1.10.13

செய்திகளில் ஊரும் அயலும் Oct-Dec 2013

கைதடியில் விபத்து : ஒருவர் படுகாயம் 
30.12.2013
 கைதடி பாலத்திற்கு அருகில் இன்று காலை 7. 35 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். கைதடியிலிருந்து சாவகச்சேரியை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளில் பயணித்த கைதடி கிழக்கு கைதடியை சேர்ந்த தீ. தனுறாஜ் வயது 23 என்பவரே படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த டிப்பர் வாகனம் மற்ற வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்ட போதே விபத்து நிகழ்ந்தது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=622082542930538503#sthash.T5kt6gne.dpuf


பெண் ஒருவரை ஐவர் இணைந்து பாலியல் வல்லுறவு


19 வயதுடைய பெண் ஒருவரை ஐவர் இணைந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரி பகுதியில் வைத்தே குறித்த பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடந்த 24 ஆம் திகதி முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் இருந்து குறித்த பெண் சாவகச்சேரிக்கு வந்திருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் தொடர்புடையவர்கள் குறித்து எதுவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை.

எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்துள்ளனர்.(28.12.2013)
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=124752539728721635#sthash.b6tfjLXg.dpuf



சாவகச்சேரி தனங்கிளப்பு பிரதேசத்தில் A 32 வீதிக்கு அருகிலுள்ள வயலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்றுமாலை 5 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

கோவிலாக்கண்டி மேற்கு, தச்சன்தோப்பைச் சேர்ந்த சோமசுந்தரம் குணரத்தினம் வயது 48 என்பவரே இவ்வாறு வயலிலுள்ள நீரில் தலை மூழ்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை விசாரணைகளை மேற்கொண்டார். விசாரணையை அடுத்து பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனாவைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=765982538527442173#sthash.tOvcz6Ll.dpuf
யதார்த்தங்களை கணக்கிலெடுத்து இலட்சியங்கள் அமைந்தால் பாதிப்புக்கள் குறையும்!
 சீ.வி.விக்னேஸ்வரன்
 [ திங்கட்கிழமை, 16 டிசெம்பர் 2013, 10:16.04 PM GMT Tamilwin] 
வடமாகாண கல்வியமைச்சின் அனுசரணையுடன் யாழ்.தென்மராட்சி வலயக் கல்வித் திணைக்களம் நடத்திய “மார்கழி திங்கள்” முழுநிலா கலை நாள் நிகழ்வு சாவகச்சேரியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமான மேற்படி நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்
. 
முன்னதாக சாவகச்சேரி நகரிலிருந்து தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் ஊர்திகளும், நடன நிகழ்வுகளும் ஊர்வலமாக வந்தன. இதன் பின்னர் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர். இதன் பின்னர் கலாசார மண்டபத்தில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்று மாலை 2மணிவரை நிகழ்வுகள் இடம்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன், மற்றும் அரியரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
 
மேலும் நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தமிழறிஞர் மறவன்புலோ சச்சிதானந்தத்திற்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இதேபோன்று நிகழ்வில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழ் மண்ணின் பாரம்பரியத்தை வெளிக்கொணரும், மிக உன்னதமான நிகழ்வாக மேற்படி நிகழ்வு அமைந்திருந்ததாக விருந்தினர்கள் சபையில் புகழாரம் சூட்டியுள்ளனர். 


இரவில் மாடுகள் திருட்டு இராமாவில் மக்கள் விசனம்

(தென்­ம­ராட்சி நிருபர்)
சாவ­கச்­சேரி பிர­தேச சபைக்கு உட்­பட்ட கொடி­காமம், இரா­மாவில் பகு­தி­களில் இரவு வேளை­களில் மாடுகள் திரு­டப்­ப­டு­வ­தாக பிர­தேச மக்கள் விசனம் தெரி­விக்­கின்­ற னர்.
இரவு வேளை­களில் திருட்டுப் போகும் மாடுகள் மறுநாள் இறைச்­சிக்­காக வெட்­டப்­ப­டு­வ­தா­கவும் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் மாடுகள் வெட்­டப்­பட்டு கிராமப் பகு­தியில் பங்­கு­போட்டு விற்­ப­தா­கவும் மக்கள் தெரி­விக்­கின்­றனர்.
அத்­துடன் சம்­பந்­தப்­பட்ட பகுதி சுகா­தாரப் பரி­சோ­தகர் பார்­வை­யிட்ட பின்பே கொல்­க­ளத்தில் மாடு வெட்­ட­மு­டியும் என்ற நடை­முறை உள்­ள­போ­திலும் அதனை பொருட்­ப­டுத்­தாது சிலர் இவ்­வா­றான நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­வ­தா­கவும் தெரி­விக்­கின்­றனர்.
எனவே சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் உடன் கவ­ன­மெ­டுத்து எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் தொடர்ந்து இடம்பெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்ற னர்.(11.12.13)

காணி­களை வழங்­கு­வ­தாக கூறி பண­மோ­சடி மக்­கள் அவ­தா­ன­மாக இருக்­க வேண்டும் த. தே.கூ. அறி­விப்பு


யாழ்.குடா­நாட்டில் வீட்­டுத்­திட்ட சங்கம் என்ற பெயரில் மக்­க­ளுக்கு காணி­களை வழங்­கு­வ­தாக மோசடி நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்த சிலர் நேற்று சாவ­கச்­சேரி பொலி­ஸா­ரினால் கைது­செய்­யப்­பட்­டுள்ள நிலை­யில்­ இவ்­வா­றான மோச­டி­யா­ளர்­க­ளிடம் மிக அவ­தா­ன­மாக இருக்­கு­மாறு தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பு மக்­களை கேட்­டுள்­ளது. சாவ­கச்­சே­ரி-­ - கை­தடி பகு­தியில் காணி­களை வழங்­கு­வ­தாக தனி­யா­ருக்குச் சொந்­த­மான காணி­க­ளுக்­கான போலி ஆவ­ணங்­களை பெற்­றி­ருக்கும் ஒரு கும்பல் மக்­க­ளிடம் 16ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் ரூபா வரை­யி­லான பணத்தை பெற்­றி­ருக்­கின்­றது. அதனை உன்­மை­யென நம்­பிய யாழ்ப்­பாணம் மற்றும் கிளி­நொச்சி மாவட்ட மக்கள் சிலர், மோச­டி­யா­ளர்கள் கேட்ட பணத்தை செலுத்­தி­யுள்­ளனர். இந்­நி­லையில் மேற்­படி குழு­வினர் கைதடி யில் நேற்று காணி­களை வழங்­கு­வ­தாக கூறி மக்­க­ளிடம் பதி­வு­களை மேற்­கொண்­டி­ருந்த நிலையில் தக­வ­ல­றிந்த தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் குறித்த பகு­திக்கு சென்­றுள்ளார். சம்­பவம் குறித்து அவர் கருத்து தெரி­விக்­கையில், வீட்­டுத்­திட்ட சங்கம் என்ற பெயரில் காணி இல்­லாத மக்­க­ளுக்கு காணி­களை வழங்கப் போவ­தாக கூறி ஒவ்­வொ­ரு­வ­ரி­ட­மி­ருந்தும் 16ஆயிரம் தொடக்கம் 20ஆயிரம் ரூபா பணத்தை பெற்­றி­ருக்­கின்­றார்கள். நாம் அங்கே சென்­ற­போது அவர்கள் 92 பேரின் பெயர்­களை பதிவு செய்­தி­ருந்­தார்கள். பதிவு நட­வ­டிக்­கையில் ஒருவர் மட்டும் ஈடு­பட்­டி­ருந்தார். நாம் அவ­ரிடம் கேட்டோம் காணி­களை மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்கு உங்­க­ளுக்கு யார் அனு­மதி கொடுத்­தது? மக்­க­ளுக்கு வழங்கும் காணிகள் யாரு­டை­யவை? என ஆனால் இந்தக் கேள்­வி­க­ளுக்கு அவ­ரிடம் சரி­யான பதில் இல்லை. ஆனால் அங்கு பதிவு நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்­தவர், இரு­வ­ருக்கு தொலை­பேசி அழைப்பை எடுத்தார். ஒருவர் கொழும்பில் இருப்­ப­தா­கவும் மற்­றவர் யாழ்ப்­பா­ணத்தில் இருப்­ப­தா­கவும் கூறினார். ஆனால் அவரால் தன்னை சரி­யாக அடை­யா­ளப்­ப­டுத்த முடி­யாத நிலையில் அங்கே பொலிஸார் வர­வ­ழைக்­கப்­பட்டு அவர் கைது­செய்­யப்­பட்டு கொண்டு செல்­லப்­பட்­டார். இதற்கு முன்­ன­தாக நாம் இந்த விடயம் தொடர்பில் யாழ்.மாவட்ட அர­சாங்க அதி­ப­ருடன் தொடர்பு கொண்டு கேட்­ட­போது தமக்கு அவ்­வாறு எதுவும் தெரி­யாது. தமக்கும் அவர்­க­ளுக்கும் எந்தத் தொடர்பும் கிடை­யாது என கூறினார். பின்னர் தேசிய வீட­மைப்பு அதி­கா­ர­ச­பை­யுடன் தொடர்பு கொண்­ட­போது அவர்­களும் தங்களுக்கு இதில் தொடர்­பில்லை என கூறி­விட்­டார்கள். எனவே மிக மோச­டி­யான முறையில் தமிழ் மக்­களை ஏமாற்­று­வ­தற்­காக ஒரு கும்பல் குடா­நாட்­டிற்குள் முகா­மிட்­டி­ருக்­கின்­றது. அங்கே காணி பெற வந்­தி­ருந்த பெண் ஒருவர் கூறினார். தன்­னிடம் மிச்­ச­மாக இருந்த சில நகை­களை அடகு வைத்தும், விற்­றுமே காணிக்­கான பணத்­தினை அவர்­க­ளிடம் வழங்­கி­ய­தாக. இவ்­வாறு பல மக்கள் தங்கள் இய­லா­மைக்கும் மத்­தியல் ஏமாற்­றப்­பட்­டுள்­ளார்கள். ஏமாற்­றப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஏற்­க­னவே யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு ஏதி­லி­க­ளாக வாழ்ந்து கொண்­டி­ருக்கும் மக்­களை ஏமாற்றும் இத்­த­கைய மோசடி பேர்­வ­ழி­களை நாம் அடையாளம் காணவேண்டும். மக்கள் இவர்கள் விடயத்தில் மிக விழிப்பாக இருக்கவேண்டும். மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இத்தகைய மோசடி பேர்வழிகளை கட்டுப்படுத்துவது மற்றும் சட்டத்தின் முன் நிறுத்துவது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
தென்மராட்சி நுணாவில் பகுதியில் 
தென்னிலங்கை பேருந்து மீது கல்வீச்சு
பொதுமக்கள் மீதும் தாக்குதல்
9.12.2013
 யாழ்ப்பாணத்திலிருந்து தங்காலை நோக்கி பயணித்த தனியார் பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஐவர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிகளை எற்றிக் கொண்டு தங்காலை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்து மீது இன்று மாலை 6.45 மணியளவில் தென்மராட்சி நுணாவில் பகுதியில் வைத்து இனந்தெரியாதவர்கள் கல்வீசி தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனால் பேரூந்தின் ஒரு பக்க முன் கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன் சாரதி உள்ளிட்ட ஐவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சம்பவத்தை அடுத்து குறித்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது பேருந்தில் பயணித்த தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் தடிகள், பொல்லுகளால் தாக்குதல் நடாத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனையடுத்து குறித்த பகுதியில் உள்ளவர்களுக்கும் பேரூந்தில் சென்றவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் பதட்ட நிலையும் காணப்பட்டதாக தெரியவருகின்றது. சம்பவ இடத்திற்கு உடனடியாக பொலிஸாரும் , இராணுவத்தினரும் வருகை தந்ததுடன் அவர்கள் முன்னிலையிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் நிலமை பொலிஸாரினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை காயமடைந்தவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=138322496809422282#sthash.9w3hQbN2.dpuf

November
சிங்களத்தில் சரளமாகப் பேசியவர்களே என்னைக் கொலை செய்ய வந்தனர்!- பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீரஞ்சன்
[ வியாழக்கிழமை, 28 நவம்பர் 2013, 04:07.58 PM GMT ]
சிங்களத்தில் சரளமாக பேசியவர்களே என்னையும் எனது மனைவி பிள்ளைகளையும் கொலை செய்யப் பார்த்தார்கள் என தாக்குதலுக்குள்ளான சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீஸ்கந்தராசா சிறிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் தொடர்ச்சியாகவே தன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் அவர் தெரிவித்தார்.
எந்த விதமான எச்சங்களையும் விட்டு வைக்காமல் மிகவும் நுணுக்கமாக திட்டமிட்ட வகையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
 http://www.youtube.com/watch?v=xPa02iS1KQc

சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டின் மீது நள்ளிரவு இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதுடன் வீட்டிற்கும் தீ மூட்டி விட்டுத்தப்பிச் சென்றுள்ளனர். மீசாலையைச் சேர்ந்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் எஸ். சிறிரஞ்சனின் வீட்டின் மீதே இனந்தெரியாதவர்கள் இந்த தாக்குதலை நடாத்தியுள்ளனர். சம்பவம் குறித்து எமது செய்திப்பிரிவு பிரதேச சபை உறுப்பினருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, நள்ளிரவு 12 மணிக்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு மோட்டார் சைக்கிள் எனது வீட்டுக்கு முன்னால் வந்து சிறிது நேரம் நின்றுவிட்டு திரும்பிச் சென்றது. அப்போதே எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனையடுத்து நாங்கள் நித்திரை கொள்ளவில்லை. மிகவும் பயத்துடன் விழித்திருந்தோம். அதன்பின்னர் இன்று அதிகாலை 1.50 மணியளவில் 6 மோட்டார் சைக்கிள்களில் வந்த 12 பேர் கொண்ட குழு வீட்டிற்குள் நுழைய முற்பட்ட போது நான் மனைவி பிள்ளையினையும் அழைத்துக் கொண்டு பின்பக்கமாக ஓடிவிட்டேன். சிறிது நேரத்தின் பின்னர் துவக்கு வேட்டுக்களை தீர்த்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அதன் பின்னர் வந்து பார்த்த போது வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களும் அடித்து நொருக்கப்பட்டிருந்தது. அத்துடன் பெற்றோல் ஊற்றப்பட்டு தீயும் மூட்டப்பட்டுள்ளது. அதனால் சமையலறைப்பக்கம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அயலவரின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. உடனடியாக சாவகச்சேரிப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்ததுடன் விசாரணைகளையும் மேற்கொண்டனர். மேலும் 2 பொலிஸார் தொடர்ந்தும் பாதுகாப்புக் கடமையில் உள்ளனர் என்றார். இதேவேளை, அண்மையில் நடைபெற்ற மாதாந்தக் கூட்டம் ஒன்றில் வடக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் மீள புனரமைக்க வடக்கு மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையில் பிரேரணை ஒன்றினையும் கொண்டு வந்திருந்தார். அதனையடுத்து சாவகச்சேரி , கொடிகாமம் பொலிஸ் நிலையங்களுக்கு அழைக்கப்பட்டு விசாரணைகளும் நடாத்தப்பட்டது. அத்துடன் நேற்று முன்தினமும் அவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நேற்று சாவகச்சேரி நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=797012472227644469#sthash.K3KRcbiC.dpuf
முரளிக்கு எதிராக கண்டன தீர்மானம் 


news
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனுக்கு எதிராக சாவகச்சேரி நகர சபையில் கண்டனத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் சாவகச்சேரி நகரசபையில் நடைபெற்ற மாதாந்த கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் முத்தையா முரளிதரன் வெளிநாடுகளில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்ததார்.

இதன்போது பெருந்தொகையான ஆண்களும் பெண்களும் காணாமல்போயினர் பலர் கொல்லப்பட்டனர். அவை அவருக்கு தெரிய வாய்ப்பில்லை.

இந்தநிலையில் முரளிதரன் பாதிக்கப்பட்ட இந்த மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளார். அத்துடன் எதிர்காலத்தில் முரளிதரன் வடக்கில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் போது எதிர்ப்பை வெளியிடுவதென்றும் சாவகச்சேரி நகரசபை தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை துணுக்காய் பிரதேச சபையிலும் முரளிதரனுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுநலவாய மாநாட்டிற்காக வந்திருந்த கமரூன் முரளிதரனை சந்தித்து கலந்துரையாடினார். அதன்போது வடக்கு மக்கள்  சுதந்திரமாக வாழ்வதாகவும் கமரூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது அவரை திசை திருப்பவே ஆர்ப்பாட்டங்கள் ஒரு நாளுக்கு மட்டுமே நடைபெற்றது.

என்றும் முரளிதரன் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்திருந்தார். இதனை எதிர்த்து கண்டனங்கள் தொடர்ந்தும் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=869002461422641291#sthash.wyB6nP0k.dpuf
லண்டனில் உள்ள மகனை காண்பதற்கு ஏங்கும் கைதடி முதியோர் இல்லத்தில் வாழும் தாய் 07.11.13(http://sivasinnapodi.wordpress.com/)
 யாழ்ப்பாணம், கைதடி முதியோர் இல்லத்திலுள்ள தாயொருவர் லண்டனில் பொறியியலாளராக கடமையாற்றும் தன் மகனை பார்க்க வேண்டுமென்று முதியோர் இல்ல அதிகாரிகளின் உருக்கத்துடன் கோரியுள்ளார் கைதடி முதியோர் இல்லத்தில் கடந்த பத்து வருடங்கலாக வசித்து வரும் வயோதிபத் தாயான பூவேந்திரம் தவபோசனம் என்பவரே இவ்வாறு கோரியுள்ளார். இவர் நெல்லியடி, வதிரியைச் சேர்ந்த இந்தப்பெண் திருமணமான ஒரு மாத காலத்தில் கணவனை இழந்ததாகவும் இவருக்கு ஒரே ஒரு மகன் இருப்பதாகவும் கணவனின் இழப்பு காரணமாக இவர் மனநலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் கைதடி முதியோர் இல்லத்தில் அவரது உறவினர்களால் அனுமதிக்கப்பட்டார் என்றும் கைதடி முதியோர் இல்ல அதிகாரிகள் தெரிவித்தனர் இந்தப் பெண்ணின் மகன் உறவினர்களால் வளர்க்கப்பட்டு தற்போது லண்டனில் பொறியியலாளராக கடமை புரிகின்றார் என்றும் தற்போது ; மனநலம் தேறி பழைய நினைவுகளுக்கு திரும்பியுள்ள அவரது தாய் தனது மகனின் பெயர் மற்றும் உறவினர்களின் பெயர்களை கூறி வருகின்றார் என்றும் தன்னுடைய மகனை ஒரு தடவையாவது தன்னை வந்து பார்க்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறு தங்களிடம் ஏக்கத்துடன் கோரியுள்ளதாகவும் கைதடி முதியோர் இல்ல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கைதடியில் விபத்து ; மூவர் காயம்
கைதடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த சிறுவன் ஒருவன் உள்ளிட்ட மூவர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று காலை 10.30 அளவில் இடம்பெற்றுள்ளது. குறுக்கு வீதியிலிருந்து A9 வீதிக்கு பயணித்த துவிச்சரக்கடிவண்டி ஒன்றுடன் A9 வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிவராசா கிருஷ்ணவேணி (47),சின்னவன் நந்தரூபன் (27), நந்தரூபன் கபிலன் (4) ஆகியோரே காயமடைந்துள்ளனர். விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=639422411401779175#sthash.O8A6Sa2T.dpuf

October


450 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கைதடி புதிய கட்டிடம்!




யாழ்ப்பாணம் கைதடியில் புதிதாக அமைக்கப்பட்ட வடக்கு மாகாண சபைக்கான கட்டடம் இன்று காலை 8 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபைக்கென 450 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் புதிய கட்டடம் இன்றைய தினம் வைபவ ரீதியில் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி ஆகியோர் இணைந்து நாடா வெட்டி திறந்து வைத்தனர்.
இதேவேளை வைத்திய செலவுக்காக உதவித் தொகையினைக் கோரியிருந்த 55 பேருக்கு காசோலையினையும் வழங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினாகளான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை காலை 9.30 மணிக்கு வடக்கு மாகாணசபையின் கன்னியமர்வுகள் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
துயிலும் இல்லங்களை புனரமைப்பதற்கு இது சரியான தருணமல்ல; சுரேஸ் பிறேமச்சந்திரன் 

 மாவீரர் துயிலும் இல்லங்களை மீளப் புனரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, சாவகச்சேரி பிரதேசசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஒரு பிரதேசசபையின் தனிப்பட்ட முடிவு என்றும், அதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கவில்லை என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “சாவகச்சேரி பிரதேசசபையினால் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கவில்லை. போரின் போது உயிரிழந்த விடுதலைப் புலிகளின் கல்லறைகளை மீளப் புனரமைக்க கோரும், தீர்மானத்தை சாவகச்சேரி பிரதேசசபையில் கொண்டு வர முன்னர், உறுப்பினர்கள் அதுபற்றி எமக்குத் தெரிவிக்கவும் இல்லை. அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றும்படி, அவர்களை நாம் கோரவும் இல்லை.வடக்கில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன என அவர் சுட்டிக்காட்டியதுடன், இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றும் பிரச்சினை, போரினால் உடல் உறுப்புகளை இழந்தவர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய தேவை உள்ளது. அதேவேளை, போரில் தமது அன்புக்குரியவர்களை நினைவு கூரும் உரிமை மக்களுக்கு உள்ளது. போரில் தமது பிள்ளைகளையோ, அன்புக்குரியவர்களையோ, இழந்தவர்களை நினைவு கூருவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், அது சரியான வழிமுறைகளின், ஊடாக சரியான தருணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். இது அதற்குப் பொருத்தமான நேரம் அல்ல சாவகச்சேரி பிரதேசசபையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சிறிரஞ்சன் கொண்டு வந்த தீர்மானத்தை, பிரதி தவிசாளர் யோகராசா வழிமொழிந்திருந்தார். இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, சாவகச்சேரி பிரதேசசபையில் தீர்மானத்தைக் கொண்டு வந்த உறுப்பினர் சிறிரஞ்சன் சிறிலங்கா காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்ததற்கான காரணம் என்ன, அதனை ஊக்குவித்தவர்கள் யார் என்று அவரிடம் சிறிலங்கா காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது. இதற்கிடையே, சிறிலங்கா படையினரால் அழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லத்தைப் புனரமைக்க சில குழுக்கள் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து, கடந்தவாரம் 200 சிறிலங்கா காவல்துறையினர் கரைச்சி பிரதேச துயிலும் இல்லத்தில் குவிக்கப்பட்டதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=887392384222873877#sthash.ULi63JxH.dpuf


மாவீரர் துயிலும் இல்லங்களை அமைக்க வேண்டுமா ; 
சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரிடம் விசாரணை 
 சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைக்க வடக்கு மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 14ஆம் திகதி சாவகச்சேரி பிரதேச சபையில் பிரேரணையினை முன்வைத்த ஆளும்கட்சி உறுப்பினர் எஸ்.சிறிரஞ்சன் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். எனினும் குறித்த உறுப்பினரால் கொண்டுவரப்பட்ட பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அதனையடுத்து இன்று காலை சாவகச்சேரி பொலிஸாரினால் தொலைபேசி மூலம் குறித்த உறுப்பினர் விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தார். இருப்பினும் குறித்த உறுப்பினர் தன்னால் அந்த தருணம் வருகைதர முடியாது எனவும் வேறு ஒரு வேளை வருவதாகவும் தெரிவித்திருந்தார். அதனையடுத்து பொலிஸார் மீசாலையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று விசாரணைக்கு வருமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளனர். அதன்படி இன்று மதியம் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான கே.சஜயந்தனுடன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு கடந்த 14ஆம் திகதி சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் அவர் கூறியவற்றையும் பதிவு செய்ததுடன் கையொப்பமும் பெற்றுக் கொண்டனர். இதேவேளை குறித்த உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் எமது செய்திப்பிரிவு அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் கைது செய்யப்படவில்லை என்றும் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் கையொப்பமும் வாங்கிவிட்டு திருப்பி அனுப்பினர் என்றார். மேலும் இது குறித்து பிரதேச சபை மற்றும் வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்ட பலருக்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். எதிர்வரும் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=495502375119836672#sthash.ld1KVgZA.dpuf
மாவீரர் துயிலும் இல்லங்களை மீளவும் நிர்மாணிக்க வேண்டும்
சாவகச்சேரி பிரதேச சபை தீர்மானம்
 உதயன் 16.10.2013

சிதைக்கப்பட்ட சகல மாவீரர் துயிலுமில்லங்களையும் உடனடியாக வடக்கு மாகாண அரசு மீள நிர்மாணிக்க வேண்டும் என்று சாவகச்சேரிப் பிரதேச சபையில் நேற்று முன்தினம் அதிரடியாகத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சாவகச்சேரி பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை தவிசாளர் த.துரைராசா தலைமையில் நடைபெற்றது. இதன் போது பிரதேச சபை உறுப்பினரான ஸ்ரீரஞ்சன் , "எமது விடுதலைக்காக போராடிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வித்தாக வீழ்ந்தபோது அவர்களின் நினைவாகவும் வித்துடல்களை விதைக்கவும் உருவாக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை இறுதிப் போரின் பின்னர் படையினர் அழித்து, அவற்றின் மேல் முகாம்களை அமைத்துள்ளனர். தற்போது எங்களுக்கென வட மாகாண அரசு அமைந்துள்ள நிலையில் எமது இளைஞர்களின் உயிர்த்தியாகத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் சிதைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை மீள அமைக்க வேண்டும்'' என்ற பிரேரணையை முன்வைத்தார். இதனை சபையின் உபதவிசாளர் த.யோகராசா வழிமொழிந்தார். பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=875012365416361332#sthash.eQyyFrOL.dpuf


0


aus8jiI/AAAAAAAAMIY/Kufq484i3P0/s640/4.gif" />




மீசாலை பொது­நூ­ல­கத்தில் இயங்கும் சிறுவர் பகு­தியை விரி­வாக்கத் திட்டம்

சாவ­கச்­சேரி,2.10.2013 வீரகேசரி
சாவ­கச்­சேரி நக­ர­ச­பையின் கீழ் இயங்கும் மீசாலை பொது­நூ­ல­கத்தின் சிறுவர் பகுதி தேசிய வாசிப்பு மாத நூல­க­சேவை விரி­வாக்கல் திட்­டத்தின் கீழ் தனி அல­காக இயங்­க­வுள்­ள­தாக மன்­றத்தின் தவி­சாளர் இ.தேவ­ச­காயம் பிள்ளை அறி­வித்­துள்ளார்.
இது­வரை காலமும் சிறு­வர்­க­ளுக்­கான இரவல் வழங்கும் பொது நடை­மு­றையின் கீழேயே இயங்கி வந்­த­தெ­னவும் இனி­வரும் காலங்­களில் சிறு­வர்­க­ளுக்­கான இரவல் வழ ங்கும் சேவை விரி­வு­ப­டுத்­தப்­பட்டு தனி அல­காக இயங்­கு­வ­தனால் சிறு­வர்கள் நன்­மை­ய­டைய உள்­ளனர் என நூலகர் திரு­மதி தயா­நிதி பாலச்­சந்­திரன் தெரி­வித்­துள்ளார்.
மேலும் 14 வய­திற்­குட்­பட்ட மாண­வர்கள் நூல­கத்தில் அதற்­கான விண்­ணப்பப் படி­வத்தைப் பெற்று பூர்த்­தி­செய்து அங்­கத்­த­வர்­க­ளாக இணைந்து கொள்­ளலாம் எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.