11.7.17

ஊர் அயல் செய்திகள் 2017 -II

சாவகச்சேரி நகர சபைத் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியது ஈ.பி.டி.பி.

வடக்கு மாகா­ணத்தில் உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்கு வேட்­பு­மனுக் கோரப்­பட்­டுள்ள ஒரே ஒரு சபை­யான சாவ­கச்­சேரி நக­ர­ச­பைக்­கான தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு ஈ.பி­.டி.பி. கட்­டுப்­பணம் செலுத்­தி­யுள்­ளது.
ஈ.பி­.டி.பி. சார்பில் ஐ.சிறி­ரங்­கேஸ்­வரன் நேற்று யாழ். மாவட்டச் செய­ல­கத்தில் உள்ள தேர்தல் பணி­ய­கத்தில் உதவித் தேர்தல் ஆணை­யா­ள­ரிடம் கட்­டுப்­பணம் செலுத்தி, வேட்­பாளர் விண்­ணப்­பப்­ப­டி­வத்தைப் பெற்­றுள்ளார். சாவ­கச்­சேரி நக­ர­ச­பைக்கு  21 உறுப்­பி­னர்­களை தெரிவு செய்­வ­தற்­காக வேட்­பு­ம­னுக்­களை தேர்தல்கள் ஆணையகம் கோரி­யுள்­ளது. இந்த நிலை­யி­லேயே முத­லா­வ­தாக ஈ.பி.­டி.பி. கட்­டுப்­ப­ணத்தை செலுத்தி, இந்த தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தியுள்ளது. 29.11.17


13.10.17


         26.9.17



        25.9.17

மீசாலையில் பட்டப்பகலில் 22 பவுண் நகைகள் கொள்ளை!!

ஆள்கள் இல்லாத வீடுகளில் புகுந்த திருடர்கள் 22 பவுண் நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
அவர்கள் திருட்டில் ஈடுபட்டபோது அந்தப் பகுதிக்கு ஆள்கள் வந்தால் தாம் கொண்டு வந்த மோட்டார் சைக்கிளையும் கைவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 10 மணியளவில் மீசாலை, பங்களா சாலையில் நடந்துள்ளது.
இந்தப் பகுதியில் உள்ள அடுத்தடுத்து உள்ள இருவீடுகளில் ஆள்கள் இல்லாத நேரம் பார்த்து திருடர்கள் உள் நுழைந்துள்ளனர். அந்த வழியே உறவினர் வீட்டின் கதவு திறந்திருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். இவரைக் கண்ட திருடர்கள் மதில் பாய்ந்து பின்புறக் காணி ஊடாகத் தப்பியோடியுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
இது தொடா்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸாா் மேற்கொண்டுள்ளனா்.


பொலிஸ் தின நிகழ்வுகள் சாவகச்சேரியில்


இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 151 ஆவது பொலிஸ் தின நிகழ்வுகள் இன்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றன.
சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டீ.விக்கிரமசிங்க தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.
கடந்த காலத்தில் உயிர்நீத்த பொலிஸ் அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கு இரு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது. சாவகச்சேரி பொலிஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்று நாட்டப்பட்டது.

நிகழ்வில் உதவி பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் அதிகாரிகள், உத்தியோகர்கள் கலந்து கொண்டனர்.கொழும்பில் பிளாட் வாங்கவே மாமியாரால் சீதனக் கொடுமை


‘‘கொழும்­பில் பிளாட் வாங்­கு­ வ­தற்­குப் பணம் தேவை­யா க­வுள்­ளது. சீத­னத் தொகையை 25 லட்­சம் ரூபா­வாக அதி­க­ரித்­துத் தாருங்­கள்’’ என்று மண­ ம­க­னின் தாயார் மண­ம­க­ளி டம் கேட்­டுள்­ளார்.
அதன் பின்­னரே முன்­பள்ளி ஆசி ரியை உயிரை மாய்த்­தார் என்று இறப்பு விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.
ஆசி­ரியை நேற்­று­முன்­தி­னம் அவ­ரது சகோ­த­ரி­யின் வீட் டின் குளி­ய­ல­றை­யில் தூக் கில் தொங்­கிய நிலை­யில் சட­ல­மாக மீட்­கப்­பட்­டார்.
பருத்­தித்­து­றை­யைச் சேர்ந்த முன்­பள்ளி ஆசி­ரி­யை­யின் பெற்­றோர்­கள் இறந்­து­விட்­ட னர். கொழும்­பில் பெரிய தாய் வீட்­டில் அவர் தங்­கி யி­ருந்து அங்­குள்ள முன்­பள் ளி­யில் ஆசி­ரி­யை­யா­கப் பணி­யாற்றி வந்­தார். அவ ருக்­கும் வெள்­ள­வத்­தை­யில் மற்­றொரு குடும்­பத்­தி­ன­ரின் மக­னுக்­கும் திரு­ம­ணம் பேசப்­பட்­டது.
சீத­ன­மாக மட்­டு­வி­லில் பெண்­ணின் பெய­ரில் வாங்­கிய காணி­யில் வீடு கட்­டித் தரு­வ­தா­க­வும் சீத­ன­மாக 15 லட்­சம் ரூபா வழங்­கு­வ­தா­க­வும் கூறப்­பட் டுத் திரு­ம­ணத்­துக்­குச் சம்­ம தம் தெரி­விக்­கப்­பட்­டது. எதிர்­வ­ரும் டிசெம்­பர் 28ஆம் திகதி திரு­ம­ணம் செய்­வ தென்று நாள் குறிக்­கப்­பட்­டது.
தனக்­கு­ரிய பொருள்­களை வாங்­கு­வ­தில் பெண் ஆர்­வம் காட்­டி­னார். பல பொருள் களை வாங்­கி­யும் அவர் வைத்­துள்­ளார். இவ­ருக்கு மூத்த சகோ­த­ரி­யும் இளைய சகோ­த­ர­னும் உள்­ள­னர்.

சீதன வன்கொடுமையால் இளம்பெண் தென்மராட்சியில் பரிதாபச் சாவு!



சகோ­தரி மட்­டு­வி­லில் திரு ம­ணம் செய்து கைத­டி­யி லுள்ள பாட­சா­லை­யில் ஆசி ரி­யை­யா­கப் பணி­யாற்­று­கி றார். சகோ­த­ரன் தொழில் நிமித்­தம் அரபு நாடொன்­றில் தங்­கி­யுள்­ளார்.
இரண்­டாம் தவணை விடு முறை கார­ண­மா­கக் முன்பள்ளி ஆசி­ ரியை கொழும்பி­லி­ருந்து புறப்­பட்டு மட்­டுவி­லில் உள்ள சகோ­த­ரி­யின் வீட்­டில் வந்து தங்­கி­யி­ருந்துள்­ளார்.
இந்த நிலை­யில், கொழும் பில் பிளாட் வாங்­கு­வ­தற்­குப் பணம் தேவை­யாக உள்­ளது. சீத­ன­மா­கத் தரு­வ­தா­கக் கூறிய தொகையை 25 லட் சம் ரூபா­வாக அதி­க­ரித்­துத் தரு­மாறு மாப்­பிள்­ளை­யின் தாயார் முன்­பள்ளி ஆசி­ரி யை­யின் பெரிய தாயா­ரி­டம் கேட்­டுள்­ளார்.
அவர் இந்த விட­யத்தை மண­ம­க­ளின் சகோ­த­ரி­யி­டம் கூறி­யுள்­ளார். சகோ­தரி தக வலை வெளி­யி­டா­மல் அரபு நாட்­டில் உள்ள சகோ­த­ர­னுக் குக் கூறி­யுள்­ளார்.
இந்த நிலை­யில், மாப்­பிள் ளை­யின் தாயார், மண­ம­க ளுக்கு அலை­பே­சி­யில் அழைப்பு ஏற்­ப­டுத்தி சீத­னத் தொகையை அதி­க­ரித்து வழங்­கு­மாறு கேட்­டுள்­ளார். இத­னால் அவர் மன­வி­ரக் திக்கு உள்­ளா­னார்’’ என்று இறப்பு விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.
திடீர் இறப்பு விசா­ரணை அதி ­காரி சீ.இளங்­கீ­ரன் மற்­றும் பொலி­ஸார் விசா­ரணை மேற்­கொண்­ட­னர். உடற்­கூற் றுப் பரி­சோ­த­னை­யின் பின் னர் சட­லம் உற­வி­னர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

சாவ­கச்­சேரி சட்ட மருத்­துவ அதி­ காரி ஊடாக உடற்­கூற்றுப் பரி­ சோ­தனை நடத்தி அறிக்கை சமர்ப்­பிக்­கு­மா­றும் சட­லத்தை உற­வி­ன­ரி­டம் ஒப்­ப­டைக்­கு மா­றும் பணிக்­கப்­பட்­டது.

அவுஸ்திரேலிய தேர்தல் களத்தில் யாழ்ப்பாணத்து இளைஞர்!

விபத்தில் குடும்பத்தலைவர் உயிரிழப்பு

வீட்டில் பறித்த தேங்காயை விற்பனை செய்வதற்கு சந்தைக்குக் கொண்டு சென்றவர் டிப்பருடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து இன்று காலை சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு முன்னால் நடந்தது.
சைக்கிளில் தேங்காய் மூடையைக் கட்டிக் கொண்டு சாவகச்சேரி பொதுச் சந்தைக்குச் சென்றவரை, எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதித் தள்ளியது எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்தில் தோப்பு ஒழுங்கை மட்டுவில் பகுதியைச் சேர்ந்த சிவராஜா( வயது 50) என்பவரே உயிரிழந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டது.
டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் கனேடிய தம்பதி செய்த மோசமான செயற்பாடு அம்பலம்!

 17.8.17 Kodikamam
கனடாவில் காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நகைகள் திருட்டு போனதாக பொய்யான முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுமார் 51 லட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகள் களவு போனதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடு செய்த கனேடிய தம்பதிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
கனேடிய தம்பதியின் மோசடி தொடர்பில் சாவகச்சேரி நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு மாவட்ட நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
நகை களவு போனதாக பொய் முறைப்பாடு செய்த தம்பதியும் நீதிமன்றில் ஆஜராகி இருந்தனர்.
இதன்போதே நகைகள் களவு போனதாக பொய் முறைப்பாட்டினை மேற்கொண்ட குற்றத்தை நீதிமன்றில் கனேடிய தம்பதிகள் ஏற்றுக்கொண்டனர்.
குற்றத்தை ஒப்புக்கொண்டவர்களை பிணையில் செல்ல அனுமதித்த நீதிவான், அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை எதிர்வரும் 23 ம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஏழாம் திகதி வரணியில் உள்ள வீட்டில் வைத்து சுமார் 51 லட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகளை கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டதாக கொடிகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
நீதிமன்ற விசாரணையின் போது காப்புறுதிப் பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறு பொய் முறைப்பாடு பதிவு செய்ததாக கனேடிய தம்பதிகள் நீதிமன்றில் ஏற்றுக் கொண்டனர்.

உயி­ரு­டன் இருக்­கும்­போது வந்து பார்க்­காத உற­வு­கள் செத்­த­வீட்­டுக்­கும்வேண்­டாம்

3.8.17
உயி­ரு­டன் இருக்­கும்­போது எம்மை வந்து பார்த்து ஆறு­தல் கூறாத எமது உற­வு­கள் நாம் இறந்த பின்­னர் இறப்­புச் சடங்­கு­க­ளில் ஏன் கலந்து கொள்­கின்­றார்­கள்? இவ்­வாறு கைதடி அரச முதி­யோர் இல்­லத்­தில் தங்­கி­யி­ருக்­கும் முதி­ய­வர்­கள் மன­வே­த­னை­யு­டன் கேட்­கின்­ற­னர்.
முதி­யோர் இல்­லத்­தில் நேற்­று­முன்­தி­னம் முதி­யோர்­க­ளுக்­கான இணக்­க­சபை ஆரம்­ப நிகழ்வு இடம்­பெற்­றது. இந்த நிகழ்­வில் முதி­ய­வர்­கள் தமது ஆதங்­கத்தை வெளிப்­ப­டை­யாக கவ­லை­யு­டன் இல்ல அத்­தி­யட்­ச­கர் முன்­னி­லை­யில் தெரி­வித்­த­னர்.
இந்த முதி­யோர் இல்­லத்­தில் நாங்­கள் பல ஆண்­டு­கா­ல­மாக நோய்­வாய்ப்­பட்ட நிலை­யில் இருந்­தி­ருக்­கி­றோம் .ஒரு நாள் நாங்­கள் இறக்­கத்­தான் போகி­றோம். நாங்­கள் இறந்­தால் எமது உற­வு­க­ளுக்கு அறி­விக்­கா­தீர்­கள். எமது உடலை அரச செல­வில் தக­னம் செய்­யுங்­கள்.
நாங்­கள் உயி­ரு­டன் தற்­போது இருக்­கும் போது­எ­மது உற­வு­கள் எம்மை வந்து பார்க்­கி­றார்­களா? ஆறு­தல் கூறு­கி­றார்­களா? அவர்­கள் இந்­தப் பக்­கம் வரு­வ­தில்லை. நாங்­கள் உயி­ரு­டன் இருக்­கி­றோமா இல்­லையா என்­பது பற்றி அவர்­க­ளுக்கு தெரி­யாது. இறந்­த பின்­னர் இறப்­புச் சடங்­கு­க­ளில் கலந்து கொண்டு கண்­ணீர் விடு­வ­தில் எவ்­வித பய­னும் இல்லை.
என்று முதி­ய­வர்­கள் சிலர் உற­வு­களை தேடி மன உலைச்­ச­லு­டன் தெரி­வித்­த­னர். முதி­ய­வர்­க­ளின் இந்த ஆதங்­கத்தை கேட்­ட­றிந்த இல்ல அத்­தி­யட்­ச­கர் த.கிரு­பா­க­ரன் முதி­ய­வர்­க­ளின் இப்­ப­டி­யான மன உலைச்­ச­லுக்கு உரிய ஆறு­தல் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டும் – என்­றார்.

யாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு

யாழில் மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ். சரசாலைப் பகுதியைச் சேர்ந்த தேவராசா நந்தகுமார் (வயது 25) என்ற இளைஞரே இன்று முற்பகல் இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த இளைஞர் கடந்த சில தினங்களாக தெல்லிப்பழைப் பிரதேசத்தில் மேசன் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் வழமை போன்று மேசன் வேலையில் குறித்த இளைஞர் ஈடுபட்டிருந்த போது இன்று முற்பகல் 10 மணியளவில் திடீரென மயக்கமடைந்து நிலத்தில் விழுந்துள்ளார்.
இதனையடுத்து மேற்படி இளைஞருடன் இணைந்து மேசன் வேளையில் ஈடுபட்டிருந்த சக தொழிலாளர்கள் குறித்த இளைஞரை மீட்டுத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அங்கிருந்து அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழைப் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ் மாணவிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

29.7.17

சாவகச்சேரி – தனங்கிளப்புப் பகுதியில் மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி வீழ்ந்து மாணவி ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் 12 வயதுடைய மாணவியே காயமடைந்த நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீதியில் காணப்பட்ட குழியில் மோட்டார் சைக்கிள் சக்கரம் இறங்கியதால் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த மாணவி தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
பாடசாலையில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு சிரமதானத்தில் பங்குபற்றுவதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையிலேயே வீழ்ந்து காயமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

யாழ். தென்மராட்சியில் மோதல்? ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

29.7.17

யாழ். தென்மராட்சிப் பகுதியில்தா க்குதலுக்கு இலக்கான ஐந்து பேர் சாவகச்சேரி வைத்தியசாலையில், நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய், மகள் உள்ளிட்ட ஐவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த பகுதியில் இடம்பெற்ற மோதல் ஒன்றின் காரணமாகவே இவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மனைவியை மரத்துடன் கட்டி வைத்து கணவன் தாக்குதல்

29.7.31

மிருசுவில் – விடத்தற்பளைப் பகுதியில் மனைவியைக் கட்டி வைத்து இரவிரவாகத் தாக்கியுள்ளார் கணவர்.
நேற்று இரவு இச் சம்பவம் இடம்பெற்றது.
காயங்களுக்கு இலக்கான நிலையில் மரத்துடன் கட்டப்பட்டிருந்த பெண்ணை இன்று அதிகாலை அயலவர்கள் மீட்டுச் சென்று மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
அங்கு வழங்கிய சிகிச்சையின் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


சாவகச்சேரி முருகமூர்த்தி ஆலய தேர்த் திருவிழா


28.7.17
சாவகச்சேரி – கோயிற்குடியிருப்பு சந்தன முதலிச்சிபுலம் முருகமூர்த்தி ஆலய பெருந்திருவிழாவின் தேர்த்திருவிழா நேற்று இடம்பெற்றது.


சாவகச்சேரி தூய தோமஸ் முன்பள்ளி விளையாட்டு விழா



அமெரிக்கன் இலங்கை மிஷன் திருச்சபையின் சாவகச்சேரி தூய தோமஸ் முன்பள்ளிச் சிறார்களின் விளையாட்டு விழா நேற்று சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றன.




திருச்சபையின் சாவகச்சேரி முன்பள்ளி தலைவர் அருட்திரு பீ.ஜே.சூரியகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு தலைமை விருந்தினராக திருச்சபையின் யாழ்.பிராந்தியத் தலைவர் அருட்திரு ஜீ.ஞானப்பிரகாசம் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி அதிபர். ந.ஜெயக்குமாரன், கைதடி நவீல்ட் பாடசாலை உப அதிபர் திருமதி மாலினி பிரின்ஸ் தேவகுமார் ஆகியோரும் மதிப்புறு விருந்தினராக யாழ்.பிராந்திய முன்பள்ளிகள் இணைப்பாளர் ஆர்.இராஜேஸ்வரனும் கலந்து கொண்டனர்.

போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து சிறார்களுக்கும் விருந்தினர்களால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.


சாவகச்சேரி சட்டத்தரணிகள் சேவைப் புறக்கணிப்பு


யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து, சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று சேவைப் புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் சாவகச்சேரி நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்ற போதிலும் சட்டத்தரணிகள் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டதால் வழக்குகள் யாவும் வேறு திகதிகளுக்கு ஓத்திவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


நாவற்குழி சரஸ்வதி கைதடி சரஸ்வதி அணிகளுக்கு வெற்றி


கைதடி குமரநகர் விளையாட்டுக் கழகம் மின்னொளியில் நடத்தும் தாச்சித் தொடரின் ஆட்டங்கள் குறித்த கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்டங்களில் நாவற்குழி சரஸ்வதி, கைதடி சரஸ்வதி அணிகள் வெற்றிபெற்றன.
குமரநகர் விளையாட்டுக் கழகத்தின் மைதானத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற முதலாவது ஆட்டத்தில் சங்கானை இளங்கதிர் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து நாவற்குழி சரஸ்வதி விளையாட்டுக் கழக ‘ஏ’ அணி மோதியது. நாவற்குழி சரஸ்வதி விளை யாட்டுக் கழக அணி 8:2 என்ற புள்ளி களின் அடிப்ப டையில் வெற்றிபெற்றது.
தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் கைதடி சரஸ்வதி விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து நாவற்குழி சரஸ்வதி விளையாட்டுக் கழக ‘பி’ அணி மோதியது. 5:4 என்ற புள்ளிகளின் அடிப்படையில் கைதடி சரஸ்வதி அணி வெற்றிபெற்றது.


ஒளிப்படங்கள் எடுத்து மிரட்டியவர் மறியலில்

22.7.17

வெளிநாடு அனுப்புவதாகக் கூறி வெளி­நாட்­டுக்கு அனுப்­பு­வ­தாகக் கூறி எடுக்­கப்­பட்ட பெண்­ணின் ஒளிப்­ப­டங்­களை ஆபா­சப் படங்­க­ளாக மாற்றி அவ­ரி­டம் கப்­ப­மாகப் பணம் பெற்ற ஒரு­வர் விளக்­க­ம­றி ­ய­லில் வைக்­கப்­பட்­டார். சாவ­கச்­சேரி நீதி­மன்ற பதில் நீதி­வான் பா.சுப்­பி­ர­ம­ணி­யம் நேற்று இந்த உத்­த­ர­வைப் பிறப்பித்­தார்.

தென்­ம­ராட்சிப் பிர­தே­சத் தைச் சேர்ந்த குறித்­த யுவ­தி­யை முகவர் ஒரு­வ­ரிடம் செல்­லு­மாறு காதலன் கூறி­யு­ள்­ளார்.
யுவ­தியை ஆல­ய­மொன்­றுக்கு வர­வ­ழைத்த முக­வர் பெண்ணை வெளி­நாட்­டுக்கு அனுப்ப வேண்­டு­மெ­னக் கூறி ஆலய முன்றி­லில் வைத்து ஒளிப்­ப­டங்­கள் எடுத்­துள்­ளார். சில நாள்­க­ளின் பின்­னர் யுவ­தி­யின் அலை­பே­சி­யில் தொடர்பு கொண்டு சில ஆபா­சப் ஒளிப்­ப­டங்­களை அனுப்பி அவற்றை இணை­ய­த்த­ளத்­தில் பதிவு செய்­யப் போவ­தாக மிரட்டிப் பணம் தரு­மாறு கோரி­யுள்­ளார்.
யுவ­தி­யும் பயந்து அவர் கேட்ட வேளை­க­ளில் வங்­கி­யூ­டாகப் பணத்தை அனுப்­பி­யுள்­ளார். முக­வ­ரின் கப்­பம் கோரல் அதி­க­ரித்­த­மை­யால் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­தி­ருந்­தார். இந்த விட­யம் தொடர்­பாக பொலி­ஸார் நீதி­மன்­றில் நேற்று முன்­தி­னம் அறிக்கை தாக்­கல் செய்­தி­ருந்­த­னர். வழக்கை விசா­ரித்த நீதி­வான் குறித்த நப­ரைக் கைது செய்து நீதி­மன்­றில் முற்­ப­டுத்து ­மாறு பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்­டார்.
நீதி­வா­னின் பணிப்­புக்­மைய உடு­வி­லைச் சேர்ந்த குறித்த முக­வரை கைது செய்த பொலி­ஸார் நேற்று நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தி­னர். வழக்கை விசா­ரித்த பதில் நீதி­வான் இந்த நபரை எதிர்­வ­ரும் 3ஆம் திகதி வரை விளக்க­ மறி­ய­லில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்­டார்.

யாழில் வித்தியாசமான திருமணம்! மாட்டு வண்டியில் வந்த ஜெர்மன் நாட்டு மாப்பிள்ளை

22.7.17

யாழ்ப்பாணம் - மீசாலை, வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்தில் இன்று நடைபெற்ற திருமணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
யாழ். மீசாலையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவருக்கும், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமண பந்தத்தில் இணைந்த இருவரும் ஜெர்மன் நாட்டில் ஆங்கில ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்றனர்.
இவர்கள் இன்று திருமணம் செய்து கொள்வதற்காக மீசாலை, வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்திற்கு மாட்டு வண்டியில் வருகை தந்து தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருமணக் கோலத்தில் இருவரும் தம்பதிகளாக மாட்டு வண்டியில் செல்வதை அப்பகுதி மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்ததுடன், ஆச்சரியமடைந்துள்ளனர்.
குறித்த மணமகனுடன் வருகை தந்திருந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்களும் தமிழர் பாரம்பரியத்துடன் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரி நீதவானின் நடவடிக்கை பாராட்டுக்குரியது: கொட்டபொல அமரகீர்த்தி தேரர்


சாவகச்சேரி நீதவானின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என தேசிய புத்திஜீகள் சங்க சபையின் ஆலோசகர் கொட்டபொல அமரகீர்த்தி தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்படும் ஒரே விஹாரையான நாவற்குளி சமுர்த்தி சுமன விஹாரையின் தாதுகோபுரத்தை நிர்மாணிப்பது தொடர்பான சர்ச்சையின் போது, சாவகச்சேரி நீதவான் எஸ்.சந்திரசேகரனின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.
அரசியல் அமைப்பின் 9ம் சரத்தின் அடிப்படையில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதனால் தாதுகோபுரத்தை நிர்மாணிக்க அனுமதியளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
தமிழ் இந்து மதத்தைச் சேர்ந்த நீதவான் சந்திரசேகரனின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என அமரகீர்த்தி தேரர் தெரிவித்துள்ளார்.



மரம் அரியும் இயந்திரம் சாவகச்சேரியில் சிக்கியது!


சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்பட்டு வந்த மரம் அரியும் இயந்திரம் சாவகச்சேரி வனவளத் திணைக்களத்தால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இயந்திரத்தைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
மரம் அரிவதற்கு பயன்படுத்தும் உயர் ரக தொழில்நுட்பம் வாய்ந்த 95 லட்சம் ரூபா பெறுமதியான இந்த இயந்திரத்தால் சாவகச்சேரி கச்சாய் பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் மரம் அரியப்பட்டுக் கொண்டிருந்தது. வனவளத் திணைக்கள உத்தியோகத்தர்கள் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அதைக் கைப்பற்றினர்.

யாழ். மாணவி கடத்தல் பின்னணியில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்!

யாழ்.மல்லாகம் பகுதியில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட 18 வயது பாடசாலை மாணவி கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த மாணவி கடத்தல்காரர்களிடமிருந்து தப்பித்து செல்ல முயற்சித்த நிலையில், கடத்தல்காரர்கள் கொடிகாமம் பகுதியில் மாணவியை வானில் இருந்து தள்ளி விட்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இன்று காலை 7.30 மணியளவில் யாழ். மல்லாகத்தில் 18 வயதுடைய மாணவியொருவர் பாடசாலைக்கு சென்றுள்ளார்.
இதன் போது குறித்த மாணவியை வெள்ளை நிற வானில் வந்த 6 பேரை கொண்ட கும்பல் ஒன்று பின்தொடர்ந்து சென்றுள்ளது.
இந்நிலையில், மாணவி வீதியினை கடப்பதற்காக மஞ்சள் கோட்டினை அண்மித்த போது வானில் வந்த குழுவினர் மாணவியை கடத்தி சென்றுள்ளனர்.
இதனையடுத்து, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மாணவியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த கடத்தல்காரர்கள் முயற்சித்துள்ளனர்.
அத்துடன் மாணவிக்கு ஏதோ ஒரு வகையான பானத்தை கொடுக்கவும் முயற்சி செய்துள்ளனர். எனினும், மாணவி கடத்தல்காரர்களுடன் கடுமையாக போரிட்டதுடன், அங்கிருந்து தப்பியுள்ளார்.
இதன் காரணமாக கடத்தல்காரர்கள் மாணவியை கொடிகாமம், வரணி பகுதியில் வானில் இருந்து தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த பகுதியில் இருந்த பொது மக்கள் மாணவியை மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும், மாணவிக்க சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இடம்பெற்று வருவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் கடத்தப்பட்ட மாணவி தென்மராட்சியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு

11.7.17
யாழ்.மல்லாகம் பகுதியில் இருந்து ஹயஸ் வாகனத்தில் கடத்தப்பட்ட 18 வயது பாடசாலை மாணவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி யாழ்.தென்மராட்சியில் - வரணி பகுதியில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயர்தரத்தில் கல்வி கற்கும் 18 வயது மாணவி பாடசாலைக்கு நடந்து செல்லும் வழியில் இன்று காலை 7.30 மணியளவில் ஹயஸ் வாகனத்தில் வந்த அறுவர் கொண்ட குழுவினரால் கடத்தப்பட்டுள்ளார்.
இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் தென்மராட்சி - வறணி - அம்மா கடைப் பிரதேசத்தில் வைத்து வானிலிருந்து தள்ளி விடப்பட்ட நிலையில், பொதுமக்களால் மீட்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கடத்தல் சம்பவம் தொடர்பாக முழுமையான தகவல் கிடைக்கப்பெறவில்லை.
இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாகம் மற்றும் சாவகச்சேரிப் பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.