3.4.08

செய்திகளில் ஊரும் அயலும் ஏப்ரல்-ஜூன் 2008






Sat Jun 21 2008
மழைக்குச் சிந்திய நெல்மணிகளில் இருந்து நெல் அறுவடை செய்த சாவகச்சேரி விவசாயி! யாழ்ப்பாணத்திலும் சிறுபோகம் செய்ய முடியும் என்பதற்கு இந்த முயற்சி ஓர் எடுத்துக்காட்டு
எமது நாட்டில் இன்று எக்காலத்திலும் கண்டிராத விலையேற்றத்தினை அரிசி கண்டுள்ளது. அரிசி விலை ஒரு கிலோ 100 ரூபாவினைத் தாண்டியுள்ளது. இவ் விலையேற்றத்திற்குக் காலம் தாழ்த்திப் பெய்த பெரு மழையும் அதிகரித்த வெள்ளப் பெருக்கும் காரணமாக இருந் தது. அரிசி விலை அதிகரிப்பு பல குடும் பங்களைப் பட்டினி விளிம்புக்குத் தள்ளி யுள்ளது. 2006 ஓகஸ்ட் மாதம் ஏ9 வீதி போக்குவரத்துக்கு மூடப்பட்டபோது அரிசிக்கு தட்டுப்பாடு இருந்த போதிலும் கப்பலில் கொண்டு வரப்பட்ட அரிசி கட்டுப்பாட்டு விலையில் கிலோ 30 ரூபாவாக மக்களுக்கு வழங்கப்பட்டது. அவ் வேளையில் பொதுமக்களுக்குக் கிடைத்த வருமானத்தில் பங்கீட்டு அடிப் படையில் வழங்கப்பட்ட அரிசி உட்பட ஏனைய பொருள்களை வாங்க முடிந்தது. வருமானமில்லாத நிலையில் அரிசியின் விலை அதிகரிப்பு பல குடும்பங்களைப் பட்டினியின் விளிம்புக்குக் கொண்டு சென்றுள்ளது.
கப்பலில் கொண்டுவரப்பட்ட அரிசி யாழ். மாவட்ட மக்களின் உணவுத் தேவைக்கு நான்கு மாதங்களுக்குப் போதுமானதாக களஞ்சியங்களில் உள்ள தாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் சிறிது நாட்களில் 3 மாதங்களுக்கு போதுமான அரிசி கையிருப்பில் உள்ள தாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அண் மையில் கப்பலில் கொண்டுவரப்பட்ட அரிசி உடனடியாகப் பலநோக்குக் கூட் டுறவுச் சங்கங்களுக்கு அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு பங்கீட்டு அடிப் படை யில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. இதனை நோக்கும்போது களஞ் சியங்களில் உள்ள அரிசி மாவட்ட மக்க ளுக்கு இரண்டு மாதங்களுக்கோ அல்லது அதற்குக் குறைவான காலத்திற்கோ போது மானதாக இருக்குமென்பதில் சந்தேகமே.
இவ்வேளையில் தென்மராட்சிப் பிரதேச நெற் செய்கையாளர் ஒருவர் அறுவடை யின் போது சிதறிய நெல்மணிகள் முளைத் தபோது அதனை உரிய முறையில் பரா மரித்து பயன் கண்டதாக பத்திரிகையில் வெளியான செய்தி மகிழ்ச்சியைத் தந்தது.
கடந்த வருடம் நெற்பயிர்களுக்கு உரிய வேளையில் மழை பெய்யாததாலும், காலந்தாழ்த்தி பெருமழை பெய்ததாலும் நூற்றுக் கணக்கான ஏக்கர் காணிகளில் நெற்பயிர்கள் அழிந்தது அனைவரும் அறிந் ததே. இருப்பினும் கொடிய வெய்யிலிலும் அளவுக்கதிகமான மழை வெள்ளத்திலும் தப்பிப் பிழைத்த நெற்பயிர்கள் நெற்செய் கையாளர்களே எதிர்பார்க்காத அளவு விளைச்சலைக் கொடுத்துள்ளன.
அறுவடை செய்யப்பட்டு வயல்களில் விடப்பட்ட நெற்கதிர்களும், அறுவடைக் குத் தயாரான நிலையில் வயல்களில் காய்ந்திருந்த நெற்பயிர்களும் பெருமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கின. மழை விட்டதும் அவசரஅவசரமாக வெட்டப் பட்ட பயிர்களிலிருந்து சிதறிய நெல்ம ணிகள் அனைத்து நெல்வயல்களிலும் முளைத்துக் காணப்பட்டன. நெல் மணி கள் முளைத்து பயிராகும் வேளையில் மீண்டும் பெரு மழை பெய்து வயல்களில் வெள்ளம் தேங்கி நின்றதால் பயிர்கள் செழிப்பாக வளரத் தொடங்கின. இந்தப் பயிர்களிலிருந்து பயன்பெற எந்த வொரு நெற்செய்கையாளரும் முன்வரவில் லை. ஆனால் தென்மராட்சி பிரதேசத்தில் சாவ கச்சேரி வடக்கைச் சேர்ந்த பொன் னம்பலம் கனகரத்தினம் என்பவர் தனது 16 பரப்புக் காணியில் விளைந்த பயிர்களில் பயன்பெற விரும்பினார். வயல்களில் போதிய அளவு நீர் தேங்கியிருந்ததால் உரிய பசளை யினையிட்டு பராமரித்து வந்தார். பயிர்கள் குடலைப் பருவமடையும் வரை வயல் களில் நீர் நின்றதால் பயிர்கள் செழிப்பாக வளர்ந்தன. குடலைப் பருவத்தில் பச ளை யிடுவதற்கு வயல்களில் நீர் போதா மையால் சுமார் 100 மீற்றருக்கு அப்பால் உள்ள குளத்திலிருந்து நீரிறைக்கும் இயந்திரம் மூலம் தண்ணீரை வயல்க ளுக்குப் பாய்ச்சினார். அவரது முயற்சி வெற்றியளித்தது. இன்னும் இரு வாரங் களில் நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாராக உள்ளன.
நெல்வயல்களில் பயிர்கள் முளைத் ததை கண்ட நான் பரீட்சார்த்தமாக மேற் கொண்ட முயற்சி காலபோகத்தின் போது கிடைத்த விளைச்சலைப் போன்று தற் போது பயிர்கள் விளைந்துள்ளன. எனது முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள் ளதால் இனி வரும் காலங்களில் இவ் வயல் களில் குளத்து நீரின் உதவியுடன் சிறு போக நெற்செய் கை மேற்கொள்ளத் தீர்மானித்துள் ளேன் எனப் பெருமையுடன் தெரிவித்தார் அவர்.
மலைநாட்டு பயிர்களான கோவா, கரட், போஞ்சி, உருளைக்கிழங்கு, முள்ளங்கி, கறி மிளகாய் போன்ற பயிர்வகைகளை எமது மண்ணில் விளைவித்து சாதனை படைத் தவர்கள் யாழ்.மாவட்ட விவசாயிகள். நீர்ப் பாசன வசதிகள் குறைந்த எமது மண்ணில் உள்ள குளங்களைப் புனரமைத்தும், நன் னீர்த் தேக்கங்களை கடல்நீர் புகவிடாமல் தடுத்தும் நெற்பயிர்ச் செய்கைக்கு வழங் குவார்களாயின் நிச்சயம் யாழ். மாவட் டத்திலும் சிறுபோக நெற் செய்கையினை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியுமென பெருமையுடன் அவர் கூறினார்.
யாழ்.மாவட்டத்தில் கடந்த வருடம் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல் களிலும் முளைத்த நெற்பயிர்களை நன்னீர் வசதியிருந்தவர்கள் முயற்சி செய்திருந் தால் அந்தக் குடும்பங்கள் காலபோக நெற்செய்கை அறுவடை வரை உணவுத் தேவைக்கு வெளியில் அரிசி வாங்கும் அவசியம் இருந்திருக்காது எனவும் அவர் கூறினார்.
ஒரு பயிர் அறுவடை செய்தால் குறைந்தது ஒரு மாதமாவது நிலத்தினையும் விதை யினையும் காயவைத்து பயிர் செய்தால் ஆரோக்கியமானவிளைச்சலைப் பெறு வதுடன் நிலங்களுக்கு ஏற்படும் பாதிப் புக்களையும் குறைக்க முடியுமென அனு பவம் வாய்ந்த நெற் செய்கையாளர்கள் தெரிவித்தனர். இதேவேளை மிருகங்களின் கழிவுக ளையும் இலை குழைகளையும் பசளையாகப் பாவித்த காலத்திலிருந்து கடந்த வருடம் வரை இந்த வருட கால போக நெற் செய்கையின் பின்னர் பெய்தது போன்ற மழை ஒரு காலமும் பெய்யவில்லை யெனவும் அவ்வாறான மழை பெய்திருந்தால் பொன்னம்பலம் கனகரத்தினம்போல் எமது காலத்திலும் இந்த மண்ணில் இரு தட வை கள் நெல் உற்பத்தி செய்திருப் போமென வயோதிப நெற்செய்கையாளர்கள் சிலர் தெரிவித்தனர்.
பொன்னம்பலம் கனகரத்தினத்தின் முயற் சிகளையும் அவரது கருத்துக்களையும் கவனத் தில் எடுத்து எமது பிரதேசத்தில் சிறுபோக நெற்செய்கையை ஊக்குவிக்க அனைவரும் முன் வரவேண்டும்.
சாவகச்சேரி நகர சபையினரின் உள்ளூராட்சி வார நிகழ்வுகள்
சாவகச்சேரி நகர சபையினர் உள்ளூ ராட்சி வார நிகழ்வுகளை எதிர்வரும் ஜூலை 9ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை அனுஷ்டிக்கவுள்ளனர்.
இவ்வாரத்தில் முன்பள்ளி சிறார்கள், ஆரம்பப் பிரிவு மாணவர்கள் ஆகியோருக் கான விளையாட்டுப் போட்டிகள், தரம் 5 மாணவர்களுக்கான சித்திரப்போட்டி, இடை நிலைப் பிரிவு மாணவர்களுக்கான பண் ணிசைப் போட்டி, உயர்பிரிவு மாணவர்க ளுக்கான கட்டுரைப் போட்டி ஆகியவற் றையும்,
சனசமூக நிலையப் பிரதிநிதிகள், சாவ கச்சேரி கைத்தொழில் வணிகர் மன்ற உறுப் பினர்கள் ஆகியோருக்கான பொது அறிவுப் போட்டிகளையும் நடத்தவுள்ளனர்.
அத்துடன் சந்தை, பொதுமயானங்கள் ஆகியவற்றில் சிரமதானங்களையும், சூழல் பாதுகாப்பு, டெங்கு, மலேரியா ஒழிப்பு கருத் தரங்குகளையும், புத்தகக் கண்காட்சியி னையும் நடத்தவுள்ளனர்.
உள்ளூராட்சி வார நிகழ்வுகள் சபை எல் லைக்குட்பட்ட மக்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளவுள்ளதால் அனைத்து மக்க ளும் நிகழ்வுகளில் பங்குபற்றுமாறு நகர சபைச் செயலாளர் திருமதி கு.ஆறுமுகம் கோரியுள்ளார்.
உள்ளூராட்சி வார இறுதிநாள் போட்டிக ளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள், சான்றிதழ்கள் ஆகியன வழங்கப்படுமென வும் அரச சேவையில் 25 வருட சேவையைப் பூர்த்திசெய்த நகரசபை உத்தியோகத்தர் கள் கௌரவிப்பும் உள்ளூராட்சி வார நூல் வெளியீடும் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

(Uthayan)






Mon Jun 16 2008



Fri Jun 13 2008


Thu Jun 12 2008


Wed Jun 11 2008



தென்மராட்சியில் தாழப்பறந்த விமானங்கள்
பீதியடைந்த மக்கள் பாதுகாப்புத் தேடினர்!
தென்மராட்சி பிரதேசத்தில் நேற்று காலை நான்கு கிபிர் விமானங்கள் தாழப் பறந்து சென்றதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
நேற்றுக் காலை 8மணிக்கு விமானங்கள் பயங்கர இரைச்சலுடன் சென்றதால் மக்கள் வீடுகளிலிருந்து வெளியே வந்து பாதுகாப்புத் தேடினர். இதே வேளை திடீரென விமானங்கள் வந்ததால் படையினரும் வெளியே வந்து முன் எச்சரிக்கையுடன் காணப்பட்டனர்.
முகமாலையில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது நேற்றுக்காலை 8 மணியளவிலும் பின்னர் நேற்றுப் பிற்பகல் 3 மணியளவிலும் விமானப்படையினரின் ஜெற் விமானங்கள் குண்டுவீச் சுத் தாக்குதல்களை நடத்தின என்று படைத்தரப்பு தெரிவிக்கப்பட்டது.
அப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் பதுங்குகுழிகள் மீதே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது. (Uthayan)




(Uthayan)


Tue Jun 3 2008
சிறார்களை நல்லமுறையில் வழிப்படுத்துவதன்மூலம் எதிர்காலத்தில் நல்ல சமூதாயத்தை உருவாக்க முடியும் சாவகச்சேரி நீதிபதி அ.பிறேம்சங்கர் தெரிவிப்பு
சிறார்களை நல்ல முறையில் வழிப்படுத்துவதன் மூலமே எதிர்காலத் தில் அவர்களை நல்ல பிரஜைகளாக வளர்க்க முடியும். ஆரம்பக் கல்வியின் போது அதற்கான அத்திபாரம் போடப்பட வேண்டும். சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மைதா னத்தில் நடை பெற்ற புவேந்தன் முன்பள்ளி மாணவர்களின் மெய்வன்மைப் போட்டி யில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய சாவகச்சேரி மாவட்ட நீதிபதி அ.பிரேமசங்கர் இவ்வாறு தெரி வித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்று கையில்:
சிறுவர் முன்பள்ளிகள் ஒர் அன்னைக்குச் சமனாககொள்ளக் கூடியவை. இன்றைய பொருளாதார நெருக்கடிமிக்க கால கட்டத்தில் பெற்றோர் வேலைகளுக்கு பொருள்தேடி சென்றிருக்கின்ற வேளையில் அந்தக் குழந்தைகளைப் பராமரிக்க, வழிகாட்ட இவை உதவுகின்றன.
முக்கியமாக பிள்ளைகள் சரியான வழி நடத்துதலில் இருந்து கைவிடப்பட்டால் அவர்கள் நாளைக்கு சமுதாயத்தில் பெரும் பாதிப்புக்குள்ளானவர்களாக பெரும் சட்ட மீறல்களுக்கு உட்பட்டவர்களாக மாறுவர்.
எனவே அவர்களைச் சரியாக வழி நடத்துவதன் மூலம் சட்டத்துடன் தொடர்புடையவர்களின் வேலைகள் குறைக்க முடியும் என ஆணித்தரமாக நான் நம்புகிறேன்.
அந்த வகையில் இந்தப் பிள்ளைகள் வழி நடத்தப்படுவதைக் கண்டு மிகவும் புளகாங்கிதமடைகின்றேன்.
இந்தப் பிள்ளைகளின் கெட்டித்தனங்களையும் அவர்களின் திறமைகளையும் பெரி யோர்கள் தெரிந்து கொண்டு உணர்ந்து கொண்டு அவர்களைச் சரியான முறையில் வழி நடத்துவதன் மூலம் இந்தச் சமுதாயத்தில் சிறந்த சான்றோர்கள் உருவாக்கப்படலாம்.
திறமைகள் முன்னுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்
எனவே பெரியோர்களாகிய நாம்இந்தப் பொறுப்பைத் தொடர்ந்தும் முன் கொண்டு செல்ல வேண்டும்.
அதனை இந்த இடத்திலேயே உங்கள் முன் வைக்கிறேன்.
இன்றைய சூழலில் நாம் பல விடயங்களில் பின்தங்கியுள்ளோம். பல துறைகளில் முன்னேற்றமாக இருந்த எமது சமுதாயம் பின் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலைமை மாற வேண்டும். திறமை முன்னுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். இதற்காகவே பெரியோர்களாகிய நாம் உழைக்கின்றோம்.
எனவே இந்தச் சமயத்தில் இந்தப் பராமரிப்பு நிலையத்தின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், அதனை நடத்துகின்றவர்கள் எல்லோரும் இக் குழந்தைகளை பொறுப்புடன் வழி நடத்த வேண்டும் என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
சிறார்களின் திறமைகளை உறுதியாக, முறையாக வெளிக் கொண்டு வந்து நாளைய சமுதாயத்தில் அவர்களைச் சிறந்த சான்றோர் களாக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைக்கிறேன் என்றார். (Uthayan)


Mon Jun 2 2008
கைதடிக் குடும்பஸ்தர் நீர்கொழும்பில் கைது
""இத்தாலி செல்வதற்கென கைதடி யில் இருந்து வந்து நீர்கொழும்பில் தங்கி யிருந்த இளைஞரும் வீட்டுக்காரரும் கடத் திச் செல்லப்பட்டுனர் என வாழ்க்கைத் தொழில் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி அமைச்சர் இராதாகிருஷ்ணனிடம் முறைப் பாடு செய்யப்பட்டுள்ளது.''
இத்தகவலை பிரதியமைச்சரின் ஊட கப் பிரிவு தெரிவித்தது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப் பவை வருமாறு:
நீர்கொழும்பு, குடாப்பாடு பீட்டர்ஸ் லேனில் கடந்த இரண்டரை வருடமாக குடும்பத்துடன் தங்கியருந்த மகாராஜா குகதாசன் (வயது26) என்பவரும் அவரது ஒன்றுவிட்ட சகோதரரான சபாரத்தினம் பகீரதன் (வயது16) ஆகிய இருவருமே கடந்த மே 30ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் வெள்ளை வானில் வந்தோரால் கடத்திச் செலல்லப்பட்டுள்ளனர். இவர்களைக் கடத்தியவர்கள் பின்னர் இளைஞர் பகீரதனை இடையில் இறக்கிவிட்டு குகதாசனை மட்டும் கொண்டு சென்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை குகதாசனின் மனைவியான விவிதாவும், கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட பகீரதனின் தந்தையரான வாரித்தம்பி சபாரட்ணமும் பிரதியமைச்சர் இராதாகிஷ்ணனிடம் தெரிவித்தனர்.
""யாழ். கைதடிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து நீர்கொழும்பு குடாப்பாட்டில் இரண்டரை வருடமாகத் தங்கியுள்ளோம். எனது கணவரை எதற்காகக் கடத்திச் சென்றனர் என்பது எனக்குப்புரியவில்லை. அவரது உழைப்பை நம்பியே எமது குடும்பம் உள்ளது. இந்நிலையில் மிகவும் கஷ்டப்படும் எமது நிலையைக் கயருத்தில் கொண்டு கணவரைக் கண்டுபிடித்துத் தருங்கள்'' என மனைவி விவிதா முறைப்பாடும்செய்தார்.
இவ்விடயம் தொடர்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு அத்தியட்சகர் நந்தன முனசிங்கவிடம் பிரதியமைச்சர் முறைப்பாடு செய்துள்ளார்.

தென்மராட்சி வரணிப் பகுதியில் வயோதிபர் வெட்டிக்கொலை!
யாழ்ப்பாணம் தென்மராட்சி, வரணியிலுள்ள குடமியன் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு வயோதிபர் ஒருவர் படுக்கை யில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதே இடத்தைச் சேர்ந்த சின்னக்குட்டி சின்னத்துரை (வயது71) என்ற வயோதி பரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப் பட்டவராவார்.
சம்பவதினம் இரவு இந்த வயோதிபர் வீட்டின் அறை ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்தார் என்றும், அவரது மனைவி வீட்டு விறாந்தையில் படுத்திருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நேற்று அதிகாலை வயோதிப ரின் மனைவி விழித்தெழுந்த வேளை, கணவர் வெட்டப்பட்ட நிலையில் சடலமாகக் காணப்பட்டார் என்றும் அறியமுடிந்தது.
இவரது சடலம் நேற்று மாலை 3.30 மணி யளவில் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு எடுத்துவரப்பட்டது. சம்பவம் தொடர்பி லான விசாரணையை கொடிகா மப் பொலி ஸார் மேற்கொண்டு வருகின்றனர். (Uthayan)



யாழ் மீசாலையில் தேடுதல் – மக்கள் சிரமம்

( 5/30/2008 eurotvlive.com)

யாழ் மீசாலையில் சிறீலங்கா படையினரும், காவல்துறையினரும் இன்று காலை தேடுதலில் ஈடுபட்டதால், மக்களும், மாணவர்களும் பெரும் சிரம்களை எதிர்நோக்கினர்.

மீசாலை மத்தியை சுற்றிவளைத்த படையினர் கடுமையான சோதனை நடவடிக்கைகளையும், கெடுபிடிகளையும் மேற்கொண்டனர்.

பாடசாலை மாணவர்கள், அரச பணியாளர்களும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம் கண்டது.
Wed May 28 2008
நாவற்குழிச் சந்தியை அண்டிய பகுதிகளில் சட்டவிரோதமாக மாடுகள் வெட்டப்படுகின்றன நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை
நாவற்குழி சந்திப் பகுதியை அண்டிய பிரதேசங்களில் அண்மைக்காலமாக சட்ட விரோதமான முறையில் மாடுகள் இறைச் சிக்காக வெட்டப்பட்டு வருவதாக அப் பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நாவற்குழி முந்நூறு வீட்டுத் திட்டம் மற்றும் நாவற்குழி ஐந்து வீட்டுத் திட்டம் ஆகிய இடங்களிலேயே இவ்வாறான செயற்பாடுகள் அதிகம் இடம்பெறுவதாக வும் கூறப்படுகின்றது.
இதனால் இப்பகுதியில் தினமும் சண்டை சச்சரவு இடம்பெறுவதுடன் இப்பிரதேசத் தில் பெரும் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படு வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அரச அதி காரிகள் உடனடி நடவடிக்கை எடுக்காது விடின் இச் சட்டவிரோத செயல் மேலும் அதி கரிக்க வாய்ப்புக்கள் ஏற்படும் எனவும் பலரா லும் கருத்துக் கூறப்படுகின்றது.


Sat May 24 2008

செயலமர்வுகள்
தென்மராட்சி கல்வி வலயப் பாட சாலைகளின் அதிபர்களுக்கான உலக உணவுத் திட்டம் தொடர்பான செயல மர்வு இன்று காலை 9.30 மணிக்கு சாவ கச்சேரி மகளிர் கல்லூரியில் நடைபெறும்.
உலக உணவுத்திட்டநிறுவனப் பிரதிநிதிகள் செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளதால் அதி பர்கள் அனைவரையும் கலந்துகொள்ளு மாறு வலயக் கல்விப் பணிப்பாளர் கு. பிரேமகாந்தன் கேட்டுள்ளார்.
* * *
தென்மராட்சி வலயக்கல்வி அலுவ லகம் நடத்தும் கல்விக்கான உலக உணவுச்செயற்றிட்ட செயலமர்வு இன்று காலை 9 மணிக்கு சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
சகல அதிபர்களையும் கலந்து கொள்ளுமாறு பிரதிக் கல்விப் பணிப் பாளர் கேட்டுள்ளார்.

தென்மராட்சியில் இரவு வேளைகளில் மணல் திருடப்படுவதாக மக்கள் முறைப்பாடு

வரணி, நாவற்காடு, கரம்பைக்குறிச்சி ஆகிய இடங்களிலிருந்து தினமும் இரவு வேளைகளில் வாகனங்களில் சட்டவிரோத மாக மணல் கொண்டு செல்லப்படுவதாக அப்பகுதி மக்கள் முறையிடுகின்றனர்.
இடம்பெயர்ந்துள்ள மக்களின் காணி களில் இரவுவேளைகளில் பெருமளவு மணல் வாகனங்களில் கொண்டு செல்லப் படுவதாகவும் தெரிவித்தனர்.
மக்கள் வீதிகளில் நடமாட்டம் குறைந்த நேரத்தில் பி. ப. 6.00 மணிக்கு அதிகாலை 5 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தினமும் 50இற்கு மேற்பட்ட வாகனங் களில் மணல் ஏற்றப்பட்டு வரணி மகா வித்தி யாலயத்திற்கு அருகில் உள்ள வீதி ஊடாக வலிகாமம் பகுதிக்கு கொண்டு செல்லப்ப டுவதாகவும் தெரிவித்தனர்.

மீசாலையில் படையினர் மீது புதனிரவு துப்பாக்கிச் சூடு
[25 - April - 2008] [Thinakural]
சாவகச்சேரி மீசாலைப் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு ரோந்து சென்ற இராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

புதன்கிழமை இரவு 7 மணியளவில் யாழ்.-கண்டி வீதியில் ரோந்து சென்ற படையினர், முகாம் திரும்பிக் கொண்டிருந்த போதே அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தவே சுமார் 10 நிமிட நேரம் இரு தரப்புக்குமிடையே பலத்த துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றுள்ளது.

எனினும் இந்த மோதலில் ஏற்பட்ட சேத விபரம் குறித்து எதுவும் தெரியவரவில்லை.

Thu Apr 24 2008
ஷெல் வீச்சுக்களினால் தென்மராட்சி அதிர்ந்தது
தென்மராட்சிப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றுப் பிற்பகல் வரை ஷெல்கள் தொடர்ந்து வீழ்ந்து வெடித்த வண்ணம் இருந்தன. இதனால் அப்பகுதி எங்கும் பெரும் பதற்றம் நிலவியது.
வடபோர் முனையில் முகமாலை முன் னரங்கப் பகுதியில் நேற்று முன்தினம் முதல் செறிவான ஷெல் வீச்சுச் சத்தங் கள் கேட்டவண்ணமிருந்தன.
இந்நிலையில், நேற்றுப் பிற்பகல்வரை தென்மராட்சிப் பிரதேச எல்லைப் பகுதி களில் தொடர்ந்தும் ஷெல்கள் வீழ்ந்து வெடித்தவண்ணமிருந்தன. இதனால் பிரதேசமக்கள் பெரும் பதற்றத்துடன் காணப்பட்டனர்.
குறிப்பிட்ட சில பிரதேச பாடசாலைகள் நேற்று ஆரம்பமாகி சில மணி நேரத்து டனேயே மூடப்பட்டன. பல பாடசாலை களில் மாணவர் வரவு மிகக் குறைவாகக் காணப்பட்டது. பிரதேச மக்களின் இயல்பு வாழ்வும் நேற்றுப் பாதிப்படைந்திருந்தது.


Tue Apr 22 2008
என்னை வளர்த்த கிராமம் தாய் போன்றது
அதனை வளம்படுத்த வேண்டும் என்பதே அவா குப்பிவிளக்கில் படித்து 10"ஏ' பெற்ற வரணி மாணவன் கோகுலன் சொல்கிறார்
நான் பெற்ற கல்வியுடன், என்னை வளர்த்த கிராமம் என்னைப் பெற்ற தாயைப் போல விசேடமானது. எனவே எனது கிராமம், எனது பிரதேச வளம் என்பவற்றை மேலும் வளப்படுத்தவேண்டும். இதுவே எனது இளமைக் காலம் தொடக்கம் எனது அவாவும் எனது குடும்பத்தின் அவாவும் ஆகும்.
இவ்வாறு தெரிவித்தார் வரணி மகாவித்தியாலயத்திலிருந்து ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி 10"ஏ' பெறுபேறுகளைப் பெற்ற செல்வன் அம்பிகாநிதி கோகுலன். அவர் மேலும் கூறியதாவது:
எனது அப்பாவும் அம்மாவும் எனது கல்விக்கு அடித்தளமிட்டு ஊக்கப் படுத்தினார்கள். அத்துடன் எனது சிறிய தந்தையார்களும் ஊக்கமளித்தார் கள். எனது குடும் பத்தவர்களும் கல்வி உயர்வை நோக்கமாகக் கொண்டவர்கள்.
எமது பிரதேசம் சிறிய, மிகவும் பின்தங்கிய வரணி வடக்குப் பிரதேசமாகும். வீட்டில் மின்சார வெளிச்சம் இல்லை. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் குப்பி விளக்கின் ஒளியில் இரவில் என் கல்வியைத் தொடர்ந்தேன். எனது உயர்தரக் கல்வியை நான் தொடர்வதற்கு எனது தாய்ப் பாட சாலையான வரணி மகா வித்தியாலயத்தில் கற்கமுடியவில்லை. இதனால் நான் மிகுந்த கவலையடைகின்றேன். ஏனெனில் அங்கு கலைப்பிரிவு மட்டுமே உள்ளது. ஏனைய வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம் ஆகிய பிரிவுகள் அங்கு இல்லை. இந்த நிலையில் நான் வர்த்தகம் கற்க விரும்புவதால் வேறுபாடசாலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இது மிகவும் துரதிஷ்டவசமானதே.
வீட்டில் கல்வியை மாலை 7 மணி தொடக்கம் இரவு 11 மணிவரை படிப்பது வழக்கம். வீட் டில் அம்மா, அப்பா உந்துதல் செய்யும் வேளை நித்திரை ஏற்படின் பத்திரிகை வாசிப்பேன், கவிதை எழுதுவேன், குறு நாடகம் தயார் செய்வேன். நித்திரை கலைந்துவிடும். தொடர்ந்து படிப்பைத் தொடர்வேன். எனது கல்வி மேம்பாட்டிற்கு எனக்குக் கற்பித்த ஆசிரியர்கள், உயர் தர மாணவ, மாணவிகள் மிக முக்கியமானவர்கள். அத்துடன் திகழொளி கல்வி நிலையம் பலவாறாக உதவியது.
ஆசிரியர்கள் விசேட வகுப்புகள் மூலம் கல்வி புகட்டினார்கள். உயர்தர மாணவர்கள் தெரி யாத விடயங்களை உரியவேளையில் சொல்லித் தருவார்கள். எமது பகுதியில் உள்ள பாடசாலைகள் மூன்று இணைந்து விசேட கருத்தரங்குகளை நடத்தின. இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிர மணிய வித்தியாசாலை, மிருசுவில் அ.த.க.பாடசாலை, வரணி மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களை ஒன்றிணைத்து கல்விக் கருத்தரங்குகளை மூன்று பாடசாலை ஆசிரியர்களும் நடத்தினார்கள். நான் ரியூசன் கல்வியில் ஆங்கிலம், கணிதம், வர்த்தகம் ஆகிய பாடங்களை மட்டுமே படித்தேன். மிகுதிப் பாடங்களை நான் பாடசாலை மூலம் கற்றேன்.
யாழ்.வானொலி எவ்.எம்., கல்விச்சுடர் மூலம் நிறையப் பயன் பெற்றேன். பாடவிதானம் தவிர்ந்த போட்டியில் பங்குபற்றினேன். தமிழ்தினப் போட்டிகளில் குறுநாடகப் பிரதியில் வலய மட்டத் தில் முதலாவது இடமும் பெற்றேன். மாவட்ட மட்டத்திலும் 1ஆவது இடம் பெற்றேன்,
மாகாண மட்டத்திலும் பங்குபற்றியுள்ளேன். ஆங்கிலக் கவிதைப் போட்டியில் பங்கு பற்றி வலய மட்டத்தில் 2ஆம் இடம்பெற்றேன். கலையார்வத்திற்கு அம்மாவே காரணமாவார். விளையாட்டுக்களில் மைதான விளையாட்டுக்களில் அதிகம் விருப்பம் உண்டு.
எமது உயர்ச்சி, முயற்சியில் தங்கியுள்ளது. நான் ஜி.சீ.ஈ. சாதாரண தரத்தில் சித்தி யடைந்த தையிட்டு அதிக உயர்ச்சியாக மனதில் எண்ணக் கூடாது. நாம் கல்வியில் படிப்படியாக முன் னேறவேண்டும். வருங்காலங்களில்தான் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஜி.சீ.ஈ. சாதாரணதரம் கல்வியில் முதற்படியே.

Mon Apr 21 2008
தென்மராட்சிப் பிரதேச முதியவர்களுக்கு திணைக்கள சேவைகளில் முன்னுரிமை வழங்குமாறு செயலர் அறிவுறுத்து
தென்மராட்சி பிரதேச முதியோர்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு திணைக்கள சேவைகளில் முன்னுரிமை வழங்குமாறு திணைக்களத் தலைவர்களை பிரதேச செயலர் செ.ஸ்ரீநிவாசன் கேட்டுள் ளார்.
பிரதேச முதியோர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருவதாவும், முதியோர் அடையாள அட்டையுடன் வருபவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கு மாறும் அவர் கேட்டுள்ளார்.
பிரதேசத்தில் உள்ள வங்கிகள், மருத்து வமனைகள், கூட்டுறவுச் சங்கங்கள், போக்கு வரத்துச் சங்கங்கள், பிரதேச செயலக பிரிவுகள் ஆகியவற்றுக்கு இது தொடர்பாக பிரதேச செயலர்அறிவித்துள்ளதாகத் தெரி விக்கப்பட்டது. (Uthayan)

Sun Apr 20 2008
அண்மையில் பெய்த மழையை அடுத்து தென்மராட்சியில் வைரஸ் காய்ச்சல் தீவிரம்

அண்மையில் பெய்த மழையினையடுத்து தென்மராட்சி பிரதேசத்தில் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்படுவோர் எண் ணிக்கை அதிகரித்துள்ளது.
தினமும் 200 மேற்பட்டடோர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் பிரதேச மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.
காய்ச்சலினால் பீடிக்கப்பட்டவர்களால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விடுதிகளில் பெரும் இட நெருக்கடி ஏற் பட்டுள்ளது.
விடுதி தரைகளில் கூட இட நெருக்கடி நிலவுவதாகவும் இதனால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதா கவும் தெரிவிக்கப்படுகின்றது.
(Uthayan)

Fri Apr 18 2008
உசனில் ஷெல்கள் வீழ்ந்தன; காயமுற்ற பெண் ஆஸ்பத்திரியில் வீடுகளும் சேதமுற்றதாக படையினர் அறிவிப்பு
தென்மராட்சி, உசன் பகுதியில் நேற்று முற்பகல் 11 மணியளவில் ஷெல்கள் வீழ்ந்து வெடித்ததில் ஒருவர் காயமடைந்தார்.
உசன், மிருசுவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குசினியில் ஒரு ஷெல் வீழ்ந்து வெடித்தது. அதனால் திருமதி விநாயகமூர்த்தி இராஜேஸ்வரி (வயது 44) என்பவர் காயம் அடைந்தார்.
கொடிகாமம் வைத்தியசாலையில் சிகிச் சைக்காகச் சேர்க்கப்பட்ட இவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலைக்கு கொண்டுவரப்பட்டார்.
விடுதலைப் புலிகள் ஏவிய ஐந்து ஷெல்கள் உசனில் வீழ்ந்து வெடித்தன என்றும் இதில் சிவிலியன் ஒருவர் காய மடைந்தார் என்றும் சில வீடுகள் சேதம டைந்தன என்றும் பலாலிப் படைத் தலை மையகம் நேற்றிரவு தெரிவித்தது. (uthayan)

Tue Apr 15 2008

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 214 பேருக்கு மலசலகூட மானியக்கொடுப்பனவு

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதி காரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலிருந்து கடந்த 2006, 2007 ஆகிய ஆண்டுகளில் மலசலகூட மானியத்திற்கு விண்ணப் பித்த 214 பேருக்குக் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
கொடுப்பனவுகள் காசோலைகள் நாளை மறுதினம் 17ஆம் திகதியும் மறுநாள் 18ஆம் திகதியும் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் வைத்து வழங்கப்படவுள்ளன.
17ஆம் திகதி கொடிகாமம், வரணி, மந்துவில், மீசாலை ஆகிய பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்டவர்களுக்கும், 18ஆம் திகதி கைதடி, நாவற்குழி, மட்டு வில், சரசாலை, சாவகச்சேரி நகர் ஆகிய பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவிற்குட் பட்டவர்களுக்கும் கொடுப்பனவுக் காசோலை வழங்கப்படவுள்ளன.
மலசலகூட மானியத்திற்கு விண்ணப் பித்தவர்கள் தமது அடையாள அட்டை யுடன் வருகை தருமாறு சுகாதார பகுதி யினர் அறிவித்துள்ளனர்.
தலா 5 ஆயிரம் ரூபாவிற்கான காசோலை களே வழங்கப்படவுள்ளன.

சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவோருக்கு சாவகச்சேரி நீதிமன்றம் 20 ஆயிரம் அபராதம் விதித்தது

சட்டவிரோத கசிப்பு மற்றும் கசிப்பு உற் பத்திக்குப் பயன்படுத்தும் கோடா ஆகி யவை வைத்திருந்த இரு பெண்கள் உட் பட மூவருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் ஒரு லட்சத்து 20ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
பருத்தித்துறை மதுவரித் திணைக்களத் தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த நீதவான் மூவருக்கும் அபராதம் விதித்ததுடன் அபராதத் தொகை செலுத் தத் தவறின் சாதாரண சிறை அனுபவிக்கு மாறு உத்தரவிட்டார்.
சட்டவிரோத கோடா வைத்திருந்த நாவற்குழி, கோயிலாக்கண்டியைச் சேர்ந்த வேலு ஜெயராஜா என்பவருக்கு 80 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து செலுத்தத் தவறின் 16 மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்குமா றும், கசிப்பு விற்பனைக்கு வைத்திருந்த கொடிகாமம், கச்சாய் வீதியைச் சேர்ந்த பூபாலசிங்கம் பேபி என்பவருக்கு 25ஆயிரம் ரூபா அபராதம் விதித்து செலுத் தத் தவறின் 12 மாத சாதாரண சிறைத் தண் டனை அனுபவிக்குமாறும் உத்தரவிட்டார். கசிப்பு விற்பனைக்கு வைத்திருந்த சாவ கச்சேரி, உதயசூரியன் வீதியைச் சேர்ந்த புஸ்ப ராணி என்பவருக்கு 15ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தார்.
இதேவேளை வீடுகளில் விற்பனைக் காக கள்ளு வைத்திருந்த இருவருக்கு தலா 2 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து அபரா தத் தொகை செலுத்தத் தவறின் ஆறு மாத கால சிறைத் தண்டனை அனுபவிக்குமா றும் உத்தரவிட்டார். (uthayan)


வெள்ளி 11-04-2008
சலவை நிலைய உரிமையாளர் சுட்டுக்கொலை

சலவை நிலைய உரிமையாளர் ஒருவர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று முற்பகல் 10.30 மணியளவில் சலவை நிலையத்திற்கு உள்நுழைந்த ஆயுததாரிகள் உரிமையாளரைச் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கொல்லப்பட்டவர் கைதடியைச் சேர்ந்த 44 அகவையுடைய பண்டாரி பரமநாதன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Thu Apr 10 2008

தென்மராட்சிப் பிரதேசத்தில் 15 விவசாயிகளுக்கு நீரிறைக்கும் இயந்திரங்கள்
தென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த 15 விவசாயிகளுக்கு நீரிறைக்கும் இயந் திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நெதர்லாந்து நிறுவனமொன்றின் நிதி அனுசரணையுடன் கொழும்பு மனிதநேய அமைப்புகளின் இணையத்தின் வாழ்வா தார அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் இந்த நீரிறைக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
அறவழி நிலையத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் இணையத்தின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் எஸ்.ரஞ்சித், முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு நீரிறைக்கும் இயந்திரங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் கைதடி விவசாய போதனா சிரியர் எஸ்.சிவபாலனும் கலந்துகொண்டார்.
மேலும் 21 விவசாயிகளுக்கு நீரிறைக் கும் இயந்திரங்கள் விரைவில் வழங்கப் படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மிருசுவில் பொதுநூலகத்தின் புத்தகங்கள் படையினரால் மீட்கப்பட்டு ஒப்படைப்பு
தென்மராட்சி கிழக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஏ9 பிரதான வீதி யில் இருந்த சாவகச்சேரி பிரதேச சபை யின் மிருசுவில் உப அலுவலக பொதுநூல கத்தின் புத்தகங்களை படையினர் அண்மை யில் மீட்டு சாவகச்சேரி பிரதேச சபை செய லாளர் வே.சிவராஜலிங்கத்திடம் ஒப்படைத் துள்ளனர்.
சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர் வே.சிவராஜலிங்கம், கொடிகாமம் நகர படை யதிகாரி மேஜர் விதாரணவுடன் தொடர்பு கொண்டதையடுத்து படையதிகாரியால் சுமார் 3000 புத்தகங்களும் புத்தக ராக்கை உட் பட தளபாடங்களும் மீட்டு கையளித்தன.
இந்த நூலகம் மீசாலை புத்தூர்ச் சந்தி யிலுள்ள தனியார் வீடொன்றில் விரைவில் இயங்கவுள்ளது.
சாவகச்சேரி பிரதேச சபையின்கீழ் கைதடி, நாவற்குழி, கச்சாய், வரணி, மிருசு வில் ஆகிய நூலகங்கள் இயங்கி வருகின் றமை குறிப்பிடத்தக்கது.

Wed Apr 9 8:35:00 2008
பன்றித்தலைச்சி அம்மன் ஆலய உற்சவம் பக்திபூர்வமாக நடந்தேறியது
மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய பங்குனித் திங்கள் உற்ச வம் நேற்று முன்தினம் சிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் நடைபெற்றது.
ஆலயச் சூழல் பக்தர் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஆலயச் சூழலில் அம்பாள் அடியார் கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்று வதைக் காணமுடிந்தது.
ஆலய வீதிகள் சூழ அடியார்கள் பானை வைத்து பொங்கியதைக் காணமுடிந்தது. ஆலயத்தில் அன்னதானங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் நிறையவே காணப்பட்டன.
பக்தர்களின் காவடிகள், பறவைக்காவடி கள் எனப் பல கோயிலை வந்தடைந்தன.
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தி னர், சாரண மாணவர்கள், இந்து இளைஞர் கள் எனப் பொது அமைப்புகள் சேவை களை வழங்கின.
போக்குவரத்து வசதிகள் வடபிராந்திய போக்குவரத்துச் சபையால் சகல பகுதிகளி லும் இடம்பெற்றது.
நண்பகலிலும் மாலையும் அம்பாள் திருவுலா இடம்பெற்றது.


10 ஏ பெற்று சித்தியடைந்த சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவியின் ஆவல்

வீரகேசரி இணையம்
4/8/2008 10:45:42 AM
போரின் பேரழிவுகளை சந்தித்திருக்கும் யாழ் தென்மராட்சியில் உள்ள சாவகச்சேரி நகரை நவீன காலத்திற்கேற்ப புதிய கட்டடங்களால் நிர்மானிக்க வேண்டும் என்ற ஆவலிலேயே க.பொ.த உயர் தரத்தில் கணித துறையை தேர்ந்தெடுத்துள்ளேன் என கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த சா.தரப்பரிட்சையில் 10 ஏ சித்தி பெற்றுள்ள சாவச்சேரி இந்து கல்லூரி மாணவி கஸ்தூரி தெவித்துள்ளார்.(Virakesari.lk)
சகதோழிகளிடையே ஏற்பட்ட போட்டி சிறந்த பெறுபேற்றைப் பெற உதவியது 10 "ஏ' சித்தி பெற்ற மாணவி ஜெயதர்சினி
சகதோழிகளிடையே ஏற்பட்ட போட்டி நாம் சிறந்த பெறு பேறு களைப் பெற உதவியது.
பரீட்சை நடைபெற்ற வேளையில் பரீட்சை எழுதிவிட்டு மண்டபத்தை விட்டுவெளியேறும்போதுஅந்தப் பாடத்திற்கு"ஏ' சித்தி கிடைக்குமென நம்பினேன். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. எனது நம்பிக்கையினை மென்மேலும் வளர்க்க ஒரு பொறியியலாளராக வந்து மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்க வேண்டும்.
ஜி.சீ.ஈ. சாதாரணதரப் பரீட்சையில் பத்து பாடங்களிலும் அதி சிறப்பு பெறுபேறுகளைப் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி செல்வி ஜெயகணேசன் ஜெயதர்சினி மேற்கண்டவாறு தனது விருப்பத்தினை வெளிப்ப டுத்தினார்.
சாவகச்சேரி, கச்சாய் வீதி, உப்புக்கேணியைச் சேர்ந்த ஜெயகணேசன் ஜெயதர்சினி உதயனுக்கு மேலும் தெரிவித்ததாவது:
ஆரம்பக் கல்வியை கைதடி நாவற்குளி அ.த.க. பாடசாலையில் கற்று இடப் பெயர்வு காரணமாக அங்கிருந்து வெளியேறி எனது தந்தையாரின் தொழில் காரணமாக சாவகச்சேரியில் மீளக்குடியமர்ந்து சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியினை மேற்கொண்டேன்.
எனது தந்தை ஒரு விஞ்ஞான பாட ஆசிரியர். தாயார் வீட்டுப் பணி. எனது பெற்றோர் தந்த ஆதரவினால் ஒரு பொறியியலாளராக வரவேண்டுமென்ற எனது இலட்சியத்தின் ஒரு படியினை சுலபமாகத் தாண்ட முடிந்தது.கல்லூரி அதிபர் மற்றும் எனது வகுப்பில் கற்பித்த ஆசிரியர்களும் "ரியூசன்' ஆசிரியர்களும் எனது உயர்வுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தனர். பரீட்சையில் நான் சிறந்த பெறுபேற்றினை பெறவேண்டுமென்ற பலரும் தந்த ஊக்குவிப்புகளை என்னால் மறைக்க முடியாது. அத்துடன் எனது வகுப்பு சினேகி திகளி டையே ஏற்பட்ட போட்டியும் சிறந்த பெறுபேறு கிடைக்க வழி சமைத்தது. என் னுடன் போட்டியிட்டு படித்த சக தோழிக்கும் பத்து பாடங்களிலும்,அதிசிறப்புச் சித்தி கிடைத்தது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது.
சாவகச்சேரி நகரசபையின் பொது நூலகமும், இந்துக் கல்லூரி நூலகமும் எனக்குக் கல்வியில் ஏற்பட்ட சந்தேகங்களைப் போக்கும் ஆசான்களாகத் திகழ்ந்தன.
படிக்கும் வேளையில் எமது கவனத்தை சிதறடிக்கும் குண்டுவெடிப்பு சத்தங்களின் மத்தியிலும் எமது மாணவர்கள் இவ்வருடம் சிறந்த பரீட்சைப் பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுத்து பிரதேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்றார் ஜெயதர்சினி.(Uthayan.com)

Mon Apr 7 2008
கைதடி திருட்டுச் சம்பவம் தொடர்பாக சிப்பாய் கைதாகி விளக்க மறியலில்
கைதடி சந்திக்கு அருகில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக அப்பகுதி முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாயை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அவரிட மிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகள், பணம் ஆகியவையும் மீட்கப்பட்டன
இச்சம்பவம் பற்றி தெரியவருவருவ தாவது:
கடந்த முதலாம் திகதி இரவு கைதடிப் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்க நகை கள் மற்றும் பணம் ஆகியவை திருட்டுப் போயுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை யடுத்து சாவகச்சேரி பொலிஸார் மேற் கொண்ட நடவடிக்கையின் பயனாக வீட் டுக்கு அருகில் உள்ள முகாமைச் சேர்ந்த படைச் சிப்பாயை பொலிஸார் கைது செய்து சாவகச்சேரி நீதிமன்றில் நேற்று முன்தினம் ஆஜர் செய்தனர்.
மக்களுக்குப் பொறுப்புணர்வு தேவையென நீதிபதி அறிவுறுத்து
இவ்வழக்கினை விவரித்த நீதிவான் சிப்பாயை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் பொதுமக்களின் பொறுப் புணர்வின்மையை பெரிதும் சாடினார்.
நீதிவான் தனது அறிக்கையில் தற்போ தைய சூழ்நிலையில் மக்கள் தத்தமது உடைமைகளை பொறுப்புடன் பாதுகாக்க வேண்டும். மாறாக அவதானமின்றியும் பொறுப்புணர்வின்றியும் செயற்படுவது குற்றச் செயல்கள் இடம்பெறுவதற்கு தூண்டுதலாக அமைகிறது. மக்கள் விழிப் புணர்வுடன் செயற்பட்டால் எத்தனையோ குற்றச் செயல்களை தவிர்க்க முடியும் என்றார்.

அன்றும் என்றும் இன்றும் பக்தர்களுக்கு அருளை அள்ளி வழங்கும் அம்மன் மருதவளச் சூழலில் மட்டுவில் பொங்கல் தனிச்சிறப்பும் திவ்வியமும் நிறைந்தது
ஈழவள நாட்டில் உள்ள வரலாற்றுப் பிர சித்தியும் சிறப்பும் பெற்ற ஆலயங்களுள் மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை ஆலயமும் ஒன்று.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தென்ம ராட்சிப் பெரு நிலப்பரப்பில் இந்த ஆலயம் மிக அழகுற அமைந்துள்ளது. சாவகச்சேரி புத்தூர் வீதியில் மட்டுவில் வடக்குப் பகுதியில் வயல் சார்ந்த பகுதியில் மருத மரங்களும் புளியமரங்களும் ஓங்கி வளர்ந்த இடத்தில் இந்த புண்ணிய தலம் அமைந் துள்ளது.
அம்பாளின் ஆலயம் மிகப் பழமையா னது. அதற்குச் சான்றாக ஆலயத்தின் மூலஸ்தானத்தின் பின்புறமாக உள்ள (அதாவது அம்பாளின் தூபியின் கீழ் உள்ள) சுவரில் பொழிந்த கற்களின் மீது பித்த ளைத் தகட்டில் 1750 ஆண்டு காலப்பகுதி எனப் பொறிக்கப்பட்டு பொருத்தப்பட்டுள் ளது. இது ஆலய வரலாற்றுக் காலத்தை வெளிப்படையாகக் காட்டி நிற்கின்றது.
ஆலயச் சூழல் இயற்கையுடன் ஒன் றித்து அழகு நிறைந்த பொலிவான இடமா கும். ஓங்கிவளர்ந்த தென்னைகள், அதனை மருவியபடி பனைமரங்கள் அருகே குளிர் தரும் பச்சைப் பசேலென்ற வளர்ந்த மரங் கள் அசைந்து ஆலயத்திற்கு பெருமெரு கூட்டுகின்றன.
புனித தீர்த்தக்கேணி
ஆலயத்தின் தெற்குப் பகுதியில் 100 அடிக்கு மேல் நீள அகலம் கொண்ட புனித மான புண்ணிய தீர்த்தக் கேணி அமைந் துள்ளது. கேணியில் நிறைந்துள்ள புனித தீர்த்தம், சலசலத்தவாறு தளம்பிய நிலை யில் தூய்மையாக அடியவர்களின் பிணி தீர்க்கும்அருமருந்தாக உள்ளது.
ஆலயத்தின் வரலாறு தனிச்சிறப்புக் கொண்டது. அம்பாளின் அற்புதங்கள் எண் ணிலடங்காதன. இதனால் ஆலயத்தில் திங் கள், புதன், வெள்ளிகளில் மற்றும் விசேட தினங்களில் ஆலயச் சூழலில் கூடும் அடி யார்கள் எண்ணிக்கை மிகப்பெரிது. அம்பா ளின் அருளாட்சி, அற்புதங்கள் உட்பட தன்னை நாடி வரும் நல்லடியார்களுக்கு நற்பேறு வழங்கி நல்வாழ்வளிக்கும் தாய்த் தெய்வம் எங்கள் அம்பாள்.
பங்குனி மாதம் என்றதும் மட்டுவில் பகுதி முழுவதுமே புனித பிரதேசமாக மாற ஆரம்பித்துவிடும். மட்டுவில் ஒரு விஸ்தீர ணமான பகுதியாகும். ஆறு கிராம உத்தி யோகத்தர் பிரிவுகளைக் கொண்ட பெரிய பகுதி. இந்தப் பகுதி மக்கள் புனிதத் தன் மையைப் பேண ஆரம்பித்து விடுவார்கள். மாமிசம் சாப்பிடுபவர்கள் கூட தாவர உண வினை உண்ண ஆரம்பித்து விடுவார்கள். மதுபானம் பாவிப்பவர்கள் மது அருந்து வதை நிறுத்திவிடுவார்கள். வீதிகள் புற்கள் செதுக்கப்பட்டு வீட்டு முற்றம் போல அழுகுபடுத்தி விடுவார்கள். அதேபோல ஆலயத்தில் இளைஞர்கள், யுவதிகள், பெண்கள், ஆண்கள், வயோதிபர்கள் என ஒன்றுகூடி ஆலய வளாகத்தை துப்புரவு செய்வதுடன் ஆலயத்தைச் சூழவுள்ள காணிகளில் வளர்ந்த பற்றைகளை வெட்டி துப்புரவு செய்யும் சிரமதானப் பணிகளில் ஈடுபடுவார்கள்.
ஆலயச் சூழலில் தண்ணீர்ப் பந்தல்
ஆலய உற்சவ காலத்தில் ஆலயச் சூழ லில் அமைக்கப்படும் தண்ணீர்ப்பந்தல் கள், வீதிகளில் ஒழுங்கைகளில் ஆங் காங்கே பங்குனி வெய்யிலினால் உண்டாகும் கடும் தாகத்தைத் தணிக்க அமைக்கப்படும் தண் ணீர்ப்பந்தல்கள் ஏராளம். இதனை நேர்த்திக்கடனாக செய்யும் பக்தர் களே அனேகர் எனலாம். ஆலயம் செல்லும் பக்தர்களும் ஆலயத் தால் திரும்பி வீடு திரும்பும் பக்தர் களும் தாகத்தைத் தீர்க்கும் தாக சாந்தி நிலையங்களாக அமைவது மிகச் சிறப்பாகும்.
பிரசித்தி வாய்ந்த பொங்கல் நிகழ்வு
பங்குனித் திங்கள் என்றால் புனிதப் பொங்கல் உற்சவம் என்று கருதலாம். இதனால் ஆலயச் சூழல் ஆயி ரமாயிரம் பக்தர்கள், தங்கள் நேர்த்திக் கடன் களை நிறைவேற்றும் தளமாக மாறிவிடும். அம்மன் சந்நிதி பொங்கலினால் ஆலயச் சூழலில் உண்டாகும் புகையும் கற்பூர தீபங்களால் ஏற்படும் புகையும் வானைத் தொடுமளவிற்கு உயர்ந்து செல்லும் காட்சி யும் விசேடமானதாகும். ஆலயச் சூழல் மழை முகில் போல புகை எங்கும் வியாபித்து காணப்படுவது கண்கொள்ளாக் காட்சியா கும்.
ஆலயத்தில் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் அடியார்கள் பொங்கல் பானையிலே ஆலயத் தீர்த்தக் கேணியில் இருந்து நீரை எடுத்து பொங்கல் அரிசியை பானையிலிட்டு பசுப்பால் அல்லது தேங் காய்ப்பால் மற்றும் சர்க்கரை இட்டு பொங் கல் படைப்பர். பொங்கலுடன் மட்டுவில் அம்மன் கோயில் வயல்வெளியில் காய்த் துக் குலுங்கும் கத்தரிக்காயை வாங்கி சேர்த் துப் பொங்குவது சிறப்பான சுவையான பொங்கலாகிவிடும்.
அரிசி அவித்து காய்கறிகள் சமைத்து தயிர், ஊறுகாய் என்பவற்றுடன் நிவேதிக் கும் நீர்ச்சோறு ஒரு வகை. மருதவளச் சூழ லில் வருடாந்தப் பங்குனி மாதத்தில் நடை பெறும் மட்டுவில் அம்மன் பொங்கல் தனிச்சிறப்பும் திவ்வியமும் நிறைந்தது.
அதிகாலை முதல் பிற்பகல் வரை
கத்தரிக்காய் சேர்த்த பொங்கலுடன் மோதகம், வடை என்பன அவித்து நிவே தித்தல் அவற்றை ஆலய முகப்பில் அம்பா ளுக்கு நிவேதித்து ஆலய சூழலில் உள்ள அடியார்களுக்கு வழங்கி அம்பாளின் இஷ்ட சித்திகளை பெறுவதற்குக் கூடும் பக்தர்கள் வெள்ளம் போல் திரள்வர்.
இவ்வாறு பங்குனித் திங்கள் நாள்களில் பொங்கல் நேர்த்திகளை அதிகாலை முதல் பிற்பகல் வரை நிறைவு செய்யும் அருட்பிர வாகம் அங்கு உண்டு.
ஆலயத்தில் காவடி
பங்குனி உற்சவத்தில் காவடி எடுக்கும் பக்தர்கள் தமது குறைகளை அம்பாளிடம் ஒப்படைத்து அனுக்கிரகம் பெறுவார்கள். பாற்காவடி, தூக்குக்காவடி, பறவைக்காவடி, பூக்காவடி என பலவகைக் காவடிகளை எடுத்து நிறைவு செய்வர். தூர இடங்களில் இருந்தும் காவடிகளை எடுத்து நேர்த்திக் கடன் செய்யும் அடியார் கூட்டம் அதிகமா னது
ஆலயத்தில் பங்குனி உற்சவத்தில் சிறப்பான பூசைவழிபாடுகள் நேரம் தவ றாது அபிசேக ஆராதனைகளுடன் நடை பெறுகின்றன. காலைப் பூசை வழிபாட் டைத் தொடர்ந்துவிசேட அபிசேகம் நடை பெற்று காலை10 மணியளவில் காலைத் திருவிழாவும் பிற்பகல் 4 மணிக்கு மாலைத் திருவிழாவும் நடைபெறுகிறது. இந்த ஆயலத்தில் மூன்று சுற்றுப் புற வீதிகள் காணப்படுகின்றன. காலைத் திருவிழா உள்பக்கமாகவும் இரண்டாம் வீதியிலும் மாலைத்திருவிழா உள்வீதியிலும் மூன் றாம் வீதியிலும் நடைபெறும். மாலைத்த திருவிழா அழகிய மலர் மஞ்சத்தில் அம் பாள் வீதியுலா கண்கொள்ளாக் காட்சி.
ஆலயத் தோற்றம்
ஆலயத்தில் முன்புறம் பழமையான தூண்களைக் கொண்டதாகவே காணப்படு கிறது. உள்மண்டபத்தைப் புதிதாக அமைக்க ஏதுவாக தூண்கள் நாட்டப்பட்டு துரித பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி அம்பாள் ஆலயத்திற்கு அழ கிய கோபுரம் அமைக்கவும் ஆலய முகாமை யாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதற்கான திருப்பணியும் ஆரம்பிக்கப்பட் டுள்ளது.
ஆலய ஒழுங்குவிதிகள்
ஆலய உற்சவ காலத்தில் ஆலய ஒழுங்குவிதிகள் தொடர்பாக ஆலய முகா மையாளரும், தென்மராட்சி பிரதேச செய லகம், சாவகச்சேரி பிரதேச சபை மட்டு வில் இந்து இளைஞர் மன்றம் என்பன இணைந்து தீர்மானங்களை மேற் கொண்டு காலம் காலமாக கடைப்பிடித்து வரப்படு கின்றன. சுகாதாரம், போக்குவரத்து ஒழுங்கு பேணுதல், ஆலயச் சுற்றாடலை பாதுகாத் தல் என்பவற்றை நிர்வகித்து ஒழுங்கைப் பேணி வருகின்றனர்.
எனவே ஆலயத்தில் கூடும் பக்தர்க ளும் ஒழுங்கு விதிகளை பேணுவது மிக வும் அவசியமாகிறது.
இன்று இவ்வருடத்துக்கான கடைசிப் பங்குனித் திங்களாகும் எல்லோரும் அம் பாளின் திருவடிகளை வணங்கி அவரின் அருட்கடாச்சத்தை பெறுவோமா
எல்லையற்ற துன்பங்களுடன் தன்னை நாடி வருபவர்களுக்கு அன்றும், இன்றும், என்றும் அருளை வாரி வழங்கும் தாய்த் தெய்வமாக பன்றித் தலைச்சி அம்பாள் விளங்குகின்றாள். அவள் அடி சரண்புகு வோம்.

தென்மராட்சிப் பதிவாளர் அலுவலகத்தில் தினமும் 60 விண்ணப்பங்கள் ஒப்படைப்பு
தென்மராட்சிப் பிரதேச செயலக பதி வாளர் அலுவலகத்தில் நாளாந்தம் 60 இற் கும் மேற்பட்ட பதிவுப் பத்திரங்கள் பெறு வதற்கான விண்ணப்பங்கள் கிடைப்பதாக தென்மராட்சி பிரதேசசெயலக மாவட்டப் பதிவாளர் திருமதி.அன்ரனிஷ்ஷா மரிய தேவி தெரிவித்தார்.
கிடைக்கும் விண்ணப்பங்களில் பொது மக்களின் வேண்டுகோளின் அடிப்படை யில் அவசரமாக தேவைப்படுவோருக்கு மக் களின் நலனைக் கருத்தில்கொண்டு தேவைப் படும் உறுதிப்படுத்திய பத்திரங்கள் வழங் கப்படுவதாகவும் அவர் கூறினார்.பொதுமக்கள் பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவுகளை உரிய வேளைகளில் பதிவு செய்து வருகிறார்கள்.
எனினும் இறப்புப் பதிவுகளில் வயோதி பர்களின் பதிவுகளை உரிய வேளைகளில் பதிவு செய்ய முன்வருவதில்லை. ஆனால் இவர்கள் உரிய தேவைகள் ஏற்பட்டால் நேடி யாக வருகிறார்கள். இந்நிலை மாற்றப்பட வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் பாரிய போர் ஒத்திகை

ஸ்ரீலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தில் பாரிய போர் ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளது.

நேற்று இரவு 8மணி முதல் இன்று காலை 9 மணி வரை தென்மராட்சி வரணி பகுதியில் இந்த போர் ஒத்திகை நடைபெற்றுள்ளது.

மணல்காடு குடத்தனை மற்றும் மிருசுவில் ஆகிய இராணுவ முகாம்களில் இருந்து அழைத்துவரப்பட்ட இராணுவத்தினரே இந்த ஒத்திகையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Pathivu.com)


நேற்று தென்மராட்சியில் இரு தரப்பும் பரஸ்பர எறிகணைவீச்சு
வீரகேசரி இணையம் 4/3/2008
நேற்று மாலை 6.00 மணி முதல் 11 மணிவரை இராணுவத்திற்கும்,புலிகளுக்குமிடையில் யாழ்,தென்மராட்சி முன்னரங்கில் பலத்த எறிகணை மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவித்துள்ளன.

Wed Apr 2 8:45:00 2008
கைதடி வடக்கில் உள்ள இரண்டு வீடுகளில் 12 லட்சம் ரூபா பெறுமதியான பொருள்கள் கொள்ளை ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளையர் கைவரிசை
கைதடி வடக்கில் இரு வீடுகளில் 12 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் உட்பட பொருள்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாகத் தெரிய வந்துள் ளதாவது:
இரவு 11 மணியளவில் நித்திரையிலி ருந்த வீட்டுக்காரரை எழுப்பி மோட்டார் சைக்கிளுக்குப் பெற்றோல் தருமாறு கேட் டுள்ளனர்.
தனது மோட்டார் சைக்கிளிலிருந்த பெற்றோலை போத்தலில் எடுத்து கொடுப் பதற்காக வீட்டுக்காரர் கதவினைத் திறந்த போது திருடர்கள் உள்நுழைந்தனர் என்று கூறப்பட்டது.
பின்னர் துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய ஆயுதங்களைக் காட்டி பயமுறுத்தி அவர் களை அறையொன்றில் அடைத்துவிட்டு நகைகள், பணம், கையடக்கத் தொலை பேசி உட்பட பெறுமதிமிக்க பொருள்களை சூறையாடிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக் கப்பட்டது.
இரு வீடுகளிலிருந்தும் 42 பவுண் தங்க நகைகள், 50ஆயிரம் ரூபா பணம், சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான நான்கு கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பெறுமதிமிக்க பொருள்கள் கொள்ளை யிடப்பட்டுள்ளன என்று சாவகச்சேரிப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள் ளது.
சாவகச்சேரி பொலிஸார் விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை இதே கோஷ்டியினர் அப் பகுதியில் உள்ள மற்றொரு வீட்டிலும் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Posted on : Wed Apr 2 8:45:00 2008
ஒவ்வொருவர் திறமையையும் மேம்படுத்த உதவும் புதிய மீள் எழுச்சித் திட்டத்தை உரிய முறையில் பயன்படுத்துங்கள்
தென்மராட்சிப் பிரதேச செயலர் ஸ்ரீனிவாசன் வேண்டுகோள்

ஒரு கிராமத்தின் விடிவுக்காக உருவாக் கப்பட்ட இந்த மீள் எழுச்சித் திட்டத்தினை மக்கள் உரிய முறையில் பயன்படுத்தி ஏனைய பிரிவு மக்களுக்கு முன் னுதாரணமாக திகழ வேண்டும்.
வீடு தேடி வந்து ஒவ்வொருவரின் திறமைகளை மேம்படுத்த இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதால் பயனாளிகள் தமது திறமைகளால் முயற்சிகளால் பொரு ளாதாரத்தை வளம்படுத்த முடியும்.
கிராமத்தின் வளர்ச்சிக்காக மட்டுமல்ல. அக்கிராமத்தில் வதியும் ஒவ்வொருவரும் பயன்பெற இத்திட்டம் உதவும்.
இவ்வாறு தென்மராட்சிப் பிரதேச செய லகத்தில் இடம்பெற்ற உலக வங்கியின் "நியாப் ஐஐ' மீள் எழுச்சித் திட்ட அறிமுக விழாவில் உரையாற்றுகையில் பிரதேச செய லர் செ.ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்:
இத்திட்டம் உருவாக்கப்பட்டதன் நோக் கம் கிராம அபிவிருத்தி மட்டுமல்லாது அப்பிரிவில் வதியும் அனைத்து மக்களும் பயன்பெறவேண்டுமென்பதே.
ஒவ்வொரு குடும்பத்திலும் திறமை யுள்ளவர்கள் இருக்கிறார்கள். இவர்களின் திறமைகள் இலைமறைகாயாக ஒளிந்துள் ளன. இதற்கு பல்வேறு காரணங்கள் உள் ளன. அவற்றில் ஒன்ற பணவசதியின்மை, பணவசதியினை ஏற்படுத்திக் கொடுப் பின் திறமைகளை வெளிக்கொணர முடி யும் என்பதை ஆய்வுகள் மூலம் கண்டறி யப்பட்டுள்ளது.
இதனாலேயே இத்திட்டத்திற்கு கிராம மட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 50 சதவீதமானவை ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்வாதார நிலைகளை குறிவைத்துள் ளது. அத்தகைய திட்டங்களைச் செயற்ப டுத்த ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும்.
"நியாப்' செயற்றிட்டங்களின் முக்கிய பயனாளிகளாகப் பெண்கள் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர்.
குடும்பத்தில் உள்ளவர்களின் தேவை களைக் கவனிப்பதுடன் குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் செயற் றிட்டங்களையும் பெண்கள் கவனித்து வருகின்றனர். இதனால் இத்திட்டத்தில் பெண்களின் பங்களிப்பு அத்தியாவசிய மெனக் கருதப்படுகிறது.
இத்திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியில் 40 வீதம் அபிவிருத்திக்கும் 50 வீதம் வாழ் வாதார உதவிகளுக்குமென வழங்கப்பட் டுள்ளது. உங்களுக்கு வழங்கப்படும் வாழ் வாதார உதவிகளை நல்லமுறையில் பயன்படுத்தி அந்தக் கிராமம் மட்டுமல்ல பிரதேசமே பயன்பெற பாடுபடவேண்டும் என்றார்.
நியாப் மீள் எழுச்சித் திட்ட உதவித் திட்டப் பணிப்பாளர் வே.விஸ்வலிங்கம் உரையாற்றுகையில்:
உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது யாழ்.மாவட்டம் பெருமளவு பின்தங்கியுள் ளது. தொழில்நுட்ப வளங்கள் கூட எம் மத்தியில் குறைவாக உள்ளன.
எமது மக்களிடையே கல்வி வளம் குறையவில்லை என்பது உலகறிந்த உண்மை. அத்துடன் எமது பிரதேசத்தில் காணப்படும் பனைவளம் எமது மனோ திடத்தை உலகிற்கு எடுத்துக் காட்டும் வளமாக உள்ளது.
ஒரு கிராமம் வளர்ச்சியடைந்தால் அந் தக் கிராமத்தையுள்ளடக்கிய பிரதேசம் மட்டுமல்ல அந்த மாவட்டத்தை வளர்ச்சி யடையச் செய்யும்.
ஒவ்வொரு குடும்பத்தின் பின்ன ணியை ஆய்வுசெய்து அவர்களின் தேவை களை இனங்கண்டு அவர்களின் வாழ்வா தாரத்தை வளப்படுத்துவதே இத்திட்டத் தின் அடிப்படை நோக்கம் என்றார்.
(உதயன்)