






இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது:-
சம்பவத்தில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 38 வயதுடைய பெண் ஒருவர் கணவனைப் பிரிந்து, மீசாலை கிழக்கிலுள்ள உறவினர்களுடன் வசித்து வந்துள்ளார். நேற்று அவர்களது வீட்டுக்கு வேறு ஆட்களுடன் வானொன்றில் வந்த அப் பெண்ணின் கணவர் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். அவ் வேளையில் வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிடவே வாகனத்தில் வந்தவர்கள் மகனையும் தாயையும் இழுத்துச்சென்று வானில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து தப்பியதாக அயலவர்கள் தெரிவித்தனர்.
கடத்தல்காரர்கள் தம்மை யாரும் அடையாளம் காணாத வகையில் முகத்தை மறைத்திருந்தனர். மேலும் கடத்தலின் போது சம்பவ இடத்தில் நின்ற சிலர் கடத்தல்காரர்களால் சைக்கிள் செயின் மூலம் கடுமையாகத் தாக்கப்பட்டும் உள்ளனர்.
அயலவர்களின் தகவலையடுத்து பொலிஸாரும், படையினருமாக தேடுதல் நடிவடிக்கையில் இறங்கினர். சாவகச்சேரி புறநகர்ப் பகுதியில் சம்பந்தப்பட்ட வான் மடக்கிப் பிடிக்கப்பட்டு, வானினுள் இருந்த தந்தையும், வாகனச் சாரதியும் வேறொரு பெண்ணும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், வாகனத்துக்குள் இருந்து சம்பந்தப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டுள்ள போதும், கடத்தப்பட்ட பெண் காணாமற் போயிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் சுயாதீன செய்தி வட்டாரங்கள் எதுவும் இதனை உறுதிசெய்யவில்லை.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் தகவல் தருகையில், பரபரப்புக்குரிய சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை. இது வெள்ளைவான் கடத்தல் இல்லை. ஒரு தனிப்பட்ட குடும்பப் பிரச்சினை என்று தெரிவித்துள்ளனர்.
மீசாலை கிழக்கில் தாயும், மகனும் கடத்தப்பட்ட சம்பவம் கடத்தல் அல்ல என மறுத்துள்ள பொலிஸார் குடாநாட்டில் உள்ள பத்திரிகை நிறுவனங்கள் சிலவற்றிற்குச் சென்ற பொலிஸார் செய்திகளை திரிவுபடுத்த வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.
பிந்திய இணைப்பு
மீசாலை கிழக்கில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட குடும்பப்பெண் சடலமாக மீட்பு?
யாழ்ப்பாணம் மீசாலை கிழக்குப் பகுதியில் நேற்று வெள்ளை வானொன்றில் கடத்திச் செல்லப்பட்ட பெண் சாவகச்சேரி பெருங்குளம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மீசாலை கிழக்கில் கணவரைவிட்டு பிரிந்து, உறவினர்களுடன் வாழ்ந்து வந்த குகதாஸ் சாந்தினி என்பவரே இவ்வாறு கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளவராவார்.
இவரது கடத்தலுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் கணவரான குகதாஸ் நேற்று சாவகச்சேரியில் வைத்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை வானுடன் பொலிஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டிருந்தார்
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:
கனடாவில் இருந்து கடந்த மாத இறுதியில் சிறீலங்காவுக்கு வந்த கொலை செய்யப்பட்டவரின் கணவர் கொழும்பில் வெள்ளை நிற வான் ஒன்றை சாரதியுடன் வாடகைக்கு அமர்த்தியுள்ளார், பின்னர் வவுனியாவில் வேறு இருவரையும் அழைத்துக் கொண்டு மீசாலையிலுள்ள வீட்டுக்கு நேற்று வந்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதோடு, அங்கிருந்தவர்களை தடிகள் பொல்லுகள்ளால் தாக்கியுமுள்ளனர்.
அங்கிருந்தவர்கள் கூக்குரலிடவே வவுனியாவில் இருந்து வந்ததாகக் கூறப்படுபவர்கள் பிஸ்டலை பெண்ணின் மகனுடைய தலையில் வைத்து மிரட்டியதோடு அந்தப் பெண்ணையும், 8 வயதுடைய அவருடைய மகனையும் ஆயுத முனையில் இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றிச் சென்றனர் என்று அயலவர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தையறிந்து உடனடியாக படையினரின் உதவியுடன் செயலில் இறங்கிய பொலிஸார் சாவகச்சேரி புறநகர்ப் பகுதியில் சம்பந்தப்பட்ட வாகனத்தை மடக்கிப்பிடித்தனர். பிடிக்கப்பட்ட வேளை வானினுள் இருந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகன் மீட்கப்பட்ட போதிலும், கடத்தப்பட்ட பெண் வானினுள் இருக்கவில்லை. அவ் வேளையில் வானில் இருந்த கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரும், வாகனச் சாரதியும், வேறொரு பெண்ணும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பொலிஸார் வாகனத்தை மடக்கிப் பிடித்த வேளை, வவுனியாவில் இருந்து வந்ததாகக் கூறப்படும் ஆயுததாரிகளும் தலைமறைவாகி இருந்தனர். இவர்கள் இருவரையும் தேடி நேற்று மாலை முழுவதும் பொலிஸார் வலை விரித்திருந்தனர். அதே நேரம் காணாமற்போன சாந்தினியைத் தேடும் பணியையும் முடுக்கி விட்டிருந்தனர். ஆரம்பகட்ட விசாரணைகளின் போது சாந்தினியை ஒரு அடர்ந்த மரம் நிறைந்த பகுதியில் வானில் இருந்து கணவர் தள்ளி விட்டதாக மகன் கூறியதாகத் தெரியவந்திருந்தது.
இன்று காலை பெருங்குளம் பகுதியில் பெண் ஒருவருடைய சடலம் காணப்படுவதாகக் தகவல்கள் வெளியாகியிருந்ததைத் தொடர்ந்து கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-03-02 06:52:30| யாழ்ப்பாணம்]
பாடசாலை மாணவியை திருமணம் செய்யும் நோக்குடன் கடத்திய நபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
கொடிகாமம் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 10-ல் கல்விகற்றுவரும் மாணவி ஒருவரை திருமணம் செய்யும் நோக்குடன் கடத்திய நபரும் அவருக்கு உதவியவரும் கொடிகாமம் பொலிஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியபோது நீதவான் மாணிக்கவாசகம் கணேசராசா இவ்விரு நபர் களையும் தலா ஒரு லட்சம் ரூபாய் ஆட்பிணையிலும் 5 ஆயிரம் ரூபாய் பணப் பிணையிலும் செல்ல உத்தரவிட்டார்.

1.3.2011

கைதடியில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற ஹண்டர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் அந்த இடத்திலேயே மரணமான துயரச்சம்பவம் இடம்பெற்றது.
இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த கைதடி கிழக்கைச் சேர்ந்த மகேஸ்வரன் கஜதீபன் (வயது17) என்ற கைதடி விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவனே உயிரிழந்தவர் ஆவார்.கோப்பாய் வீதியில் தபாலகத்துக்கு முன்னால் இடம் பெற்ற இந்த விபத்து குறித்து தெரியவருவதாவது:கைதடி கிழக்கைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கைதடி வடக்கு வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் கைதடி கோப்பாய் வீதிக்கு வந்தவேளை கோப்பாய் பக்கமாக இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வாகனத்துடன் விபத்துக்குள்ளாகினர்.மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் சிறுகாயங்களுடன் தப்ப பின்னால் இருந்து வந்த கைதடி கிழக்கைச் சேர்ந்த மகேஸ்வரன் கஜதீபன் வாகனத்தின் சில்லுக்குள் அகப்பட்டு தலை பிளந்தநிலையில் அந்த இடத்திலேயே பலியானார்.
சம்பவத்தை அறிந்த கைதடிப் பிரதேசத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கானோர் அங்கு ஆத்திரத்துடன் நின்றதனையும் அவதாணிக்க முடிந்தது.நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டதுடன் நீதி விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்றும் பொலிஸாரிடம் கூறினார்.மரணமடைந்த இளைஞர் கடந்த டிசெம்பர் மாதம் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றியவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது
தாக்கப்பட்டுக் கொலையுண்ட ஒருவரின் சடலம் கொடிகாமத்தில் மீட்டகப்பட்டுள்ளது.

தி.ராஜ்
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனித்து வாழ்ந்து வந்த ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து வயதையுடைய வைத்தியலிங்கம் அமிர்தலிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது :
மரமணமடைந்த வைத்தியலிங்கம் அமிர்தலிங்கம் கொடிகாமம் பகுதியிலுள்ள வீடொன்றில் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பிரிந்து வாழந்து வந்துள்ளார். நேற்று அவரது வீட்டுக்கருகிலுள்ள உறவினர்கள் குறிப்பிட்ட நபரது வளவில் கிடங்கினுள் சடலமொன்றினைக் கண்டுள்ளனர். உடனடியாக கிராம சேவையாளருக்கும்,கொடிகாமம் காவற்றுறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது, காவற்றுறையின் பிரசன்னத்துடன் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் சேர்க்கபட்டது.
கொல்லப்பட்டவரின் தலையில் கல்லால் தாக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் கடும் காயமும், வலது காலில் மண்வெட்டியினால் வெட்டப்பட்ட காயமும், உடல் முழுவதும் அடிகாயங்களும் காணப்படுவதாகத் தெரிவித்துள்ள அவரது உறவினர்கள், பிரேத பரிசோதனையின் முடிவில் இதுவொரு படுகொலை என அறிய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கொடிகாமம் காவற்றுறை விசாரணைகளை மேற்கொண்டுள்ளன


இந்தச் சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியிலேயே நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரே இவர்களை கைதுசெய்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் தப்பியோடிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள வீதிவழியாக வந்துகொண்டிருந்த மேற்படி வெள்ளை வானை மறித்து சோதனையிட்ட பொலிஸார், அதில் பயணம் செய்த மேற்படி ஐவரையும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.
பொலிஸார் தம்மை நோக்கி வருவதைக் கண்ட அவர்களில் ஒருவர் வானிலிருந்து இறங்கி தப்பியோடிவிட்டதாகவும், அவரைத் தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
கொடிகாமம் பொதுச்சந்தையின் தேங்காய் விற்பனைப் பிரிவில் தரகு வியாபாரிகளின் அட்டகாசம் மேலோங்கி உள்ளதுடன் தனிப்பட்ட பாவனையாளர்கள் தமது தேவைக்கு வியாபாரிகளிடமிருந்தே அவற்றைக் கூடிய விலைக்கு கொள்வனவு செய்யும் துர்ப் பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரும் போதே இவர்கள் உரிய சாக்குப்பைகளைப் பறித்து தமது விருப்பில் அவற்றுக்கு விலையைப் பேசி எடுத்து விடுவதுடன் கூறிய விலைக்கும் குறைவாகவே பணத்தைக் கொடுக்கும் வியாபாரிகள் பலர் இங்கு செயற்படுகின்றனர். தற்சமயம் தேங்காய் விலை உச்சநிலையில் உள்ளதால் பாவனையாளர்களும் தேங்காய் விற்கவருபவர்களும் அவலநிலைக்கு தள்ளப்படுகின்றனர். இங்கிருந்தே வலிகாமம், யாழ்ப்பாணம், மற்றும் வடமராட்சிப் பகுதிகளுக்குத் தேங்காய்கள் பெரும் எண்ணிக்கையில் எடுத்துச் செல்லப்படுகின்றன. அதேசமயம் இங்கு 25 இற்கும் மேற்பட்ட நிரந்தர வியாபாரிகள் தேங்காய்களை வாங்கி அதே இடத்திலே விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் சாவகச்சேரி பிரதேசசபை, சாவகச்சேரி பொலிஸார் மற்றும் சந்தை குத்தகைதாரர்கள் ஒருங்கிணைந்து இந்த ஏகபோக வியாபாரிகளின் அடாவடித்தனத்தைத் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி பாவனையாளர்கள் தெரிவித்தனர்.
தென்மராட்சி மேற்குப் பிரதேசத்தில் இயந்திரம் மூலம் அறுவடை |
![]() தென்மராட்சிப் பிரதேசத்தில் தச்சன்தோப்பு தொடக்கம் தனங்களப்புவரையான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கைகள் விளைச்சல் அடைந்ததை அடுத்து நெல் அறுவடை இயந்திரம் மூலம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்தப் பிரதேசங்களில் இந்த முறை பெரும் எண்ணிக்கையானோர் நெற் செய்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.அதன்பயனாக விளைச்சலும் எதிர்பார்ப்பதைவிட அதிகமாகக் கிடைத்திருப்பதாகவும் ஆனால் அறுவடையை மேற்கொள்ள மனிதவலு போதாத நிலையில் இந்த நெல் அறுவடை இயந்திரம் கிடைத்திருப்பது ஓர் அரியவாய்ப்பு எனவும் விவசாயி ஒருவர் தெரிவித்தார்.இந்தமுறை நெல் அறுவடை இயந்திரம் மூலம் தமது வயல்களை அறுவடை செய்வதனையே பெரும்பாலான விவசாயிகள் விரும்புவதாகப் பலராலும் கருத்துத் தெரிவிக்கப்படுகின்றது. |

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார்[ சனிக்கிழமை, 05 பெப்ரவரி 2011, 07:20.26 AM GMT - Tamilwin]
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் நிலைமை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக சாவகச்சேரி மருத்துவமனை வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது.தற்போதைய நிலையில் அவரது ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலையும் மோசமடைந்துள்ளது.
பேசும் சக்தியை முற்றாக இழந்துள்ள அவர், யாரையும் அடையாளம் காண்பதிலும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளார். அதற்கு மேலாக தற்போது அவர் முற்றாக சுய நினைவை இழந்த நிலையில் காணப்படுகின்றார்.
அவரது கணவர் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை காலமானது தொடக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கமே அவரைப் பராமரித்து வருகின்றார்.


சாவகச்சேரி ஆஸ்பத்திரிக் கட்டடப் பணி இந்த வருட இறுதிக்குள் பூர்த்தியாகும் 
(Uthayan) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குத் தேவையான அனைத்துக் கட்டடங்களும் இந்தவருட இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படுவதுடன் அனைத்து ஆளணி வெற்றி டங்களும் நிரப்பப்படும்.இவ்வாறு யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.வைத்தியசாலை ஊழியர் நலன்புரி சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் உரையாற்றுகையில்:வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சத்திர சிகிச்சை மற்றும் பொது மருத்துவம் ஆகிய விடுதிகளும் வைத்திய அதிகாரிகளின் வசிப்பிடங்களும் பூர்த்தி செய்யப்பட்டதும் சத்திர சிகிச்சை அரங்கு, சவச்சாலை போன்றவை நிர்மாணிக்கப்படும்.வைத்தியசாலைக்கு விரைவில் குழந்தைகள் வைத்தியநிபுணர், பொதுமருத்துவ நிபுணர் ஆகியோரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.தாதியர் பற்றாக் குறையும் இவ்வருட இறுதிக்குள் நீக்கப்படும்.இந்த வைத்தியசாலையில் நவீனமுறையிலான சமையலறையும் சவச்சாலையும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றினை அமைப்பது தொடர்பான மாதிரி வரைபடங்களை வைத்தியசாலை நலன் விரும்பிகள், ஆர்வலர்கள், வடிவமைப்பாளர்கள் எமக்கு அனுப்பி வைப்பின் நவீன முறையில் அமைத்து கொடுக்கப்படும். என்றும் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் அவரது ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலையும் மோசமடைந்துள்ளது.
பேசும் சக்தியை முற்றாக இழந்துள்ள அவர், யாரையும் அடையாளம் காண்பதிலும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளார். அதற்கு மேலாக தற்போது அவர் முற்றாக சுய நினைவை இழந்த நிலையில் காணப்படுகின்றார்.
அவரது கணவர் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை காலமானது தொடக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கமே அவரைப் பராமரித்து வருகின்றார்.
|
|
சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் நிறுவுநர் நினைவு நாள் நிகழ்வு
சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் 2011 ஆம் ஆண்டு நிறுவுநர் நாள் நினைவு நிகழ்கள் எதிர்வரும் 05ஆம் திகதி சனிக்கிழமை காலை 9மணிக்கு கல்லூரியின் அருணாசலம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
கல்லூரி முதல்வர் அ. கயிலாயபிள்ளை தலைமையில் நடைபெறும். இந் நிகழ்வில் வடமாகாண கல்விப் பணிப்பாளர் ப. விக்கினேஸ்வரன் கலந்து கொள்ளவுள்ளார்.
நிறுவுனர் பேருரை யாழ். போதனா வைத்தியசாலை உள வைத்திய நிபுணர் வைத்தியர் கலாநிதி சா. சிவயோகன் வழங்கவுள்ளார்.
தாமேந்தரன் கல்லூரிச் சஞ்சிகை வெளியீட்டுரையை யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கி. விசாகரூபன் வழங்கவுள்ளார். ( 3

|
[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-29 07:19:19| யாழ்ப்பாணம்]
யுத்தம் முடிபடைந்த பின்பு யாழ். மாவட்டத்தில் முதல் தடவையாக நீதி மன்றக் கட்டிடம் ஒன்றும் நீதிபதியின் வாசஸ்தலத்திற்குமான அடிக்கல் நாட் டப்பட்டு உடனடியாக வேலைகள் தொடங் கப்படுவதையிட்டு நான் மகிழ்ச்சி அட கின்றேன் என சாவகச்சேரி நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா தெரிவித்தார். நீதிமன்றக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறியதாவது,
திருகோணமலை, மூதூர், வாழைச் சேனை, மட்டக்களப்பு, கல்முனை, வவு னியா ஆகிய நீதிமன்றங்களில் கட்டிடங் கள் அடிக்கல் நாட்டப்பட்டு திறந்துவைக் கப்பட்ட போது அந்தந்த நீதிமன்றங் களில் கடமையாற்றும் வாய்ப்பு எனக் குக் கிட்டியிருந்தது. இந்த வாய்ப்பு எல்லா நீதிபதிகளுக்கும் கிடைக்காத ஒன்று. வாழைச்சேனையைப் பொறுத்த மட் டில் சுற்றுலா நீதிமன்றம் கண்காணிப்பு உத்தியோகத்தர்களுடன் இருந்த பழைய கட்டிடம் ஒன்றில் நீதவானாகக் கடமை யாற்றவேண்டிய நிர்ப்பந்தம் ஒன்று என க்கு ஏற்பட்டிருந்தது.
அந்த நீதிமன்றத்தை இரண்டு வரு டத்திற்குள் மாவட்ட நீதிமன்றமாக்கி பதி வாளரிலிருந்து கீழ்நிலை உத்தியோ கத்தர் வரை நியமித்து புதிய கட்டிடம் ஒன்றையும் தனித்துநின்று ஸ்தாபித் தமை வடக்குக் கிழக்கில் வேறு எந்த ஒரு நீதிபதியாலும் செய்யப்படாத ஒன்றாகும்.
யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் முதன்முதலாக மேல் நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டபோது முதல் அரச சட்டத்தரணியாக சட்டமா அதிபரால் பிரதி நிதித்துவப்படுத்தியதை யாவரும் அறி வார்கள்.பிரதம நீதியரசர் அசோக டி சில்வா அவர்களால் நீதிமன்றக் கட்டிடப் பணி கள் ஆரம்பிக்கப்பட்டு விரைவாக முடிக் கப்படல் வேண்டும் என்பதிலும் குடா நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும் என்பதிலும் மிகுந்த அக்க றையுடன் செயற்படுகின்றார்.
இந் நீதிமன்றம் இங்கு பணிபுரியும் சட்டத்தரணிகளுக்கும், நீதிமன்ற உத்தி யோகத்தர்களுக்கும், பொதுமக்களுக் கும் புதிய நீதிமன்ற கட்டிடம் உருவாகு வது பல்வேறு வகையிலும் உதவும்என் பது திண்ணம்.மேலும் எனது பணிக்கு நீதிமன்ற உத்தியோகத்தர்களும், சட்டத்தரணிக ளும் இங்கு வருகை தந்திருக்கும் திணைக்களத் தலைவர்களும், பொலிஸ் உத்தியோகத்தர்களும், இராணுவ உத்தி யோகத்தர்களும் சிறந்த ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறியிருக்கிறார்கள்.
பிரதம நீதியரசர், நீதிச்சேவை ஆணைக்குழு மற்றும் நீதியமைச்சும் எனது பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார்கள். நான் இங்கு வந்த போது மேல்நீதிமன்ற நீதிபதி பரமராஜா அவர்கள் இப் பணிகளை விரைவாகத் தொடங்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார். எனது தலைமையின் கீழ் இக் கட்டிடப் பணிகள் சிறப்பாகவும், விரை வாகவும் நிறைவுபெற வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என்றார்.(வலம்புரி)
மீசாலையில் ஆசிரியர் வீட்டில் 79 பவுண் நகைகள் திருட்டு |
![]() சாவகச்சேரி, மீசாலையில் நேற்றுப் பட்டப்பகலில் ஆசிரியதம்பதியரின் வீட்டில் 79 பவுண் நகைகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இருவரும் வீட்டைப் பூட்டி விட்டு பணிக்குச் சென்றனர். நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் வீடு திரும்பிய அவர்கள் முன்கதவு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.வீட்டுக்குள் அவர்கள் சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த 79 பவுண் நகைகள் திருடர்களால் அபகரிக்கப்பட்டது தெரியவந்தது.மீசாலையில் ஏ9 பாதையில் இவர்கள் வீடு அமைந்துள்ளதால், மக்கள் நடமாட்டம் இருக்கும் நிலையில் இத்துணிகரத் திருட்டு இடம்பெற்றுள்ளது.சாவகச்சேரி இந்துக் கல்லூரி, மீசாலை வீரசிங்கம் ம.வி. ஆகியவற்றில் அவர்கள் ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர். Uthayan.com யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொள்ளைகள் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 9 பேர் கைது நூறு பவுண் நகைகளும் மீட்புயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல கொள்ளைச் சம்பவங்ளுடன் தொடர்புடைய குருநாகல் பகுதியைச் சேர்ந்த ஒன்பது பேரை கோப்பாய் பொலிஸார் புதன்கிழமை கைது செய்துள்ளதுடன், இவர்களிடமிருந்து 40 இலட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான 100 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.கல்வியங்காடு, எரிபொருள் விற்பனை நிலையத்தில் அண்மையில் விற்பனை பணத்தைத் திருட முயன்று கைது செய்யப்பட்ட ஒருவர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்த தகவலையடுத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் சிலர் யாழ்ப்பாணத்தில் பெண்கள் வீதிகளில் செல்லும் போது அவர்களின் தங்கச் சங்கிலிகளை அறுத்துக் கொண்டு ஓடியவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.இவர்களிடமிருந்து 100 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.கடந்த மூன்று தினங்களாக இவர்கள் நடமாடும் பகுதிகளில் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது இவர்களை மடக்கிப் பிடித்தனர். பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் 500 பவுணுக்கு அதிகமான நகைகளை இவர்களிடமிருந்து மீட்கலாமென்று நம்புகின்றனர்.இவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.கடந்த வருடம் நல்லூரில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிய பெண் ஒருவரைக் கைது செய்தபோது அவரும் தென்பகுதியைச் சேர்ந்தவர் என்பது பின்னர் தெரியவந்ததும் குறிப்பிடத்தக்கது.Thinakural.com |


ஊஞ்சல் கயிறு கழுததை நெரித்ததில் சிறுவன் பலி |
![]() மிருசுவிலில் பரிதாபச் சம்பவம் மீசாலையில் ஊஞ்சல் கயிறு கழுத்தை நெரித்து 11 வயது பாடசாலை மாணவன் பரிதாபமாக நேற்றுமுன்தினம் மரணமானார்.அதேயிடத்தைச் சேர்ந்த மனோகரன் சிந்துஜன் என்ற மாணவனே உயிரிழந்தவராவார்.பிரஸ்தாப சிறுவனை ஊஞ்சலில் வைத்து வேறு சில சிறுவர்கள் ஆட்டிய போது ஊஞ்சல் கயிறு முறுக்கேறி சிறுவனின் கழுத்தை நெரித்தது. இதனால் மூச்சுத் திணறி அந்தச் சிறுவன் மரணமானார்.இச்சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் சாவகச்சேரி நீதி மன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர்.அறிக்கையை ஆராய்ந்த சாவகச்சேரி நீதிவான் மா.கணேசராசா மேலதிக விசாரணை நடத்தி மேலதிக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார் (Uthayan). |

பிரஸ்தாப மாணவனை ஊஞ்சலில் வைத்து வேறு சில சிறுவர்கள் ஆட்டிய போது, ஊஞ்சல் கயிறு முறுக்கேறி சிறுவனின் கழுத்தை நெரித்தது. இதனால் மூச்சுத் திணறி அந்தச் மாணவன் ஸ்தலத்திலேயே மரணமானார்.
இச்சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் சாவகச்சேரி நீதி மன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர். அறிக்கையை ஆராய்ந்த சாவகச்சேரி நீதிவான் மா.கணேசராசா மேலதிக விசாரணை நடத்தி மேலதிக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்




கேரதீவு - சங்குப்பிட்டிப் பாலம்
ஜனாதிபதி திறந்துவைத்தார்
[ 2011-01-17 09:16:50| யாழ்ப்பாணம் வலம்புரி]
யாழ்ப்பாணம்-பூநகரியை இணைக்கும் கேரதீவு - சங்குப்பிட்டிக் கடற்பாலம் ஊடான போக்குவரத்து நேற்று பிற்பகல் 3.45 மணிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்பாலம் வடக்கின் வசந்தம் திட்டத்தின் ஆயிரத்து 37 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டது. பிரித்தானிய அரசிடம் பெறப்பட்ட 800 மில்லியன் ரூபாய் இலகு கடனுதவியுடன் அந்நாட்டு இரும்புப்பாலம் அமைக்கும் நிறுவனத்தின் உதவியுடன் கேரதீவு - சங்குப்பிட்டி கடற்பாலம் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இரு வழிப்பாதையுடைய 288 மீற்றர் நீளம் கொண்ட இப்பாலம் ஒரு வருடக் காலத்திற்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து ஏ-9 பாதையூடாகக் கொழும்பு செல்வதை விடவும் கேரதீவு - சங்குப்பிட்டிப் பாலத்தினூடாகக் கொழும்பு செல்லும் தூரம் சுமார் 120 கிலோ மீற்றர் குறைவானது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் யாழ்ப்பாண மக்கள் ஏ-32 பாதையூடாகக் கொழும்பு பயணித்தால் சுமார் மூன்று மணிநேரத்தை மீதப்படுத்தலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரதீவு - சங்குப்பிட்டிப் பாலம் ஊடான போக்குவரத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்விற்குக் கொழும்பிலிருந்து விமானத்தில் பலாலி வந்தடைந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அங்கிருந்து பூநகரிக்கு உலங்கு வானூர்தியில் வருகை தந்தார்.
ஜனாதிபதியுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வடக்கு மாகாண ஆளுநர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் ஆகியோர் மற்றும் அரச அதிகாரிகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


சங்குப்பிட்டிப் பாலம் கட்டுமானப்பணிகள் நிறைவு |
[ வியாழக்கிழமை, 13 சனவரி 2011, 03:02 GMT ] [ யாழ்ப்பாணச் செய்தியாளர் ] |
![]() 288 மீற்றர் நீளம் கொண்ட இருவழிப் பாலம் எட்டு மாதங்களில் அமைத்து முடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவிடம் இருந்து பெறப்பட்ட 800 மில்லியன் ரூபா இலகு கடனைக் கொண்டு இந்தப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கேரதீவையும் பூநகரி இறங்குதுறையையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம் கொழும்பு - யாழ்ப்பாணம் இடையிலான பயணத்தூரத்தை 120 கி.மீற்றரினால் குறைக்கும். இதன்மூலம் பயண நேரம் 3 மணித்தியாலங்களால் குறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது |





வீதி விபத்தில் குடும்பஸ்தர் பலி
யாழ்நகர் நிருபர் : சாவகச்சேரி மீசாலை புத்தூர் சந்தியில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சரசாலை "கோப்சிற்றி' பணியாளரும் இரு பிள்ளைகளின் தந்தையுமான ச.சண்முகநாதன் (55 வயது) என்பவரே உயிரிழந்தவராவார்.
"ஏ9' வீதியில் நேற்றுக் காலை 8.30 மணியளவில் இவர் சென்ற மோட்டார் சைக்கிள் பள்ளமொன்றில் விழுந்த போது இவர் மோட்டார் சைக்கிளிலிருந்து வீதியில் விழுந்துள்ளார். இவ்வேளையில் இவருக்குப் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியதால் படுகாயமடைந்த இவர் சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார்.


பணப் பரிமாற்ற இயந்திரத்தை உடைத்த இருவர் கைதுதேசிய சேமிப்பு வங்கியின் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரத்திலுள்ள பணத்தைத் திருடுவதற்காக அதனை உடைத்து சேதப்படுத்திய இருவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்துள்ளார். கைதுசெய்யப்பட்ட இருவரும் நேற்று காலை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 2 இலட்சம் ரூபா ஆட்பிணையிலும் செல்வதற்கு சாவகச்சேரி மாவட்ட நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா உத்தரவிட்டார் | ||||
. |





தமிழ் ஓசை 1.1.2011 யாழ் குடாவில் வன்முறைகள் | |||||
இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் மர்மமான முறையில் தொடரும் வன்முறைகள் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்களினால் அங்குள்ள பொதுமக்கள் மத்தியில் அச்சமும் பதற்ற நிலைமையும் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இரண்டு தினங்களுக்குள், இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார். மற்றுமொரு இளைஞனும் பெண் ஒருவரும் வெவ்வேறு சம்பவங்களில் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றார்கள். வடமராட்சி கிழக்கில் குடத்தனை என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் வீடொன்றினுள் புகுந்த ஆயுதபாணிகள் 28 வயதுடைய தவராசா கேதீஸ்வரன் என்பவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இவர் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. பகுதி நேர அஞ்சல் ஊழியராகப் பணியாற்றி வந்த இவர் மணல் வியாபாரத்திலும் ஈடுபட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, வடமராட்சி அல்வாய் என்ற இடத்தில் வீட்டோடு கடைவைத்து வியாபாரம் செய்து வந்த 48 வயதுடைய விதவைப் பெண்மணியான புஸ்பாதேவி யோகநாதன் என்பவர் இதே நாளன்று மாலை 6 மணியளவில் ஆயுதபாணிகளினால் கடத்திச்செல்லப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆறு பிள்ளைகளின் தாயராகிய இவர் கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வேளை, இவரைத் தேடிவந்ததாகத் தெரிவிக்கப்படும் 6 பேர் கொண்ட ஆயுதந்தாங்கிய குழுவினரே வான் ஒன்றில் இவரைக் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆயுதங்களுடன் வீட்டில் புகுந்தவர்களைக் கண்டதும், கடத்தப்பட்ட பெண்ணின் பிள்ளைகள் அச்சத்தினால் சத்தமிட்டு அழுது கெஞ்சிய போதிலும் அவர்களை அச்சுறுத்திவிட்டு ஆயுத முனையில் அந்தப் பெண்ணை ஆயுதபாணிகள் கடத்திச்சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக உறவினர்கள் பொலிசாரிடம் முறையிட்டிருக்கின்றார்கள். வியாழனன்று காலை உரும்பிராய் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த போது சண்முகநாதன் விக்னேஸ்வரன் என்ற 31 வயதுடைய இளம் குடும்பஸ்தர் வான் ஒன்றில் வந்தவர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது மனைவி பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். தனியார் கல்வி நிறுவனத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த இவர், கல்வி நிறுவனம் ஒன்றிற்குச் சென்று கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2007 ஆம் ஆண்டு தனக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து பொலிசாரிடம் சரணடைந்திருந்த இவர் தெல்லிப்பழையில் செயற்பட்டுவந்த புனர்வாழ்வு நிலையத்தில் சேர்க்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கு நால்வர் அடங்கிய விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ் குடாநாட்டில் தொடரும் வன்முறைகள், கடத்தல்கள், கொள்ளைகள், கொலைகள் என்பவற்றை நிறுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநிறுத்த வேண்டும் என பல தரப்பினரும் அரசிடம் கோரிக்கை விடுத்தள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. |