குடாநாட்டில் தொடர்கிறது படுகொலைப் பயங்கரம்! மூன்று வாரங்களுக்குள் மூன்றாவது சம்பவம் சரசாலையில் |
|
|
|
|
யாழ்ப்பாணம், டிசெம்பர் 30 மூன்று நாள்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து தந்திரமாகக் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் வெட்டுக் காயங்களோடு சடலமாக நேற்று மீட்கப்பட்டார். இந்த அதிர்ச்சிதரும் சம்பவம் தென்மராட்சி சரசாலைப் பகுதியில் நடை பெற்றுள்ளது. மீசாலை, புத்தூர் சந்தியைச் சேர்ந்த மகேந்திரசெல்வம் திருவருட்செல் வன் (செல்வன்) (வயது 28) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட வராவார். தொடர்ச்சியாக அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் படுகொலைச் சம்பவங்களால் குடாநாட்டு மக்கள் பயத்தால் உறைந்துபோயுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது : வாகனங்களைக் கொள்வனவு செய்து பின்னர் அவற்றை விற் பனை செய்யும் தொழிலில் ஈடு பட்டுவந்த இந்த இளம் குடும் பஸ்தரின் வீட்டுக்குக் கடந்த திங்கட்கிழமை மாலை 6 மணி யளவில் மோட்டார் சைக்கிளில் இரு நபர்கள் வந்தனர். "கனகம்புளியடிச் சந்தியில் ஒரு வாகனம் விற்பனைக்காக இருக்கிறது. வந்து பார்க்க முடி யுமா?' என்று கூறித் தந்திர மாகக் குறித்த குடும்பஸ்தரான செல்வனை அழைத்துச் சென் றுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களோடு சென்ற செல் வனைக் காணாது இரவு முழு தும் குடும்பத்தினர் தேடிய லைந்தனர். இந்தச் சமயத்தில் வீட்டாரின் தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர்கள் பெருந் தொகைப் பணத்தைக் கேட்டு மிரட்டினர். குறித்த தொகைப் பணத்தைத் தராவிட்டால் செல்வனைக் கொலை செய்து விடுவோம் எனவும் அச்சுறுத்திவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டனர். அடுத்த நாள் காலை செல்வனின் குடும்பத்தினர் சாவகச்சேரிப் பொலிஸில் அதுகுறித்து முறைப்பாடு செய்தனர். இந்த நிலையில் நேற்று புதன்கிழமை மாலை மூன்று மணியளவில் சரசாலை, வேம்பிராய் வீதியில் இயற்கைத்திடல் காளிகோயிலுக்கு அண்மையாக உள்ள கல்குவாரி ஒன்றின் அருகே வெட்டுக் காயங்களோடு உடைகள் களையப்பட்டு உள்ளாடையுடன் மாத்திரம் செல்வனின் சடலம் வீசப்பட்டுக் கிடந்தது. இதுபற்றி அறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனாவைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். படுகொலை செய்யப்பட்ட செல்வன் நீண்டகாலமாக வன்னிப்பகுதியிலும் வசித்துவந்தாரெனவும், ஒரு வருடத்துக்கு முன்னரே நலன்புரி நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியேறினார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. “செல்வன் கொண்டுசென்ற மோட்டார் சைக்கிளையும் ஆவணங்களையும் கொலையாளிகள் எடுத்துச் சென்றிருப்பதாகவும், சடலத்தின் நிலையைப் பார்க்கும்போது செல்வன் இரு நாள்களுக்கு முன்னரே கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் எனவும் சடலத்தை நேரில் பார்த்த அவரது உறவினர்கள் தெரிவித்தனர். சரசாலைச் சம்பவம் குறித்து இராணுவப் பேச்சாளர் உபயமெதவெலவிடம் வினவியபோது, மேற்குறித்த சம்பவம் தொடர்பாகத் தனக்கு இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என அவர் நேற்றிரவு உதயனுக்குத் தெரிவித்தார். இதேவேளை பொலிஸ் தரப்புத் தகவல்களைப் பெறுவதற்காகச் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொண்டபோது,"தற்போதுதான் விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறோம். நாளை (அதாவது இன்று) காலைதான் விளக்கமளிக்க முடியும்' என்ற பதிலே கிடைத்தது. கடந்த மூன்று வாரங்களுக்குள் நடைபெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் இருவர் காவுகொள்ளப்பட்ட அதிர்ச்சியிலிருந்து பயங்கரத்திலிருந்து குடாநாட்டு மக்கள் மீள்வதற்கிடையில் மூன்றாவது கொலைச் சம்பவமும் நடைபெற்றிருக்கிறது. இதனால் குடாநாட்டுமக்கள் மத்தியில் பெரும் பீதிநிலை உருவாகியுள்ளது.(Uthayan.com)
காணாமல்போன இளைஞன் காயத்துடன் சடலமாக மீட்பு [Valampuri. 2010-12-30 07:24:47| யாழ்ப்பாணம்] தென்மராட்சி கனகம்புளியடியில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது. கப்பம் கோரி ஆயுதாரிகளால் கடத்தப்பட்ட, ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய மகேந்திரன் செல்வம் என்பவரது சடலமே இது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கடந்த திங்கட்கிழமை மீசாலையிலுள்ள அவரது வீட்டிற்கு சென்ற இருவர் மோட்டார் சைக்கிளில் அவரை அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் ஒரு வாகனப் புறோக்கர் எனவும் அழைத்துச் சென்றவர்கள் அவரின் நண்பர்கள் என தாம் நம்பியதாகவும் அவரது சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது சடலம் நேற்று மீட்கப்பட்டது. கனகம்புளியடி வேம்பிராயிலுள்ள மயானத்திற்கு அண்மையில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவர் கப்பம் கோரியே கடத்தப்பட்டதாக அவரது தந்தையார் தெரிவித்துள்ளார் |
|



வீரகேசரி

Friday, 17 December தினக்குரல்
யாழ்நகர் நிருபர் : யாழ்ப்பாணத்தில் இதுவரை 404 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியமர்ந்துள்ளதாக யாழ்.மாவட்ட புனர்வாழ்வுத்திணைக்களம் அறிவித்துள்ளது.இக்குடும்பங்களில் 176 குடும்பங்கள் இருவாரங்களுக்கு முன்னர் புத்தளத்திலிருந்து வந்து மீள்குடியமர்ந்துள்ளனர்.
இவர்களில் 240 குடும்பங்கள் ஜே 87 கிராம சேவையாளர் பிரிவிலும் 120 குடும்பங்கள் ஜே 86 கிராம சேவையாளர் பிரிவிலும் 29 குடும்பங்கள் ஜே 84,ஜே 85 கிராம சேவையாளர் பிரிவிலும் ஜே 88,ஜே 80 கிராம சேவையாளர் பிரிவில் 15 குடும்பங்களும் மீள்குடியமர்ந்துள்ளனர்.
தென்மராட்சி மற்றும் மண்கும்பான் பகுதிகளில் ஒன்பது குடும்பங்கள் குடியமர்ந்துள்ளனர்.


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தென்மராட்சி பிரதேசத்தின் கொடிகாமம் பகுதியில் உள்ள மந்துவில் கிராமத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் வயோதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பலியானவர் 60 வயதுடைய வேலு சின்னத்தம்பி என இனங்கானப்பட்டுள்ளார். வேலி எல்லை பிரச்சினை தொடர்பாக அயலவர்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியுள்ளது.
பின்னர் குறித்த வயோதிபர் ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
அவரது சடலம் சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலையில் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது.
கைதடியில் மீளக் குடியமர்ந்த குடும்பத்தாரிடம் திருடர் கைவரிசை!
[வலம்புரி : 2010-12-15 07:52:42| யாழ்ப்பாணம்]கைதடி வடக்கில் நேற்று பட்டப் பகலில் வீட்டின் ஓட்டைப் பிரித்து நுழைந்த திருடர்கள் அங்கிருந்து சுமார் 15 பவுண் தங்கநகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.வீட்டு உரிமையாளர் தோட்டத் திற்குச் சென்றிருந்த போது இத் துன்பகரத் திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
வன்னி யுத்தத்தில் பாதிக்கப் பட்டு மீளக் குடியமர்தந்த குடும்பம் ஒன்றிடமே திருடர்கள் தமது கை வரிசையை காட்டியுள்ளனர். இதேவேளை கடந்த 23 ஆம் திகதி இதேயிடத்தில் உள்ள வீடொன் றில் நுழைந்த திருடர்கள் சுமார் 26 பவுண் நகைகளைத் திருடிச்சென் றிருந்தமை குறிப்பிடத்தக்கது. கைதடியில் வாடிக்கையாகத் தொடரும் இத் திருட்டுச் சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பெரிதும் விசனமடைந்துள்ளனர்.

யாழ். மாணவர்கள் 30 பேர் சாதனை
(ஊர்காவற்றுறை தினகரன் நிருபர்)
யாழ். மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் முப்பதுக்கும் அதிகமான மாணவர்கள் இம்முறை மூன்று பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளனர்.
யாழ்ப்பாணம், இந்துக்கல்லூரியில் ஒன்பது பேரும், வேம்படி மகளிர் கல்லூரியில் ஒன்பது பேரும், கொக்குவில் இந்துக் கல்லூரியில் நான்கு பேரும், சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஐந்து பேரும் மூன்று பாடங்களில் அதிவிசேட திறமைச் சித்தி பெற்றுள்ளனர்.
மாவட்ட மட்டத்தில் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி கணித பாட பிரிவில் சுமங்கலி சிவகுமாரும், உயிரியல் பிரிவில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் பாலகோபாலன் கோகுலனும், வர்த்தகப் பிரிவில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் புருஷோத்தமன் குருக்கள் ராஜாராமும், கலைப்பிரிவில் கொடிகாமம் திருநாவுக்கரசு வித்தியாலய மாணவன் குணசிங்கம் தர்மேந்திரனும் முதன்மை மாணவர்களாக சித்தி பெற்றுள்ளனர்.
யாழ். மாணவர்கள் 30 பேர் சாதனை
(ஊர்காவற்றுறை தினகரன் நிருபர்)
யாழ். மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் முப்பதுக்கும் அதிகமான மாணவர்கள் இம்முறை மூன்று பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளனர்.
யாழ்ப்பாணம், இந்துக்கல்லூரியில் ஒன்பது பேரும், வேம்படி மகளிர் கல்லூரியில் ஒன்பது பேரும், கொக்குவில் இந்துக் கல்லூரியில் நான்கு பேரும், சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஐந்து பேரும் மூன்று பாடங்களில் அதிவிசேட திறமைச் சித்தி பெற்றுள்ளனர்.
மாவட்ட மட்டத்தில் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி கணித பாட பிரிவில் சுமங்கலி சிவகுமாரும், உயிரியல் பிரிவில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் பாலகோபாலன் கோகுலனும், வர்த்தகப் பிரிவில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் புருஷோத்தமன் குருக்கள் ராஜாராமும், கலைப்பிரிவில் கொடிகாமம் திருநாவுக்கரசு வித்தியாலய மாணவன் குணசிங்கம் தர்மேந்திரனும் முதன்மை மாணவர்களாக சித்தி பெற்றுள்ளனர்.
யாழ். நாவற்குழி பகுதியில் சிங்கள குடியேற்றங்கள் அதிகரிப்பு |
[ தமிழ்வின்..திங்கட்கிழமை, 06 டிசெம்பர் 2010, 06:22.58 AM GMT +05:30 ] |
 யாழ்ப்பாண மாவட்டம், நாவற்குழி சிங்கள கொலனியில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களின் ub55tpஎண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிpறது. |
இதேவேளை, அண்மையில் பலவந்தமாக நாவற்குழி பகுதியில் 100 குடும்பங்களைச் சேர்ந்த சிங்கள மக்கள் குடியேறியதைத் தொடர்ந்து, அவர்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டதாக அரசாங்க தரப்பு செய்திகள் வெளியாகின. எனினும் அவர்கள் வெளியேற்றப்படவில்லை. இந்தநிலையில் தற்போது அங்கு 186 சிங்கள குடும்பங்கள் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் தங்கியுள்ள சிங்கள மக்கள், அந்த பகுதியில் உள்ள தமிழ் மக்களின் வீடுகளில் களவுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாவற்குழியில் உள்ள தமிழ் மக்கள் தற்காலிகமாக தமது இல்லங்களில் இருந்து வெளியேறி, மீண்டும் திரும்பிய போது, பல வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாக முறையிட்டுள்ளனர். எனினும் இது தொடர்பில் பொலிஸ் தரப்பில் இருந்து எதிர் நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
|

வீரகேசரி
போதையில் திரிந்த நால்வருக்கு சிறை
[வலம்புரி: 2010-12-04 07:40:34| யாழ்ப்பாணம்]சாவகச் சேரிப் பகுதியில் போதையில் பொது மக்களுக்கு இடையூறு விளைவித்தார்கள் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வருக்கு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றின் நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் 15 நாள் கடூழியச் சிறைத் தண்டனை யும், ஆயிரத்து 500 ரூபாய் தண் டப்பணமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
சாவகச் சேரி பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மேற்படி வழக் கில் ஆஜர்ப்படுத்தப்பட்ட குற்றவாளிகள் தண்டப் பணத்தினைக் கட்டத் தவறினால் மேலும் ஒருமாதகாலம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணூவத்தின் துப்பாக்கிச் சூட்டில் பொதுமகன் பலி: சாவகச்சேரியில் சம்பவம்12/3/2010 6:38:34 PM
Virakesari.lk
சாவகச்சேரி புத்தூர் சந்திக்கருகே இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பொதுமகன் ஒருவர் பலியாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மேற்படி நபர் குறிப்பிட்ட இடத்தில் காணப்பட்ட இருப்புக்கம்பியைக் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களைத் தாக்கியதை அடுத்து இராணுவத்தினருக்கும் பொதுமகனுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் அப்பொதுமகன் பலியாகியுள்ளார்.
சடலம் யாழ் போதனா வைத்தியசாலலயில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 சாவகச்சேரி நடமாடும் சேவையில் 106 முதியோருக்கு அ.அட்டைகள் |
|
|
|
| சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை இடம் பெற்ற நடமாடும் சேவையில் 106 முதியவர்களுக்கு முதியோர் அடையாள அட்டைகள் விநியோ கிக்கப்பட்டுள்ளன. நடமாடும் சேவையில் முதியோர் அடையாள அட்டைக்கு விண்ணப் பித்த முதியவர்களுக்கு இலவசமாக புகைப்படம் எடுத்து வழங்கி உடனுக்குடன் முதியோர் அட்டைகள் பிரதேச சமூக சேவைகள் பிரிவினரால் விநியோகிக்கப் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேற்படி நடமாடும் சேவையில் சான்றிதழ் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வில் 300 பேருக்கு இலவசமாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. (Uthayan)
|
|
|

வீரகேசரி














கோயிலாக்கண்டிக்கு சிறிதரன் விஜயம்
[வலம்புரி : 2010-11-20 07:39:32| யாழ்ப்பாணம்]கைதடி-நாவற்குழி தெற்குப் பகுதியில் உள்ள கோயிலாக் கண்டி எனும் இடத்தில் மண் அகழப்பட்டு அபாயத்திற்கு உள்ளாகியுள்ள நிலைமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பார்வையிட்டதுடன் தங்கள் நிலம் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி னார்.
சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட கைதடி நாவற்குழி தெற் குப் பகுதி ஒரு கடற்கரையை அண் டிய கிராமம். கடற்கரையை அண் டிய பகுதியில் கடந்த 10 வருடங்களாக மண் அகழப்பட்டு வந்தமையால் அந்தப் பகுதி மக்கள் தங்கள் கிரா மம் ஆபத்தில் உள்ளதாக அச்சம் தெரி வித்துள்ளார்கள்.
இந்நிலையில் அந்தப் பகுதியை பார்வையிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் சிவஞானம் சிறி தரன், இந்த மண் கொள்ளையை தடுக்க மக்களின் விழிப்புணர்வு மிக வும் அவசியம் என்று குறிப்பிட்டார். கிராமச்சங்கம், மீனவர் சங்கம் என்பன மிகவும் விழிப்பாக செயற் பட வேண்டும் என்று குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், தவறி னால் சில வருடங்களில் இந்த கிராமம் அழிந்து போகும் ஆபத்தை தெளிவாக உணர முடிகிறது என்றார்.


17.11.2010.
நாங்கள் வாழ்ந்து வந்த காணிகளில் அவர்கள்(சிங்களவர்கள்) வந்து குடியேறும் போது நாமும் குடியேறத்தானே வேண்டும் என்று யாழ்.நாவற்குழியில் குடியமர்ந்துள்ள யாழ்.மக்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்.தொடருந்து நிலையத்தில் இருந்த சிங்களக் குடும்பங்கள் இரவோடிரவாக யாழ்.நாவற்குழியில் குடியமர்தப்பட்டிருந்தனர்.
அவர்கள் குடியேற்றப்பட்டிருந்த காணி அரச காணியென்று தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அந்தக் காணிகளில் ஏற்கனவே தமிழ் மக்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
சிங்கள மக்கள் குடியேறியதை அடுத்து அங்கு விரைந்த தமிழ் மக்கள் ஏனைய காணிகளை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களைப் பார்வையிடுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலரும் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் சென்றிருந்தார். அவரைச் சந்தித்த மக்கள் தமது நிலைப்பாடு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் வெவ்வேறு மக்களின் வீட்டுக்காணிகளில் வாழ்ந்து வருகின்றோம். 1995ஆம் ஆண்டு இந்த மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து வெளியேறியிருந்தோம். இந்நிலையில் மீண்டும் நாங்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் வெவ்வேறு காணிகளில் அலைந்து திரியும் போது எமது நிலத்தில் சிங்களவர்கள் வந்து எவ்வாறு குடியேற முடியும் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இதன் போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ், பிறேமச்சந்திரன்,
நாற்பது ஐம்பது வருடங்களுக்கு மேலாக எமது மக்கள் இருப்பதற்கு இடமில்லாமல் பல்வேறுபட்ட இடங்களிலும் இருந்துவருகின்றனர்.
அவர்களுக்கு உரிய வசதிகளை அரசு செய்து கொடுத்திருக்கவேண்டும். மாறாக அவர்கள விரட்டப்பட்டிருப்பதுடன், அவர்களின் இடங்களில் சிங்களவர்களும் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் எமது மக்கள் தமது இடத்திற்கு வந்திருக்கின்றார்கள். இந்த நடவடிக்கை சரியான நடவடிக்கை தான். எனவே அரசு உடனடியாகச் செயற்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுத்து எமது மக்களுக்கான ஆவணங்களை வழங்கவேண்டும்.
இது அரசினுடைய கடைமை. அரசு சட்ட ரீதியாகச் செயற்படாமல் அதற்கு மாறாக தென்னிலங்கையில் இருந்து மக்களைக் கொண்டுவந்து எமது மக்களுக்குச் சொந்தமான காணிகளில் குடியமர்த்துவதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே எமது மக்கள் குடியேறுவார்கள் என்பதும் அவர்களைக் குடியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுமே எமது கருத்தாகும் என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



நுணாவிலில் விபத்து இளைஞன் மரணம்
[வலம்புரி.. : 2010-11-16 08:57:56| யாழ்ப்பாணம்]சாவகச்சேரி நுணாவில் மேற்கு துர்க்கையம்மன் கோவில் பகுதி யில் நேற்று இரவு 7.30 மணி யளவில் மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி விபத்துக்குள் ளானதில் இளைஞர் ஒருவர் பரிதாப கரமாக உயிரிழந்தார்.இவ்விபத்தில் அதே இடத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் விக்னேஸ்வரன் (வயது 29) என்ற இளைஞரே உயிரிழந்த வராவார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோத னைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசா லையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது


.


நாவற்குழியில் குடியேறிய சிங்கள மக்களிடம் காணி உறுதி இருந்தால் உடனடிக் குடியேற்றம் மீள்குடியேற்ற அமைச்சர் கூறுகிறார் |
|
|
|
| யாழ்ப்பாணம்,நவ.15 நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு காணி உறுதி இருப்பது உறுதிப்படுத்தப்படு மானால் 24 மணித்தியாலத்துக் குள் அவர்கள் குடியேற்றப்படு வார்கள
நாவற்குழியில் தங்கியுள்ள சிங்கள மக்களை அங்கிருந்துவெளியேற்றுவது குறித்து தேசிய வீடமைப்பு அதிகார சபையினர் தான் சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் மில் றோய் பெர்னாண்டோ உதயனுக் குத் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வினையொட்டி ஆயிரம் மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு மானிப்பாய் இந்துக் கல் லூரியில் நேற்று இடம்பெற்ற போது அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திரும்புகை யில் நாவற்குழி சிங்களக் குடி யேற்றம் குறித்து கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு உதய னுக்குத் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:யாழ்.மாவட்டத்தில் கடந்த 1985 ஆம் ஆண்டுகளில் வாடகை வீடுகளில் வாழ்ந்த சிங்கள மக்கள் தங்களைக் குடியேற்றுமாறுகோரி யாழ்.ரயில் நிலையத் தில் தங்கியிருந்தனர். இந்த மக்களை நானும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சந்தித்து அவர்களின் ஆவணங் களைப் பரிசீலனைசெய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள் வதற்குமூன்றுமாத கால அவ காசம் கேட்டிருந்தோம்.ஆனால், அதுவரை பொறுத் திராது அந்த மக்கள் தாமாகவேஅதில் மீள்குடியேறியுள்ளனர். அவர்கள் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிக்குள்குடியேறியுள்ளதால் அவர்களை அங்கிருந்து அகற்றுவது குறித்து நடவடிக்கைகளை வீடமைப்பு அமைச்சுதான் மேற் கொள்ள வேண்டும்.நாவற்குழியில் உள்ள அரச காணிகளில் காணியில்லாத தமிழ் மக்கள் குடியேறலாமா? என்று ஊடகவியலாளர் கேட்டதற்கு, தமிழ் மக்களும் அங்கு குடி யேற விரும்பினால் தாராளமாகக் குடியேறலாம். அதற்கு யாரும் தடைவிதிக்கப்போவதில்லை. இனங்களுக்கிடையில் பிள வினை ஏற்படுத்தி மீண்டும்ஒரு யுத்தத்தினை எதிர்கொள்ள இலங்கை தயாராகவில்லை என்றார்.
|
|
நாவற்குழி அரச காணிகளை கைப்பற்றும் யாழ்.மக்கள்
[வலம்புரி : 2010-11-14 08:26:30| யாழ்ப்பாணம்]
நாவற்குழியில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை யாழ்ப்பாண மக்களும் நேற்றுக் கைப்பற்றிக் கொண்டனர்.
நாவற்குழியில் உள்ள அரச காணிகளில் சுமார் 70 சிங்கள குடும்பங்கள் கடந்த 10 ஆம் திகதி இரவோடு இரவாக குடியேறினர். இது பல்வேறு மட்டத்திலும் பிரச்சினைகளைத் தோற்றுவித்தது. இந் நிலையில் நேற்று அப்பகுதிக்குச் சென்ற சாவகச்சேரி மற்றும் குருநகர் வாசிகள் எஞ்சிய நிலப்பரப்புக்களையும் கைப்பற்றினர். இதனால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
எனினும் சிங்கள மக்கள் பிடித்த நிலப் பரப்புக்களை தவிர மற்றைய நிலங்களை யாழ். வாசிகள் பிடித்துக் கொண்டனர். இதனால் சிறுதி நேரம் பதற்றம் நிலவியது.எனினும் சிங்கள மக்கள் பிடித்த நிலப்பரப்புக்களை தவிர மற்றைய நிலங்களை யாழ். வாசிகள் பிடித்துக் கொண்டனர்.
இதேவேளை இக் காணிகளில் குடியமர எவருக் கும் அனுமதி வழங் கப்படவில்லை. என அப்பகுதி கிராம சேவையாளர் தெரி வித்தார். தற்போது சுமார் 50 குடிசை களை சிங்கள மக் கள் அமைத்துக் கொண்டுள்ளதுடன் 50ற்கும் மேற்பட்ட வீடுகளுக்கான இடங்களை யாழ்ப்பாண மக்கள் அமைத்துள்ளனர்.
சிங்கள மக்கள் நாவற்குழி அரச காணியில் பலாத்காரமாகவே குடியேறியுள்ளனர் : இமெல்டா சுகுமார் _ | | |
வீரகேசரி நாளேடு 11/13/2010 10:05:52 |
| |
சிங்கள மக்கள் நாவற்குழி அரச காணியில் பலாத்காரமாகவே குடியேறியுள்ளனர். அவர்களை அரசாங்கம் அங்கு குடியமர்த்தவில்லை என தெரிவித்த யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார், மேற்படி குடியமர்வு தொடர்பான பூர்வாங்க அறிக்கையொன்று மீள் குடியேற்ற அமைச்சருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
நேற்று வெள்ளிக்கிழமை சித்தங்கேணி மகளீர் அபிவிருத்தி நிலையத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான தேசிய ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு இடம் பெற்றது. இதன் போது தெளிவுபடுத்துகையிலேயே யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார் மேற்கண்டவாறு கூறினார்.
இவர் இங்கு தொடர்ந்தும் தெளிவுபடுத்துகையில்:–
நாவற்குழி அரச காணியில் குடியேறியுள்ள சிங்கள மக்கள் 1980 மற்றும் 83களில் வியாபார நோக்கங்களுக்காக யாழ்ப்பாணத்திற்கு வந்தள்ளனர். அதன் பின்னர் யாழில் காணப்பட்ட குழப்பகரமான சூழ்நிலையால் ஏற்பட்ட அச்சுறுத்தலினால் இவர்களை இராணுவத்தினர் அநுராதபுரத்தில் குடியேறியுள்ளனர். இங்கிருந்தும் பொருளாதார சூழ்நிலைகளினால் மேற்படி மக்கள் மிஹிந்தளை, தம்புள்ளை மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கு சொந்த விருப்பத்தின் பேரில் இடம்பெயர்ந்து சென்றதாகவும் அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது விண்ணப்பங்களை கொடுத்துள்ளனர். இதன் பின்னர் அமைச்சர் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார். இந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக நான் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிக ஏற்பாடுகளை செய்து கொடுத்தேன்.
பிறப்புச் சான்றிதழ்களையும் தபால் அடையாள அட்டைகளையும் ஆதாரமாக அவர்கள் காட்டினார்கள். ஒரு பெரியவர் தான் யாழ். பிராமணர் இனத்து பெண்ணையே மணந்துள்ளதாகவும் கூறினார். எவ்வாறாயினும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகையில் திடீரென யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியிருந்த சிங்கள மக்கள் அனைவரும் நாவற்குழியில் காணப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியில் குடியேறிவிட்டனர்.
இது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியேற்றம் அல்ல மேற்படி குடியேற்றம் தொடர்பாக அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும், மீள்குடியேற்ற அமைச்சருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்
நாவற்குழி சிங்களக் குடியேற்றம்: சட்ட நடவடிக்கை குறித்து ஆராய்வு | | |
| |
கொழும்பு, நவ. 13 யாழ். நாவற்குழியில் அத்துமீறிக் குடியேறிய சிங்களக் குடும்பங்கள் தொடர்பாகச் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழ்த் தரப்புகள் ஆராய்ந்து வருகின்றன எனத் தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் பொதுச் செயலர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிங்களவர்கள் யாழ். ரயில் நிலையத்தில் சில மாதங்கள் தங்கி இருந்தார்கள். எனினும், திடீரென்று சில தினங்களுக்கு முன்னர் நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் காணிக ளில் அத்துமீறி குடிசைகளை அமைத்துக் குடியேறி உள்ளனர். இதைத் தடுப்பதற்கு யாழ். அரச அதிபரோ, யாழ்ப்பாண தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளரோ உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகத் தெரியவில்லை. இராணுவத்தினரின் ஆதரவுடன்தான் இந்தக் குடியேற்றங்கள் நிறைவேறி உள்ளன. எமது பாரம்பரிய பூமியில் எம்மைச் சிறுபான்மையினராக ஆக்குவதற்கான அரசின் அப்பட்டமான இனவாதமே இது என்று நாங்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றோம். பலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் நாட்டினால் மேற்கொள்ளப்படும் யூத குடியேற்றங்களுக்கு இது ஒப்பானது. அண்மையில் திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் கண்டல்காடு என்ற இடத்தில் மீள்குடியேறுவதற்காக முஸ்லிம்கள் குடிசைகளை அமைக்க முற்பட்டபோது அரச அதிபரின் உத்தரவின்படி பொலிஸாரினால் அம் முஸ்லிம் மக்களின் குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. பகிரங்க அழைப்பு உயர் பாதுகாப்பு வலயங்கள் காரணமாகவும், படை முகாம்கள் அமைக்கப்பட்டமையாலும் அகதிகளாக்கப்பட்ட எமது மக்கள் அரச காணிகளில் அத்துமீறி குடியேறுவதுதான் ஒரே வழி என்பதை அரசின் நடவடிக்கைகள் காட்டுகின்றன என நாங்கள் கருதுகிறோம். எனவே, இவ்வாறான அகதிகளை அரச காணிகளில் குடியேற முன்வருமாறு நாங்கள் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றோம். நாவற்குழி சிங்கள குடியேற்றம் தொடர்பாகத் தமிழர் தரப்பில் எடுக்கவேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றியும் நாம் ஆராய்ந்து வருகிறோம். இப்பிரச்சினைக்கு அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இப்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துமீறிய குடியேற்றம் ஜனாதிபதியின் கவனத்துக்கு ஈ.பி.டி.பி. கொண்டு வந்தது | | |
| |
கொழும்பு, நவ. 12 தென்னிலங்கையில் இருந்து வந்த சிங்கள மக்கள் திடீரென எந்தவித அனுமதியும் இன்றி நாவற்குழியில் குடிசைகள் அமைத்துக் குடியேறி இருப்பதை ஈ.பி.டி.பி. ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அது குறித்துத் தான் விசாரித்த பின்னர் உரிய நடவ டிக்கை எடுப்பார் என ஜனாதிபதி தெரிவித்துள் ளார். ஜனாதிபதியுடனான தமது கட்சியின் சந்திப் புக் குறித்து ஈ.பி.டி.பி. நேற்றிரவு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இச் ந்திப்பில் பிரதான விடயமாக, தேசிய வீடமைப்பு அதிகார பைக்குச் சொந்தமான நாவற்குழி நிலத்தில் தென்னிலங்கை மக்கள் ட்ட விரோதமான முறையில் குடியேறியிருக் கும் விடயம் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. எந்த மக்கள் மூகமாக இருப்பினும் அவர் கள் விரும்பிய பிரதேங்களில் வாழ்வதற்குரிய ஜனநாயக உரிமைக்குத் தாம் மாறானவர்கள் இல்லை என்றும் ஆனாலும் இனங்களுக்கிடை யிலான மனக்கப்புகளை உருவாக்கும் வகை யிலான ட்டவிரோதக் குடியேற்றங்கள் இன ஐக்கியத்திற்கு விரோதமான ஒரு நடவடிக்கை யாகும் என்றும் ஈ.பி.டி.பி தரப்பால் ஜனாதிபதி யிடம் சுட்டிக் காட்டப்பட்டது. நாவற்குழியில் குடியேறியிருக்கும் தென்னி லங்கை மக்களை ஏற்கனவே ந்தித்திருந்த பாரம்பரிய சிறு கைத்தொழில் அமைச்சர், சிங் கள மக்களின் பிரச்சினை குறித்து ஆராய்ந்து தீர்மானம் எடுப்பதற்குத் தனக்கு 3 மாத கால அவகாம் தேவை என ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பதும் ஜனாதிபதிக்கு ஞாபகப்படுத்தப்பட்டது அந்த மக்கள் யாழ். குடாநாட்டில் சொந்த இருப்பிடங்களில் வாழ்ந்தார்கள் என்பதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை என்றும் அவர்களில் சிலர் வாடகை வீடுகளில் மட்டுமே முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் வசித்திருக்கிறார்கள் என்பதும் அங்கு சுட்டிக் காட்டப்பட்டது. யாழ். மாவட்டத்தில் பாரம்பரியமாக வாழும் மக்களில் பலர் சொந்த நிலம் இல்லாத நிலையில் தென்னிலங்கையில் இருந்து வந்திருந்த மக்கள் ட்ட விரோதமாக நாவற்குழி நிலத்தில் குடியேறியிருப்பது யாழ். மாவட்ட மக்கள் மத்தியில் கப்புணர்வுகளையே உருவாக்கும் எனவும் ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்தித்த ஜனாதிபதி, அரசுக்குச் ங்கடத்தை உருவாக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களைச் சிலர் திட்டமிட்டுத் தூண்டி விட்டிருக்கலாம் என்று தெரிவித்தார். அத்துடன் ஈ.பி.டி.பி. தரப்பில் இருந்து எடுத்து விளக்கப்பட்ட நியாயங்களைத் தான் புரிந்து கொள்வதோடு இது குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குழுக்களின் பிரதித்த தலைவர் சந்திரகுமார் உட்படக் கட்சிப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
|
| |
|
| அத்துமீறி நாவற்குழியில் நேற்று குடியேறின சிங்களக் குடும்பங்கள். யார் தடுத்தாலும் அங்கேயே இருப்போம் எனவும் தெரிவிப்பு |
|
|
|
|
யாழ்ப்பாணம்,நவம்பர்11 யாழ்ப்பாணத்துக்குத் திடீரென வந்து தங்கியி ருந்த சிங்களக் குடும்பங்கள் சந்தடி ஏதுமின்றி எவ ரது அனுமதியுமின்றி நேற்று எதிர்பாராத வகை யில் நாவற்குழியில் வீடமைப்பு அதிகார சபைக் குச் சொந்தமான காணியில் குடியேறியுள்ளன. இதனால் அந்தப் பிரதேசத்தில் மக்கள் மத்தியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.ரயில் நிலையத்தில் தங்கி இருந்த சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே நேற்று கம்புகள், தடிகள் சகிதம் தடாலடியாக வீடமைப்பு அதிகார சபைக் காணிக்குள் நுழைந்து கொட்டில்களை அமைக்க ஆரம்பித்தனர். மளமளவெனக் கொட்டில்கள் அமைக்கும் பணியில் அவர்கள் நேற்று முழு நாளும் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வீடுகளை அமைப்பதற்கு சீருடையினரும் உதவிகளை வழங்கினர் எனஅப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர். சிங்கள மக்களின் இந்த அத் துமீறிய திடீர் குடியேற்றம் குறித் துத் தனக்கு எதுவுமே தெரியாது என யாழ். அரச அதிபர் நேற்று உதயனுக்குத் தெரிவித்தார். வீடமைப்பு அதிகார சபைக் குச் சொந்தமான காணியில் அனுமதி இன்றியே சிங்கள மக்கள் கொட்டில்களை அமைத்து வருகின்றனர் எனவும் அது தொடர்பில் தான் வீடமைப்பு அதிகார அமைச்சுக்கு அறிவித்துள்ளார் எனவும் சபையின் யாழ். மாவட்ட பொது முகாமையாளர் ஜே.நோயல் ஜெயச்சந்திரன் உதயனுக்குத் தெரிவித்தார். "மீளக்குடியமருமாறு கேட்டு நாம் யாழ்ப்பாணம் வந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகி விட்ட போதும் அதிகாரிகள் எம் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. வேறு வழியில்லாததால் இந்தக் காணிகளில் கொட்டில்களை அமைத்துக் குடியேறத் தீர்மானித்தோம்' என்று நாவற்குழியில் குடியேறும் முனைப்புக்களில் மும்முரமாக இருந்த சிங்கள மக்கள் தெரிவித்தனர். தமது ஊர்களில் இருந்து எடுத்து வரப்பட்ட கம்புகள், தடிகளைக் கொண்டே கொட்டில்களைத் தாம் அமைக்கின்றனர் என்றும் அவர்கள் கூறினர். "எமக்கு யாரும் இதுவரை உதவி செய்யவில்லை. யார் என்ன சொன்னாலும், தடுத்தாலும் நாம் இங்குதான் குடியேறுவோம்' என்றும் அவர்கள் அடித்துச் சொன்னார்கள். அவர்கள் கொட்டில்கள் அமைத்து வரும் காணிகளில் ஆயிரக்கணக்கான கம்புகள், தடிகள் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளன. நேற்றுப் பிற்பகலுக்குள் சுமார் 25 கொட்டில்கள் போடப்பட்டிருந்ததை எமது செய்தியாளர் நேரில் கண்டார். சிங்கள மக்களது மீள்குடியமர்வு குறித்து அப்பகுதிக் கிராம அலுவலர் ஆ.நடராஜாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது. அவர் தெரிவித்ததாவது: நேற்றுமுன்தினம் இரவு முதலே அப்பகுதியில் வாகனங்களின் இøரச்சல் கேட்ட வண்ணம் இருந்தது. விடிந்த பின்னர் அங்கு சென்று பார்த்த போது ஏராளமான தடிகள் பறிக்கப்பட்டிருந்தன. பல சிங்கள மக்கள் அங்கு நின்றதை அவதானிக்க முடிந்தது. அவர்கள் அந்த இடத்தில் கொட்டில்களை அமைத்துக் கொண்டிருந்தனர். உடனடியாக இது குறித்து யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமாருக்கும் சாவகச்சேரி பிரதேச செயலர் சாந்தசீலன் அஞ்சலிதேவிக்கும் அறிவித்தேன் என்றார். சிங்கள மக்களின் நடவடிக்கை குறித்து தேசிய வீடமைப்பு அதிகார சபையின் யாழ். மாவட்ட பொது முகாமையாளர் ஜே.நோயல் ஜெயச்சந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தெரிவித்ததாவது: எமது அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் சிங்கள மக்கள் கொட்டில்கள் அமைத்துக் குடியேறுவதற்கு முயற்சிப்பதை அறிந்து, நேற்றுப் பிற்பகல் ஒரு மணியளவில் அங்கு சென்று நிலைமைகளை அவதானித்தேன். தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிக்குள் எந்தவித அனுமதியும் பெறாது அவர்கள் கொட்டில்களை அமைத்து வருகின்றனர். இது குறித்து சபையின் கொழும்புத் தலைமையகத்திற்கு உடனடியாகத் தகவல் அனுப்பினேன். நாவற்குழியில் அதிகார சபைக்குச் சொந்தமான 90 ஏக்கர் காணி உள்ளது. அதில் 30 ஏக்கர் காணி ஏற்கனவே 300 வீட்டுத் திட்டத்திற்கு என வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 60 ஏக்கர் காணியை அதிகார சபை பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகிறது. சிங்கள மக்கள் அந்தக் காணியில் குடியேறுவதற்கு முயற்சிப்பது குறித்து வீடமைப்பு அமைச்சு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன் என்றார். இது தொடர்பில் யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்ததாவது: நாவற்குழியில் சிங்கள மக்களை குடி யேற்றுவது குறித்து எனக்கு எந்தவித அறிவித்தலும் கிடைக்கவில்லை. அவர் கள் குடியேற முயற்சிப்பது தேசிய வீட மைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான உறுதி உள்ள காணி. அதனால் அவர்கள் தான் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். வீடமைப்பு அதிகார சபையின் இந் தக் காணியில் 1990 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் பலர் குடியேறி இருந்தனர். பின் னர் போர்ச் சூழல் காரணமாக அவர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து சென்றிருந் தனர். அதன் பின்னர், அந்தப் பகுதியில் தாம் குடியிருப்பதற்கு அனுமதிக்குமாறு 100 தமிழ்க் குடும்பங்கள் 2003, 2004 காலப் பகுதியில் கோரிக்கை விடுத்தி ருந்தன. ஆனால், அப்போது வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளரால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

|
|
கொடிகாமத்தில் துப்பாக்கிமுனையில் 10 லட்சம் பெறுமதியான நகைகள், பணம், பொருட்கள் கொள்ளை | [ புதன்கிழமை, 10 நவம்பர் 2010, தமிழ்வின் ] | யாழ். கொடிகாமத்தில் வீட்டிலிருந்தோரைத் துப்பாக்கி முனையில் தடுத்துவைத்து விட்டு அங்கிருந்த 15 பவுண் தங்க நகைகள், 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பணம், கமரா போன் உள்ளிட்ட 10 லட்சம் ரூபா பெறுமதியான பொருள்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
| இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் யாழ். மாவட்ட தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள கொடிகாமம் அல்லாரைப் பகுதி வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது : கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த வீட்டின்மீது கற்களும், பொச்சு மட்டைகளும் வீசப்பட்டன. ஆனால் வீட்டில் இருந்தவர்கள் பயம் காரணமாக வெளியே வரவில்லை. இதனைத் தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய முகமூடி அணிந்த நபர்கள் 8 பேர் வீட்டினுள் நுழைந்து அங்கிருந்த தந்தையையும் மகனையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்த பெண்ணைத் துப்பாக்கி முனையில் பயமுறுத்தி அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள் உட்பட அனைத்து நகைகளையும் பறித்தனர். பின்னர் ஏனைய பொருள்களையும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். வீட்டுக்காரரை ஆயுத முனையில் வைத்துக்கொண்டு அங்கு பல இடங்களிலும் தேடிக் கையில் அகப்பட்ட பெறுமதியான பொருள்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அல்லாரையைச் சேர்ந்த சிவகுரு பாலசிங்கம் என்பவரின் வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த 15 பவுண் தங்க நகை, ரொக்கப் பணம், பெறுமதியான கைத்தொலைபேசிகள் என்பன இந்த ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் குழுவினால் எடுத்துச்செல்லப்பட்டதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| மீசாலையில் நேற்று இரு சிங்கள இளைஞர் கைது |
|
|
|
|
சாவகச்சேரி, நவ. 9 பொலிஸ் அதிகாரிகள்என்று கூறி மீசாலைப்பகுதியில் வீடு களுக்குச் சென்று பணம் சேக ரித்த இரண்டு சிங்கள இளை ஞர்கள் சாவகச்சேரி பொலிஸாரி னால் நேற்றுக் கைது செய்யப் பட்டுள்ளனர் . இந்த சம்பவம் பற்றி தெரிய வருவதாவது: மீசாலை மேற்கு காளிகோயில் வீதியில் பிற்பகல் 3 மணி யளவில் வீடுகளுக்குச் சென்று அனுராதபுரத்தில் இயங்கும் அநாதை சிறுவர் இல்லத்துக்கு என்று கூறி குறித்த இருவரும் பணச் சேகரிப்பில் ஈடுபட்டுள் ளனர். இதன்போது பணம் வழங்க மறுத்தவர்களை தாம் பொலிஸ் அதிகாரிகள் எனவும் அதுசம்பந்தமான புகைப்படங் களையும் காண்பித்துமிரட்டி யுள்ளனர்.
சட்டத்தரணி வீடென்றில் சென்று பணம் கேட்டபோது நீதிமன்றத்தில் இருந்த கணவருக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியதை அடுத்து சம்பவம் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் இரண்டு சிங்கள இளைஞர்களையும் கைதுசெய்ததுடன் பணம் கொடுத்தவர்களையும் கூட்டிச் சென்று விசாரித்துள்ளனர் .
|
|























தென்மராட்சிப் பகுதி உதயன் விநியோக நிறுவனப் பணியாளர் பலி!
2010-10-17 07:44:30

யாழ்ப்பாணம், அரியாலை, நெடுங்குளம் பகுதியில் ஏ9 பாதையில் நேற்றுக்காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத் தில் "உதயன்' வெளிவாரி விநியோகப் பிரிவைச் சேர்ந்த பணியாளர் மரணமானார்.
யாழ்ப்பாணம், வெள்ளாந்தெருவைச் சேர்ந்த பாலச்சந்திரன் ஜெயபாலன் (வயது 32) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே மரணமானவரா வார்.
"உதயன்' பத்திரிகையை ஒப்பந்த அடிப்படையில் தென்மராட்சிப் பகுதிக்கு விநியோகம் செய்துவந்த அவர் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றிருந் தார். விநியோகப் பணியை முடித்துக் கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த போதே அவர் விபத்தில் சிக்கினார்.
அரியாலை, நெடுங்குளம் பகுதியில் ஜெயபாரதி வாசிகசாலைக்கு முன்பாக அவர் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த பஸ்ஸை விலத்தி வரும் போது பின் னால் வந்து கொண்டிருந்த யாழ் திருமலை போக்குவரத்துச் சபை பஸ்ஸுடன் மோதுண் டார்.
அவரின் வலதுகால் இடுப்புடன் கழன் றது. மார்பு, தலைப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டன.
அம்புலன்ஸ் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்ட அவர் வெளிநோயாளர் பிரிவில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர் மரணமானார்.
மரண விசாரணையின் பின்னர் நேற் றுப் பிற்பகல் அவரது சடலம் உறவினர் களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கைதடி முதியோர் இல்லத்தில் முதியோர் தின நிகழ்வுகள்
2010-10-09 NEW JAFFNA.COM
சர்வதேச முதியோர் தினத்தினை கைதடி முதியோர் இல்லத்தில் முதியவர்களுடன் சேர்ந்து ஆளுனரும் அதிகாரிகளும் கொண்டாடினார்கள். அந் நிகழ்வின் புகைப்படங்கள்













