4.9.07

செய்திகளில் ஊரும் அயலும்

Youth reported missing in Thenmaraadchi

[TamilNet, Wednesday, 05 December 2007, 17:18 GMT]
A youth from Kodikaamam in Thenmaraadchi taking his heard of cattle for grazing Monday morning had not returned home though the cattle had, according to complaints registered by his family members with Jaffna Human Rights Commission (HRC) Wednesady.
The youth reported missing with the HRC is Nadrasa Suresh, 22, a resident of Aiyanaar Koayiladi in Kodikaamam, Thenmaraadchi.



18.11.2007
கைதடிப்பகுதியில் சுற்றிவளைப்புத் தேடுதல்.

யாழ்ப்பாணம் கைதடிப் பகுதி மற்றும் நாவக்குழிப்பகுதிகளில் பெருமெடுப்பில் சிறிலங்காப் படையினர் கவசவாகனங்களில் கொண்டுவந்து குவிக்கப்பட்டு பாரிய சுற்றிவளைப்புத் தேடுதலை நடாத்தினர்.

இச்சுற்றிவளைப்புத் தேடுதல் நேற்றுக் காலை 9.00மணியிலிருந்து மதியம் 12.00மணிவரை இடம்பெற்றது.


செவ்வாய் 13-11-2007 19:49 மணி

யாழ் குடாநாட்டில் இருவர் படைப் புலனாய்வாளர்களினால் சுட்டுக்கொலை
யாழ் குடாநாட்டில், சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களினால் இரு பொதுமக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்று செவ்வாயக்கிழமை மதியம் 12:00 மணியளவில், யாழ் நகரில் உள்ள வணிக நிலையம் ஒன்றிற்குள் புகுந்த சிறீலங்கா படைப் புலனாய்வாளர்கள், அங்கிருந்த நாற்பத்திரண்டு அகவையுடைய தாமோதரம்பிள்ளை மதன்குமார் என்பரை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.

தென்மராட்சி சரசாலையைச் சேர்நத் இவர், அரிசி ஆலை ஒன்றையும் தொலைத்தொடர்பு நிலையம் ஒன்றையும் இயக்கி வந்துள்ளார்.

இதேபோன்று இன்று பகல் குருநகர் தண்ணீர் தாங்கி வீதியில் வைத்து, இருபத்து நான்கு அகவையுடைய சிந்தா துரைராஜா ஜேம்ஸ் லக்சன் என்ற இளைஞர், சிறீலங்கா படைப்புலனாய்வாளர்களினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.




அரவம் தீண்டியதில் இரு படையினர் பலி! .
27.10.2007

தென்மராட்சி கல்வயல் பகுதியில் அரவம் தீண்டி இரு சிறீலங்காப் படையினர் பலியாகியுள்ளனர். சாவகச்சேரி கல்வயல் பகுதியில் அமைந்துள்ள காவலரணில் கடமையில் ஈடுபட்ட படையினரை பாம்புக் கடிக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை இரவு காவலரணில் கடமையில் ஈடுபட்ட போது பாம்பு கடித்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

கைதடி பல்நோக்கு கூட்டுறவுச் சங்க முன்னாள் தலைவர் வெட்டிக்கொலை
[திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2007, 07:00 PM ஈழம்] [புதினம்]
யாழ். தென்மராட்சி கைதடி பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவரான சி.சிவசுப்பிரமணியம் (வயது 68) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்கள் மற்றும் துணை இராணுவக் குழுவினரான ஈ.பி.டி.பி.யினரால் கடத்திச் செல்லப்பட்டு சிவசுப்பிரமணியன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அவருடைய உடல், அவரது வீட்டுக்கு அருகாமையில் ஆள் நடமாற்ற இடத்தில் வெட்டுக்காயங்களுடன் வீசப்பட்டிருந்தது.

சாவகச்சேரி மாவட்ட நீதிபதி சடலத்தைப் பார்வையிட்டு சடலப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.



புதிய காவலரண்

[வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2007புதினம்]
யாழ். தென்மராட்சி சாவகச்சேரி டச்சு வீதியில் சிறிலங்காப் படையினரால் புதிய காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

அவ்வீதியூடாக போக்குவத்தில் ஈடுபடும் மக்களை அவதானிக்க இக்காவலரணை படைத்தரப்பினர் அமைத்துள்ளனர்.


இருவர் கடத்தல்

யாழ். தென்மராட்சி சரசாலைப் பகுதியில் நேற்று முன்நாள் காலையில் இருவர் கடத்தப்பட்டுள்ளனர். சரசாலையைச் சேர்ந்த ஆர்.சண்முகலிங்கம் (வயது 41), சரசாலையைச் சேர்ந்த வ.சின்னத்தம்பி (வயது 39) ஆகியோர் கடத்தப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இருவரினது வீட்டிலிருந்தும் நேற்று முன்நாள் காலை 7:00 மணியளவில் அவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

4 பேர் சரண்- 4 பேர் கடத்தல்
[வெள்ளிக்கிழமை, 12 ஒக்ரொபர் 2007, 20:43 ஈழம்] [புதினம்.கொம்]
யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த மூன்று நாட்களில் 4 பேர் அடைக்கலம் அடைந்தனர். 4 பேர் கடத்தப்பட்டுள்ளனர்.


தென்மராட்சி, கைதடி மேற்கு கைதடியைச் சேர்ந்த மீன் வியாபாரியான சீனியர் ரவிச்சந்திரன் (வயது 40)

தென்மராட்சி மீசாலையைச் சேர்ந்த சஞ்சீவன் (வயது 20)

தென்மராட்சி கைதடியைச் சேர்ந்த சின்னையா பார்த்தீபன் (வயது 27)

காளிகோயிலடி சங்கானை சோமசுந்தரம் தசரதகுமார் (வயது 40) ஆகியோர் அடைக்கலம் அடைந்தனர்.

320, மானிப்பாய் வீதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நடராசா சாந்தலிங்கம்

மண்டான் கரணவாய் மேற்கு கரவெட்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி இந்திரகுமார்

அந்திரான் கரணவாயள் மேற்கு கரவெட்டியைச் சேர்ந்த செல்வநாயகம் ரமேஸ்

புதுத்தோட்டம் நெல்லியடி கிழக்கு கரவெட்டியைச் சேர்ந்த சின்னத்துரை சிறீஸ்கந்தராசா

கைதடி மத்தி கைதடியைச் சேர்ந்த சுப்பையா சுரேஸ்குமார் ஆகியோர் கடத்தப்பட்டனர்.


யாழ். வடமராட்சி வல்லிபுரம் பகுதியில் விறகு வியாபாரிகள் மூன்று பேர் சிறிலங்காப் படையினரால் தாக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளானோர் வடிவேலு கந்தசாமி, வ.ஆறுமுகம், கந்தையா சத்தியமூர்த்தி ஆகியோர் எனத் தெரியவந்துள்ளது.



செப்ரெம்பர்/டிசம்பர் 2007
9 seek protection with HRC, 4 reported missing in Jaffna

[TamilNet, Saturday, 29 September 2007, 06:09 GMT]
Nine civilians in Thenmaraadchi, ranging from ages 18 to 67, including youths and family men, sought protection with Human Rights Commission (HRC) in Jaffna Friday due to death threats from Sri Lanka Army (SLA) and SLA-backed paramilitaries. Meanwhile, four civilians are reported missing by their family members with HRC Jaffna.

The seven seeking HRC protection are from Chaavakachcheari, Kodikaamam, Meesaalai, Kerudaavil, Manthuvil, Madduvil and Changkaththaanai in Thenmaraadchi.

The four civilians reported missing are:


Pathmalathan Pathmayogan, 31, a labourer from Kaladdi in Jaffna, reported missing since Friday.

Nagalingam Perinpanathan, 32, a family man from Ketpali, Chaavakachcheari, missing since Wednesday.

Nagarasa Tharmarajan, 41, a driver from Puloali in Vadamaraadchi missing since 9 September.

Kunasingham Rajmohan, 48, a family man from Koapaai, missing since first of August.
Most of these men had gone missing after leaving home to attend personal errands.


சாவகச்சேரியில் சுட்டுக்கொலை
http://www.eelampage.com 27.09.2007
தென்மராட்சி சாவகச்சேரியில் உள்ள பலசரக்கு கடையின் உரிமையாளரான மீசாலையைச் சேர்ந்த செல்வராஜா அகிலன் (வயது 36 ) இன்று காலை 9 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரது கடைக்குச் சென்ற ஆயுததாரிகள் அவருடன் உரையாடிக்கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அகிலன்
சாவகச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் இடைவழியில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் சாவகச்சேரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.



5 in Thenmaraadchi seek HRC protection

[TamilNet, Wednesday, 26 September 2007, 00:44 GMT]
Five civilians , including three youths between 20 and 22 years of age, in Thenmaraadchi sought protection with the Human Rights Commission (HRC) Jaffna due to death threats from the Sri Lanka Army (SLA) and SLA-backed paramilitaries, sources in Jaffna said.
Three youths are from Amman Koiyiladi in Chaavakachcheari.

The number of civilians from Thenmaraadchi area seeking protection due to the deteriorating security environment has escalated recently, civil society sources in Jaffna said.



மனித உரிமைகள் ஆணைக் குழுவில் 7 பேர் சரண்
Sep 25, 2007
யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்கா படை மற்றும் அவற்றுடன் சேர்ந்தியங்கும் துணைப் படைகளின் அச்சுறுத்தல் காரணமாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஏழு பேர் சரணடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. சரணடைந்தவர்களில் ஆறு பேர் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப் படுகின்றது. சரணடைந்தோர் 24 அகவை தொடக்கம் 56 அகவையுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குடும்பத்துடன் தஞ்சம் கோரி சரண்

தென்மராட்சி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கடந்த சனிக்கிழமையன்று யாழ். சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சரணடைந்தனர்.

பெற்றோர் மற்றும் 13 வயதுக்கும் குறைந்த 3 பிள்ளைகளைக் கொண்ட அக்குடும்பத்தினருக்கு சிறிலங்கா இராணுவத்தினரும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரும் கொலை அச்சுறுத்தல் விடுத்த நிலையில் குடும்பத்துடன் தஞ்சம் கோரி சரணடைந்துள்ளனர்.

குருநகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரும் முன்னர் இதுபோல் தஞ்சமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.