| ||
புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் உள்ள மூன்று பாடசாலைகள் 192 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளன.
கடந்த ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியானது.
இதன்படி யாழ். மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை,சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலை, அளவெட்டி அருணேதயாக் கல்லூரியின் மாணவர்கள் மூவர் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்
(முதலாம் இணைப்பு)
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் சற்றுமுன்னர் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்தப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
|
தென்மராட்சி,
சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட வரணி வடக்கு,
ஐயங்கண்டிமுள்ளி, குடமி யன், கரம்பான் ஆகிய இந்து மயானங்கள்
நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் வசதிகளற்ற நிலையில் உள்ளதாக
அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மழை, வெய்யில் காலங்களில் சடலங் களை எரியூட்டக்கூடிய
கொட்டகை வச தி கள், இளைப்பாறும் மண்டபங்கள் எவை யும் இல்லாமையால்
மக்கள் பெரும் சிரம ங்களை எதிர்நோக்குகின்றனர். ஒவ்வொரு
மயானங்களும் 300 இற்கு மேற்பட்ட குடும்பங்களின் பயன்பாட்டிற்காக
உள்ளன. இவற்றின் குறைபாடுகள் தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை
எடுத்துக் கூறியும் இது வரையில் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லையென
அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, ஒரு மனிதனின் இறுதிக் கடமைகளைச் செய்யும்
மயானங்களை வசதியோடு இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவ டிக்கை
எடுக்க வேண்டுமென அப்பகுதிப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.(Virakesari24.9.14)
சாவகச்சேரியில் நடத்துனருக்கும் ஓட்டுனருக்குமிடையே கைகலப்பு
தனியார் பேருந்து ஓட்டுனருக்கும் இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பேருந்து நடத்துனருக்கும் இடையில் இன்று மாலை சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் கைகலப்பு ஏற்ப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பேருந்து சாவகச்சேரி பேருந்து நிலையத்திலுள்ள பயனிகளை ஏற்ற முற்பட்ட வேளையில் தனியார் பேருந்து ஓட்டுனர் ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்து வாய் தர்க்கத்தில் ஈடுபட்டார். இதன் பின்னர் வாய் தர்கம் கை கலப்பாக மாறியது. இதன் போது தனியார் பேருந்து ஓட்டுனர்; இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்து நடத்துனரை பலமாக தாக்கிவிட்டு தப்பிக் சென்றுள்ளதாக சம்பவ இடத்திலுள்ளவர்கள் தெரிவித்தனர். சம்பவிடத்துக்கு விரைந்த சாவகச்சேரி பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்க்கொண்டதுடன் தாக்கிவிட்டு தப்பி சென்ற தனியார் பேருந்து ஓட்டுனரை தேடிப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றதுதெரியவருகின்றது.
http
மனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கைதடியில் சர்வதேச முதியோர் தின நிகழ்வு
2014 ஆம் ஆண்டுக்கான சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு முதியோர் உரிமைகளைப் பாதுகாத்தல், மேம்படுத்துதல் தொடர்பாக பிரதேசங்களில் பல்வேறு செயலமர்வுகளை நடத்த தீர்மானித்துள்ளது.
இதற்கமைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டிலும் அரச , அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், முதியோர் சங்க அங்கத்தவர்கள், பொதுமக்கள் போன்றோரை உள்ளடக்கி அரைநாள் செயலமர்வொன்றை நடத்தத் தீர்மானித்துள்ளது.
கைதடி அரச முதியோர் எதிர்வரும் 02 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு இடம்பெறவுள்ள இச் செயலமர்வில் பாதுகாப்பும் சமூக கவனிப்பும், வயது முதிர்தலின் சுகாதார நோக்கு, முதியோர் தொடர்பான சட்டங்கள் போன்ற கருப்பொருளின் கீழ் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் அறிவித்துள்ளார்
.
ரூட் இல்லா பஸ் பயணம் : கொழும்பு சென்றவர்கள் நாய்படா பாடு
வாழ்வெழுச்சி பொதுச்சந்தையை தென்மராட்சியில் திறக்க ஏற்பாடு
முதியோர், மாற்றுவலுவுடையோர் தினங்களை முன்னிட்டு நிகழ்வுகள்
சாவகச்சேரி பொது பஸ் தரிப்பிடத்தில் இரவில் நிற்காது செல்லும் பேருந்துகள்
வீதியில் நின்று ஏறும் பயணிகள்
- See more at:ore.php?id=802933412jVs.dpuf[ Athirvu/ Sep 09, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 5345 ]
2014 ஆம் ஆண்டுக்கான சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு முதியோர் உரிமைகளைப் பாதுகாத்தல், மேம்படுத்துதல் தொடர்பாக பிரதேசங்களில் பல்வேறு செயலமர்வுகளை நடத்த தீர்மானித்துள்ளது.
இதற்கமைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டிலும் அரச , அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், முதியோர் சங்க அங்கத்தவர்கள், பொதுமக்கள் போன்றோரை உள்ளடக்கி அரைநாள் செயலமர்வொன்றை நடத்தத் தீர்மானித்துள்ளது.
கைதடி அரச முதியோர் எதிர்வரும் 02 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு இடம்பெறவுள்ள இச் செயலமர்வில் பாதுகாப்பும் சமூக கவனிப்பும், வயது முதிர்தலின் சுகாதார நோக்கு, முதியோர் தொடர்பான சட்டங்கள் போன்ற கருப்பொருளின் கீழ் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் அறிவித்துள்ளார்
.
ரூட் இல்லா பஸ் பயணம் : கொழும்பு சென்றவர்கள் நாய்படா பாடு
யாழில், இருந்து கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தட அனுமதி காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
யாழில் இருந்து நேற்று முன்தினம் கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேரூந்து வீதி வழித்தட அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தால் நாடு வீதியில் பயணிகள் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பயணியொருவர் ஒன்லைன் உதயனிற்கு கருத்து தெரிவிக்கையில் :-
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்வதற்காக சாவகச்சேரி நகரில் காத்திருந்த போது தனியார் பேருந்து வந்தது அதில் ஏறி பயணம் செய்த வேளை சங்கத்தானை பகுதியில் வைத்து கொழும்பு செல்வதற்குரிய கட்டணமாக 65௦ ரூபாவினை அறவிட்டனர்.
அதனை தொடர்ந்து கொடிகாமம் பேருந்து நிலையம் வரையில் பயணிகள் ஏறினர் அவர்களிடமும் பணம் அறவிடப்பட்டதை தொடர்ந்து பேருந்து புறப்பட்டு சென்றுகொண்டிருந்த போது மிருசுவில் சந்தியில் கொடிகாமம் போக்குவரத்து பொலிஸார் பேருந்தை வழிமறித்தனர்.
அப்போது நடத்துனர் இறங்கிச்செல்ல, பொலிஸார் உங்களிடம் வந்து கேட்டாள் நீங்கள் பேருந்தினை வாடகைக்கு அமர்த்தி சுற்றுலா செல்வதாக கூறுங்கள் என்று கூறிவிட்டு அவரும் பேருந்தில் இருந்து இறங்கிவிட்டார்.
நீண்ட நேரமாகியும் பேருந்து புறப்படவில்லை, அப்போது பேருந்தில் எரிய பொலிஸ் உத்தியோகத்தர் நீங்கள் எங்கு போகுறியல் என கேட்க சுற்றுலா செல்கிறோமென கூறினோம். அதனை தொடர்ந்து நீங்கள் யார் தலைமையில் செல்கிறிர்கள் என கேட்டார்? அதற்கு நாங்கள் யாரும் வாய்திறந்து பதில் கூறவில்லை. அப்போது சந்தேகம் கொண்ட பொலிஸார் நீங்கள் கொழும்பிற்கு தானே செல்கிறியல் என கேட்டார்.
அப்போது திடீரென சிங்களத்தில் இரு பயணிகள் பொலிஸாரை பார்த்து கேட்டார்கள். என்ன பிரச்சினை ஏன் பேருந்தை மறித்து வைத்துள்ளீர்கள் என கேட்டனர்.
அதற்கு அந்த பொலிஸார் இந்த பேருந்து பயணிகள் போக்குவரத்து வழித்தட அனுமதியின்றி சேவையில் ஈடுபட்டுகின்றது. ஆகையால் தொடந்து நீங்கள் இந்த பேருந்தில் பயணத்தை மேற்கொள்ள முடியாது. இறங்கி வேறு பேருந்தில் பயணிக்குமாறு கூறினார்.
குறித்த பேருந்தில் கிட்டத்தட்ட 45 மேற்ப்பட்ட இருந்தோம் எல்லோரும் இறங்கி சாரதியை தேடினால். சாரதி அங்கு இல்லை நடத்துனரிடம் சென்று பணத்தை திரும்பித்தருமாறு கேட்ட போது. பணம் இப்போது இல்லை அந்த பணத்திற்கு எரிபொருள் நிரப்பிவிட்டோம் என தெரிவித்தார்.
இதனால் பணத்தையும் இழந்து பயணத்தையும் தொடரமுடியாமல் வீதியில் சிறுவர்கள் முதல் வயது முதிர்ந்தவர்கள் என எல்லோரும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தோம்.
அப்போது அந்தவழியாக வந்த தனியார் பேருந்துகளில் இடம் இல்லை பயணிகள் நிறைந்திருந்தார்கள். மற்றுமொரு பேருந்து நடத்துனருடம் இடமிருக்க என கேட்ட போது. இந்த பேருந்தில் மட்டுமல்ல கொழும்பு நோக்கி செல்லும் எந்த பேருந்திலும் இடம் இல்லை என கூறினார்.
நின்றுகொண்டு பயணிப்பது என்றால் வாருங்கள் என்றார். வேறு வழியின்றி எங்களில் சிலர் அந்த பேருந்தில் ஏறி மீண்டும் 6௦௦ ரூபா கொடுத்து கொழும்பு வரையில் நின்றவாறு பயணத்தை தொடர ஏனையவர்கள் வேறு பேருந்து வரும் என காத்திருந்தனர்.- என தமக்கு நடந்த சொந்த கதை சோகக்கதையை கூறினார்.
வாழ்வெழுச்சி பொதுச்சந்தையை தென்மராட்சியில் திறக்க ஏற்பாடு
தென்மராட்சி,14.9.14
தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட் பட்ட 60 கிராம சேவையாளர் பிரிவுகளி லும் உற்பத்தி செய்யப்படுகின்ற உள்ளூர் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும் நிலையமொன்று நாவற்குளியில் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.
கடந்த வருடம் இச் சந்தைக் கட்டடத்திற் கான அடிக்கல் நாட்டப்பட்டு தற்பொழுது வேலைகள் நிறைவடைந்துள்ளன. வாழ்வெழு ச்சித் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற திட்டங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள், உள்ளூர் உற்ப த்திப் பொருட்கள் என்பன இச்சந்தையில் விற் பனை செய்யப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. நாவற்குளி அரச உணவுக் களஞ்சியத்தி ற்கு அருகாமையில் இந்தச் சந்தை அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.முதியோர், மாற்றுவலுவுடையோர் தினங்களை முன்னிட்டு நிகழ்வுகள்
கைதடி,12/9/14
வட மாகாண சமூக சேவைகள் திணைக்க-ளத்தின் ஏற்பாட்டில் இவ் வருடமும் சர்வ-தேச முதியோர், மாற்றுவலுவுடையோர் தின-த்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடு-கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச முதி-யோர் தினத்தின் கருப்பொருளாக முதி-யோர் எவரையும் புறம் ஒதுக்காமல் எல்லோ-ருக்கு-மான சமூக-த்தை கட்டி எழு-ப்பு-வோம் என்ற தொனிப்பொருள் அறி-விக்க-ப்பட்டு-ள்ளது.
எதிர்வரும் டிசெம்பர் மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வ-தேச மாற்று வலுவுள்ளோர் தினத்தின் கருப்-பொரு-ளாக மாற்று ஆற்றலுடை-யோ-ருக்கு நிலைத்த அபிவிருத்திக்கான சிறந்த தளத்தை தொழில் நுட்பத்தின் ஊடாக வழங்குதல் என்ற மகுட வாசகம் அறிவிக்க-ப்பட்டு-ள்ளது.
வலயக்கல்வித் திணைக்களத்தின் அனு-மதியை பெற்று பாடசாலை மட்டத்தில் மாணவர்களிடையே கட்டுரை, கவிதை, பேச்சு போட்டிகளையும் அதே போன்று பொது மக்களிடையேயும் போட்டிகளை நடத்துமாறு சமூக சேவைகள் திணைக்க-ளத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலர்கள், சமூக சேவைகள் அலுவ-லர்கள் ஊடாக இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்த-க்கது.
வீதியில் நின்று ஏறும் பயணிகள்
தென்மராட்சி,10/9/14
சாவகச்சேரி நகர சபைக்குட்பட்ட பொது பஸ் தரிப்பிடத்தை மாலை மற்றும் இரவு நேரங்களில் பேருந்துகள் பயன்படுத்துவதில்லை என பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர். பல மில்லியன் ரூபா செலவில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள சாவகச்சேரி பொது பஸ் தரிப்பிடத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள், தனியார் பேருந்துகள் என்பன தரித்து நின்று மக்களை ஏற்றிச் செல்வதில்லை என குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது. மாலை மற்றும் இரவு நேரங்களில் பஸ்கள் பஸ் தரிப்பிடத்திற்குச் செல்லாது ஏ 9 வீதியிலுள்ள டிறிபேக் கல்லூரிக்கு அருகாமையில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் வயதானவர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
வெளிமாவட்டத்திற்குச் செல்லும் பயணிகள் தமது உடமைகளுடன் கால்கடுக்க நீண்ட நேரம் பேருந்துகளுக்காக அவ்விடத்தில் காத்து நிற்பதாகவும் முதியவர்கள், சிறுவர்கள், மாற்றுவலுவுள்ளோர் இதனால் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த மாதம் நடைபெற்ற நகர சபை கூட்டத்தில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டபோதும் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுத்தல் ; சாவகச்சேரியில் பயிற்சிப் பட்டறை
சிறுவர், பெண்கள் தொடர்பான சட்டமும் சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுத்தலும் எனும் விடயம் தொடர்பாக நேற்று சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் பயிற்சிப் பட்டறை ஒன்று இடம்பெற்றது.
சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவானுமான திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரனின் பங்களிப்புடன் , வேல்ட்விசன் நிறுவனமும், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவும் இணைந்து இந்த பயிற்சிப் பட்டறையை ஏற்பாடு செய்திருந்தன.
இலங்கை சட்ட உதவி நிலைய சட்ட ஆலோசகர் திருமதி சஞ்சீவதி அபயக்கோன், களுத்துறை பொலிஸ் பயிற்சிக்கல்லூரி விரிவுரையாளர்ன முத்திகேவாலச்சந்திர, வேல்ட்விசன் செயற்றிட்ட இணைப்பாளர் சமன்கருணதிலக ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வளங்கினர்.
இந்த நிகழ்வில் யாழ். பிரதி பொலீஸ் மா அதிபர் பிரிவுக்குட்பட்ட பொலீஸ் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் தென்மராட்சி பிரதேச செயலக பெண்கள் சிறுவர் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ் - அனுபவமற்ற சாரதி - புரண்டது கொழும்பு பஸ் - சிறுவன் பலி !
மட்டுவில் கனகம்புளியடிக்கு அருகில் சற்று முன்
கொழும்பு சென்ற பேருந்து கவிழ்ந்ததில் சிறுவன் ஒருவன் அந்த இடத்திலேயே பரிதாபகரமான முறையி்ல் நசுங்கிப் பலியானான். பலா் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றனா். யதுசன் எனும் பெயரைக் கொண்ட NP7791 எனும் இலக்க பேரூந்தே இவ்வாறு கவிழ்ந்துள்ளது. குறித்த பேருந்து வழித்தட அனுமதிப் பத்திரம் இல்லாத நிலையில் களவான பாதையில் பயணத்தை மேற்கொண்டே விபத்துக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.
இன்று பெறுமதி மிக்க ஒரு இளம் சிறுவனின் உயிர், காசு ஆசை பிடித்த பேரூந்து உரிமையாளராலும் சாரதியாலும் பறிக்கப்பட்டுள்ளது. இனிமேலும் இவ்வாறான அநியாய இழப்புக்கள் ஏற்படாது இருப்பதற்கு பயணிகளாகிய நீங்களும் உறுதுணை புரியவது அவசியம். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் பயணிகளுக்கும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பயணிகளும் மிக முக்கியமான அறிவுறுத்தல் என்னவெனின் இவ்வாறான வழி அனுமதிப்பத்திரங்கள் இல்லாத பேரூந்துகளில் பயணம் செய்வதைத் தவிர்த்து உங்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் பயணம் செய்யப் போகும் பேருந்து வழி அனுமதிப்பத்திரம் உள்ளாதா என பரிசோதித்துக் கொள்ளுங்கள். வழி அனுமதிப்பத்திரங்கள் இல்லாத பேரூந்துகளைப் பற்றி பொலிசாருக்கு தெரியப்படுத்திக் கொள்ளுங்கள். அத்துடன் அவ்வாறு வழி அனுமதிப்பத்திரம் இல்லாத பேரூந்துகளுக்கு பயணிகளைச் சோ்க்கும் முகவா் நிலையங்களையும், பொலிசாருக்கு தெரியப்படுத்திக் கொள்ளுங்கள்.
புத்தூரில் தனியார் பேருந்து தடம்புரள்வு : இளைஞன் சாவு கொழும்பு சென்ற பேருந்து கவிழ்ந்ததில் சிறுவன் ஒருவன் அந்த இடத்திலேயே பரிதாபகரமான முறையி்ல் நசுங்கிப் பலியானான். பலா் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றனா். யதுசன் எனும் பெயரைக் கொண்ட NP7791 எனும் இலக்க பேரூந்தே இவ்வாறு கவிழ்ந்துள்ளது. குறித்த பேருந்து வழித்தட அனுமதிப் பத்திரம் இல்லாத நிலையில் களவான பாதையில் பயணத்தை மேற்கொண்டே விபத்துக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.
இன்று பெறுமதி மிக்க ஒரு இளம் சிறுவனின் உயிர், காசு ஆசை பிடித்த பேரூந்து உரிமையாளராலும் சாரதியாலும் பறிக்கப்பட்டுள்ளது. இனிமேலும் இவ்வாறான அநியாய இழப்புக்கள் ஏற்படாது இருப்பதற்கு பயணிகளாகிய நீங்களும் உறுதுணை புரியவது அவசியம். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் பயணிகளுக்கும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பயணிகளும் மிக முக்கியமான அறிவுறுத்தல் என்னவெனின் இவ்வாறான வழி அனுமதிப்பத்திரங்கள் இல்லாத பேரூந்துகளில் பயணம் செய்வதைத் தவிர்த்து உங்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் பயணம் செய்யப் போகும் பேருந்து வழி அனுமதிப்பத்திரம் உள்ளாதா என பரிசோதித்துக் கொள்ளுங்கள். வழி அனுமதிப்பத்திரங்கள் இல்லாத பேரூந்துகளைப் பற்றி பொலிசாருக்கு தெரியப்படுத்திக் கொள்ளுங்கள். அத்துடன் அவ்வாறு வழி அனுமதிப்பத்திரம் இல்லாத பேரூந்துகளுக்கு பயணிகளைச் சோ்க்கும் முகவா் நிலையங்களையும், பொலிசாருக்கு தெரியப்படுத்திக் கொள்ளுங்கள்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்து ஒன்று மட்டுவில் வண்ணாத்திப் பாலத்திற்கு அருகே மின்கம்பத்துடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் சாவாகச்சேரி மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று இரவு 7.50 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வழித்தட அனுமதி இல்லாத காரணத்தினால் ஏ9 வீதி வழியாகச் செல்லாது புத்தூர் வீதியூடாகச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
மேற்படி இவ்விபத்து தொடர்பில் தெரிய வருவது,
வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேரூந்து வண்ணாத்திப்பாலத்திற்கு அருகில் உள்ள வீரவாணி சந்தி வளைவில் திருப்ப முற்பட்டபோது முன்னால் உள்ள மின்கம்பத்துடன் மோதி தடம்புரண்டு அருகில் உள்ள பள்ளத்தில் வீழ்ந்தது.
இந்த விபத்தில் வவுனியா ரெலிக்கொம்மில் பணிபுரியம் மானிப்பாய் கட்டுடையை சேர்ந்த நாகராசா சதீஸ்குமார்
இந்த விபத்தில் காயமடைந்த எட்டுப் பேர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் இருவர்
மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 9/9/14
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=359693409509141993#sthash.vUGBgGs8.dpuf
மீசாலையில் கோரவிபத்து- ஒருவர் படுகாயம்
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=480243401106387602#sthash.EbsSOtfi.dpuf
கைதடிச் சந்தியில் கோர விபத்து ஒருவர் பலி; மற்றையவர் காயம்
(Virakesari 5.9.14)
யாழ். கைதடிச் சந்தியில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். இந்த விபத்தில் கைதடி எரிபொருள் நிலையத்தில் பணியாற்றுகின்ற கைதடி கிழக்கைச் சேர்ந்த இந்திரன் வாகீசன் (வயது 20) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கைதடிச் சந்தியில் நேற்று நண்பகல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹன்ரர் வாகனம் மீது வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்துள்ளனர். உடனடியாகவே இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் கைதடி எரிபொருள் நிலையத்தில் பணியாற்றுகின்ற கைதடி கிழக்கைச் சேர்ந்த இந்திரன் வாகீசன் (வயது 20) என்பவரே உயிரிழந்தார். நாவற்குழி கிழக்கைச் சேர்ந்த யோகராசா பிரசாந்த் (வயது 20) என்பவர் காயமடைந்தார். -
மிருகபலிக்கு எதிராக யாழில் போர்க்கொடி
யாழ்.தேவியை வரவேற்க நாவற்குழி பாலம் தயார்
தென்மராட்சியில் தற்கொலைகள் அதிகரிப்பு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்
பிரதேச சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை
இராணுவம் எனில் இலவசம் மக்களுக்கு மட்டும் கட்டணம்; வீடமைப்பு அதிகார சபையின் நடவடிக்கை குறித்து விசனம்
14 ஆண்டுகளால் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் காணி இருந்தபோது, அதற்குரிய கட்டணம் எதனையும் கோராத தேசிய வீடமைப்பு அதிகாரசபை, தற்போது அங்கு மக்கள் குடியமர முற்படும் போது மட்டும் கட்டணங்களைக் கோருகின்றது என்று விசனம் தெரிவிக்கிக்கப்படுகின்றது.
வரணி இடைக்குறிச்சியில் 10 வீட்டுத்திட்டத்துக்குரிய, தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் பொது மக்கள் வாழ்ந்து வந்தனர். 2000ஆம் ஆண்டு இடம் பெற்ற போர் நடவடிக்கையின் போது மேற்படி 10 வீட்டுத்திட்டத்துக்குரிய காணியில் இராணுவத்தினர் முகாம் அமைத்தனர். அதன்பின்னர் அந்தக் காணியில் நிரந்தரமாகத் தங்கியிருந்த இராணுவத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே குறித்த காணியை விட்டு வெளியேறியுள்ளனர்.
தற்போது அந்தக் காணியின் உரிமையாளர்கள் மேற்படி காணியில் குடியமர்வதற் குரிய நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு இந்திய வீட்டுத் திட்டமும் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த காணிக்குரியவர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையிடம் ஆரம்பத்தில் குறித்த காணியை வீட்டுத்திட்ட கடனுக்கு பெற்றிருந்தனர் என்றும், அதற்குரிய முழுமையான கடனை அவர்கள் கட்டவில்லை என்றும் அதனால் மீதிப் பணத்தைப் பெற்றுத் தருமாறு தேசிய வீடமைப்பு அதிகார சபை பிரதேச செயலகத்திடம் கோரியுள்ளது. இராணுவத்தினர் இருந்தபோது காணி தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காத தேசிய வீடமைப்பு அதிகாரசபை தற்போது மக்கள் மீளக்குடியமரவுள்ள நிலையில் மீதிப் பணத்தை கோரி வருகின்றனர் என்று பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் குறித்த மக்கள் இடம்பெயர்வால் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் அவர்களால் குறித்த தொகைப் பணத்தைச் செலுத்த முடியாத நிலையில் வீட்டுத் திட்டத்தை இழக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. - http://onlineuthayan.com/
மீசாலையில் விபத்து ; சம்பவ இடத்தில் ஒருவர் பலி
ஏ 9 வீதியில் மீசாலைப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீசாலை ஏ 9 வீதியில் இருவர் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி வேகக்கட்டுப்பாட்டை இழந்து சுவருடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருவர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் உடுவில் மேற்கு மானிப்பாயைச் சேர்ந்த தனநாயகம் தனப்பிரகாஸ் (வயது 25) என்பவரே உயிரிழந்தவராவார். சுன்னாகம் தெற்கு மானிப்பாயைச் சேர்ந்த சதாசிவம் சர்வானந்தன் (வயது 31), சாவகச்சேரி வடக்கு மீசாலையைச் சேர்ந்த யோகராசா ஆரோக்கியநாதன் (வயது 39) ஆகியோர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் - 1-8-14 Uthayan
மாட்டிறைச்சிக் கடைகளை திறக்க அனுமதி
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=446443281201418850#sthash.U2wIW2xY.dpuf
சாவகச்சேரி பகுதியில் தடி தண்டுகளுடன் நடமாடுவது யார்
சாவகச்சேரியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
சாவகச்சேரி மருதங்குளம் பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று அதிகாலை 3மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருவதுடன் இச்சம்பவத்தில் கூலி தொழிலாளியும் 3பிள்ளைகளின் தந்தையுமான ஏகாந்த ரூபன் பத்மநாபன்(வயது 45)என்பவரே தற்கொலை செய்து உயரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவது தூக்கிட்டு தற்கொலை செய்தவரின் மூத்த மகள் திருமணமாகி வெளிநாடு சென்றுள்ளார்.இதனால் மனவுளைச்சலுக்கு ஆளாகி அவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்து வீட்டுக்கு வெளியிலே அவர் உறங்குவது வழக்கம் அதே போல நேற்றும் குடிபோதையில் வந்து வெளியிலே உறங்கினார்.
காலை எழுந்து பார்க்கையிலே அவர் மரமொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இறந்தவரின் மனைவி குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=891603219512716595#sthash.H26t2Oiz.dpuf
மீசாலையின் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனம் முன்னால் சென்ற லான்மாஸ்ரர் வாகனத்துடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் லான்மாஸ்ரரின் சாரதி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பில் சாவகச்சேரி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைதடிச் சந்தியில் கோர விபத்து ஒருவர் பலி; மற்றையவர் காயம்
(Virakesari 5.9.14)
யாழ். கைதடிச் சந்தியில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். இந்த விபத்தில் கைதடி எரிபொருள் நிலையத்தில் பணியாற்றுகின்ற கைதடி கிழக்கைச் சேர்ந்த இந்திரன் வாகீசன் (வயது 20) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கைதடிச் சந்தியில் நேற்று நண்பகல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹன்ரர் வாகனம் மீது வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்துள்ளனர். உடனடியாகவே இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் கைதடி எரிபொருள் நிலையத்தில் பணியாற்றுகின்ற கைதடி கிழக்கைச் சேர்ந்த இந்திரன் வாகீசன் (வயது 20) என்பவரே உயிரிழந்தார். நாவற்குழி கிழக்கைச் சேர்ந்த யோகராசா பிரசாந்த் (வயது 20) என்பவர் காயமடைந்தார். -
மிருகபலிக்கு எதிராக யாழில் போர்க்கொடி
தென்மராட்சியிலுள்ள சைவ ஆலயங்களில் மிருகபலியிடல் வழிபாடு மீள ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த வழிபாட்டு முறையை நிறுத்துமாறு கோரி நாளை போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக தென்மராட்சி அறவழிப் போராட்டக்குழு அறிவித்துள்ளது.

சைவத் திருக்கோயில்களை உணவுக்கு இறைச்சி வெட்டும் கொலைக் களங்களாக அறிவித்திருக்கின்ற பிரதேச சபைகளின் செயல்களானவை தமிழ்ச் சைவச் சமூகத்தின் பண்பாட்டு வீழ்ச்சியை எடுத்துக் காட்டுகிறது என்றும் மேற்படி அமைப்பு தெரிவிதுள்ளது.
ஆலயங்களில் மிருக பலியிடல் வழிபாடு சைவ விழுமியங்களுக்கு எதிரானது என்று கூறியிருக்கும் மேற்படி அமைப்பு இதனை எதிர்த்து கைதடியில் நாளை காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக தென்மராட்சி அறவழிப் போராட்டக் குழு நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
எழுதுமட்டுவாள், மிருசுவில், வரணி, மந்துவில், மட்டுவில், நுணாவில், கைதடி கிழக்கு, கைதடி வடக்கு, கைதடி மேற்கு, ஆகிய பகுதிகளிலுள்ள சில சைவத் திருக்கோயில்களில் உயிர்ப்பலி கொடுக்கும் வழமையை மீட்கும் முயற்சிகளைக் கைவிடக் கோரி நாளைய தினம் அறவழிப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
அறவழிப் போராட்டக் குழு நிறுவுனர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் தலைமை தாங்கும் இந்த உண்ணா நோன்பிற்கு அறவழிப் போராட்டக் குழுச் செயலாளர் தங்கவேல், சாவகச்சேரிப் பிரதேசசபை உறுப்பினருமான ச. தங்கராசா ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
தென்மராட்சியில் களப்பிட்டி முனீசுவரன் கோயில், கிராஞ்சி அண்ணமார் கோயில் இயத்தை அண்ணமார் கோயில், சாமித்தறை அண்ணமார் கோயில் இடிகிடங்கு முனீசுவரன் கோயில், பொன்னாங்கூடல் வைரவர் கோயில் ஆகியனவற்றில் உயிர்ப்பலி கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடந்தேறின.
1981 இல் இலங்கையில் வழிபாட்டியங்களில் உயிர்ப்பலியிடக்கூடாதென்ற அரச ஆணை வந்தது. ஆனாலும் அந்த ஆணையை நீதிமன்றங்கள் ஏற்கவில்லை. இப்பொழுது உணவுக்கு இறைச்சிவெட்டும் கொலைக் களச் சட்டங்களும், உணவுத் தரச் சட்டங்களுமே வழிபாட்டிடங்களில் உயிர்ப்பலியை நீதிமன்றம் வழியாக ஓரளவு கட்டுப்படுத்துவன.
சைவத் திருக்கோயில்களை உணவுக்கு இறைச்சி வெட்டும் கொலைக் களங்களாகப் பிரதேச சபைகள் அறிவிக்கின்றன. தமிழ்ச் சைவச் சமூகத்தின் பண்பாட்டு வீழ்ச்சியை இந்த அறிவிப்பு எடுத்துக் காட்டுகிறது.
தடைச் சட்டம் கொண்டுவருமாறு கோரி தென்மராட்சியில் கையெழுத்தியக்கத்தைத் தொடருகிறோம். யாழ்ப்பாணத்தில் இதுவரை மூவாயிரம் பேர் இவ்விண்ணப்பத்தில் கையொப்பமிட்டுள்ளனர். வடக்கிலும் கிழக்கிலும் மலையகத்திலும் ஆதரவாளரின் 10 ஆயிரம் கையெழுத்துகளைத் திரட்டி அரசிடம் கொடுக்க உள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.30.8.2014
கொழும்பு -காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை ஒக்ரோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள
நிலையில் குடாநாட்டிலுள்ள பிரதான புகையிரத நிலையங்களின் புனரமைப்பு பணிகள்
துரித கதியில் இடம்பெற்று வருகின்றது.
அதன் ஒரு அம்சமாக
யாழ்ப்பாணத்தில் முக்கிய
புகையிரத நிலையங்களில்
ஒன்றான நாவற்குழிப்
புகையிரத நிலையத்தின்
தோற்றத்தையும்,
அதிலிருந்து சிறிது தூரம்
செல்லும் பொழுது
நாவற்குழி கடல்
எல்லையினை
ஊடறுத்துச் செல்லும்
பாலத்தின் நவீன
தோற்றத்துடனும் இது
அமைக்கப்பட்டுள்ளது.
http://onlineuthayan.com/
தென்மராட்சி,29.8.14
தென்மராட்சிப் பகுதியில் என்றுமில்லாதவாறுதற்கொலைகள் அதிகரித்துள்ள நிலையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதேச சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடும்பவறுமை, வேலையின்மை போன்ற காரணங்களினாலேயே இச் சம்பவ ங்கள் இடம்பெறுகின்றன எனவும் அவர் கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யுத்தம் நிறைவடைந்த பின்னர் யாழ்.குடாநாட்டு மக்களின் தேவைகள் அதி கரித்துக் காணப்படுகின்றன.ணங்களினாலேயே இச் சம்பவ ங்கள் இடம்பெறுகின்றன எனவும் அவர் கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யுத்தம் நிறைவடைந்த பின்னர் யாழ்.குடாநாட்டு மக்களின் தேவைகள் அதி கரித்துக் காணப்படுகின்றன.
குறிப்பாக கைத்தொலைபேசிப் பாவனை யும் அதன் பராமரிப்பும், பொருட்களின் கொள்வனவும் தேவைக்கு அதிகமாக மக்க ளால் விரும்பப்பட்டு வருகின்றன.
குறிப்பாக இவ்வாண்டில் மட்டும் இதுவரை 7 பேர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து ள்ளனர். இவ்வாறு தற்கொலை செய்தவர் கள் 12 வயது தொடக்கம் 21 வயது வரைக்குட்பட்ட ஆண்களாகவும் காணப்படுகின்ற னர். தொடர்ச்சியாக இப்பகுதிகளில் தற்கொ லைகள் இடம்பெற்று வருகின்றமை பிரதேச மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
எனவே தற்கொலைச் சம்பவங்களைத் தடுப்பதற்கு ஏதுவாக பொது அமைப்புக்கள் மற்றும் உளவள ஆற்றுகையாளர்கள், அதி காரிகள் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன் வரவேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராணுவம் எனில் இலவசம் மக்களுக்கு மட்டும் கட்டணம்; வீடமைப்பு அதிகார சபையின் நடவடிக்கை குறித்து விசனம்
14 ஆண்டுகளால் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் காணி இருந்தபோது, அதற்குரிய கட்டணம் எதனையும் கோராத தேசிய வீடமைப்பு அதிகாரசபை, தற்போது அங்கு மக்கள் குடியமர முற்படும் போது மட்டும் கட்டணங்களைக் கோருகின்றது என்று விசனம் தெரிவிக்கிக்கப்படுகின்றது.
வரணி இடைக்குறிச்சியில் 10 வீட்டுத்திட்டத்துக்குரிய, தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் பொது மக்கள் வாழ்ந்து வந்தனர். 2000ஆம் ஆண்டு இடம் பெற்ற போர் நடவடிக்கையின் போது மேற்படி 10 வீட்டுத்திட்டத்துக்குரிய காணியில் இராணுவத்தினர் முகாம் அமைத்தனர். அதன்பின்னர் அந்தக் காணியில் நிரந்தரமாகத் தங்கியிருந்த இராணுவத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே குறித்த காணியை விட்டு வெளியேறியுள்ளனர்.
தற்போது அந்தக் காணியின் உரிமையாளர்கள் மேற்படி காணியில் குடியமர்வதற் குரிய நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு இந்திய வீட்டுத் திட்டமும் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த காணிக்குரியவர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையிடம் ஆரம்பத்தில் குறித்த காணியை வீட்டுத்திட்ட கடனுக்கு பெற்றிருந்தனர் என்றும், அதற்குரிய முழுமையான கடனை அவர்கள் கட்டவில்லை என்றும் அதனால் மீதிப் பணத்தைப் பெற்றுத் தருமாறு தேசிய வீடமைப்பு அதிகார சபை பிரதேச செயலகத்திடம் கோரியுள்ளது. இராணுவத்தினர் இருந்தபோது காணி தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காத தேசிய வீடமைப்பு அதிகாரசபை தற்போது மக்கள் மீளக்குடியமரவுள்ள நிலையில் மீதிப் பணத்தை கோரி வருகின்றனர் என்று பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் குறித்த மக்கள் இடம்பெயர்வால் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் அவர்களால் குறித்த தொகைப் பணத்தைச் செலுத்த முடியாத நிலையில் வீட்டுத் திட்டத்தை இழக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. - http://onlineuthayan.com/
அடியாட்களை
வைத்தே
பார்த்தீபன் பழி
வாங்கப்பட்டார்;
கல்லுண்டாய்
கொலையில்
திடுக்கிடும்
தகவல்
யாழ்ப்பாணம் மந்துவில் பகுதியில் உள்ள நபர் ஒருவர் கல்லுண்டாய் வெளியில் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த யூலை 12 ஆம் திகதி மந்துவில் மேற்கு கொடிகாமம் பகுதியை சேர்ந்த நாகராசா பார்த்தீபன் என்பவர் இனந்தெரியாத நபர்களால் அசிட் வீசியும், வெட்டியும் , சித்திரவதை செய்தும் கொலை செய்யப்பட்டு கல்லுண்டாய் வெளியில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
அதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த மானிப்பாய் பொலிஸார் மந்துவில் பகுதியை சேர்ந்த தாய், மகன், உட்பட மானிப்பாயை சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தனது கணவரை கொன்றவரது குடும்பத்தினரை பழிவாங்கும் நோக்குடன் வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று அடியாட்களைக் கொண்டு குறித்த சம்பவத்தை மேற்கொண்டனர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
2010 ஆம் ஆண்டு இறந்தவரின் சகோதரனுக்கும் அயலில் உள்ள ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராற்றில் ஒருவர் உயிரிழந்தார். அதனையடுத்து குறித்த குடும்பத்தை பழிவாங்கும் நோக்குடன் பார்த்தீபன் அடியாட்கள் மூலம் கொலை செய்ய திட்டம் வகுக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்டார்.
இறந்தவரான பார்த்தீபன் சாவகச்சேரியில் மின்னிணைப்பு , ஒட்டுவேலை கடை ஒன்றினை வைத்துள்ளார். சம்பவ தினத்தன்று மட்டுவில் பகுதியில் வீடு ஒன்றில் மின்னிணைப்பு வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் அன்றிரவு 11 மணிக்கு வீட்டுக்காரர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளனர். பின்னர் அவருடன் எந்தவித தொடர்பையும் மேற்கொள்ளவில்லை.
எனினும் வேலை ஒன்றுக்கு வருமாறு அடியாட்களே தொலைபேசியில் அழைத்துள்ளனர். அவ்வாறு சென்றவரை அழைத்துச் சென்று சித்திரவதைகள் செய்து மறுநாள் காக்கை தீவை அண்மித்த பகுதியில் உள்ள வைரவர் ஆலயத்திற்கு அருகில் பார்த்தீபனின் உடல் மீட்கப்பட்டது.
குறித்த பகுதியில் இருந்து பியர் ரின், மிக்ஸர் பை , மோட்டார் சைக்கிள் ஆகியனவும் மீட்கப்பட்டது. சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஆரம்பக் கட்டவிசாரணைகளில் உண்மையினை ஒத்துக் கொண்டுள்ளனர்.
அத்துடன் கொலைக்கு பயன்படுத்திய கத்தி ஆணைக்கோட்டை பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. இவர்கள் அனைவரும் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
-

See more at: http://onlineuthayan.com/News_More.php?id=485193329014220133#sthash.0GuwxjOh.dpuf
தென்மராட்சி வீதியில் மயங்கிய மருத்துவ மாது மரணம்
வெளிக் கடமையை முடித்துக் கொண்டு ஆரம்ப
சுகாதார நிலையம் திரும்பிக் கொண்டிருந்த மருத்துவ மாது ஒருவர் வழியில் மயங்கி விழுந்து மரணமானார். இந்தச் சம்பவம் இன்று மட்டுவில் தெற்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ஸ்ரான்லின் நிஷாந்தினி (வயது -27) என்பவரே உயிரிழந்துள்ளார். இன்று ஒரு மணியளவில் தனது வெளிக் கடமையை முடித்துக் கொண்டு ஆரம்ப சுகாதார நிலையம் திரும்பிய அவர் அங்கு மயங்கி விழுந்தார் என்றும், உடனடியாக சவகச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டார் என்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே, வீதி விபத்தில் படுகாயமடைந்த யாழ்.அரசடி வீதி, கந்தர்மடத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் கோபிசன் (வயது-03) என்ற சிறுவன் மூன்று வயது சிறுவன் சிகிச்சை பயனின்றி நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தான்.
நேற்று முன்தினம் யாழ்.நகர் பிறவுண் வீதியில் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் தந்தை ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டியில் பின் ஆசனத்திலிருந்து பயணித்த போதே சிறுவன் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டான். இந்த நிலையில் சிறுவன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
(Jvpnews 13.8.14)
ஏ 9 வீதியில் மீசாலைப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீசாலை ஏ 9 வீதியில் இருவர் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி வேகக்கட்டுப்பாட்டை இழந்து சுவருடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து இருவர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் உடுவில் மேற்கு மானிப்பாயைச் சேர்ந்த தனநாயகம் தனப்பிரகாஸ் (வயது 25) என்பவரே உயிரிழந்தவராவார். சுன்னாகம் தெற்கு மானிப்பாயைச் சேர்ந்த சதாசிவம் சர்வானந்தன் (வயது 31), சாவகச்சேரி வடக்கு மீசாலையைச் சேர்ந்த யோகராசா ஆரோக்கியநாதன் (வயது 39) ஆகியோர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் - 1-8-14 Uthayan
மாட்டிறைச்சிக் கடைகளை திறக்க அனுமதி
யாழ்ப்பாணம், தென்மராட்சிப் பிரதேசத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த மாட்டிறைச்சிக் கடைகள் அனைத்தும் நாளை முதல் பொது சுகாதார பரிசோதகரின் தீவிர கண்காணிப்பின் கீழ் திறப்பதற்குஅனுமதி வழங்கியுள்ளதாக சாவகச்சேரி கால்நடை வைத்தியதிகாரி ரகுநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
தென்மராட்சிப் பிரதேசத்திலுள்ள மாடுகளுக்கு கடந்த ஜுன் மாதத் தொடக்கத்தில் கால்வாய் நோய்த் தாக்கம் பரவியமையினால் பிரதேசத்திலுள்ள மாட்டிறைச்சிக் கடைகளை மூடும்படி உத்தரவிடப்பட்டது.
கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் வரணி வரையான இடங்களிலும் எழுதுமட்டுவாள் ஏ – 9 வடக்கு குடமியன் நாவற்காடு எருவன் எழுதுமட்டுவாள் படித்த மகளிர் குடியேற்றத்திட்டம் வரணி உள்ளிட்ட இடங்களிலுள்ள பண்ணை மாடுகளுக்கே கால்வாய் நோய் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டது.
தொடர்ந்து கால்நடை வைத்தியதிகாரி பிரிவினால் கால்வாய் நோய்த் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தொற்று ஏற்பட்டுள்ள பிரதேசத்தினைச் சுற்றியுள்ள 15 கிலோமீற்றர் பகுதியிலுள்ள மாடுகளுக்கு முதற்கட்டமாக கால்வாய் நோய் தடுப்பூசி ஏற்றப்பட்டு தொடர்ந்து தொற்று ஏற்பட்ட பகுதிகளிலுள்ள மாடுகளுக்குத் தடுப்பூசி ஏற்றுவது என்ற ரீதியில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
தடுப்பூசி ஏற்றும் காலத்தில் மேற்படி இடங்களிலிருந்து மாடுகள் வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதும்
வெளியிடங்களிலிருந்து மாடுகள் மேய்ச்சலுக்காக இவ்விடங்களுக்குக் கொண்டு வருவதும் முற்றாகத் தடை செய்யப்பட்டிருந்தது.
இதனால் பிரதேசத்திலுள்ள மாட்டிறைச்சிக் கடைகள் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில் கால்வாய் நோய்த் தாக்கம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து மாட்டிறைச்சிக் கடைகள்
நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.
எனினும் அவ்வாறு திறக்கப்படும் மாட்டிறைச்சிக் கடைகள் பின்வரும் நிபந்தனைகளைப் பின்பற்றித் திறக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1. இறைச்சிக் கடைகளை நடத்துவோர் கால்வாய் நோய்ப் பிரதேசமென அடையாளம் காணப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் இறைச்சி வெட்டுவதற்கென மாடுகளை தற்காலிகமாகக் கொள்வனவு செய்ய முடியாது.
2. தென்மராட்சிப் பிரதேசத்தில் இறைச்சிக்காக கொள்வனவு செய்யப்படும் மாடுகள் அனைத்திற்கும் காதடையாளம் இடப்பட்டிருத்தல் அவசியமாகும்.
3. இறைச்சிக்காக கொள்வனவு செய்யப்படும் மாடுகள் அனைத்திற்கும் காதடையாள இலக்கம் இடப்பட்டு உரிமையாளரிடமிருந்து பெறப்படும் கடிதம் அந்தந்தப் பிரிவு கிராம அலுவலரினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்
மேற்கண்ட நிபந்தனைகளுடன் கொல்களங்களில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டுவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக கால்நடை வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
சாவகச்சேரி பகுதியில் தடி தண்டுகளுடன் நடமாடுவது யார்
சாவகச்சேரி டச் வீதியில் பகல் வேளைகளில் இனம் தெரியாத இளைஞர்கள் கொட்டன்களுடன் நடமாடுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரு தினங்களாக இனம்தெரியாத இளைஞர்கள் சிலர் தடி தண்டுகளுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடி வரும் நிலையில் அப்பகுதி பொதுமக்கள் சிலர் அவர்களிடம் யார் நீங்கள் என வினாவிய போது தாங்கள் பொலிஸார் என தெரிவித்துள்ளனர்.
சிவில் உடையில் இருந்த இவர்கள் மீது சந்தேகம் கொண்ட மக்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்த போது சிவில் உடையில் பொலிஸார் கடமையில் இல்லை என தெரிவித்தனர்.
இருப்பினும் பொலிஸாருக்கு தெரிவித்த சில நிமிடங்களில் குறித்த இளைஞர்கள் அவ்விடத்தை விட்டு சென்றுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 1.8.14 Uthayan
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் மது போதையில் அத்துமீறி உள்நுழைந்து கலக்கம் விளைவித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது :-
கச்சாய் பாலாவியை சேர்ந்த ஆறு இளைஞர்கள் நேற்று இரவு விஷம் அருந்திய நிலையில் நண்பன் ஒருவரை வைத்தியசாலைக்கு அனுமதிக்க வந்துள்ளனர்.
அண்மையில் வைத்தியசாலை வளாகத்திற்குள் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தை அடுத்து இரவு வேளைகளில் வைத்தியசாலை பிரதான கதவு பூட்டப்பட்டு நோயாளிகளுடன் ஒருவர் மாத்திரம் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நண்பனை அனுமதிக்க மதுபோதையில் வந்த இளைஞர்களை காவலாளி தடுத்து நிறுத்தியுள்ளார் அதனை தொடர்ந்து குறித்த இளைஞர்கள் வைத்தியசாலை பொலிஸார் மற்றும் காவலாளிகளுடன் தகாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியதுடன் தாக்குவதற்கு முற்பட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சாவகச்சேரி பொலிஸார் இரு இளைஞர்களை கைது செய்ததுடன் இவர்கள் இன்று சாவகச்சேரி நீதவான் நீதி மன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=405133268929561844#sthash.WchlHcrk.dpuf
10 ஆயிரம் ரூபாவிற்காக பெண்ணைக் கொலை செய்த கச்சாய் ரவுடி !
[ Jul 25, 2014 05:13:12 PM | வாசித்தோர் : 6040 Athirvu.com ]
பெண் ஒருவரிடம் கடன் பெற்ற கச்சாய்ப் பகுதியைச் சோ்ந்த ஒருவன் அக் கடனுக்காக அப் பெண்ணைக் தந்திரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் சாவகச்சேரிப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சேரி நுனாவில் பகுதியைச் சோ்ந்த சூசைதாஸ் சாந்தினி வயது 52 எனும் பெண் கச்சாய் அல்லாரையைச் சோ்ந்த எட்வின் சுஜித் என்பவனுக்கு 65 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்ததாகத் தெரியவருகின்றது. கொடுத்த கடனை செலுத்தத் தவறிய சுஜித்தை பல தடவைகள் கடனைக் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார் சாந்தினி.
இவரது தொல்லையால் கோபமடைந்த சுஜித் , நேற்று அப் பெண்ணிடம் இன்று உனக்கு மொத்தக் கடனில் 10 ஆயிரம் ரூபாவைத் தருவதாகத் தெரிவித்து அப் பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி ஆட்கள் இல்லாத இடம் ஒன்றில் வைத்து கொலை செய்யும் நோக்கில் தலை, மற்றும் உடல் பகுதிகளில் கடுமையாகத் தாக்கியுள்ளான். அதன் பின் அப பெண் இறந்து விட்டார் என நினைத்த அவன் மயங்கிய நிலையில் இருந்த குறித்த பெண்ணை, வீதி விபத்தில் வாகனத்தில் மோதி தெருவில் கிடந்த பெண் எனத் தெரிவித்து சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைத்து விட்டுச் சென்றுள்ளான்.
அங்கு வைத்தியா்கள் சிகிச்சை அளித்து நேற்று மாலை யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பியும் பலனில்லாது பெண் இறந்துள்ளார். இந்த பெண்ணிற்கு விபத்தால் காயங்கள் ஏற்படவில்லை என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்ததை அடுத்து பொலிசார் மேற் கொண்ட விசாரணைகளிலேயே சுஜித் இப் பெண்ணை கடனுக்காகக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக சாவகச்சேரிப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டபோது குறித்த நபா் சட்டத்தரணி மற்றும் நகரசபை உறுப்பினா் ஆகியோரூடாக பொலிசாரிடம் சரணடைந்துள்ள்ளார்.

ஆனைக்கோட்டை கொள்ளைக் காரன் பொலிசாரின் சகா….
கடந்த சில நாட்களுக்கு முன் ஆனைக்கோட்டைப் பகுதியில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களை ஓமந்தைப் பொலிஸ் சோதனைச் சாவடிப் பகுதியில் வைத்து மானிப்பாய் பொலிசார் மடக்கியிருந்தனா்.
ஆனைக் கோட்டைப் பகுதியில் வெள்ளை வானில் வந்து வீடு புகுந்து அங்கிருந்த பெண்களைக் கட்டிப் போட்டு கொள்ளையடித்த கும்பலின் தலைவனுக்கும் சாவகச்சேரிப் பொலிசாருக்கும் இடையில் நெருங்கிய தொடா்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் கைது செய்யப்பட்ட முக்கிய கொள்ளைக் குழுத்தலைவனான கச்சாயைச் சோ்ந்த புனனேஸ்வரன் ரஜீவன் என்பவன் சாவகச்சேரி பொலிசாருடன் மிகவும் நெருக்கமான தொடா்புடையவன் எனத் தெரியவருகின்றது. இவன் கறுப்பு நிற நிசான் வாகனத்தில் எந் நேரத்திலும் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்திற்குள் நுளையும் அளவிற்கு அங்குள்ள பொலிஸ் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடா்பு வைத்திருந்தவன் என அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.
இவனுக்கு வவுனியா, மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளதாகவும் தெரியவருகின்றது. இவ்வாறானவா்களுடன் பொலிசார் நட்பு கொள்வது வேலியே பயிரை மேய்வது போல் இருக்கும் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனா்.jvpnews.com 25.7.14
சாவகச்சேரி - பருத்தித்துறை வீதி சரசாலை பகுதியில் மோட்டார்சைக்கிளில் பயணித்த குடும்பப்பெண் தவறி வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மோட்டார்சைக்கிளை செலுத்திச் சென்றவரிடம் சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது குறித்த பெண் அணிந்திருந்த தலைக்கவசத்தின் கழுத்துப்பட்டியினை அணிய முற்பட்ட போது தவறி வீழ்ந்ததாக தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி சாந்தினி (வயது 50) என்பவரே கவலைக்கிடமான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணிற்கு - மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபருக்கும் இடையில் அண்மையில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பிரச்சனைகள் இருந்ததால் சாவில் சந்தேகம் இருப்பதாக குறித்த பெண்ணின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பிலான மரண விசாரணை அறிக்கை கிடைக்காததால் பெண்ணின் சாவு விபத்தில் நிகழ்ந்ததா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.24-7
இலங்கையில் குடும்பமொன்றின் சராசரி மாதாந்தச் செலவு 59001 ரூபா என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நகரத்தைச் சேர்ந்த 4 பேரைக் கொண்ட குடும்பமொன்றின் மாதாந்தச் செலவே இவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும் கிராம பகுதிகளில் சராசரி மதாந்தச் செலவு 37561 ரூபாவாகும் பெருந்தோட்ட பகுதிகளில் சராசரி மதாந்தச் செலவு 29799 ரூபாவாகும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=807433256725795361#sthash.JAWWHHSd.dpuf
சாவகச்சேரியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
சாவகச்சேரி மருதங்குளம் பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று அதிகாலை 3மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருவதுடன் இச்சம்பவத்தில் கூலி தொழிலாளியும் 3பிள்ளைகளின் தந்தையுமான ஏகாந்த ரூபன் பத்மநாபன்(வயது 45)என்பவரே தற்கொலை செய்து உயரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவது தூக்கிட்டு தற்கொலை செய்தவரின் மூத்த மகள் திருமணமாகி வெளிநாடு சென்றுள்ளார்.இதனால் மனவுளைச்சலுக்கு ஆளாகி அவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்து வீட்டுக்கு வெளியிலே அவர் உறங்குவது வழக்கம் அதே போல நேற்றும் குடிபோதையில் வந்து வெளியிலே உறங்கினார்.
காலை எழுந்து பார்க்கையிலே அவர் மரமொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இறந்தவரின் மனைவி குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=891603219512716595#sthash.H26t2Oiz.dpuf
யாழ்ப்பாணத்தில் நீதிமன்ற உத்தரவிற்கே சவால் விட்ட 5 பெண்கள் - தற்போது கம்பி எண்ணுகிறார்கள் !
[ Jul 10, 2014 02:49:58 PM ]
சாவகச்சேரி நீதிமன்றப் பதிவாளரை பணியை செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படும் இயற்றாலைப் பகுதியினைச் சேர்ந்த ஐந்து பெண்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி மாவட்ட நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் புதன்கிழமை (9) உத்தரவிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றத்தில் இயற்றாலைப் பகுதியிலுள்ள காணியொற்றிற்கு எல்லை அமைத்தல்; தொடர்பான வழக்கு ஜுன் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதற்கு நீதவான் மாவட்ட நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் குறித்த காணிக்கு எல்லை போடும்படி உத்தரவிட்டார்.
அதற்கிணங்க காணி உரிமையாளர், கடந்த ஜுன் 30 ஆம் திகதி மாவட்ட நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் எல்லை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டவேளை, அங்கு வந்த 5 பெண்கள் எல்லை அமைக்கவிடாமல் தடுத்ததுடன், எல்லை அமைக்கும் பகுதியில் படுத்துக்கொண்டனர்.
இந்நிலையில் மாவட்ட நீதிமன்ற பதிவாளர், மேற்படி பெண்களுக்கு எதிராக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 ஆம் திகதி முறைப்பாடு செய்தார். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் 5 பெண்களையும் கடந்த செவ்வாய்க்கிழமை (08) கைதுசெய்த கொடிகாமம் பொலிஸார், அவர்களை புதன்கிழமை (09) மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது, நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.
சாவகச்சேரியில் வாள்வெட்டு : நால்வருக்கு விளக்கமறியல்

சாவகச்சேரி வைத்தியசாலை வளாகம் மற்றும் கச்சாய் அம்மன் ஆலய பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தினர் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட நால்வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வைத்தியசாலை வளாகத்துக்குள் கடந்த 5 ஆம் திகதி முன்னிரவு புகுந்த கும்பல் ஒன்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் மூவரைக் கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் நேற்று இரவு சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போது மூவரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை கச்சாய் ஆலயத்தில் இடம்பெற்ற வாள் வெட்டுத் தொடர்பில் ஒருவரை கொடிகாமம் பொலிஸார் கைது செய்து சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் முற்படுத்திய போது. இவரையும் எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.