2.12.12

ஊரும் அயலும் டிசம்பர் 2012

சாவகச்சேரி பிரதேச சபைத் தலைவர் உறுப்பினர்களை வழிமறித்து ஆர்ப்பாட்டம்
சாவகச்சேரி பிரதேச சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை மாடியிலிருந்து இறங்க விடாமல் தடுத்து கொடிகாமம் நகர்ப் பகுதி வர்த்தகர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றது.
பிரதேச சபையின் விசேட கூட்டம் நேற்று பிரதேச சபை மேல்மாடியில் இடம்பெற்றது. கூட்டம் முடிந்து வெளியே வரமுயன்ற தலைவரையும் உறுப்பினர்களையும் கீழே இறங்க விடாமல் தடுத்து போராட்டம் நடத்தினர்.
கொடிகாமம் சந்தையில் உள்ள மலகூடத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர் அருகில் உள்ள வீதியில் வெள்ளமாக காணப்படுகிறது.
இதனால் இந்த வீதியைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.  அதனைப் புனரமைத்துத் தருமாறு வர்த்தகர்களும், பொதுமக்களும் பல தடவைகள் கோரியுள்ளனர்.
அதற்குத் தீர்வு கிடைக்காத நிலையில் நேற்றுக் காலை சிறுவன் ஒருவன் அந்த கழிவுநீர் தேங்கியுள்ள பகுதிக்குள் வீழ்ந்துள்ளான்.
இதனால் ஆத்திரமுற்ற வர்த்தகர்களும், பொதுமக்களும் நேற்று பிரதேசசபை கூட்டம் நடைபெறுவதை அறிந்து தலைவரையும் உறுப்பினர்களையும் சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு கடிதம் மூலம் கேட்டிருந்தனர். கூட்டம் முடியும் வரை வெளியில் காத்திருந்தனர்.
இந்தக் கடிதம் பற்றி கூட்டத்தில் ஆராயப்படாமல் கூட்டம் முடிவுற்றதாலும் தலைவர், உறுப்பினர்களைச் சந்திக்க திங்கட்கிழமை வருமாறும் அறிவித்ததாலும் ஆத்திரமடைந்த வர்த்தகர்களும் பொதுமக்களும் மாடிப்படிகளை வழிமறித்து மலகூடத்தை உடனடியாக திருத்தித் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைவர் மலகூடத்தை திருத்துவதற்கு ஒரு வார கால அவகாசம் கோரிய போதிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அதற்கு இணங்கவில்லை. வாக்குவாதம் அதிகரித்தது.
இதன்பின்னர் நிலைமை மோசமடையவே சபை உறுப்பினர்கள் மக்களின் கோரிக்கையைப் பொறுப் பெடுத்து தற்காலிக ஏற்பாடுகள் மேற்கொள்வதாக கூறினர். 
இதனை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதேவேளை சந்தையில் உள்ள மலகூடத்தை பார்வையிடுமாறு மக்கள் கோரிக்கை விடுத்த போது ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் எவரும் செவிசாய்க்கவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மூவர் மலகூடத்தைச் சென்று பார்வையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக வர்த்தகர்களுக்கு உறுதியளித்தனர்.
உடைந்து போயுள்ள குழாயை திருத்த மதிப்பீடு தயாரித்து அனுமதி பெற வேண்டுமா என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

மழை பெய்யாவிட்டால் நெற்பயிருக்கு பாதிப்பு

news
வறட்சி காரணமாகத் தாழ்ந்த வயல்களில் தண்ணீர் வற்றி அவை சதுப்பு நிலமாகவே காணப்படுகின்றன.

இன்னும் ஒருவார காலத்துக்குள் மழை பெய்யாவிட்டால் குடாநாட்டில் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும்போக நெற்செய்கை பாதிக்கப்படும் என விவசாயத் திணைக்கள அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

தற்போது நிலவும் வறட்சி காரணமாகத் தாழ்ந்த வயல்களில் தண்ணீர் வற்றி அவை சதுப்பு நிலமாகவே காணப்படுகின்றன. இதனை விட மேட்டு நில வயல்களில் தண்ணீர் முற்றாக வற்றியமையால் நிலத்தில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இன்னும் குறைந்தது ஒருவார காலத்துக்குள் மழை பெய்ய வேண்டும். இல்லையேல் நெற் பயிர்கள் முழுமையாகப் பாதிப்படையும் நிலை ஏற்படும். தற்போது வழமையான மாரி மழையை நெற்பயிர்ச் செய்கையாளர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

அனேகமான வயல்களில் தண்ணீர் வற்றியதால் விவசாயிகள் உரப்பசளைகளை கூட விசிற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. என்றார்.14.12.12
AAAIbk/g_2K2i3ghR0/s400/9.JPG" width="264" />
பயங்கரவாதப் பொலிஸாரால் குடாநாட்டில் இரண்டே நாள்களில் 13 பேர் திடீர்க் கைது
news
யாழ். குடாநாட்டில் கடந்த இரு தினங்களாக பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரால்  பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 19 வயது முதல் 55 வயது வரையான 13 பேர் இது வரை கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்று "உதயன்' பத்திரிகைக்கு நம்பகரமாகத் தெரியவந்தது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகம் என்று கூறப்படுகின்ற போதும் அதனை உறுதிப்படுத்தமுடியவில்லை.
கைது செய்யப்பட்டவர்களில் 7 பேரின் உறவினர்கள் அது பற்றி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தி இருக்கின்றனர். இவர்கள் கோப்பாய், சாவகச்சேரி, பருத்தித்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்டவர்கள். 
நேற்று முன்தினம் இரவோடு இரவாக இவர்கள் கைது செய்யப்பட்டு வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். 
இவர்கள் சென்ற வாகனத்தில் 14 பேர் இருந்துள்ளனர் என்று ஒரு தகவல் "உதயன்' பத் திரிகைக்குக் கிடைத்தது. எனினும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. 
சுன்னாகத்தில் ஐவர் கைது 
இவர்கள் தவிர சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 5 பேர் நேற்றுக் கைது செய்யப்பட்டனர். காலையில் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்ட இவர்கள் பின்னர் வவுனியாவுக்கு ஏற்றப்பட்டனர்.
சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பொலிஸ் அதிகாரி ஒருவர் தன்னிடம் தெரிவித்திருக்கிறார் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகார் எஸ்.கனகராஜ் "உதயன்' பத்திரிகையிடம் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் அனேகமாக எல்லோரும் வன்னி இறுதிப் போரின் பின்னர் அரசினால் நடத்தப்பட்ட முகாம்களில் இருந்து திரும்பி மீளக்குடியமர்ந்தவர்கள். அவர்களில் சிலர் முன்னாள் போராளிகள். 
இன்றும் சிலர் கைதாகலாம்
கைது செய்யப்பட்டவர்கள் தவிர வேறு சிலரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். இவர்களில் முன்னாள் போராளிகளும் அடக்கம்.
இன்று காலை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு தனிச் சிங்களத்தில் எழுதப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ள கடிதம் "உதயன்' பத்திரிகைக்குக் கிடைத்துள்ளது. 
தாமும் கைது செய்யப்படலாம் என்று இவர்கள் அஞ்சுகிறார்கள். 
காணாமல்போனவர் கைது
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வல்வெட்டித்துறை, ஊரணியைச் சேர்ந்த அருளம்பலம் டிசோக்ராஜ் (வயது 19) என்று அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.
நேற்று முன்தினம் காலையில் தண்ணீர் அள்ளுவதற்காகச் சென்ற தனது உறவினரான டிசோக்ராஜ் பயங்கரவாத விசாரணைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் என்பது நேற்று மாலையே தமக்குத் தெரியவந்தது என்று உறவினர் ஒருவர் "உதயன்' பத்திரிகையிடம் தெரிவித்தார்.
"பிள்ளையார் கோயில் கிணற்றில் தண்ணீர் அள்ளுவதற்காகச் சென்றிருந்தார். பின்னர் அவர் பற்றிய தகவல் ஏதும் இல்லை. உயர்தரம் படித்துவிட்டு கணினி கற்றுக் கொண்டிருந்தார். நேற்று மாலையில் வீட்டுக்கு வந்த பொலிஸார், பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அவரைக் கைது செய்திருக்கின்றனர் என்று தெரிவித்தனர்.
%25C3%25BC.gif" width="187" />
அவரது கணினி மற்றும் பென்ட்ரைவ் உடன் பெற்றோரையும் சகோதரர்களையும் இன்று வவுனியாவுக்கு வருமாறு அவர்கள் பணித்துள்ளனர்'' என்று அவர் தெரிவித்தார். .உதயன் 6.12.12
நாவற்குளியில் பேரூந்து விபத்து; நால்வர் வைத்தியசாலையில்
news
யாழ். நாவற்குழிப்பாலத்திற்கு அருகில் இன்று காலை இரண்டு பேரூந்துகள் மோதி விபத்துக்குள்ளாகின.
இன்று காலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேரூந்தும் யாழில் இருந்து முல்லைத்தீவு இ.போ.ச பேரூந்தும் நாவற்குளிப் பாலத்திற்கு அருகில் இன்று காலை விபத்துக்கு உள்ளானது.
நாவற்குளிப் பாலத்திற்கு அருகில் உள்ள வளைவில் திரும்பிக் கொண்டிருக்கும் போது வேகமாக வந்து கொண்டிருந்த தனியார் பேரூந்து இ.போ.ச பேரூந்துடன் மோதிக் கொண்டது.
அதனால் இரண்டு பேரூந்துகளும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்(3.11)