




















வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி
[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-06-08 07:28:48| யாழ்ப்பாணம்]
வரணி சுட்டிபுர அம்பாள் ஆலய வருடாந்த திருவிழாவின் 11ஆவது உற்சவ இரவு நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு அதிகாலை 3.30 மணியளவில்,வீடு திரும்பிய வேளை வரணி கரம்பன் குறிச்சியைச் சேர்ந்த இரத் தினம் கோகிலன் (வயது 19) என்ற இளை ஞன் மீது 15 பேர் கொண்ட குழுவினர் கடுமையாகத்தாக்கியுள்ளனர். இவ் இளைஞனை வாளால் வெட்டி கடுமையாகத் தாக்கிய அவர்கள் சிறிது நேரத்தில் தப்பிச் சென்று விட்டனர்.
தலையிலும் கையிலும் பலத்த வாள் வெட்டுக்கு இலக்காகிய இவ் இளைஞனுடன் சென்ற நண்பன் வீட்டாருக்கு தகவல் கொடுத்து இளைஞனை மீட்டு,மந்திகை ஆதார வைத் தியசாலையில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக ,கொடிகாமம் பொலிஸா ரிடம் முறைப்பாடு செய்த போது,முக்கிய சந் தேக நபர் ஒருவரை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.யாழ்ப்பாணப்பகுதிகளில் ஆலய இரவு நிகழ்வுகள் ஆரம்பித்த நிலையில் கோஷ்டி மோதல்களிலும் பகிடி வதைகளிலும் ஈடுபடும் நபர்களை தமக்கு அடையாளம் காட்டித்தருமாறு பொலிஸார் மக்களை கேட்டுள்ளனர்.(வலம்புரி)

சாவகச்சேரி, வவுனியா நீதிவான்கள் இருவரும் திங்கள் முதல் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம்
2010-06-16 உதயன்
யாழ்ப்பாணம், வவுனியா மாவட்ட நீதி மன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நீதிச் சேவை ஆணைக்குழுவால் இடமாற்றங் கள் வழங்கப்பட்டுள்ளன.
சாவகச்சேரி நீதிவானாகப் பணியாற் றும் ரி.ஜே. பிரபாகரன் அக்கரைப்பற்று நீதி மன்றத்துக்கும், வவுனியா நீதிவானாகப் பணியாற்றும் அலெக்ஸ்ராஜா கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்துக்கும் மாற்றப் பட்டுள்ளனர். சாவகச்சேரி நீதிமன்ற நீதிவானாக எஸ். அப்துல்லா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி மாணவன் கபிலநாத் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நீதிவான் ரி.ஜே. பிரபாகரன் முன் விசாரணை செய்யப்பட்டு வருவது தெரிந்ததே.






தனங்கிளப்பில் குண்டு வெடிப்பு குடும்பஸ்தர்கள் இருவர் பலி - மேலும் மூன்று பேர் படுகாயம்
[வலம்புரிச் செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-06-08 யாழ்ப்பாணம்]
தனங்கிளப்பு சுண்டிக்குளம் பிள்ளையார் ஆலய வீதியில் நேற்று மாலை 5.15 மணியளவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் குடும்பஸ்தர்கள் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.
தனங்கிளப்பைச் சேர்ந்தவர்களான தற்போது பண்டத்தரிப்பில் வசிக்கும் இரு பிள் ளைகளின் தந்தையான கனகசபை பிரகாஷ் (வயது-29), சாவகச்சேரியில் வசித்து வரும் மந்திகை வைத்தியசாலையில் ஊழியராகப் பணிபுரியும் இரு பிள்ளைகளின் தந்தை யான சுப்பிரமணியம் பொன்சேகர் (வயது-38) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்கள் ஆவர்.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, தனங்கிளப்புப் பகுதியில் மீளக்குடியமர் ந்த பகுதியில் மக்களின் நலனோன்புகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று காலை சுண்டிக்குளம் பிள்ளையார் ஆலயச் சூழலில் நடைபெறவிருந்தது.
இதனையடுத்து அப் பகுதி மக்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர். துப்புரவு செய்து சேகரிக்கப்பட்ட குப்பைகளை ஓரிடத்தில் குவித்து எரித்தபோது பெரும் சத்தத்துடன் குண்டு வெடித்துச் சிதறியது. இதன்போது பிரகாஷ் என்பவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இருவரினதும் உடல்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தின் போது நால்வர் காயமடைந் ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதில் அதேயிடத்தைச் சேர்ந்த தேவதாஸ் விவேகானந்தம் (வயது-52), விஜயரட்ணம் (வயது-63), ஐயம்பிள்ளை வன்னியசிங்கம் ஆகிய மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விஜயரட்ணம் என்பவர் மேலதிக சிகிச் சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுளார்





















வீரகேசரி24-5-2010



தினக்குரல்19.05.2010.














வீரகேசரி13.05.2010

வீரகேசரி12.05.2010










உதயன்07-05-2010.















குடாநாட்டில் மாணவர்களை கடத்தும் முயற்சி முறியடிப்பு
[ வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2010, Tamilwin ]
யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நேற்று வியாழக்கிழமையும் நேற்று முன்நாள் புதன்கிழமையும் பாடசாலைச் சிறுவர்களைக் கடத்திச் செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் கைகூடவில்லை. மாணவர்களை இலக்குவைத்து கடத்தல்களை மேற்கொள்ள முயல்வோரால் குடாநாட்டில் பெற்றோரும் மாணவர்களும் கல்விச் சமூகமும் பெரும் பீதியடைந்துள்ளது.
கடந்த வாரமும் இதுபோன்ற ஓரிரு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் தென்மராட்சியில் மீசாலை மற்றும் மட்டுவில் பகுதியில் நேற்று முன்நாளும் சுன்னாகத்தில் நேற்றுக் காலையும் பாடசாலை சிறுவர்களைக் கடத்தும் முயற்சிகள் இடம்பெற்றும் அவை கைகூடவில்லை.
சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் தரம் 7 ல் கல்விகற்கும் மீசாலை மேற்கைச் சேர்ந்த இரு மாணவிகள் பாடசாலைக்குப் புதன்கிழமை காலை நடந்து சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளொன்றில் வேகமாக வந்த இருவர் மோட்டார் சைக்கிளை அவ்விடத்தில் நிறுத்திவிட்டு அவ்விரு மாணவிகளையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்ல முற்பட்டபோது அவர்களிருவரும் அவர்களிடமிருந்து தப்பி அருகிலுள்ள வீட்டிற்குள் புகுந்து விட்டனர்.
இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அவ்விடத்திலிருந்து வேகமாகச் சென்று மறைந்து விட்டனர். அன்று மாலை 4.30 மணியளவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் மட்டுவிலைச் சேர்ந்த மாணவர்கள், பாடசாலையில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் மட்டுவில் மத்தியில் வைத்து இவர்களை வெள்ளை வானொன்றில் வந்தவர்கள் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர்.
கடத்தல்காரர்களுடன் மல்லுக்கட்டிய மாணவர்கள் அவலக்குரலெழுப்பவே அயலவர்கள் அவ்விடத்திற்கு வந்துள்ளனர். இதையடுத்து கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். இவர்களைக் கடத்த முயன்ற வானின் இலக்கத் தகடுகள் துணியொன்றால் மறைக்கப்பட்டிருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம், நேற்று வியாழக்கிழமை காலை 7 மணியளவில் சுன்னாகத்தில் தனியார் வகுப்பொன்றுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவனொருவனை வானொன்றில் வந்தவர்கள் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர். மாணவனின் அருகில் வான் வந்து நின்ற போது அவனின் கழுத்தைப்பிடித்து வானுக்குள் தள்ள முயற்சித்துள்ளனர். எனினும் அந்த மாணவச் சிறுவன் அவர்களை உதறித் தள்ளிவிட்டு தப்பியோடவே கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
பெருந்தொகை பணத்தைக் கோரி ஆட்களைக் கடத்தும் சம்பவங்கள் சில இடம்பெற்ற அதேநேரம், இந்தச் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி வதந்திகளும் காட்டுத் தீ போலப் பரவுவதால் குடாநாட்டு மக்கள் கலங்கிப் போயுள்ளனர்.
கடந்த காலங்களில் யுத்தம் தீவிரமாக நடைபெற்ற நேரத்தில் இடம்பெற்ற மிக மோசமான சம்பவங்கள் மக்கள் மனங்களில் நிழலாடுவதால் குடாநாட்டு மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ள அதேநேரம், இவ்வாறான சம்பவங்கள் குறித்து தாங்கள் மிகவும் விழிப்புடனிருப்பதாக படைத்தரப்பும் தெரிவித்துள்ளது.





















மனுஷன் புலத்தில் 256 வீடுகள்;
முதல் வீடு நேற்று கையளிப்பு
(தினகரன் 19-4-2010)
சுவிஸ் நாட்டின் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்புக்குமான முகவர் அமைப்பின் நிதியுதவியுடன் யாழ். மறவன் புலத்தில் அமைக்கப்பட்டு வரும் வீடமைப்பு திட்டத்தின் முதல் கட்டி முடிக்கப்பட்ட வீட்டை உரிமையாளருக்கு கையளிக்கும் வைபவம் நேற்று இடம்பெற்றது.
அமைப்பின் பிரமுகரான மாட்டின் ஸ்ரீயூடர் புதிய வீட்டின் வாயிலை சம்பிரதாய முறைப்படி நாடாவெட்டி திறந்து வைத்து உரிமையாளரிடம் கையளித்துள்ளார்.
மேற்படி சுவிஸ் நாட்டின் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்புக்குமான முகவர் நிலையமானது சாவகச்சேரி பிரிவில் உள்ள மறவன்புல கிராமத்தில் 256 வீடுகளை கட்டிவருகிறது.


















