தனித்திருந்த வயோதிப தம்பதியினரிடம் ஆயுத முனையில் நகைகள் கொள்ளை!
வரணியில் சம்பவம்
[ வியாழக்கிழமை, 31 சனவரி 2013, 02:09.21 AM GMT ]
கடந்த திங்கட்கிழமை இரவு வரணி வடக்கு சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றள்ளது.
நள்ளிரவு வேளை வீட்டின் புகைக்கூடு வழியாக உள்நுழைந்த திருடர்களைக் கண்ட வீட்டுக்காரர்கள் சத்தமிட முயன்ற போது திருடர்கள் வீட்டின் பெண்ணிண் தொண்டையில் துணியால் இறுக்கியதுடன் சத்தமிடாதவாறு கணவனின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு திருட்டை மேற்கொண்டுள்ளனர்.
திருட்டின் போது 15 பவுண் நகைகள், மற்றும் 25 ஆயிரம் ரூபா பணம், 2 கையடக்கத் தொலைபேசிகள் என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் வயது முதிர்ந்த கணவனும், மனைவியும் தனித்து வசித்து வருகின்ற நிலையில் இக்கொள்ளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புத்தூர்ச் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தென்பகுதியைச் சேர்ந்த நபர் பலி
வியாழக்கிழமை, 03 சனவரி 2013.
புத்தூர்ச் சந்தி பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் தென்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொடிகாமம் புத்தூர்ச் சந்தியில் இடம்பெற்ற இவ்விபத்தில் மாத்தறை மாவட்டம், அக்குரஸ்ஸ பரஹவத்த பகுதியைச் சேர்ந்த வீவத்தாஹே நிஹால் (வயது 38) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
உயிரிழந்தவர் யாழில் இடம்பெற்றுவரும் வீதி அபிவிருத்தி பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.