|
[Sunday 2017-06-11 19:00]
நாவற்குழி விகாராதிபதி அம்பிலிப்பிட்டிய சுமண தேரருக்கு சாவகச்சேரி நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. நாவற்குழியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் விகாரைக்கு எதிராக சாவகச்சேரி பிரதேச சபையினால் சாவகச்சேரி நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததையடுத்தே நாவற்குழி விகாராதிபதியை எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி சிறிநிதி நந்தசேகரம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உரிய அனுமதிகள் பெறப்படாமல் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு சாவகச்சேரி பிரதேச சபையினால் நாவற்குழி விகாராதிபதிக்கு ஏற்கனவே அறிவித்தல் விடுத்திருந்தும் மேற்படி கட்டுமானப்பணிகள் தொடர்ந்த நிலையிலேயே சாவகச்சேரி பிரதேச சபையினால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தாயைத் தேடி சாவகச்சேரியில் இருந்து கொழும்பு சென்ற சிறுவன் வென்னப்புவவில் பொலிசாரிடம் சிக்கினான்!
[Thursday 2017-06-01 09:00]
| |
தனது தாயாரைத் தேடி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்ற 12 வயதான சிறுவன் திக்குத்தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த நிலையில், தோப்புவ பொலிஸ் வீதி சோதனை சாவடியில் பொலிஸ் அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளான். கடந்த 28ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது-
|
கொச்சிக்கடை நகரத்திலிருந்து சிறுவன் ஒருவன், அதிகாலை மூன்று மணியளவில், சைக்கிளிலில் பயணிப்பதில் சந்தேகம் கொண்ட நீர்கொழும்பு வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஆனந்த பெர்ணான்டோ, தன்னுடைய காரை அந்த சைக்கிளுக்குப் பின்னால் சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் செலுத்தியுள்ளார். இந்நிலையில், தோப்புவ பாலத்துக்கு அருகில், வீதிச்சோதனைச் சாவடியில், கடமையிலிருந்த பொலிஸார் அதிகாரிகளிடம், அந்த சைக்கிளில் பயணிக்கும் சிறுவன் தொடர்பில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காருக்குப் பின்னால் பயணித்து கொண்டிருந்த சிறுவனை, அங்கிருந்த பொலிஸார் பிடித்து விசாரணை செய்தபோதே, மேற்படி விவகாரம் தெரியவந்துள்ளது.
சாவகச்சேரியைச் சேர்ந்த அந்த சிறுவன், கொழும்பில் வேலை செய்யும் தன்னுடைய தாயைத் தேடி, கடந்த 27ஆம் திகதி கொழும்புக்குப் புறப்பட்ட தனியார் பஸ்ஸொன்றில் ஏறியுள்ளார். அந்த சிறுவனிடம், பணம் இல்லாமையால், அச்சிறுவனை, பஸ் நடத்துனர். இடைநடுவிலேயே இறக்கிவிட்டு விட்டார்.
புத்தளத்துக்கும் சிலாபத்துக்கும் இடைபட்ட பகுதியிலேயே அச்சிறுவனை, பஸ் நடத்துனர் இறக்கி விட்டுவிட்டார். இறக்கிவிடப்பட்ட இடத்தில் இருந்த இரண்டு சைக்கிள்களில் ஒன்றை எடுத்துக்கொண்டே, கொழும்பை நோக்கிப் பயணித்ததாக அச்சிறுவன் தெரிவித்துள்ளார்.
சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, வீதி தொடர்பில் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. நீர்கொழும்புக்கு சென்று, விசாரித்தேன், நான் தமிழில் பேசினேன். அங்கிருந்தவர்களோ சிங்களத்தில் பேசினார்கள், எனக்கு சிங்களம் புரியாமையால், நான் பயணித்த வீதியிலேயே திரும்பியும் பயணித்தேன் என்று, பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே, அதிகாலையில் சைக்கிளில் பயணித்த அந்தச் சிறுவனைப் பிடித்து, தமிழ்மொழி பேசக்கூடிய அதிகாரியொருவரை அழைத்து, சிறுவனிடம் விசாரணை நடத்தியபோதே மேற்கண்ட விடயம் வெளியானது என்றும் வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தை இல்லாத அந்த சிறுவன், பாட்டியிடமே வளர்ந்து வருவதாகவும், இந்நிலையிலேயே கொழும்பில் தொழில்புரிவதாகக் கூறப்படும் தன்னுடைய தாயைத் தேடி வந்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், தாயையும் பாட்டியையும் தேடி கண்டுபிடித்து, அச்சிறுவனை ஒப்படைக்க உள்ளதாகவும் வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.1.6.17
சாவகச்சேரி நகரில் இன்று திண்மக்கழிவுகள் அகற்றல்
உலக சுற்றாடல் வாரத்தின் மூன்றாவது நாளான இன்று திண்மக்கழிவு முகாமைத்துவ தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று நகரசபைச் செயலாளர் கா.சண்முகதாசன் அறிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
குடியிருப்புக்கள், வர்த்தக நிலையங்கள் அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு பாவனைக்குதவாத இலத்திரனியல் மற்றும் மின் பொருள்கள் சாவகச்சேரி நகர சபையின் கழிவகற்றல் பிரிவால் இன்று சேகரிக்கப்படும்.
துணிகள், பொழுதுபோக்கு சாதனங்கள், அலுவலக உபகரணங்கள் போன்றவற்றை நகர சபை உழவு இயந்திரப் பெட்டியிலிடப்படவேண்டும். அத்துடன் சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்துடன் இணைந்து சாவகச்சேரி நகர்ப் பகுதியில் சிரமதானப் பணியும் முன்னெடுக்கப்படும்.
மேலும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நாளை தென்மராட்சி பிரதேச செயலகத்தின் அனுசரணையுடன் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் மரக்கன்று நடுகையும் நாளை மறுதினம் சாவகச்சேரி நகர்ப் புற வாய்க்கால்கள் துப்புரவு செய்தல் மற்றும் குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்தலும், அவற்றின் நீரை மீள நிலத்தில் இறக்கும் செயற்றிட்டம் தொடர்பான விழிப்புணர் வுக் கருத்தரங்குகளும் நடத்தப்படும் - என்றார். 31.5.17
ஆலயமானாலும் அனுமதியின்றி கட்டடத்தை அமைக்க முடியாது - சாவகச்சேரி மாவட்ட நீதிமன்று கட்டளை
பிரதேச சபையில் அனுமதி பெறப்படாமல் ஆலயமாக இருந்தாலும் புதிய கட்டடத்தை அமைக்க முடியாது. அனுமதி பெறப்படாமல் அமைக் கப்பட்ட கட்டடங்களை 3 மாத காலத்துக்குள் அகற்றுமாறு சாவகச்சேரி மாவட்ட நீதிமன்று உத்தரவிட்டது.
மட்டுவில் வடக்கு தேவாலய வீதியில் சபையின் அனுமதி பெறப்படாமல் அமைக் கப்பட்ட பிள்ளையார் சிலை மற்றும் கொடிகாமம் பகுதியில் சபையில் பெறப்பட்ட அங்கீகாரத்துக்கு மேலதிகமாக அமைக் கப்பட்ட கட்டடம் ஆகியவற்றுக்கு எதிராக சாவகச்சேரி பிரதேச சபையால் சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
மட்டுவில் தேவாலய வீதியிலிருந்து பனையடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு செல்லும் சந்தியில் முன்னர் நின்ற மரத்தின் கீழ் சூலம் வைத்து இந்து மக்கள் வழிபட்டு வந்தனர். வீதி அகலிப்புக்காக அண்மையில் மரம் அகற்றப்பட்டதையடுத்து, அந்த இடத்தில் ஊர் மக்கள் சிலர் சந்தியில் சிறிய கட்டடம் அமைத்து பிள்ளையார் சிலையை கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி நிறுவி வழிபட்டு வந்தனர்.
புதிதாக கட்டடம் அமைக்கப்பட்ட இடத்தின் காணி உரிமையாளர் கட்டடத்தை அப்புறப்படுத்துமாறு பிரதேச சபைக்கு முறையிட்டார். அனுமதி பெறப்படாமல் கட்டடம் அமைக்கப்பட்டமை எதிராக சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றில் சாவகச்சேரி பிரதேச சபை வழக்குத் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றில் கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்கைப் பரிசீலனை செய்த நீதிபதி, “பிரதேச சபையின் அனுமதியின்றி ஆலயக் கட்டடமாயினும் அமைக்கக்கூடாது.
புதிதாகக் அமைக்கப்பட்ட கட்டடத்தை 3 மாதங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும். பிரதேச சபையிடம் உரிய அனுமதியைப் பெற்று கட்டத்தை அமைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
நாவற்குழி பௌத்த விகாரை அமைக்கும் இடம் சாவகச்சேரி பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ளமை நினைவிற் கொள்ளத் தக்கது.
இதேவேளை, கொடிகாமம் பகதியில் சுற்று மதில் அமைக்க சபை அனுமதித்ததைவிட மேலதிகமாக 5 அடி தூரத்துக்கு கட்டடப்பட்டமை தொடர்பாக சாவகச்சேரி பிரதேச சபையால் சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, “சபையால் அனுமதி வழங்கப்பட்ட அளவைவிட மேலதிகமாக புதிதாக கட்டடம் அமைக்கக்கூடாது. அவ்வாறு அமைப்பதாயின் அதற்கும் சபையின் அனுமதி பெறப்படல் வேண்டும். எனவே சபையின் அனுமதி பெறப்படாமல் மேலதிகமான அமைத்த மதில் சுவரை உடைக்க வேண்டும்” என்று காணி உரிமையாளருக்கு உத்தரவிட்டார்.
60 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய தென்மராட்சி பிரதேசத்தில் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட 11 கிராம அலுவலர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய 49 கிராம அலுவலர் பிரிவுகள் சாவகச்சேரி பிரதேச சபை எல்லைக்குள் அடங்கியுள்ளது.
மாணவர்கள் இருவர் கௌரவிப்பு
சாவகச்சேரி கோயிற்குடியிருப்பு ஸ்ரீமுருகன் சனசமூக நிலையத்தினரால் நிலையப் பிரிவுக்குட்ப்பட்ட மாணவர்கள் இருவர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பளுதுாக்கல் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவன் மற்றும் கடந்த முறை கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் பொறியில் துறைக்குத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர் ஆகிய இரு மாணவர்களே நிலைய வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டதாக என நிலையத் தலைவர் க.தர்சன் தெரிவித்தார். 30.5.17
சாவகச்சேரி நகரில் இன்று திண்மக்கழிவுகள் அகற்றல்
உலக சுற்றாடல் வாரத்தின் மூன்றாவது நாளான இன்று திண்மக்கழிவு முகாமைத்துவ தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று நகரசபைச் செயலாளர் கா.சண்முகதாசன் அறிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
குடியிருப்புக்கள், வர்த்தக நிலையங்கள் அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு பாவனைக்குதவாத இலத்திரனியல் மற்றும் மின் பொருள்கள் சாவகச்சேரி நகர சபையின் கழிவகற்றல் பிரிவால் இன்று சேகரிக்கப்படும்.
துணிகள், பொழுதுபோக்கு சாதனங்கள், அலுவலக உபகரணங்கள் போன்றவற்றை நகர சபை உழவு இயந்திரப் பெட்டியிலிடப்படவேண்டும். அத்துடன் சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்துடன் இணைந்து சாவகச்சேரி நகர்ப் பகுதியில் சிரமதானப் பணியும் முன்னெடுக்கப்படும்.
மேலும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நாளை தென்மராட்சி பிரதேச செயலகத்தின் அனுசரணையுடன் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் மரக்கன்று நடுகையும் நாளை மறுதினம் சாவகச்சேரி நகர்ப் புற வாய்க்கால்கள் துப்புரவு செய்தல் மற்றும் குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்தலும், அவற்றின் நீரை மீள நிலத்தில் இறக்கும் செயற்றிட்டம் தொடர்பான விழிப்புணர் வுக் கருத்தரங்குகளும் நடத்தப்படும் - என்றார். 31.5.17
ஆலயமானாலும் அனுமதியின்றி கட்டடத்தை அமைக்க முடியாது - சாவகச்சேரி மாவட்ட நீதிமன்று கட்டளை
பிரதேச சபையில் அனுமதி பெறப்படாமல் ஆலயமாக இருந்தாலும் புதிய கட்டடத்தை அமைக்க முடியாது. அனுமதி பெறப்படாமல் அமைக் கப்பட்ட கட்டடங்களை 3 மாத காலத்துக்குள் அகற்றுமாறு சாவகச்சேரி மாவட்ட நீதிமன்று உத்தரவிட்டது.
மட்டுவில் வடக்கு தேவாலய வீதியில் சபையின் அனுமதி பெறப்படாமல் அமைக் கப்பட்ட பிள்ளையார் சிலை மற்றும் கொடிகாமம் பகுதியில் சபையில் பெறப்பட்ட அங்கீகாரத்துக்கு மேலதிகமாக அமைக் கப்பட்ட கட்டடம் ஆகியவற்றுக்கு எதிராக சாவகச்சேரி பிரதேச சபையால் சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
மட்டுவில் தேவாலய வீதியிலிருந்து பனையடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு செல்லும் சந்தியில் முன்னர் நின்ற மரத்தின் கீழ் சூலம் வைத்து இந்து மக்கள் வழிபட்டு வந்தனர். வீதி அகலிப்புக்காக அண்மையில் மரம் அகற்றப்பட்டதையடுத்து, அந்த இடத்தில் ஊர் மக்கள் சிலர் சந்தியில் சிறிய கட்டடம் அமைத்து பிள்ளையார் சிலையை கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி நிறுவி வழிபட்டு வந்தனர்.
புதிதாக கட்டடம் அமைக்கப்பட்ட இடத்தின் காணி உரிமையாளர் கட்டடத்தை அப்புறப்படுத்துமாறு பிரதேச சபைக்கு முறையிட்டார். அனுமதி பெறப்படாமல் கட்டடம் அமைக்கப்பட்டமை எதிராக சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றில் சாவகச்சேரி பிரதேச சபை வழக்குத் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றில் கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்கைப் பரிசீலனை செய்த நீதிபதி, “பிரதேச சபையின் அனுமதியின்றி ஆலயக் கட்டடமாயினும் அமைக்கக்கூடாது.
புதிதாகக் அமைக்கப்பட்ட கட்டடத்தை 3 மாதங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும். பிரதேச சபையிடம் உரிய அனுமதியைப் பெற்று கட்டத்தை அமைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
நாவற்குழி பௌத்த விகாரை அமைக்கும் இடம் சாவகச்சேரி பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ளமை நினைவிற் கொள்ளத் தக்கது.
இதேவேளை, கொடிகாமம் பகதியில் சுற்று மதில் அமைக்க சபை அனுமதித்ததைவிட மேலதிகமாக 5 அடி தூரத்துக்கு கட்டடப்பட்டமை தொடர்பாக சாவகச்சேரி பிரதேச சபையால் சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, “சபையால் அனுமதி வழங்கப்பட்ட அளவைவிட மேலதிகமாக புதிதாக கட்டடம் அமைக்கக்கூடாது. அவ்வாறு அமைப்பதாயின் அதற்கும் சபையின் அனுமதி பெறப்படல் வேண்டும். எனவே சபையின் அனுமதி பெறப்படாமல் மேலதிகமான அமைத்த மதில் சுவரை உடைக்க வேண்டும்” என்று காணி உரிமையாளருக்கு உத்தரவிட்டார்.
60 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய தென்மராட்சி பிரதேசத்தில் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட 11 கிராம அலுவலர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய 49 கிராம அலுவலர் பிரிவுகள் சாவகச்சேரி பிரதேச சபை எல்லைக்குள் அடங்கியுள்ளது.
மாணவர்கள் இருவர் கௌரவிப்பு
15 அபிவிருத்திகளுக்கு தென்மராட்சிக்கு நிதி
தென்மராட்சி பிரதேசத்தில் 15 அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாவை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தி ரன் ஒதுக்கியுள்ளார் என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தால் தென்மராட்சி பிரதேச செயலகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மீசாலை வடக்கு இராமாவில் பொது நோக்கு மண்டபச் சீரமைப்பு, விடத்தற்பளை பொது நோக்கு மண்டபச் சீரமைப்பு, மட்டுவில் ஆயத்தடி கேணி சீரமைப்பு, கரம்பகம் மயான கிணறுச் சீரமைப்பு சாவகச்சேரி நகர சபைக்குட்பட்ட சாலைகளுக்கு மின்விளக்கு பொருத்துதல், பெரிய அரசடி சனசமூக நிலையச் சீரமைப்பு, வரணி மாசேரி பொது நோக்கு மண்டபம் சீரமைப்பு, கெற்பேலி பொது நோக்கு மண்டபம் சீரமைப்பு,
கச்சாய் வினோபா பாலர் பகல் பராமரிப்பு நிலையச் சீரமைப்பு, சாவகச்சேரி கலாசார மண்டபச் சீரமைப்பு, அல்லாரை தும்புத் தொழிற்சாலைச் சீரமைப்பு, வரணி இயற்றாலை இந்து மயானச் சீரமைப்பு, சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி சைக்கிள் பாதுகாப்பு நிலையம் அமைத்தல், உதயசூரியன் சனசமூக நிலையச் சீரமைப்பு மற்றும் சரசாலை வடக்கு இந்து மயான எரிகொட்டகை அமைத்தல் ஆகிய வேலைத் திட்டங்க ளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் தென்மராட்சிப் பிரதேசத் தில் வேலைத்திட்டங்களை மேற்கொள்ள இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோரும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.26.5.17
சட்டவிரோதமாக கட்டப்படும் விகாரையில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட 300 பிக்குகள் யாழ்.வருகை
தென்னிலங்கை அமைப்பொன்றை சேர்ந்த 300 க்கும் அதிகமான பௌத்த பிக்குகள் இன்றையதினம்யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து சமய அனுஷ்டானங்களில் ஈடுபடவுள்ளனர்.
நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் சிங்கள மக்கள் வாழ்ந்துவருகின்றனர். அவர்கள் வாழும் பிரதேசத்தில் கடந்த வாரம் பௌத்த விகாரை அமைப்பதற்கானஅடிக்கல் நாட்டப்பட்டது.
சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் அனுமதி பெறப்படாமல் கட்டட வேலைகள் நடைபெற்றதனைஅடுத்து பிரதேச செயலரினால் கட்டட வேலைகளை உடன் நிறுத்துமாறு எழுத்து மூலம் அறிவித்தல்விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள 300 க்கும் அதிகமானபௌத்த பிக்குகள் நாவற்குழியில் விகாரை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் சமயஅனுஷ்டானங்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் வாள்வெட்டுடன் தொடர்புடைய 6 பேர் அடையாளம் காணப்பட்டனர்!
வாள்வெட்டுடன் தொடர்புடையவர்கள் என கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் நேற்று அடையாளம் காணப்பட் டனர்.
சாவகச்சேரி, மந்துவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கடந்த 15-ம் திகதி கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முச்சக்கரவண்டியுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
அதன் பின்னரான மோதலில் பிரதான சந்தேகநபரை கடந்த 19ம் திகதி பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் நான்கு சந்தேகநபர்கள் நேற்று சாவகச்சேரி நீதிமன்றில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டு இனங்காட்டப்பட்டனர்.
இதையடுத்து குறித்த நால்வர் உட்பட்ட 6 பேரையும் அடுத்த மாதம் 2-ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் உத்தரவிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக தென்மராட்சியின் மந்துவில், மட்டுவில், கச்சாய், சாவகச்சேரி போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக வாள் வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்று வித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(25.5.17)
யாழ். சாவகச்சேரி பகுதியில் வாள்வெட்டு! படுகாயமடைந்த நிலையில் மூவர் வைத்தியசாலையில்
7.5.17
யாழ். சாவகச்சேரி, கனகம்புளியடி பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் வெளிநாட்டில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய ஒருவர் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு தாக்குதல்! மூவர் படுகாயம்
யாழ். சாவகச்சேரி, கனகம்புளியடி சந்தியில் உள்ள உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட குழுவினர் நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று மாலை 4 மணிக்கு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட குழுவினர் இந்த தாக்குதலை நடத்தியதாக சாவகச்சேரி பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் அகப்படாமல் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தில் உணவகத்தின் உரிமையாளரான 32 வயதுடைய சிவபாலன் சிவலக்ஷ்மன்,
முச்சக்கர வண்டி சாரதியான 24 வயதுடைய நாகசாமிநந்தன், வெளிநாடொன்றிலிருந்து இரண்டு தினங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய 22 வயதுடைய வேணுகோபால் சுகந்தன் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்
கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் உயிரை மாய்த்த நபர்
6.5.17
கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் உயிரை மாய்த்த நபர் சாவகச்சேரி - மட்டுவில் வடக்கில் பகுதியில் கடனாக வாங்கிய ஆறு லட்சம் ரூபாவால் தவறான முடிவு எடுத்த வர்த்தகர் ஒருவர் நேற்று தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார் மருதனார்மடத்தில் அலங்காரப் பொருட்கள் விற்பனை நிலையம் வைத்துள்ள குறித்த நபர் ”ஆறு லட்சம் ரூபா கடனை உரிய காலத்தில் கொடுக்க முடியாததால் இந்த முடிவு எடுத்துள்ளேன்” என கடன் விபரங்களுடன் கடிதம் எழுதி வைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவருக்கு சுவாசக் குழாயில் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக பற்றரி உடலில் வைக்கப்பட்டுள்ளதெனவும் அதனால் பாரமான வேலைகள் செய்யக்கூடாது என்பதற்காக பிரான்சில் உள்ள இவரது சகோதரன் கடை எடுத்துக் கொடுத்துள்ளார் எனவும் கடைக்குப் பொருட்கள் வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லை என்ற மன விரக்தியில் பெற்றோர் ஆலயத்திற்குச் சென்றுவிட்டு திரும்பியவேளையில் விட்டுக்குள் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் எனவும் உறவினர்களால் தெரிவிக்கப்பட்டது.
குறித்த நபரது உயிரிழப்புத் தொடர்பாக அவரது தந்தை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு சாவகச்சேரி நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். அறிக்கையினைப் பார்வையிட்ட நீதிவான் திடீர் மரண விசாரணை அதிகாரி சீ.சீ.இளங்கீரன் மூலம் விசாரணைகள் மேற்கொண்டு மன்றில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சாவகச்சேரி வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி மூலம் உடற்கூற்றுப் பரிசோதனை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டது
பாம்பு தீண்டியவர் அவசர சிகிச்சைப் பிரிவில்
சாவகச்சேரி - தனங்களப்பு பகுதியில் இரவு வேளையில் காணிக்குள் நடமாடியவரை புடையன் பாம்பு தீண்டியுள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு இடம் பெற்ற இச் சம்பவத்தில் இதே இடத்தைச் சேர்ந்த கனகசபை சபேசன் ( வயது 25 ) என்பவரே பாம்பு தீண்டிய நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காணியொன்றின் ஊடாக தனது வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்த வேளையில் காலில் ஏதோ தீண்டியதெனவும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது காலிலிருந்து இரத்தம் வழிந்த வண்ணமிருந்ததால் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டேன் என பாம்பினால் கடியுண்டவர் தெரிவித்தார்.
குறித்த நபருக்கு தொடர்ந்தும் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை வழங்கப்பகிறது என அவசர சிகிச்சைப் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார் (29.4.17
சாவகச்சேரி கடையடைப்பு
27.1.17
சாவகச்சேரி கடையடைப்பு வடக்கு கிழக்கு முழுவதும் இன்றைய தினம் பூரண கர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. சாவகச்சேரி சந்தைப்பகுதி , கடைத்தொகுதிகள் என்பன கர்த்தாலுக்கு ஆதரவழக்கும் விதத்தில் கடையடைப்புச் செய்யப்பட்டுள்ளது.
மதுபோதைக் கும்பலால் தாக்குதலுக்குள்ளான கிராம சேவகர்! நடவடிக்கை எடுக்காத பொலிஸார்! மக்கள் அதிருப்தி
தென்மராட்சிப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கொடிகாமம் அல்லாரை J/322 கிராம சேவையாளர் ஒருவர் மதுபோதைக் கும்பலால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி கிராம சேவையாளரைக் கடமை நேரத்தில் அவரைத் தாக்கியவர்கள் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட போதிலும் அவர்களை இதுவரை பொலிஸார் கைது செய்யவில்லை எனத் தெரியவருகின்றது.
கடந்த 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அல்லாரையில் உள்ள வீடொன்றில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிபரப்பிய மதுபோதைக் கும்பல் ஒன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டது.
இதனால் தங்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது என பிரதேச மக்கள் கிராம சேவையாளருக்குத் தெரியப்படுத்தினர்.
இந்நிலையில், அந்த வீட்டுக்குச் சென்ற கிராம சேவையாளர் வீட்டு உரிமையாளரை அழைத்து பாடல் சத்தத்தை குறைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதன்போது அவரும் அவரோடு சேர்ந்து மதுபோதையில் இருந்தவர்களும் கிராம சேவையாளரைக் கடுமையாகத் தாக்கினர் எனக் கூறப்படுகின்றது.
இதன்போது அவரது கைத்தொலைபேசியையும் பறித்து எறிந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட கிராம சேவையாளர் அது தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தபோதும் பொலிஸார் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கிராம சேவையாளர் ஒருவரை அவரது கடமை நேரத்தில் தாக்கியவர்களை கைது செய்யாத பொலிஸாரின் செயற்பாடு அப்பகுதி மக்களிடையேயும் தென்மராட்சி பிரதேச செயலக உத்தியோகத்தர்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சாவகச்சேரி இந்துவின் முகப்பில் பழைய மாணவன் நினைவாக நிழற்குடை
பாடசாலைக் கால நண்பனின் நினைவாக பயணிகள் நிழற்குடை அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்கினர் சாவகச்சேரி இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள்.
சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 1998ஆம் ஆண்டில் ஜி.சீ.ஈ சாதாரணதர வகுப்பில் கற்ற மாணவர்கள் வகுப்பாசிரியர் விநாயக மூர்த்தியின் போதனைக்கு அமைவாக பிறருக்கு உதவுவோம் திட்டத்தின் கீழ் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு முன்பாக நிழற்குடையை அமைத்து வழங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
பாடசாலை முடியும் நேரம் பி.ப 1.30 மணி என்பதால் அந்தப் பகுதியில் நிழல் மரம் இல்லாத நிலையில் மாணவர்கள் மற்றும் பயணிகள் பேருந்துகள் வரும்வரை வெயிலில் நிற்கின்றனர். இதனை அவதானித்த கல்லூரி பழைய மாணவர்கள் தமது நண்பண் சிவயோகநாதன் ஸ்ரீசங்கரின் நினைவாக சுமார் ஒன்றரை லட்சம் ரூபா செலவில் நிழற்குடை அமைத்து வழங்கியுள்ளனர். நிழற்குடையை அமரர் ஸ்ரீசங்கரின் பெற்றோர் திறந்து வைத்தனர்.
பொலிஸார் நடவடிக்கை எடுக்காததால் கண்டன ஆர்ப்பாட்டம்
19.1.17
தென்மராட்சிப் பகுதியில் கடமைக்குச் சென்ற கிராம அலுவலர் தாக்கப்பட்டது தொடர்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிராம அலுவலர் தாக்கப்பட்டமை குறித்து இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொள்ளாததைக் கண்டித்தே சாவகச்சேரி பிரதேச செயலக ஊழியர்களால் இவ் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.
குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது.எனினும் பொலிஸார் இதுவரையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெங்கு அச்சுறுத்தலிலிருந்து தென்மராட்சி விடுபடுகிறது -
17.1.17
சுகாதாரத் திணைக்களம் தெரிவிப்பு டெங்கு அச்சுறுத்தலிலிருந்து தென்மராட்சி விடுபடுகிறது - சுகாதாரத் திணைக்களம் தெரிவிப்பு தென்மராட்சிப் பிரதேசத்தில் டெங்கு நோய்த் தொற்றின் தாக்கம் குறைவடைந்து வருகின்றது என்று சுகாதாரத் திணைக்கள புள்ளி விவரங் கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி வரை டெங்கின் தாக்கம் பெருமளவில் வீழச்சியடைந்துள்ள தாகத் தெரிவிக்கப்பட்டது.
“கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 15ஆம் திகதிவரையான காலப்பகுதியில் டெங்கு நோய்த் தொற்றால் 120 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் டெங்கு நோய்த் தொற்றுக்குள்ளாகியோரின் எண்ணிக்ககை 24ஆகக் குறைவடைந்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் பிரதேசத்தில் பெய்த மழையையடுத்து டெங்கு நோய்த் தொற்றுக்குள்ளாவோர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து மார்ச் மாததத்தில் 68 ஆண்களும் 62 பெண்களுமாக மொத்தம் 130 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். 8 பேர் உண்ணிக் காய்ச்சலிலால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
மார்ச் முதலாம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 120 பேரும் அதன் பின்னர் தாக்கம் படிப்படியாகக் குறைந்து மார்ச் மாத இறுதியில் 168 பேர் டெங்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஏப்ரலில் 24 பேரே டெங்கு நோய்த் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தென்பகுதிக்கு பல்வேறு தேவைகளுக்காகச் சென்று திரும்பியவர்கள்” என்று சுகாதாரத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழுமோதலை விலக்குப் பிடிக்கச் சென்ற மூவர் வைத்தியசாலையில்
16.4.17
சாவகச்சேரி - மீசாலை புத்தூர்ச் சந்தியில் நேற்று இடம்பெற்ற குழு மோதலைத் தணிக்க விலக்குப் பிடிக்கச் சென்ற மூவர் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அல்லாரை மீசாலை கிழக்கு மந்துவில் தெற்கு ஆகிய இடங்களைச் சேர்ந்த மூவரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
இரு பகுதியினருக்கிடையில் ஏற்பட்ட மோதலை தடுத்து நிறுத்தச் சென்றுள்ளனர் .இரவு வேளையாதலால் ஆட்களைத் தெரியாமல் தாக்குதல் நடாத்தப்பட்டதில் மூவர் காயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைக்கவசத்தினால் தாக்கப்பட்டு ஒருவரும் தள்ளி வீழ்த்தப்பட்ட போது கல்லுக்கு மேல் வீழ்ந்து காயமடைந்த இருவருமாக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
காரின் கதவை திறந்தததால் மூவர் காயம்
16.4.17
காரின் கதவை திறந்தததால் மூவர் காயம் சாவகச்சேரி - கச்சாய்ப் பகுதியில், காரின் கதவை திறந்தததால் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் கதவுடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர்.
கச்சாய் தெற்கைச் சேர்ந்த நகுலேஸ்வரன் ஜீவராணி ( வயது 40 ) இவரது பிள்ளைகளான சஞ்சிகா ( வயது 15 ) ( றோகிதன் ( வயது 12 ) யதுர்சிகா ( வயது 8 ) ஆகியோரே காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் நேற்று இரவு இடம்பெற்ற இச் சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,
வெளிநாட்டுப் பாணியில் வலது பக்கமாக செலுத்தி வந்த வாகனத்தினால் பதற்றமுற்ற பெண்ணொருவர் விபத்து ஏற்படாமலிருக்க வீதியோரம் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியபோது சில்லு மணலில் சிக்கியதில் பெண் வீழ்ந்துள்ளார் . இதனை அவதானித்த வாகனம் செலுத்தி வந்த வெளிநாட்டுச் சாரதி திடீரென காரின் கதவைத் திறந்த போது அதனை முந்த முயன்ற மோட்டார் சைக்கிள் காரின் கதவுடன் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் அலயத்தின் மூன்றாம் திங்கள் பொங்கல் உற்சவம்
4.4.17
மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் அலயத்தில் பங்குனித் திங்கள் மூன்றாம் திங்கள் பொங்கல் உற்சவத்தில் பெரும் எண்ணிக்கையான அடியார்கள் கலந்து கொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியுள்ளனர் .
நேற்று காலை 5.00 மணி முதல் அடியார்கள் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பொங்கல் மற்றும் கஞ்சி காய்ச்சி பக்த அடியார்களுக்கு வழங்கினர்.பொங்கல் படைக்கும் ஆலய முன்றலில் அடியார்கள் செல்ல முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் காணப்பட்டனர்.
காலை தொடக்கம் பறவைக் காவடிகள் மற்றும் தூக்குக் காவடிகள் ஆலயத்தின் நான்கு புறத்திலிருந்தும் தொடர்ந்து வந்தவண்ணமிருந்தன. நேற்று நண்பகல் வரை 100 இற்கும் மேற்பட்ட பறவைக் காவடிகளும் தூக்குக் காவடிகள் ஆலயத்தை நோக்கி வந்தமை குறிப்பிடதக்கது.
பால் குளிருட்டும் நிலையம் சரசாலையில் திறந்து வைப்பு
நடுவண் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹர்சனின் ஏற்பாட்டில் அரச பால் சபையான மில்க் கோ நிறுவனத்தின் பால் குளிருட்டும் நிலையம் நேற்று முன்தினம் சரசாலையில் வட மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலையக் கட்டடத்தை திறந்து வைத்த மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பால் குளிரூட்டும் இயந்திரத்தையும் இயக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் மில்க்கோ நிறுவன பிரதித் தலைவர் பாலித சமரக்கோன் பிரதி முகாமையாளர் அமரசிங்க பிராந்திய முகாமையாளர் எச்.எம்..பீ.ஹேரத் வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வசீகரன் உதவிப் பணிப்பாளர் திருமதி அமிர்தலிங்கம் சாவகச்சேரி கால்நடை மருத்துவர் சசிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் யாழ்.மாவட்டத்தில் இயங்கும் மில்க் கோ நிறுவனத்தின் கிளைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
யாழ்.மாவட்டத்தின் இயங்கும் எட்டு கிளைகளின் பிரதிநிதிகளுக்கு பால் சேகரிப்பு கொள்கலன்களையும் எட்டுச் சங்கங்களுக்கும் பால் கொள்வனவு கொள்கலன்களையம் வழங்கினார்
மட்டுவில் பகுதியில் சரமாரியான வாள்வெட்டு : இளைஞர்கள் வைத்தியசலையில் யாழ்ப்பாணம்-
3.4.17
சாவகச்சேரி, மட்டுவில் பகுதியில் இனம்தெரியாத நபர்கள் இரு இளைஞர்கள் மீது வாள்களால் சரமாரியாக வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது நேற்று இரவு மட்டுவில் வடக்கு முத்துமாரி அம்பாள் ஆலயதிற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த தெரியாத 4 பேர், வீதியோரத்தில் கதைத்துக் கொண்டிருந்த 2 இளைஞர்கள் மீது வாள்களால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கு நின்ற முச்சக்கரவண்டியையும் கடுமையாக சேதப்படுத்திவிட்டு ஓடியுள்ளார்.
இந்த சம்பவத்தில், மட்டுவில் முத்துமாரியம்மன் கோவிலடியைச் சேர்ந்த பெரியநாயகம் பாலகுமார் என்ற வயது 22 வயதுடையவரும், சுன்னாகம் உடுவிலைச் சேர்ந்த மகேஸ்வரன் ஜனார்த்தனன் என்ற வயது 24 வயதுடையவர்களே படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் அயலவர்கள் உதவியுடன் படு காயமடைந்த இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இதன் போது, குறித்த நபர்களுக்கு கழுத்து மற்றும் கை பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டமையின் காரணமாக மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மூன்று மாடி தொழில்நுட்ப பீடம் இன்று திறந்து வைப்பு
1.4.17
சாவகச்சேரி இந்துக் கல்லூரி வளாகத்தில் 30 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப பீட மூன்று மாடிக் கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
தென்மராட்சி கல்வி வலயத்தில் முதற்றடவையாக தொழிற்நுட்பப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்ட போது ஒரே தடவையில் 105 மாணவர்கள் இணைந்து வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.கல்லூரியில் தொழிற்நுட்பப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு தொகுதியினர் ( 2 வருடங்கள் ) க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் அதற்கென அமைக்கப்பட்ட பீடங்கள் நேற்று திறந்து வைக்கப்பட்டன.
கல்லூரி அதிபர் ந.சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு தலைமை விருந்தினராக நடுவண் கல்வி அமைச்சின் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார் சிறப்பு விருந்தினராக யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கலந்து கொண்டார்.
இவர்களுடன் வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சு.கிருஷ்ணகுமார் உட்பட பாடசாலைகளின் அதிபர்கள் ஓய்வுநிலை அதிபர்களான அ.கயிலாயபிள்ளை க.அருந்தவபாலன் ஆசிரியர்கள் மாணவர்கள் கல்லூரியின் அபிவிருத்திச் சங்கத்தினர் பழைய மாணவர் சங்கத்தினர் எனப் பலர் கலந்து கொண்டனர்.
தொழில்நுட்ப பீடக் கட்டடத்தினை இராஜாங்க அமைச்சரும் மற்றைய பீடப் பிரிவுகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் வலயக் கல்விப் பணிப்பாளர் சு.கிருஷ்ணகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.
தென் இலங்கையில் இருந்து யாழிற்கு நடந்து வந்த முதியவரின் அவல நிலை
1.4.17
தென் இலங்கையில் இருந்து கால்நடையாக யாழ். வந்து எவருடைய உதவியும் இல்லாமல் வீதியில் தனியாக இருந்த முதியவர் ஒருவர் கைதடி முதியோர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 60 வயதான பேதுரு அப்புச்சாமி திசாநாயக்க என்ற முதியவர் ஒருவரே இவ்வாறு யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முதியவர், மனநோயால் பாதிக்கப்பட்டு வீதியில் அலைந்து திரிந்த நிலையில், அவர் மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து, சிகிச்சைகளும் நிறைவுற்ற நிலையில் அவர் மீண்டும் வீதிகளில் அலைந்து செல்லக் கூடாது என்பதற்காக, கைதடி முதியோர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த முதியவரிடம் வைத்தியர்கள் விசாரித்த போது, தனக்கு இரு சகோதரர்கள் இருப்பதாகவும், தனக்கு திருமணமாகவில்லை எனவும், கால்நடையாகவே தான் யாழ்ப்பாணத்திற்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், முதியவர் தொடர்பில் உறவினர்கள் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு கைதடி அரச முதியோர் இல்லத்தினை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காச நோய்க்குச் சிகிச்சை பெற மறுப்பவர் மீது எதிராகப் பிடியாணை
1.4.17
காச நோய்க்குச் சிகிச்சை பெறுவதற்கு மறுப்புத் தெரிவிக்கும் நபரைக் கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு கொடிகாமம் பொலிஸாருக்கு சாவகச்சேரி நீதிவான் மன்று நேற்று உத்தரவிட்டது.
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உசன் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யாழப்பாணம் மார்பு நோய் சிகிச்சைப் பிரிவில் கடந்த டிசம்பர் மாதம் சிகிச்சை பெற்றார். அவருக்கு காச நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கோப்பாய் மார்பு நோய் சிகிச்சைப் பிரிவில் ஆறு மாதங்கள் சிகிச்சை பெறுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் இதுவரை தொடர் சிகிச்சை பெறவில்லை. சிகிச்சை பெறுமாறு பொது சுகாதாரப் பரிசோதகர் வலியுறுத்திய போதிலும் அவர் சிகிச்சை பெற மறுத்துள்ளார்.
“உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய காச நோய்க்கு சிகிச்சை பெற மறுத்து வருகிறார். ஏனையோருக்கும் உயிராபத்தை விளைவிக்கக்கூடிய நோயைப் பரப்பும் விதத்தில் அவர் செயற்படுகிறார். சிகிச்சை பெறுமாறு அறிவுரை கூறும் பொது சுகாதார பரிசோதகரை கடமையைச் செய்ய விடாமல் அவர் தடுத்து வருகிறார்” என்று பொதுச் சுகாதார பரிசோதகரால் சாவகச்சேரி நீதிவான் மன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த நபரை கோப்பாய் மார்பு நோய் சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெறுவதற்கும் அல்லது வேறு இடத்தில் வைத்து சிகிச்சை வழக்குவதற்கும் உத்தரவிடுமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் நீதிமன்றில் அறிக்கையிட்டுள்ளார்.
அறிக்கையைப் பார்வையிட்ட நீதிவான், குறித்த நபரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பித்தார். அவரைக் கைது செய்து எதிர்வரும் ஐந்தாம் திகதி நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
டெங்குக் கட்டுப்பட்டுச் செயற்திட்டம் தென்மராட்சியில் புதனன்று ஆரம்பம்
27.3.17
டெங்குக் கட்டுப்பட்டுச் செயற்திட்டம் தென்மராட்சியில் புதனன்று ஆரம்பம் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுச் செயற்றிட்டம் தென்மராட்சிப் பிரதேசத்தில் ஏழு வலயங்களில் முன்னெ டுக்கப்படவுள்ளன. அதற்கமைவாக நாளை மறுதினம் புதன்கிழமை மீசாலை கிழக்கு, மீசாலை மேற்கு பிரிவுகளிலும் ,
எதிர்வரும் 30 ஆம் திகதி மட்டுவில் வடக்கு, மட்டுவில் தெற்கு, சரசாலை தெற்கு ஆகிய பிரிவுகளிலும், எதிர்வரும் 31 ஆம் திகதி கொடிகாமம் மத்தி , கொடிகாமம் வடக்கு , கச்சாய் ஆகிய பிரிவுகளிலும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி சாவகச்சேரி நகரம், கோயிற்குடியிருப்பு, சங்கத்தானை பிரிவுகளிலும் , இரண்டாம் திகதி நாவற்குளி பிரிவிலும், மூன்றாம் திகதி நாவற்காடு, கரம்பைக்குறிச்சி, இடைக்குறிச்சி பிரிவுகளிலும் , நான்காம் திகதி மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, இராமாவில் ஆகிய பிரிவுகளிலும் டெங்குக் கட்டுப்பாட்டு பரிசோதனைகள் இடம்பெறும் என்று சுகாதாரத் திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர்.
2017 ஜனவரி தொடக்கம் மார்ச் மாதம் 23 ஆம் திகதி வரை தென்மராட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த 300 இற்கும் மேற்பட்டோர் டெங்குத் தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ள னர் . தென்மராட்சி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர், உள்ளூராட்சி சபையினர், சாவகச்சேரி, கொடிகாமம் பொலிஸார் மற்றும் பொது அமைப்புகளின் பங்களிப்புடன் நான்கு தடவைகள் விசேட டெங்குக் கட்டுப்பாட்டு தரிசிப்புகளை மேற்கொண்டனர். மார்ச் மாதத்தின் முதல் இரு வாரத்தில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்டோர் டெங்குத் தொற்றினால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். தற்போது டெங்குத் தொற்றினால் பீடிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்குச் சராசரியாக இருவர் வீதம் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவருகிறது.
பங்குனித் திங்கள் உற்சவத்தின்போது தங்க நகைகள் திருட்டு
21.3.17
சாவகச்சேரி - மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவத்தின்போது குழந்தைகள் இருவர் அணிந்திருந்த தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன.
ஆலய உள் மண்டபத்தில் காணப்பட்ட கூட்டத்தைப் பயன்படுத்தி அடியார்களோடு அடியார்களாய் காணப்பட்ட திருடர்கள் குழந்தைகள் அணிந்திருந்த தங்க நகைகளை திருடியுள்ளனர்
ஒரு குழந்தையின் கையில் காணப்பட்ட ஒரு சோடி தங்கக் காப்புகளையும் மற்றக் குழந்தையின் கழுத்தில் காணப்பட்ட தங்கச் சங்கிலியும் திருடப்பட்டுள்ளன.
தென்மராட்சியில் கம்பன் விழா
20.1.17
தென்மராட்சி இலக்கிய அணியினால் இருநாட்கள் கம்பன் விழா நிகழ்வு நேற்றும் நேற்று முன்தினமும் சாவகச்சேரி சங்கத்தானை தமிழ்க் கோட்ட மண்டபத்தில் நடாத்தப்பட்டது.
விழாவின் இரண்டாம் நாளான நேற்றைய நாளில் சங்கத்தானை முருகமூர்த்தி ஆலயத்திலிருந்து கம்பன் உருவப்படம் ஊர்வலமாக விழா மேடைக்கு எடுத்து வரப்பட்டதோடு, மங்கல கும்பம் ஏந்திய பெண்கள் அணிவகுத்து வர கம்பவாரிதி க.ஜெயராஜ் உட்பட பெருமளவு மக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மங்கல இசையையடுத்து, தேசிய சேமிப்பு வங்கியின் பருத்தித்துறை கிளை முகாமையாளர் யோ.அர்ச்சுனன் தம்பதியினர் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர். தலைமையுரையை தெல்லிப்பளை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் நிகழத்தினார்.
தென்மராட்சி இலக்கிய அணியின் சான்றோர் கௌரவிப்பு நிகழ்வில் வைத்திய மற்றும் சமூகப் பணியில் ஈடுபட்டுவரும் வைத்தியர் லயன் சு.சி.அருளானந்தம் கௌரவிக்கப்பட்டார். கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட கம்பவாரிதி க.ஜெயராஜ் 'மண்ணின் மைந்தன் ' பட்டம் வழங்கி சான்றோர் விருதினை வழங்கினார்.
அதனையடுத்து 'கற்போர் மனதில் களிநடனம் புரியும் கம்ப பாத்திரம் பரதனே அனுமனே கும்பகர்ணனே என்னும் பொருளில் இரா.செல்வவடிவேல் பரா.ரதீஸ் த.நாகேஸ்வரன் அ.வாசுதேவா ந.விஜயசுநதரம் ச.மார்க்கண்டு ஆகியோர் நிகழ்த்தினர். -
விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சைபயனின்றி உயிரிழப்பு
17.3.17
சாலை விபத்தில் காயமடைந்த குடும்ப நல சேவையாளர் மூன்று தினங்களின் பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற மறநாளே சாவடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை சாலையைக் கடக்க முற்பட்ட வேளையில் மோட்டார் சைக்கிளினால் மோதுண்டு தலையில் பலத்த காயங்களுடன் சாவகச்சேரி வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இவர் கோமா நிலையில் வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நுணாவில் - கல்வயல் வீதியைச் சேர்ந்த சிவானந்தராஜா யோகராணி ( வயது 60 ) என்னும் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக குடும்ப நல சேவையாளரே சாவடைந்தவராவார்.
யாழ், சாவகச்சேரியில் 231 கிலோ கேரளா கஞ்சா மீட்பு11.3.17 |
சாவகச்சேரி மீசாலை மேற்கு வயல் பகுதி ஒன்றிலிருந்து குறித்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதியின் பெறுமதி இரண்டு கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. நேற்று இரவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து 7.30 மணியளவில் குறித்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
10 Mar 2017 |
தென்மராட்சியில் அதிகரிக்கும் டெங்குத்தொற்று 9 நாள்களில் 100 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
10.3.17
தென்மராட்சிப் பிரதேசத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் தொடக்கம் டெங்குத் தொற்றுக்கு உள்ளாகும் நோயாளர்கள் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், கடந்த பெப்ரவரி மாதத்தில் பெய்த பெருமழை காரணமாக டெங்குத் தொற்றின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது.
அதன் பின்னர் கடந்த வாரம் மழை பெய்த பின்னர் அந்த எண்ணிக்கையும் திடீரென அதிகரித்துள்ளது. கடந்த முதலாம் திகதி தொடக்கம் மூன்றாம் திகதி வரையான காலப்பகுதியில் டெங்குத் தொற்றுக்கு உள்ளான 29 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் . கடந்த நான்காம் திகதி தொடக்கம் ஒன்பதாம் திகதி நண்பகல் வரையான ஆறு நாள்களில் டெங்குத் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் ஒன்பது நாள்களில் டெங்குத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 106 ஆகக் காணப்படுகிறது.
பிரதேசத்தில் டெங்குத் தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினருடன், பிரதேச செயலகம், சாவகச்சேரி நகரசபை, சாவகச்சேரி பிரதேச சபை , சாவகச்சேரி, கொடிகாமம் பொலிஸ் நிலையங்களின் சுற்றாடல் பாதுகாப்புப் பொலிஸார், கிராம டெங்குக் கட்டுப்பாட்டுக் குழுவினர் , பொது அமைப்புகள் போன்றவை துரித கதியில் செயற்படுகின்ற போதிலும் டெங்கின் தாக்கம் அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தென்மராட்சிப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச டெங்குக் கட்டுப்பாட்டுக் குழுக் கூட்ட தீர்மானப் பிரகாரம், சாவகச்சேரி சுகாதாரப் பகுதியினர், பிரதேச அலுவலக அலுவலர்கள், கிராம டெங்குக் குழுக்கள் அனைவரின் பங்களிப்புடன் டெங்கின் தாக்கம் அதிகம் காணப்படும் பிரதேசத்தின் 12 கிராம அலுவலர் பிரிவுகளில் விசேட டெங்குக் கட்டுப்பாட்டு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பி டத்தக்கது.
தென்மராட்சியில் அதிகரிக்கும் டெங்குத்தொற்று 9 நாள்களில் 100 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
10.3.17
தென்மராட்சிப் பிரதேசத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் தொடக்கம் டெங்குத் தொற்றுக்கு உள்ளாகும் நோயாளர்கள் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், கடந்த பெப்ரவரி மாதத்தில் பெய்த பெருமழை காரணமாக டெங்குத் தொற்றின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது.
அதன் பின்னர் கடந்த வாரம் மழை பெய்த பின்னர் அந்த எண்ணிக்கையும் திடீரென அதிகரித்துள்ளது. கடந்த முதலாம் திகதி தொடக்கம் மூன்றாம் திகதி வரையான காலப்பகுதியில் டெங்குத் தொற்றுக்கு உள்ளான 29 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் . கடந்த நான்காம் திகதி தொடக்கம் ஒன்பதாம் திகதி நண்பகல் வரையான ஆறு நாள்களில் டெங்குத் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் ஒன்பது நாள்களில் டெங்குத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 106 ஆகக் காணப்படுகிறது.
பிரதேசத்தில் டெங்குத் தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினருடன், பிரதேச செயலகம், சாவகச்சேரி நகரசபை, சாவகச்சேரி பிரதேச சபை , சாவகச்சேரி, கொடிகாமம் பொலிஸ் நிலையங்களின் சுற்றாடல் பாதுகாப்புப் பொலிஸார், கிராம டெங்குக் கட்டுப்பாட்டுக் குழுவினர் , பொது அமைப்புகள் போன்றவை துரித கதியில் செயற்படுகின்ற போதிலும் டெங்கின் தாக்கம் அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தென்மராட்சிப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச டெங்குக் கட்டுப்பாட்டுக் குழுக் கூட்ட தீர்மானப் பிரகாரம், சாவகச்சேரி சுகாதாரப் பகுதியினர், பிரதேச அலுவலக அலுவலர்கள், கிராம டெங்குக் குழுக்கள் அனைவரின் பங்களிப்புடன் டெங்கின் தாக்கம் அதிகம் காணப்படும் பிரதேசத்தின் 12 கிராம அலுவலர் பிரிவுகளில் விசேட டெங்குக் கட்டுப்பாட்டு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பி டத்தக்கது.
யாழ் சாவகச்சேரியில் விபத்து..! முதியவர் ஒருவர் பலி
7.3.17
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏ-9 பிரதான வீதி கல்லடிச்சந்தியில் இடம்பெற்ற இந்த விபத்தில் 82 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 9 மணியளவில் மோட்டார் சைக்கிளும், துவிச்சக்கர வண்டியும் மோதிய விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் படுகாயமுற்ற 82 வயதுடைய இளையதம்பி ஆறுமுகம் என்ற முதியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ். நாவற்குழி வீட்டுத்திட்டப்பணிகள் ஆரம்பம்
30.1.17 vir
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் மீள்குடியேறியுள்ள தமிழ் சிங்கள மக்களிற்கென 250 வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவற்குழி பகுதியில் முன்பு வசித்துவந்த சிங்கள தமிழ் மக்கள் யுத்தம் காரணமாக வேறு இடங்களிற்கு இடம்பெயர்ந்திருந்தனர். இவர்களை மீளக் குடியமர்த்தும் நோக்கில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் இன்று வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பமானது.
இவ்வாறு இடம்பெயர்ந்த ஐம்பதிற்குமேற்பட்ட சிங்கள குடும்பங்கள் உள்ளிட்ட இருநூறிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் படிப்படியாக நாவற்குழி பகுதியில் மீள்குடியேற்றப்பட்டதுடன் அவர்களிற்கான வீதி புனரமைப்பு மின்சாரம் கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த இருநூற்றைம்பது குடும்பங்களிற்குமான வீட்டுத்திட்டத்தை வழங்க வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சின் கிழ் இயங்கும் தேசிய வீடமைப்பு அதிகாரசபை தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி நாவற்குழி மேற்கு பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் குடியிருந்துவரும் 200 தமிழ் குடும்பங்களுக்கும் 50 சிங்களக்குடும்பங்களுக்குமாக இருநூற்றைம்பது வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தேசிய வீடமைப்பு அதிகார சபையால் தலா ஐந்து லட்சம் ரூபா பெறுதியில் சகல வசதிகளையும் உள்ளடக்கியவாறு குறித்த வீட்டுத்திட்டம் அமைக்கப்படவுள்ளது.
இல்லாத வங்கி கணக்கிற்கு பெருந்தொகை காசோலையா? சாவகச்சேரியில் நடந்த விநோத சம்பவம்
செயற்பாட்டில் இல்லாத வங்கி கணக்கின் மூலம் காசோலை வழங்கிய நபருக்கு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குற்றவாளியாக இனங்காணப்பட்டவர், வங்கி கணக்கு மூடப்பட்ட நிலையில், மறுக்கப்பட்ட காசோலையினை வழங்கியுள்ளனர்.
குறித்த நபரை எச்சரித்த நீதிபதி, வழங்கவேண்டிய நபருக்கு முழுமையான தொகையை பணமாக செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
சாவகச்சேரி பகுதியினை சேர்ந்த நபர், 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பேக்கரி உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்திருந்தார். அதற்காக அவர் 1 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலையினை வழங்கியுள்ளார்.
காசோலையாக வழங்கப்பட்ட குறித்த வங்கி கணக்கு மூடப்பட்டிருந்தினால் வழங்கிய காசோலை மீளவும் திரும்பியுள்ளது.
இது தொடர்பில் பொருள் கொள்வனவு செய்த நபரிடம் பல முறை கேட்டும் அவர் பணத்தினை கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்து வந்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை விசாரித்த நீதிபதி வழங்க வேண்டிய பணமான ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயை பணமாக செலுத்துமாறு குற்றவாளிக்கு எச்சரித்துள்ளார்
சாவகச்சேரியில் சுவிஸ் பிரஜையின் சடலம் மீட்பு
15.1.17
சாவகச்சேரியில் சுவிஸ் பிரஜை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது கல்வயல் வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரியை சொந்த இடமாகவும் சுவிஸ் பிரஜாவுரிமை பெற்ற கணபதிப்பிள்ளை குணரட்ணம் (வயது 57) எனபவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை(12) இரவு படுக்கைக்கு சென்றவர் விடிந்து பலமணி நேரமாகியும் எழுந்திராத காரணத்தினால் சந்தேகம் அடைந்த விடுதி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
குறித்த விடுதிக்கு வந்த பொலிஸார் அறையின் கதவை உடைத்து பார்த்த பொழுது அந்த நபர் உயிரிழந்து இருந்தமை தெரியவந்துள்ளது. உயிரிழந்த நபர் கடந்த ஐந்து மாதங்களாக குறித்த விடுதியிலேயே தங்கியிருந்துள்ளார்.
சடலம் நீதவான் பார்வையிட்டு விசாரணை செய்த பின்னரே உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேற்படி மரணம் தொடர்பில் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
பட்டிப் பொங்கலன்று சாவகச்சேரி பொலிஸ் நிலையம் முன் உண்ணாவிரதம்!
[Friday 2017-01-13 18:00]
|
யாழ். மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் தினத்தன்று சட்டவிரோதமாக கொல்லப்பட்ட 12 மாடுகள் தொடர்பாகவும், பட்டிப் பொங்கலுக்கு முன்னர் உரிய நடவடிக்கை எடுக்காது விட்டால் 15ஆம் திகதி காலை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஈழத்து எழுத்தாளரும் ஐக்கிய நாடுகள் உணவு, வேளாண் கழகத்தில் முன்னாள் ஆலோசகருமான மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.
|
யாழ்ப்பாணத்தில் தினமும் 200 மாடுகள் களவாடப்படுகின்றன. வீட்டில் கட்டி வைத்துள்ள மாடுகளைக்கூட திருடி திறந்த வெளியில் வைத்து வெட்டிவிடுகின்றனர். இவ்வாறு வெட்டப்படும் இறைச்சியை சுன்னாகம், யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மல்லாகம், சங்கானை போன்ற சந்தைகளில் விற்கிறார்கள். சாவகச்சேரியில் நேற்றும் மாடுகளை வெட்டி இருக்கிறார்கள். நாவற்குழியில் 12 மாடுகள் ஒரே இடத்தில் வைத்து வெட்டப்பட்டுள்ளது. அங்கேயே அவற்றின் கொம்புகள் தோல் மற்றும் கழிவுகளை புதைத்துள்ளனர். இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலும் பல தடவைகள் முறையிட்டிருந்தோம். ஆயினும் எதுவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று 12 மாடுகளும் கொல்லப்பட்டன. ஆனால் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் எடுக்க வில்லை. மேலும், பட்டிப் பொங்கலுக்குள் உரிய நடவடிக்கை எடுக்காது விட்டால் 15ஆம் திகதி காலையில் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் முன்பு உண்ணாவிரதம் இருப்போம் என பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம் எனவும் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்தார்.
|
ஈழத்து தமிழ் சிறுவன் தற்கொலை...! நீதி வேண்டி போராட்டம்
நெதர்லாந்து ஹேர்லின் பிரதேசத்தில் தமிழர் தாயகத்தை பூர்வீகமாகக் கொண்ட 15 வயதுடைய தமிழ் சிறுவன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
யாழ்ப்பாணம் மீசாலை கிழக்கை பிறப்பிடமாகவும், நெதா்லாந்து ஹேர்லின் பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வம் தாருஷன் கல்வி கற்ற பாடசாலையின் சக மாணவர்களின் துன்புறுத்தல் காரணமாக கடந்த 8 ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
குறித்த மாணவன் மீது திணிக்கப்பட்ட துன்புறுத்தல்களுக்கு நீதி வேண்டி மற்றும் ஏளனப் பேச்சுக்களை கண்டித்தும், நெதர்லாந்து பாடசாலைகளில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்வதை முழுமையாக தடுக்குமாறு வலியுறுத்தியும் நாளை மறுதினம் 15 ஆம் திகதி இரவு ஏழு மணிக்கு நெதர்லாந்தில் அமைதி ஊா்வலமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழில் வறுமையின் காரணமாக கீரைவிற்ற சிறுமிக்கு கிடைத்த அதிஸ்டம்
10.1.17
யாழ்.சாவகச்சேரி பொதுச் சந்தையில் வறுமை காரணமாக கீரை வியாபாரம் செய்த நிலையில் தாக்குதலுக்குள்ளான சிறுமிக்கு பல்கலைக்கழக கல்வி வரை உதவித்தொகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றம் குறித்த உதவியை செய்ய முன்வந்துள்ளது.
அண்மையில் சாவகச்சேரி பொதுச் சந்தையில் கீரை வியாபாரத்தில் ஈடுபட்ட சிறுமி மீது சக பெண் வியாபாரி தாக்கிய சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து சிறுமியின் கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவ சமூக அமைப்புக்கள் பல முன்வந்துள்ளன.
தாக்குதலுக்குள்ளான சிறுமிக்கும் அவரது சகோதரிக்கும் கற்றல் நடவடிக்கைகளுக்காக சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தினர் நிதிக் கொடுப்பனவுகளை மாதாந்தம் வழங்க முன் வந்துள்ளனர்.
மாதம் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் இவர்களின் பல்கலைக்கழக கல்வி வரை இக்கொடுப்பனவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உதவித் தொகையை தென்மராட்சியில் உள்ள 36 மாணவர்கள் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது