2.10.12

ஊரும் அயலும் அக்டோபர் 2012

மட்டுவிலில் வீடு உடைப்பு; 2 இலட்சம் உடமைகளைக் காணவில்லையாம்

 சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மட்டுவில் பகுதியில் வீடு ஒன்றினை உடைத்து பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 கடந்த 18 ஆம் திகதியே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதன் போது 2 இலட்சத்து ரூபா பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது கடந்த 18 ஆம் திகதி வீட்டின் உரிமையாளர்கள் அன்றைய தினம் பகல் வெளியில் சென்றிருந்த போதே வீடு உடைக்கப்பட்டு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.(Uthayan 28.10.12)

கடந்த வருடம் திருட்டுப் போன நகைகள் பொலிஸாரால் மீட்பு; சந்தேகத்தில் கைதானவர் மறியலில்
news
சாவகச்சேரியில் கடந்த ஆண்டு நடந்த திருட்டுடன் தொடர்புடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதில் அவரிடம் இருந்து திருட்டுப் போன பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன என்று யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:

சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருட்டு ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன்போது பெறுமதியான நகைகள் திருடப்பட்டிருந்தன. இவற்றின் பெறுமதி 6 லட்சத்து 93 ஆயிரம் ரூபா என்று மதிப்பிடப்பட்டு இருந்தது. இந்தத் திருட்டுத் தொடர்பாகப் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து கடந்த 15 ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் மட்டுவிலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து அந்த நபர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் ஒரு தொகுதி நகைகள் மீட்கப்பட்டன. ஏனைய நகைகளை தனியார் வங்கி ஒன்றில் அடைவு வைத்துள்ளதாகவும் குறித்த நபர் தெரிவித்தார்.
இதனையடுத்து குறித்த சந்தேகநபர் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கியில் அடைவு வைத்துள்ள நகைகளை மீட்பதற்கு நீதிமன்ற அனுமதி கோரிப் பொலிஸார் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர் என்று எரிக் பெரேரா மேலும் தெரிவித்தார். (Uthayan 22.10.12)


பிராந்தியத்தில் மாறிவரும் சூழலின் மத்தியில் நமது தீர்வு நோக்கி பயணப்படுகிறோம்: கைதடியில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் [

வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012,Tamilwin
]

 தமிழர்களாகிய நாம் இன்று பிராந்திய ரீதியாக மாறிவரும் சூழலின் மத்தியில் நமது தீர்வு நோக்கிய பயணிக்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். தைதடி கலைநகர் துர்க்கா சனசமுக நிலைய புதிய கட்டிட திறப்பு விழா அண்மையில் நடைபெற்றுள்ளது.

 சனசமுக நிலைய தலைவர் தங்கராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், முதன்மை விருந்தினராக பா. உறுப்பினர் சி.சிறீதரனும், சிறப்பு விருந்தினர்களாக சாவகச்சேரி பிரதேச சபை தலைவர் சி.துரைராசா, தென்மராட்சி த.தே.கூட்டமைப்பு அமைப்பாளர் க.அருந்தவபாலன், கௌரவ விருந்தினரகளாக சாவகச்சேரி பிரதேசசபை செயலாளர் தி.தர்சினி, சனசமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் செ.ஜெகதீசன், சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் ச.சதங்கராசா, கைதடி கிழக்கு கிராம அலுவலர் சி.ரவீந்திரன், கைதடி சனசமுக நிலையங்களின் ஒன்றிய தலைவர் இ.கந்தசாமி, சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் த.தர்சன் ஆகியோர் கலந்துகொண்டனர். மற்றும் சனசமு நிலைய செயலாளர் தர்சன் உறுப்பினர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


நிகழ்வில் விருந்தினர்கள் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டு, சனசமுக நிலைய கொடியேற்றப்பட்டு பெயர்ப் பலகையை பா.உறுப்பினர் சி.சிறீதரன் திரை நீக்கம் செய்து வைத்தார். அத்தோடு புதிய கட்டடித்தினையும் மண்டபங்களையும் சிறப்பு விருந்தினர்கள் நாடாவைவெட்டி திறந்து வைத்தனர்.

இங்கு முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் உரை நிகழ்த்துகையில், இந்த சனசமுநிலையம் இங்கு திறக்கப்பட்டிருப்பது. இந்த கிராமத்தின் அறிவுத் தேடலையும் இக்கிராமத்தின் ஒருங்கிணைந்த மக்களின் செயலூக்கத்தையும் எடுத்துக்காட்டுகின்றது. எமது கிராமங்களில் முன்பெல்லாம் சனசமுகநிலையங்களின் பங்களிப்பு மிகப்பபெரிதாக இருந்தது. தொலைதொடப்பு வசதிகள் மற்றும் செய்தி ஊடக வளர்ச்சிகள் கிராமங்களை சென்றடையாத காலங்களில் செய்திகளை அறியவும் உலக நடப்புகளை அறிந்து கொள்ளவும் இந்த சனசமுநிலையங்கள் துணையாக இருந்திருக்கின்றன.


கலை, இலக்கியம் மற்றும் முற்போக்கு சிந்தனைகளின் இயங்குதளமாகவும் இந்த இடம் அமைந்திருக்கின்றது. ஆகவே சனசமு நிலையங்களை ஸ்தாபித்தல், அதை தொடர்ந்து இயங்கச்செய்தல் இன்றைய சூழலிலும் மிகவும் அவசியமாக இருக்கின்றது. இன்று தொலைத்தொடர்பு வசதிகள் ஊடக வசதிகள் பெருகியுள்ள நிலையில் சனசமு நிலையங்கள் கிராமிய வாசனையை காப்பாற்றுகின்ற பணியை செய்ய வேண்டியவனவாக கடமைப்பட்டுள்ளன. நமது கிராமங்களின் சிந்தனையும் ஒற்றுமையும் இலட்சியமும் இக்காலத்திற்கு தேவையாகின்றது. இன்று நாம் முக்கியமான பயணத்தில் தமிழர்களாகிய நாம் பயணப்படுகின்றோம்.

சர்வதேச மயப்பட்ட எமது இனத்திற்கான பிரச்சினை இன்று பிராந்திய ஒழுங்கிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றுள்ளது. எமது மண்ணில் தாக்கம் செலுத்தக்கூடிய இந்திய வல்லரசின் வெளியுறவு கொள்கைகளிலும் மாற்றத்திற்கான அறிகுறிகள் புலப்பட ஆரம்பித்துள்ளன. தமிழகத்திலும் இனிவரும் காலங்களில் மிகமுக்கியமான முனைப்புகள் வெளிப்படுமென எதிர்வுகூறப்படுகின்றன.எனவே இவை எம்மோடு பிணைந்தவையாக இருப்பதால் எமது கொள்கை இலட்சியம், சமுக ஒற்றுமை என்பனவும் எமது தீர்வுநோக்கிய பாதைக்கு முக்கியமாக தென்படுகின்றது. நாம் கடந்து வந்த பாதையயை மறந்துவிடாமல் இருப்பதும் இனிவரும் நாட்களுக்கு பலமான ஒன்று. என தெரிவித்துள்ளார்.
பிறந்து ஒருநாளான ஆண் சிசுவை விற்பனை செய்த தாய், வாங்கிய பெண் கைது: யாழ்.கைதடியில் சம்பவம் [
 வெள்ளிக்கிழமை, 12 ஒக்ரோபர் 2012, Tamilwin ]
 யாழ். கைதடியைச் சேர்ந்த தாயொருவர் வறுமை காரணமாக பிறந்த ஒருநாள் நிரம்பிய சிசுவை வளர்ப்பதற்கு முடியாமல் விற்பனை செய்துள்ளதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். பிறந்து ஒரு நாளான ஆண் சிசுவை மானிப்பாயில் உள்ள பெண் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். இது தொடர்பாக மனிப்பாய் பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததும், இரு பெண்களையும் குழந்தை விற்பனைக்கு உதவிய ஒரு நபரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


முதியோர் இல்லத்தில் இணைந்தவருக்கு அதிர்ச்சி!

கைதடி அரச முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்ட முல்லைத்தீவைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் 20 வருடங்களுக்கு மேலாகக் காணாமற் போயிருந்த தனது தாயாரையும் அங்கு கண்டு கட்டித் தழுவிய உணர்வு பூர்வமான சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைதடியில் இடம் பெற்றுள்ளது. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கனகசபை அற்புதானந்தஈஸ்வரன் (வயது65) என்பவரே தனது வயது முதிர்ந்த தாயாரான கனகசபை பரமேஸ்வரி (வயது95) என்பவரை 20 வருடங்கள் கழித்துக் கண்டுகொண்டமையால் ஆனந்தக் கண்ணீர் விட்டார். இரு தசாப்தத்துக்குப் பின்னர் தனது மகனைக் கண்டு தாயாரும் தனது வயது முதிர்ச்சி மற்றும் நோய் வாய்ப்பட்ட நிலையிலும் அவரைக் கட்டி அணைத்து முத்தமிட்டார்.

 இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் கைதடி முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்கள் மத்தியில் ஒரு உணர்வு பூர்வமான சந்தோஷத்தை ஏற்படுத்தியதாக இல்லத்தின் அத்தியட்சகர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகக் கொண்டவர் கனகசபை அற்புதானந்த ஈஸ்வரன் அவருக்கு இப்போது வயது 65. கடந்த போரினால் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை இழந்த இவர் தனிமையில் தவித்து வந்தார். ஊனமுற்ற நிலையில் இருந்த இவரைப் பராமரிக்க எவரும் இல்லாமையால் அப்பகுதிக் கிராம அலுவலர் மூலம் கைதடி அரச முதியோர் இல்லத்தில் இவர் சேர்க்கப்பட்டார்.

 கடந்த ஒரு மாத காலத்துக்கு முன்னரே அவர் முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்டார். ஏற்கனவே இவரது தாயாரான கனகசபை பரமேஸ்வரி கடந்த 20 வருடங்களாக கைதடி முதியோர் இல்லத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகிறார். அவருக்குக் கண்பார்வை இல்லை. படுத்த படுக்கையிலேயே இருக்கிறார். அவர் அங்கு இருப்பது மகனான அற்புதானந்தஈஸ்வரனுக்குத் தெரியாது.

 இந்த நிலையில் அற்புதானந்த ஈஸ்வரன் முதியோர் இல்ல நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று யாழ்ப்பாணத்தில் இருக்கும் உறவினரைச் சந்திக்கச் சென்றுள்ளார். உறவினர் வீட்டுக்குச் சென்றபோதுதான் தனது தாயார் முதியோர் இல்லத்தில் இருக்கும் விடயம் உறவினர் மூலம் அவருக்குத் தெரிய வந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் அற்புதானந்த ஈஸ்வரன் மீண்டும் முதியோர் இல்லத்துக்குச் சென்றார். அவர் முதியோர் இல்ல வாசலிலேயே பலத்த சத்தத்துடன் அழத் தொடங்கிவிட்டார். இதனால் இல்ல நிர்வாகிகள் திகைப்படைந்தனர். பின்னர் விடயத்தை விசாரித்த போது தான் உண்மை தெரியவந்தது. தனது தாயார் இல்லத்தில் இருக்கும் செய்தியை அவர் இல்ல நிர்வாகிகளிடம் கூறினார். உடனடியாக இந்தத் தகவல் தாயாருக்குத் தெரிவிக்கப்பட்டது. மகனான அற்புதானந்தஈஸ்வரனும் தாய் இருக்கும் இடத்தை நோக்கி ஓடிச் சென்றார். அங்கே தாயும் மகனும் ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்டனர். இது அங்கு கூடியிருந்த அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்ததாக இல்லத்தின் அத்தியட்சகர் கூறினார்.(Uthayan)
iv dir="ltr" style="text-align: left;" trbidi="on">









சைக்கிளுக்கு இலக்கத்தகடு பெறாதோர் மீது நடவடிக்கை(3.10.12)
சைக்கிள்களுக்கு இந்த ஆண்டுக்கான இலக்கத்தகடு பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சைக்கிள்களுக்கு இந்த ஆண்டுக்கான இலக்கத்தகடு பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப் படும் சைக்கிள்கள் பொலிஸாரின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன. இது குறித்த அறிவிப்பைப் பொலிஸார் விடுத்துள்ளனர். சைக்கிளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் நலன் கருதி சாவகச்சேரிப் பொதுச் சந்தையில் நகராட்சி மன்றத்தால் தினமும் காலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை இலக்கத்தகடுகள் விநியோகிப்பதற்கான விசேட கருமபீடம் நேற்று செவ்வாய்க்கிழமை தொடக்கம் செயற்படுவதாகவும், பொதுமக்கள் சைக்கிள்களுக்கான இலக்கத் தகடுகளைப் பெற்று அசௌகரியங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.