2.7.13

ஊரும் அயலும் July - September2013


வாடிக்­கை­யாளர் சேவை நிலை­யத்தை அமைக்­கு­மாறு தென்­ம­ராட்சி மக்கள் கோரிக்கை

(தென்­ம­ராட்சி நிருபர்)
சாவ­கச்­சே­ரியில் உள்ள சிறி­லங்கா ரெலிகொம் கிளை அலு­வ­ல­கத்தில் வாடிக்­கை­யாளர் சேவை நிலையம் ஒன்­றினை அமைத்துத் தரு­மாறு தென்­ம­ராட்சிப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.
தென்­ம­ராட்சி பிர­தே­ச­மா­னது 60 கிரா­ம­ சே­வை­யாளர் பிரி­வு­களைக் கொண்ட பிர­தே­ச­மாக விளங்­கு­கின்­றது.
இங்­குள்ள மக்கள் சிறி­லங்கா ரெலிகொம் நிறு­வ­னத்தின் சேவை­களை பெறு­வ­தற்கு யாழ். நக­ரையே நாடிச் செல்ல வேண்­டிய நிலை உள்­ள­தா­கவும் இதனால் அதி­க­ள­வான நேரம் செல­வா­வ­துடன் பெருந்­தொகைப் பணமும் போக்­கு­வ­ரத்­திற்­காக வீண்­வி­ரயம் செய்­யப்­ப­டு­வ­தா­கவும் இப் பகுதி மக்கள் கவலை தெரி­விக்­கின்­றனர்.
எனவே பொது­மக்­களின் நன்­மை­க­ருதி வாடிக்­கை­யாளர் சேவை நிலையம் ஒன்­றினை சாவ­கச்­சேரி நகரப் பகு­தியில் அமை த்துத் தரு­மாறும் சிறி­லங்கா ரெலிகொம் நிறு­வ­னத்­திடம் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.(வீரகேசரி21.9.2013)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சுற்றி வளைத்து இராணுவம் தாக்குதல்: யாழ்.மீசாலையில் பதற்றம்
[ புதன்கிழமை, 18 செப்ரெம்பர் 2013, 09:43.31 AM GMT Tamilwin ]
யாழ்ப்பாணம் மீசாலை வடக்கு பகுதியில் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதோடு கூட்டமைப்பினரை சுற்றி வளைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை வேட்பாளர் கேசவன் சயந்தன் தகவல் தருகையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இராணுவத்தினர் தொடர்ச்சியாக பின் தொடர்ந்து வந்து அச்சுறுத்தி வந்தனர்.
இதனையும் மீறி ஒரு கட்டத்தில் அவர்கள் எமது வாகனங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இத்தாக்குதலில் கூட்டமைப்பினரின் வாகனங்கள் சில இராணுவச் சிப்பாய்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக பொலிஸாருக்கும் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
இரண்டாம் இணைப்பு
எழுதுமட்டுவாழ் மருதங்குளம் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் தேர்தல்  பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  வேட்பாளர் ஒருவருடைய வாகனம் இராணுவத்தினரால்  தாக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலையில் இருந்து தென்மராட்சிப் பகுதியில் பிரசாரத்தில்  ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை சீருடையினர் பின்தொடர்ந்துள்ளதுடன் அச்சுறுத்தியும் வந்துள்ளனர்.
எனினும் தற்போது எழுதுமட்டுவாழ் பகுதியில் பிரசாரதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளை மருதங்குளம் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் வைத்து சீருடையினர் ஆதரவாளர்களை மிரட்டியுள்ளனர்.
இதனயடுத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் சஜந்தன் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு நின்ற இராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அவர்களை அங்கிருந்து செல்லுமாறும் கூறியிருந்தார்.
எனினும் தாம் வழமையான ரோந்து பணியில் ஈடுபடுவதாக கூறிவிட்டு சம்பவ இடத்திலேயே நின்றுள்ளனர்.
பின்னர் கொடிகாமம் பொலிஸாரிடம் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. எனினும் அவ்விடத்திலேயே நின்ற இராணுவத்தினர் குறித்த வேட்பாளரின் வாகனத்தை தாக்கிவிட்டு அருகில் இருந்த இராணுவ முகாமுக்குள்  தப்பிச் சென்றுள்ளனர்.
இராணுவத்தினரின் துவிச்சக்கர வண்டிகள் இரண்டினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தற்போது குறித்த பிரதேசத்தில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து வேட்பாளர் சஜந்தனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, 
இன்று காலையில் இருந்து எனது ஆதரவாளர்களை இராணுவத்தினர் பின்தொடர்ந்து அச்சுறுத்தியுள்ளனர். எழுதுமட்டுவாழ் பகுதியில் எனது வானத்தின் மீது  கல்வீசி தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றனர்.
அதனை அவதானித்த ஆதரவாளர்கள் அவர்களை துரத்திச் சென்றனர். எனினும் அவர்கள் அருகில் உள்ள முகாமிற்குள் தப்பிக் கொண்டனர். 
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் தொடர்ந்தும்  நாம் செல்வதற்கு எமக்குப் பாதுகாப்பு வழங்காமல் சம்பவ இடத்திலேயே தரித்து
 நின்றமை எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

த.தே.கூ ஆதரவாளர்கள் இருவர் இனந்தெரியாதோரால் தாக்குதல்; சாவகச்சேரியில் சம்பவம் 

news
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் இன்று இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இன்று பகல் ஒரு மணியளவில் மறவன்புலவில் வடமாகாண தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை ஹைஎயஸ் வாகனத்தில் வந்த 15 மேற்பட்ட இனந்தெரியாதோரால் எதிர்பாராத விதமாக இவர்கள் இருவரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளாகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவமானது தமிழ் தேசியக் கூட்டமைப்பினை வடமாகாண சபைத் தேர்தலில் முடக்கும் நோக்குடனேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=147782303118520627#sthash.SOAN8ELF.dpuf

தேசியத் தலைவர் பிரபாகரனின் படத்துடன் கைது செய்யப்பட்ட நால்வருக்கும் பிணை
[ செவ்வாய்க்கிழமை, 17 செப்ரெம்பர் 2013, Tamilwin ]
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்துடன் கூடிய தேர்தல் சுவரொட்டிகளை வைத்திருந்ததாக கூறப்பட்டு கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் நால்வருக்கும் சாவகச்சேரி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை கொடிகாமம் பொலிஸாரால் கொடிகாமம் பகுதியில் வைத்து இராணுவத்தினரின் உதவியுடன் 40 இற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டடிருந்தனர்.
இவர்களின் நால்வர் மீது பொலிஸார் வழக்கு தாக்கல் செய்ததோடு, ஏனையவர்களை விடுதலை செய்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு சாவகச்சேரி நீதிமன்றில் நடைபெற்றபோது பதில் நீதிவான் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கினார்.
இதேவேளை இச்சம்பவமானது கூட்டமைப்பினர் மீது திட்டமிட்ட வகையில்
இராணுவத்திரனது ஏற்பாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்ட சதியென கூட்டமைப்பின் மாகாண சபை வேட்பாளர் கேசவன் சயந்தன் தெரிவித்துள்ளார்.

சாவ­கச்­சேரி துப்­பாக்கிச்சூட்­டு ­சம்­பவ­ம் சு.க. வேட்பாளர் அங்கஜனின் தந்தை கைது

Share
By Virakesari
2013-08-29 08:48:30

சாவ­கச்­சே­ரியில் இடம்­பெற்ற துப்­பாக்கிச்சூட்டுச் சம்­பவம் தொடர்­பாக சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் யாழ். மாவட்ட அமைப்­பாளர் அங்­க­ஜனின் தந்­தை­யான இரா­ம­நா­தனை பொலிஸார் நேற்று மாலை 5.15 மணி­ய­ளவில் கைது செய்­துள்­ளனர் என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கரு­ணா­ரட்ண தெரி­வித்தார்.

சாவ­கச்­சேரிப் பகு­தியில் நேற்று முன்­தினம் இரவு 7.30 மணி­ய­ளவில் அங்­கஜன் இரா­ம­நாதன் குழு­வி­னரும் அக்­கட்­சியைச் சேர்ந்த சர்­வ­ானந்­தாவின் குழு­வி­ன­ருக்கும் இடையில் இடம்­பெற்ற வாக்­கு­வா­தத்­தின்­போது துப்­பாக்கிப் பிர­யோ­கத்­தினால் சர்­வா­னந்­தாவின் வாக­னச்­சா­ர­தியும் அங்­க­ஜனின் பாது­காப்புப் பிரிவுப் பொலி­ஸ் உத்தியோ கத்தரும் கா­ய­ம­டைந்­துள்­ளனர்.

இத்­தாக்­கு­தலின் பின்­ன­ணியில் சர்­வா­னந்தா பதிவு செய்த முறைப்­பாட்­டிற்கு அமைய இரா­ம­நா­தனை பொலிஸார் நேற்று மாலை 5.15 மணி­ய­ளவில் கைது செய்­துள்­ளனர்.

இதே­வேளை இத்­தாக்­கு­தலை நடத்­தி­யவர் என சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்ற இரா­ம­நா­தனைச் கைது­செய்­யா­து­விடின் கட்சி நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்து வில­கப்­போ­வ­தாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பில் வட­மா­காண சபைத் தேர்­தலில் போட்டியிடுகின்ற ஏனைய நான்கு உறுப்பினர்களான சர்வானந்தா, அகிலதாஸ், றெமிடியஸ், பொன்னம்பலம் ஆகியோர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐ.ம.சு.மு. வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் இடையில் மோதல்; : துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

Share
Virakesari.lk
2013-08-28 09:37:08

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். மாவட்ட வேட்பாளர்களான இ.அங்கஜன் மற்றும் எஸ்.சர்வானந்தா ஆகியோரின் ஆதரவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்ததுடன் இருதரப்பு வாகனங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

மோதலில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திலேயே ஒருவர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. வேட்பாளர் அங்கஜனின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரே காயமடைந்துள்ளார்.
மோதலையடுத்து கொடிகாமத்தில் பெரும் பதற்றமும் நிலவியது. நேற்று மாலை வேளையிலேயே இந்த மோதல் இடம்பெற்றது. அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகிக்கொண்ட சர்வானந்தா ஆளும் கட்சியின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

கொடிகாமத்தில் அமைந்துள்ள வேட்பாளர் சர்வானந்தாவின் வீட்டுக்கு அருகாமையில் சென்ற வேட்பாளர் அங்கஜனின் ஆதரவாளர்கள் பிரசாரப்பணிகளில் ஈடுபட்டிருந்த போதே இருதரப்புக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு மோதலாக வெடித்துள்ளது.

இதில் இருதரப்பு வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் துப்பாக்கிச் சூடும் இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அதேவேளை அங்கு நேற்று மாலை பொலிஸாரும் இராணுவத்தினரும் நிறைந்து காணப்பட்டனர்.

சாவகச்சேரியில் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு; சு.க. ஆதரவாளர்கள் காயம் 

news
வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்கள் இருவரின் ஆதரவாளர் குழுக்களுக்கிடையே நேற்றிரவு சாவகச்சேரியில் துப்பாக்கிச் சூடு மற்றும் கல் வீச்சுத் தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன.
இதில் சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் குமார் சர்வானந்தாவின் ஆதரவாளரான கொடிகாமம் பாலாவி தெற்கைச் சேர்ந்த கனகசிங்கம் நந்தகுமார் (வயது-29) என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிச் சாவகச்சேரி வைத் திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இதேகுழுவைச் சேர்ந்த மற்றுமொரு ஆதரவாளரான கச்சாய் வடக்கைச் சேர்ந்த விஸ்வராஜன் விஸ்வரூபன் (வயது-30) என்பவர் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் வேட்பாளர் குமார் சர்வானந்தாவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,
மூன்று வாகனங்களில் வந்த வேட்பாளர் அங்கஜனின் குழுவினரே எம்மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றனர். நாம் அவர்களை நேரில் பார்த்தோம். இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் அங்கஜன் இராமநாதனுடன் தொடர்புகொள்ள முயன்றபோது அவரது கைத்தொலைபேசி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அங்கஜனின் பிரத்தியேக செயலாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது,
நாம் வழக்கம் போல் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு வரும் வழியில் சாவகச்சேரியில் எமது கட்சி அலுவலகத்தின் முன் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கினோம். அவ்வேளை குமார் சர்வானந்தா அங்கஜனை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார். பொலிஸார் அங்கஜனைத் தள்ளிவிட அவர் தப்பித்துக் கொண்டார். 
எனினும் பொலிஸ் உத்தியோகத்தர் மீது சன்னம் பாய்ந்தது. இதனால் அவர் காயமுற்றார் என்றார். இதுகுறித்து தாம் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=192482263028695160#sthash.ETLwkxAL.dpuf

குழந்தையைக் கொல்லப்போவதாக மிரட்டி 10 பவுன் தங்க நகைகள் கொள்ளை

Share
VIRAKESARI

2013-08-25 20:45:08

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வறணி வடக்குப் பகுதியில் நேற்று நள்ளிரவு வீடு ஒன்றினுள் உட்புகுந்த திருடர்கள் குழந்தையைக் கொல்லப்போவதாக மிரட்டி சுமார் ௧௦ பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
கொடிகாமம் வரணி வடக்கு பகுதியில் வீடு ஒன்றினுள் நள்ளிரவு வேளையில உட்புகுந்த கொள்ளையர்கள் அவ் வீட்டில் வசித்த குழந்தையைக் கொல்லப்போவதாக குழந்தையின் கழுத்தில் கூரிய கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். குழந்தையை விடவேண்டுமாயின் சகல நகைகளையும் தருமாறு அச்சுறுத்தியுள்ளனர்.
குழந்தையின் உயிரைக் காப்பாற்றும் நோக்குடன் இவ் வீட்டில் வசித்தவர்கள் சுமார் 10 பவுண் தங்க நகைகளை கொள்ளையர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிப் பிரதேச தலைமைச் செயலகம் திறப்பு!

தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிப் பிரதேச தலைமைச் செயலகம், சாவகச்சேரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளரும் சாவகச்சேரி றிபேக் கல்லூரி அதிபருமான க.அருந்தவபாலன் தலைமையில் இடம் பெற்றது. இச் செயலகமானது பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராசாவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சி.சிறீதரன், அ.விநாயகமூர்த்தி, வட மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடும் யாழ்.மாவட்ட வேட்பாளர்கள் சயந்தன், திருமதி அனந்தி சசிதரன், இம்மானுவேல் ஆர்னோல்ட், தம்பிராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளரும் சாவகச்சேரி றிபேக் கல்லூரி அதிபருமான க.அருந்தவபாலன் தலைமையில் இடம் பெற்றது.


சாவச்சேரியில் தனித்து வாழ்ந்த பெண் வீட்டில் சடலமாக மீட்பு! 

22-8-2013

 தனித்து வாழ்ந்த பெண் மர்மமான முறையில் வீட்டு விறாந்தையில் சடலமாகக் காணப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை சாவச்சேரி கல்வயல் சண்முகானந்தா வித்தியாலயத்துக்கு அருகில் இடம்பெற்றது.
திருமணமாகாத இந்தப் பெண் தனிமையில் வாழ்ந்து வந்ததாகவும் நேற்றுக் காலை வீதியில் சென்றவர்கள் வீட்டு விறாந்தையில் நிர்வாணமாக சடலமாக கிடந்ததைக் கண்டு கிராம அலுவலர் ஊடாக பொலிஸாருக்கு அறிவித்தனர். வீட்டுப் பொருள்கள் விறாந்தையில் சிதறிக் காணப்பட்டுள்ளன. திருட வந்தவர்கள் இவரைக் கொலை செய்து விட்டு நகைகளை அபகரித்துச் சென்றிருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது. இவரது சடலம் பொலிஸாரால் சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இதே இடத்தைச் சேர்ந்த சிதம்பரப்பிள்ளை நந்தாயினி (வயது-62) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். இந்தப் பெண் சாவகச்சேரி நகர்ப்பகுதியில் சாரத்திய பயிற்சிப் பாடசாலையில் பணிபுரிபவர் எனத் தெரிவிக்கப்படுகிறது - 22.8.13
See more at: http://onlineuthayan.com/News_More.php?id=130602250822453693#sthash.9BFi0b7O.dpuf

வடக்கு மக்களின் மீது ஜனாதிபதி அதிக அக்கறை; சாவகச்சேரி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
 வடக்கு மாகாண மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச­ கூடிய கவனம் செலுத்தி வருகின்றார். இவ்வாறு அமைச்சர் சுசில் பிரமஜயந்த சாவகச்சேரியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் தெரிவித்தார். குன்றும் குழியுமாகக் காணப்பட்ட ஏ-9 வீதி இன்று காப்பெற் வீதியாக மாற்றப்பட்டுள்ளது. இன்றைய இளம் சமுதாயத்தினர் காணாத ரயில் சேவை எதிர்வரும் செம்ரெம்பர் முதலாம் திகதி கிளிநொச்சிக்கு வரவுள்ளது. அடுத்த தமிழ் - சிங்கள புதுவருடத்துக்கு முன்னர் அது யாழ்ப்பாணம் வரை வரவுள்ளது. அதன்பின்னர் கொழும்பு, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெகிவளை போன்ற இடங்களில் வாழும் உங்கள் உறவுகளை புகையிரதத்தில் சென்று பார்வையிட முடியும். மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்: போர் முடிவடைந்த பின்னர் வடக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டன. தேர்தலில் எந்தவித அச்சுறுத்தலுமின்றி சுதந்திரமாக வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மக்களும் சுதந்திரமாக வாக்களித்தனர். அவ்வாறே மாகாண சபைத் தேர்தலிலும் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கலாம். உங்கள் பிரதேசத்தின் அபிவிருத்தியிலும் மக்களின் நலனிலும் அக்கறையுள்ள வேட்பாளர்களை மாகாண சபைக்குத் தெரிவு செய்து உங்கள் பிரதேசங்களை அபிவிருத்தி பெறச் செய்வது தமிழ் மக்களின் பொறுப்பாகும் என்றார். இன்றைய இளம் சமுதாயத்தினர் காணாத ரயில் சேவை எதிர்வரும் செம்ரெம்பர் முதலாம் திகதி கிளிநொச்சிக்கு வரவுள்ளது. -
 http://onlineuthayan.com/19.8.13

நாவற்குழி விகாரையில் வெடிக்காத கைக்குண்டு;நேற்று மீட்டனர் பொலிஸார் 
news
நாவற்குழியில் நேற்று முன்தினம் இரவு கைக்குண்டு வெடித்த இடத்திலிருந்து நேற்றுக் காலை வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்றைத் தாம் மீட்டுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரி பதில் நீதிவான் கணபதிப்பிள்ளை முன்னிலையில்  மீட்கப்பட்ட கைக்குண்டு சமர்ப்பிக்கப்பட்டது. அதனைச் செயலிழக்க வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

நாவற்குழியில் 300 வீட்டுத் திட்டத்தில் உள்ள விகாரை மீதே நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் கைக்குண்டு ஒன்று வெடித்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். அதன் போது விகாரை முன்பாகவுள்ள மண்டபத்தில் சில இடங்களில் சிறிது வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அந்த இடத்துக்குச் சென்ற பொலிஸார் நிலைமையைப் பார்வையிட்டுச் சென்றனர்.பின்னர் நேற்றுக் காலையும் அங்கு பொலிஸார் சென்றபோதே வெடிக்காத நிலையில் இருந்த கைக்குண்டை மீட்டுள்ளனர். எனினும் இதுதொடர்பில் எவரையும் தாம் இதுவரை கைது செய்யவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை  சம்பவ நடைபெற்ற பகுதி இராணுவத்தினர்ன் தீவிர கண்காணிப்பில்  உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 12.8.2013 Uthayan
Photo
யாழ்.நாவற்குழி சிங்கள கிராமப் பகுதியிலுள்ள புத்த விகாரை மீது கைக்குண்டு வீச்சு
[ சனிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2013, 06:36.23 PM Tamilwin ]
யாழ்.நாவற்குழி சிங்கள வீட்டுத்திட்டம் அமைந்துள்ள பகுதியில் சிங்கள மக்களால் அமைக்கப்பட் ட பௌத்த வணக்கத்தலம் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது.
சனிக்கிழமை இன்று இரவு 8மணியளவில் மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் 2010ம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு வந்த சிங்கள மக்கள் தங்கியிருக்கும் நிலையில் அவர்களின் வழிபாட்டுக்கென பிரஜாசால வணக்க இடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரவு 8மணியளவில் அப்பகுதியில் வெள்ளி நிறத்தினாலன வாகனம் ஒன்று நடமாடியதாகவும், அதன் பின்னரான சில நிமிடங்களில் பிரஜாசால கூரை மீது பெரிய சத்தம் கேட்டதாகவும் கூறியுள்ள மக்கள் அந்தச் சத்தம் கேட்டதன் பின்னரான சில நிமிடங்களில் பாரிய சத்தத்துடன் வெடிப்புச் சம்பவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் நிலம் மற்றும் பிரஜாசால கட்டிடத்தின் சுவர்களில் சன்னங்களின் காயம் பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் சிங்கள மக்கள் மற்றும் பெருமளவு விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இராணுவத்தினர் என குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை சம்பவத்தின்போது பிரஜாசால உள்ளே சிங்கள மக்கள் சிலர் இருந்தபோதும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.



நாவற்குழியில் விகாரை மீது கைக்குண்டு தாக்குதல் 

news
யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் விஹாரையின் மீது  கைக்குண்டுவீச்சியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே இன்றிரவு குறித்த விகாரையின் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

எனினும் இது குறித்து மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-

வாக்குகளை சிதறடிப்பதற்கே சுயேச்சை குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன; 
அவற்றை மக்கள் நிராகரிக்க வேண்டும் 
ஆனந்தன் எம்.பி. கோரிக்கை

 வட­மா­காண தேர்­தலில் தமிழ் மக்­களின் வாக்­கு­களைப் பிள­வு­ப­டுத்தி வாக்­கு­களைச் சித­ற­டிக்கும் நோக்­கத்­து­ட­னேயே சுயேச்சை குழுக்கள் தேர்­தலில் கள­மி­றக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. தமிழ் மக்கள் தமது அர­சியல் பலத்­தையும், எதிர்­கால அர­சியல் நன்­மை­க­ளையும் கருத்­திற்­கொண்டு, சுயேச்சை குழுக்­களைத் தேர்­தலில் நிரா­க­ரிக்க வேண்டும் என்று வன்னி மாவட்ட பாராளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் தெரி­வித்­துள்ளார். அது குறித்து அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது: வட­மா­காண சபைக்­கான தேர்­தலில் இம்முறை பெரு­ம­ளவு சுயேச்­சைக்­கு­ழுக்கள் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ளன. இவை தமிழ் மக்­களின் வாக்­கு­களை பிள­வு­ப­டுத்தும் நோக்­கத்­துடன் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்­றன. ஆகவே இந்த சுயேட்சைக் குழுக்­களை தமிழ் மக்கள் முற்­றாக நிரா­க­ரிக்க வேண்டும். வட­மா­காண சபைத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பாரிய வெற்­றியைப் பெற்­றுக்­கொள்ளும் என்­பது அனை­வ­ருக்கும் தெரிந்­த­துதான். ஆனால், கூட்­ட­மைப்­புக்குக் கிடைக்­கக்­கூ­டிய வாக்­கு­களைச் சித­ற­டிக்கும் நோக்­கத்­து­ட­னேயே சுயேச்­சைக்­கு­ழுக்கள் பல கள­மி­றக்­கப்­பட்­டுள்­ளன. நடை­பெ­றப்­போகும் வட­மா­காண சபைத் தேர்தல் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். இதில் நாம் வெற்றி பெற வேண்­டி­யது அவ­சியம். எமக்குக் கிடைக்­கக்­கூ­டிய இந்த வெற்­றியை குறைக்கும் வகை­யி­லேயே சுயேச்சை குழுக்கள் போட்­டிக்கு நிறுத்­தப்­பட்­டுள்­ளன. இந்தக் குழுக்­களில் இருந்­த­வர்கள் இதுவ­ரையில் எங்கே இருந்­தார்கள், தமி­ழர்­க­ளுக்­காக என்ன செய்­தார்கள் என்­பது யாருக்கும் தெரி­யாது. இந்தக் குழுக்­களின் பின்­ன­ணியில் அர­சாங்கம் சம்­பந்­தப்­பட்­டி­ருக்க வேண்டும் என நாம் சந்­தே­கிக்­கின்றோம். தமிழ் மக்­களின் போராட்­டத்­துக்கு எதி­ராகக் குரல் கொடுத்­த­வர்­களும், அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட்­ட­வர்­களும் அன்று சுயேச்சைக் குழுக்­க­ளாக தமிழ் மக்­க­ளிடம் வாக்கு கேட்­ப­தற்கு முன்­வந்­துள்­ளார்கள். அவர்­களை தமிழ் மக்கள் முற்­றாக நிரா­க­ரித்து கூட்­ட­மைப்பு பெரிய அளவில் வெற்றி பெறு­வ­தற்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்க வேண்டும். அதன் மூல­மா­கவே பல­மான மாகாண சபை ஒன்றை நாம் அமைத்­துக்­கொள்ள முடியும். வட­ப­கு­தியில் மீள்­கு­டி­யேற்றம் என்ற பெயரில் கொண்­டு­வந்து இறக்­கப்­பட்ட மக்கள் இன்றும் தமது வாழ்­வா­தா­ரத்­துக்கு வழி­யற்­ற­வர்­க­ளா­கத்தான் உள்­ளார்கள். முன்னாள் போரா­ளிகள் - குறிப்­பாக பெண் போரா­ளி­களின் நலன்கள் பாது­காக்­கப்­பட வேண்டும். போரில் ஊன­முற்­ற­வர்­க­ளுக்­கான வாழ்­வா­தா­ரங்கள் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும். இவை அனைத்­துக்கும் பல­மான ஒரு மாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இந்தத் தேர்­தலின் ஊடாக அமைக்க வேண்டும். இதனை மனதில் இருத்தி எமது மக்கள் வாக்­க­ளிக்க வேண்டும். சுயேச்சைக் குழுக்கள் பல போட்­டி­யிடும் போது அவற்­றுக்குச் செல்லக்கூடிய சிறியளவிலான வாக்குகளும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. அதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்யும் வகையில், சுயேச்சை குழுக்களை தமிழர்கள் முற்றாக நிராகரிப்பது அவசியம். இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.


பணம் மட்டுமே வேண்டும்! கொலை செய்ய மாட்டோம்: திருடச் சென்ற வீட்டில் கெஞ்சிய திருடர்கள்: சாவகச்சேரியில் சம்பவம்
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, Tamilwin ]
எமக்கு தங்க நகை மற்றும் பணம் மட்டுமே வேண்டும். கொலை செய்யும் நோக்கம் இல்லை. ஒத்துழைப்புத் தாருங்கள். பொலிஸாருக்குச் சொல்ல வேண்டாமென திருடர்கள் கொள்ளையிடச் சென்ற வீட்டுக்காரரிடம் கெஞ்சிய சம்பவமொன்று சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.
நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் சாவகச்சேரி கற்குளி வீதியில் உள்ள வீடொன்றில் உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டுக்காரரின் கழுத்தில் கத்தியை வைத்து, மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளனர்.
வேலியை வெட்டிக்கொண்டு வளவுக்குள் புகுந்த கொள்ளையர் வீட்டுக்காரரை எழுப்பி கத்திமுனையில் ஓரிடத்தில் இருக்க வைத்து வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடியுள்ளனர்.
பின்னர் அங்கிருந்த 10 ஆயிரம் ரூபா பணத்தையும் கையில் அணிந்திருந்த மோதிரத்தையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.
கொள்ளையிட வந்தவர்களில் ஐந்து பேர் சிங்களத்தில் பேசியுள்ளார். அதனை ஒருவர் தமிழில் மொழி பெயர்த்துக் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
கொள்ளையர்களின் அச்சுறுத்தலுக்குப் பயந்து வீட்டார் அனைவரும் வீட்டில் முடங்கியிருந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.



' ' '
'