புனரமைக்கப்பட்ட கைதடி ஆயுள்வேத வைத்தியசாலையை திறந்து வைக்க அமைச்சர் திஸ்ஸ கரலியத்த யாழ். வருகிறார் 2009-12-02Uthayan
நடமாடும் சேவையையும் அவர் ஆரம்பித்து வைப்பார்
வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் கைதடி, ஆயுள்வேத சித்த போதனா வைத்தியசாலையின் அபிவிருத்தி வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
வைத்தியசாலையைத் திறந்து வைப்பதற்கும் ஆயுள்வேத திணைக்களத்தின் நடமாடும் சேவையைத் தொடங்கி வைப்பதற்காகவும் சுதேச வைத்திய அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, ஆணையாளர் திருமதி றமணி குணவர்த்தன அடங்கிய குழு வொன்று நாளை மறுதினம் யாழ்ப்பாணம் வருகை தரவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முற்பகல் 9,30 மணிக்கும், 5 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9 மணிக்கும் கைதடி, ஆயுள்வேத வைத்தியசாலையில் நடை பெறும் ஆயுள்வேத திணைக்களத்தின் நடமாடும் சேவையில் யாழ். மாவட்டத்தில் உள்ள அரச ஆயுள்வேத வைத்தியர்களின் சுயவிவரக் கோவையிலுள்ள குறைபாடு கள் ஆராய்ந்து நிவர்த்தி செய்யப்படும். அத்துடன், இத்தினங்களில் பரம்பரை வைத்தியர்களுக்கான பதிவுகளும் மேற் கொள்ளப்படும். மேலும் ஆயுள்வேத மருந்து உற்பத்தி நிலையங்கள் பதிவு செய்தலும் தரநிர்ணய சான்றிதழ் வழங்கலும் இந்த நடமாடும் சேவையில் இடம்பெறும்.
நாளை மறுதினம் முற்பகல் 10,30 மணிக்கு பாடசாலை மாணவர்களுக்கான மூலிகைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நெல்லியடி மத்திய மகாவித் தியாலயத்தில் நடைபெறும். இக்கருத்தரங் கில் வடமராட்சிப் பிரிவைச் சேர்ந்த 5 பாட சாலைகள் கலந்து கொள்ளும். பிற்பகல் 1,30 மணிக்கு அதே கருத்தரங்கு சுன்னா கம், இராமநாதன் கல்லூரியில் இடம் பெறும். இதில் வலிகாமம் பிரிவைச் சேர்ந்த 5 பாடசாலைகள் கலந்துகொள்ளும். 5 ஆம் திகதி காலை 9 மணிக்கு லங்கா சித்த ஆயுள்வேதக் கல்லூரியில் மாணவர் களுக்கான விரிவுரை இடம்பெறும். அதே வேளை கைதடி, ஆயுள்வேத வைத்தியசா லையில் பரம்பரை வைத்தியர்களுக்கான விரிவுரையும், நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக் கான செயற்றிட்டமும் நடைபெறும்.
6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நயினாதீவு, நாகதீப விகாரை வளாகத்தில் இலவச வைத்திய சிகிச்சை நிலையமும் அதற்கான மருந்து வகைகள் வழங்கலும் அமைச்சர் திஸ்ஸ கரலியத் தவால் ஆரம்பித்து வைக்கப்படும். பிற்பகல் 1 மணிக்கு கைதடி, சித்த ஆயுள் வேத வைத்தியசாலை ஆம் 1, 2 ஆம் நோயா ளர் விடுதிகளும், பிரசவ விடுதியும், அம் புலன்ஸ் தரிப்பிடமும் அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவால் திறந்து வைக்கப்படும். இவற்றுடன் ஆம் 5, 6 ஆம் திகதிகளில் "எங்கள் வைத்திய இல்லம்" ஐந்தை அமைப் பதற்கான அடிக்கல் நாட்டு வைபவங்களும் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சங்கானை, தெல்லிப்பழை, தென்ம ராட்சி, கோப்பாய், வேலணை ஆகிய ஐந்து பிரதேச செயலர் பிரிவுகளிலும் ஒவ்வொரு இல்லங்கள் நிறுவப்படும். நாளை மறுதினம் முற்பகல் 10,30 மணிக்கு கைதடி, சித்த ஆயுள்வேத போதனா வைத்தியசாலைவளாகத்தில் "கொரியன்" அக்குபஞ்சர் சிகிச்சை நிலையமொன்றும் திறந்து வைக்கப்படவுள்ளது.
சாவகச்சேரிச் சந்தையில் திருடப்பட்ட பொருள்கள் படையினரால் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
உதயன் 2009-11-24 06:26:12
சாவகச்சேரி பொதுச் சந்தையில் திருடப்பட்ட பொருள்கள் பொலிஸார் மற்றும் படையினரின் கூட்டு முயற்சியின் பயனாக மீட்கப்பட்டன.
இச்சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது: கடந்த வெள்ளிக் கிழமை வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து அழைத்து வந்த பொதுமக்களை கொடிகாமம் இராமாவில் நலன்புரி நிலையத்தில் இறக்கிய பின்னர் பேரூந்துகள் இரவுத்தரிப்புக்காக சாவகச்சேரி பேரூந்து நிலையத்தில் தரித்து விடப்பட்டன. காலையில் சந்தைக்கு வந்த வியாபாரிகள் பலர் சந்தையில் தாம் முதல் நாள் வைத்து விட்டுச் சென்ற பல பொருள்கள் திருட்டுப் போனதைக் கண்டு நகர்ப் பகுதி படையினரின் புலனாய்வுத் துறையினரிடம் முறையிட்டனர். படையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சாவகச்சேரியிலிருந்து வவுனியா சென்ற பேரூந்துகளை தடுத்து வைத்திருக்குமாறு மிருசுவில் வாகன சோதனை முகாமுக்கு அறிவித்தனர்.
கொடிகாமம் பொலிசாருடன் மிருசுவிலுக்குச் சென்ற படையினர் அங்கு நின்ற வானங்களைச் சோதனையிட்ட போது சந்தையில் திருட்டுப் போனதாகக் கருதப்படும் பொருள்கள் சில பேரூந்துகளில் இருப்பதைக் கண்டுபிடித்து பொருள்களுடன் பேரூந்துகளை சாவகச்சேரிக்கு அழைத்து வந்தனர். திருட்டுப்போன வாழைக்குலைகள், அப்பிள், மாம்பழம், விளாம்பழம், பனங்கட்டிக் குட்டான்கள், வெற்றிலை பாக்கு உட்பட சுமார் 10 ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியான பொருள்கள் பேரூந்துகளிலிருந்து இறக்கப்பட்டு சந்தைக்கு கொண்டு வரப்பட்டன. திருட்டுப்போன பொருள்கள் மீட்கப்பட்டமை குறித்து சந்தை வியாபாரிகளும் பொது மக்களும் படையினருக்கும் பொலிசாருக்கும் பாராட்டுத் தெரிவித்தனர். மீட்கப்பட்ட பொருள்கள் உரிய வியாபாரிகளால் அடையாளம் காட்டப்பட்ட தையடுத்து அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டன. வவுனியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தனியார் பேரூந்துகளிலேயே பொருள்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.