தென்மராட்சி அதிஉயர் பாதுக்காப்பு வலயத்தில் நெற்செய்கைக்கு அனுமதி
வீரகேசரி இணையம் 8/8/2009 11:48:28 AM - தென்மராட்சி தெற்கு மறவன்புலவு, தளங்கிளப்பு, கைதடி நாவற்குழி அதி உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட 1,050 ஹெக்டேயர் நிலப்பரப்பு நெற்காணிகளில் இவ்வருடம் நெற்செய்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக்காணிகள் நாவற்குளி சந்தியில் இருந்து அறுகுவெளிவரையான, தென்மராட்சி தெற்கு மீள்குடியமர்வோர் சங்க செயலாளர் இதனைத் தெரிவித்தார்.இந்த அனுமதி கிடைத்திருப்பதால் இக்காணிகளின் உரிமையாளர்களை ஒருங்கிணைத்து நெற்செய்கை தொடர்பான உதவிகளையும் விநியோகங்களையும் ஒருங்கிணைப்பதற்காக இப்பகுதி விவசாய சம்மேளனங்கள் புனரமைப்புச் செய்யப்படவுள்ளன.இது தொடர்பில் நடைபெறவுள்ள கூட்டங்களில் கமநல சேவைத் திணைக்கள, விவசாயத் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இடம்பெயர்ந்து வாழும் காணி உரிமையாளர் அனைவரையும் இக்கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
தென்மராட்சி மக்கள் மீளக்குடியேற அனுமதிக்குமாறு கோரிக்கை
யாழ்ப்பாணம் தென்மராட்சியில் இடம்பெயர்ந்த மக்கள் தம்மை மீளக் குடியமர்த்த அனுமதிக்க வேண்டும் என மீண்டும் அழைப்பு விடுத்துள்ளனர்.
சிறீலங்கா படையினரால் உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள கைதடி, நாவற்குழி, மறவன்புலவு, மற்றும் தனங்கிளப்பு பிரதேச மக்களே இந்தக் கோரிக்கையினை மீண்டும் முன்வைத்துள்ளன.
இது தொடர்பான மனுக்கள் இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு அமைப்பு ஊடாக அரசாங்கம், மற்றும் மனிதநேய அமைப்புக்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
1995ஆம் ஆண்டு யாழ் குடாநாட்டை சிறீலங்கா படையினர் ஆக்கிரமித்து நிலைகொண்ட பின்னர் 1999ஆம் இடம்பெற்ற படை நடவடிக்கையில் இந்த மக்கள் இடப்பெயர்வு அவலத்தை எதிர்நோக்கியிருந்தனர்.
கைதடி – நாவற்குழியில் இருந்து 250 குடும்பங்களும், மறவன்புலவில் இருந்து 150 குடும்பங்களும், தனங்கிளப்பில் இருந்து 170 குடும்பங்களும் கடந்த 10 ஆண்டுகளாக இடம்பெயர்ந்திருந்தனர்.
இவர்களில் கைதடி – நாவற்குழியைச் சேர்ந்த 200 குடும்பங்களும், மறவன்புலவைச் சேர்ந்த 35 குடும்பங்களை மட்டும் சமாதான காலத்தில் மீளக் குடியேற சிறீலங்கா படையினர் அனுமதி வழங்கியிருந்தனர்.
இந்தப் பிரதேசங்களில் கண்ணிவெடிகள், மற்றும் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ள போதிலும், ஏiனைய மக்களின் மீள் குடியேற்றத்துக்கு சிறீலங்கா படையினர் தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருகின்றனர்.
இதனால் 5,000 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மக்கள் மேற்கொண்டுவந்த பயிர்ச்செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்களின் வாழ்வாதாரமும் கடந்த 10 ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நலன்புரி நிலையங்களில் தண்ணீருக்கு தட்டுப்பாடு
வீரகேசரி நாளேடு 7/5/2009 10:05:10 PM -
தென்மராட்சி பகுதி நலன்புரி நிலையங்களில் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அங்கு சென்று திரும்பும் பொது அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.
தென்மராட்சி கைதடிப் பகுதியில் வன்னி மக்கள் மூன்று முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவிகளை செய்து வருகின்றன.
கைதடி பனை அபிவிருத்தி, சைவச் சிறுவர் இல்லம், சித்த மருத்துவத்துறை மாணவர் விடுதிகளில் சுமார் 2000 பேர் வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர். இப் பகுதியில் வெப்ப காலம் என்பதால் கிணறுகளில் நீர் வற்றியுள்ளன. இதனால் தண்ணீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
முகாம்களில் உள்ள மக்களுக்கு நாவற்குழி பகுதியில் இருந்து நீர் விநியோகம் செய்து வருகின்றபோதும் அது போதியதாக இல்லை எனத்தெரிவிக்கப்படுகிறது.
மீண்டும் உதயன் ePaper ல் சிலபக்கங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
வீரகேசரி.4.7.09 src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrB1VyEZm4exm501_6LLG8wgcy01E8Q1lPKaemOMp-eTUbKV7yAlh9AJlvCTPUG148N5SyiMCPWBbr3VZqGcGfzAOZAzi9w-gNyIlNGWGSNph55KIaEzsXT4nwZVe02rM8H-yn/s400/04_07_2009_005_013.jpg">வீரகேசரி.4.7.09
வீரகேசரி.4.7.09 src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiU4fr6yuYEhVdzzxNqpWcebGg0CnvWe0Vxv_L4F-a2wgqq2SmDYzsLD-d-_UvM_ATd-FMIhx92Xb5RSoCad9PgoQbSzKHNCgSQ3g79wz6C6qp3htbpMcv9df7jQSpQGpPqZfYl/s400/04_07_2009_018_003.jpg">
வீரகேசரி.4.7.09
வடக்கில் வசந்தம் தொடங்கியபின்பு.....!
யாழ் குடாநாட்டிலிருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் ePaper மூலமாக ஊரும் அயலும் பகுதிக்குச் செய்திகள் பெருமளவு பெறப்பட்டுவந்தன. அந்நாளேட்டின் பணியாளர்களுக்கு இனதெரியாதோரால் விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் பணியில் ஈடுபடாமலிருக்கின்றனர். அதனால் இணையவழியில் செய்திகளைப் பெறமுடியாத நிலை உருவாகியுள்ளது. கடந்த 28.06.2009 க்குப் பிறகு உதயன் ePaper வெளிவரவில்லை.
தொடர்புபட்ட செய்திகள்
உதயன் தடையின்றி வெளிவருவதற்கு ஆசிரியரிடம் ஜனாதிபதி உத்தரவாதம்பணியை அச்சமின்றித் தொடருங்கள் என்கிறார்
[01 யூலை 2009, புதன்கிழமை 2:55 மு.ப இலங்கை]
"எந்தவித அச்சுறுத்தலுக்கும் உள்ளா காமல் "உதயன்" நிறுவனம் சுதந்திரமாக இயங்குவதற்கான அனைத்து நடவடிக்கை களையும் அரசுஎடுத்துள்ளது. பயங்கரவா தத்தின் பிடியிலிருந்து நாடு விடுவிக்கப் பட்டுள்ள சூழ்நிலையில் கருத்து வெளியி டும் சுதந்திரம், ஊடக சுதந்திரம் ஆகிய வற்றை நசுக்குவதற்கு இடமளிக்கமுடி யாது. அத்தகைய முயற்சிகளில் ஈடுபடும் சக்திகளைத் தேடிக் கண்டுபிடித்து அடி யோடு அடக்குவதற்கு உறுதியான நடவ டிக்கைகள் தாமதமின்றி எடுக்கப்படும். ஆரோக்கியமான ஊடகப்பண்பு நிலவு வதையே அரசுவிரும்புகின்றது. அந்த வகையில் "உதயன்" பத்திரிகையும் தனது பணியைத் தொடர்வதையே நாம் விரும் புகின்றோம். உதயன் பணியாளர்களும், நிறுவன மும் தமது கடமையை அச்சமின்றித் தொடரலாம். அத்த கைய அச்ச மற்ற சூழ் நிலையை நாம் உறுதி செய்வோம்" இவ்வாறு "உத யன்", "சுடர் ஒளி" ஆசி ரியர் என்.வித்தியாதர னிடம் உறுதி தெரி வித்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
உதயன் ஊழியர்கள், விற்பனை முகவர்கள் மற்றும் அனைவரும் அச்சம் கொள்ளாது தமது பணிகளைத் தொடர வேண்டும்புஹுப்ழி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா..............
[30 யூன் 2009, செவ்வாய்க்கிழமை 7:40 மு.ப இலங்கை]
தாம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின்பால் நம்பிக்கை கொண்டு, உதயன் ஆசிரியபீடத்தினர், பணி யாளர்கள், விநியோகத்தர்கள், விற்பனை முகவர்கள் அனைவரும் அச்சம் கொள்ளாது தங்களது செயற்பாடுகளைத் தொடருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கேட்டுள்ளார்.
குடாநாட்டின் மூன்று நாளேடுகளும் யாழ். நகரில் நேற்று தீ வைத்து எரிப்புஇனந்தெரியாத ஆயுதக்கும்பல் கைவரிசை
[26 யூன் 2009, வெள்ளிக்கிழமை 5:35 மு.ப இலங்கை]
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன், தினக்குரல், வலம்புரி நாளேடுக ளின் பிரதிகள் முகமூடி அணிந்த இனந் தெரியாத ஆயுததாரிகளால் நேற்று அதிகாலை 4.55 மணியளவில் வீதியில் வைத்துத் தீக்கிரையாக்கப்பட்டன.வழமைபோன்று நேற்றுக் காலை, பத் திரிகை நிறுவனங்களின் விநியோகப் பணியாளர்கள் தமது வாகனங்களில் பத்திரிகைகளை விநியோகிப்பதற்காக எடுத்துச் சென்றார்கள்.யாழ். நகருக்கு சமீபமாக நாவலர் வீதியில், ஆனைப்பந்திச் சந்திக்கு அருகில் உதயன் பிரதிகளை எடுத்துச்சென்ற விநி யோகப் பணியாளர் மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த ஆயுததாரிகளால்
அச்சுறுத்தப்பட்டு நிறுத்தப்பட்டார். அவர் எடுத்துச்சென்ற பத்திரிகைப் பொதிகளை ஆயுததாரிகள் தம்வசம் வைத் திருந்த வாள்களால் வெட்டி, அவற்றை உடைத்து வீதியில் போட்டு, தாம் கொண் டுவந்த பெற்றோலை ஊற்றி பத்திரிகைக ளுக்குத் தீ வைத்தனர்.அதைத் தொடர்ந்து அதே பாதையால் வந்த தினக்குரல், வலம்புரி நாளேடுக ளின் விநியோகப் பணியாளர்களும் வழிமறிக்கப்பட்டனர். அவர்களுடைய பத்திரி கைகளும் பறிக்கப்பட்டு ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த உதயன் பிரதிகளுடன் போட்டு தீ வைக்கப்பட்டன.இதேநேரம் தனியார் பத்திரிகை முகவர் ஒருவர் தனது கடைக்கு விற்பனைக்காக எடுத்துச் சென்ற உதயன் பிரதிகள்கூட முகமூடி அணிந்த ஆயுததாரிகளால் கஸ் தூரியார் வீதியில் கன்னாதிட்டிச் சந்தியில் வைத்து தீக்கிரையாக்கப்பட்டன.இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்.நகர படைத் தளபதி தலைமையில் சம்பவ இடங்களுக்குச் சென்ற படையினர் அங்கு விசாரணைகளை மேற்கொண்டனர். யாழ்.பொலிஸார் சம்பவ இடங்களைப் பார்வையிட்டதுடன், விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டோரிடம் வாக்குமூலங்களைப் பெற்றனர்.