2.5.12

செய்திகளில் ஊரும் அயலும்-May 2012

> AAHJ8/FVye7HbKbJE/s400/31uu.gif" width="400" />
எட்டு வயதுப் பாலகி மீது பாலியல் துஷ்பிரயோகம்; நாவற்குழியில் கொடூரம்
news
 தென்மராட்சி நாவற்குழியில் எட்டுவயதுப் பாலகி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செöதார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செöயப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்றுமுன் தினம் இடம்பெற்றது.
குறித்த சிறுமியின் உறவினர் எனத் தெரிவிக்கப்படும் 19 வயது இளைஞர் ஒருவர் சிறுமியை கடந்த 2 வருடகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார். 
எனினும் இந்த விடயம் எவருக்கும் தெரியாமலே இருந்தது. எனினும் நேற்றுமுன்தினம் சிறுமி பாடசாலையில் திடீரென மயக்கமடைந்து விழுந்தாள். இது தொடர்பாக ஆசிரியர்கள் சிறுமியிடம் விசாரித்த போதே குறித்த இளைஞரால் தான் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி வரும் விடயத்தை சிறுமி போட்டுடைத்தாள். இது தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. 
இதன் பின்னர் துரித நடவடிக்கையில் இறங்கிய பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நாவற்குழியைச் சேர்ந்த சந்தேக நபரைக் கைது செய்தனர். இவர் நேற்றைய தினம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார். இவரை விசாரணைக்கு உட்படுத்திய நீதிவான் குறித்த சந்தேகநபரை 14 நாள்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 
சங்கிலி அறுத்த திருடிகளை மடக்கிப் பிடித்தனர் பக்தர்கள்;சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைப்பு
news
 ஆலயத்தினுள் சங்கிலி திருடிய இரண்டு பெண்கள் கையும் மெய்யுமாகப் பிடிபட்டனர். இந்தச் சம்பவம் கடந்த 17ஆம் திகதி மாலை சாவகச்சேரி வாரியப்பர் சிவன் ஆலயத்தில் இடம்பெற்றது.
வியாழ மாற்றத்தை ஒட்டி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட யாகத்தில் கலந்து கொள்ள பெருமளவு அடியார்கள் வருகை தந்திருந்தனர்.யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் அடியார்களுடன் நின்ற இரண்டு பெண்களும் கையில் சேலைத் தலைப்பை சுற்றி வைத்துக் கொண்டு நெரிசலைப் பயன்படுத்தி பெண் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துள்ளனர்.
இதனை அவதானித்த சிறுவன் சங்கிலியைப் பறிகொடுத்த பெண்ணிடம் சம்பவத்தைக் கூற அடியார்கள் திரண்டு இரண்டு பெண்களையும் மடக்கிப் பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் கையளித்தனர்.
மட்டக்களப்பு, சிலாபம் ஆகிய இடங்களைச் சேர்ந்த இரண்டு பெண்களையும் பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றில் கடந்த 18 ஆம் திகதி முற்படுத்தினர்.இந்த இருவரையும் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். Uthayan 20.5.12
சிறுவர்களுக்கான \"எனது உலகு\" புகைப்படக் கண்காட்சி 
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஏற்பாட்டில் சாவகச்சேரி மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலய சிறுவர்களின் புகைப்படக் கண்காட்சி இடம்பெற்றுள்ளது. அத்துடன், ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மைய மாணவர்களால் புகைப்படப் பயிற்சிப் பட்டறையும் நடாத்தப்பட்டது. இக் கண்காட்சியில் பாடசாலை மாணவர்களினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் புகைப்படக் கண்காட்சி "எனது உலகு" என்னும் தலைப்பில் 15.05.2012 அன்று மறவன்புலோ பாடசாலையிலும் 16-17ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்திலும் இடம்பெறவுள்ளது. சிறுவர்களுக்கு இவ்வாறான புகைப்படப் பயிற்சிப் பட்டறையும் கண்காட்சியும் யாழில் முதற் தடவையாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
சிறுவர்களுக்கான \"எனது உலகு\" புகைப்படக் கண்காட்சி
news
சாவகச்சேரியில் மர்ம பொருள் வெடித்ததில் பாடசாலை மாணவன் ஒருவன் படுகாயம் 
[ சனிக்கிழமை, 12 மே 2012, 04:48.41 PM GMT Tamilwin ] 


 சாவகச்சேரியில் இன்று மாலை இடம்பெற்ற வெடி விபத்து ஒன்றில் பாடசாலை மாணவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், சரசாலை சாவகச்சேரியைச் சேர்ந்த எஸ்.கிசோபன் வயது 8 என்ற சிறுவனே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டவராவார். குறித்த சிறுவன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோதே மர்மமான பொருள் ஒன்று வெடித்ததாகவும் அதன்போதே அவர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. படுகாயமடைந்த சிறுவன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பம் தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்.மீசாலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு 
வியாழக்கிழமை, 10 மே 2012 13:21 0 (Tamilmirror)
 யாழ்.மீசாலை வடக்குப் பகுதியிலுள்ள குளம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சடலம் வடக்கு மீசாலையைச் சேர்ந்த கைலாசபிள்ளை சிவகுமார் (வயது 32) என்பவரினது என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொடிகாமப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து


தென்மராட்சி பிரதேச ஊழியர் ஒரு மணிநேர பணி நிறுத்தம்; எழுதுமட்டுவாழ் கிராம அலுவலர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து 
news
 10 மே 2012, வியாழன் -உதயன்
தென்மராட்சிஎழுதுமட்டுவாள் வடக்கு கிராம அலுவலர் கே. ஞானேஸ்வரன் அலுவலத்தில் வைத்து இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டதைக் கண்டித்து தென்மராட்சி பிரதேச கிராம அலுவலர்களும் பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் நேற்று பிரதேச செயலகம் முன்பாக ஒரு மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்தியவர்களை இனம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை தமது பாதுகாப்பு கருதி கிராம அலுவலர்கள் தமது நாளாந்த கடமைகளை பிரதேச செயலகத்தில் வைத்து மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் கிராம அலுவலர்கள் கிள்ளுக்கீரையா?, காடையர்கள் கையிலா சட்டம், கிராம அலுவலரைத் தாக்கிய குற்றவாளிகளை உடனடியாக இனங்கண்டு சட்டத்துக்கு முன் நிறுத்துக, கிராம அலுவலர் அலுவலகத்திலிருந்து கடமையாற்றுவதற்குப் பாதுகாப்பு வலியுறுத்தப்படல் வேண்டும், 07.05.2012 இல் கிராம அலுவலர் க.ஞானேஸ்வரன் அலுவலகத்தில் வைத்துக் காடையர்களால் மிலேச்சத்தனமாகத் தாக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்னும் பதாகைகள் தாங்கிய வண்ணம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
பணிப்புறக்கணிப்பின் பின்னர் யாழ்.அரச அதிபருக்கான மனு ஒன்று பிரதேச செயலரிடம் கையளிக்கப்பட்டது.      
home


இளம் யுவதியை கிண்டல் செய்ததால் தென்மராட்சியில் கோஷ்டி மோதல் !
08 May, 2012 by athirvu.com
தென்மாராட்சி மீசாலை மற்றும் மந்துவில் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கிடையே கடந்த சில தினங்களாக கோஷ்டி மோதல்கள் இடம்பெற்று வருகின்ற போதிலும் இதனைத் தீர்ப்பதற்கு உரிய தரப்புகள் முன்வரவில்லையென்று பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. இந்தப் பகுதியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவரை மற்றைய பகுதி இளைஞர்கள் சிலர் நக்கலடித்ததைத் தொடர்ந்தே இந்தப் பிரச்சினை கோஷ்டி மோதலாக மாறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரு குழுக்களும் மீசாலைச் சந்தி மற்றும் மாவடிப் பிள்ளையார் ஆலயம் என்பவற்றுக்குச் சமீபமாக இரண்டு தடவைகள் மோதலில் ஈடுபட்டுள்ளதாகவும் இதில் சில இளைஞர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இரு குழுக்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருகின்ற போதிலும் சாவகச்சேரிப் பொலிஸார் இதில் உரிய அக்கறை எடுக்கவில்லையென்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்தால் கூட பொலிஸார் பக்கச்சார்புடனேயே செயற்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். பிரதேச மட்டங்களில் நடைபெறுகின்ற இவ்வாளான குற்றச் செயல்கள் தொடர்பாக பொலிஸார் உரிய அக்கறை எடுக்காத காரணத்தாலேயே குற்றங்கள் அதிகரிப்பதாகவும் பொது மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.



பொலிஸ் வாகனம் விபத்து; நால்வர் காயமடைந்தனர்
news
 தனங்கிளப்பு பகுதியில் இடம்பெற்ற பொலிஸ் ஜீப் லொறி விபத்தில் சாவகச்சேரி பொலிஸ் நிலைய தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் உட்பட நால்வர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது.
சம்பவத்தில் பொலிஸ் நிலைய தலைமை அலுவலக பரிசோதகர் ஜயந்த சந்திரசேகர (வயது 45), வாகன சாரதி திஸாநாயக்க (வயது 25), ம.கவியரசன் (வயது 23), வசந்த (வயது 42) ஆகியோர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
 வாகனசட சாரதியான திஸாநாயக்க சிகிச்சையின் பின் நிலையத்துக்குத் திரும்பினார். ஏனைய மூவரும்  தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென்மராட்சி  தெற்கு, தச்சன்தோப்பு, மறவன்புலோ, கைதடி, நாவற்குளி ஆகிய இடங்களில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளச் சென்றவேளையில்  இந்த விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.Uthayan 7-5


மிதிபலகையில் இருந்து தவறி விழுந்த நடத்துநரின் காலில் ஏறியது சில்லு
news
 யாழ். கொடிகாமம் தனியார் பஸ்ஸின் நடத்துநர் மிதிபலகையில் இருந்து தவறிக் கீழே விழுந்து காலில் பின் சில்லு ஏறி கால் முறிந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் மீசாலைச் சந்தியில் நேற்றுக் காலை இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த மகாலிங்கம் குகேந்திரன் (வயது20) என்பவரே கால் முறிந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்த விபத்துக் குறித்து பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 
விபத்துக் குறித்து பயணிகள் கூறியதாவது 
தனியார் பஸ்கள் குறிப்பாக யாழ். கொடிகாமம் சேவையில் ஈடுபடும் அனைத்தும் மிதிபலகையில் பயணிகளை வைத்துக் கொண்டே பயணிக்கின்றன. ஒவ்வொரு பஸ் தரிப்பிடத்தை நெருங்கும் போதும் மிதிபலகையில் உள்ள பயணிகளை மேலே ஏறும்படி நச்சரித்து அடைத்து ஏற்றிவிட்டு தரிப்பிடத்தில் நிற்பவர்களை ஏற்றி மிதிபலகையில் வைத்துக்கொண்டு மீண்டும் பயணம் தொடர்வது வழமையாகிவிட்டது.
சம்பவம் குறித்து பொலிஸார் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர். (uthayan6-5)

தென்மராட்சியின் தச்சந்தோப்பில் துப்பாக்கிச் சூடு- இளைஞர் சடலமாக மீட்பு !
04 May, 2012 by Athirvu
தென்மராட்சியின் கோவிலாக்கண்டி- தச்சந்தோப்பு பகுதியினில் நேற்று முன்தினம் இரவு வீடொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் சென்றவர்களென கூறப்படும் இருவரே துப்பாக்கி சூட்டினை நடத்தியுள்ளனர். எனினும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்பட்டிராத நிலையில் ஆயுததாரிகள் அங்கிருந்து தப்பித்துள்ளனர். மிக அண்மைக் காலங்களினில் மக்கள் மீளக்குடியமர்ந்த பகுதிகளுள் கோவிலாக்கண்டி தச்சந்தோப்பு பகுதியும் ஒன்றாகும்.

துப்பாக்கிதாரர்கள் வீட்டின் ஜன்னல் ஊடாக துப்பாக்கியை நுழைத்து துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர். எனினும் அவ்வேளை குறித்த அறையினுள் எவரும் இருந்திராமையால் உயிரிழப்புக்களோ காயங்களோ ஏற்பட்டிருக்கவில்லை. ஏற்கனவே இதே பகுதியில் இளம் யுவதியொருத்தி கடத்தி சென்று படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் மாடு மேய்க்கவென சென்றவரென நம்பப்படும் பொதுமகன் ஓருவர் இதே பகுதியை அண்மித்த பகுதியில் இன்று சடலமாக மீடகப்பட்டுள்ளார்.

ஆட்கள் நடமாட்டம் குறைந்த இப்பகுதியில் வெறுமனே உள்ளாடைகளுடன் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட கொலையொன்றாக இதுவிருக்கலாமென நம்பப்படும் நிலையினில் சடலம் மீட்கப்பட்டு யாழ்.போதனாவைத்தியசாலையின் பிரேத அறையினில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.