கைதடி கயிற்றசிட்டி முருகன் திருவிழா காட்சிகள் 2015
விடுதலை புலிகளின் இராணுவ சீருடையுடன் இருவர் கைது!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூன் 2015, 04:59.41 PM Tamilwin ]
தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ சீருடையை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கைதடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
புதுக்குடியிருப்பில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் தனது சிறியதாயின் வீட்டில் இந்தச் சீருடைகளை பதுக்கி வைத்திருந்தார் என்றும், அவர் அந்த சீருடைகளை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவந்து அதை வேறு சில நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தினார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டில் கைதடியைச் சேர்ந்த மற்றொருவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினால் கைதுசெய்யப்பட்டார். இவர்களிடமிருந்து இரண்டு சீருடைகள், 3 தொப்பிகள், 2 ஜக்கெட்டுக்கள் என்பனவும் மீட்கப்பட்டன.
விடுதலைப் புலிகளின் சீருடையுடன் புகைப்படம் எடுத்து வெளிநாடுகளுக்கு இளைஞர்களை அனுப்பும் முகவர் வேலையைச் செய்து வரும் தொழிலை இவர்களில் ஒருவர் செய்துவருகிறார் முதற்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தைச் சேர்ந்த மனோகரன் மயூரன், கைதடி மேற்கைச் சேர்ந்த வாரித்தம்பி பரத்குமார் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கைதடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கைதடி கயிற்றசிட்டி முருகன் திருவிழா காட்சிகள் 2015
விடுதலை புலிகளின் இராணுவ சீருடையுடன் இருவர் கைது!
தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ சீருடையை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கைதடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் தனது சிறியதாயின் வீட்டில் இந்தச் சீருடைகளை பதுக்கி வைத்திருந்தார் என்றும், அவர் அந்த சீருடைகளை யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவந்து அதை வேறு சில நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தினார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டில் கைதடியைச் சேர்ந்த மற்றொருவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினால் கைதுசெய்யப்பட்டார். இவர்களிடமிருந்து இரண்டு சீருடைகள், 3 தொப்பிகள், 2 ஜக்கெட்டுக்கள் என்பனவும் மீட்கப்பட்டன.
விடுதலைப் புலிகளின் சீருடையுடன் புகைப்படம் எடுத்து வெளிநாடுகளுக்கு இளைஞர்களை அனுப்பும் முகவர் வேலையைச் செய்து வரும் தொழிலை இவர்களில் ஒருவர் செய்துவருகிறார் முதற்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தைச் சேர்ந்த மனோகரன் மயூரன், கைதடி மேற்கைச் சேர்ந்த வாரித்தம்பி பரத்குமார் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கைதடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
ரவிராஜின் மனைவியை அரசியலுக்கு…..
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்சின் மனைவி களமிறக்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில தரப்புக்கள் வதந்திகளை கட்டவிழ்த்து விடத்தொடங்கியுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் சார்பில் தென்மராட்சியை பிரதிநிதுவப்படுத்தி அவர் தேர்தலில் போட்டியிட வைக்கப்படவுள்ளது.
இது சம்மந்தமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் ரவிராஜ்சின் மனைவியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளமை என்ற காரணத்தினாலும், இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பெண் உறுப்பினர்கள் எவரும் இல்லாத காரணத்தினாலும் ரவிராஜ்சின் மனைவி தேர்தலில் போட்டியிட வைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் தென்மராட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அருந்தவபாலன் களமிறங்க காத்திருக்கின்றார்.
அவரது வளர்ச்சி எதிர்வரும் காலங்களினில் தனக்கு பின்னடைவை தருமென சயந்தன் கருதியே இத்தகைய புரளிகளை அவிழ்த்து விட்டுள்ள போதும் இது வரை ரவிராஜின் மனைவி தனது சம்மதத்தினை தெரிவித்திருக்கவில்லையென தெரியவருகின்றது.முன்னாள் எம்.பி ரவிராஜ்கு சிலை
யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,சட்டத்தரணியுமான ரவிராஜ் என்பவருக்கு அவரது ஆதரவாளர்களால் சிலை ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
அதன்படி இன்றைய தினம் சாவகச்சேரியில் 7 அடி உயரமுடைய சிலை ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கலந்து கொண்டு சிலைக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
மேலும் நிகழ்விற்கு கல்வி அமைச்சர் குருகுலராஜா,வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சயந்தன், சிவாஜிலிங்கம் மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
தென்மராட்சியில் பாடசாலை மாணவர்களை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்
[ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 04:13.49 AM tamilwin ]
குறித்த பாடசாலையில் தரம் 5 இல் கல்வி பயிலும் சிறுமிகள் மூவரையும், சிறுவர்கள் இருவரையுமே குறித்த ஆசிரியர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குறித்த மாணவர்களின் பெற்றோர்களால் கொடிகாமம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெற்றோர்களின் முறைப்பாட்டையடுத்து, குறித்த ஆசிரியரைக் கைது செய்த கொடிகாமம் பொலிஸார் சந்தேக நபரை நேற்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.
அதன்போது குறித்த ஆசிரியரை எதிர்வரும் ஜுலை மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சாவகச்சேரி மீசாலையில் தனிமையில் பெண் – கட்டிலுக்கு கீழ் இளைஞன் – நடந்தது என்ன?
கொடிகாமம், மீசாலை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து கட்டிலுக்கு கீழ் ஒளிந்திருந்த 23 வயதுடைய இளைஞனை, எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை
ஞாயிற்றுக்கிழமை (21) உத்தரவிட்டார். மாடி வீடான மேற்படி வீட்டில் வீட்டிலுள்ளவர்கள் கொழும்புக்குச் சென்றமையால் பெண் ஒருவர் தனிமையில் இருந்துள்ளார். சனிக்கிழமை (20) இரவு வீட்டுக்கு அருகில் ஒருவர் நடமாடியதுடன் நாய் கடுமையாக குரைப்பதை அவதானித்த பெண், கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
வீட்டுக்குச் சென்ற பொலிஸார் வீட்டுக்குள் கட்டிலொன்றுக்கு கீழ் பதுங்கியிருந்த 23 வயதுடைய இளைஞனைக் கைது செய்ததுடன், அவரிடமிருந்து குறடு, கத்தி உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட இளைஞன் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
சிங்களப் பொலிசாரின் மண்டையை உடைத்த அந்த 12 தமிழ் பெண்கள் இவர்களா ?
[ Jun 21, 2015 02:45:26 PM | athirvu.com ]
யாழ்.கொடிகாம பொலிசார் மீது தாக்குதல் மேற்கொண்டார்கள் எனும் சந்தேகத்தில் 12 பெண்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அது தொடர்பில் தெரியவருவதாவது,
கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தியும் விற்பனையும் இடம்பெற்று வருவதாக தமக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கொடிகாம் பொலிசார் தெரிவிக்கின்றனர். அந்த தகவலின் பிரகாரம் அப்பகுதிக்கு சென்ற தாம் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஒருவரை கைது செய்ததாகவும், கைது செய்த நபரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல முற்பட்ட வேளை திடீர் என பெண்கள் கூட்டம் ஒன்று கூடி கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல விடாது தடுத்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அவ்வேளை திடீர் என தம்மீது (பொலிஸ் ) தாக்குதல் மேற்கொண்டதுடன் கல் வீச்சு தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது பொலிசார் தெரிவித்துள்ளனர். அத் தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பொலிசார் காயமடைந்தனர். காயமடைந்த இரு பொலிசாரும் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பொலிசார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட தொடங்க பொலிசாரால் மேலதிக பொலிசார் வரவழைக்கப்பட்டு தாக்குதல் மேற்கொண்டார்கள் எனும் சந்தேகத்தில் கசிப்பு உற்பத்தி செய்தார் எனும் நபர் உட்பட 17 பேரை கைது செய்தனர். அதில் 12 பேர் பெண்கள் ஆவார்கள்.
கைது செய்யப்பட்ட அனைவரும் கடந்த வெள்ளிக்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் பொலிசாரால் முற்படுத்தப்பட்டனர். அவர்கள அனைவரையும் எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதிபதி செல்லையா கணபதிப்பிள்ளை உத்தரவு இட்டுள்ளார்.
காலாவதியான பொருள்கள் விற்பனை தொடர்பில் மூவர் கைது
சாவகச்சேரி பகுதியில் காலாவதியான பொருள்களை விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக நூகர்வோர் அதிகார சபையின் யாழ்மாவட்ட இணைப்பதிகாரி வசந்தசேகரன் தெரிவித்துள்ளார்.
மென் பாணம், பொதி செய்யப்பட்ட தேயிலை, வாசனைத்திரவியம் போன்ற பொருட்களை அவற்றின் பாவனை காலம் முடிந்த பின்னரும் குறித்த வர்த்தகர்கள் விற்பனை செய்துள்ளனர்.
குறித்த விற்பனையாளர்களுக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இரு வர்த்கர்களுக்கும் தலா 9 ஆயிரம் ரூபா வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றய நபர் மன்றுக்கு சமூகமளிக்காத நிலையில் அவருக்கான வழக்கு திகதி பிற்போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் பொருள்களின் தரம், பாவனைத் திகதி என்பவற்றை அவதானித்து கொள்வனவு செய்யுமாறு நூகர்வோர் அதிகார சபையின் யாழ் மாவட்ட இணைப்பதிகாரி வசந்தசேகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
1000 ரூபாயுடன் சாவகச்சேரி பாடசாலையில் நடந்த அசத்தல்.
சாவகச்சேரியில் வசிக்கும் பாடசாலை மாணவி ஆயிரம் ரூபா கொடுத்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக வந்துள்ளார். இச் சுவாரசிய சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவி கல்வி கற்றும் பாடசாலையில் மாணவி படிக்கும் வகுப்பில் மாணவர்களின் பேச்சுத் திறனை வளர்ப்பதற்காக அவர்களை அரசியல்வாதிகளைப் போல் பேசுவதற்கு ஆசிரியர் ஆயத்தப்படுத்தி வருமாறு தெரிவித்துள்ளார்.
இம் மாணவர்களின் பேச்சை கேட்டு மாணவர்களே வாக்குப் போட்டு சிறந்த பேச்சாளர் யார் என்பதை தெரிவு செய்யலாம் என்பது விதிமுறையாகும்.
அந்த வகுப்பு மாணவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுக்கான வசனங்களை எழுத்தித் தருமாறு கூறி அவற்றைப் பெற்று பாடமாக்கி வந்துள்ளனர்.
அவ் வகுப்பில் இருந்த ஒரு மாணவியின் தந்தை ஒரு பிரபல அரசியல்வாதியாவார். கடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலிலும் அவரது ஒலி வெளிவந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இம் மாணவி தனது தந்தையிடம் பேச்சுக்கான வசனங்களை எழுதித் தருமாறு தொடர்ந்து தொல்லைப்படுத்தி வந்துள்ளார். அவ் அரசியல்வாதியும் தருவதாகத் தெரிவித்து காலத்தைக் கடத்தி வந்ததாகத் தெரியவருகின்றது.
இந் நிலையில் பேச்சுப் போட்டி அடுத்த நாள் உள்ள நிலையில் தந்தையிடம் வந்து மாணவி வசனம் எழுத்தித் தரவில்லை என அழுதுள்ளார்.
உடனே தந்தை குறித்த மாணவிக்கு ஆயிரம் ரூபா கொடுத்து வாக்குப் போடும் உனது நண்பர்களுக்கு விரும்பிய சொக்கலேட் அயிட்டங்களை வாங்கிக் கொடுத்து வாக்கை உனக்குப் போடுமாறு கேள் எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்தநாள் பேச்சுப் போட்டியில் மாணவி சாதாரணமாகப் பேசிய போதும் போட்டியில் மாணவியை வெளிவிவகார அமைச்சராக அந்த வகுப்பு மாணவர்கள் தேர்வு செய்திருந்தனர்.
JVPNEWS
சாவகச்சேரியில் பொது சுகாதார பரிசோதகர் குழு முற்றுகை |
சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர் குழுவினர் நேற்று உணவு கையாளும் நிலையங்களின் மீது தீடீர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
கொடிகாமம் மற்றும் கைதடி பிரதேசங்களிலுள்ள உணவுகையாளும் நிலையங்களிளேயே நேற்றுப் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.
இப் பரிசோதனையின் போது குறைபாடுகள் காணப்பட்ட நிலையங்களை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு எச்சரித்ததுடன் மேலும் உணவு கையாளும் நிலையமொன்றில் காணப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை அதனை தற்காலிகமாக மூடுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்ட உலக உணவுப் பாதுகாப்பு தினத்தையொட்டிய உணவு பாதுகாப்பு செயற்பாடுகளில் ஒன்றாகவே இப் பரிசோதனைகள் நடாத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.26.4.15
|
சாவகச்சேரி நகரில் உணவகத்துக்குள் புகுந்து வாள்வெட்டு!
உணவுஉண்பவர்கள் போன்று சென்ற சிலர் மாற்றுத்திறனாளி ஒருவர் உட்பட இரு பணியாளர்களை கடுமையாகத் தாக்கியதுடன் வாளால் வெட்டியும் காயப்படுத்தினர். யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகரில் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் முல்லைத்தீவின்
மல்லாவியைச் சேர்ந்த மருது லோஜன் (வயது 28), மாற்றுத்திறனாளியான ரஞ்சித் (வயது 37) ஆகியோர் காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
முன்பகை காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரைக் கைது செய்துள்ளனர். மேலும் இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களையும் தேடிவருகின்றனர்.
வரணியில் கைது செய்யப்பட்ட நால்வரும் விடுவிக்கப்பட்டனர் |
கொடிகாமம் பொலிஸாரால் கடந்த மாதம் 23ஆம் திகதி இரவு வேளை யில் வரணிப் பிரதேசத்தில் சந்தே கத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 4பேரும் கடந்த செவ்வாய்க் கிழமை விடுவிக்கப்பட்டனர்.
குறித்த நால்வரும் சாவகச்சேரி நீதிமன்றில் பாரப்படுத்தப் பட்ட சமயம் நீதி மன்றின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப் பட்டிருந்தனர்.
குறித்த நபர்களுக்கும் வர ணிப் பிரதேசத்தில் இடம்பெற்ற பணம், நகைக் களவு போன்ற சம்பவம் தொடர்பில் எதுவித தொடர் பும் இல்லை என்று நீதிமன்றம் கரு தியமையால் இவர்கள் விடுவிக் கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் பாதுகாப்பில் இருந்த குறித்த நபர்கள் பயணித்த வாகனத்தையும் உரிமையாளரிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.
கடந்த மாதம் 22 ஆம் திகதி வரணிப் பிரதேசத்தில் இடம் பெற்ற பணம், நகைகள் என்பன இரவு வேளை யில் இனம் தெரியாத நபர்களால் கத்தி முனையில் வைத்து கொள்ளை யிடப்பட்ட சம்பவத்தை அடுத்து மறுநாள் குறித்த இரவு வேளை அந்தப் பகுதியால் பயணித்த சம யம் பிரதேச விழிப்புக் குழுவின ரால் பிடிக்கப்பட்டு அவர்கள் பய ணித்த வாகனத்துடன் கொடிகாமம் பொலிஸாரிடம் கையளிக் கப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.
13.4.15
|
யாழில் "ஆதவன்" வாள்வெட்டுக் குழுவினர் பொலிசாரிடம் வசமாக சிக்கினர் !
[ Apr 09, 2015 12:00:00 AM ]
கைதடியில் ஒருவரைக் கடத்தி ஒரு நாள் முழுவதும் தாக்கி கடத்தியவரிடம் இருந்து பெற்ற தகவல் மூலம் வடமராட்சியிலும் ஒருவரைக் கடத்தி தாக்கிய குற்றச்சாட்டில் பேரில் 6 பேரை சாவகச்சேரிப் பொலிசார் வாள்களுடன் கைது செய்துள்ளனர்.இவர்களின் மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர்கள் சாவகச்சேரிப் பகுதியில் இயங்கும் ஆதவன் என்னும் ஒருவனின் தலைமையிலான குழு என்றும் இக் குழுவினர் அப்பகுதியில் பல நாட்டாமை வேலைகளில் ஈடுபடுபவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இவர்களுடன் தொடர்புடைய மேலும் 7 பேரைப் பொலிசார் தேடி வருவதாகத் தெரியவருகின்றது.
கைதடியில் ஒருவரைக் கடத்தி ஒரு நாள் முழுவதும் தாக்கி கடத்தியவரிடம் இருந்து பெற்ற தகவல் மூலம் வடமராட்சியிலும் ஒருவரைக் கடத்தி தாக்கிய குற்றச்சாட்டில் பேரில் 6 பேரை சாவகச்சேரிப் பொலிசார் வாள்களுடன் கைது செய்துள்ளனர்.இவர்களின் மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர்கள் சாவகச்சேரிப் பகுதியில் இயங்கும் ஆதவன் என்னும் ஒருவனின் தலைமையிலான குழு என்றும் இக் குழுவினர் அப்பகுதியில் பல நாட்டாமை வேலைகளில் ஈடுபடுபவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இவர்களுடன் தொடர்புடைய மேலும் 7 பேரைப் பொலிசார் தேடி வருவதாகத் தெரியவருகின்றது.
EPDP – TVக்கு மூடு விழா..? “CV” யின் அடுத்த அதிரடி …
யாழ். நகரப் பகுதியில் நடைபெறும் விளம்பர ஒலிபரப்பு சேவையான ’வணிகலயம்’ என்னும் பெயருடைய டான்ரீவி பணியாளரான ஜெயச்சந்திரனால் நடாத்தப்படும் ஒலிபரப்புச சேவை உரிய முறையில் கேள்வி அறிவித்தல் விடப்படாது நடைபெறுவதாகவும் இதற்கு வடமாகாண சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதி கோரிக்கை முன்வைத்தார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்றது.
யாழ். மாநகர சபையின் கீழுள்ள இந்த விளம்பர ஒலிபரப்பு சேவையானது, உரிய முறையில் கேள்வி அறிவித்தல் விடாமல் சீரான முறையில் நடைபெறவில்லையெனவும் அதற்கு சபை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லையென முதலமைச்சரிடம் உறுப்பினர் கேள்வி எழுப்பினர்.
3.4.15