
தலைவர்.............................................கி. முகுந்தன்
உபதலைவர்........................பொ. கிருஷ்ணமோகன்
செயலாளர்.........................................சி. தர்மசீலன்
உப செயலாளர்.......................................சி. சதீசன்
பொருளாளர்........................................ந. மதனீகன்
நூலகச்செயலாளர்.......................வே. அறிவியளன்
கலைக்கழகப் செயலளர்.................கா. மகாதேவன்
விளையாட்டுக்கழக செயலாளர்.......செ. நளினிகாந்
நிர்வாக உறுப்பினர்கள்
சி.எழிலன் ச.பத்மஜெயன் ஜே.பார்த்திபன்
த.முரளீதரன் மா.சுபாகரன் கி.ஜெயக்குமார்
சி. திலீபன் வே. ரமேஸ் செ. விமல்சன்
சி. கோவர்த்தனன் க. சாண்டில்யன் இ. பாஸ்கரன்
கு. பிரகாஷ்
கட்டட நிர்மாண செயற்பாட்டுக்குழு
தலைவர் - கி. முகுந்தன்
செயலாளர்- பொ. கிருஷ்ணமோகன்
உறுப்பினர்கள்
சி. சண்முகம், சி. பிரதீபன், இ.ரெனிஸ்குமார்,மா.வரேஜன்,
இ. சுதாகர், வே.கிருஷ்னன், பூ. வேலுப்பிள்ளை, வெ. ஜேசுதாஸ்
செ. தேவராசா, மு.சின்னையா, மா. சுபாகரன்
த. முரளிதரன், க. பிரபு, ச. பத்மஜெயன்
மா.தர்சினி, பி.யோகராணி,த.இந்துமதி
கட்டடத் திறப்புவிழாக்குழு
சி. முகுந்தன் (தலைவர்)
கா. மகாதேவன், ந. மத்னீகரன், த. முரளிதரன்,
செ. நளினிகாந், மு. சின்னையா, பூ. வேலுப்பிள்ளை
வே.கிருஷ்ணன், வே. ஜேசுதாஸ்
நமது நோக்கு
1948ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எமது சனசமூக நிலையம் ஆனது நூல் நிலையம், விளையாட்டுக்கழகம், கல்விக்கழகம் போன்றபல்வேறு துறைகளினை உருவாக்கி மிகவும் சிறப்பாகச் செயற்பட்டு வந்ததோடு மட்டுமல்லாது அனைத்துத் துறைகளிலும் அனைவரும் வியக்கத்தக்க முறையில் பல சாதனைகளைப் புரிந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததொரு விடயமாகும். ஆனால் கடந்து சென்ற 2000ம் ஆண்டு காலப்பகுதியில் காணப்பட்ட யுத்த சூழ்நிலையின்போது எமது சன சமூக நிலையக் கட்டடமானது முற்றாகச் சேதமடைந்ததோடு அனைத்துத் தளபாடங்களும் அழிவடைந்தன. இதனால் சன சமூக நிலையச் செயற்பாடுகளை வினைத்திறனாக செயற்படுத்த முடியாத ஒரு நிலை காணப்பட்டது. இருப்பினும் எமது சனசமூக நிலைய நிர்வாகிகள், அங்கத்தவர்கள், மற்றும் நலன் விரும்பிகளின் உதவிகளுடன் அனைத்து இடர்களுக்கு மத்தியில் நமது சன சமூக நிலையம் செயற்பட்டுவந்தது. இந்நிலையினை அவதானித்த அறவழிப்போராட்டக்குழு நிறுவனம் ஆனது எமது சன சமூக நிலையத்துக்கு நிலையான கட்டடம் இல்லை என்பதைஉணர்ந்து கொண்டதோடு மட்டுமல்லாது எமது சனசமூக நிலையக் கட்டட நிர்மாணத்துக்கு நிதி உதவு வழங்குமாறு சிறுவர் பராமரிப்பு நிறுவனத்திடம் பரிந்துரை செய்தது. அந்த வகையில் அந்நிறுவனம் மனமுவந்து கட்டட நிர்மாணத்துக்கு நிதி அளித்ததன் மூலம் நமது சன சமூக நிலையமானது அழகான ஒரு தோற்றப்பொலிவுடன் தலை நிமிர்ந்து நிற்கின்றது. இதுவரை இருந்துவந்த பெருங்குறை ஒன்று நிறைவடைந்துள்ளது. எனவே எதிர்வரும் காலங்களில் அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகச் செயற்படமுடியும் என்பது எமது நம்பிக்கையாக உள்ளது. அந்த வகையில் எமது நூல்நிலையமானது இதுவரை காலமும் நாளந்த செய்தி தாள்களினை மட்டுமே கொண்டதாகக் காணப்படது. ஆனால் இனி வரும் காலங்களில் மாணவர்களுக்கான கல்வி சார் நூல் வசதிகளையும் உள்ளடக்கிச் செயற்படவுள்ளது. அத்தோடு கால மாற்றத்துக்கு ஏற்ற வகையில் அறிவியல் சஞ்சிகைகள் மற்றும் பருவகால சஞ்சிகைகள் என்பவற்றையும் உள்ளடக்கி நூல் நிலையத்தை சிறப்பாக செயற்படுத்த எண்ணியுள்ளோம்.
மற்றும் எமது கல்விக்கழகமானது இதுவரை காலமும் தேவையான அளவு கல்விக்கான மனித வளம் இருக்கின்றபோதிலும் அவ்வளங்களைப் பயன்படுத்தி கல்விச்சேவை புரிவதற்கு போதிய இடவசதிகள் இல்லாதிருக்கின்றது. எனவே இனிவரும் காலங்களில் அக்குறைகளை நிவர்த்தி செய்து கல்விக்கழகத்தினை சிறப்பாகச் செயற்படுத்த எண்ணி யுள்ளோம். அந்த வகையில் மாணவர்களுக்கான இலவச மாலைநேர வகுப்புக்கள், ஆங்கிலக் கல்வி, மற்றும் பரீட்சையில் சித்தி எய்துவோருக்கு ஊக்குவிப்பு பரிசில் வழங்கல் போன்ற செயற்பாடுகளினை முன்னெடுக்க எண்ணியுள்ளோம்.
மற்றும் எமது கலைக்கழகமானது 1995ம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதிகளில் அரங்க ஆற்றுகைகள் இன்னிசை கச்சேரிகள் என்பன போன்ற கலை நிகழ்ச்சிகளினை உள்ளடக்கிச் சிறப்பாகச் இருந்தது. ஆனால் பிற்கால அசாதாரண சூழ்நிலைகளால் கலைக்கழகச் செயற்பாடுகள் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன. எனவே இக்குறைபாட்டினை நீக்குமுகமாக எதிர்வரும் காலங்களில் ஆக்கபூர்வமான செயற்பாடுகளினை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம்.
மற்றும் எமது விளையாட்டுக்கழகமானது சன சமூக நிலைய ஆரம்பகாலந்தொட்டு இன்றுவரை மிகவும் சிறப்பாக செயற்பட்டு அனைத்துவிளையாட்டுக்ககளிலும் திறமை காட்டி உள்ளது அனைவரும் அறிந்த விடயமாகவுள்ளது. குறிப்பாகக் கரபந்தாட்டப் போட்டிகளில் பிரதேச ரீதியாக தொடர்ச்சியாக கடந்த காலங்களில் முதல் நிலைவகித்தது குறிப்பிடத் தக்கது. மற்றும் மெய்வல்லுனர் போட்டிகளில் பலவீரர்கள் பிரதேச ரீதியாக முதல் நிலை வகித்தனர். , அகில இலங்கை ரீதியில் முதல் நிலைவகித்து அருஞ்சாதனை படைத்துள்ளனர் நமது வீரர்கள்.
எனவே எதிர்வரும் காலங்களிலும் எமது சன சமூக நிலையம் அனைத்துத் துறைகளிலும் இவாறான சாதனைகளினைப் படைக்குமென்பதில் சற்றேனும் ஐயம் இல்லாத்தால் மோகனதாஸின் சாதனைப் பட்டியல் நீளும் என்பது திண்ணம். கடந்த காலங்களில் எமது சன சமூக நிலையம் தனதுபெயரைப் பதிப்பத்ற்கு அர்ப்பணிப்புடன் கூடிய உணர்வுபூர்வமான ஒற்றுமையை எமது மக்கள் எவ்வாறு வெளிக்காட்டினார்களோ அவ்வாறே இன்றைய காலமாற்றத்துக்கேறதான ஒரு வளர்ச்சி நோக்கிய மாற்றத்தை ஏற்படுத்த எதிர்காலங்களிலும் எமது உணர்பூர்வமான ஒற்றுமையை வெளிப்படுத்துவோம்.
நிர்வாகம்