1.9.08

செய்திகளில் ஊரும் அயலும் செப்/அக் 2008

புது முகவரி மானாவளைக்கு www.manavalai.us.ms/















Uthayan20.10.2008
Uthayan20.10.2008
17.10.2008
17.10.2008












சாவகச்சேரியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இராணுவ வீரரின் சடலம் மீட்பு
புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2008, [ வீரகேசரி ]
சாவகச்சேரி தனங்கிளப்பு இராணுவ முகாமில் இருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இராணுவ வீரர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை சாவகச்சேரிப் பொலிஸாரால் சாவகச்சேரி நீதி மன்றத்தில் தனங்கிழப்பு இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இராணுவ வீரரின் சடலம் காணப்படுவதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற சாவகச்சேரி பதில் நீதவான் அலெக்ஸ்ராஜா இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டார்.

சடலமாக மீட்கப்பட்டவர் வி.பி.ஜி.எம். நிசாந்த சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.








தென்மராட்சியில் வர்த்தகர் சுட்டுக்கொலை
புதன், 24 செப்ரம்பர் 2008 [பதிவு.கொம்]
செவ்வாய்கிழமை மதியம் 2.10 மணியளவில் ஏ-9 வீதியில் கைதடி தென்மராட்சி பகுதியில் சிறீலங்கா படையினரின் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் வர்த்தகர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்போது கொல்லப்பட்டவர் 43 அகவையுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான பொன்னையா குணசேகரம் எனத்தெரியவருகிறது.
கோலையாளி இவரை துரத்திச் சென்று கொலை செய்ள்ளதாகவும் இவர் ஏ-9 வீதியில் கைதடி சந்தியில் பொருட்களை தனது கடைக்காக கொள்வனவு செய்து திரும்பிசெல்லும் போது இச்சம்பவம் இவரது வீட்டுக்கு 300 மீற்றர் தொலைவிலும் ஏ-9 வீதியில் இருந்து 400 மீற்றர் தொலைவிலும் இடம்பெற்றதாக தெரியவருகிறது.

உதயன்


ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் தமிழ் பிரிவு பெறுபேறுகளில் யாழ் மாணவன் முதலிடம்
இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் தமிழ் பிரிவு பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் மீசாலை வீரசிங்கம் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தர்மலிங்கம் பசுபதன் என்ற மாணவன் மொத்தமாக 176 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ்ப் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார். இதேவேளை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் மூன்று மாணவிகள் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். குறித்த மூன்று மாணவிகளும் 183 புள்ளிகளைப் பெற்று முதனிலை வகிக்கின்றனர்.

கொழும்ப சிறிமாவோ பண்டாரநாயக்க மகளிர் பாடசாலையில் கல்வி பயிலும் மஹிந்தனி அமாசா ஹபுவாராச்சி பம்பலப்பிட்டி லிண்ட்சே மகளிர் பாடசாலையின் சஜினி அஞ்சனா சேனாதீர மற்றும் புத்தளம் புனித அன்றூ மத்திய மகா வித்தியாலத்தைச் சேர்ந்த அபேசிங்ககே தோன மனீசா சுபிபி ஆகியோரே இவ்வாறு முதனிலை வகிக்கின்றனர்.

புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 265000 மாணவ மாணவியரில் 30000 மாணவ மாணவியர் பிரபல பாடசாலைகளில் அனுமதி அல்லது புலமைப்பரிசில் பணத்தினைப் பெற்றுக் கொள்ள தகுதி பெற்றுள்ளனர். (தமிழ் வின்)


நிதர்சனம்

சாவகச்சேரியில் குடுமபஸ்தர் ஒருவர் சுட்டுக்கொலை
வீரகேசரி இணையம் 9/11/2008
யாழ்ப்பாணம் சாவகச்சேரி டச்சு வீதியில் இன்று காலை குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சுட்டுக்கொல்லப்பட்டவர் மீசாலை தெற்கு மீசாலையை சேர்ந்த தம்பிராஜா முரளிதாஸ்(வயது 35) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்த இவர் யாழ் போதனா வைத்தியசாலையின் 24 ம் இலக்க விடுதியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை சாவகச்சேரி கைத்தடி வடக்கில் நேற்று மாலை இளம் யுவதியொருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.சிவராமலிங்கம் நந்தாயிளி(வயது 21) எனும் யுவதியே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.இவரது தந்தையார் சிரமதானம் ஒன்றில் ஈடுபட்டிருந்த போது இவ் யுவதி வீட்டில் வைத்து இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சாவச்சேரியில் வைக்கப்பட்டுள்ள இவரது சடலம் பிரேத பரிசோதனையை அடுத்து பெற்றோரிடம் கையளிக்கப்படவுள்ளது.


ஆயுதபாணிகளால் யுவதி சுட்டுக்கொலை
[11 - September - 2008]

யாழ். குடாநாட்டில் நேற்று புதன்கிழமை யுவதியொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.தென்மராட்சியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

தென்மராட்சியில் கைதடி வடக்கைச் சேர்ந்த சிவராமலிங்கம் நந்தாயினி (வயது 21) என்ற யுவதி கொல்லப்பட்டவர்ராவார். நேற்றுப் பிற்பகல் கைதடியிலுள்ள தனது வீட்டிலிருந்து யுவதியை மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் சுட்டுக் கொன்று விட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற சாவகச்சேரி மாவட்ட நீதிபதி மரண விசாரணைகளை நடத்திய பின் பிரேத பரிசோதனைகளுக்காகச் சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.












2nd Claymore attack kills SLA soldier in Jaffna
[TamilNet, Thursday, 04 September 2008, 07:17 GMT]
Unidentified persons triggered a second Claymore attack Wednesday midnight, killing a Sri Lanka Army (SLA) soldier and injuring some others, on a SLA vehicle on its way from Yaakkarai in Vadamaraadchi to Kappoothu in Thenmaraadchi on Point Pedro- Chaavakachcheari main road at Vi’raali located on the boundary between Vadamaraadchi and Thenmaraadchi. The first attack Wednesday afternoon had targeted a Bufflel Armored Personnel Carrier killing one soldier and injuring three in Kapoothu area, sources in Jaffna said.

SLA launched an extensive cordon and search Thursday from 7:00 a.m, in the area north of A9 road from Nu’naavil junction, enclosing Madduvil, Charasaalai, Kappoothu, Kalvayal and Ke’rudaavil.

Vehicles were not permitted to use Point Pedro-Chaavakachcheari road from Thursday morning in the search which continued until afternoon.

Even NGO demining workers and governments officials on their way to work were not allowed by the SLA either to enter or exit the areas under its cordon and search.

The search was concentrated particularly in the mangrove land stretch between Charasaalai and Kapoothu areas.

SLA has officially said that one soldier was killed and three injured in the first Claymore attack Wednesday afternoon.
தென்மராட்சியில் நிலக்கண்ணி வெடித் தாக்குதலில் கவச ஊர்தி கடும் சேதம்: படையினர் ஒருவர் பலி! இருவர் காயம்
Wednesday, 03 September 2008 14:57 (Tamilskynews.com)


யாழ்ப்பாணம் தென்மராட்சியில் சிறீலங்கா படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் படைகள் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

சரசாலை, கப்புதூர் வெளியில் படையினரின் யுனிகோர்ண் ரக பவள் (Unicorn - Buffel) கவச ஊர்தி மீதே இன்று மதியம் 1:30 அளவில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதில், அந்த ஊர்தியும் சேதமடைந்தது.

படையினர் மூவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அங்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.



(உதயன்)