கைதடியினில் தப்பியோடிய சிறுமி தென்னிலங்கையி.னில் வேலைக்காரியாக மீட்பு! பாலியல் வல்லுறவிற்கும் .உட்படுத்தப்பட்டிருந்தாராம்!!
'.
யாழ்ப்பாணம் கைதடி சிறுவர் இல்லத்திலிருந்து தப்பியோடிய மூவரில் சிறுமியொருத்தி களனியில் சிங்களவர் வீடொன்றினில் வேலைக்காரியாக இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
15 வயதான குறித்த சிறுமி அந்த வீட்டில் வேலைக்கு அமர்த்தப்படுவதற்கு முன்னர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிலியந்தலை பிரதேசத்திலுள்ள இளைஞர் ஒருவர் குறித்த சிறுமியை ஹோட்டலுக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதன் பின்னர் வீட்டுவேலைக்காக களனியிலுள்ள பெண்ணொருவரிடம் ஒப்படைத்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது. வீட்டு ஏஜமானி குறித்த சிறுமியிடம் தகவல்களை பெற்று கிளிநொச்சியிலுள்ள சிறுமியின் தந்தைக்கு இதுதொடர்பில் அறிவித்துள்ளார்.
தந்தையின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த சிறுமியை எஜமானி உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சியை சேர்ந்த குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் தடுப்புகாவல் உத்தரவிற்கு அமைய கைதடி சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
அங்கிருந்து 21 மற்றும் 22 வயது பெண்களுடன் குறித்த சிறுமி மே மாதம் 24 ஆம் திகதி தப்பியோடியுள்ளார். அவர்கள் மூவரும் கொழும்பை நோக்கி பஸ்ஸில் வந்துக்கொண்டிருந்தபோது அதிலொரு யுவதி பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த சிங்களவரான ஆணொருவருடன் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளனர். அவரின் கோரிக்கைக்கு அமைய மூவரும் பிலியந்தலைக்கு சென்று ஹோட்டலில் தங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சிறுமியை மட்டும் அங்கிருந்த இளைஞரிடம் கைவிட்டுவிட்டு இரண்டு யுவதிகளும் அங்கிருந்து தப்பிசென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுமியை சில நாட்கள் ஹோட்டலில் வைத்து துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன், அதற்கு பின்னர் களனியிலுள்ள பெண்ணொருவரிடம் குறித்த சிறுமியை வீட்டுவேலைக்காக ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது
மதுவுக்கு அடிமையானோருக்கு மறுவாழ்வு அளிக்கும் விடுதி; முதன் முதலாக சாவகச்சேரி வைத்தியசாலையில்
வடமாகாணத்தில் மதுபோதைக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாதவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் விடுதியொன்று முதன் முதலாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விரைவில் ஆரம்பித்து வைக்கப்படும் என்று உளநல மருத்துவ நிபுணர் சிவயோகன் தெரிவித்தார்.
வைத்தியசாலை பணியாளர்களுடனான நேற்றைய கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரின் வழிகாட்டலில் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஏற்பாட்டில் யாழ்.போதனா வைத்தியசாலை உளநல வைத்திய நிபுணர் சிவயோகனின் நெறிப்படுத்தலில் இந்த விடுதி இயங்கவுள்ளது.
இது விடுதியாக அல்லாது பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கக்கூடிய ஆற்றுப்படுத்தல் நிலையமாகவே செயற்படவுள்ளது.
யாழ். குடாநாட்டில் சந்தர்ப்ப வசத்தால் மதுபோதைக்கு அடிமையானவர்களே அதிகமானோர் என்பதாலும், அவர்களை நல்வழிப்படுத்துவது இலகுவான விடயம் எனக் கருதப்படுவதாலும் போதைக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பவர்கள் தாமாக முன்வந்து வைத்திய நிபுணருடன் கலந்தாலோசித்து நிலையத்தில் தங்கலாம்.
இவ்வாறான நிலையங் கள் இலங்கையில் குருணாகல், கொழும்பு ஆகிய இடங்களில் அரச சார்பற்ற நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகின்றன. வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக இத்தகைய நிலைய மொன்றை அமைக்க சுகாதாரத் திணைக்களத்தினர் முன்வந்துள்ளமை பாராட்டக்கூடியது.
அத்துடன் இந்த வைத்தியசாலையில் சிற்றூழியர்கள் பற்றாக்குறையான நிலையிலும் இங்கு பணியாற்றுவோர் மேலதிக நேரம் பணியாற்ற மனவிருப்பத்துடன் முன்வந்தமை சுகாதாரத் திணைக்களத்தினர் எடுத்த நடவடிக்கைக்கு உந்து சக்தியாக அமைகிறது.
இந்த முயற்சி வெற்றியளிக்குமாயின் இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகளில் இளவயதில் போதைக்கு அடிமையாகியுள்ள எமது மக்களின் இளையோர் இங்கு வந்து புனர்வாழ்வு பெற முடியும்.
வடபகுதியில் டெங்கு மற்றும் எயிட்ஸ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களை விட மதுபோதைக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியா திருப்போரின் எண்ணிக்கை மிக மிக அதிகமாகும்'' என உளநல வைத்திய நிபுணர் கருத்து வெளியிட்டுள்ளது. http://onlineuthayan.com/ 21.6.2013

யாழ்.நாவற்குழியில் அத்துமீறி குடியேறிய சிங்களவர்களுக்காக குடியேறினார் புத்த பெருமான்!
[ வியாழக்கிழமை, 20 யூன் 2013, Tamilwin ]
குறித்த புத்தர் சிலையின் ஆரம்ப பூஜை நிகழ்வு நேற்று காலை நடைபெற்றுள்ளது.
இப்பூஜை நிகழ்வில் யாழ்.நாகவிகாரையின் புத்த பிக்குகள் உட்பட இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
ஆரம்பத்தியல் யாழ்ப்பாணத்தில் உள்ள ரயில் நிலையத்தில் வந்து தங்கிருந்த சிங்களவர்கள்இ தாங்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்திருந்தனர்.
ஆயினும் அவர்களிடம் தாம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், தமிழர்கள் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள எந்த ஆவனங்களும் அவர்களிடம் இல்லை.
இந்நிலையில் அவர்களை குடியேற்ற முடியாது என்று அரச அதிகாரிகள் குறியிருந்தனர். ஆயினும் சிறிலங்கா இராணுவத்தின் உதவியுடன் குறித்த சிங்களவர்கள் நாவற்குழிப் பகுதியில் அத்துமீறிக் குடியேறிக் கொண்டனர்.
அவ்வாறு குடியேறிக் கொண்ட சிங்களவர்களுக்கு சகல உதவிகளையும் இலங்கை இராணுவத்தினர் வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த சிங்களவர்கள் தமக்கும் வாக்குரிமை யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று தற்போது வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
நாங்கள் செலுத்திய வரிப் பணம் எங்கே?இறைவரித் திணைக்கள ஆணையாளரிடம் தென்மராட்சிப் பகுதி மக்கள் கேள்வி | ||
போரினால் அழிவடைந்த தென்மராட்சி பிரதேச அபிவிருத்திக்கு வெளிநாடுகளே உதவி வழங்கின. எமது மக்களால் அரசுக்கு செலுத்தப்பட்ட வரிப்பணம் ஏன் எமது பிரதேச அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படவில்லை.
இவ்வாறு பிரதேச மக்கள் இறைவரி திணைக்கள யாழ்.மாவட்டப் பிரதிஆணையாளரிடம் கேள்வி எழுப்பினர்.
யாழ்.மாவட்ட உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் சாவ கச்சேரி ஐங்கரன் மணி மண் டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட "வரி விழிப்பூட்டல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்' நடைபெற்ற வரி தொடர்பான கருத்தரங்கிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பட்டது.
காலத்துக்கு காலம் அரசினால் அறிவிக்கப்படும், விதிக்கப்படும் நேரடி, மறைமுக வரிகளை யாழ்.மாவட்ட மக்கள் தவறாமல் செலுத்தி வருகிறார்கள். செலுத்தப்படும் வரிகள் நாட்டின் அபிவிருத்திக்கு பெருமளவில் செலவிடப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக வடபகுதி மக்கள் வரி செலுத்தி வருகின்ற போதிலும் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்திக்கு அரசின் பங்களிப்பு என்ன?
போரின் பின்னர் பெரிய அழிவுகளைக் கண்ட தென்மராட்சிப் பிரதேசத்தில் உலக நாடுகளே பல அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்டன மேற் கொண்டு வருகின்றன. மக்களால் செலுத்தப்படும் வரிப்பணம் மக்களுக்கே என்ற கொள்கைத் திட்டத்தின் கீழ் வடபகுதி மக்களுக்கு அரசினால் ஏன் அபிவிருத்தி நிதி ஒதுக்கப்படுவதில்லை.
நாட்டு மக்களால் செலுத்தப்படும் வரிப்பணம் பகிர்வதில் பாகுபாடு காட்டப்படுவதாகக் கருதுகிறோம் எனக் கேள்விக் கணைகளைத் தொகுத்து அதிகாரிகளை திக்குமுக்காடச் செய்தனர் தென்மராட்சி மக்கள்.
காலத்துக்கு காலம் அரசினால் அறிவிக்கப்படும், விதிக்கப்படும் நேரடி, மறைமுக வரிகளை யாழ்.மாவட்ட மக்கள் தவறாமல் செலுத்தி வருகிறார்கள்.(Uthayan 9.6.13)
|
யாழ் சாவகச்சேரியில் காசோலை மோசடி
சனி, 08 ஜூன் 2013 - 11:28 IST |
சாவகச்சேரி காவல் நிலையத்தில் நாலரை லட்சம் ரூபா பெறுமதியான காசோலை மோசடிசம்பந்தமாக நேற்று வெள்ளிக்கிழமை (2013-06-07) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவற்துறை அத்தியட்சகர் எம்.ஜெப்ரி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடகவியலாளர்களுக்கும் யாழ்ப்பாணம் காவற்துறை உயர் அதிகாரிகளுக்கும் இடையே இடம் பெறும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்தார்.
சாவகச்சேரி வர்த்தக நிலையத்தைச்சோந்த ஒருவர் இந்த மோசடியை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளதுடன் வர்த்தக நிலையத்தையும் கைவிட்டுள்ளார் எனவும் குறிப்பிட்ட சந்தேக நபரை காவற்துறையினர் தேடி வருவதாகவும் தெவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் காவற்துறை அத்தியட்சகர் பிரிவில் உள்ள காவல் நிலையங்களில் காவற்துறை மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக போக்குவரத்துக் காவற்துறையினரால் நேற்று வெள்ளிக் கிழமை (2013-06-07) இரவு மேற்க்கொள்ளப்பட்ட வாகன சோதனை நடவடிக்கையின் போது பல இடங்களில் வாகன சாரதிகள் மாட்டிக் கொண்டுள்ளார்கள்.
யாழ்ப்பாணம் காவல் நிலைய காவற்துறையினரால் மேற்க்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சாராய விற்பனை சம்பந்தமாக 03 பேரும் மது போதையில் இடையூறு ஏற்படுத்தியது சம்பந்தமாக 10 பேரும் மற்றும் 29 வாகனங்களும் 79 நபர்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டும் உள்ளார்கள்.
மானிப்பாய் காவல் பிரிவில் குடிபோதையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது சம்பந்தமாக ஒருவரும் குடிபோதையில் வாகனம் செலுத்தி ஒருவரும் மற்றும் 33 வாகனங்களும் 47 பேரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதில் எட்டுப் பேர் மீது வழக்ககள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சுன்னாகம் காவல் பிரிவில் குடி போதையில் வாகனம் செலுத்திய ஒருவரும் குடித்துவிட்டு கலகம் விளைவித்த 5 பேரும் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த 02 பேரும் சந்தேகத்தின் பெயரில் ஒரவரும் கைது செய்யப்பட்டதுடன் 34 நபர்களும் 24 வாகனங்களும் சோதனையிடப்பட்டுள்ளன.
கோப்பாய் காவல் பிரிவில் 12 வழக்ககள் பதிவு செய்யப்பட்டதுடன் 64 வானங்கள்சோதனைக்க உள்ளாக்கப்பட்டுதடன் 96நபர்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.
சாவகச்சேரி காவல் பிரிவில் குடிபோதையில் வாகனம் செலுத்திய ஆறு பேர் கைது செய்யப்பட்டதுடன் 26 வாகனங்கள் சோதனையிடப்பட்டதுடன் 29 நபர்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
நெடுந்தீவு காவல் பிரிவில் 18 வாகனங்கள் சோதனையிடப்பட்டதுடன் 32 நபர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
சாவகச்சேரியில் சிகரெட்டுக்கு 1 நாள் தடை 5.6.2013 Uthayan |
புகைத்தல் பாவனையைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தும் புகையிலைப் பொருள்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று புதன்கிழமை புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதை நிறுத்துவதற்குச் சாவகச்சேரி நகரசபைக்கு உட்பட கடைகளின் உரிமையாளர்கள் முன்வந்துள்ளனர்.
இது தொடர்பாகச் சாவகச்சேரி நகர சபைத் தலைவர் இ.தேவசகாயம்பிள்ளை கூறுகையில்,
இன்று புதன்கிழமை சாவகச்சேரி நகர சபைக்கு உட்பட்ட கடைகளில் புகைத்தல் பொருள்கள் விற்பனை செய்யப்படமாட்டாது.
சிகரெட் பெட்டியில் சுகாதார எச்சரிக்கைப் படங்கள் பிரசுரிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு எடுத்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்து சுற்றாடல் தினமான இன்று புகைத்தல் பொருள்கள் விற்பனை செய்வதைத் தவிர்த்துள்ளோம். இதன்போது ஆதரவுப் பதாகைகளும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. என்றார்.
|
யாழ். சாவகச்சேரிப் பகுதியில் விபச்சார விடுதி முற்றுகை!
http://www.jvpnews.com/srilanka/29843.html
யாழ். சாவகச்சேரிப் பகுதியில் விபச்சார விடுதி முற்றுகை! 2பெண்களும் 2ஆண்களும் கைது! யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பகுதியில் விடுதி ஒன்றில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு ஜோடிகள் சற்று முன்னர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.சாவகச்சேரி பழைய பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள நிரோ தனியார் விடுதியியிலேயே தவறான நடத்தையில் ஈடுபட்ட இரண்டு பெண்களும் 2 ஆண்களும் கைது செய்யப்பட்டு யாழ்.சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாவச்சேரி நகர சபை தலைவர் தேகசகாயம்பிள்ளை, நகர சபை உறுப்பினர் கிசோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீவக இளைஞர் அணித் தலைவர் நிசாந்தன் ஆகியோர் இந்த விடுதியை முற்றுகையிட்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த விடுதியில் நடைபெற்ற விபச்சார நடவடிக்கை முற்றுகையிடப்பட்டுள்ளது.
இந்த விடுதியை பொலிஸார் முற்றுகையிட்டதுடன், விடுதி உரிமையாளருக்கும் பொலிஸாருக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.
இதனை அடுத்து இந்த விடுதியில் இருந்த இரண்டு ஜோடிகளை பொலிஸ் தங்கள் வாகனத்தில் கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இவர்களை பணத்திற்காக அழைத்து வந்த நுணாவிலைச் சேர்ந்த 23 வயதுடைய ஆணும் 41 வயதுடைய ஆணும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கபப்ட்டுள்ளனர்.
அத்தோடு இந்த விடுதி சாவகச்சேரி நகர சபையின் அனுமதி இன்றி இயங்கியதாகவும் இதை சீல் வைப்பதற்குரிய நடவடிக்கையை சாவகச்சேரி நகர சபை எடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி நகர சபைத் தலைவர் தேவசகாயம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
|
ஈழத்தமிழருக்கு வெள்ளை மாளிகையின் உயர்விருது
May 30, 2013http://www.canadamirror.com/canada/11177.html
ஈழத்தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான “Champion of Change” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று காலை வெள்ளைமாளிகையில் இந்த விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது.
புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் வேற்று நாட்டவர்களில் முன்னோடியான கண்டுபிடிப்புக்களுக்காக வழங்கப்படும் இந்த விருதைப் பெற்றவர்களுள் பேராசிரியர் எஸ். சிவானந்தன் ஒருவரே தழிழர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவருடன் சேர்த்து 11 பேருக்கு நேற்று விருதுகள் வழங்கப்பட்டன.
சிக்காக்கோ இலினோஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைப் பேராசிரியராகக் கடமையாற்றும் இவர், இயற்பியலில் பல கண்டுபிடிப்புக்களை வெளியிட்டுள்ளதுடன், பல ஆய்வுகளிலும் இடுபட்டுள்ளார்.
தனது முயற்சியினால் “சிவானந்தன் ஆய்வு மையம்” என்ற இயற்பியல் ஆய்வு கூடத்தை நிறுவி அதனூடாக பல ஆய்வு நடவடிக்கைகளுக்கு உதவி வருவதுடன், இலாப நோக்கற்ற பல ஆய்வு உதவிகளையும் மேற்கொண்டிருக்கிறார்.
இவரது அனுசரணையுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக பெளதீகவியற்றுறையினரும் கூரியக் கதிர் தொழில்நுட்பத்தில் கூட்டு ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் சிவானந்தன் யாழ். இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.
Brothel house raided in Chavakatchcheri: Four arrested |
[ Thursday, 30 May 2013, 09:08.44 AM GMT +05:30 http://eng.lankasri.com/] |
Police officers raided brothel house at Chavakatchcheri, Jaffna short while ago. |
Police officers raided brothel house at Chavakatchcheri, Jaffna short while ago.Police arrested two women and men at the restaurant (Niro)located near the Chavakatchcheri old police station. TNA Municipal Council Mayor Theysasagayampillai, Municipal Council member Kishore, TNA youth forum leader Nishanthan have provided information’s to police officials on this brothel house. During the time of raid heat argument broken out between restaurant owner and police officers. Police arrested two couples. During the time of investigations it was revealed 20 years old girl resident of Puttur and 30 years old woman resident of Pandatharippu were brought up on promising to grant employment with highest wedge. 23 years old boy resident of Nunawila and 41 years old currently detained at the police station. Mayor of the Chavakatchcheri Municipal Council has taken steps to seal the restaurant. |
'
'
'
'
'
' '
'
'
'
சாவகச்சேரி பொலிஸூக்கும் மக்களின் காணிகள் பறிப்பு
'அறிவித்தல் நேற்று ஒட்டப்பட்டது
'
3-5-2013
'காணி சுவீகரிப்பு ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு தனியார் காணி சுவீகரிக்கப்படவுள்ளது. இது தொடர்பான மும்மொழிகளில் வெளியிடப்பட்ட அறிவித்தல்கள் நேற்று வியாழக்கிழமை காணியின் முன்னால் ஒட்டப்பட்டுள்ளது. சாவகச்சேரி கோயிற்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் கச்சாய் வீதியில் உள்ள 140 பேர்ச் காணியே சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காணியின் நான்கு பக்க எல் லைகள் பற்றிய விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்து வெளி நாடொன்றில் தங்கியுள்ள ஒருவரின் பெயரில் உள்ள காணியே இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளது. இவரது காணிக்கு அருகில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிலேயே உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது '
'
'
நாவற்குழியில் மீண்டும் சிங்கள மக்கள் வீடமைப்பு
நாவற்குழியில் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்கள மக்கள் சட்ட விரோதமாக வீடமைக்கும் நடவடிக்கைகளைக் கடந்த சில நாள்களாக மீண்டும் ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான, நாவற்குழியில் அமைந்துள்ள காணியில் கடந்த 2010 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 78 சிங்களக் குடும்பங்கள் அத்துமீறிக் குடியமர்ந்தன.
ஆரம்பத்தில் இந்தக் குடும்பங்கள் கொட்டில்கள் அமைத்துச் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தனர். பின்னர் அந்தக் காணிகளுக்குரிய உறுதிகள் வழங்கப்படாமலும் சாவகச்சேரி பிரதேச சபையின் அனுமதி பெறாமலும் நிரந்தர வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகளை அவர்கள் தொடங்கியிருந்தனர்.
இருப்பினும் கடந்த ஜனவரி மாதம் இந்தப் பணிகளை அவர்கள் இடைநிறுத்தியிருந்தனர். எனினும் தற்போது அவர்கள் நிரந்தர வீடுகள் அமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இரண்டு குடும்பங்கள் மாத்திரமே தங்கியிருந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
யாழ்ப்பாணம் கைதடி முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த வயோதிபப் பெண் ஒருவரை அவரது சகோதரி எனக் கூறி அடையாளப்படுத்திய மற்றொரு வயோதிப மாது, அவரை அழைத்துச் சென்று இரண்டு நாட்களின் பின்னர் மீண்டும் வயோதிபர் இல்லத்திலேயே அவரைக் கூட்டி வந்து விட்டுச் சென்றுள்ளார்.
சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 18 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ். கைதடி சிறுவர் இல்ல பொறுப்பாளரை 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு சிறுவர் நீதிமன்ற நீதிபதி கருப்பையா ஜீவராணி உத்தரவிட்டுள்ளார்.
'அறிவித்தல் நேற்று ஒட்டப்பட்டது
'
3-5-2013
'காணி சுவீகரிப்பு ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு தனியார் காணி சுவீகரிக்கப்படவுள்ளது. இது தொடர்பான மும்மொழிகளில் வெளியிடப்பட்ட அறிவித்தல்கள் நேற்று வியாழக்கிழமை காணியின் முன்னால் ஒட்டப்பட்டுள்ளது. சாவகச்சேரி கோயிற்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் கச்சாய் வீதியில் உள்ள 140 பேர்ச் காணியே சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காணியின் நான்கு பக்க எல் லைகள் பற்றிய விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்து வெளி நாடொன்றில் தங்கியுள்ள ஒருவரின் பெயரில் உள்ள காணியே இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளது. இவரது காணிக்கு அருகில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிலேயே உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது '
'
'
நாவற்குழியில் மீண்டும் சிங்கள மக்கள் வீடமைப்பு
நாவற்குழியில் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்கள மக்கள் சட்ட விரோதமாக வீடமைக்கும் நடவடிக்கைகளைக் கடந்த சில நாள்களாக மீண்டும் ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான, நாவற்குழியில் அமைந்துள்ள காணியில் கடந்த 2010 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 78 சிங்களக் குடும்பங்கள் அத்துமீறிக் குடியமர்ந்தன.
ஆரம்பத்தில் இந்தக் குடும்பங்கள் கொட்டில்கள் அமைத்துச் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தனர். பின்னர் அந்தக் காணிகளுக்குரிய உறுதிகள் வழங்கப்படாமலும் சாவகச்சேரி பிரதேச சபையின் அனுமதி பெறாமலும் நிரந்தர வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகளை அவர்கள் தொடங்கியிருந்தனர்.
இருப்பினும் கடந்த ஜனவரி மாதம் இந்தப் பணிகளை அவர்கள் இடைநிறுத்தியிருந்தனர். எனினும் தற்போது அவர்கள் நிரந்தர வீடுகள் அமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இரண்டு குடும்பங்கள் மாத்திரமே தங்கியிருந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
வெளிநாட்டு பணத்திற்கு ஆசைப்பட்டு முதியோர் இல்லத்திருந்தவரை சகோதரி என அழைத்துச் சென்ற பெண்
[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013 Tamilwin ]
இல்ல அத்தியட்சகரிடம் வந்த கரணவாய் தெற்கைச் சேர்ந்த தங்கராசா பார்வதி (வயது-65) என்னும் பெண், தான் இரண்டு நாட்களுக்கு முன்னர் இல்லத்தில் வந்து தங்கியுள்ள வல்லிபுரம் அன்னம்மா (வயது-80) என்பவரின் சகோதரி எனவும் அவரை அழைத்துச் சென்று தன்னுடன் வைத்திருக்கப் போவதாகவும் தெரிவித்துத் தன்னுடன் கூட்டிச்சென்றுள்ளார்.
ஆனால், அவர் தனிமையில் விடப்பட்டிருப்பதையும், ஜீவாதாரத்துக்கு மிகவும் கஷ்டப்படுவதையும் கண்ட ஊரவர்கள் கிராம சேவையாளர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தரிடம் அறிவித்ததைத் தொடர்ந்து சகோதரி முறையான பெண் கிராம சேவகரால் அழைக்கப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்டார்.
இந் நிலையில் மீண்டும் அப்பெண் கடந்த வெள்ளிக்கிழமை கைதடி வயோதிபர் இல்லத்துக்கு முச்சக்கரவண்டியில் அழைத்து வரப்பட்டார்.
வல்லிபுரம் அன்னம்மாவுக்கு ஒரே ஒரு மகன் எனவும், அவர் வெளிநாட்டில் குடும்பத்துடன் தங்கியிருப்பதாகவும், அவரது பேரப்பிள்ளைகள் இவரைப் பராமரிப்பதற்குப் பணம் அனுப்புவதாகக் கூறியபடியினாலே சகோதரி முறையான பெண் இவரைக் கூட்டிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 18 வயதுடைய இளைஞன் கைது
Virakesari | |
By Priyarasa2013-04-19 14:41:03 |
சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 18 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமியின் அக்காவின் கணவரின் சகோதரினாலேயே நாவற்குழியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபரை சாவகச்சேரி நீதிமன்றில் பொலிஸார் ஆஜர் செய்துள்ளனர்.
யாழ். கைதடி சிறுவர் இல்ல பொறுப்பாளருக்கு விளக்க மறியல்
http://www.virakesari.lk/article/local.php?vid=40202013-04-17 14:30:16 |
யாழ். கைதடி சிறுவர் இல்ல பொறுப்பாளரை 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு சிறுவர் நீதிமன்ற நீதிபதி கருப்பையா ஜீவராணி உத்தரவிட்டுள்ளார்.
யாழ். கைதடி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்கள் 16 பேரில் 12 பேரைக் காணவில்லை என்று சிறுவர் இல்லத்தினரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டது.
குறித்த முறைப்பாட்டையடுத்து 12 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். அத்துடன் சிறுவர் இல்ல பொறுப்பதிகாரியும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், யாழ். சிறுவர், பெண்கள் பிரிவு பொலிஸாரினால் யாழ். சிறுவர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்தே சிறுவர் இல்ல பொறுப்பாளரை எதிர்வரும் 30 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிறுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட மற்றும் சிறுவர் இல்லத்தில் உள்ள சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனரா என்பது தொடர்பிலான மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
07 ஏப்ரல் 2013, ஞாயிறு 10:10 மு.ப
சாவகச்சேரிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தம்பதியர் காயமடைந்ததுடன் அவர்களின் குழந்தையும் தூக்கி வீசப்பட்டது. இருப்பினும் தெய்வாதீனமாகக் குழந்தை காயமின்றித் தப்பியது.
ஏ9 பிரதான வீதியில் சாவகச்சேரி பெரிய அரசடிப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. தம்பதியர் சென்ற மோட்டார் சைக்கிளும் எதிரே வந்த கூலர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த மிருசுவில் பகுதியைச் சேர்ந்த விக்ரர் ஜெயக்குமார் (வயது34), அவரது மனைவி ஜெயக்குமார் ஸ்ரீதயாளினி (வயது32) ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
விபத்தின்போது இவர்களின் ஒரு வயதுக் குழந்தை தூக்கி வீசப்பட்டது. எனினும் குழந்தைக்குத் தெய்வாதீனமாக எந்தக் காயங்களும் ஏற்படவில்லை. தம்பதியர் இருவரும் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
யாழ். சாவகச்சேரியில் கோவில் பூசகர் சிறுமி மீது பாலியல் வல்லுறவு! |
05 April 2013 08:02:56 AM (http://thedipaar.com/new/news/news.php?id=59481&cat=eelam)
|
யாழ். சாவகச்சேரி, மட்டுவில் பிரதேசத்தைச் சேர்ந்த கோவில் பூசகர் ஒருவர் தனது உறவுக்கார சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். சாவகச்சேரி பொலிஸாரினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டுவில் கோவில் ஒன்றில் பூசகராக இருக்கும் 27 வயதுடைய இளைஞர் ஒருவரே தனது தங்கை முறையான 16 வயதுடைய சிறுமியைப் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார். குறித்த சிறுமியை கோவில் பின்வளவில் வைத்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்.சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். |
சிங்கள ராணுவம் இன்னமும் தமிழர்களை சித்ரவதை செய்கிறது: தனுஷ்கோடி வந்த அகதிகள் தகவல்
Wednesday, April 3, 2013, 10:45
ராமேஸ்வரம்: சிங்கள ராணுவம் இன்னமும் தமிழர்களை சித்ரவதை செய்கிறது என்றும், அதில் இருந்து தப்பிக்கவே தாங்கள் தமிழகத்திற்கு தப்பித்து வந்தோம் என்றும் இலங்கையில் இருந்து பைபர் படகு மூலம் தனுஷ்கோடி வந்த 3 இளைஞர்கள் தெரிவித்தனர். இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பரிந்துரை வீதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார்(24), யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் விஜயராஜ்(26), முல்லைத் தீவு வள்ளிபுனம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் (19). இந்த 3 பேரும் சேர்ந்து பைபர் படகில் மன்னார் கடல் பகுதியில் இருந்து தனுஷ்கோடி அருகே உள்ள கம்பிப்பாறை பகுதிக்கு நேற்று அதிகாலை வந்தனர். அவர்களிடம் மத்திய, மாநில உளவுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதன் பிறகு அவர்கள் தனுஷ்கோடி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் கூறுகையில், இலங்கை ராணுவம் தமிழர்களை பிடித்து சித்ரவதை செய்து வருகிறது. அவர்களிடம் இருந்து தப்பிக்க எங்கள் பெற்றோரே படகுக்கான வாடகையை கட்டி எங்களை அனுப்பி வைத்தனர். சென்னையில் நண்பர்கள் இருப்பதால் அவர்கள் மூலம் பிழைப்பு தேடலாம் என்று இந்தியா வந்தோம் என்றனர். இந்நிலையில் பாஸ்போர்ட் சட்டப்படி அவர்கள் 3 பேரும் கைது செய்யப்படவிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.