மட்டுவில் பகுதியில் குடும்பஸ்தரை காணவில்லை
[23 - December - 2007] [Thinakural]
யாழ்.தென்மராட்சிப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த சண்முகலிங்கம் தேவதாஸ் (வயது42) என்பவரே கடந்த 18 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளார்.
அன்றைய தினம் வயலுக்கு அவர் சென்றதாகவும் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லையென்றும் கூறப்படுகிறது.
இருவர் சரண்- பாடசாலைச் சிறுமி கடத்தல்
[வியாழக்கிழமை, 06 டிசெம்பர் 2007, 03:09 PM ஈழம்] [Puthinam]
யாழில் இருவர் சரணடைந்துள்ளனர். பாடசாலைச் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர் விடுத்த உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ். சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக் குழுவில் இன்றும் இருவர் சரணடைந்துள்ளனர்.
சிறுப்பிட்டி மேற்கு நீர்வேலியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய விவசாயி மற்றும் பாசையூரிலிருந்து இடம்பெயர்ந்து குருநகரில் தங்கியிருந்த 30 வயது கடற்றொழிலாளி ஆகியோர் சரணடைந்தவர்கள் ஆவர்.
இதனிடையே சாவகச்சேரி பெரியமாவடி வித்தகத்தைச் சேர்ந்த பாக்கியநாதர் பிரதீபா என்ற (வயது 10) பாடசாலைச் சிறுமியை காணவில்லை என்று யாழ். சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இன்று வியாழக்கிழமை காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆம் நாள் வீட்டில் இருந்து கல்வி கற்கும் பாடசாலையான சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலைக்குச் சென்ற பிரதீபா அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என்று அம் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Youth reported missing in Thenmaraadchi
[TamilNet, Wednesday, 05 December 2007, 17:18 GMT]
A youth from Kodikaamam in Thenmaraadchi taking his heard of cattle for grazing Monday morning had not returned home though the cattle had, according to complaints registered by his family members with Jaffna Human Rights Commission (HRC) Wednesady.
The youth reported missing with the HRC is Nadrasa Suresh, 22, a resident of Aiyanaar Koayiladi in Kodikaamam, Thenmaraadchi.