5.1.20

செய்திகளில் ஊரும் அயலும் 2020

இரண்டு காற்றாலைகளில் ஒன்றை மட்டும் அகற்ற முடியும்

18-7-20

மறவன்புலவு காற்றாலை அமைப்பது தொடர்பாக பல்துறை சார்ந்தவர்களின் கருத்துக்களை அறியும் சிறப்பு கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தலைமையில் 7/1/2020 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு யாழ் மாவட்ட செயகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அரச அதிபர் 
நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மத்திய சுகாதார அதிகாரசபை அதிகாரிகள் சாவகச்சேரி பிரதேச சபை அதிகாரிகள்  பிரதேச செயலக அதிகாரிகள் மின்சார சபை அதிகாரிகள் யாழ் பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் சனசமூக நிலைய பிரதிநிதிகள் கமக்கார அமைப்பின் பிரதி நிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறவன்புலவு மேற்கு பகுதியில் குடியிருப்புக்குள் அமைந்துள்ள  காற்றாலை அகற்றுவதெனவும் உள் வீதிகளால் வரும் மின்சார கம்பங்களை அகற்றுவதெனவும் ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்வதெனவும் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள மின்சார கம்பங்களை அதே காணிக்குள் சிறிதுதூரம் அகற்றுவதெனவும் காற்றாலை நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

ஆனால் இதற்கு சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் அ நிமலரோகன் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் குடியிருப்புக்குள் இருக்கும் இரண்டு காற்றாலை கம்பங்களும் அகற்ற வேண்டும் என இறுதியான முடிவாக கேட்டுக் கொண்டனர்.

இதற்கு  சரியான முடிவு தமக்கு வழங்கப்படவில்லை காற்றாலை நிறுவனத்தினர் ஒரு காற்றாலை மட்டும் அகற்றுவதெனவும் மற்றைய காற்றாலையை சிறிது தூரம் அதே காணிக்குள் அரக்குவதெனவும் தெரிவித்துள்ளனர். 

இதற்கு நாங்கள் உடன்பாடில்லை என்று தெரிவித்தோம் அதற்கு சாதகமான பதில் எமக்கு வழங்கப்படவில்லை என சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் அ நிமலரோகன் தெரிவித்தார்.


நுணாவில் வாள் வெட்டில் சிறுமி உட்பட ஐவர் காயம்!

11.6.2020

சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் இன்று (11) மதியம் மற்றும் மாலை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

இன்று மதியம் எஸ்.ஏவி (16-வயது) என்ற சிறுமி வீதியால் சென்ற போது குழு ஒன்று வாளால் வெட்டி காயப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. இதில் காயமடைந்த சிறுமி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இரவு குறித்த சிறுமியின் சகோதரனான எஸ்.இளங்கீரன் (24-வயது) என்பவர் மீது அதே குழு வாளால் வெட்டியதாக கூறப்படும் நிலையில் அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் தரப்பை சேர்ந்த ஜெயசீலன் ஜெனீலன் (28-வயது), ஜெயசீலன் நந்தினிதேவி (56-வயது), எஸ்.ரவிந்திரகுமார் (34-வயது) ஆகியோர் சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எவ்வாறு காயமடைந்தனர் என்பது தெரியவரவில்லை.


மீசாலையில் வாள் வெட்டு

11.6.20

மீசாலை, புத்தூர்சந்தி பூதவராயர் ஆலய பகுதியில் இன்று (11) இரவு 9 மணியளவில் இனந்தெரியாத நபர்களின் வாள் வெட்டுக்கு இலக்காகி இருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர்கள் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் மீசாலை வடக்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த ந.சசிவர்மன் (28-வயது), ந.டினேஸ்கரன் ஆகியாேரே காயமடைந்துள்ளனர்.

இதேவேளை இந்த தாக்குதலின் போது வீடு புகுந்து 2 மோட்டார் சைக்கிள், டீவி உட்பட இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளது.


கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் வன்புணர்வு – வீடு திரும்பிய நிலையில் முறையிட்டார்!

13-6-20

வரணி எல்லையை ஒட்டிய மாசேரிக்கும் குடத்தனைக்கும் இடையில் கடந்த 8ம் திகதி கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண், வீடு திரும்பிய நிலையில் தன்னை மூவர் வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இருந்து (08.06.2020) தென்மராட்சி – கொடிகாமத்தில் உள்ள காதலர்கள் என்று கூறப்படும் இளைஞர்கள் இருவரை சந்திக்க வந்த பெண்கள் இருவரை குழு ஒன்று வரணி எல்லையை ஒட்டிய மாசேரி பகுதியில் வைத்து கடத்த முயன்றுள்ளது.

இதன்போது கடத்த முற்பட்டவர்களிடம் இருந்து 16 வயது சிறுமி ஒருவர் தப்பித்து வந்து மக்களின் உதவியுடன் கொடிகாமம் பொலிஸில் சரணடைந்திருந்தார்.

இவ்வாறு சரணடைந்த சிறுமி பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து கொடிகாமம் பொலிஸாரும் பருத்தித்துறை பொலிஸாரும் இணைந்து மற்றைய பெண், காதலர்கள் என்று கூறப்படும் இருவர் மற்றும் கடத்தல் சந்தேக நபர்கள் உள்ளிட்டோரை வலை வீசித் தேடி வந்தனர்.

அதன்படி சம்பவம் இடம்பெற்ற பகுதியை அடையாளம் கண்ட கொடிகாமம் பொலிஸார், சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட சிறுமியின் கைபேசியில் உதவியுடன் விசாரணையை மேற்கொண்டு சந்தேக நபர்களின் உறவினர் ஒருவரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் இருப்பதால் பருத்தித்துறை பொலிஸார் வழக்கு விசாரணையை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் வீடு திரும்பியுள்ளதை அறிந்த பொலிஸார், சுன்னாகத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதன்படி நேற்று (11) பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு சென்ற குறித்த பெண், “தாம் சந்திக்க வந்த இரண்டு இளைஞர்கள் உள்ளிட்ட மூவரும் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என்றும், கைபேசி தொடர்பிலேயே அவர்கள் அறிமுகமாகினர் என்றும், அவர்களை பற்றி எதுவும் தெரியாது என்றும்” முறையிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.


மிருசுவில் பகுதியில் வாள் வெட்டுக்குழு அராஜகம்!

12.6.2020

கொடிகாமம், மிருசுவில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது நேற்று (11) இரவு வாள்வெட்டுக் குழு ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தில் குறித்த நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்கானதுடன், நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தும் உடைத்து நாசம் செய்யப்பட்டுள்ளது.

இரவு 11.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வாள், இரும்புக் கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 8 பேர் கொண்ட குழுவினர் அங்கிருந்த கண்காணிப்புக் கமெராக்களை அடித்து உடைத்துள்ளனர்.

இதன்பின்னர், அங்கிருந்த பணியாளர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் கையில் வாள்வெட்டுக்கு இலக்கானவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். தொடர்ந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து நாசம் செய்த குறித்த கும்பல் பின்னர் தப்பிச் சென்றுள்ளது.


வரணி ஆலய கொள்ளை; சந்தேகத்தில் ஒருவர் கைது!

12-6-20

தென்மராட்சி, வரணி வடக்கில் அமைந்துள்ள கும்பிட்டான்புல பிள்ளையார் ஆலயத்தை கடந்த (09.06.2020) உடைத்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கொடிகாமம் பொலிஸாரால் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

மந்துவிலை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து களவாடப்பட்ட பொருட்கள் மீட்கப்படாத நிலையில், சிசிடீவியில் பதிவாகிய நபர் அணிந்திருந்த ஆடையை ஒத்த காற்சட்டை, ரி-சேட் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சிசிடீவி காட்சிகளுடன் ஒப்பிட்டு சந்தேக நபரை அடையாளம் காண முடியாத நிலையில், சந்தேக நபரின் கைரேகை அடையாளம் பெறப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த ஆலயத்தில் சங்கிலி, 40000 பணம் மற்றும் ஐம்பொண்னாலான கலசம் உட்பட ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


யாழ் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய பூசகரை தாக்கி பணம் நகை கொள்ளை!

30.05.2020

யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் பூசகரைத் தாக்கிய கொள்ளையர்கள் அவருடைய வீட்டிலிருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கோவிலுக்கு அண்மையில் தனித்துவாழும் பூசகரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இன்று அதிகாலை 03 மணியளவில் பூசகரின் வீட்டினுள் நுழைந்த இருவர் அவரை கொட்டன் தடிகளால் சரமாரியாகத் தாக்கி, அவர் அணிந்திருந்த நகைகள், வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணம் என்பன உள்ளடங்கலாக ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இதேநேரத்தில் சாவகச்சேரியின் கல்வயல் கிராமத்தில் உள்ள ஆலயங்கள் இரண்டில் ஒலிபரப்பு சாதனங்கள் திருட்டுப்போயுள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

கல்வயல் பிள்ளையார் கோவில் மற்றும் கல்வயல் தேவதவனப் பிள்ளையார் கோவில் ஆகிய இரண்டு கோவில்களுமே உடைக்கப்பட்டு திருட்டு இடம்பெற்றிருப்பதாக முறையிடப்பட்டுள்ளது.


சாவகச்சேரியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

18.5.2020


முள்ளிவாய்க்கால் படுகொலையின் 11ம் ஆண்டு நினைவு தினமான இன்று (18) படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தென்மராட்சி பிரதேச தலைமைக் காரியாலயத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு மலர் தூவி, சுடரேற்றி உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.சயந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் கலந்து கொண்டிருந்தனர்.


சாவகச்சேரியில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ரவிராஜின் உருவச்சிலை அமைந்துள்ள இடத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போதும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குறித்த இடத்தில் குவிக்கப்பட்டுள்ளதால் நிகழ்வினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் முன்னெடுத்தனர்.


வீடு புகுந்து வாள் வெட்டு; ஈபிடிபி உறுப்பினரும் மனைவியும் படுகாயம்!


யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் இன்று (29) இரவு இடம்பெற்ற வாள்வெட்டில் ஈபிடிபியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரும், அவரது மனைவியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மறவன்புலவிலுள்ள குறித்த பிரதேச சபை உறுப்பினரின் வீட்டுக்குள் இன்றிரவு 7.15 மணியளவில் நுழைந்த மூவர் கொண்ட குழுவினர் சரமாரியாக வாள்வெட்டை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது பிரதேச சபை உறுப்பினர் அரியகுட்டி நிமலறோகனும், அவரது மனைவியும் காயமடைந்துள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த பிரதேச சபை உறுப்பினர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.http://www.paasam.com/?p=1514

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரிக்கு இரவோடு இரவாக வந்திறங்கிய இராணுவம்!

சாவகச்சேரி நகரமத்தியில் அமைந்துள்ள டிறிபேக் கல்லூரியிலும் இன்று அதிகாலை 1.00 மணியளவில் இரண்டு பேரூந்துகளில் அழைத்து வரப்பட்ட சுமார் 45 வரையான இராணுவத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரை தனிமைப்படுத்த பாடசாலைகளை பயன்படுத்த போவதில்லை என இராணுவத் தளபதியால் நேற்று கூறப்பட்டது.
தென்மராட்சியிலேயே மக்கள் அதிகமாக கூடுகின்ற இடமாக சாவகச்சேரி நகரம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
”தனிமைப்படுத்தல் நிலையங்களாக பாடசாலைகள் மாற்றப்படாது” எனக் கல்வியமைச்சு அறிவித்துள்ள நிலையில் இதன் உண்மைத்தன்மைகளை கல்வியமைச்சு முறையான அறிக்கையூடாக வெளிப்படுத்தவேண்டும்.




சாவகச்சேரியில் காெள்ளை; தம்பதியினர் படுகாயம்!

10-4-2020
ஊரடங்கு வேளையிலும் வீடு புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் சாவகச்சேரி – மண்டுவில் பிரதேசத்தில் இன்று (10) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வயோதிபர்களான கணவன் – மனைவியை தாக்கி அவர்கள் அணிந்திருந்த 5 பவுண் நகைகள் மற்றும் வீட்டிலிருந்த 16 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றைக் கொள்ளையிடப்பட்டுச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த தம்பதியினர் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பாெலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாளை மின் தடை!

1-4-2020
வடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல் கட்டுப்பாட்டு மையத்தின் மின் பொறியியலாளர் அனுசா செல்வராசா அறிவித்துள்ளார்.
அதற்கமைய, நாளை காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை யாழ்ப்பாண பிரதேசத்தில் நுணாவில், மட்டுவில், கல்வயல், கல்வயல் சந்திரபுரம், வேம்பிராய், மட்டுவில் இராணுவ முகாம், மட்டுவில் முத்துமாரி அம்மன் கோவிலடி ஆகிய இடங்களிலும்,
கிளிநொச்சி பிரதேசத்தில் பொன்னாவெளி, பாலாவி ஆகிய இடங்களிலும், வவுனியா பிரதேசத்தில் பகல அளுத்வத்த கிராமம், கோவில் புதுக்குளம் கிராமம், பத்தினியார் மகிழங்குளம் கிராமம், தவசிக்குளம் கிராமம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர் மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காகவே குறித்த மின் தடை அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


திருவிழா நிதியை உதவியாக மாற்றிய சரசாலை காளி கோவில்

31-3-2020

தென்மராட்சியில் உள்ள சரசாலை காளி கோவிலின் மணவாளக்கோல உற்சவ திருவிழாவிற்கான உபய நிதியில் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வழங்கிய முன்மாதிரியான செயற்பாடு நேற்று (30) இடம்பெற்றுள்ளது.
சரசாலையில் அமைந்துள்ள காளி கோவிலின் வருடாந்த மணவாளக்கோல திருவிழா வழமைபோல நேற்று சிறப்பாக இடம்பெற ஏற்பாடாகி இருந்தது.
இத்திருவிழாவிற்கென விழா உபயகாரர்கள், அன்னதான உபயகாரர்கள் மற்றும் ஆலய அடியவர்களால் சுமார் ஒரு லட்சம் ரூபா காளி கோவில் அறப்பணி சபைக்கு வழங்கப்பட்டிருந்தது.
நாட்டின் தற்போதைய நிலமையினை கருத்திற் கொண்ட ஆலய அறப்பணி சபையினர் மணவாளக்கோல திருவிழாவினை நிறுத்தி அந்நிதிமூலம் தமது சரசாலை கிராமத்தில் வாழும் சுமார் 150 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க தீர்மானித்தனர்.
இதன்படி பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் இன்று மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்கிவைத்தனர்.


சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சேவையை பெற இலக்கம் அறிமுகம்

31-3-2020


சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மாதாந்தக் கிளினிக்கில் சேவை பெறுவது தொடர்பில் கீழ் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

நோயாளர்களின் விசேட நன்மை கருதி 0212270932, 0212271150 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் கிளினிக் தொடர்பான ஆலோசனைகளையும், மருந்து வழங்கல் தொடர்பாகவும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் திருமதி ம.தயாளினி தெரிவித்துள்ளார்.


கொரோனா தொற்றினால் 

இலங்கையர்கள்103 பேர் கண்காணிப்பில்; ஐவருக்கு மட்டுமே உறுதி!  

13-3-2020

கொரோனா தொற்றுச் சந்தேகத்தில் இன்று (14) காலை 10 மணி வரை 103 பேர் கண்காணிக்கப்படுகின்றனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் இதுவரை இலங்கையர்கள் ஐவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் 

பரபரப்பு!


14-3-2020
சுகாதாரத் தொண்டர் நியமனத்தை மீள் பரிசீலணை செய்யக் கோரி இந் நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட தொண்டர்கள் இன்று (05) காலை யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நியமனம் வழங்கும் பிரதான மண்டபம் அருகில் இடம்பெற்ற இப் போராட்டத்தின் பாேது சுகாதாரத் தொண்டர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தமையினால் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் அங்கு வந்து போராட்டக்காரர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்பின்னர் கருத்து தெரிவித்த சேனாதிராஜா, “அவர்கள் பல குறைகளை குறிப்பிட்டனர். தகுதியற்றவர்களுக்கு நியமனம் வழங்கப்படுவதாக தெரிவித்தனர். இது தொடர்பில் ஆளுநரிடம் பேச எனக்கு அவகாசம் தர வேண்டும். அதுவரை பாதையை தடை செய்ய வேண்டாம் என அவர்களிடம் தெரிவித்தேன்” என்றார்.

           14-1-20


சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர்களின் இரத்ததான நிகழ்வு

யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் பழைய மாணவர்களால் இன்று (05) இரத்ததான நிகழ்வு நடைபெற்றது.
கடந்த வருடம் இரணைமடுக்குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த நண்பன் நேசதுறை நிலக்கஷன் அவர்களின் பிறந்தநாள் நினைவாக இன்று (05.01.2020 ) காலை கல்லுாரியின் ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ். போதனா வைத்தியசாலை இரத்த சேகரிப்பு நிலையத்திற்கு ரத்தானம் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த இரத்த தான முகாமிற்கு பல இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானத்தினை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

2.8.19

செய்திகளில் ஊரும் அயலும் 2019/2

யாழில் கிளர்ந்தெழுந்த மக்கள் அதிரடியாக கைது ! பொலிஸ் நிலையம் முன்பு பதற்றம்

15-12-2019
யாழ்ப்பாணம் சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் மின் காற்றாலை அமைக்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டமைக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் , பிரதேச சபை உறுப்பினர் உட்பட 4 பேர் சாவகச்சேரி பொலிஸாரால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு சுமார் 50 இற்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாவகச்சேரி பொலிஸ்நிலையம் முன்பாக கூடியிருந்தனர். இதனால்அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் மின் காற்றாலை அமைக்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டமைக்கு எதிராக கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டம் மோதலில் நிறைவடைந்திருந்தது.
மறவன்புலவில் மக்கள் குடியிருப்புப் பகுதிக்கருகில் மின் காற்றாலை அமைக்கப்படுவதாக மக்கள் போராட்டங்கள் பலவற்றை மேற்கொண்டதையடுத்து அதனை ஆராய்வதற்காக பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இதற்கிடையில், மின் காற்றாலை அமைக்கும் பணிக்கான உபகரணங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனரக வாகனங்களில் கொண்டுவரப்பட்டிருந்ததோடு, மின் காற்றாலைக்கான அலுவலகம் அமைக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, பணிகளை இடைநிறுத்துமாறும் கோரினர்.
இதன்போது இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதோடு, ஆயுதங்களாலும் தாக்கிக்கொண்டனர்.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த சாவகச்சேரிப் பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததோடு, பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தியிருதனர்.
இந்த நிலையிலேயே போராட்டத்தில் ஈடுபட்ட மேற்படி நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாவகச்சே
ரியில் டெங்குநோய் அதிகரிப்பு



            19-11-2019


        15-10-2019

தென்மராட்சியில் கத்தி குத்து; இருவர் காயம்!

4-10-2019
1யாழ்ப்பாணம் - தென்மராட்சி, வெள்ளாம்போக்கட்டி பகுதியில் நேற்று இரவு 9.50 மணியளவில் இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த மூவரை இடைமறித்து இனம் தெரியாத நபர்கள் துரத்தித் துரத்தித் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது இரும்புக் கம்பி மற்றும் கத்தியாலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் சாவச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மற்றுமொருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

மின் காற்றாலை அமைக்க  அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் 

 2019-09-18 12:03:37

யாழ்ப்பாணம் – மறவன்புலவு பகுதியில் மக்கள் குடியேற்றத்திற்கு அண்மையில் மின் காற்றாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டம் மறவன்புலவு மக்களால் இன்று கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் மக்கள் சந்திப்பு கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றுவரும் நிலையில், இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்து போராட்டக் களத்திற்கு விரைந்த ஆளுநர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
அதன் பின்னர் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலாளரை உடனடியாக வருகை தருமாறு உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு போராட்டக்காரர்களின் 5 பேரை தன்னுடனான சந்திப்பில் கலந்துகொள்ளுமாறும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.







                       9-9-2019


         8-9-2019







 15-8-2019

சாவகச்சேரியில் தீ விபத்து.; இரு வர்த்தக நிலையங்கள் முற்றாக சேதம்

8-8-2019

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட ஏ 9 பிரதான வீதியின் மடத்தடி சந்தியில் அமைந்துள்ள இரண்டு வர்த்தக நிலையங்களில் இன்று இரவு 9.00 மணியளவில் தீ விபத்து  ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள வெல்டிங் கராஜ் மற்றும் பழக்கடை  ஒன்றுமே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
இத்தீவிபத்தில் பழக்கடை முற்றாக எரிந்துள்ளது. இவ்விபத்தையடுத்து யாழ்மாநகரசபை தீயணைப்பு பிரிவிற்கு அறிவித்ததையடுத்து மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் குறித்த இடத்தில் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.





3-8-2019



2-8-2019