3.11.08

செய்திகளில் ஊரும் அயலும் நவ+டிச 2008




யாழ் வரணி பகுதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திங்கள், 29 டிசம்பர் 2008, 14:03 மணி தமிழீழம் [pathivu.com ]
யாழ்ப்பாணம் வரணி பகுதியில் கைது செய்யப்பட்டு படைப்புலனாய்வுத்துறையினரால் தாக்கப்பட்டுச் சித்தரவதைக்கு உட்படுத்தப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.



நேற்று முன்தினம் இவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்டவர் வரணியைச் சேர்ந்த 39 அகவையுடைய றட்ணவடிவேல் (39) சடலம் பிரேத பரிசோதனைக்கா யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தொவிக்கப்படுகின்றது.





யாழ் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் நால்வர் சரண்

வீரகேசரி இணையம் 12/23/2008 4:23:58 PM - இனந்தெரியாத ஆயுததாரிகள் விடுத்த உயிர் அச்சுறுத்தலையடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் உட்பட நால்வர் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலக்த்தில் சரணடைந்துள்ளனர்.

வரணி வடக்கைச் சேர்ந்த சகோதரர்களான 26 வயதுடைய மேசன் தொழிலாளியும், 25 மற்றும்28 வயதான கூலித்தொழிலாளிகளும் சரணடைந்துள்ளனர்.இவர்களுடன் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 20 வயதான தச்சுவேலை செய்யும் ஒருவரும் சரணடைந்துள்ளனர்.

இவர்கள் யாழ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் யாழ் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து யாழ் நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.



வேம்பிராயில் வெட்டுக் காயங்களுடன் சடலம் மீட்பு

வீரகேசரி இணையம் 12/22/2008 1:03:30 PM -
யாழ் தென்மராட்சி வேம்பிராய்ப் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலத்தை நேற்று முன்தினமிரவு மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் 30 வயதான இளைஞருடையதாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ள பொலிஸார், கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

பொது மக்கள் வழங்கிய தகவலை அடுத்தே கொடிகாமம் பொலிஸார் குறித்த பிரதேச பற்றை ஒன்றிலிருந்து சடலத்தை மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


தென்மராட்சியில் மீண்டும் பாரிய அளவில் பயன்தரு மரங்கள் அழிப்பு

( 12/20/2008 euro tv)

யாழ்ப்பாணம் தென்மராட்சியில் பயன்தரு மரங்கள் பல சிறீலங்கா படையினரால் வெட்டி அழிக்கப்படுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்னர்.

தென்னை, பனை மற்றும் வைர மரங்களை சிறீலங்கா படையினர் தேடி வெட்டி அழிப்பதாகவும், அதனைத் தாம் தடுக்க முனைந்தபோது கடுமையாக தாக்கப்பட்டதாகவும் கொடிகாமம் கச்சாய் வீதியில் உள்ள தென்னம் தோட்டம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வறணி கொடியாமம், உசன், மிருவில், கச்சாய் போன்ற பகுதிகளில் இவ்வாறான மர அழிப்பு இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே முகமாலை, கிளாலி, எழுதுமட்டுவாழ் போன்ற பகுதிகளில் இவ்வாறு பெரும் தொகை மரங்கள் சிறீலங்கா படையினரால் அழிக்கப்பட்டு காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், சிறீலங்கா படையினர் வீசும் பல்குழல் எறிகணைகளும் பனை மற்றும் தென்னை போன்ற உயர் மரங்களை அழித்து வருகின்றன.






யாழ் குடா நாட்டில் காணாமல் போனோர் வரணி முகாமில் தடுத்துவைத்து சித்திரவதை - மனித உரிமை அதிகாரி தகவல்
சனிக்கிழமைஇ 13 டிசெம்பர் 2008நிதர்சனம்
யாழ். குடாநாட்டில் காணாமல்போன ஐம்பதிற்கும் மேற்பட்டோர் வரணியிலுள்ள இராணுவ முகாமில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு வருவதாக யாழ். மனித உரிமை செயலகத்தில் முறையிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக மனித உரிமை செயலக அதிகாரி எஸ். சிவராஜலிங்கம் தெரிவிக்கையில்; தென்மராட்சி வரணி படை முகாமில் குடாநாட்டில் காணாமல் போனவர்களில் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு வருவதாக பொதுமக்கள் முறைப்பாடு செய்து வருகின்றனர். இதனையடுத்து நாம் இவ்விடயம் குறித்து யாழ். குடாநாட்டு படைத் தளபதி டி.ஏ.சந்திரசிறியிடம் முப்படை முகாமைப் பார்வையிட அனுமதி கோரிய போதும் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.












உதயன் 30.11.2008











உதயன் மற்றும் இலங்கை இணைய இதழ்களில் வெளிவந்த ஊர், அயல் செய்திகளின் தொகுப்பு



நினைவஞ்சலி

2ஆம் ஆண்டு அஞ்சலி
[10 நவம்பர் 2008, திங்கட்கிழமை 10:30 மு.ப]

சட்டத்தரணி,
முன்னாள் யாழ்.மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர்

திரு.நடராஜா இரவிராஜ் அவர்கள்

10.11.2006 அன்று கொழும்பில்
படுகொலை செய்யப்பட்டார்.
அவரது இரண்டாமாண்டு
நினைவஞ்சலி
இன்று சாவகச்சேரியில்
இடம்பெறுகின்றது.