
சாவகச்சேரி மாணவன் படுகொலை: ஈ.பி.டி.பி. உறுப்பினருக்குப் பிடியாணை - நாட்டைவிட்டு வெளியேறத் தடை உத்தரவு
[ திங்கட்கிழமை, 29 மார்ச் 2010, 02:21.57 AM GMT +05:30 ]
குடாநாட்டில் பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் கபில்நாத்தின் படுகொலை தொடர்பாக ஈ.பி.டி.பி. கட்சியின் நுணாவில் முகாமில் செயற்பட்டு வந்தவர் எனத் தெரிவிக்கப்படும் ஜீவன் என்ற இளைஞனைத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்யுமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.
அத்துடன், அவர் நாட்டை வீட்டு வெளியே தப்பிச்செல்ல இயலாதவகையில் விமான நிலையம், குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், சுங்கத் திணைக்களம் ஆகியவற்றுக்கும் பிடிவிறாந்தை அனுப்புமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் ரி.ஜே.பிரபாகரன் நேற்று முன்தினம் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜீவன் என்பவர் கடந்த எட்டு வருடங்களாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நுணாவில் முகாமில் செயற்பட்டு வந்தவர் எனக் கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறுபேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி இந்தக் கடத்தல், படுகொலைச் சம்பவத்தின் சூத்திரதாரிகளாக பிரதானமாக இருவர் இருந்துள்ளனர் என்பது தெரியவந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.
கடந்த 14 ஆம் திகதி மேற்படி கபில்நாத்தை, அவரது பாடசாலையில் உயர்தர வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவரும், ஜீவன் என்பவரும் மேற்படி உயர்தர வகுப்பு மாணவனின் வீட்டுக்குக் கூட்டிவந்திருக்கின்றார்கள். அச்சமயம் அந்த வீட்டில் அந்த மாணவனின் உறவினர்கள் எவரும் இருக்கவில்லை. அங்கு வைத்து கபில்நாத்தைத் தாக்கிய அவர்கள் இருவரும், பின்னர் அன்றிரவே கழுத்தை நெரித்து அவரைக் கொலை செய்து, வீட்டின் பின்வளவில் உள்ள வாழைத் தோட்டத்தில் புதைத்திருக்கின்றனர்.
அந்த உயர்தர வகுப்பு மாணவன் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டமையை அடுத்து அவர் எல்லா விபரங்களையும் விசாரணையாளர்களிடம் ஒப்புக்கொண்டுவிட்டார் என்றும் அதனையடுத்தே கபில்நாத்தின் சடலம் மீட்கப்பட்டது என்றும் கூறப்பட்டது.
கொலையின் பின்னணி பற்றிய முழு விவரங்களையும் சம்பந்தப்பட்ட உயர்வகுப்பு மாணவர் வெளியிட்டமையை அடுத்து, இந்தக் கொலையில் அவரது சகாவாக செயற்பட்டவரும், ஈ.பி.டி.பியின் நுணாவில் முகாமைச் சேர்ந்தவருமான ஜீவன் என்பவரைக் கைது செய்வதற்கான பிடிவிறாந்தை சாவகச்சேரி நீதிவான் பிறப்பித்தார்.
படுகொலை செய்யப்பட்ட மாணவனின் சடலம் யாழ்.ஆஸ்பத்திரியில் இடம்பெற்ற மரண விசாரணையை அடுத்து உறவினர்களிடம் நேற்றுக் காலை ஒப்படைக்கப்பட்டதையடுத்து சடலம் சாவகச்சேரி பெரியரசடியிலுள்ள அவரது வீட்டுக்கு நண்பகல் 12.30 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டது.
பெற்றோர், உறவினர்கள், கொலையுண்டவரின் சக மாணவர்கள் மற்றும் அங்கு கூடியிருந்த அனுதாபிகள் அஞ்சலி செலுத்தி, இறுதி மரியாதை செலுத்தப்பட்டு சடலம் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உற்றார், உடன்பிறப்புகள் கதறியழ எடுத்துச்செல்லப்பட்ட கபிலநாத்தின் சடலம் கண்ணாடிப்பிட்டி மயானத்தில் நேற்றுப் பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டது.
மாணவனின் சடலம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த போதோ, மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு புதைக்கப்பட்ட போதோ பேழை திறக்கப்படவில்லை. வைத்தியசாலையில் கையளிக்கப்பட்டவாறே அடக்கம் செய்யப்பட்டது.
நேற்று நடைபெற்ற இறுதிக்கிரியைகளில் மாணவர்களும், அந்த ஊர்ப்பொதுமக்களும் பெரும் எண்ணிக்கையில் பங்குபற்றினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், க.அருந்தவபாலன் உட்படப் பலர் பங்கேற்றனர்.
சமூகசேவைகள் அமைச்சரும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பலத்தை சிதைப்பதற்காகப் பல கட்சிகள் தேர்தல் களத்தில் மட்டுவில் பிரசாரக்கூட்டத்தில் அருந்தவபாலன்
உதயன் 2010-03-28 21:42:51
சாவகச்சேரி,மார்ச்.29
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக் கும் தமிழ் மக்களின் பலத்தைச் சிதைக்க பல கட்சிகள் முன் நிற்கின்றன. எனவே தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில் எதிர்வரும் பொதுத் தேர்தல் மிகவும் முக்கியத்துவமா னது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பலத்தைப் பெருக்க இந்தத் தேர்தலில் முன்நிற்கின்றது.
இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தென்மராட்சிப் பகுதி வேட்பாளர் க.அருந்தவபாலன்.
அண்மையில் மட்டுவில் கிழக்கு வின் சன் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே இவ் வாறு தெரிவித்தார்.
இந்தப் பிரசாரக் கூட்டம் வின்சன் சன சமூக நிலையத்தின் தலைவர் வ.சிவானந் தன் தலைமையில் நடைபெற்றது.
அருந்தவபாலன் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில் தெரிவித்தவை வருமாறு:
தமிழ் மக்களின் பலத்தைப் பெருக்க வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அரசியல் அபிலாசைகள் போன்றவற்றை நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை எமக்குள்ளது. மிகவும் நீண்ட காலமாக எமது உரிமைகளை பெற் றுக்கொள்ள சாத்வீக போராட்டங்கள் நடைபெற்றன. அவை பயனளிக்கவில்லை. இதனால் மீண்டும் எமது உரிமைகளை பெறுவதற்கு அரசியல் ரீதியான முன் னெடுப்புக்களைச் செய்தல் வேண்டும். அதற்கு எமக்கென்ற அரசியல் பலம் தேவை. அதற்கு நாடாளுமன்ற அங்கத் தவர்களின் எண்ணிக்கையினூடாகத்தான் நிர்ணயிக்க முடியும். நாங்கள் இலங்கை அரசுடன் சர்வதேசத்தின் உதவியுடன் தன் னாட்சியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த அரசுடன் இணைந்து நிற்பவர்கள் மக்களுக்கு சலுகைகள் காட்டுவார்கள். இவற்றிற்கு மக்கள் ஏமாற்றமடையக் கூடாது. இந்தத் தேர்தலில் எமது இன ஒற் றுமையை காட்டுபவர்களாக நாம் இருக்க வேண்டும்.
நாங்கள் சம காலத்தில் மக்களின் பிரச் சினைகளைத் தீர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறோம். குறிப்பாக வன் னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக் களை சொந்த இடங்களில் குடியமர்த்தி அவர்களை மேம்படுத்துதல், உயர்பாது காப்பு வலயங்களை அகற்றுதல், இராணு வத்தின் எண்ணிக்கையை குறைக்கவும் நாம் முயற்சி எடுப்போம் என்றார். (50131)







