சங்கத்தானை மக்களிற்கு பொய்யான வாக்குறுதி வழங்கிய டக்ளஸ்
சாவகச்சேரி சங்கத்தானை மக்களிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை காலமும் நிறைவேற்றப்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
சங்கத்தானை பெரிய மாவடியையும் A9 வீதியையும் இணைக்கும் வீதியின் ஊடாக புகையிரதப்பாதை அமைக்கப்பட்டு இவ் வீதி போக்குவரத்துக்கு தடைசெய்யப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் 5 தடவைகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் 01.04.2014 அன்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது நகர சபையினர் அமைக்க வேண்டிய வீதி, நான் இப்பொழுது கொழும்பு செல்லுகின்றேன் அங்கு இது தொடர்பாக நான் சம்பத்தபட்ட உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து வீதியை பாவனைக்கு தருவதாக வாக்குறுதி வழங்கியிருதார்.
இருப்பினும் குறித்த வீதியினை புனரமைப்பதற்கான முன்னேற்பாடுகள் இதுவரை காலமும் செய்யப்படவில்லை எனவும் சங்கத்தானை மீனாட்சியம்மன் கோவில் வீதி மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன் உள்ள வீதி ஆகியவை புனரமைப்பு பணிகள் ஆரம்பித்திருப்பதால் இவ்விரண்டு வீதிக்கும் இடைப்பட்ட குறித்த வீதி புனரமைக்கப்படவில்லை என்பதால் டக்ளஸ் எமக்கு பொய்யான வாக்குறுதி வழங்கி ஏமாத்த நினைக்குறார் என அப்பகுதி மக்கள் ஒன்லைன் உதயனுக்கு தெரிவித்துள்ளனர். இதேவேளை இவ் வீதி சாவகச்சேரி நகர சபை எல்லைக்குட்பட்ட வீதி என்பதால் நகர சபையினர் புகையிரத திணைக்களத்துடன் கலந்தாலோசித்து இவ் வீதியினை பாவனைக்கு தருவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=405883176530595935#sthash.7Z8s8V5b.dpuf

சிறுவர் உரிமைகள் ; சாவகச்சேரியில் விழிப்புணர்வு ஊர்வலம்
சிறுவர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் சாவகச்சேரியில் இன்று இடம்பெற்றது. தென்மராட்சி கல்வி வலயத்தின் முறைசாராக் கல்வி பிரிவும் வேள்ட்விஷனும் இணைந்து இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தன. இன்று காலை 8.30 மணிக்கு சாவகச்சேரி இந்துக் கல்லூரி முன்பாக ஆரம்பமான பேரணி, ஏ - 9 வீதியூடாக றிபேக் கல்லூரியை சென்றடைந்தது. இந்த விழிப்புணர்வுப் பேரணியில் தென்மராட்சி வலய பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலர் பங்குபற்றினர்.
25-6-14
இளைஞன் தூக்கில்
யாழில்.இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
யாழ்.வரணி வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்தநிலையில் இன்று குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குமாரசாமி கிருபாகரன் (30 வயது) என்ற இளைஞனே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குறித்த இளைஞன் உரும்பிராயைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரை காதலித்ததையடுத்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது
. ஓகஸ்ட் 17 ஆம் திகதி திருமணத்திற்கு திகதியும் குறிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் குறித்த இளைஞனின் கைத் தொலைபேசிக்கு இனந்தெரியாதவர்கள் தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பயமுறுத்தி வந்துள்ளனர். இந்த விடயம் இரு வீட்டாருக்கும் தெரிந்தபோதிலும் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நேற்றும் தொலைபேசியில் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தன் தாயாரிடம் தெரிவித்தபோது அதற்கு பயப்படவேண்டாமென தாய் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று ஆலயத்திற்கு சென்ற பின்னர் மகன் தூக்கில் தொங்கிக் கிடக்கிறார் எனக் கிடைத்த தகவலையடுத்தே அந்த இளைஞனின் தாயார் அங்கு சென்றுள்ளார். இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 20.6.14
வெற்றி வாகை சூடியது சிவன்
கைதடி மேற்கு சனசமூக நிலையத்தின் 66வது ஆண்டு நிறைவை முன்னிட்டு குமரன் விளையாட்டுக் கழகம்
கைதடியில் இருவர் மீது துரத்தி துரத்தி வாள்வெட்டு
(ந.லோகதயாளன்)
யாழ்.கைதடிப் பகுதியில் நின்றவர்கள் மீது இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் இருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணியவில் கைதடிச் சந்திக்கு அருகாமையிலுள்ள குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கைதடி நவபுரத்தைச் சேர்ந்த கோகுலநாதன் கோமதன் (வயது 34) மல்லாகம் கோட்டைக் காட்டைச் சேர்ந்த சுந்தரலிங்கம் சுகிர்தராஜன் (வயது 34) ஆகிய இருவருமே வாள்வெட்டில் படுகாயமடைந்தவர்களாவர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, உறவினர்களான குறித்த இருவரும் கைதடிச் சந்திக்கு அருகில் நின்று உரையாடிக்கொண்டிருந்தபோது மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இவர்கள் இருவர் மீது சரமாரியாக வாள்களால் வெட்டியுள்ளனர். வெட்டுக்காயங்களுடன் குறித்த இருவரும் குடிமனைகளுக்குள் சத்தமிட்டவாறு ஓடியதையடுத்து தாக்குதல் மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்துப் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். தனிப்பட்ட பகை காரணமாகவே இவ்வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் சாவகச்சேரி பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடாத்தும் தென்மராட்சி பிரதேச கழகங்களுக்கிடையிலான 9பேர் பங்குபற்றும் 12பந்து பரிமாற்றங்களைக் கொண்ட
மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிச்சுற்றுப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை 2.30 மணியளவில் கைதடி
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வளர்மதி விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடியது.
11.3பந்துப்பரிமாற்றங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 92ஓட்டங்களை பெற்றது.
93ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய சிவன் விளையாட்டுக்கழக அணி
11.4பந்துப்பரிமாற்றங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 94ஓட்டங்களை பெற்று மேலதிக2ஓட்டங்களால்
மேலும் இந்தப் போட்டியில் ஆட்டநாயகனாக சிவன் விளையாட்டுக்கழக செந்தூரனும் தொடர் ஆட்டநாயகன்; மற்றும்
சிறந்த துடுப்பாட்ட வீரனாக மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழக அஜந்தனும் தெரிவு செய்யப்பட்டனா்.17.6.14
கைதடியில் இருவர் மீது துரத்தி துரத்தி வாள்வெட்டு
(ந.லோகதயாளன்)
யாழ்.கைதடிப் பகுதியில் நின்றவர்கள் மீது இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் இருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணியவில் கைதடிச் சந்திக்கு அருகாமையிலுள்ள குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கைதடி நவபுரத்தைச் சேர்ந்த கோகுலநாதன் கோமதன் (வயது 34) மல்லாகம் கோட்டைக் காட்டைச் சேர்ந்த சுந்தரலிங்கம் சுகிர்தராஜன் (வயது 34) ஆகிய இருவருமே வாள்வெட்டில் படுகாயமடைந்தவர்களாவர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, உறவினர்களான குறித்த இருவரும் கைதடிச் சந்திக்கு அருகில் நின்று உரையாடிக்கொண்டிருந்தபோது மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இவர்கள் இருவர் மீது சரமாரியாக வாள்களால் வெட்டியுள்ளனர். வெட்டுக்காயங்களுடன் குறித்த இருவரும் குடிமனைகளுக்குள் சத்தமிட்டவாறு ஓடியதையடுத்து தாக்குதல் மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்துப் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். தனிப்பட்ட பகை காரணமாகவே இவ்வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் சாவகச்சேரி பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதடியில் வாள்வெட்டு ; இருவர் படுகாயம்
கைதடிச் சந்தியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இரவு 8 மணியளவில் கதைத்துக் கொண்டிருந்த மூவரை திடீரென மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்திறங்கிய குழு ஒன்று கலைத்துக் கலைத்து வெட்டியுள்ளது. மூவரில் ஒருவர் ஓடித் தப்பியுள்ளார். மற்றைய இருவர் பலத்த வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகினர்.
வாள்வெட்டுக்கு இலக்காகியவர்கள் கோகுலநாதன் கோமளன் (வயது 34), சுந்தரலிங்கம் சுகிர்தராஜன் (வயது 34) என அடையாளங்காணப்பட்டுள்ளனர். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர்கள் அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
-
கைதடி -– மானிப்பாய் வீதியில் வேகத்தடுப்பு அணை அமைக்கவும்
சனசமூக நிலையம் கோரிக்கை
மரக்கிளை முறிந்து விழுந்து ஆட்டோ சாரதி படுகாயம்
கைதடிச் சந்தியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இரவு 8 மணியளவில் கதைத்துக் கொண்டிருந்த மூவரை திடீரென மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்திறங்கிய குழு ஒன்று கலைத்துக் கலைத்து வெட்டியுள்ளது. மூவரில் ஒருவர் ஓடித் தப்பியுள்ளார். மற்றைய இருவர் பலத்த வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகினர்.
வாள்வெட்டுக்கு இலக்காகியவர்கள் கோகுலநாதன் கோமளன் (வயது 34), சுந்தரலிங்கம் சுகிர்தராஜன் (வயது 34) என அடையாளங்காணப்பட்டுள்ளனர். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர்கள் அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
-
சனசமூக நிலையம் கோரிக்கை
கைதடி,V.21.5.2014
கைதடி –- மானிப்பாய் வீதியில் கைதடி சர ஸ்வதி சனசமூக
நிலையம் அருகாமையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் வேகத் தடுப்பு அணை
போடப்பட வேண்டும் என கைதடி மேற்கு சரஸ்வதி சனசமூக நிலையம் கோரிக்கை
விடுத்துள்ளது.
இந்நிலையத்தின் தலைவர் ப.செல்லத்துரை இக் கோரிக்கையை
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் யாழ். மாவட்ட பொறியியலாளருக்கு
முன்வைத்துள்ளதுடன் அதன் பிரதியை யாழ். மாவட்ட அரசாங்க
அதிபருக்கும் அனுப்பிவைத்துள்ளார்.
இப் பகுதியில் கடந்த மூன்று 3 மாதங்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.
மேலும் கைதடி மேற்கு சரஸ்வதி சனசமூக நிலையம்
அருகாமையில் வீதி திடீரென திருப்பத்தைக் கொண்டிருப்பதால் வேகத்
தடுப்பு அணை போடப்படுவதுடன் விபத்து ஆபத்து குறித்த அறிவிப்பும்
செய்ய ப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள் ளார்.
கைதடி –- -மானிப்பாய் வீதி காபெற் இடப் பட்ட பின்னர்
இப்பிரதேசத்தில் அடிக்கடி விபத்துக்கள் நேரிடுவதால் இப்பிரதேச மக்
கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
கைதடி கலைவாணி வித்தியாலய ஆரம்ப பாடசாலையும் இப்
பகுதியில் இருப்பதால் தமது பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்தும் பெற்றோர்
மிகுந்த கவலை அடைந்துள்ள னர்.
சாவகச்சேரி,V .21.5.2014
சாவகச்சேரி டச்சு வீதியில் பயணித்துக்கொண்டிருந்த
ஆட்டோ மீது வேப்பமரக் கிளை திடீரென முறிந்து விழுந்தது. இச்
சம்பவத்தில் ஆட்டோ சாரதி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டுவில் வடக்கு சாவகச்சேரியைச் சேர்ந்த சிவகுரு யோகேஸ்வரன் (வயது42) என்ற சாரதியே படுகாயமடைந்தவராவர்.
ஆட்டோவில் பயணித்த பயணி எவ்வித காயமுமின்றி
தெய்வாதீனமாக உயிர் தப்பினார். மரக்கொப்பு முறிந்து விழுந்து
மின்சார கம்பிகள் அறுந்தபோதிலும் விபரீதம் எதுவும் ஏற்படவில்லை.
வளர்மதிகளின் பெரும்போர்
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=231683000414177100#sthash.swkQB2dZ.dpuf
தமிழகத்துக்கு அகதியாக சென்றவர் பலரின் பணத்தை ஏப்பமிட்டவராம்; இன்ரபோல் உதவியை நாடுகின்றது சாவகச்சேரி நீதிமன்றம்
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=267222995713270317#sthash.62BCy0fR.dpuf
அன்னையர் தினம்,அப்படி என்றால் என்ன? கண்ணீருடன் கேட்கும் கைதடி இல்ல முதியோர்
மனிதப் படைப்பிலே மகத்தான 'தாயை' நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2 வது ஞாயிற்றுக்கிழமை 'அன்னையர் தினம்' கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஒவ்வொரு அன்னையரையும் நினைவு கூருவது அனைத்துப் பிள்ளைகளுடைய கடமையுமாகும். இந்நிலையில் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படவதே பல அன்னையர்களுக்கு தெரியாமல் உள்ளது என்பதை கைதடி முதியோர் இல்லத்தில் உள்ள அன்னையர்கள் மூலம் அறியமுடிகிறது. அன்னையர் தினத்தை முன்னிட்டு கைதடி முதியோர் இல்லத்தில் உள்ள அன்னைகளுடனான நேரடி சந்திப்பின் போது அவர்கள் அளித்த கண்ணீருடனான பதில்கள்
01) மே - 11 உலகளாவிய ரீதியில் அன்னையர் தினம் கொண்டாடப்படுவது தொடர்பாக உங்களுக்கு தெரியுமா? எப்ப? எங்க? இங்கையா? இப்படி ஒரு தினம் கொண்டாடப் படுகிறதா என்ற கேள்விகளையே அங்கு உள்ள பெரும்பாலான தாய்மார்களின் பதில்களாக அமைந்தது. இந்த அன்னையர் தினத்தில் ஏதாவது விஷேடமாக இடம்பெறுமா? எங்களுக்கு ஏதும் செய்வார்களா என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் நிறையவே இருந்தமையை அவர்களின் முகபாவம் எனக்கு நன்றாக உணர்த்தியது. (இருப்பினம் பெரும்பாலான தாய்மார்களுக்கு மே 11 ம் திகதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது என்ற விடயம் பல அன்னைகளுக்கு தெரியாமல் இருப்பது பெரும் கவலைக்குரிய விடயமே.)
02) நீங்கள் அன்னை என்ற ரீதியில் உங்கள் பிள்ளைகளுக்கு கூற விரும்புவது என்ன? பிள்ளைகளை கருவில் சுமந்த காலம் தொட்டு பிள்ளைகளுக்காகவே வாழ்ந்த தாய்மார்களை கடைசிக் காலம் வரை பார்க்க வேண்டியது ஒவ்வொரு பிள்ளைகளதும் கடைமை இதில் ஆண் பிள்ளைதான் தாயைப் பார்க்க வேண்டும் என்றது இல்லை பெண் பிள்ளையும் கூட மனசு வைத்தால் பார்க்கலாம்.பிள்ளைகள் முதலில் தாய்மார்கள் அவர்களுக்காக அனுபவித்த துன்பங்களை ஒரு கணமேதும் நினைத்துப் பார்க்க வேண்டும் அதைவிட்டு விட்டு சுமையாக நினைக்கக் கூடாது. பிள்ளைகள் தமது சுய புத்தியில் சிந்தித்து செயற்படவேண்டும் வந்த மருமக்கள் வெறுப்பதைப் போன்று பிள்ளைகளும் தாய்மாரை வெறுத்துவிடக் கூடாது. ஒவ்வொரு தாயும் பிள்ளைகளது எதிர்காலத்துக்கும் அவர்களுடைய சந்தோசத்துக்கும் பக்க பலனாவே இருப்பார்கள் என்பதை அனைவரும் உணரவேண்டும். நாங்கள் அனாதையோ என்ற உணர்வை எங்களுக்குள் ஏற்படுத்துகிறது. ஆனால் நாளை உங்களுடைய பிள்ளைகளால் உங்களுக்கும் இவ்வாறு ஒரு நிலை அமையும் போது ஒவ்வொரு தாயினுடைய வேதனையும் உங்களுக்கு உணர்த்தி நிற்கும். எவ்வாறு இருந்தாலும் பிள்ளைகளை நாம் குறை சொல்ல மாட்டோம் சந்தர்ப்ப சூழ்நிலைதான் அவர்களை இவ்வாறான முடிவெடுத்து எங்களை இந்த இல்லத்தில் விடுவதற்கு காரணம்
03) உங்கள் பிள்ளைகள் உங்களை சரிவர பராமரிக்கவில்லை என நீங்கள் கவலையடைகின்றீர்களா? பிள்ளைகளுடைய கடமை பெற்றோர்களைப் பார்ப்பதுதான் ஒவ்வொரு பிள்ளைகளும் உணர்ந்தாலே போதும். பிள்ளைகள் கடைசி வரை எங்களைப் பார்க்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசையும் அனைத்து தாய்மார்களுடைய விருப்பமும் கூட ஆனால் பிள்ளைகள் எங்களை பார்க்காமல் இந்த முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டனர் என்ற வருத்தம் இருந்தாலும் பிள்ளைகளுக்கு ஒரு சுமையான இருக்காது இங்கு வந்தது மனதுக்கு ஆருதலாக உள்ளது. நாங்கள் இங்கு சந்தோசமாகதான் இருக்கின்றோம் பிள்ளைகள் கூட இந்தளவுக்கு எங்களைப் பார்க்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு வசதிகள் நிறையவே இருகின்றது. ஆரம்பத்தில் இந்த முதியோர் இல்லத்துக்கு வரும் போது பிள்ளைகள் எங்களை உதாசினப்படுத்தி விட்டார்கள் கடைசி நேரத்தில் பராமரிக்க வேண்டியவர்கள் இன்று எங்களை அநாதையாக முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டார்கள் என மனசுக்கு வேதனையாக இருந்ததுடன் ஒரு மாதம் வரை கண்ணீர் சிந்திய இரவுத் தூக்கங்களையே சந்தித்தோம் பின்னர் மாதங்கள் வருடங்களாக மாறியது நாங்களும் எல்லாவற்றையும் மறந்து புதிதாய் பிறந்தது போன்ற உணர்வை எங்களுக்கு ஏற்படுத்தியது.
04) உங்கள் பிள்ளைகள் உங்களை ஒதுக்கிவிட ஏதாவது காரணங்கள் உள்ளனவா? சமூக,கலாச்சார மாற்றங்களுக்கு அமைய பழைய பொருளை தூக்கி எறிந்து புதிய பொருளை வேண்டி வைப்பது போன்று எங்களையும் பழையது என்று ஒதுக்கி வைக்க விரும்பியே முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளனர். பிள்ளைகளுக்கு எங்களை பார்க்க முடியாது என்றால் அதை நேரடியாக சொல்லலாம் அவ்வாறு இல்லாது கோயில் மற்றும் வைத்தியசாலைக்கு கூட்டிச் செல்வதாக பொய்யான வாக்குறுதிகளை தந்துவிட்டு இந்த முதியோர் இல்லத்தில் விடப்பட்டு பல வருடங்கள் கடந்த பின்பும் இன்றுவரை பிள்ளைகள் ஒரு தடவை என்றாலும் வந்து பார்க்கவில்லை என அழுதபடியே தெரிவித்தனர்.
05) இந்த இல்லத்தில் நீங்கள் சந்தோசமாக உள்ளீர்களா? எங்களுடைய சந்தோஷத்துக்கு எந்த குறையும் இங்கு இல்லை என்றே கூறவேண்டும் அந்த அளவுக்கு எங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுகின்றது. உணவு முதற்கொண்டு மருந்துவரை சரியான நேரத்துக்கு எமக்கு கிடைக்கிறது.வீட்டில் இருப்பதை விட இங்கு சந்தோஷமாக இருப்பதாக உணர்கிறோம் ஆனால் ஒரு குறைதான் பிள்ளைகளுடைய ஞாபகங்கள்தான் மனதுக்கு கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இரப்பினும் பராமரிப்பாளர்களின் அன்பான ஆறுதல் வார்த்தைகள் மூலம் அந்த வேதனையையும் உடனே மறக்கச் செய்கிறது மொத்தத்தில் இங்கு இருப்பவர்கள் எல்லோரும் சந்தோசமாக இருக்கின்றோம். 0
6)எதிர்கால சந்ததியினருக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்? எனிவரும் சந்ததியினராவது பெற்றோர்களை இவ்வாறு அநாதைகளாக விடாது தங்களுடைய அரவணைப்பில் பராமரிப்பதனால் பாசப் பினணப்பினை உருவாக்க முடியும்
07) இங்கு சுயதொழில் வசதிகள் இருப்பதாக நாம் அறிகிறோம். அதுதொடர்பாக நிர்வாகத்தினரிடம் கேட்டபோது இவர்களுடைய பொழுபோக்குக்காகவும் சுயதொழிலை மேம்படுத்துவதற்காகவும் பொருட்கள் செய்வதற்கான மூலப் பொருட்களை வழங்குகின்றோம் இதன் மூலம் பனை ஓலையைப் பயன்படுத்தி பெட்டி,சுளகு, கூடை ஆகிய பொருட்களையும் மற்றும் கம்பளித் துணியினைப் பயன்படுத்தி பொம்மைகள் செய்யப்படுகின்றன. இவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களை வெளியிடங்களுக்கு அனுப்பி விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் பெறப்படும் வருமானங்களை அவர்களே சேமித்து வைத்துக்கொள்கின்றனர். இதைப் போன்று ஆண்களுக்கும் கயிறு திரித்தல் உற்பத்திக்கான வசதிகள் ஏற்படுத்தி கொடக்கப்பட்ட போதும் அவர்கள் சிறிது காலம் செய்தார்கள் பின்னர் ஏலாது என அந்த தொழிலை கைவிட்டனர்.
08) மேற்பார்வையாளர்களிடமிருந்து பெற்ற தகவல்கள் 1954 ம் ஆண்டு இலங்கையில் முதலாவது முதியோர் இல்லமாக யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டது. இது தற்போது 183 முதியோர்களுடன் வடக்க மாகாண சமூக சேவை திணைக்களத்தின் கீழ் இயங்கிவருகிறது. 2024 ம் ஆண்டு 24.06 வீதமாக அதிகரிக்கப்படும் என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டதை அடுத்து அரசாங்கத்தால் ஒவ்வொரு கிராமங்கள் தோறும் 'முதியோர் பகல் விடுதி 'அமைப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வருகிறது. இந்த கைதடி முதியோர் இல்லத்தில் 200 பேருக்கு உட்பட்ட முதியோர்களை மாத்திரமே பராமரிக்கக் கூடிய வசதிகள் உள்ளன. தற்போது உள்ள 183 முதியோரில் 39 பேர் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும் 41 பேர் படுக்கையுடன் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கைதடி குமரநகர் சனசமூக நிலையத்தின் 58 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கைதடி குமரநகர் விளையாட்டுக் கழகம் தென்மராட்சி ரீதியாக நடத்திவரும் 11 பேர் கொண்டதும் 16 சுற்றுக் களையுடையதுமான மென்பந்துத் துடுப்பாட்டப் போட்டியின் இறுதிப் போட்டிகள் இன்று புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு குமரநகர் மைதானத்தில் நடைபெற இருக்கின்றது.
இன்றைய இறுதிப் போட்டியில் தென்மராட்சியில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த கழகங்களான கைதடி வளர்மதி விளையாட்டுக்கழகமும் மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளன.
இன்றைய நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனும் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண சபை உறுப்பினர் என்.சயந்தனும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.இந்தப் போட்டி துடுப்பாட்ட ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடும் போட்டியாக அமையும் எனப் பலராலும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்துக்கு அகதியாக சென்றவர் பலரின் பணத்தை ஏப்பமிட்டவராம்; இன்ரபோல் உதவியை நாடுகின்றது சாவகச்சேரி நீதிமன்றம்
தமிழகத்திற்கு கடந்த வாரம் அகதிகளாகச் சென்றவர்களில் ஒரு தம்பதியினர் பல மோசடிகளில் ஈடுபட்டவர்கள் என்றும் அவர்களுக்கு எதிராக வடக்கு மாவட்ட நீதிமன்றங்களில் 11 வழக்குகள் பதிவாகி அவ் வழக்குகள் தொடர்பாக அவர்கள் தேடப்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
முல்லைத்தீவைச் சேர்ந்த பத்து பேர் கடந்த வாரம், தமிழகத்தின் கரையோர மாவட்டமான தனுஷ்கோடிக்கு படகு மூலம் அகதிகளாகச் சென்றனர். இலங்கையில் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனாலேயே அகதிகளாக இந்தியாவுக்கு வந்தோம் என்றும் அவர்கள் அங்கு கூறியிருந்தனர்.
அவர்களில் கதிரவேலு தயாபரராஜா மற்றும் அவரது மனைவியான உதயகலா தயாபரராஜா ஆகியோரே பல்வேறு மோசடிகள் தொடர்பாக இலங்கையில் தேடப்பட்டு வருபவர்கள் என்று தெரியவருகின்றது. இத்தம்பதியினர் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு இடங்களில் மோசடிகளை மேற்கொண்டு பல மில்லியன் ரூபாவைச் சுருட்டினர் எனப் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொலிஸாரினால் நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டபோதிலும் வழக்குகளுக்கு சமுகம் கொடுக்காததால் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கிளிநொச்சி, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய நீதிமன்றங்களால் இவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, அவர்கள் தேடப்பட்டும் வந்தனர்.
குறித்த தம்பதியர் தமிழ்நாட்டுக்குத் தப்பிச் சென்று, அங்கு அதிகளாகத் தஞ்சம் கோரியமை தொடர்பில் ஊடகங்களில் படங்கள் வெளியாகின. அதைப் பார்த்த அவர்களினால் பாதிக்கப்பட்ட சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் அது குறித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் முறையிட்டுத் தகவல் தெரிவித்தனர்.
அதனையடுத்தே சாவகச்சேரிப் பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். தற்போது அந்தத் தம்பதியரை சர்வதேச பொலிஸ் (இன்ரபோல்) உதவியுடன் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு வரும் நடவடிக்கையின் முதற்கட்டமாக இந்த விடயம் தொடர்பாக சாவகச்சேரி நீதிமன்றத்தினால் நீதிஅமைச்சின் செயலாளருக்குத் தெரியப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.
அன்னையர் தினம்,அப்படி என்றால் என்ன? கண்ணீருடன் கேட்கும் கைதடி இல்ல முதியோர்
மனிதப் படைப்பிலே மகத்தான 'தாயை' நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2 வது ஞாயிற்றுக்கிழமை 'அன்னையர் தினம்' கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஒவ்வொரு அன்னையரையும் நினைவு கூருவது அனைத்துப் பிள்ளைகளுடைய கடமையுமாகும். இந்நிலையில் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படவதே பல அன்னையர்களுக்கு தெரியாமல் உள்ளது என்பதை கைதடி முதியோர் இல்லத்தில் உள்ள அன்னையர்கள் மூலம் அறியமுடிகிறது. அன்னையர் தினத்தை முன்னிட்டு கைதடி முதியோர் இல்லத்தில் உள்ள அன்னைகளுடனான நேரடி சந்திப்பின் போது அவர்கள் அளித்த கண்ணீருடனான பதில்கள்
01) மே - 11 உலகளாவிய ரீதியில் அன்னையர் தினம் கொண்டாடப்படுவது தொடர்பாக உங்களுக்கு தெரியுமா? எப்ப? எங்க? இங்கையா? இப்படி ஒரு தினம் கொண்டாடப் படுகிறதா என்ற கேள்விகளையே அங்கு உள்ள பெரும்பாலான தாய்மார்களின் பதில்களாக அமைந்தது. இந்த அன்னையர் தினத்தில் ஏதாவது விஷேடமாக இடம்பெறுமா? எங்களுக்கு ஏதும் செய்வார்களா என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் நிறையவே இருந்தமையை அவர்களின் முகபாவம் எனக்கு நன்றாக உணர்த்தியது. (இருப்பினம் பெரும்பாலான தாய்மார்களுக்கு மே 11 ம் திகதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது என்ற விடயம் பல அன்னைகளுக்கு தெரியாமல் இருப்பது பெரும் கவலைக்குரிய விடயமே.)
02) நீங்கள் அன்னை என்ற ரீதியில் உங்கள் பிள்ளைகளுக்கு கூற விரும்புவது என்ன? பிள்ளைகளை கருவில் சுமந்த காலம் தொட்டு பிள்ளைகளுக்காகவே வாழ்ந்த தாய்மார்களை கடைசிக் காலம் வரை பார்க்க வேண்டியது ஒவ்வொரு பிள்ளைகளதும் கடைமை இதில் ஆண் பிள்ளைதான் தாயைப் பார்க்க வேண்டும் என்றது இல்லை பெண் பிள்ளையும் கூட மனசு வைத்தால் பார்க்கலாம்.பிள்ளைகள் முதலில் தாய்மார்கள் அவர்களுக்காக அனுபவித்த துன்பங்களை ஒரு கணமேதும் நினைத்துப் பார்க்க வேண்டும் அதைவிட்டு விட்டு சுமையாக நினைக்கக் கூடாது. பிள்ளைகள் தமது சுய புத்தியில் சிந்தித்து செயற்படவேண்டும் வந்த மருமக்கள் வெறுப்பதைப் போன்று பிள்ளைகளும் தாய்மாரை வெறுத்துவிடக் கூடாது. ஒவ்வொரு தாயும் பிள்ளைகளது எதிர்காலத்துக்கும் அவர்களுடைய சந்தோசத்துக்கும் பக்க பலனாவே இருப்பார்கள் என்பதை அனைவரும் உணரவேண்டும். நாங்கள் அனாதையோ என்ற உணர்வை எங்களுக்குள் ஏற்படுத்துகிறது. ஆனால் நாளை உங்களுடைய பிள்ளைகளால் உங்களுக்கும் இவ்வாறு ஒரு நிலை அமையும் போது ஒவ்வொரு தாயினுடைய வேதனையும் உங்களுக்கு உணர்த்தி நிற்கும். எவ்வாறு இருந்தாலும் பிள்ளைகளை நாம் குறை சொல்ல மாட்டோம் சந்தர்ப்ப சூழ்நிலைதான் அவர்களை இவ்வாறான முடிவெடுத்து எங்களை இந்த இல்லத்தில் விடுவதற்கு காரணம்
03) உங்கள் பிள்ளைகள் உங்களை சரிவர பராமரிக்கவில்லை என நீங்கள் கவலையடைகின்றீர்களா? பிள்ளைகளுடைய கடமை பெற்றோர்களைப் பார்ப்பதுதான் ஒவ்வொரு பிள்ளைகளும் உணர்ந்தாலே போதும். பிள்ளைகள் கடைசி வரை எங்களைப் பார்க்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசையும் அனைத்து தாய்மார்களுடைய விருப்பமும் கூட ஆனால் பிள்ளைகள் எங்களை பார்க்காமல் இந்த முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டனர் என்ற வருத்தம் இருந்தாலும் பிள்ளைகளுக்கு ஒரு சுமையான இருக்காது இங்கு வந்தது மனதுக்கு ஆருதலாக உள்ளது. நாங்கள் இங்கு சந்தோசமாகதான் இருக்கின்றோம் பிள்ளைகள் கூட இந்தளவுக்கு எங்களைப் பார்க்க மாட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு வசதிகள் நிறையவே இருகின்றது. ஆரம்பத்தில் இந்த முதியோர் இல்லத்துக்கு வரும் போது பிள்ளைகள் எங்களை உதாசினப்படுத்தி விட்டார்கள் கடைசி நேரத்தில் பராமரிக்க வேண்டியவர்கள் இன்று எங்களை அநாதையாக முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டார்கள் என மனசுக்கு வேதனையாக இருந்ததுடன் ஒரு மாதம் வரை கண்ணீர் சிந்திய இரவுத் தூக்கங்களையே சந்தித்தோம் பின்னர் மாதங்கள் வருடங்களாக மாறியது நாங்களும் எல்லாவற்றையும் மறந்து புதிதாய் பிறந்தது போன்ற உணர்வை எங்களுக்கு ஏற்படுத்தியது.
04) உங்கள் பிள்ளைகள் உங்களை ஒதுக்கிவிட ஏதாவது காரணங்கள் உள்ளனவா? சமூக,கலாச்சார மாற்றங்களுக்கு அமைய பழைய பொருளை தூக்கி எறிந்து புதிய பொருளை வேண்டி வைப்பது போன்று எங்களையும் பழையது என்று ஒதுக்கி வைக்க விரும்பியே முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளனர். பிள்ளைகளுக்கு எங்களை பார்க்க முடியாது என்றால் அதை நேரடியாக சொல்லலாம் அவ்வாறு இல்லாது கோயில் மற்றும் வைத்தியசாலைக்கு கூட்டிச் செல்வதாக பொய்யான வாக்குறுதிகளை தந்துவிட்டு இந்த முதியோர் இல்லத்தில் விடப்பட்டு பல வருடங்கள் கடந்த பின்பும் இன்றுவரை பிள்ளைகள் ஒரு தடவை என்றாலும் வந்து பார்க்கவில்லை என அழுதபடியே தெரிவித்தனர்.
05) இந்த இல்லத்தில் நீங்கள் சந்தோசமாக உள்ளீர்களா? எங்களுடைய சந்தோஷத்துக்கு எந்த குறையும் இங்கு இல்லை என்றே கூறவேண்டும் அந்த அளவுக்கு எங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுகின்றது. உணவு முதற்கொண்டு மருந்துவரை சரியான நேரத்துக்கு எமக்கு கிடைக்கிறது.வீட்டில் இருப்பதை விட இங்கு சந்தோஷமாக இருப்பதாக உணர்கிறோம் ஆனால் ஒரு குறைதான் பிள்ளைகளுடைய ஞாபகங்கள்தான் மனதுக்கு கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இரப்பினும் பராமரிப்பாளர்களின் அன்பான ஆறுதல் வார்த்தைகள் மூலம் அந்த வேதனையையும் உடனே மறக்கச் செய்கிறது மொத்தத்தில் இங்கு இருப்பவர்கள் எல்லோரும் சந்தோசமாக இருக்கின்றோம். 0
6)எதிர்கால சந்ததியினருக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்? எனிவரும் சந்ததியினராவது பெற்றோர்களை இவ்வாறு அநாதைகளாக விடாது தங்களுடைய அரவணைப்பில் பராமரிப்பதனால் பாசப் பினணப்பினை உருவாக்க முடியும்
07) இங்கு சுயதொழில் வசதிகள் இருப்பதாக நாம் அறிகிறோம். அதுதொடர்பாக நிர்வாகத்தினரிடம் கேட்டபோது இவர்களுடைய பொழுபோக்குக்காகவும் சுயதொழிலை மேம்படுத்துவதற்காகவும் பொருட்கள் செய்வதற்கான மூலப் பொருட்களை வழங்குகின்றோம் இதன் மூலம் பனை ஓலையைப் பயன்படுத்தி பெட்டி,சுளகு, கூடை ஆகிய பொருட்களையும் மற்றும் கம்பளித் துணியினைப் பயன்படுத்தி பொம்மைகள் செய்யப்படுகின்றன. இவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களை வெளியிடங்களுக்கு அனுப்பி விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் பெறப்படும் வருமானங்களை அவர்களே சேமித்து வைத்துக்கொள்கின்றனர். இதைப் போன்று ஆண்களுக்கும் கயிறு திரித்தல் உற்பத்திக்கான வசதிகள் ஏற்படுத்தி கொடக்கப்பட்ட போதும் அவர்கள் சிறிது காலம் செய்தார்கள் பின்னர் ஏலாது என அந்த தொழிலை கைவிட்டனர்.
08) மேற்பார்வையாளர்களிடமிருந்து பெற்ற தகவல்கள் 1954 ம் ஆண்டு இலங்கையில் முதலாவது முதியோர் இல்லமாக யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டது. இது தற்போது 183 முதியோர்களுடன் வடக்க மாகாண சமூக சேவை திணைக்களத்தின் கீழ் இயங்கிவருகிறது. 2024 ம் ஆண்டு 24.06 வீதமாக அதிகரிக்கப்படும் என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டதை அடுத்து அரசாங்கத்தால் ஒவ்வொரு கிராமங்கள் தோறும் 'முதியோர் பகல் விடுதி 'அமைப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வருகிறது. இந்த கைதடி முதியோர் இல்லத்தில் 200 பேருக்கு உட்பட்ட முதியோர்களை மாத்திரமே பராமரிக்கக் கூடிய வசதிகள் உள்ளன. தற்போது உள்ள 183 முதியோரில் 39 பேர் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும் 41 பேர் படுக்கையுடன் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சாவகச்சேரி சந்தையில் குழந்தையுடன் பிச்சை எடுத்தபெண்ணை பிணையில் விடுவிக்கக் கோரிய உறவுகள்
தன்னை அநாதை என்று கூறி சாவகச்சேரி சந்தையில் குழந்தையுடன் பிச்சை எடுத்தமைக்காக நீதிமன்றால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், கணவர், உறவுகள் எனப் பலர் சாவகச்சேரி நீதிமன்றுக்கு வந்து குறிப்பிட்ட பெண்ணைப் பிணையில் விடுவிக்குமாறு கோரினர்.
கடந்த வெள்ளிக்கிழமை சாவகச்சேரி சந்தையில் குழந்தையுடன் பிச்சை எடுத்ததாகக் குற்றம் சாட்டி பெண்ணொருவருக்கு எதிராக சாவகச்சேரி பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது அந்தப் பெண் தனக்கு உறவுகள் என்று சொல்வதற்கு குழந்தையைத் தவிர வேறொருவரும் இல்லை என்று நீதிமன்றில் கூறினார். அதனையடுத்து குழந்தையுடன் பிச்சையெடுத்த குற்றத்துக்காக இரு வாரங்கள் சாதாரண சிறைத் தண்டனை விதித்ததுடன் தண்டனைக் காலம் முடிவடைந்ததும் அப் பெண்ணை வவுனியாவில் உள்ள பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்குமாறு உத்தரவிட்டார்.
குறித்த செய்தி பத்திரிகையில் வெளியானதை அடுத்து பெண்ணின் பெற்றோர், கணவன் மற்றும் உறவினர்கள் நேற்றுக்காலை நீதிமன்றுக்கு வந்து பெண்ணையும் குழந்தையையும் தம்மிடம் ஒப்படைக்குமாறு சட்டத்தரணி மூலம் கோரிக்கை விடுத்தனர். நீதிமன்றால் ஏற்கனவே தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் தண்டனைக்காலம் முடியும் வரை அது குறித்து பரிசீலிக்க முடியாது எனக்கூறி நீதிவான் அவர்களது கோரிக்கையைத் தள்ளுபடி செய்தார்.

கனடாவில் இருந்து சென்ற மூதாட்டிக்கு சொந்த ஊரில் நடந்த அவலம்! -
கனடாவிலிருந்து வந்து தனது சொந்த வீட்டிலிருந்தவர்களை வெளியேற்ற முயன்ற மூதாட்டி ஒருவரை வீட்டில் குடியிருப்பவர்கள் தாக்கி காயப்படுத்தி, கொலை அச்சுறுத்தலும் விடுத்துள்ள சம்பவமொன்று சாவகச்சேரி, நுணாவில் மேற்கு பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த, குணாநந்தன் தயாளசோதி (வயது 78) என்ற மூதாட்டி சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தெரியவருவதாவது, நுணாவில் மேற்கைச் சேர்ந்த குறித்த மூதாட்டி, தான் கனடாவுக்குச் செல்வதற்கு முன்னர், வீடில்லாமல் தவித்த ஒரு குடும்பத்தினரை தனது வீட்டில் குடியிருக்க அனுமதித்து, வாடகை ஒப்பந்தமும் செய்துவிட்டுச் சென்றுள்ளார்.
கனடாவிலிருந்து அண்மையில் திரும்பி வந்த மூதாட்டி, இருபகுதியினரும் செய்து கொண்ட வாடகை ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில், வீட்டிலிருந்து வெளியேறுமாறு குடியிருந்தவர்களைக் கேட்டுள்ளார். வீட்டிலிருந்தவர்கள், தாம் வெளியேறுவதற்கு ஒரு மாத கால அவகாசம் கேட்டபோது, அதற்குச் சம்மதித்து விட்டுச் சென்ற மூதாட்டி, ஒரு மாதத்தின் பின்னர் திரும்ப வந்து, கடந்த ஏப்ரல் 12ம் திகதி வீட்டை விடுவிக்குமாறு கேட்ட போது, குடியிருந்தவர்கள் மீணடும் அவகாசம் கேட்டுள்ளனர்.
இதனையடுத்து, சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மூதாட்டி முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். வீட்டில் குடியிருந்தவர்களை அழைத்து சாவகச்சேர் பொலிஸார் விசாரித்த போது, இரு நாட்களில் வீட்டிலிருந்து தாம் வெளியேறி விடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருந்த போதிலும், அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறாததால், நேற்று பகல் வீட்டிற்குச் சென்ற மூதாட்டி வீட்டினை விடுமாறு குடியிருப்பாளர்களைக் கேட்ட போது, வீட்டிலிருந்தவர்கள் மூதாட்டியைத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். அத்துடன், ‘வீட்டுக்கு இனிமேல் திரும்ப வந்தால், கனடாவுக்கு பெட்டிக்குள் வைத்து அனுப்பி விடுவோம்’ என கொலை அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.
காயமடைந்த மூதாட்டி சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து விட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூதாட்டியைத் தாக்கிய தங்கராசா சிவசுதன் என்பவரைப் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- See more at: http://www.canadamirror.com/canada/25565.html#sthash.cB0DFys9.dpuf
சாவகச்சேரியில் நடைபெற்ற கூட்டமைப்பின் மேதினவிழா படங்களில் சில
பெயின்ற் அடிக்க வந்தவர் சுருட்டினார் சங்கிலியை; ;கைதடி கிழக்கில் சம்பவம்
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=476182919225589763#sthash.uzaHzY3O.dpuf

கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில் கைதடி கிழக்கில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது: கைதடிப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது புதிய வீட்டுக்கு வர்ணம் பூசவென அந்தப் பகுதியிலுள்ள ஒப்பந்தகாரர் ஒருவருடன் தொடர்பு கொண்டார். அதை அடுத்து அவரும் தனது வேலையாள்கள் நால்வரை அனுப்பி வர்ணம் பூசும் வேலையைத் தொடக்கியிருந்தார்.
வீட்டுக்காரரும் தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் என்ற காரணத்தினால் வீட்டிலுள்ள பொருள்களை அப்புறப்படுத்தாது நம்பிக்கையின் பேரில் வேலைகளை மேற்கொள்ள அனுமதித்திருந்தார். இவ்வாறான நிலையில் நெல் மூடைகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைப் பெட்டியில் இருந்த நகைகளில் மூன்று பவுண் நிறை கொண்ட சங்கிலி திருட்டுப் போய்விட்டது.
"பெயின்ற் அடிக்கும்' வேலைகள் நடந்து கொண்டிருந்த இரண்டாம் நாளில் வீட்டிலுள்ள பெண்மணி கொண்டாட்டம் ஒன்றுக்குச் செல்வதற்காக நகைப்பெட்டியை எடுத்துள்ளார். அப்போதுதான் சங்கிலி ஒன்று காணாமல் போனமை தெரியவந்தது. அதிர்ச்சியடைந்தார் அந்தப் பெண். யாரிடம் சொல்வது, யாரைச் சந்தேகிப்பது என்று தெரியாமல் ஏக்கத்தில் தடுமாறினார். பின் ஒருவாறு வீட்டில் சொல்ல வீட்டுக்காரரும் ஒப்பந்தகாரருக்குச் சொல்ல கதை ஒருவழியாக வெளியே வந்தது.
இந்த நிலையில் அந்த வீட்டில் வர்ணம் பூசும் வேலைக்கு ஒப்பந்தகாரரால் நியமிக்கப்பட்டவர்களில் மூன்று இளைஞர்கள் தம்முடன் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட நான்காவது இளைஞர் மீது சந்தேகப்பட்டனர். அவரை எச்சரிக்கும் வகையில் துருவி விசாரித்தனர்.
முதலில் தான் திருடவில்லை என சத்தியம் செய்த அந்த நபர் ஏனையோரின் ஆத்திரத்தைக் கண்டு மிரண்டு சங்கிலியைத் தானே திருடியதாக ஒப்புக்கொண்டு விட்டார். ""நகையை யாழ். நகரில் 15 ஆயிரம் ரூபாவுக்கு அடைவு வைத்து விட்டேன்'' என அவர் கூற ஒப்பந்தகாரரும் உடனடியாக 15 ஆயிரம் ரூபாவை கொடுத்து நகையை மீட்பித்து உரியவரிடம் கையளித்தார்.
நகையைத் திருடிய இளைஞர் சில வருடங்களுக்கு முன்னர் கைதடி சித்த மருத்து வத்துறை விடுதியில் திருடச் சென்றவேளை இராணுவத்தினரால் காலில் சுடப்பட்டு காயமடைந்தவர் என்று கூறப்பட்டது. 25.4.2014
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=476182919225589763#sthash.uzaHzY3O.dpuf
மாயைக்கு மயங்காதீர்கள்; கஜதீபன் வேண்டுகோள்
தமிழ் இளையோர்கள் அரசின் சதிவலைக்குள் சிக்காது விழிப்புடன் செயற்படவேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார்.
கைதடிமத்தி குமரநகர் சனசமூக நிலைய, நிறைமதி முன்பள்ளியின் விளையாட்டுவிழா நேற்று இடம்பெற்றது. பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமை நிலையில் இருக்கின்ற எம் உறவுகளின் நிலையை சாதகமாக்கி தமிழ் இளையோருக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் ஏனைய வசதிகளும் வழங்கப்படும் என்பதான மாயைக்குள் இன்றைய ஆளும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அத்துடன் அவர்களுக்கு மூளைச்சலவையும் செய்து சிவில் வேலை வாய்ப்புக்களை வழங்காமல், இராணுவத்திற்கு உள்ளீர்க்கும் படுபயங்கரமான ஒரு நிகழ்ச்சி நிரலை, திட்டமிட்ட ரீதியில், தமிழர் வாழும் பிரதேசமெங்கும் அரங்கேற்றி வருகிறது. இந்த அபாயகரமான அரசின் சதிவலைக்குள் எந்தவொரு உண்மையான தமிழ் இளையோர்களும் எவ்விதத்திலும் சிக்கி விடாமல் விழிப்புடன் உண்மை நிலையை உணர்ந்து செய்ற்படவேண்டும்.
இன்று நாங்கள் நின்று கொண்டிருக்கும், இந்த சனசமூக நிலைய திறப்புவிழாவில் கடந்தவருடம் நான் கலந்துகொண்டேன். அப்போது இந்த சனசமூக நிலையத்துக்கு மறைந்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ந.ரவிராஜ் அவர்கள் அடிக்கல நாட்டியிருந்தமை பற்றி அறிந்தேன். அதன்படி அவருடன் இணைந்து செயற்பட்ட இந்த ஊரின் முக்கியஸ்தர்கள் தான் இந்த சனசமூக நிலையத்தின் நிர்வாகிகளாக உள்ளனர்.
இந்தநிலைமையானது இன்று இந்த முன்பள்ளியில் கல்வி கற்கும் சிறார்கள், நாளை நல்ல தேசிய உணர்வாளர்களாக, மொழிப்பற்றாளர்களாக வருவார்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் இப்படியான சமூகங்களை திசைமாற்றி, சீரழித்து இனப்பற்றுள்ள, தமிழ்த்தேசியப்பற்றுள்ள இளையோர்களை வேலைவாய்ப்பு எனும் மாயையின் கீழ் இனத்துக்கு எதிரானவர்களாக மாற்றும் செயற்பாடுகளை அரசாங்கம் திட்டமிட்டு முடுக்கி விட்டுள்ளது. ஆனால் தனிப்பட்ட தேவைகளை மனதிற்கொண்டு அல்லது அவர்களுடைய ஆசை வார்த்தைகளுக்கு எடுபட்டு யாராவது இவ்வாறான வரலாற்றுத்துரோகத்தை இழைப்பார்களேயானால் அவர்களை ஒரு பொழுதும் எந்தவொரு தமிழ்மகனும் ஏற்றுக்கொள்ளவோ, மன்னிக்கவோ மாட்டான்.
ஆகவே எமது இளையோர்கள் அரசாங்கத்தின் திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலை விளங்கிக்கொள்வதுடன், ஏனைய நண்பர்களுக்கும் விளக்கி, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க ஒன்றுதிரளவேண்டும் என்றார். இந்நிகழ்வில் சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் ஜெ.சிற்சபாநாதன், சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர், கைதடி சேதுகாவலர் வித்தியாலய அதிபர் இ.திருஞானசிவம், மற்றும் சனசமூக நிலைய செயலாளர் வ.ரவீந்திரன், , மற்றும் ஊர் மக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். 19.4.2014
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=418902872714508517#sthash.ZIJl72WX.dpuf
போதையில் வீதியை கடந்தவரை பந்தாடியது மோட்டார் சைக்கிள்
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=370402867112806892#sthash.tpKgw50g.dpuf
பண்டிகைக்கால விசேட வேலைத்திட்டம் சாவகச்சேரியில்
சாவகச்சேரி பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெதுமக்கள் ஆலோசனைக்குழுவின் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று காலை 10 மணியளவில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. பொலிஸ் நிலைய பரிசேதகர் டபில்யு எம் எச். தென்னக்கோன் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் குழுத்தலைவர் வைத்தியகலாநிதி ந. குகதாசன் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர். பண்டிகை காலங்களில் பொதுவாக போதைப்பொருள் பாவனையால் விபத்துக்களும் குழு மோதல்களும் ஏற்படுவதனால் பொதுமக்கள் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர். கடந்தவருடம் புதுவருட தினத்தன்று ஏற்பட்ட 84 வீதி விபத்துகளில் 15 பேர் பெருங்காயங்களுக்கும் அதே தினத்தன்று இடம்பெற்றகுழு மோதல்களில் காயமடைந்த 124 பேரில் 8 பேருக்கு பெருங்காயங்களும் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதேவேளை விளையாட்டு போட்டிகளில் 4 வீரர்களும், முறன்பாடு காரணமாக 28 பேரும் காயமடைந்து இருந்தனர். இவையாவும் மதுபோதையில் இருந்தவர்களாலே இடம்பெற்றிருந்தது.
எதிர்வரும் பண்டிகை காலங்களில் மதுபோதை மற்றும் வெடிபொருட்கள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தவிர்க்கும் வகையில் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தனர் - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=729502863211872251#sthash.mBsWm7Hc.dpuf

புத்தாண்டு விளையாட்டு போட்டிகள் களைகட்டியுள்ள சாவகச்சேரி நகரம்
சாவகச்சேரி நகரசபையும் பொலிஸ் நிலையமும் இணைந்து நடத்தும் புத்தாண்டு விளையாட்டு போட்டிகள் இன்று சாவகச்சேரி நகர பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இன்று காலை 6.00 மணிக்கு ஆரம்பமான இவ் விளையாட்டுப் போட்டிகளில் மரதன் ஓட்டப்போட்டி, மற்றும் சைக்கிள் ஓட்டப்போட்டி ஆகியவை நிறைவடைந்துள்ளதுடன், தமிழர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஏனைய விளையாட்டு போட்டிகள் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
நகரசபை தலைவர் இ.தேவசகாயம் பிள்ளை சாவகச்சேரி பொலிஸ் தலைமைக் காரியாலய பரிசோதகர் ஏ.கே.டி வன்னியாராச்சி இணைத்தலைமையில் மதியம் ஒரு மணிக்கு இறுதிப்போட்டிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.
கிரிக்கெட், கபடி (ஆண்,பெண்) கயிறிழுத்தல், முட்டி உடைத்தல் சிறுவர்களுக்கான யானைக்கு கண்வைத்தல், தண்ணீர் நிரப்புதல்,தேசிக்காய் ஓட்டம்,மற்றும் சங்கீத கதிரை என பலவிளையாட்டுகள் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி கே சிவஞானம், வட மாகாணசபை உறுப்பினர்கள், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி.றோகனடயஸ் ,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், தென்மராட்சி பாடசாலை அதிபர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொள்ளவுள்ளனர். 14-4-14
போதையில் வீதியை கடந்தவரை பந்தாடியது மோட்டார் சைக்கிள்
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழில். இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மதுபோதையில் வீதியை கடக்க முற்பட்ட பாதசாரியுடன் மோதியதிலே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
இவ் விபத்தில் படுகாயமடைந்த நுணாவில் மத்தி சாவகச்சேரியை சேர்ந்த சிறிராசகுமார் (வயது 39) சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி போக்குவரத்து பொலிஸார் இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பண்டிகைக்கால விசேட வேலைத்திட்டம் சாவகச்சேரியில்
சாவகச்சேரி பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெதுமக்கள் ஆலோசனைக்குழுவின் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று காலை 10 மணியளவில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. பொலிஸ் நிலைய பரிசேதகர் டபில்யு எம் எச். தென்னக்கோன் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் குழுத்தலைவர் வைத்தியகலாநிதி ந. குகதாசன் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர். பண்டிகை காலங்களில் பொதுவாக போதைப்பொருள் பாவனையால் விபத்துக்களும் குழு மோதல்களும் ஏற்படுவதனால் பொதுமக்கள் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர். கடந்தவருடம் புதுவருட தினத்தன்று ஏற்பட்ட 84 வீதி விபத்துகளில் 15 பேர் பெருங்காயங்களுக்கும் அதே தினத்தன்று இடம்பெற்றகுழு மோதல்களில் காயமடைந்த 124 பேரில் 8 பேருக்கு பெருங்காயங்களும் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதேவேளை விளையாட்டு போட்டிகளில் 4 வீரர்களும், முறன்பாடு காரணமாக 28 பேரும் காயமடைந்து இருந்தனர். இவையாவும் மதுபோதையில் இருந்தவர்களாலே இடம்பெற்றிருந்தது.
எதிர்வரும் பண்டிகை காலங்களில் மதுபோதை மற்றும் வெடிபொருட்கள் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தவிர்க்கும் வகையில் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தனர் - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=729502863211872251#sthash.mBsWm7Hc.dpuf
சாவகச்சேரியில் விபத்து; ஒருவர் படுகாயம்
சாவகச்சேரி பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த மோட்டோர் சைக்கிளை யாழில். இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்தும் மோதியதிலேயே இவ் விபத்து இடம் பெற்றுள்ளது. மோட்டார்சைக்கிளில் பயணம் செய்த வரணி பிரதேசத்தை சேர்ந்த ப. மயூரன் (வயது35) என்பவரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.