

பட்டப்பகலில் வீடு புகுந்த கொள்ளையர் ஆயுதமுனையில் நகைகள், பணம் சூறை மட்டுவில் தெற்கில் சம்பவம்

யாழ்ப்பாணம்,செப்,30
வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை ஆயுத முனையில் அச்சுறுத்தி பல இலட்சம் ரூபா பெறு மதியான நகைகள் கொள்ளை யிடப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் மட்டுவில் தெற்கில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
கணவன் வெளியில் சென்ற வேளை வீட்டினுள் நுளைந்த இனந்தெரியாத இருவர் ஆயுத முனையில் தனிமையில் இருந்த பெண்னை அச்சுறுத்தி நகை களை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
நீளக் காட்சட்டை அணிந்தி ருந்த அவர்கள் மேட்டார் சைக்கிளில் வந்தனர் என்றும் மேலும் துப்பாக்கி யைக் காட்டிப் பயமுறுத்தியே நகைகளைக் கொள்ளையடித்த னர். என்றும் தெரிவிக்கப்பட்டது.
தாங்கள் படையினர் என்றும் வீட்டைச் சோதனையிட வேண்டும் என அவர்கள் அந்தப் பெண்ணை அச்சுறுத்தினர் என்றும் கூறப்பட் டது.
தாலிக்கொடி மற்றும் ஒருலட் சத்துக்கும் மேற்பட்ட பணமும் கொள்ளையிடப்பட்டதாக சாவகச் சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக சாவகச் சேரிப் பொலிஸார் மேலதிக விசா ரனைகளை மேற்கொண்டு வரு கின்றனர். (Uthayan)





வீரகேசரி














சாவகச்சேரியில், மரத்தில் கயிற்றில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் மீட்பு
[ செவ்வாய்க்கிழமை, 14 செப்ரெம்பர் 2010, 02:25.53 AM GMT +05:30Tamilwin ]
சாவகச்சேரி, தச்சன்தோப்புப் பகுதியில் மரம் ஒன்றில் கயிற்றில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் காணப்பட்டது. இவரது சடலத்தை சாவகச்சேரி பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலத்தைப் பொலிஸார் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்.
இதே இடத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தனுஷா (வயது 19) என்னும் யுவதியே இறந்தவராவார்.
இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் குறித்து தற்கொலையா அல்லது கொலையா என்பது பற்றி பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர். என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.










பஸ்ஸின் மிதி பலகையில் பயணித்த குடும்பஸ்தர் தடக்கி விழுந்து உயிரிழப்பு
[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-06 07:19:58| யாழ்ப்பாணம்/ வலம்புரி]
யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸின் மிதிபலகையில் நின்று பயணித்துக் கொண் டிருந்த பயணி ஒருவர் கால் தடக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நுணாவில் மேற்கு சாவகச்சேரியைச் சேர்ந்த நமசிவாயம் இராசரட்ணம் (வயது-58) என்பவரே உயிரிழந்தவர் ஆவார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றது. நுணாவில் அறவெளி சனசமூக நிலையத் திற்கு முன் குறித்த பஸ்ஸில் பயணித்த மற்று மொரு பயணி இறங்கிய பின் குறித்த நபர் மீண்டும் பஸ்ஸில் ஏறுகையிலேயே கால் தடக்கி விழுந்து படுகாயமடைந்தார்.
அவர் தலையில் காயமடைந்த நிலையில் சாவகச்சேரிவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. பஸ்ஸின் சாரதி பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள் ளார்
|


என்ன செய்ய முடியும்? இப்படியும் திருடுகிறார்கள்
[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-01 07:28:46| யாழ்ப்பாணம் வலம்புரி]
தம்மைப் புலனாய்வுத்துறையினர் எனத் தெரிவித்து தங்க நகைகள் தொடர்பாக விசா ரணை செய்ய வேண்டும் எனவும் அதற்கா கப் பொலிஸ் நிலையத்திற்கு நகைகளுடன் வருமாறு கூறி குடும்பஸ்தர் ஒருவரை அழைத்துச் சென்ற சிலர் அவர் வைத்திருந்த நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று மாலை 3 மணியளவில் சாவகச்சேரி வர்த்தக வங்கி ஒழுங்கை யில் உள்ள தனங்கிளப்பு விவசாய சம்மேள னத் தலைவரான விவாகப்பெருமாள் சதானந்தன் என்பவரின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரிய வருவதாவது, மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் தம் மைப் புலனாய்வுத் துறையினர் எனத் தெரி வித்து பிரஸ்தாப நபரிடம் களவாடப்பட்ட தங்க நகைகள் இருப்பதாகவும் அது குறித்து விசாரிக்கத் தங்க நகைகளுடன் வருமாறு கூறி அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.அழைத்துச் செல்லப்பட்ட சதானந்தனை கல்வயல் துர்க்கையம்மன் ஆலயப் பகுதியில் இறக்கி அவர் வைத்திருந்த நகைகளை அழைத்துச் சென்ற நபர்கள் பறித்துக் கொண்டு சென்றுள்ளனர்.
12 பவுண் பெறுமதியான தாலிக்கொடி, 2 பவுண் காப்பு எனப் 14 பவுண்கள் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்திலும் சிவில் அலுவலகத் திலும் முறையிடப்பட்டுள்ள
|






கொலைக் குற்றவாளி ஒருவருக்கு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பு - யாழ். மேல் நீதிமன்றம் விதித்தது
[வலம்புரி: 2010-08-26 07:34:27| யாழ்ப்பாணம்]
மீசாலை வடக்குப்பகுதியில் கடந்த 1999 ஆம் ஆண்டு பெண் ஒருவரை கடத்தி கொலை செய்த குற்றத்துக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கடந்த 08.02.1999ஆம் ஆண்டு மீசாலை வடக்கு கொடிகாமத்தைச் சேர்ந்த பிரிய தர்சினி என்ற பெண்ணை கடத்தி அவரின் ஆயிரத்து 825 ரூபாய் உடைமையை கொள்ளையடித்தமை, அவரைக் கொலை செய்தமை போன்ற குற்றத்துக்காக அதேஇடத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் 2007ஆம் ஆண்டு இவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக் களத்தின் ஊடாக யாழ்.மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.இந் நிலையில் இவ் வழக்கு கடந்த 19 ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்றத்தில் நடை பெற்ற போது நீதவான் க.பரமராஜா இத்தீர்ப்பினை வழங்கினார்.
கடத்தி உடைமைகளை கொள்ளையடித்தமைக்காக பத்துவருட சிறைத்தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் பிணைப்பணமும் வழங்க வேண்டும் எனவும் தவறினால் மேலும் இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் கொலைக்குற்றத்துக்காக மரணதண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.





















துப்புரவு செய்யப்படாத காணிகள் நகரசபைக்குச் சொந்தமாகிவிடும் - சாவகச்சேரி நகரசபைச் செயலர் அறிவிப்பு
[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-06 07:49:37| யாழ்ப்பாணம்]வலம்புரி
சாவகச்சேரி நகரசபை எல் லைக்குட்பட்ட பிரதேசத்தில் டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் துப்புரவு செய்யப்படாமல் காணப்படும் வெற்றுக் காணிகள் எதிர்வரும் 20 ஆம் திகதிக்குப் பின்னர் நகரசபைக்குச் சொந்தமானதாகப் பொறுப் பேற்கப்படவுள்ளது என்று நகர சபைச் செயலாளர் செல்வி வி .சிவக்கொழுந்து தெரிவித் துள்ளார்.
டெங்கு ஒழிப் புத் திட்டத்தின் கீழ் சாவகச்சேரியில் துப்புரவுப் பணிகள் இடம்பெற்று வரு கின்ற நிலையில் ஒருசில ஆட்க ளற்ற காணிகள் இதுவரை துப்புரவு செய்யப்படாமையால் அவை பற்றை கள் வளர்ந்து காணப்படுகின்றன.இக் காணிகளின் உரிமையாளர்கள் அல்லது பாதுகாவலர்கள் உரிய காணிகளை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் துப்புரவு செய் தல் வேண்டும். இல்லையேல் நகர சபை அந்தத் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதுடன் காணியைச் சபைக்குச் சொந்தமானதாக எடுத்துக் கொள்ளும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.








தர்சிகாவின் சடலம் அடக்கம் செய்த ஊற்றல் மயானத்திற்கு பொலிஸ் காவல்உதயன்
|




கள் அருந்திய குடும்பஸ்தர் மரணம் மேலும் ஆறு பேர் மயக்கமுற்றனர்! - தென்மராட்சியில் நேற்றிரவு சம்பவம்
வலம்புரி[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-07-20 07:49:40| யாழ்ப்பாணம்]
தென்மராட்சிப் பகுதியிலுள்ள தவறணை ஒன்றில் கள் அருந்திய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஆறுபேர் மயக்கமுற்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதா வது,
தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியில் உள்ள தவறணை ஒன்றில் நேற்றிரவு கள் அருந்திய ஒருவர் மயக்கமடைந்தார். அவரை உடனடியாக யாழ்.போதனா வைத் தியசாலைக்கு எடுத்து வரும் வழியில் அவர் உயிரிழந்ததார். நுணாவில் சாவகச்சேரியைச் சேர்ந்த சின்னையா செல்வராசா (வயது-50) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.
இதனையடுத்து அங்கு கள் அருந்திய சிலர் தொடர்ச்சியாக மயக்கமடைய அவர்க ளும் உடனடியாக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு எடுத்து வரப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு நேற்று நள்ளிரவு வரை ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். நுணாவில் கிழக்கைச் சேர்ந்த எஸ்.வெள் ளைச்சாமி (வயது-32), சாவகச்சேரியைச் சேர்ந்த ப.சுப்பிரமணியம் (வயது-58), சிவன் கோவிலடி, சாவகச்சேரியைச் சேர்ந்தவர்க ளான மு.கந்தையா (வயது-56),
எம்.கிருஷ்ணகுமார் (வயது-37), எம்.சிவ குமார் (வயது-40) மற்றும் கல்வயலைச் சேர்ந்த எஸ்.ஜேசுதாஸ் (வயது-35) ஆகியோ ரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள் நஞ்சானதாலேயே இச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன







| கபில்நாத் கொலை வழக்கு மூவரை விடுவிக்க உத்தரவு |
| [ செவ்வாய்க்கிழமை, 13 யூலை 2010, 02:28.25 AM GMT +05:30Tamilwin.com ] |
சாவகச்சேரி கபில்நாத் என்ற மாணவனின் கொலை வழக்கின் முதலாவது சந்தேகநபரான ஜீவன் என்பவரது தாயார் குமாரசிங்கம் திருப்பதியம்மா, அவரது சகோதரி குமாரசிங்கம் குகன்யா மற்றும் ஆசிரியரான க.தயாராஜ் ஆகிய மூவரையும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலாவது சந்தேகநபர் தேடப்பட்டு வரும் நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்களையும், ஆசிரியரையும் சாவகச்சேரி நீதிவான் ஏ.எம்.எம். றியால் நேற்று இவ்வழக்கில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கின் அடுத்த தவணை இம்மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது. சாவகச்சேரியில் கபில்நாத் என்ற மாணவன் கடத்தி பின்னர் கொலை செய்யப்பட் ட சம்பவம் தொடர்பில் தென்மராட்சி ஈ.பி.டி.பி. அமைப்பாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் குறித்த படுகொலை வழக்கை இதுவரை காலமும் நடாத்திவந்த சாவகச்சேரி நீதிவான் ரி.ஜே. பிரபாகரன் அவர்களை அரசாங்கம் திடீர் இடமாற்றம் செய்த நிலையில், தடுத்து வைத்திருந்த மூவரை விடுவிக்க உத்தரவிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. |
தென்மராட்சிப் பிரதேசத்தில் முதலாவதாக ஸ்தாபிக்கப்பட்ட பெருமையுடன் 150 வருடங்களுக்கு மேலாக பெயர் பெற்ற கல்விமான்களை உருவாக்கிய மட்டுவில் வடக்கு சந்திர மௌலீச வித்தியாலயம் பற்றித்தருவது சாலவும் பொருத்தமானதாகும்.

மட்டுவில் கிராமமானது உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளை, பண்டிதமணி சி.கண்பதிப்பிள்ளை, கவிஞர் மகாலிங்க சிவம், யோச் செல்லப்பா, ஆசிரியமணி வே. சுப்பையா வாத்தியார், புராணபடன மேதை சங்கரப்பிள்ளை போன்றோர் வாழ்ந்த பூமியாகும்.
தென்மராட்சி பிரதேசத்தில் பாடசாலைகள் உருவாக்கப்படாத காரணத்தால் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் கூட்டாக நடந்து சென்று ஏனைய பிரதேச பாடசாலைகளில் கல்வி கற்றனர்.
திண்ணைக்கல்வி இருந்த காலத்தில் பாடசாலை அமைக்கவேண்டும் என்ற ஒரே நோக்குடன் கதிரேசன் காசிநாதர் என்பவர் பங்குக் காணியில் தனக்குரிய 1 1/4 பரப்புக் காணியில் ஓலைக் கொட்டிலை அமைத்து சைவப்பிரகாச வித்தியாசாலை எனப்பெயரிட்டு பிரதேசத்தில் முதன் முதலாக பாடசாலைக் கல்வியை ஆரம்பித்து வைத்தார். அக்காலக் கல்விமான்களில் ஒருவரான ம.க.வேற்பிள்ளையைத் தலைமை ஆசிரியராக்கொண்டு இப்பாடசாலை இயங்க ஆரம்பித்தது.
தலைமை ஆசிரியராகக் கடமையாற்றிய உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளை தென்னிந்தியா - சிதம்பரத்தில் உள்ள நாவலர் பாடசாலைக்கு தலைமை ஆசிரியராகச் சென்றுவிட்ட காரணத்தாலும் ஸ்தாபகர் க.காசிநாதர் காலமாகிவிட்டதாலும் தொடர்ந்து பாடசாலையை இயக்க முடியாமல் ஸ்தாபகரின் பின் உரித்தாளர்கள் திணறினார்கள்.
அவ்வேளையில் மிஷனரியினர் கிராமங்கள்தோறும் மதப்பிரசாரம் மேற்கொண்டிருந்த வேளையில் இப்பாடசாலையின் நிலையறிந்து ஸ்தாபகர்களின் பின் உரித்தாளர்களுடன் தொடர்பு கொண்டு, பாடசாலை மிஷனரியினால் பொறுப்பேற்கப்பட்டு அமெரிக்க மிஷன் பாடசாலையாக மாற்றப்பட்டு இயங்கத் தொடங்கியது.
தொடர்ந்து 35 வருடங்கள் மிஷனரியினரின் வசம் இருந்த இப்பாடசாலையை ஜோச் செல்லப்பா எனப்படும் நா.செல்லப்பா அவர்களின் கடும் முயற்சியின் பலனாக பாடசாலை மீளப்பெறப்பட்டு 1924 ஆம் ஆண்டு பாடசாலையின் தற்போதைய பெயரான சந்திர மௌலீச வித்தியாசாலை என்னும் பெயருடன் இயங்க ஆரம்பித்தது.
மட்டுவில் சைவப்பிரகாச வித்தியாலயம் ஆரம்ப காலம் தொடக்கம் 1906 ஆம் ஆண்டு வரை உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளை அவர்கள் தலைமை ஆசிரியராக் கடமை ஆற்றினார். அமெரிக்க மிஷன் பாடசாலையாக மாறிய பின்னர் தம்பையா உபாத்தியாயர், பூதத்தம்பி உபாத்தியாயர், வேலுப்பிள்ளை உபாத்தியாயர், சின்னத்தம்பி உபாத்தியாயர், கந்தையா உபாத்தியாயர் ஆகியோர் தலைமை ஆசிரியர்களாகக் கடமை ஆற்றினர்.
சந்திர மௌலீச வித்தியாலயம் என்ற பெயருடன் சைவ வித்தியா விருத்திச் சங்கத்தினர் பாடசாலையைப் பொறுப்பேற்ற பின்னர் ந.கந்தசாமி ஐயா உபாத்தியாயர், முருகேசு உபாத்தியாயர், ஆ.கி. இளையதம்பி, க.நமசிவாயம், விஸ்வலிங்கம் , சுப்பிரமணியம், தம்பாப்பிள்ளை, சிவக்கொழுந்து, சு. விஸ்வலிங்கம், பொன்னையா, க. சுப்பிரமணியம் ஆகியோர் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றினர்.
1962 ஆம் ஆண்டு இவ்வித்தியாலயம் அரசினால் பொறுப்பேற்கப்பட்ட பின்னர் வித்தியாலயத்தின் முதலாவது அதிபராக மு.சுப்பிரமணியம் பொறுப்பேற்றார். இவரின் பின்னர் சிதம்பரப்பிள்ளை, எஸ். பொன்னையா, எஸ். படைவீரசிங்கம், அ.குமாரவேலு, ஆ.நடராசா, ஈ.இராசசேகரம், வே.சண்முகராசா, செ.சிவசோதி, செ.சிவஞானம், க.ஜெயக்குமார் ஆகியோர் அதிபர்களாக அணிசேர்ந்தனர்.
ஆரம்பத்தில் சுண்ணாம்புக் கற்கட்டடத்தில் இயங்கிய பாடசாலை மாணவர் தொகைக்கேற்ப கட்டட வளங்களை பெற்றன, பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களால் பாடசாலையில் இடம்பெற்ற பரிசில் நாள் நிகழ்வில் சே.பொன். இராமநாதன் அவர்களை பிரதமவிருந்தினராக அழைத்தார்.
ஸ்தாபகர் க.காசிநாதன் என்பவர் 1874 ஆம் ஆண்டு11/2பரப்புக்காணியையும் அவரது பேரனார் கந்தர் காசிநாதர் என்பவர் 1963 ஆம் ஆண்டு 41/2 பரப்புக்காணியையும் வித்தியாலயத்திற்கு தர்மசாசனமாக வழங்கினர். கந்தர் காசிநாதர் மேலும் 4 பரப்புக்காணியை குறைந்த விலையில் வித்தியாலயத்திற்கு வழங்கினார். இப்பகுதியில் மிகுதியாக இருந்த 3 3/4 பரப்புக்காணியை இவரது மகனான காசிநாதர் சிவஞான சுந்தரம் என்பவர் கடந்த 18.02.2010 இல் வழங்கினார்.
2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்த அனர்த்தங்களால் பாரிய பாதிப்பு ஏற்பட்டது. 2002 ஆம் ஆண்டு பாடசாலை பௌதீக வளங்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டது. 2002 ஆம் ஆண்டு மீளக்குடியமர்ந்த வேளையில் வலயக்கல்வி அலுவலகத்தினால் வழங்கப்பட்ட தற்காலிக கொட்டகையில் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. வலயத்தின் உதவியுடன் சேதமடைந்த கட்டடங்கள் புரனமைக்கப்பட்டன.
சுவிஸ் அபிவிருத்தி நிறுவனத்தினர் வித்தியாலய வளாகத்தில் 110 X 25 விஸ்தீரணம் கொண்ட இரு மாடிக் கட்டடம் அமைக்கப்பட்டது. இக்கட்டடத்தில் அதிபர் அலுவலகம், விஞ்ஞான ஆய்வு கூடம், ஆங்கில செயற்பாட்டறை, பொது அறை என்பவையும் மாடிக்கட்டிடம் பிரார்த்தனை மண்டபமாகவும் செயற்படுகிறது. பின்னர் வங்கியின் உதவியுடன் பொது நூலகம் , கணணி செயற்பாட்டு மையம் வகுப்பறைத் தொகுதிகளை உள்ளடக்கும் மாடிக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
நூலகத்திற்கான நூல்களை உலகவங்கி, யாழ்.பழ்கலைக்கழக சங்கம், நிக்கொட் நிறுவனம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் , அராலியூர் நா.சுந்தரம்பிள்ளை ஆகியோரின் நிதி உதவியுடன் புத்தகங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. பாடசாலையில் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை ஆற்றிய சேவையின் நிமித்தம் அன்னாரின் நினைவாக சிலை அமைக்கப்பட்டு கடந்த வருடம் திறந்து வைக்கப்பட்டது.
இவ்வித்தியாலயத்தில் தற்போது 17 ஆசிரியர்களும் 300 மாணவர்களும் உள்ளனர். தென்மராட்சிக் கல்வி வலயத்தில் சகல் பௌதீக வளங்களுடன் எதுவித தேவைகளுமின்றி இயங்கும் வித்தியாலயம் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.yarlmann.lk/head_view.asp?key_c=305





வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி
[வலம்புரி : 2010-06-08 07:28:48| யாழ்ப்பாணம்]
வரணி சுட்டிபுர அம்பாள் ஆலய வருடாந்த திருவிழாவின் 11ஆவது உற்சவ இரவு நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு அதிகாலை 3.30 மணியளவில்,வீடு திரும்பிய வேளை வரணி கரம்பன் குறிச்சியைச் சேர்ந்த இரத் தினம் கோகிலன் (வயது 19) என்ற இளை ஞன் மீது 15 பேர் கொண்ட குழுவினர் கடுமையாகத்தாக்கியுள்ளனர். இவ் இளைஞனை வாளால் வெட்டி கடுமையாகத் தாக்கிய அவர்கள் சிறிது நேரத்தில் தப்பிச் சென்று விட்டனர்.
தலையிலும் கையிலும் பலத்த வாள் வெட்டுக்கு இலக்காகிய இவ் இளைஞனுடன் சென்ற நண்பன் வீட்டாருக்கு தகவல் கொடுத்து இளைஞனை மீட்டு,மந்திகை ஆதார வைத் தியசாலையில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக ,கொடிகாமம் பொலிஸா ரிடம் முறைப்பாடு செய்த போது,முக்கிய சந் தேக நபர் ஒருவரை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.யாழ்ப்பாணப்பகுதிகளில் ஆலய இரவு நிகழ்வுகள் ஆரம்பித்த நிலையில் கோஷ்டி மோதல்களிலும் பகிடி வதைகளிலும் ஈடுபடும் நபர்களை தமக்கு அடையாளம் காட்டித்தருமாறு பொலிஸார் மக்களை கேட்டுள்ளனர்.



