சாவகச்சேரியில் 22கிலோ எடையுடன் வெங்கடாந்தி பாம்பு! அச்சத்தில் மக்கள் [15 டிசெம்பர் 2015 ] யாழ்ப்பாணம்- சாவகச்சேரி, தட்டான்குளம் பிரதேசத்தில் வெங்கடாந்தி இன பாம்பு ஒன்றை மக்கள் பிடித்துள்ளனர். இன்று காலை 7.00 மணியளவில் இந்த பாம்பைப் பிடித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். 22கிலோ 300 கிராம் எடை கொண்ட இந்தப் பாம்பு 8 அடி நீளமானதாகப் காணப்படுகிறது. காடுகளில் வசிக்கும் வென்கடாந்தி இன பாம்புகள் விலங்குகளை இரையாக உட்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது, இதனால் அந்த பிரதேச மக்கள் பீதியோடு காணப்படுகின்றனர்.
வரணியில் சித்திரவதை இடம்பெறவில்லை : மறுக்கிறார் இராணுவப் பேச்சாளர்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளதுபோல் சித்திரவதைகள் எதுவும் இடம்பெறவில்லை என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். தற்போதும் கூட இராணுவம் மனிதாபிமான அடிப்படையிலேயே செயற்படுவதாகவும் இது பொய்யான குற்றச்சாட்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் தின நிகழ்வுகள்
சாவகச்சேரி லயன்ஸ் கழகத்தின் ஐக்கிய நாடுகள் தின நிகழ்வுகள் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கைதடி முத்துக் குமாரசாமி மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறும்.
கழகத் தலைவர் லயன் பு.டினேஸ்குமார் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் ஐ.நா.தினம் தொடர்பான சிறப்புச் சொற்பொழிவை ஓய்வுநிலை பிரதிக் கல் விப்பணிப்பாளர் பி.முத்துலிங்கம் ஆற்ற வுள்ளார். ஐ.நா.தினம் தொடர்பாக தென்மராட்சி கல்வி வலயப் பாடசாலைகளின் மாணவர்களிடையே நடத்தப்பட்ட சித்திரம், பேச்சு, பொது அறிவு ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படுமென கழகச் செயலாளர் அறிவித்துள்ளார்.
கைதடி சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் அதிகரிப்பு
26.10.15
கைதடி சித்த மருத்துவ போதனா வைத்தியசாலையில் இந்த வருடம் கடந்த 10 மாத காலப்பகுதியில் 40 ஆயிரத்து 830 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். விடுதி வசதியுடன் செயற்படும் வைத்திய சாலையில் கடந்த 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வெளி நோயாளர் பிரிவில் 40 ஆயிரம் நோயாளர்களும் விடுதிகளில் தங்கியிருந்து 830 நோயாளர்க ளும் சிகிச்சைபெற்றுள்ளனர்.
இந்த வைத்திய முறையில் சிகிச்சை பெறவேண்டும் என்ற ஆர்வத்தோடு புலம்பெயர் உறவுகளும் வெளிநாட்டவரும் சிகிச்சை பெற வரு கின்றனர். நாளாந்தம் சிகிச்சை பெற வருவோர் தொகை அதிகரித்து வருகின்றது. என வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி திருமதி.பிறேமா சிவசண்முகராசா தெரிவித்தார். கைதடி சித்த போதனா வைத்தியசாலை ஏ-9வீதியில் கைதடிச்சந்திக்கு அருகில் அமைந்துள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையின் போதனா வைத்தியசாலையாகும். மத்திய சுதேச வைத்திய அமைச்சின் கீழ் செயற்படுகின்றது. தற்போது அங்கு சேவை பெறவரும் நோயாளர் எண்ணிக்கை குறித்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரி வித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :
வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்கு புலம்பெயர் உறவுகள் மற்றும் வெளிநாட்டில் வசிப்போரும் வருகை தருகின்றனர். அத்துடன் நீர் கொழும்பு, சிலாபம், திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து வருகை தந்து சிகிச்சை பெறுகின்றனர்.
கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறைத்தண்டனை
போதைப் பொருளான கஞ்சா வைத்திருந்த ஹொரவப்பொத்தானை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2011 ஆம் ஆண்டு சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதி சந்தியில் ஒரு தொகுதி கஞ்சா வைத்திருந்த வேளையில் நபரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு கடந்த 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, குறித்த நபருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 23.11.15
யாழ். மட்டுவில் கமலாசனி வித்தியாலய மாணவர்கள் மூவர் அண்மையில் வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். ஆ.கஜவேந்தன் (171), சி.விஷ்னுஜன் (165), கௌ.அபிநயா (159) ஆகியோர் ஆசிரியை திருமதி சறோஜினிதேவி பிரதீபனின் வழிகாட்டலில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளியை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும் க.சஞ்ஜெய் (150), ச.வினயா (146), க.சயந்திகா (145), ச.டிலைக்சனா (144), சு.மிதுலா (138), வ.துஷிகன் (137), சு.லதீசன் (128), ம.கம்சவி (127), வை.செல்வி (122), ஆ.அபிஷன் (120), த.போஜினி, அ.நிலக்சிகா (106), யோ.சுதர்சினி (103), ரா.நர்மதன் (103) ஆகியோர் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.களவெடுத்த இலங்கை இராணுவத்தினரை விடுவிக்க முயற்சி
http://www.bbc.com/tamil/sri_lanka/2015/10/151017_slarmy
யாழ்ப்பாணம் கைதடிபகுதியில்ஏ9 நெடுஞ்சாலையில்வைக்கப்பட்டுள்ள பெரிய வீதி விளம்பரப் பலகைகளின் இரும்புக் கம்பிகளையும் இரும்புச் சட்டங்களையும் நள்ளிரவு நேரத்தில் களவாக வெட்டி எடுத்துச் செல்ல முற்பட்டபோது, சாவகச்சேரி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள 7 இராணுவத்தினரை மீட்டுச் செல்வதற்கு இராணுவ அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் அண்மைய தினங்களாக நெடுஞ்சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மர்மமான முறையில் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பதை அவதானித்த சாவகச்சேரி காவல்துறையினர், வெள்ளிக்கிழமை இரவு அந்தப் பகுதியில் இரகசியமாகப் பதுங்கியிருந்து நோட்டம்விட்டபோது, வாகனம் ஒன்றில் வந்த ஏழு இராணுவத்தினர் விளம்பரப் பலகையொன்றின் இரும்புகள் இரும்புச் சட்டங்களை அறுக்க முற்பட்டபோது கையும் களவுமாக அவர்களைக் காவல்துறையினர் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
இவர்களை விசாரணை செய்து இவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தபோதே, இவர்கள் இராணுவத்தினர் என்ற விடயம் காவல்துறையினருக்குத் தெரியவந்ததாக காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, இவர்கள் பற்றிய தகவல் அறிந்து அது தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக இராணுவக் காவல்துறையினரும் சாவகச்சேரி காவல் நிலையத்திற்குச் சென்றனர்.
கைதான இராணுவத்தினரை மீட்டுச் செல்வதற்காக இராணுவ அதிகாரிகள் தமது மெய்ப்பாதுகாப்புக்கான இராணுவத்தினருடன் சாவகச்சேரி காவல் நிலையத்தைச் சூழ்ந்திருப்பதாகத் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட இராணுவத்தினரை, நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைவாகவே கையாள வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் அனுமதியின்றி அவர்களை இராணுவ அதிகாரிகளிடம் கையளிக்க முடியாது என்றும் காவல்துறையினர் இராணுவ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட இராணுவத்தினரை சாவகச்சேரி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
நுளம்பு பெருகுவதற்கு ஏதுவான நிலையில் குடியிருப்புகளை வைத்திருந்த மூன்று பேருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் தலா 3 ஆயிரம் ரூபா வீதம் அபராதம் விதிக்கப்படடுள்ளது. கடந்த வாரம் சுகாதாரப் பகுதியினருடன் இணைந்து டெங்குக் கட்டுப்பாட்டு வாரத்தில்,குடியிருப்புக்கள் மற்றும் காணிகள் தரிசிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார்,நுளம்புப் பெருக்கத்துக்கு ஏதுவான நிலையில் காணிகள் மற்றும் குடியிருப்புக்களை வைத்திருந்த மூவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்தனர். வழக்குகளைத் தனித்தனியாக விசாரித்த நீதிவான் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து தலா 3 ஆயிரம் ரூபா வீதம் அபராதம் விதித்தார். இதே வேளை மதுபோதையில் தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் ஒருவருக்கு 8ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றவர் பொலிஸாரால் கைது
சட்ட விரோதமாக மின்சாரம் பெற்றவர் ரோந்து சென்ற பொலிஸாரிடம் வசமாக மாட்டிக் கொண்டார்.இந்தச் சம்பவம் வரணி மாசேரியில் இடம்பெற்றது. குறித்த நபருக்கு எதிராக கொடிகாமம் பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றில் கடந்த 25 ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிவான் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆள்பிணையில் செல்ல அனுமதித்து, வழக்கை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
Uthayan 29.9,15
மோகனதாஸ் விளையாட்டுக்கழகம் மின்னொளியில் நடாத்திய மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டிகள் எதிர்வரும் 23.09.2015 புதன் பி.ப 7.00 மணியளவில்கழக மைதானத்தில் இடம்பெறும்.
இப்போட்டியில் மோதும் அணிகள்
ஏ பிரிவு
ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகம்
எதிர்
இளவாலை மத்திய விளையாட்டுக்கழகமும்
பி பிரிவு
அச்சுவேலி தோப்பு வாலிபர் விளையாட்டுக்கழகம்
எதிர்
நாயன்மார்கட்டு பாரதி விளையாட்டுக்கழகம்
-----------------------------------------------------------------------------------------
சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மீட்பு
20.09.2015
யாழ்.சாவகச்சேரி நகரில் கைவிடப்பட்ட கிணற்றிலிருந்து நேற்று முன்தினம் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மற்றும் கைக்குண்டுகள் மீட்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் கிணற்றிலிருந்து மேலும் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சாவகச்சேரி பொலிஸார் குறித்த கிணற்றை சோதனையிட்ட நிலையில் கிணற்றிலிருந்து 3 ஆர்.பி.ஜி குண்டுகள் மற்றும் அவற்றுக்கான புறப்பாளர்கள், பாதுகாக்கப்பட்ட பெட்டியில் 1250 தோட்டாக்கள், உதிரியாக ஒரு தொகை தோட்டாக்கள், 7 கைக்குண்டுகள், படையினர் அணியும் ஹெல்மட் ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் - மீசாலை – புத்தூர் சந்தியில் வாகன விபத்து
இருவர் உயிரிழப்பு யாழ்ப்பாணம் - மீசாலை – புத்தூர் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் ஒன்று பாதைவிட்டு விலகி மதிலுடன் மோதியதாலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
18.8.2015
Virakesari on Wed, 08/05/2015 - 09:33
கொடிகாமம் பிரதேசத்தில் 16 வயது சிறுமியுடன் சேர்ந்து வாழ்ந்த அதே இடத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடிகாமம் கச்சாய் வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனும், 16 வயதுடைய சிறுமியும் காணாமற் போனதையடுத்து சிறுமியின் பெற்றோர்களால் கொடிகாமம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த இளைஞனும் சிறுமியும் சேர்ந்து வாழ்வதைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்து விசாரணைக்குட்படுத்தினர். இதனால் சிறுமியின் தந்தை தீக்குளித்துள்ள நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இருவரையும் பொலிஸார் நேற்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, குறித்த இளைஞனை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட பதில் நீதிவான் செ.கணபதிப்பிளை, சிறுமியை கைதடியிலுள்ள இரட்சணிய சேனை இல்லத்தில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். மேலும், இருவரையும் சட்ட வைத்திய பரிசோதனை க்குட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.
நாவற்குழி, தச்சன்தோப்பு ரயில் நிலையம் மீது நேற்று செவ்வாய்க்கிழமை இனந்தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருவர் உயிரிழப்பு யாழ்ப்பாணம் - மீசாலை – புத்தூர் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் ஒன்று பாதைவிட்டு விலகி மதிலுடன் மோதியதாலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
18.8.2015
5.8.2015
சிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில்; தந்தை தீக்குளிப்புVirakesari on Wed, 08/05/2015 - 09:33
கொடிகாமம் பிரதேசத்தில் 16 வயது சிறுமியுடன் சேர்ந்து வாழ்ந்த அதே இடத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடிகாமம் கச்சாய் வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனும், 16 வயதுடைய சிறுமியும் காணாமற் போனதையடுத்து சிறுமியின் பெற்றோர்களால் கொடிகாமம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த இளைஞனும் சிறுமியும் சேர்ந்து வாழ்வதைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்து விசாரணைக்குட்படுத்தினர். இதனால் சிறுமியின் தந்தை தீக்குளித்துள்ள நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இருவரையும் பொலிஸார் நேற்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, குறித்த இளைஞனை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட பதில் நீதிவான் செ.கணபதிப்பிளை, சிறுமியை கைதடியிலுள்ள இரட்சணிய சேனை இல்லத்தில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். மேலும், இருவரையும் சட்ட வைத்திய பரிசோதனை க்குட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.
இனந்தெரியாதோர் தாக்குதல்!
[ புதன்கிழமை, 15 யூலை 2015, 12:33.03 AM GMT ]
அந்த நிலையத்தில் ஊழியர்கள் எவரும் இல்லாத பிற்பகல் 3 மணிக்கும் இரவு 7 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலில் ரயில் நிலையத்தின் கண்ணாடிகள் மற்றும் மலசலகூடக் கதவுகள் என்பன உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அந்தப் பகுதியில் மதுபானப் போத்தல்கள் உடைக்கப்பட்டு காணப்படுகின்றன.
சாவகச்சேரிப் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.