வாழ்கின்றனர் என சுட்டிக்காட்டி யுள்ளது பிரான்ஸைத் தளமாகக் கொண்டு இயங்கும் எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற அமைப்பு. அங்கு மக்களின் நட மாட்ட சுதந்திரமும் பாதிக்கப்பட்டுள்ளதா கக் குறிப்பிட்டுள்ளது.
மோதல்கள் காரணமாக யாழ். குடாநாட்டு மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள் ளனர் எனவும் யாழ். குடாநாட்டில் செயற் படும் அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரச அதிகாரிகளால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் யுத்தம் காரண மாக அதிகளவிற்கு தொடர்ந்து பாதிக் கப்படும் அந்தப் பகுதியில் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு தனது பணியைத் தொடர்கின்றது.
இலங்கை இராணுவத்திற்கும், விடுத லைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெறும் பகுதியாக வடக்குக் காணப்படுகின்றது.
அரசு யுத்தநிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகியதைத் தொடர்ந்து நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.
இந்த மோதல் யாழ். குடாநாட்டை நாட் டின் ஏனைய பகுதிகளிலிருந்து துண்டித் துள்ளது. அங்குள்ள சுமார் நாலரை லட்சம் மக்களின் வாழ்க்கைத் தரம், மோதலின் போது இராணுவமயப்படுத்தப்பட்ட பகுதி யில் வாழ்வதுபோல் காணப்படுகின்றது. பொருள்கள், அத்தியாவசிய விநியோகம் போன்றவற்றிற்கான தட்டுப்பாடு, ஊர டங்கு, இராணுவத் தொடரணிகள் என்ப னவே அங்கு காணப்படுகின்றன.
மேலும் யாழ். குடாநாட்டு மக்கள் எந் நேரமும் கடத்தப்படக்கூடிய கொல்லப் படக்கூடிய காணாமற்போகக்கூடிய சூழலில் வாழ்கின்றனர்.
நடமாடும் சுதந்திரம் பாதிப்பு
யாழ். குடாநாட்டின் அனைத்து மக் களும் கட்டுப்பாடுகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புப் படையினரின் பெருமளவு சோதனைச் சாவடிகள் காரணமாக மக்க ளின் நடமாடுவதற்கான சுதந்திரம் பாதிக் கப்பட்டுள்ளது.
எனினும், பருத்தித்துறை மருத்துவமனை யில் சிகிச்சையளிக்க முடியாத நோயாளி களை யாழ்ப்பாண மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றோம்.
இராணுவ வாகனத் தொடரணி செல்லும் வேளைகளிலும் அல்லது ஊரடங்கு விதிக்கப்பட்ட நேரத்திலும் இராணுவ அனு மதியைப்பெற்று எமது அம்புலன்ஸ்கள் நோயாளிகளைக் கொண்டு செல்கின்றன.
எனினும், எமது சர்வதேசப் பணியாளர் கள் யாழ். குடாநாட்டிற்குச் செல்வதற்குப் பல அமைச்சுகளிடமும், அதிகாரிகளிட மும் அனுமதி பெறவேண்டியுள்ளது. இதற்குக் குறைந்தது எட்டு வாரங்களாவது பிடிக்கின்றது.
இலங்கை அதிகாரிகள் விதித்துள்ள இந்தக் கட்டுப்பாடுகள் பருத்தித்துறை மருத் துவமனைக்கு நிபுணர்களை வழங்குவ தைப் பாதிக்கின்றது என்று உள்ளது.(உதயன்)




தென்மராட்சியில் 2 இளைஞர்கள் கைது
[வெள்ளிக்கிழமை, 18 சனவரி 2008, 07:13 பி.ப ஈழம்] [புதினம்]
யாழ். தென்மராட்சி கல்வயல் பகுதி இன்று சிறிலங்காப் படையினரின் சுற்றிவளைப்புக்கு உட்படுத்தப்பட்டு இரண்டு இளைஞர்கள் படையினரால் பிடித்து செல்லப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி கல்வயல் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8:00 மணி தொடக்கம் 12:00 மணிவரை படையினர் பெருமளவு குவிக்கப்பட்டு சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது விசாரனைக்கு என்று இரண்டு இளைஞர்கள் சிறிலங்காப் படையினரால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இதனிடையே, வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் பரவலாக மிதிவெடிகளை புதைத்து வருகின்றனர்.

அம்பன் பகுதியில் படையினரின் முகாம்களை சுற்றியும் மக்கள் நடமாடும் பிரதேசங்களிலும் மிதிவெடிகளை புதைப்பதால் மக்கள் பயணங்களை மேற்கொள்ள அச்சமடைந்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியில் ஆயுதமுனையில் வீடொன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளது.

சந்திரன் எனபவரது வீட்டில் ஆயுதம் தாங்கிய துணை இராணுவக்குழு ஆயுதமுனையில் வீட்டுக்காரரை மிரட்டி விட்டே வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களையும் எடுத்துச் சென்றிருக்கின்றனர்.



SLA disrupts Thaippongkal Day in Thenmaraadchi
Sri Lanka Army (SLA) troops in Kaithadi in Jaffna forcibly took more than 600 local residents Tuesday early morning, disrupting their Thaippongkal rituals, to the playgrounds and schools in the area and held them for interrogation until evening. The SLA troops also assaulted the people going along Jaffna-Kandy road in Kaithadi during the extensive SLA cordon and search operation conducted in Kaithadi area on Thaippongkal Day.

Residents had to abandon Thaippongkal rituals halfway being forced by SLA troops to gather at places the troops took them to.

The SLA behaving in a manner disrespecting the Tamil celebration of Thaippongkal by offering cooked milk-rice to the Sun God has very much hurt the feelings of the Tamils, a social activist in Thenmaraadchi told TamilNet.

SLA in Jaffna claimed that its sentry posts located near a Saiva temple in Kaithadi was attacked by gunmen Tuesday night and its troops had opened fire in retaliation.

Meanwhile, the SLA commander in Jaffna had issued a message of Thaippongkal greetings to the people in Jaffna peninsula.

The Jaffna-Kandy road which passes through Kaithadi is also the main route used by people traveling to places like Chaavakachcheari and Kodikaamam in Thenmaraadchchi.

No one has been arrested in the cordon and search on Tuesday.
(http://www.goodsrilanka.com/)

சாவகச்சேரி ஷ்ரீ சக்கர ஆழ்வார் கோவிலில் நாட்டு மக்களுக்கு சுபிட்சம் வேண்டி மகாயாகம்

[08 - January - 2008] [தினக்குரல்]

சாவகச்சேரி சப்பச்சிமாவடி ஷ்ரீ சக்கர ஆழ்வார் கோவிலில் வருடாந்த சுதர்சன மகாயாகம் எதிர்வரும் பதின்மூன்றாம் திகதி காலை நடைபெறவுள்ளது.
நாட்டில் வாழும் சகல இனமக்களும் சுபிட்சமாக இன ஒற்றுமையுடன் வாழ்வதற்காக பெரும் செலவில் இந்த யாகம் இடம்பெறவுள்ளது.

கலாநிதி பண்டிதர் சிவஷ்ரீ து.கு. ஜெதீஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெறவிருக்கும் இவ் யாகத்தை வல்வெட்டித்துறை சிவஷ்ரீ பரமேஸ்வர மனோகரக் குருக்கள், வட்டுக்கோட்டை ஆகம கலாசூரி சிவஷ்ரீ வைத்தீஸ்வரக் குருக்கள், ஊரெழு ஆகமபிரவீணா சிவஷ்ரீ இ.சோதீஸ்வரக் குருக்கள், சுன்னாகம் குருமணி சிவஷ்ரீ சு.ஷ்ரீகாந்தக் குருக்கள், சுன்னாகம் கிரியாகலாமணி சிவஷ்ரீ நகுலேஸ்வராக்குருக்கள், திக்கம் கிரியாரத்தினம் சிவஷ்ரீ சிவபால குருக்கள் ஆகியோர் நிறைவு செய்வர்.

கிரியைகளாக விநாயகர் வழிபாடு, விஷ்ணு மகாயாக பூஜை, திரவிய அபிஷேகம், யாக அக்கினியில் சுதர்சன மூல மந்திரஹோமம், புருஷசூக்த மந்திர ஹோமம், ஷ்ரீ நாராயண ஜயநிஷத் மந்திரஹோமம், விஷ்ணு சகஸ்ர நாம ஹோமம் (1008) தசாவதார சுலோக மந்திர ஹோமம், ஷ்ரீ சுதர்சன மகாமந்திர ஹோமம் (108) இடம்பெறும். நண்பகல் 12 மணிக்கு மகா பூர்ணாகுதி தீபாராதனை , யாக கும்ப அபிஷேகம், ஆசீர்வாதம், திருவருட் பிரசாதம் வழங்கல் இடம்பெறும்.

நிகழ்வில் ஆசியுரையை நல்லை ஆதீன முதல்வர் ஷ்ரீலஷ்ரீ சோமசுந்தர சிவாச்சாரிய தம்பிரான் சுவாமிகள் வழங்குவார்கள். மகேஸ்வர பூஜையும் இடம்பெறும்.