குருதிக் கொடை நிகழ்வு
சாலை விபத்தில் அவலச் சாவடைந்த தோழனின் நினைவாக அவரது பள்ளித் தோழர்களால் குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவனான வரணி இயற்றாலையைச் சேர்ந்த கோணேஸ்வரன் சாருஜன் என்பவர் சாவடைந்திருந்தார்.
இவரது நினைவாக இவரது பள்ளித் தோழர்கள் ”உயிருக்கு உதிரம்” என்னும் குருதிக் கொடை நிகழ்வினை நடாத்தினர் எனத் தெரிவிக்கப்பட்டது.
சாவக்கச்சேரி ஆதார மருத்துவமனைக்கு நிதி கையளிப்பு
மக்கள் வங்கியின் சாவகச்சேரி கிளையினர் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் அபிவிருத்திக்கென ஒரு தொகுதி நிதியினை இன்று கையளித்தனர்.
கிளை முகாமையாளர் க.விஜயகுமார் தலைமையிலான குழுவினர் மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று மருத்துவமனைப் பொறுப்பதிகாரி மருத்துவர் ப.அச்சுதனிடம் நிதியினைக் கையளித்தனர்.
இந் நிகழ்வில் மருத்துவமனை நோயாளர்கள், நலன்புரிச் சங்கப் பிரதிநிதி யோ.ஜெயக்குமாரும் கலந்து கொண்டார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்துடன் தண்டவாளத்தைக் கடக்க முற்பட்ட வாகனம் மோதியது எனத் தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் படுகாயமடைந்தவர் சங்கத்தானைப் பகுதியைச் சேர்ந்தவர். அதேவேளை வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதிக்கு எந்தவிதப் பாதிப்புக்களும் ஏற்படவில்லை.
விபத்தில் படுகாயமடைந்தவர் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சாவகச்சேரி அஞ்சல் அலுவலகத்தின் முத்திரைகள் காட்சிப்படுத்தல் நிகழ்வு சாவகச்சேரி மகளிர் கல்லூரி மண்டபத்தில் இன்று நடத்தப்பட்டது.
சாவகச்சேரி அஞ்சல் அலுவலகத்தினால் தேசிய அஞ்சல் வாரத்தையொட்டி வருடாந்தம் மாணவர்கள் பொதுமக்களுக்கான முத்திரைகள் காட்சிப்படுத்தல் அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இராணுவ வாகனம் மோதி ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழப்பு!!
March 25, 2018
சாவகச்சேரியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பத் தலைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். விபத்துக்குள்ளாகி வீழ்ந்த அவரை ராணுவ பேருந்து மோதியதால் உயிரிழந்தார் என்று சம்பவ இடத்தில் நின்றிருந்த வர்களால் கூறப்பட்டது.
எனினும் பொலிஸார் விசாரணையின் பின்னரே அது பற்றிக் கூறமுடியும் என்று கூறுகின்றனர்.
சாவகச்சேரி ஆதார மருத்துவமனையிலிருந்து சிறிது தூரத்தில் புளியடியில் நேற்றிரவு சுமார் 8 மணியளவில் விபத்து இடம்பெற்றது. அல்லாரை வடக்கைச் சேர்ந்த சந்திரயோகலிங்கம் மயூரன் (வயது – 28) என்பவர் உயிரிழந்தார். அவர் 4 மாதங்களான குழந்தையின் தந்தை.
“வீதியில் காரின் பின்னால் அவர் பயணித்துக் கொண்டிருந்தார். போக்குவரத்துப் பொலிஸார் காரை நிறுத்தியுள்ளனர். அதன்போது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த மயூரன் காருடன் மோதுண்டு வீதியில் வீழ்ந்தார் என்றும் அதன்போது அவருக்குப் பின்னால் பயணித்துக் கொண்டிருந்த ராணுவ பேருந்து மோதியதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று ஆரம்ப விசாரணைகளில் கூறப்பட்டது.
அவரது சடலம் சாவகச்சேரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
ராணுவ வாகன சாரதி கைது செய்யப்படவில்லை என்று அங்கிருந்தவர்கள் கூறினர். ஆனால் அது தொடர்பில் பொலிஸாரின் பதிலைப் பெறமுடியவில்லை.
ராணுவ வாகன சாரதி கைது செய்யப்படவில்லை என்று அங்கிருந்தவர்கள் கூறினர். ஆனால் அது தொடர்பில் பொலிஸாரின் பதிலைப் பெறமுடியவில்லை.
மோகனதாஸ் சம்பியன் ஆனது
March 15.2018
தென்மராட்சி பிரிவில் உள்ள விளையாட்டுக்கழகங்களுக்கிடயே நடைபெற்ற செற்றப் கரபந்தாட்டப் போட்டியில் மட்டுவில் மோகனதாஸ் விளையாட்டுக்கழகம் சம்பியனாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மோகனதாஸ் வி.க. பாலாவி இளைஞர் வி.க.ஐ எதிர்த்து இறுதிப்போட்டியில் விளையாடியது. அதில் முதல் இரண்டு செற்களையும் வென்ற மோகனதாஸ் அணி நேர் செற்றுகளில் சம்பியன் கிண்ணத்தினை வென்று சம்பியனானது.
சாவகச்சேரியில் விடுதலைப் புலிகளின் சீருடைகள்!!
On Mar 12, 2018
சாவகச்சேரி, டச்சுவீதி மருதடியில் தமிழீழ விடுதலை புலிகளின் சீருடைகளும் சீ4 வெடிமருந்தும் இன்று மீட்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.
சாவகச்சேரிப் பகுதியில் குடிநீர் குழாய் பொருத்துவதற்கான பணிகள் இடம்பெற்றபோது, குழாய் பொருத்துவதற்காக நிலம் அகழப்பட்டது என்றும் அதன்போதே இவை கண்டெடுக்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் அவற்றை மீட்டுச் சென்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
25.1.18
தவறுதலாக கிணற்றில் விழுந்த மனைவியும் காப்பாற்றக் குதித்த கணவனும் பரிதாபச் சாவு!
யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் கிணற்றினுள் தவறுதலாக விழுந்த மனைவியும், அவரை காப்பாற்றுவதற்காக கிணற்றினுள் குதித்த கணவனும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடந்த செவ்வாயன்று இடம்பெற்றுள்ளது.கைதடி வடக்கைச் சேர்ந்த சின்னையா வேலாயுதம் (வயது 72) வேலாயுதம் நாகம்மா (வயது 70) ஆகிய வயோதிபத் தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.
இதுகுறித்துமேலும் தெரியவருவதாவது,
குறித்த தம்பதியினர், பிள்ளைகள் இல்லாத நிலையில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர். கடந்த செவ்வாயன்று காலை குறித்த மூதாட்டி அருகில் உள்ள கோவிலுக்கு செல்வதற்காக குளிப்பதற்கு கிணற்றடிக்கு சென்றதாகவும், அதன்போது காலில் அணிந்திருந்த செருப்பு சறுக்கியதில் தவறுதலாக கிணற்றினுள் விழுந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இதனை அவதானித்த கணவர் தனது மனைவியைக் காப்பாற்றுவதற்காக உடனடியாக கிணற்றினுள் குதித்ததாகவும் இதனால் இருவரும் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த மூதாட்டியை காணவில்லை என உறவுக்கார பெண்ணொருவர் மூதாட்டியின் வீட்டுக்கு வந்த போது அவர் அணிந்திருந் ஒரு செருப்பு கிணற்றடியில் இருப்பதை அவதானித்து கிணற்றுக்குள் எட்டி பார்த்துள்ளார். அப்போது மூதாட்டி மட்டுமே நீரில் மிதந்த வண்ணம் இருப்பதை அவதானித்துள்ளார்.
பின்னர் உடனடியாக அப்பகுதி கிராம சேவகரிடம் அறிவிக்க சென்ற போது கிராமசேவகர் விடுப்பில் இருந்த காரணத்தினால் உடனடியாக பொலிஸாரிடம் சென்று அறிவித்துள்ளார். பொலிசார் நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை மீட்க வந்துள்ளனர். கிணற்றினுள் குறித்த மூதாட்டியின் சடலத்தை எடுத்தபோது கிணற்றுக்கு அடியில் கணவருடைய சடலம் இருப்பதை கண்டு அதனையும் மீட்டுள்ளனர்.
இது தொடர்பான மரண விசாரணையை தென்மராட்சி பிரதேச மரண விசாரணை அதிகாரி சி.கி.இளங்கீரன் மேற்கொண்டிருந்தார். சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் கடந்த புதன்கிழமை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேவேளை குறித்த சம்பவம் ஆரம்பத்தில் தற்கொலை என ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டதாகவும் ஆனாலும் அது உண்மைக்குப் புறம்பானதும் என உயிரிழந்தோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
4.1.18
March 24 2018