யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு பலி
[ செவ்வாய்க்கிழமை, 27 ஒக்ரோபர் 2009,TamilWin]
யாழ்ப்பாணம் கைதடி கிழக்கில் இன்று குடும்ப பெண்ணொருவர் கத்தி குத்துக்கு இலக்காகி மரணமாகியுள்ளார்.
மரணமானவர் 27 வயதான வாசிகன் தர்ஷினி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குடும்பச்சண்டையே இந்த மரணத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடாநாட்டைச் சேர்ந்த 3,500 பேர் வவுனியாவிலிருந்து நேற்றிரவு வந்தனர் - உடனுக்குடன் சொந்த இடங்களில் சேர்ப்பு
2009-10-24 06:39:54
வவுனியா அகதி முகாம்களில் தங்கியிருந்தோரில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 3,500 பேர் நேற்று அங்கிருந்து அழைத்துவரப்பட்டனர்.
சாவகச்சேரியில் தங்க வைக்கப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவர்கள் உடனுக்குடன் இரவிரவாக அவர்களது சொந்த இடங்களுக்கு பிரதேச செயலக பிரிவு களுக்கு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
நேற்றி நள்ளிரவு வரை இப்பணி தொடர்ந்தது. ஒரே நாளில் இந்தளவு எண்ணிகையிலான அகதிகள் அழைத்துவரப்பட்டதும் உடனுக்குடன் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதும் இதுவே முதல் தடவையாகும். நேற்றுமாலை முதல் தொகுதியாக 2,400 பேரும், இரண்டாவது தொகுதியாக 1,100பேரும் 43 பஸ்களில் அழைத்துவரப்பட்டு சாவகச்சேரி சிவன்கோவில் வீதியில் உள்ள தென்மராட்சி கலைமன்ற கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டனர். சாவகச்சேரி, கோப்பாய், சண்டிலிப்பாய், நல்லூர், தெல்லிப்பழை ஆகிய பிரதேச செயலகங்களைச் சேர்ந்தவர்களே வவுனியா அகதிமுகாம்களில் நலன்புரி நிலையங்களில் இருந்து நேற்று அழைத்து வரப்பட்டனர். தென்மராட்சிக் கலைமன்ற கட்டடத்தில் வைத்து சகலரையும் படையினர் பதிவுசெய்து, படம்பிடித்த பின்னர் பிரதேச செயலர்களிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
பிரதேச செயலர்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் உடனடிச் செலவுக்காக 5 ஆயிரம் ரூபாவை வழங்கினார். பிரதேச செயலர்களிடம் ஒப்படைக்கப் பட்டவர்களை பஸ்கள் மூலம் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பும் பணிகளை நள்ளிரவு வரை அரசஅதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.
சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். அரச அதிபர் கே.கணேஸ், செயலக திட்டப்பணிப்பாளர் ம.பிரதீபன் ஆகியோர் அங்கு பிரசன்னமாகி இருந்தனர். அழைத்துவரப்பட்ட மக்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பும் பணிகளை அவர்கள் மேற்கொண்டிருந்தனர். இதேவேளை சுமார் 15,000 மக்கள் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்துக்கு வருவதற்கு விடுவிக்கப்பட்டு ஆயத்தமாக உள்ளனர் என்றும் இன்னும் நான்கு ஐந்து நாள்களில் இங்கு அழைத்து வரப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆயுள்வேத வைத்தியர் பேதுரு எட்வேட்
இயற்கை எய்தினார்
மட்டுவில் வடக்கு, வைத்தியசாலை வீதியைப் பிறப்பிடமாகவும் இல.16 இராசாவின் தோட்டம் ஒழுங்கை, யாழ்ப்பாணத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆயுள்வேத வைத்தியர் பேதுரு எட்வேட் நேற்று (11.10.2009) ஞாயிற்றுக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னாரின் பூதவுடல் இன்று (12.10.2009) திங்கட்கிழமை மு.ப. 10 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு புனித கொஞ்சேஞ்சி மாத சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் தென்மாராச்சியில் பொதுமகன் கொலை
[ திங்கட்கிழமை, 05 ஒக்ரோபர் 2009, TamilWin ]
யாழ்ப்பாணம் கொடிகாமம் ராமாவில் பகுதியில் ஊரடங்கு சட்டவேளையில் வீடு ஒன்றினுள் புகுந்த ஆயுதக்குழு பொதுமகன் ஒருவரின் தொண்டையை வெட்டி கொலை செய்துள்ளது. இந்தநிலையில் சடலத்தை மீட்ட கொடிகாமம் பொலிஸார் அதனை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் ராமாவி;ல் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வவுனியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகிலேயே இடம்பெற்றுள்ளது.
கொல்லப்பட்டவர்47 வயதான கந்தையா கருணாகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தக்கொலைக்கு கொள்ளை சம்பவமே காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தடுப்பு முகாமில் இருந்து பல்கலைக்கழகம் செல்ல அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் பலர் தொடர்ந்தும் படையினர் விசாரணையில்
[செவ்வாய்க்கிழமை, 29 செப்ரெம்பர் 2009, புதினம்]
வவுனியா தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களில் சிலர் யாழ். பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகளுக்கு செல்ல அனுமதிப்பதாக தெரிவித்த சிறிலங்காப் படையினர் அவர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைத்த போதிலும், தொடர்ந்தும் அவர்கள் கைதடியில் உள்ள முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா தடுப்பு முகாம்கிளில் இருந்து 30-க்கும் அதிகமான மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டபோதும் அவர்களில் பலர் இன்னும் கைதடியில் தடுத்து வைக்ப்பட்டுள்ளதுடன் கற்றல் செயற்பாட்டில் இணைவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதே நேரம் மருத்துவ பீடம் மற்றும் இராமநாதன் நுண்கலைப் பீடம் முகாமைத்துவ பீடம் ஆகியவற்றில் கற்றல் செயற்பாட்டில் இணைந்து கொள்ள அனுமதிக்கப்பட்டஒரு சில மாணவர்களும் விசாரணைகள் என தொடர்ந்து படை முகாம்களுக்கு அழைக்கப்பட்டு வருவதாகவும் இதனால் அவர்கள் மிகுந்த அச்சத்துடனும் கற்றலுக்குரிய மனநிலை அற்ற நிலையிலும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே அனைத்து விசாரணைகளும் முடிவுற்ற நிலையில் தாம் அவர்கள் முகாம்களை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவின்றார்கள் என படையினர் தெரிவித்து வந்து போதும் இவ்வாறு நடந்து கொள்வது மாணவர்களை அச்சுறுத்தவே என பெற்றோர் தரப்பில் இருந்து கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளையில் முகமாலைப் பகுதியில் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதலை அடுத்து ஏ-9 நெடுஞ்சாலை மூடப்பட்டபோது தமது கற்றல் செயற்பாடுகளில் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து கொண்டிருந்த தற்போது தடுப்பு முகாமில் உள்ள வன்னி மாணவர்கள் எவரும் இதுவரை பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடர அனுமதிக்கப்படவில்லை எனவும் அதற்கு என்ன காரணம் என தெரியவில்லை எனவும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
யாழ். கொடிகாமத்தில் பொலிஸார் துப்பாக்கி சூடு: பொதுமகன் படுகாயம்
[ புதன்கிழமை, 23 செப்ரெம்பர் 2009, 03:39.23 TamilWin]
யாழ்ப்பாணம் தென்மாராட்சி கொடிகாமத்தில் உள்ள கச்சாய், பாலாவி என்ற இடத்தில் அமைந்துள்ள சோதனை சாவடியில் இருந்து இன்று பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொதுமகன் ஒருவர் படுகாயமடைந்தார்.
பொலிஸ் தரப்பு தகவலின்படி உழவுயந்திரத்தில் பயணித்த குறித்த நபர்,உழவு இயந்திரத்தை நிறுத்த கூறியபோது தப்பியோடியதாகவும் இதன் போதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர் முதலில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவரின் நிலைமை கவலைக்கிடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர் கொடிகாமத்தை சேர்ந்த 29 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான சின்னராசா சுதர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அண்மையிலேயே வன்னியில் இருந்து வந்து விடுவிக்கப்பட்டு மீளககுடியமர்ந்தவராவார்.

வவுனியாவில் இருந்து அழைத்து வரப்பட்டோர் தொடர்ந்து கைதடியில்
2009-09-13 04:12:12
வவுனியா நலன்புரி நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை ஏ9 பாதையூடாக பஸ் களில் அழைத்துவரப்பட்டுள்ள 568 பேரும் கைதடி சித்த ஆயுள்வேத வளாக விடுதி யில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகா மில் தொடர்ந்து
வவுனியா நலன்புரி நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை ஏ9 பாதையூடாக பஸ் களில் அழைத்துவரப்பட்டுள்ள 568 பேரும் கைதடி சித்த ஆயுள்வேத வளாக விடுதி யில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகா மில் தொடர்ந்து தங்கவைக்கப்பட்டுள்ளனர்.ஏற்கனவே வவுனியா நலன்புரிநிலை யங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட
பொதுமக்கள் மற்றும் மதகுருமார் குடும் பங்கள் உடனடியாகவே அவர்களது உற வினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.ஆனால் நேற்றுமுன்தினம் அழைத்து வரப்பட்டவர்கள் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஓரிரு தினங்களின் பின்பே விடுவிக்கப் படுவார்கள் என்று செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.செயலகத்தின் ஏற்பாட்டில் உணவு, சுகாதார மற்றும் வசதிகள் அவர்களுக்கு செய்யப்பட்டுள்ளன.
வவுனியாவிலிருந்து ஒன்பது பஸ்களில் 568 பேர் நேற்றிரவு கைதடி விடுதி வந்து சேர்ந்தனர்

2009-09-12 03:44:07 உதயன்
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள அகதிமுகாம்களில் தங்கியுள்ளவர்களில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 568 பேர் நேற்று ஏ9 பாதை ஊடாக ஒன்பது பஸ்களில் இங்கு அழைத்து வரப்பட்டனர்.

யாழ்.மாவட்டத்தில் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் உள்ள அகதிமுகாம்களில் தங்கியுள்ளவர்களில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 568 பேர் நேற்று ஏ9 பாதையூடாக ஒன்பது பஸ்களில் இங்கு அழைத்து வரப்பட்டனர்.
யாழ்.மாவட்டத்தில் முதற்கட்டமாக மீள்குடியமர்த்து வதற்காக இனங்காணப் பட்ட 6,833 பேரில் 568 பேர் அழைத்து வரப்பட்டு கைதடி சித்த ஆயுள்வேத வளாக விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஒன்பது பஸ்களில் நேற்றிரவு 7.30 மணியளவில் கைதடிக்கு வந்து சேர்ந்த மக்களை அரச அதிபர் கே.கணேஷ் பார்வையிட்டு அவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
பிரதேச செயலக ரீதியாக அவர்கள் பிரதேச செயலர்கள் ஊடாக மீள்குடியமர்த்தப் பட உள்ளனர்.
ஏனையோர் படிப்படியாக வவுனியாவில் இருந்து அழைத்து வரப்பட்டு மீள் குடியமர்த்தப்பட இருக்கின்றனர் என்று அரச அதிபர் தெரிவித்தார்.