3.7.08

செய்திகளில் ஊரும் அயலும் ஜூலை/ஆக.2008






நவீன கவிதை மூலவர் தா.இராமலிங்கம் காலமானார்[திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2008, 04:46 பி.ப ஈழம்]
ஈழத்தின் நவீன கவிதை மூலவர்களில் ஒருவரான தா.இராமலிங்கம் காலமானார்.
நவீன கவிதைகளின் உருவாக்கத்தில் முதன்மையானவராக இருந்த இவர் கிளிநொச்சியில் இயற்கை எய்தியுள்ளார்.

தமிழ் மக்களின் மீதான சிங்கள அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் முதல் இலக்கியப் பதிவான 'மரணத்துள் வாழ்வோம்' கவிதைத்தொகுதியில் வெளிவந்த இவரது கவிதைகள் ஆழமான வெளிப்பாடாக அமைந்தன.




படையினரின் கொலை அச்சுறுத்தல் காரணமாக தென்மராட்சி விவசாயி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரண்August 23, 2008
அரச படையினர் மற்றும் துணை இராணுவக் குழுவினரினால் விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலின் காரணமாகத் தென்மராட்சியைச் சேர்ந்த இளம் விவசாயி யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தஞ்சமடைந்துள்ளார்.
மனித உரிமை ஆணைக்குழு குறித்த விவசாயியை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பாதுகாப்பாகத் தடுத்து வைத்துள்ளது.
சாவகச்சேரியைச் சேர்ந்த 28 வயதான விவசாயி ஒருவரே இவ்வாறு தஞ்சம் கோரியுள்ளார்.
அத்துடன் கொலை அச்சுறுத்தல் காரணமாக வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் ஒருவரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்துள்ளமை தெரிந்ததே.(viyappu.com)



Sun Aug 17 2008
தென்மராட்சியில் அனர்த்த நிவாரண கொடுப்பனவுக்கு 16 பேர் தெரிவு
தென்மராட்சிப் பிரதேசத்தில் தற் செயல் அனர்த்த நிவாரணத்திற்கு விண்ணப்பித்தவர்களில் 16 பேருக் கான கொடுப்பனவு பிரதேச செயல கத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
முதற் கட்டமாக தலா ரூபா 10 ஆயிரம் வீதம் கொடுப்பனவு வழங்கப் படவுள்ளதாகவும், பயனாளிகள் தமது தேசிய அடையாளஅட்டை, பங்கீட் டட்டை ஆகியவற்றுடன் வருகைதரு மாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண சமூக சேவைகள் திணைக் களத்தினால் இக் கொடுப்பனவு பிர தேச செயலகத்திற்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. தெரிவு செய்யப்பட்டோர் விவரம் வரு மாறு
மகாலிங்கம் புஷ்பரத்தினம் மட்டு வில் வடக்கு, குணரத்தினம் சங்கர் கைதடி கிழக்கு, வைரவன் ரதிபதன் தவசிகுளம், தங்கராசா கிருஷ்ண குமாரி கச்சாய்தெற்கு, கணபதிப் பிள்ளை வீரகத்திப்பிள்ளை தாவளை இயற்றாலை, ரவிச்சந்திரன் கிருஸ்ண குமாரி விடத்தற்பளை, சின்னையா யோகராசா கெற்பேலி, பஜீபன் லீலா வதி மீசாலை கிழக்கு, சின்னையா தேவராசா கச்சாய் தெற்கு, நாகரத்தி னம் நந்தகுமார் மீசாலை தெற்கு, இரத்தினம் மகேஸ்வரி மறவன் புலோ மேற்கு, பிரேமநாதன் அருளா னந்தராணி மறவன்புலோ மேற்கு, சிதம்பரப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை கெற்பேலி மேற்கு, முருகன் சிட்டா ளன் விடத்தல்பளை, மருதலிங்கம் ஸ்ரீதரன் கச்சாய் தெற்கு, செல்வராசா குலேந்திரராணி நுணாவில் மத்தி.
இயற்கை அனர்த்தங்களின் போது வீடு வீழ்ந்தது மற்றும் வீடு எரிந்தது ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு இக் கொடுப்பனவு வழங்கப் படுவதா கவும் தெரிவிக்கப்பட்டது. (1207)

















சாவகச்சேரியில் பாரிய சுற்றிவளைப்பு, தேடுதல் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் விசாரணை

[23 - July - 2008] [Thinakural]

சாவகச்சேரியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை பாரிய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதலை மேற்கொண்ட படையினர் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை பலத்த விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
சாவகச்சேரி நகருக்குக் கிழக்கே, நகரிலிருந்து மட்டுவில் வரையும் தெற்கே நகரிலிருந்து மீசாலை வரையும் இந்தப் பாரிய சுற்றிவளைப்பும் தேடுதலும் நடைபெற்றுள்ளன.

அதிகாலை 5 மணியளவில் இந்தப் பகுதிகளுக்கு வந்த படையினர் காலை 7 மணியளவில் சுற்றிவளைப்பையும் தேடுதலையும் ஆரம்பித்தனர்.

சாவகச்சேரிக்கு கிழக்கே பெருங்குளம் வீதி மற்றும் தபாற்கந்தோர் வீதியில் மட்டுவில் வரையும் நகருக்குத் தெற்கே கிராம்புவில், சங்கத்தானை, மீசாலை பகுதிகளும் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.

இதன்போது வீடுகளிலிருந்த பொது மக்கள் அனைவரும் பாடசாலை மைதானங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு 7000இற்கும் மேற்பட்ட மக்கள் பொது இடத்தில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது சுற்றிவளைப்பு நடைபெற்ற இடங்களுக்குச் செல்ல எவரும் அனுமதிக்கப்படாததுடன் அங்கிருந்து வெளியேற எவரும் அனுமதிக்கப்படவில்லை.

இந்தச் சுற்றிவளைப்பின் போது பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள் உரிய இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் ஏனையோர் நீண்ட நேரத்தின் பின்னரே வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் சுற்றிவளைப்பு சில இடங்களில் முற்பகல் 11 மணிவரை நடைபெற்றதுடன் சில பகுதிகளில் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற்றுள்ளது.

இந்தச் சுற்றிவளைப்புத் தேடுதலில் நூற்றுக்கணக்கான படையினர் ஈடுபட்டதுடன் பவள் கவசவாகனங்களும் அந்தப்பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்தத் தேடுதலால் நேற்றுக்காலை சாவகச்சேரி நகரின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.








படைப் புலனாய்வாளர்களால் பொதுமக்கள் கடத்தல்

வியாழன், 10 ஜுலை 2008 [Pathivu]

யாழ் தென்மராட்சி வரணிப் பகுதியை சேர்ந்த இரண்டு பொதுமக்கள்,
சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டுள்ளனர்.


கடந்த 5ஆம் நாளன்று, வரணியில் இருந்து சாவகச்சேரி நகருக்குப்
புறப்பட்டுச் சென்ற, முப்பத்தொன்பது அகவையுடைய மயில்வாகனம்
மாசிலாமணி என்ற குடும்பத்தவரும், இருபத்தொரு அகவையுடைய
அருள்குமார் பிரபு என்ற இளைஞரும் காணாமல் போயுள்ளனர்.

இவர்களை, கொடிகாமம் பகுதியில் வைத்து சிறீலங்கா படைப்
புலனாய்வாளர்கள் கடத்தியதாக, குடிசார் வட்டாரங்கள் கூறுகின்றன.

சாவகச்சேரி, பிரதேச சபை உள்ளூராட்சி வார நிகழ்வுகள்2008 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு குடாநாட்டின் சகல பிரதேச சபைகளும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை தற்போது முன்னெடுத்து வருகின்றன.

சாவகச்சேரி
பிரதேச சபையில்...

சாவகச்சேரி பிரதேச சபையின் உப அலுவலகங்களான கச்சாய், வரணி, சர சாலை, கைதடி, நாவற்குழி ஆகிய அலு வலகங்களில் உள்ளூராட்சி வார நிகழ்வு கள் நடத்தப்படவுள்ளன.
* உப அலுவலகங்களுக்கிடையே யுள்ள முன்பள்ளிச் சிறார்கள் மத்தியில் கல்வி சார் போட்டிகளாகப் பாஓதுதல், நடனம், கதைசொல்லல் ஆகியவை நடத்தப்படும்.
* உப அலுவலக பகுதிகளில் மரங் கள் நாட்டுதல்
* நூல் நிலையங்களில் விழிப்புணர் வுக் கருத்தரங்குகளை நடத்துதல்.
* உப அலுவலக பிரதேசத்தில் உள்ள மயானங்கள் சிரமதானம் மூலம் துப்புரவு செய்தல்.
* கொடிகாமம் நகரில் உள்ள உணவு நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டு போட்டி கள் நடத்துதல்.
* சாவகச்சேரிப் பிரதேசசபை உத்தி யோகத்தர்கள் மத்தியில் பொது அறிவுப் போட் டிகள் நடத்துதல். (Uthayan)


Tue Jul 8 2008
தென்மராட்சி செயலகத்துக்குள் நுழைந்து சேதம் விளைவித்தவருக்கு ஒரு லட்சம் அபராதம்
தென்மராட்சி பிரதேச செயலக கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய நபருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் நேற்று ஒரு லட் சத்து 40ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 30ஆம் திகதி பிரதேச செயலகத்திற்குள் அத்து மீறி நுழைந்து அங்கிருந்த உடைமைகளை அடித்து நொறுக்கி சேதம் விளைவித்ததாக இந்த நபர் மீது சாவகச்சேரி பொலிஸாரால் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு நேற்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது பிரதேச செயலகத்தினுள் அத்துமீறி நுழைந்தமைக்காக ஆயிரம் ரூபாவும், அங்கு சேதங்களை ஏற்படுத்தியமைக்காக ஒரு லட்சத்து 39 ஆயிரம் ரூபாவும் அபராதமாக விதிக்கப்பட்டது.
அபராதத் தொகை செலுத்தப்படாவிடின் 24 மாத சிறைத் தண்டனை அனுபவிக்குமாறு உத்தரவிடப்பட்டது. (Uthayan)