7.5.06
செய்திகளில் ஊரும் அயலும்/மே---ஜூன்
27.06.2006
ஓலை வெட்டச்சென்ற சிப்பாய்விடத்தற்பளையில் சடலமாக மீட்பு
மிருசுவில் விடத்தற்பளை பற்றைக் காட்டுப் பகுதியில் மிருசுவில் கெற் பேலி முகாமைச் சேர்ந்த சபுதன்நிவே அஜித் பிரியங்க பியதாச (வய 35) என்ற சிப்பாயின் சடலம் கண்டுபிடிக் கப்பட்டது.விடத்தற்பளைப் பகுதியில் பனை யோலை வெட்டச் சென்ற இந்தச் சிப் பாய் மறுநாள் சடலமாக மீட்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.இச்சம்பவம் தொடர்பாக கொடி காமம் பொலீஸார் சாவகச்சேரி நீதிமன் றில் அறிக்கை சமர்ப்பித்ததையடுத்து நீதிவான் சம்பவ இடத்தையும் மிருசு வில் மருத்துவமனையில் சிப்பாயின் சடலத்தையும் பார்வையிட்டார்.சடலத்தை கொழும்பு சட்ட வைத் திய அதிகாரி மூலம் பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கு மாறும் நீதிவான் பொலீஸாரைப் பணித்தார்.
23.06.2006
குடும்பத் தலைவரை இழந்த 10 குடும்பங்களுக்குதையல் இயந்திரம் வழங்குவதற்கு ஏற்பாடு
சாவகச்சேரி லயன்ஸ் கழகத்தினர் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் குடும் பத் தலைவரை இழந்த பத்து குடும்பங் களுக்கு தையல் இயந்திரங்களை அன் பளிப்பாக வழங்கவுள்ளனர்.சர்வதேச லயன்ஸ் கழக 306 பிஐ மாவட்டத்தினர் இந்தத் தையல் இயந்தி ரங்களை வழங்கியுள்ளனர்.எதிர்வரும் முதலம் திகதி சாவகச் சேரி டிறிபேர்க் கல்லூரியில் நடை பெறவுள்ள கழக நிகழ்வில் இவை வழங்கப்படும்.அத்துடன், கடந்த வருட ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் அதிகூடிய சித்தி பெற்ற மாணவர்கள் ஆகியோருக்குப் பரிசில் வழங்கிக் கௌரவிப்பும் வறு மைக்கோட்டின்கீழ் உள்ள மாணவர் களுக்குப் புலமைப் பரிசில் நிதி வழங் கலும் இடம்பெறும். நிகழ்வில் முதன்மை விருந்தினரா கக் கலந்துகொள்ளும் பிரதிநிதி மாவட்ட ஆளுநர் ஆர்.இராகவன் இவற் றினை வழங்குவார் எனத் தெரிவிக்கப் பட்டது.
14.06.2006
யாழில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை
15 இளைஞர்கள் கைது
புதினம் யாழ். நிருபர்
யாழ். தென்மராட்சி வரணியில் சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 15 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வரணியில் சுட்டிபுரம், நாவற்காடு, இடைக்குறிச்சி, அம்மா கடை ஆகிய இடங்களை சிறிலங்கா இராணுவத;தினர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சுற்றிவளைத்தனர்.
இராணுவத்தினர் அப்பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின் போது 15 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல் வடமராட்சி கரவெட்டிக் கிராமங்களை சிறிலங்கா இராணுவத்தினர் இன்று சுற்றிவளைத்து தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில்மூத்த குடிமக்கள் விவரம் சேகரிப்பு
சாவகச்சேரிப் பிரதேச செயலர் பிரி வின் கீழ் வாழும் 100 வயதைக் கடந்த மூத்த குடிமக்களின் விவரங்களைப் பதிவுசெய்யுமாறு பிரதேச செயலர் எஸ். ஸ்ரீநிவாசன் கேட்டுள்ளார்.மூத்த குடிமக்களைக் கௌரவிக் கும் முகமாகவும் அவர்கள் தனிமை யில் வாழவேண்டிய சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காகவுமான செயற்றிட்டங் கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற் கமைய 100 வயதுக்கு மேற்பட்ட வர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட வுள்ளன.மூத்த குடிமக்களாக வாழ்பவர் களோ அல்லது அவர்களது உறவினர் களோ பிரதேச செயலத்துடன் தொடர்பு கொண்டு விவரங்களைத் தெரிவிக்க லாம் எனப் பிரதேச செயலர் மேலும் தெரி வித்துள்ளார்.
07.06.2006
தென்மராட்சி கல்வி வலயத்தில்11 ஆரம்ப பாடசாலைகள் புனரமைப்பு
"யுனிசெவ்' அமைப்பின் நிதியுதவியுடன் தென்மராட்சிக் கல்வி வலயத்தைச் சேர்ந்த பதினொரு பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு வகுப்பறைகள் புனர மைக்கப்படவுள்ளன. புனரமைப்புப் பணிகளுக்கான நிதி யினை "யுனிசெப்' நிறுவனத்தினர் வழங்க வுள்ளனர். கைதடி குருசாமி வித்தியாலயம், இயற்றாலை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை, அல்லாரை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயம், மந்து வில் ஸ்ரீ பாரதி வித்தியாலயம், கொடி காமம் அரசினர் தமிழ்க் கலவன் பாட சாலை, கைதடிநுணாவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, குடமியன் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, போக்கட்டி றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை, மட்டுவில் சாந்தநாயகி வித்தியாலயம், கச்சாய் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு வகுப்பறைகளே புனரமைக்கப்படவுள் ளன.
04.06.2006
தென்மராட்சியில் 399 பேருக்குமலகூடம் அமைக்க மானியம்
தென்மராட்சிப் பிரதேசத்தில் மல கூடங்கள் அமைப்பதற்கான மானியத் திற்கு 399 பயனாளிகள் தெரிவுசெய் யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பயனா ளிக்கும் தலா 6 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது.தென்மராட்சிப் பிரதேச செயலகத் தின் சுகாதாரப் பாதுகாப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட 60 பயனாளிகளுக் கும் சாவகச்சேரிப் பிரதேச சபை எல் லைக்குட்பட்ட 339 பயனாளிகளுக்கும் இம் மானியம் வழங்கப்படவுள்ளது. சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட் பட்ட சாவகச்சேரி நகர், கோவில் குடி யிருப்பு, சங்கத்தானை, சாவகச்சேரி வடக்கு, மண்டுவில், கல்வயல், நுணா வில் கிழக்கு, நுணாவில் மத்தி, நுணா வில் மேற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் 60 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.மானியம் பெறுவதற்கு தெரிவு செய் யப்பட்டவர்களின் பெயர் விவரங்கள் தென்மராட்சி பிரதேச செயலகத்தினால் நகரசபை, பிரதேச சபை ஆகியவற்றின் செயலாளர்களுக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளன.
மிருசுவில் பகுதியில் நேற்றிரவு கிளைமோர் தாக்கு!
மிருசுவிலுக்கும் முகமாலைக்கும் இடையே ஏ9 வீதிக்கு வடக்குப் புறமாக நேற்றிரவு 7.45 மணியளவில் கிளைமோர் தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.படையினர் பயணம் செய்த வாகனத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குத லில் சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார் என்றும்அதிகாரிகள் தரத்திலான இருவர் காயம் அடைந்தனர் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரி வித்தன. பாதுகாப்பு வலயத்தில் குடியிருப்புகள் அற்ற படையினரின் முன்னரங்க நிலைகளின் பிற்பகுதியில் இத்தாக்குதல் இடம்பெற்றதா கக் கூறப்பட்டது.
25.05.2006
கைதடியில் தேட்டம் நிகழ்வு
செயல்திறன் அரங்க இயக்கத்தின் ஏற் பாட்டில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உளச்சமூகச் செயற்பாடான தேட்டம் நிகழ்வு இன்றும் நாளையும் கைதடிப் பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது.கைதடி, வீரபத்திரர் கோயிலடியில் அங் குள்ள மகளிர் குழுவுடன் இணைந்து தேட்டம் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. பிற்பகல் 2.30 மணிக்கு குமரநகர் சனசமூக நிலையம் முன்றலில் ஆரம்பமாகும் நிகழ்வில் பிரதம விருந்தினராக நாவற்குழி மகா வித்தியாலய அதிபர் திருமதி மேகலிங்கம் வசந்தாதேவி கலந்துகொள்வார்.கைதடி மத்தி, குமரநகரில் நாளை பிற்பகல் 2 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறும். அப் பகுதி மகளிர் குழுவுடன் இணைந்து நடத்தப் படும் நிகழ்வில் கைதடி மத்தி கிராம சேவகர் பெ.செல்லையா பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வார். இரு நிகழ்வுகளிலும் செயல் திறன் அரங்க இயக்கத்தின் இயக்குநர் தே. தேவானந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற் பார்.சுனாமியாலும் யுத்தத்தாலும் பாதிக்கப் பட்ட இடங்களில் அரங்கின் ஊடான உள சமூகச் செயற்றிட்டங்களை செயல்திறன் அரங்க இயக்கம் முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியே இந்தத் தேட்டம் கலை விளை யாட்டுத்திடல். இதில் பெண்கள், சிறுவர்க ளுக்கான கிராமிய விளையாட்டுக்கள் பிர தான இடத்தைப் பெறும். குழந்தை ம.சண் முகலிங்கத்தின் எழுத்துரு நெறியாள்கையில் உருவாகிய நாடகங்களும் மேடையேற் றப்படும்.
16.05.2006
இராணுவத்தால் தாக்கப்பட்டதில்
ஒரே குடும்பத்தவர் அறுவர் காயம்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கடும் அடிகாயங்களுக்குள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க் கப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு தமது வீடுகளுக்குள் புகுந்த இராணுவத்தி னரே தம்மைத் தாக்கிப் படுகாயப்படுத்தினர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மீசாலை மேற்கு, கேணியடியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரவு 9.00 மணியளவில் கந்தையா ஜெயகுமாரலிங்கம் என்பவரின் வீட்டின் கதவுகளை உடைத்துப் புகுந்த படையினர் குறித்த ஒருவரின் பெய ரைக் கூறி, அவரைத் தெரியுமா என்று கேட்டுத் தாக்கியுள்ளனர்.
இதில், குடும்பத் தலைவரான கந்தையா ஜெயகுமாரலிங்கம் (வயது 59), அவரது மனைவியான தெய்வநாயகி (வயது 58), அவர்களது மகள்களான நாவற்குழி ப.நோ. கூ.சங்க ஊழியர் ரட்ணலோஜினி (வயது 33), யாழ்.செயலக ஊழியர் உமாதேவி (வயது 31), சாவகச்சேரி கல்வி வலய ஊழியரான செல்வரதி (வயது 28), யாழ். பல்கலைக்க ழக நுண்கலைப்பீட 3ஆம் வருட மாணவியான விஜயகலா (வயது 22) ஆகி யோரே காயமடைந்தவர்களாவர். இவர்கள் அனை வரும் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
9-5-2006
மந்துவில் இளைஞர்களை கைது செய்தது உண்மையே: படைத்தரப்பு ஒப்புதல்
யாழ். தென்மராட்சி மந்துவிலில் காணாமல் போன இளைஞர்களை கைது செய்ததாக சிறிலங்காப் படையினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
மந்துவிலில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் 40-க்கும் அதிகமானோர் இன்று செவ்வாய்க்கிழமை வறணி சிறிலங்காப் படையின் 53 ஆம் படையணியின் படைத்தளத்திற்குச் சென்றனர்.
அப்படைத்தளத்தின் படை அதிகாரியை மக்கள் சந்தித்துக் கலந்துரையாடிய போது, இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டார்.
ஆனால் ஏழு இளைஞர்களைத்தான் நாம் கைது செய்தோம் என்றும் எட்டாவது நபரைப் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டதாக படைத்தரப்பு ஒப்புக் கொள்ளப்பட்ட இளைஞர்களின் நிலையினை படைத்தரப்பினர் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
அது குறித்து விவாதிக்க நாளை புதன்கிழமை காலை கிராம சேவையாளர், பாடசாலை அதிபர் ஆகியோரையும் இளைஞர்களின் உறவினர்களையும் தமது படை முகாமிற்கு வருமாறும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மந்துவில் கோவில் ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்த எட்டு இளைஞர்கள் சில நாட்களுக்கு முன்னதாகக் காணாமல் போயினர். மந்துவிலில் சிறிலங்காப் படையினரது திடீர் நடமாட்டத்தால் சந்தேகமடைந்த பொதுமக்கள் கோயிலில் உறங்கிக் கொண்டிருந்த எட்டுப் பேரைத் தேடினர். ஆனால் அந்த இளைஞர்களில் மூவரது அடையாள அட்டை, இரத்தக் கறைகள் மற்றும் கிழிந்த ஆடைகளே அப்பகுதியில் இருந்தன.
அதைத் தொடர்ந்து கப்பூது காட்டுப்குதியில் எட்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டு வீசப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்தது. அதனால் யாழில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போக்குவரத்துப் பாதைகள் மூடப்பட்டன.
இந்நிலையில் இளைஞர்களைத் தாங்கள்தான் கைது செய்ததாக ஒப்புக்கொண்டுள்ள படைத்தரப்பு அவர்களது நிலைமையை உடனே தெரிவிக்க மறுத்துள்ளதால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
காலத்தின் தேவையறிந்து களமாடச் செல்வோம்!
தென்மராட்சி சனசமூக நிலையங்களின் ஒன்றியம் அழைப்பு
காலத்தின் தேவையறிந்து களமாடச் செல்வோம். இதன் மூலமே விரைவில் எமக்கு விடுதலை கிடைக்கும்.இவ்வாறு தெரிவித்துள்ளது தென்மராட்சி சனசமூக நிலையங்களின் ஒன்றியம்.இது தொடர்பாக மேற்படி ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில்,நாம் தொடர்ந்தும் கோழைகளாகவும், பேதைகளாகவும் தாயக மண்ணில் வாழ முடியாது. தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் ஸ்ரீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் தமிழ் மக்கள் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டும், வெட்டியும், சுட்டும் மலிவாக தமிழர் உயிர்கள் நாள்தோறும் காவு கொள்ளும் துயரம் நிறைந்த பொழுதுகள் நீண்டு வருவதை நாம் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.தென்மராட்சிப் பிரதேசத்தில் வெறும் பதினைந்தாயிரம் தப்பியோடும் மனநிலையில் உள்ள ஸ்ரீலங்கா கூலிப்படையினரே உள்ளனர். இப்பிரதேசத்தில் மக்களோ, ஒரு லட்சத்திற்கு மேல் இருக்கின்ற போது நாம் ஒவ்வொருவரும் எதிரியைத் தாக்கத் துணிந்து விட்டால் அவன் உயிர் தப்பி ஓடுவதை விட வேறு எதனையும் அவனால் செய்ய முடியாது.இந்த நிலையே குடாநாட்டின் சகல பகுதிகளையும் உள்ளடக்கியதாக இதே போன்ற மனநிலையில் வெறும் 45 ஆயிரம் ஸ்ரீலங்கா கூலிப்படையினரே இருக்கின்றனர். தமிழ் மக்களாகிய நாம் அவன் ஆக்கிரமித்து வைத்திருக்கின்ற எமது பூர்வீக நிலங்களைச் சூழ ஆறு இலட்சத்திற்கு அதிகமாக இருக்கின்றோம். இதில் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் அடங்கியிருக்கின்றனர். எமது மக்களின் பலமோ அதி உச்சமானது.புகைக்கும் எரிமலை போன்று விடுதலை வேண்டிக் கனன்று கொண்டிருக்கும் தமிழர்கள் தமது மூச்சுக்காற்றை எதிரியின் திசைபார்த்துத் திருப்புவார்கள் எனில் பெரும் சூறைக் காற்றில் பாறைகளைப் புரட்டி எறியும் புயலாய் எதிரி முகாம்கள் பார்த்திருக்கச் சாம்பல் ஆவதை உலகின் எந்தச் சக்திகளாலும் தடுக்க முடியாது என்பதை எதிரிகள் மிக விரைவில் உணர வேண்டிய நிலை வந்து விட்டது.மிகமிகக் குறுகிய நாள்களின் இடைவெளிக்குள் எமது பிரதேசத்தில் மட்டும் பதினைந்திற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் மிகக் கொடூரமாகப் படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பது எமது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், நூறு வரையான அப்பாவிப் பொதுமக்கள் குடாநாடு முழுவதும் மிகக் குறுகிய நாள்களில் ஸ்ரீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளினாலும், ஈ.பி.டி.பி. தேச விரோதிகளாலும் படுகொலைக்கு உள்ளாகி இருக்கின்றனர். இச்சம்பவங்கள் தமிழ் மக்களிடம் எதிரிகளை முற்றாய் அழித்து எமது மண்ணை விரைவாய் மீட்க வேண்டும் என்ற உணர்வலையையும் ஒவ்வொரு தமிழனிடத்தில் எழுச்சியையும் உருவாக்கி இருப்பதுடன், சுதந்திரத்தின் தேவையையும் விடுதலையின் அவசியத்தையும் அதிகம் உணர வைத்துள்ளது.தொடர்ந்தும் நெருக்கடி மிகுந்த ஓர் இக்கட்டான சூழலில் ஸ்ரீலங்காப் படைகளின் அடக்குமுறைக்குள் அடங்கி வாழ முடியாது என்பதை மக்கள் அனைவரும் உணர்ந்து விட்டனர். ஆயுதம் தரித்த எதிரிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியே போராட வேண்டும் என்ற மனநிலையில் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் பிரதேசம் எங்கும் வேகம் பெற்றுள்ளனர் என்று அதில் உள்ளது.
7.5.2006
தென்மராட்சி மந்துவிலில் 8 இளைஞர்கள் படுகொலை?
யாழ். தென்மராட்சி மந்துவிலில் சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போன 8 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மந்துவில் கிழக்கில் உள்ள கேரத்தை அம்மன் கோவில்ப் பகுதியில் கோவில் தர்மர்கர்த்தா, 4 ஆசிரியர்கள் உள்ளிட்ட 8 இளைஞர்களை சிறிலங்கா படையினர் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
சாவகச்சேரியிலிருந்து 7 கிலோ மீற்றர் வடகிழக்கில் மந்துவில் அமைந்துள்ளது.
கேரத்தை அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவின் ஐந்தாம் நாள் மற்றும் இறுதிநாள் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக கோவிலில் அனைவரும் தங்கியிருந்தனர். அப்போது வழமைக்கு மாறாக அதிகாலை 4 மணியளவில் இராணுவத்தினரது பவள் கவச வாகன நடமாட்டத்தை மக்கள் அவதானித்துள்ளனர்.
முன்னதாக அதிகாலை 1 மணியளவில் 8 முறை துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களையும் அம்மக்கள் கேட்டுள்ளனர்.
இதையடுத்து கோவிலில் தங்கியிருந்தோரை கிராம மக்கள் தேடிச் சென்றனர்.
அப்போது சிலரது உடைகள், 3 அடையாள அட்டைகள் மற்றும் இரத்தக்கரை ஆகியவை கோவில் பகுதியில் கிடந்துள்ளதை மக்கள் கண்டுள்ளனர்.
இதையடுத்து 8 பேரையும் படையினர் படுகொலை செய்திருக்கக் கூடும் என்று மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இராசநாயகம்பிள்ளை சிவானந்தமூர்த்தி (வயது 35), கோவில் தர்மகர்த்தா, ஆசிரியர்
மார்க்கண்டு புஸ்பகாந்தன் (வயது 26) கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்
கந்தசாமி பரிமேழலகன் (வயது 29)
இராமச்சந்திரன் இராசகுமார் (வயது 24)
பொன்னம்பலம் பார்த்தீபன் (வயது 22)
வைகுந்தவாசன் வைகுந்தகுமார்(வயது 22)
செல்வரட்ணம் சிவானந்தன் (வயது 22)
இரத்தினம் தயாரூபன் (வயது 22)
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்று அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சாவகச்சேரி சிறிலங்கா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஒருவாரத்துக்கு முன்பாக கோவிலில் விழா ஏற்பாட்டாளர்கள் தங்கக் கூடாது என்று படையினர் எச்சரித்திருந்ததாகவும் மக்கள் கூறுகின்றனர்.(புதினம்)